Archived

This topic is now archived and is closed to further replies.

arjun

எனக்கு தெரிந்தது மட்டும்

Recommended Posts

arjun    1,731

இந்த அரசியல் குப்பையை கிளறித்தான் ஆகவேண்டுமா என்பது போலிருக்கும்,

சில சமயம் யார் எக்கேடு கெட்டு போனாலென்ன என்ரை அலுவலை மட்டும் பாத்துக்கொண்டிருப்பம். (இதுதான் என் மனைவி சொல்லும் வேதம்)

கடைசி சொல்ல வருவதை ஒருவித நாகரீகத்துடன் சொல்லாம் என்பதும் போலிருக்கும்,

எதுவாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை அந்த நேரம் சொல்லாமல் விட்டு ,அதுவும் சொல்லப்படவேண்டிய பாணியில் சொல்லாமல் விட்டு காலம் கடந்தபின் சொல்லாமல் வீட்டு விட்டோமே என்று அங்கலாய்ப்பதில் எதுவித பயனுமில்லை.

யாழில் பலர் என்னை விட வயதில் குறைந்தவர்கள் என்பதும், அதைவிட அரசியல் அனுபவத்தில் மிக மிக குறைந்தவர்கள் என்றும் எனக்கு தெரியும்.

நடைமுறையிலும் எந்தளவு செய்தார்கள்,யார் யாரை சந்தித்தார்கள், எவற்றை எல்லாம் வாசித்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் தேசியம் என்ற ஒன்றிற்காக குருட்டுவழியில் எவர் பின்னும் போக தயாராக இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு.

தமிழ்நாட்டில் வெறும் நோட்டிஸ் ஓட்ட போகும் தொண்டனுக்கு அரசியல் பற்றியோ,சரி பிழை பற்றியோ அக்கறை இல்லை,கழக விசுவாசம் என்ற ஒன்றுமட்டுமே அவன் உயிர்,உடல்,உடமை அத்தனையும். இதை நன்கு உணர்ந்த கட்சி தலைமைகள் அவர்களை எப்படியெல்லாம் பாவிக்கின்றார்கள் என்பது உலகறிந்த விடயம்.(தீ குளிப்பு உட்பட).

இங்கு நான் அரசியல் எழுதமுதல் அரசின் கைக்கூலி,டக்கிலசின் எடுபிடி,முன்னாள் சொத்துப்பாசல் என்றெல்லாம் ஒரு சிலர் கூக்குரல் இடுகின்றார்கள்.நான் அப்படியாக இருந்தால் யாழில் வந்து குப்பை கொட்டாமல் கியூபாவில் கடற்கரை மணலில் படுத்திருப்பேன்.

பலருக்கு கோவம் இவ்வளவு தியாகங்கள் செய்த புலிகளை வசை பாடுவதா என்று ?.நியாயம் தான்.எனது கோவம் இவ்வளவு தியாகங்களும் வீணாகி விட்டதே என்றுதான்.

திரும்ப திரும்ப இன்று கூட்டமைப்பும் இதைத்தான் சொல்கின்றது “கிடைத்த எத்தனையோ சந்தர்பங்களை தவற விட்டு விட்டோம்’ என்று.

புலிகள் பிழையே விடவில்லை என்பவர்களுடன் கதைத்து பிரயோசனம் இல்லை,புலிகளும் பிழை விட்டார்கள் என்பவர்கள் தான் பெரும்பான்மை,அவர்களிடம் ஒரு கேள்வி? அப்படியாயின் அவர்கள் பிழை விடும் போது அவற்றை சொன்னீர்களா? அல்லது அவற்றை சுட்டி காட்டினிர்களா? சொல்லுங்கள் பார்ப்பம்.

புலிகள் ஏகப்பிரதிநிதிகளாகி மற்றைய இயக்கங்களை விட மலையளவு வளர்ந்து உலகம் வியக்கும் இராணுவ அமைப்பாக வளர்ந்து உண்மை,ஆனால் அரசியல் ரீதியில் ஏதாவது ஒரு நாட்டினாவது அங்கீகாரத்தை பெற்றதா என்றால் இல்லை,நாடு விடுதலை பெற முதலே A.N.C பல நாடுகளில் இராஜதந்திர அங்கீகாரத்துடன் அலுவலகங்கள் வைத்திருந்தது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இன்று ஓடித்திரிபவர்கள் இந்த இருபது வருடமாக என்னை செய்தார்கள்.அந்த அந்த நாடுகளில் புலிகளை தடை செய்ய வழிவகுத்ததை விட வேறொன்றுமில்லை.

சரி நடந்து முடிந்துவிட்டது இனியாவது ஒன்றாக எதுவும் நாட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து செய்யலாம் என்றால்?

தலைவர் இருக்கின்றார் வருவார் என ஒரு கூட்டம்,

போராட்டம் மவுனிக்கபட்டது தொடரும் என்று இன்னொரு கூட்டம்

நாடு கடந்த அரசு என்று ஒன்று ,தேசிய பேரவை என்று ஒன்று ,இவர்கள் யாராவது கூட்டமைப்புடன் தொடர்பிலா என்றால் அதற்கும் பதிலில்லை.

சேர்த்த பணம்,கணக்கு,முதலீடுகள் எல்லோரும் கையை விரிக்கின்றார்கள்.

அதை விட நாட்டில் அரசுடன் நின்று அரசியல் செய்தவர்களெல்லாம் புலம் பெயர் தலைமை பதவிக்கு அடிபடுகின்றார்கள்.

இவர்கள் எல்லோருமே புலிகளின் பெயரை பாவித்து புலிகள் விட்டு போன தலைமையையும் அதிகாரத்தையும் புலம் பெயர்ந்த நாடுகளில் கைப்பற்ற பார்க்கின்றார்களே ஒழிய யாரும் நாட்டில் இருக்கும் மக்களுக்காக போராடுபவர்களாக தெரியவில்லை.

புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் தங்கள் அலுவல்களை பார்த்துக்கொண்டு ஏதாவது ஒரு அமைப்பிற்கு உதவினால காணும் என்ற மனப்பான்மையில் இருந்தால் சர்வதேசம் எம்மில் கவனம் செலுத்தும் இந்நேரம் நாம் பிரிந்து அடிபட்டால், எம்மால் அடுத்து ஒரு அடி கூடதானும் வைக்க முடியாமல் போய்விடும்.

எமக்கும் நாம் என்ன செய்கின்றோம் என்பதைவிட டக்கிளஸ்,கருணா ,பிள்ளையான் ,கக்கீம் என்ன செய்கின்றார்கள் என்பதில் தான் அக்கறை.அவர்களை திட்டி தீர்ப்பதில் கொஞ்ச நேரம் நாட்டிற்காக செலவிட்டால் கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும்.

அரசியலில் பலவருடம் இருந்தவன் ,பலரை சந்தித்தவன் என்ற ரீதியில் சொல்லுகின்றேன் நாம் சரியான பாதையில் சிறிதளவும் போகவில்லை என்பதே உண்மை,தேசிய போர்வைக்குள் புகுந்து குளிர் காய்பவர்களுக்கு பின்னால் நின்றால் ஆயுளுக்கும் நீங்கள் நடுறோட்டில் தான்.

Share this post


Link to post
Share on other sites
akootha    1,057

உங்கள் ஆக்கத்திற்கு நன்றிகள்.

சில ஒத்துப்போகமுடியாத கருத்துக்களை விவாதிக்கலாம், ஆனால் பொதுவாக நீங்கள் பதிலளிப்பதில்லை.

1. " யாழில் பலர் என்னை விட வயதில் குறைந்தவர்கள் என்பதும், அதைவிட அரசியல் அனுபவத்தில் மிக மிக குறைந்தவர்கள் என்றும் எனக்கு தெரியும்."

இதை ஏற்க முடியாது, வயதுக்கும் அரசியல் ஆளுமைக்கும் சம்பந்தம் நேரடியாக இல்லை. பலதையும் பத்தையும் வாசிக்கும், கருத்துக்களை கேட்கும், மாற்றுக்கருத்துக்களை உள்வாங்கும், உலக அரசியலை உன்னிப்பாக பார்க்கும் யாருமே அரசியலில் மிளிரலாம்.

2. "திரும்ப திரும்ப இன்று கூட்டமைப்பும் இதைத்தான் சொல்கின்றது “கிடைத்த எத்தனையோ சந்தர்பங்களை தவற விட்டு விட்டோம்’ என்று."

உண்மை. ஆனால், கூட்டமைப்பும் (தமிழரசு கட்சி) பல சந்தர்ப்பங்களை நழுவ விட்டது, இன்றும் வரலாற்று சந்தர்ப்பங்கள் உள்ளன. நாளை அதே பிழையை அவர்கள் விடாமல் இருக்கவேண்டும்.

3. "நாடு கடந்த அரசு என்று ஒன்று ,தேசிய பேரவை என்று ஒன்று ,இவர்கள் யாராவது கூட்டமைப்புடன் தொடர்பிலா என்றால் அதற்கும் பதிலில்லை".

இவர்கள் அவர்களுடன் வெளிப்படையாக சேர்ந்து இயங்குவதுதான் சரியான அரசியல் என்றில்லை. அதேவேளை உலகத்தமிழர் பேரவையின் அங்கமான கனேடிய தமிழர் பேரவை சுமந்திரனை கூப்பிட்டதையும் நக்கீரன் ஐயாவைப்பற்றியும் தெரிந்தும் மறைத்துள்ளீர்கள்.

ஒருவருடனும் வேலை செய்ய முடியாது என்றால் நீங்களே ஒரு அமைப்பை உங்கள் நண்பர்களுடன் ஆரம்பிக்கலாம். அதற்கு யார் தடை போட்டுள்ளனர்??

மொத்தத்தில் கடந்த மூன்று வருடங்களாக எமக்கு கிடைத்த அரசியல் வெற்றியை, சிறிது என்றாலும், நீங்கள் அதை மறுக்கிறீர்கள் இல்லை மறைக்கின்றீர்கள். ஏனோ தெரியவில்லை எப்பொழுதுமோ ஆலோசனை என்ற பெயரில் அவநம்பிக்கையையே எழுதுகிறீர்கள்.

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் சொல்வதில், பல உண்மைகள் இருக்கின்றன!

ஊரில்,பசியால் வாடும் மக்களுக்காகக் கடன் எடுத்துக் காசு குடுத்து அந்தக் காசில வீடு வாங்கின நண்பர்களும் எனக்கு இருக்கின்றார்கள்!

நீங்கள் எழுதும் கருத்துக்களுக்காக, உங்களை எவரும் பிழையாக விமர்சித்ததை நான் காணவில்லை! நீங்கள் எழுதும் முறை தான், ஆத்திரமூட்டும் வகையில் அமைகின்றது என்று நினைக்கிறேன்!

ஒரு ஆசிரியன் படிக்காத ஒரு மாணவனிடம், கூறும் தொனியில் உங்கள் கருத்துக்கள் அமைகின்றன!

தமிழர்களில் ஒரு குணம் உள்ளது!புலத்தில் கோவிலுக்கு ஒழுங்காகப் போவார்கள்! அவர்களிடம் 'பக்தி' சொட்டும்! ஆனால் கொடியேற்றும் போது, அந்தக் கொடியில், ஒரு வேட்டியும், ஒரு கயிறும் சேர்ந்திருக்கும்! அதன் அர்த்தத்தைக் கேட்டுப் பாருங்கள். அநேகமானவருக்குத் தெரிந்திருக்காது!

அதேபோலச் சிலர், அரசியல் செய்கின்றார்கள்!

இவர்களின் தேவை ஒரு விதமான ;சமூக அந்தஸ்து' மட்டும் தான்!

ஆனால், உண்மையில் எமது போராட்டத்திற்கு, வலுச் சேர்ப்பவர்கள் பலர் புலத்தில் இருக்கின்றார்கள்!

இவர்களால் தான் இலங்கையில் தமிழன் இன்றும் வாழ்கின்றான்!

மற்றும்படிக்குக், கருணா, பிள்ளையான், டக்லஸ் போன்றவர்களை, புலத்தில் விமர்சிக்கின்றோம்!

ஏனெனில் இவர்கள், சும்மா இருக்கவில்லை. இது உங்களுக்கும் தெரியும்!

சரியான, சாத்தியமான,வழிகளைச் சொல்லுங்கள்! இனிமேலாவது, ஒன்றாகப் பயணிப்போம்!

Waldorf_Family_Turnip.jpg

Share this post


Link to post
Share on other sites
Jude    143

ஆனால் தேசியம் என்ற ஒன்றிற்காக குருட்டுவழியில் எவர் பின்னும் போக தயாராக இருக்கின்றார்கள் என்பது மட்டும் தெளிவு.

அது இயற்கையானது. இந்தியாவில் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய தேசியவாதிகள். அமெரிக்காவில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க தேசியவாதிகள். சிறிலங்காவில் சிங்களவர்கள் சிங்கள தேசியவாதிகள். ஈழத்தமிழர்கள் தேசியவாதிகளாக இருப்பது சாதாரணமானதும் எதிர்பார்க்கப்பட வேண்டியதுமல்லவா?

புலிகள் ஏகப்பிரதிநிதிகளாகி மற்றைய இயக்கங்களை விட மலையளவு வளர்ந்து உலகம் வியக்கும் இராணுவ அமைப்பாக வளர்ந்து உண்மை,ஆனால் அரசியல் ரீதியில் ஏதாவது ஒரு நாட்டினாவது அங்கீகாரத்தை பெற்றதா என்றால் இல்லை,

ஒன்றை செய்ய முடிந்தது. மற்றதை செய்ய முடியவில்லை. சர்வதேச நிலைப்பாடு அதற்கு சாதகமாக அயைவில்லை. அவர்களுக்கும் போதிய ஆற்றல் இருக்கவில்லை.

நாடு விடுதலை பெற முதலே A.N.C பல நாடுகளில் இராஜதந்திர அங்கீகாரத்துடன் அலுவலகங்கள் வைத்திருந்தது.

ஒரு பெரிய நாட்டின் பெரும்பான்மை இனத்தின் அடிப்படை உரிமைகளுக்காக நடந்த போராட்டத்துக்கு அந்த அமைப்பு தலைமை தாங்கியது. அந்த நாடு வளம் செறிந்த நாடு. அதன் காரணமாக சர்வதேச சக்திகள் எதிர்காலத்தில் தமக்கு சாதமான நாடாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதரவளித்தன. தமிழீழம் மிகச்சிறிய நாடு. நீஙகள் ஒப்பிட முடியாதவற்றை ஒப்பிட்டு பார்க்கலாமா?

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இன்று ஓடித்திரிபவர்கள் இந்த இருபது வருடமாக என்னை செய்தார்கள்.அந்த அந்த நாடுகளில் புலிகளை தடை செய்ய வழிவகுத்ததை விட வேறொன்றுமில்லை.

இது உண்மையல்ல. மேலும் கடுமையாக உழைத்தவர்களை நோக வைக்கும் விதமான கருத்து. விடுடுதலைப்புலிகளின் இராணுவ பலத்துக்கும், தமிழர் பிரச்சினையை உலகளவில் பெருப்பித்ததற்கும் வெளிநாடுகளில் இருந்து உதவியவர்கள் முக்கிய காரணம்.

சரி நடந்து முடிந்துவிட்டது இனியாவது ஒன்றாக எதுவும் நாட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து செய்யலாம் என்றால்?

செய்யலாமே? பலரும் செய்கிறார்களே? சாந்தியும், சாத்திரியும் மற்றும் பலரும் நேசக்கரத்தை உருவாக்கி செய்கிறார்களே? நீங்களும் இணைந்து கொள்ளலாம் அல்லவா?

தலைவர் இருக்கின்றார் வருவார் என ஒரு கூட்டம்,

போராட்டம் மவுனிக்கபட்டது தொடரும் என்று இன்னொரு கூட்டம்

நாடு கடந்த அரசு என்று ஒன்று ,தேசிய பேரவை என்று ஒன்று ,

எமது மக்கள் சுதந்திரத்தை விரும்பி அனுபவிப்பவர்கள். சிந்திக்கவும் செயற்படவும் அவர்களுக்கு சுதந்திரம் இருப்பதால் சிந்திக்கிறார்கள், செயற்படுகிறார்கள். சிந்தனைகள் பல விதம். செயற்பாடுகள் அவற்றை பிரதிபலிக்கின்றன. வேறுபட்ட சிந்தனைகளும் செயற்பாடுகளும் அறிவையும் மக்களது ஆற்றலையும் அதிகரிக்கிறதே தவிர குறைப்பதில்லை. இதளால் தான் கருத்து சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம், செயற்படும் சுதந்திரம் உள்ள நாடுகளை மக்கள் நாடி செல்கிறார்கள். ரசியரும் சீனரும் அமெரிக்காவுக்கு வந்து பெருமளவில் குடியேறுவது போல அமெரிக்கர்கள் ரசியாவுக்கோ சீனாவுக்கோ பெருந்தொகையில் குடியேற போகாததற்கு இந்த சுதந்திரம் தான் காரணம். அதற்காக போராடி எமது மக்கள் மாண்டு போனார்கள். அந்த சுதந்திரத்தை கைவிட சொல்லி நீங்கள் கேட்கலாமா?

இவர்கள் யாராவது கூட்டமைப்புடன் தொடர்பிலா என்றால் அதற்கும் பதிலில்லை.

கேட்பவர்களுக்கு எல்லாம் செயற்படுபவர்கள் பதில் சொல்லிக்கொண்டிருப்பதில்லை. பங்களிப்பவர்கள் அறிந்திருக்கார்கள். அவர்கள் கேட்டு அறிய வேண்டிய தேவையுமில்லை. நீங்களும் பங்காளியானால் அறிந்து கொள்வீர்கள். ஏதாவது அமைப்பு ஒன்றுடன் இணைந்து பங்களியுங்கள். கேட்காமலே பதிலை அறிந்து கொள்வீர்கள்.

சேர்த்த பணம்,கணக்கு,முதலீடுகள் எல்லோரும் கையை விரிக்கின்றார்கள்.

பணம் கொடுப்பவர்கள் கணக்கு விபரங்களை அறிந்திருக்கிறார்களே? நீங்கள் கொடுப்பதில்லையா? அதளால் தான் கைவிரிக்கிறார்கள் போலும். பணத்தை கொடுத்துவிட்டு கேளுங்கள். கணக்கு தருவார்கள். தராவிட்டால் கணக்கு காட்டும் மற்றவர்களுக்கு கொடுங்கள்.

அதை விட நாட்டில் அரசுடன் நின்று அரசியல் செய்தவர்களெல்லாம் புலம் பெயர் தலைமை பதவிக்கு அடிபடுகின்றார்கள்.

அந்த சுதந்திரத்தை கைவிட சொல்லி நீங்கள் கேட்கலாமா?

இவர்கள் எல்லோருமே புலிகளின் பெயரை பாவித்து புலிகள் விட்டு போன தலைமையையும் அதிகாரத்தையும் புலம் பெயர்ந்த நாடுகளில் கைப்பற்ற பார்க்கின்றார்களே ஒழிய யாரும் நாட்டில் இருக்கும் மக்களுக்காக போராடுபவர்களாக தெரியவில்லை.

சாந்தியின் நேசக்கரம் செய்கிறதே? நீங்களும் உதவலாம்.

புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் தங்கள் அலுவல்களை பார்த்துக்கொண்டு ஏதாவது ஒரு அமைப்பிற்கு உதவினால காணும் என்ற மனப்பான்மையில் இருந்தால் சர்வதேசம் எம்மில் கவனம் செலுத்தும் இந்நேரம் நாம் பிரிந்து அடிபட்டால், எம்மால் அடுத்து ஒரு அடி கூடதானும் வைக்க முடியாமல் போய்விடும்.

அவர்கள் தமககு தெரிந்ததை செய்கிறார்கள். அதனிலும் பார்க்க பயனுள்ள வகையில் செய்யக் கூடியவற்றை நீங்கள் முன்வைத்தால் பலரும் உங்களுடன் இணைந்து செயற்படுவார்களே?

எமக்கும் நாம் என்ன செய்கின்றோம் என்பதைவிட டக்கிளஸ்,கருணா ,பிள்ளையான் ,கக்கீம் என்ன செய்கின்றார்கள் என்பதில் தான் அக்கறை.அவர்களை திட்டி தீர்ப்பதில் கொஞ்ச நேரம் நாட்டிற்காக செலவிட்டால் கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும்.

எப்படி செலவிட வேண்டும் என்று விளக்கமாக சொல்லலாமே?

அரசியலில் பலவருடம் இருந்தவன் ,பலரை சந்தித்தவன் என்ற ரீதியில் சொல்லுகின்றேன் நாம் சரியான பாதையில் சிறிதளவும் போகவில்லை என்பதே உண்மை,தேசிய போர்வைக்குள் புகுந்து குளிர் காய்பவர்களுக்கு பின்னால் நின்றால் ஆயுளுக்கும் நீங்கள் நடுறோட்டில் தான்.

சரியான பாதையை தெளிவாக சொன்னால் மற்றவர்களுக்கும் புரியுமல்லவா?

Share this post


Link to post
Share on other sites
nunavilan    1,952

அரசியலில் பலவருடம் இருந்தவன் ,பலரை சந்தித்தவன் என்ற ரீதியில் சொல்லுகின்றேன் நாம் சரியான பாதையில் சிறிதளவும் போகவில்லை என்பதே உண்மை,தேசிய போர்வைக்குள் புகுந்து குளிர் காய்பவர்களுக்கு பின்னால் நின்றால் ஆயுளுக்கும் நீங்கள் நடுறோட்டில் தான்.

அடிக்கொரு தடவை பிழை பிழை என்று கூவித்திரியாமல் சரியான பாதையை சொல்லுங்கள் பார்ப்போம்.ஏதாவது எமக்கு புரிகிறதா என்றாவது பார்க்கலாம்.

யாழில் பலர் என்னை விட வயதில் குறைந்தவர்கள் என்பதும், அதைவிட அரசியல் அனுபவத்தில் மிக மிக குறைந்தவர்கள் என்றும் எனக்கு தெரியும்.

நீங்கள் அரசியல் அறிவிருந்தும் ஒன்றும் சாதிக்காத வரையில் எங்கள் அளவுக்கு கிட்ட தான் உள்ளீர்கள் என எடுக்கலாமா??

இங்கு நான் அரசியல் எழுதமுதல் அரசின் கைக்கூலி,டக்கிலசின் எடுபிடி,முன்னாள் சொத்துப்பாசல் என்றெல்லாம் ஒரு சிலர் கூக்குரல் இடுகின்றார்கள்.நான் அப்படியாக இருந்தால் யாழில் வந்து குப்பை கொட்டாமல் கியூபாவில் கடற்கரை மணலில் படுத்திருப்பேன்.

மீண்டும் சொல்கிறேன் நீங்கள் உங்கள் நக்கல் நளினங்களை விடுங்கள்.யாரும் உங்களை பேர் சொல்லி எழுதுகிறார்களா என பார்ப்போம்.

பலருக்கு கோவம் இவ்வளவு தியாகங்கள் செய்த புலிகளை வசை பாடுவதா என்று ?.நியாயம் தான்.எனது கோவம் இவ்வளவு தியாகங்களும் வீணாகி விட்டதே என்றுதான்.

புலிகள் மீது கோவப்பட்டு என்ன பலன்? தம்மாலான சகலவற்றையும் செய்தார்கள்.தமது ஆள் பற்றாக்குறையை சொன்னார்கள்.உலக நாடுகளின் திருகு தாளங்களை சொன்னார்கள்.இதய சுத்தியுடன் செயற்பட்டார்கள்.இன்றும் அவர்களின் உயிர்த்தியாகங்கள் தான் ஜெனிவாவில் போர்குற்றங்களை செய்த சிறிலங்கா அரசை தோல்வியுற செய்தது. புலிகள் காலத்தில் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளையும் கடந்த 3 வருடத்தில் நடைபெற்ற செயற்பாடுகளையும் ஒப்பீடு செய்தீர்கள் எனில் கோவப்படாமல் சிந்திப்பீர்கள்.

எமக்கும் நாம் என்ன செய்கின்றோம் என்பதைவிட டக்கிளஸ்,கருணா ,பிள்ளையான் ,கக்கீம் என்ன செய்கின்றார்கள் என்பதில் தான் அக்கறை.அவர்களை திட்டி தீர்ப்பதில் கொஞ்ச நேரம் நாட்டிற்காக செலவிட்டால் கொஞ்சமாவது பிரயோசனமாக இருக்கும்.

யாழில் ஹக்கீமை திட்டியது அவர் வரை சென்று பதில் தர வைத்ததை நிங்கள் அவதானிக்கவில்லை போலும்.அத்தோடு புலம் பெயர் மக்களுக்கு இவர் ஏன் பதிலளித்து இருக்க வேண்டும் எனு சிந்திக்கவில்லையா??

புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் தங்கள் அலுவல்களை பார்த்துக்கொண்டு ஏதாவது ஒரு அமைப்பிற்கு உதவினால காணும் என்ற மனப்பான்மையில் இருந்தால் சர்வதேசம் எம்மில் கவனம் செலுத்தும் இந்நேரம் நாம் பிரிந்து அடிபட்டால், எம்மால் அடுத்து ஒரு அடி கூடதானும் வைக்க முடியாமல் போய்விடும்.

மற்றவர்கள் அடிபடுகிறார்கள் என்று பார்த்ஹ்டுக்கொண்டு இருக்க முடியாது. யார் உண்மையாக உழைக்கிறார்களோ அவரின் பின்னால் அணி திரள வேண்டியது தான்.சிங்களவரை பாருங்கள் தமிழருக்கு அடிக்க வேண்டும் என்றால் கட்சி வேறுபாடின்றி இனவாதம் கக்குகிறார்கள்.

Share this post


Link to post
Share on other sites
ரதி    1,951

//புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இன்று ஓடித்திரிபவர்கள் இந்த இருபது வருடமாக என்னை செய்தார்கள்.அந்த அந்த நாடுகளில் புலிகளை தடை செய்ய வழிவகுத்ததை விட வேறொன்றுமில்லை.//

அவர்கள் அப்பவே அதாவது தடை போட்டவுட‌னேயே அதை எதிர்த்து எதாவது செய்திருந்தால் உட‌னே பலன் கிடைத்திருக்கும்.

//இவர்கள் எல்லோருமே புலிகளின் பெயரை பாவித்து புலிகள் விட்டு போன தலைமையையும் அதிகாரத்தையும் புலம் பெயர்ந்த நாடுகளில் கைப்பற்ற பார்க்கின்றார்களே ஒழிய யாரும் நாட்டில் இருக்கும் மக்களுக்காக போராடுபவர்களாக தெரியவில்லை.//

இதென்டால் மிகப் பெரிய உண்மை

மொத்தத்தில் போராட்டம் அழிந்ததில் முக்கிய பங்கு இங்கிருக்கும்,பதவி ஆசைப்படும் பலரால் என்பது என் கருத்து

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் எழுதிய சிலவற்றுடன் ஒத்து போக முடிகிறது நடு நிலையாக எழுதுங்கள் புலிகளை விமர்சிக்கிறேன் எண்டு அவர்கள் மீது புழுதி வாரி கொட்டாமல் இனி என்ன செய்ய வேண்டும் எப்பிடியான அணுகுமுறை தேவை என்றதை எழுதுங்கள்

அண்மையில் நீங்கள் இணைத்த சேரனின் கட்டுரையிலும் இவர்கள் செய்வது எல்லாம் பிழை என அவர் எழுதி இருந்தாரே தவிர எது சரியானது எப்பிடி செயற்பட வேணும் எண்டதை எழுதவில்லை இது எனக்கு சாதிக்கிறவன் போதிக்க

மாட்டான் போதிக்கிறவன் சாதிக்க மாட்டான் என்ற கூற்றை நினைவு படுத்தியது

விமர்சிக்கிறது இலகு செயற்படும் போது தான் தெரியும் அங்கு உள்ள கஷ்டங்கள்

சிலவேளை நான் நினைப்பது இவர்கள் (சேரன் போன்றோர் ) காழ்ப்புணர்வில் தான் இப்பிடி எழுதுகிறார்களோ என தங்களுக்கு கல்வி அறிவு இருக்கு தகமை இருக்கு தாங்கள் முன்னிலைபடுத்த பட வேண்டிய இடத்தில் இன்னொருவர் முன்னிலை படுத்த படுகிறாரே என

விமர்சனமாக இல்லாமல் இனி என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் என உங்கள் பார்வையில் எழுதுங்கள் கடந்த காலம் பற்றி இல்லாமல் எதிர்காலம் பற்றி

Share this post


Link to post
Share on other sites
ஜீவா    681

விமர்சனமாக இல்லாமல் இனி என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள் என உங்கள் பார்வையில் எழுதுங்கள் கடந்த காலம் பற்றி இல்லாமல் எதிர்காலம் பற்றி

இதற்காகத்தான் அர்ஜுன் அண்ணாக்கு ஒரு பச்சை :)

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன்,

முதலில், எம் மக்களின் உரிமைகளை வென்று எடுபதற்காக உங்களால் இயன்றதை செய்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றவைகளை போல சகட்டு மேனிக்கு புலிகளை வசை பாடிவிட்டு, மறைமுகமாக கேவலபடுத்தும் சுய இன்பத்தில் மூழ்கி கிடப்பவர்களை விட நீங்கள் ஒரு படி மேலே தெரிகிறீர்கள்.

நீங்கள் உங்களுக்கு தெரிந்த அரசியல், நீங்கள் சந்தித்த மனிதர்களை, வாசித்த புத்தகங்களை வைத்து, கணிப்பிட்டு ஒரு அரசியல் கட்டுரை வரைந்திருக்கிறீர்கள், உங்கள் ஊகம் சரியாகவும் இருக்கலாம், பிழையாகவும் இருக்கலாம். அதுவல்ல இங்கு முக்கியம். நீங்கள் இன்னும் எம் மக்களின் விடிவிற்காக ஏதொ செய்யமுற்படுகிறீர்கள் என்பது மட்டும் சரியாக புலனாகிறது.

இந்த களத்தில் உங்களை மட்டும் தான் வசை பாடுவதாக நினைக்காதீர்கள், அதுவும் உங்கள் மீதான தனிப்பட்ட கோபமாகவும் கருதாதீர்கள். அது அவர்களின் கொள்கை மீதான பற்று, அவர்கள் விரும்புவர்களை நீங்கள் ஏளனம் செய்வதால் ஏற்பாடு கோபம் காரணமாக இருக்கலாம். சிலவேளைகளில் அவர்களின்/உங்களின் உணர்ச்சிவசபட்ட கோபம் நீண்ட அரசியலுக்கு ஒத்துவராமலும் இருக்கலாம்.

ஒவ்வொரு தாக்கத்துக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் இருக்கும் என்பது அரசியலுக்கும் பொருந்தும்.

இந்த வேளையில், நீங்கள் எம் மக்களின் விடுதலையா வென்று எடுப்பதற்கு, உங்களின் நீண்ட கால அரசியல் அனுபவத்தையும், சந்தித்த வாசித்த மனிதர்கள் புத்தகங்களை வைத்து ஒரு முறையான அரசியல் வழிமுறையை முன் மொழியுங்கள். அது அடிப்படை அரசியலாக இருந்தால் போதுமானது.

அதைவைத்து நாங்கள் விவாதிப்போம், மேலும் மேருகூட்டுவோம். ஒரு சிறப்பான வழிமுறையை கண்டறிவோம். இதற்கு எல்லாம் முதன்மையானது மற்றவர்களை நோக்கி வசை பாடுதலையும், அவர்கள் சொல்லுவது பிழை நான் சொல்லுவது தான் சரி என்ற எண்ணப்பாட்டுடனான கருத்துகளும் தான்.

அதை தவிர்த்து ஒற்றுமையாக எங்களின் போராட்டத்தை முன்னெடுப்போம்.

அர்ஜுன்,

நீங்களே முன்னின்று ஒரு திரியை இந்த அரசியல் அலசலில் ஆரம்பியுங்கள். எம்மக்களுக்கான அரசியல் தீர்ப்பு எவ்வாறு அமைய வேண்டும், அதை எவ்வாறு எம்மக்களுக்கு பெற்று கொடுக்கலாம் என்று. அதில் அலசுவோம். எமக்களுக்காக பேசுவோம்.

இன்று இந்த பொது கருத்துக்களம் தனிப்பட்ட மனிதர்களுக்காக எத்தனையோ திரிகளை திறந்து சண்டைபிடிக்கும் பொது, எம்மக்களின் தீர்வுக்காக ஒரு திரியை நீங்கள் திறவுங்கள் அர்ஜுன்.

அந்த திரியை முறையாக மட்டுறுத்த (வீண் தனி மனித தாக்குதல்களை தவிர்த்து பொது நோக்கத்துக்காக செயற்படுத்த ) நிர்வாகத்தை உதவுமாறு கேட்போம்.

நாங்கள் நிற்கிறோம் உங்கள் தோளோடு .வாங்க அர்ஜுன் எல்லாரும் சேர்ந்து ஒற்றுமையாக போராடுவோம்.

எங்கள் மக்களின் விடிவையும் உரிமைகளையும் வென்றெடுப்போம்.

நன்றி,

பகலவன்

Share this post


Link to post
Share on other sites

இதை இங்கு பதிய முயற்சித்தமைக்கு நன்றிகள்

ஆனால் தங்களது கருத்துக்கள் எதனுடனும் ஒத்துப்போக முடியவில்லை.

நீங்கள் குறித்துக்காட்டியிருக்கும்அத்தனை கேள்விகளையும் தங்கள்;மீது திருப்பிப்போட்டுப்பார்த்தேன். விடை பூச்சியமே.

செயலற்ற எதுவும் நடைமுறைக்கொவ்வாது.

அதனால் சிவப்பிட்டுள்ளேன்.

இங்கு பச்சை இட்டவர்களும் தங்களது கருத்துக்காக அல்ல முயற்சிக்காகவே இட்டுள்ளதாக உணர்கின்றேன்.அதை தாங்களும் உணரணும் என ஆசைப்படுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites
Justin    550

அர்ஜூன் எரிக் பெர்ன் (Eric Bern) எழுதிய" I am OK, You're OK "படிக்க வேண்டும். எதிராளியை முட்டாளாகப் பார்க்காமல் எதிரியின் கருத்தை மறுத்துப் பதில் சொல்லும் திறமையில் நீங்கள் இன்னும் அறிவிலியாகத் தான் இருக்கிறீர்கள். நீங்கள் அப்படிப் பேசினாலும் உங்கள் கருத்தை மட்டுமே எதிர்த்து உங்களிடம் கேள்வி கேட்ட பலரில் நானும் ஒருவன். அக்கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிப்பதே இல்லை. இந்த ஓடி ஒழிதலே உங்கள் அனுபவத்தை நீங்கள் சொல்லும் போது "இது வெறும் பந்தா" என்று பலர் சொல்ல வைக்கிறது. humility நல்லது. கற்றுக் கொள்ளல் "எனக்குத் தெரியாது" என்பதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது! இது என் தாழ்மையான அபிப்பிராயம்.

Share this post


Link to post
Share on other sites
நிழலி    3,605

அர்ஜுன் தொடர்ந்து எழுதுங்கள்

ஜஸ்ரினுடைய கருத்து தான் எனது கருத்தும்

...மற்றவர்களை மொக்குக் கூட்டமாக பார்த்துக் கொண்டு அந்த கூட்டத்துக்காக எழுதுகின்றேன் என எழுதும் போது உங்களால் எழுத விரும்புபவற்றை ஒரு அதிகாரத் தொனியுடன் தான் எழுத வேண்டி வரும்.

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன் , அரசியலைப் பற்றிக் கதைப்பதென்பது வேறு. நடைமுறைப்படுத்துவது என்பது வேறு. நாம் பேசும்போது, அது சாத்தியமானதாகத் தான் தோன்றும். ஆனால், நடைமுறைப்படுத்தும்போதுதான் அவற்றிலுள்ள சிக்கல்கள் தெரியவரும். முதலில் மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டுபிடியுங்கள். உங்களால் மற்றவர்களின் கேள்விகளுக்குக் கூட பதிலளிக்க முடியவில்லையானால், உங்களால் எவ்வாறு நடைமுறைச் சாத்தியமாக்க முடியும் என்பதையும் மனதில் வையுங்கள்.

Share this post


Link to post
Share on other sites
arjun    1,731

நேரம் ஒதுக்கி பின்னூட்டமிட்ட அகூதா,புங்கையூரன்,நுணாவிலான்,ரதி ,அபராஜிதன் ,ஜீவா,பகலவன் ,விசுகு ஆகியோருக்கு நன்றிகள் . யூட் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பதில் எழுதியிருந்தார் .A.N.C ஐ உதாரணத்திற்கு மட்டும் எழுதினேன் ,இதே போல் வேறு விடுதலை அமைப்புகளும் உத்தியோகபூர்வ அந்தஸ்த்துடன் வேறு நாடுகளில் அலுவலங்கள் வைத்திருந்ததன.

பலர் மிக அர்ப்பணிப்புடன் தான் வேலை செய்தார்கள் ,ஆனால் அவை எந்தளவு ஆக்கபூர்வமாக இருந்தது என்பதுதான் கேள்வி.உலக தமிழர் போன்ற ஒரு அமைப்பை கனடா தடை செய்தது வரலாற்றில் முதல் தடவை ,இவை எல்லாம் நியாய படுத்தமுடியாத தவறுகள் .

அடுத்து நான் பாவிக்கும் வார்த்தை பிரயோகங்கள் பற்றி ,அடுத்த தமிழ் நாட்டு தேர்தலில் கருணாநிதி வென்று ஈழத்தமிழனின் வாழ்வில் விளக்கேற்றிய ஜோதியே என்று போஸ்டர் ஓட்டினால் அவர்களை மொக்கு கூட்டங்கள் என நான் திட்டினால் அதை எவரும் ஆட்சேபிக்கபோவதில்லை ,ஆனால் அதே போன்ற செயற்பாட்டை எம்மவர் சிலர் செய்யும் போது நான் மொக்கு கூட்டங்கள் என எழுதினால் பொத்துக்கொண்டு வருகின்றது. அது ஏன் என்று தெரியவில்லை,

ஜஸ்டினுக்கும் ,நிழலிக்கும் -- நான் எவர் கேள்விக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கின்றேன் அதில் பிரயோசனம் இருக்குமென்றால் ,இன்று கக்கீம் பற்றிய தலைப்பில் பொயட் சளைக்காமல் பதில் சொல்வதை பார்க்க எனக்கே பாவமாக இருந்தது,உண்மையாக நேர்மையாக கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கட்டாயம் எழுதத்தான் வேண்டும் ,வீம்பிற்கு, பொழுது போக்கிற்கு மற்றவனை விசரனாக்க நினைபவர்களுக்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்க முடியாது .

தமிழிச்சிக்கு விரிவாக ஒரு பதில் எழுதுகின்றேன்,

Share this post


Link to post
Share on other sites
sathiri    994

அர்ஜீன் பச்சை மட்டும் குத்தியுள்ளேன் காரணம் நானும் புலியின் நீண்டகால உறுப்பினன் என்பதால் எனக்கும் அரசியல் பற்றி பெரிதாக தெரியாது அதே நேரம் முழு நேர அரசியல் செய்த ஈரோஸ். புளொட். ஈ.பி.ஆர் எல் எவ் என்பன கூட எமது மக்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பை பெறவில்லை காரணம் என்னவெனில் முழுக்க முழுக்க அரசியலும் வீராவேச மேடைப்பேச்சுக்களையும் அள்ளி வீசிய கூட்டணியினரின் அரசியல்தான் காரணம். அதனாலேயே உள்ளுரில் அரசியலில் தமிழர்களிற்கு ஆர்வம் இருக்கவில்லை. அதே பழக்கத்திலேயே புலிகள் அமைப்பும் சர்வதேசத்தில் அரசியல் செய்யவில்லை. இரண்டையும் பிரித்து தனித்தனியாக கையாண்டிருக்கவில்லை.

Share this post


Link to post
Share on other sites
arjun    1,731

எமது அரசியல் பற்றி நாம் சிந்திக்கும் விதத்திலும் வேறுபாடுகள் இருக்கலாம்,ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் எதுவும் செய்துவிட்டு போகலாம்,ஆனால் பொதுவாழ்க்கை என்று வரும் போது அவர்கள் தூய்மையானவர்களாகவும் அதில் நேர்மையும் உண்மையும் மிக அவசியம். இவன் என்ன ஆன்மீக பிரசங்கம் செய்கின்றான என யாரும் நினைக்கலாம்,புலம் பெயர்ந்து அரசியல் செய்யும் பலரை எனக்கு நன்கு தெரியும்,அவர்களுக்கும் உண்மைக்கும் நேர்மைக்கும் வெகுதூரம்,அப்படியாயின் எப்படி இவர்கள் எமது இனத்தின் பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்.அதுதான் அவர்கள் சாமர்த்தியம்.

சரி நான் சொல்வது உண்மையெனில் மற்றவர்கள் ஏன் அவரை அங்கு சேர்த்து வைத்திருக்கின்றார்கள்,ஒருவரின் குறையை வெளிக்கொண்டுவர போக முழு ஆட்களைனதும் பொட்டுகேடுகள் வெளிவந்து விடும் .

அப்போ அனைவரும் நேர்மையற்றவர்களா? இல்லை .ஆனால் தான் குற்றசாட்டு வைக்கபோக தனக்கே ஆப்பு வந்துவிடுமோ என்றபயம்தான் அவர்களுக்கு. மாணவர் அமைப்புகளில் இருக்கும் பலருக்கு இவர்களின் கடந்த காலம் தெரியாது ,அதைவிட ஓடும் கப்பலில் ஏறி தானும் ஒரு கரையை அடைய அவர்களில் பலர் நினைக்கின்றார்.கப்பலில் இருக்கும் ஓட்டைகள் பற்றி அவர்கள் அக்கறை படுவதில்லை தாம் கப்பல் தாழமுதல் ஒரு கரையை அடைத்துவிட வேண்டும் என்பதுதான் பலர் நோக்கம்.

இதைவிட வேடிக்கை என்னவென்றால் காலம் காலமாக ஒருவர் தேசியதிற்கு தன்னை அர்பணித்து மிகவும் அர்ப்பணிப்புடன் வேலை செய்துகொண்டிருப்பார்.ஒரு தேவைக்காக விளம்பரத்திற்கு போன இடத்தில் இன்னொருவர் பின்பக்க மட்டை என்று மூவாயிரத்திற்கு காசோலையை கொடுப்பார்.அடுத்து மூன்று வருடங்கள் இவர் இதையே செய்ய அதற்கு அடுத்த வருட விழாவிற்கு இவர்தான் பிரதம விருந்தினர்.அது பத்தாதற்கு அவர் கொடுக்கும் பணம் இவர்களின் பல செயற்பாடுகளை நிர்ணயிக்க தொடங்கும்.

இவர் கள்ள கிரடிட் காட் நபராக இருக்கலாம் ,சட்டவிரோத இன்சூரன்ஸ் செய்யும் ஏஜெண்டாக இருக்கலாம்,ஆள் கடத்தும் ஏஜெண்டாக இருக்கலாம்,(பல பெண்களை கொண்டுவரும் வழியில் பலவந்த படித் தியவராகவும் இருக்கலாம்) ,கோவில் உரிமையாளராகவும் இருக்கலாம்,தூள் கடத்தி இப்போ பெரும் பிசினஸ் மக்னேட் அகவும் இருக்கலாம், அதை பற்றி எல்லாம் எதுவித அக்கறையுமில்லை இவர்கள் தான் இப்போ புலம் பெயர் அரசியலை தீர்மானிக்கும் புள்ளிகள் ஆகின்றார்கள்.

பதினைந்து வருடமாக நாட்டிற்காக அலைந்தவன் வன்னிக்கு போக ஆசைப்பட,அங்கு போய் தமிழ்செல்வனுடனும் புதுவையுடனும் அவன் பயணம் முடிகின்றது,மூன்று வருடங்கள் ரியல் எஸ்டேட் செய்து ஆயிரங்கள் கொடுத்தவன் தலைவருடன் ஒரே மேசையில் இருக்க கறி பத்தாதா எனக்கேட்டு தலைவர் குழம்பு விடுகின்றார்.

இங்குதான் எமது போராட்டம் பிழையான சக்திகளின் கையில் விழ ஆரம்பிக்கின்றது. 83 கலவரத்தின் பின் இயக்கத்தில் இணைந்த பத்தாயிரம் போராளிகளின் கனவு நாப்பது வியாபாரிகளின் கைகளில் போய் முடிகின்றது. இன்று கூட அந்த பத்தாயிரத்தில் பலரை சந்திக்கின்றேன்.

போராட்டம் முடியவில்லை, சிங்களம் வென்றது அந்த நாப்பதுபேரை மட்டுமே, எமது போராட்டம் ஏதோ வகையில் தொடரும் என்கின்றார்கள்.

அது நாட்டில் எமது மக்களால் தான் என்பதில் அவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.

அந்த நாப்பது பேரும் இன்னமும் புலம் பெயர் அரசியல் செய்வதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.

Share this post


Link to post
Share on other sites

எனக்கு தெரிந்த ஒரு கதையும் சொல்லுகிறேன்.

இது இரண்ட்டயிரத்து ஐந்தில் இடம்பெற்றது.

கச்சாய் சின்ன தம்பி என்று ஒரு பெரியவர். அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகள். சிறுவயதில் அவரது மனைவியார் இறந்துபோக, அவரே கஷ்டபட்டு தோட்டம் செய்து பிள்ளைகளை வளர்த்தார். மூத்தவனை இந்திய ராணுவத்துடன் இயங்கிய தமிழ் கைகூலிகள் வீடு புகுந்து சுடவே, இரண்டாமவனை தானே புலிகள் இயக்கத்துக்கு அனுப்பிவைத்தார். அவனும் தலைவனின் பாசறையில் தலைவனின் மெய்பாதுகாவலனாக கடமையாற்றி, மணலாற்று பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் வீர்ச்சாவடைகிறான். இருந்த கடைசி மகனையும் போருக்கு அனுப்பிவைக்கிறார் அந்த பெரியவர். அவனும் மூன்று ஆண்டுகள் இயக்கத்தில் பணியாற்றி, தந்தையின் முதுமை தனிமை உணர்ந்து, புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி வெளிநாடு ஒன்றிற்கு போவதாக தந்தைக்கு கூறிவிட்டு, தாய்லாந்தில் புலிகளுக்காக பணியாற்றி இன்னும் சிறையில் இருக்கிறான்.

கச்சாய் சின்னத்தம்பி தன் வாழ்நாளிலேயே தலைவரை நேரில் சந்தித்தது இல்லை. ஏன் சூசை கூட பேசியதும் இல்லை. ஆனால் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் இருந்து புலிகளின் சூட்டுக்கு பயந்து இந்திய இராணுவ காலத்தில் வெளிநாடு போய், சமாதான காலம் வரை எந்த செயற்பாட்டிலும் இல்லாமல், மறைமுகமாக புலிகளை எதிரிந்து வந்த ஒரு நபர், சமாதான காலத்தில் யாருடையதோ காலை பிடித்து வன்னி வந்திருந்தார். அங்கு சூசைக்கு இரண்டு மடிகணணி, தமிழ்செல்வனுக்கு நான்கு மடிகணணி. பிறகு என்ன முல்லைத்தீவு கடற்கரையில் சூசையுடன் கூழ் குடித்தார் அந்த முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். தமிழ்ச்செல்வன் ஒரு படி மேலே போய் எந்த தலைவன் அவரை சுட ஆணையிட்டானோ அவரை சந்திக்கவும் அவர் கூட படம் எடுக்கவும் அனுமதி வாங்கி கொடுத்தார்.

சமாதான காலத்துக்கு முந்தியவரையும், தலைவருடன் படம் எடுப்பது என்றால், அது பிரத்தியேக கமெராவில், தலைவரின் பாதுகாப்பு அணியை சேர்ந்த ஒருவர் தான் எடுப்பார். அதை வெளியிலே விட முதல் நன்கு பரிசீலிக்கப்படும். அனால் பிற்பட்ட காலங்களின் வெளிநாட்டில் இருந்து வரும் மேற் சொன்ன நபர்கள் தங்கள் சொந்த கமெராவில், குடும்பம் சகிதமாக தலைவருடன் படம் எடுத்து, மேலை நாடுகளில் தங்களை பெரியவராக்கி, தலைவரை தாழ்த்தி மகிழ்ந்தனர்.

இந்த நபர் தலைவருடன் ஒன்றாக அறுசுவை உணவு சாப்பிடும் வேளையில், கச்சாய் சின்னத்தம்பி ஒருவேளை கஞ்சியுடன் மட்டும், கிளிநொச்சி திருநகர் வீதியில், கூலி வேலை செவதற்காக புழுதியில் பயணித்து கொண்டிருந்தார்.

இதில் எங்கே தவறு நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

அர்ஜுன்,

இப்படி ஆயிரம் கச்சாய் சின்னதம்பிகள் வன்னியில் வாழ்ந்தார்கள், மடிந்தார்கள். இவர்களுக்காக எங்களுக்கு விடிவு வேண்டும். ஒற்றுமையாக போராடுவோம். எங்கள் மக்களுக்கு விடிவை பெற்று கொடுப்போம்.

வன்னிக்கு போய் தலைவரை சந்தித்த, கூழ் குடித்த, படம் எடுத்த எல்லாரையும் நான் குறிப்பிடவில்லை. ஆனாலும் நான் மேற்சொன்ன வகையில் இருந்த நபர்களும் அங்கு சென்றார்கள் என்பதில் மறுபதற்கு இடம் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன், நீங்கள் குறிப்பிட்டது அத்தனையும் உண்மை. தொடர்ந்தும் எழுதுங்கள். முடிந்தால் இன்னும் கொஞ்சம் விபரமாக எழுதுங்கள்.

பகலவன், இப்படி எத்தனையோ ஆயிரம் கதைகள் உண்டு. எனக்குத் தெரிந்தும் இப்படிப் பல நடந்தன.

Share this post


Link to post
Share on other sites
nunavilan    1,952

இங்குதான் எமது போராட்டம் பிழையான சக்திகளின் கையில் விழ ஆரம்பிக்கின்றது. 83 கலவரத்தின் பின் இயக்கத்தில் இணைந்த பத்தாயிரம் போராளிகளின் கனவு நாப்பது வியாபாரிகளின் கைகளில் போய் முடிகின்றது. இன்று கூட அந்த பத்தாயிரத்தில் பலரை சந்திக்கின்றேன்.

நாற்பது பேர் என்று சொல்பவர்கள் ஏதோ வகையில் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கப்போகிறார்கள்.இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தல் என்பது மிக முக்கியமானது.அவர்களின் பெயர்களை, செயற்பாடுகளை பொதுவான தளங்களில் பிரசுரித்தல் சட்டசிக்கலை தரக்கூடும் என்பதால் மின்னஞ்சல் மூலமோ, தொலைபேசி மூலமோ நண்பர்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் இவர்களின் செயற்பாடுகளை முடக்கலாம்.

நன்றி, அர்ஜுன்.

Share this post


Link to post
Share on other sites
Innumoruvan    514

ஆர்யுன்,

உங்கள் ஆதங்கம் முற்றாகப் புரிகின்றது. கிரடிட்காட் களவு மற்றும் இதர தில்லு முல்லு ரீதியில் பணக்காரணர் ஆகியவர்கள், அருவருக்கும் குணவியல்புடையவர்களால் நாம் பிரதிநிதித்துவப்படுத்தப்படக்கூடாது என்ற நினைப்புப் பொதுவானது தான். மந்தை வளர்ப்பு ரீதியில் மக்கள் பார்க்கப்படுவது கோபப்படுத்துவது தான். இருப்பினும் உங்கள் பதிவு சார்ந்து சிலவற்றைப் பகிரத்தோன்றுகிறது.

முதலில் ஒரு கேள்வி. நீங்கள் ஒரு வீட்டிற்கு விருந்துக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் வெகு சிறப்பாக உடையணிந்து செல்கிறீர்கள் அவர்களும் சிறப்பாக உடையணிந்து உங்களை வரவேற்பறையில் வெகு டாம்பீகமாகக் கவனிக்கிறார்கள். பின்னர் சிறப்பு மேசையில் உணவு பரிமாறி, உணவின் பின் கோனியாக்கும் கொடுத்து கதவைத் தாங்களே திறந்து வழுக்கும் பாத்துப் போங்கோ என்று கூறி அனுப்பி வைத்து விடுகிறார்கள். அதே வீட்டிற்கு அடுத்த வாரம் உங்கள் நண்பன் போகிறார். சுhதாரண உடையில் போகிறார். அவர்களும் வீட்டுடையில் நிற்கிறார்கள். வரவேற்பறையோடு எவரும் நிற்கவில்லை. நேரே சமையலறை சென்று ஒரு கதிரையினை இழுத்துப் போட்டு அமர்ந்து கொள்கிறார். அவர்கள் உண்டுகொண்டிருந்த நொட்டைத் தீன்களை தானே எடுத்து சிலதை உண்டு, அவர்கள் தாங்கள் பாவிக்கும் குவளைகளில் ஒன்றில் கொடுத்த தேனீரை அருந்திவிட்டு வெளியேறுகிறார். உங்கள் பார்வையில் நீங்களா உங்கள் நண்பரா குறித்த வீட்டுக்காருடன் நெருக்கமானவர்?

தலைவர் மேசையில் இருந்து கறி காணுமா என்று கேட்டதால் தலைவரின் மனதில் குறிப்pபட்டவர்கள் ஓங்கிநின்றார்கள் என்று தான் இருக்கவேண்டும் என்பதில்லை. கொலையையே விரும்பாமல் நிர்ப்பந்தமாகச் செய்யவேண்டிய போராட்டத்தில் ஆடிக்கறக்கவேண்டிய மாடுகள் முன் ஆடுவது வியப்பாகத் தெரியவில்லை.

இன்னுமொரு கோணத்தில் பார்த்தால், ஒரு சமூகம் என்றால் அதில் ஒவ்வொருவரிற்கு ஒவ்வொரு பலம் இருக்கும். அந்தச் சமூகத்திற்கான முயற்சி அந்தச்சமூகத்தால் முடிந்தவரை உச்சக்கட்டமாக முன்னெடுக்கப்படவேண்டுமாயின் அவரவரின் உச்சப்பலங்கள் சேர்;த்துக்கொள்ளப்படவேண்டும். பணமுள்ளவனிடம் பணம், வீரம் உள்ளவனிடம் வீரம் அப்படி அனைத்தும்.

புலிகள் சார்ந்து விமர்சனங்கள் இல்லாமல் இல்லை என்ற போதும், தமிழரின் போராட்டச் சக்தியாக அவர்கள் தமிழரை அக்குவேறு ஆணி வேறாகப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பதில் எனக்குப் பூரண நம்பிக்கை உள்ளது. றால் போட்டுச் சுறா பிடிப்பது பல சந்தர்ப்பங்களில் நடந்துள்ளது.

இனிப் பொதுவாகப் பார்த்தால், புலம்பெயர்ந்த தமிழனை மட்டும் பணமும் ஆதிக்கமும் கட்டுப்படுத்தவில்லை. உலகின் அத்தனை மக்களும் மிகச் சொற்பமானவர்களால் தான் (1 வீதம் என்று பேச்சு வழக்கில் பலரும் கூறிக்கொள்கிறார்கள்) கட்டுப்படுத்தப்படுகிறார்கள். நாய் வித்தகாசு குரைக்கும் என்ற நம்பிக்கையில் பணநோட்டில் காதைக்கொடுத்துக் காத்திருப்பவர்கள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சத்தத்தைக் கேட்கப்போவதில்லை. ஒரு ஆதிக்கத்திலும் பெரிய இன்னுமொரு ஆதிக்கம் தனது நலன்கள் சார்ந்து ஒரு பணக்காரனை உள்ளுக்குள் தூக்கிப்போடும் வரை அவனிடம் இருக்கும் வளங்களைப் போராட்டப் பக்கம் இழுப்பதற்கு அவர்கள் செய்தது சரி என்றே எனக்குப் படுகிறது. அதே மாதிரி பணக்காரன் மாறும் போதும் விருந்துகள் மாறியவருடன் தொடர்ந்தே ஆகவேண்டும். உலகில் வெற்றி பெற்ற அத்தனை ஆதிக்க சக்திகளும் வளங்களை எங்கெல்லாம் எப்பிடியெல்லாம் சுரண்டலாமோ அத்தனை வழிகளிலும் சுரண்டிக்கொண்டு மற்றவர்களிற்காக மட்டும் புனிதங்களைக் கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள்;.

புனிதங்கள் சார்ந்தே ஈழத்தமிழனின் வெளியீடுகள் 80ம் ஆண்டு தொட்டு இருந்து வருவதால் ஈழக்கட்டமைப்பு என்பது பரவலாக புனிதமானதான வேள்வியாக மட்டும் பார்க்கப்படுகிறது. நியாயத்திற்கும் தர்மத்திற்குமான போராட்டம் நியாய தர்மப்படி நடக்வேண்டும் என்று ஒரு எதிர்பார்;ப்பிருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை புனிதங்கள் அவதானமாகக் கட்டமைக்கப்படவேண்டியன. கோயிலிற்கு நேர்ந்த ஆடு என்று ஆட்டைப் புனிதமாக்கி விட்டால் ஆட்டை உண்ண முடியாது. தென்னையும் மாவும் நிறைந்து நிற்கும் காணியைக் கோவிற்காணி ஆக்கி விட்டால் ஏழை தேங்காயை மாங்காயை உண்டு பசியாற முடியாது. புனிதங்களைப் போற்றலாம் ஆராதிக்கலாம் ஆனால் புனிதங்களோடு வாழ முடியாது. எனது பார்வையில் ஈழம் என்பது மக்கள் வாழ்வதற்காகக் கட்டப்படவேண்டுமே அன்றி நம் புனித பூமியாக அல்ல. நிலமே புனிதமென்றால் அதை மண்வெட்டியால் கொத்துவது கூட எவரிற்கேனும் வலிக்கலாம்.

'End justifies the means' (இலக்கு பாதையினை நியாயப்படுத்தும்)என்பது மக்கவெலியுடன் தொடர்பு படுத்தப்படுவதால் தூசணமாக உலகில் பார்கப்பஷடுகிறது. ஆனால் உண்மையில் மக்கவெலி இதை முதலில் கூறவில்லை, ஓவிட் என்று அறியப்பட்ட பப்லியஸ் ஓவிடஸ் நாசோ (43 கி.மி 17 கி.பி); கவிஞனால் 2000 வருடங்கள் முன்னரே பாடப்பட்டுவிட்ட நடைமுறை. ஒருவகையில் பார்த்தால் கூர்ப்பியலின் மருவிய வடிவம் தான். ஒவ்வொருவரிற்குள் இலக்கின் அவசியம் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து இலக்கிற்கான விலை தொடர்பான அவர்களின் மனநிலை இருக்கும். எழுந்தமானத்தில் இலக்குகளை வரித்துக்கொண்டால் இலக்கிற்கான விலை தொடர்பில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகவே செய்யும். எங்கள் போராட்டத்தைப் பொறுத்தவரை வட்டுக்கோட்டைக்குப் பின் இலக்கு எது என்பது ஏறத்தாள முடிந்தமுடிபாய்ப் போய் யாரும் அதுபற்றிக் கதைக்கத் தயாராக இல்லை. புலிகளைத் தடவிக்கொடுத்து சண்டைக்கு அனுபிப்பிய ஈழத்தமிழ் சமூகம் தாங்கள் நேரடியாகப் பாதிக்கப்படாதவரை (உதாரணம்: எங்கட வீட்டிற்குப் பக்க்தில் கண்ணிவெடி வைக்காதேங்கோ) இலக்கு அடையப்படுவது பாதையினை நியாயப்படுத்தும் என்ற அணுகுமுறை சரி என்றே அடம்பிடித்தது பிடித்துக்கொண்டிருந்தது. அடம்பிடிக்கும். ஏனெனினல் எண்பதில் இருந்து வந்த வெளியீடுகள் எல்லாம் ஆகுதீ பற்றியும் யாக குண்டலங்கள் பற்றியும் தான் தூக்கிப்பேசிக்கொண்டிருக்கின்றன.

இனி மீண்டும் தலைவரின் சந்திப்புக்கள் பற்றிப் பேசின். தமிழரின் தலைவர் அனைத்துத் தமிழனும் சந்திக்கும் வகை இருந்திருக்கவேண்டும் என்று ஒரு utopian சமூகக்கனவாக நடைமுறைக்குச் சாத்தியமில்லாததை நீங்கள் முன்வைத்திருப்பின் கூடப் பறவாயில்லை ஆனால் புலத்தில் பதினைந்து வருடம் நாட்டிற்காக வேலை செய்தவர் என்றாப்போல தலைவரை சந்திக்கோணும் என்ற எதிர்பார்ப்பு சற்று ஏமாற்றம் அளிக்கிறது. புலத்தில் பதினைந்து வருடம் நாட்டுக்காய் வேலை செய்தது தலைவரைச் சந்திப்பதற்கான தகுதி என்று ஆகிப்போகும் என்றால் பணக்காரன் பணங்கொடுத்தவன் சந்திக்கக் கூடாது என்று எப்பிடிச் சொல்லுவது. யாருடைய புனிதங்களின் அச்சில் நாம் பயணிப்பது?

இனிப் பெண்களைப் பலவந்தப்படுத்தும், கிரடிட் காட் களவு செய்யும், தூள் கடத்தும், கோயில் வியாபாரம் செய்யும் பேர்வழிகள் சமூகப் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் என்றால், இது தொடர்பில் நியாயமான செயற்பாடாக எனக்குத் தெரிவன இவை தான்:

1) ஈழச் செயற்பாடு முதலியனவற்றிற்க்கப்பால் இப்படியானவர்கள் எனது சமூகத்தில் வாழ்வது என்னைத் தொந்தரவு செய்கிறதா?, ஆம் எனின் ஏன்? இந்தவகையில் முதலில் என்னை ஏன் இவ்வாறானவர்களின் இருப்பும் பிரபலியமும் தொல்லைப்படுத்துகிறது என்பதை முதலில் நான் என்னைச் சாhர்ந்து சந்தேகத்திற்கிடமின்றிப் புரிந்துகொள்ளவேண்டும்.

2) மேற்படி விசாரணையின் பதிலாக, எனக்கு அநியாயத்தைக் கண்டால் கொதித்தெழும் குணம், நான் புனிதங்களை மதிப்பவன், பலம்பொருந்தியவர்கள் பலமற்றவர்களையோ அல்லது அறிவாளி அறிவிலியையோ ஏய்ப்பதை நான் வெறுப்பவன் போன்ற பதில்கள் கிடைப்பின் இது பற்றி மேலும் சற்று உள்ளுக்குள் விசாரித்து ஒரு யூரோப்பியன் சமூகம் சாத்தியமா என்று காரணகாரியங்களோடு ஆராயலாம்.

3) ஆல்லது, இரண்டாவது புள்ளியை விட்டுவிட்டு, மேற்படி நபர்களை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்வதோடு அத்தகைய செயல்களால் நான் என்ன தீங்குகளைச் சந்திக்க நேரும் என்றும் ஆராய்வது. அப்படி ஆராய்ந்து அவர்களை நீங்கள் கனவு காணும் சமூகத்தின் நலனிற்காக நீங்கள் அப்புறப்படுத்துவீர்களேயாயின் அதன் பின்னர் அவர்கள் ஈழத்திற்காக வேலைசெய்கிறார்கள், கோவிலில் நிககிறார்கள், மேடையில் குத்துவிளக்கு ஏற்றுகிறார்கள் என்று சில்லறை வியாபாரம் போன்ற கவலைகள் தேவைப்படாது. ஓட்டுமொத்தமாக உங்களின் கவலைக்கான மூலகாரணம் நீங்கி விடும்.

4) இல்லை அவர்களை அகற்ற முடியாது என்றால், அவர்கள் ஒரு கவனிக்கப்படவேண்டிய சக்தியாகத் தொடர்வார்கள் என்றால் அவர்களின் பலத்தில் கொஞ்சம் அவர்களின் சமூகத்திற்கும் சுவறுவது எதனால் தவறு என்று சிந்திப்பது தவிர்க்க முடியாததாகிப் போகும்.

Share this post


Link to post
Share on other sites
arjun    1,731

அடுத்தது எழுத முதல்,

85 களில் நான்தமிழ் நாட்டில் இருக்கும் போது எமக்கு ஒரு அலுவலகம் தமிழ் நாட்டு அரசால் ஒதுக்கப்பட்டு இலவச தொலைபேசி வசதியுடன் M.L.A HOSTEL இல் இருந்தது ,அங்கே நான் அடிக்கடி சென்று வருவதால் பல கட்சிகளிலும் இருக்கும் M.L.A களுடன் பழகும் வாய்ப்புக்கிட்டியது ,ஒரு சிலரைததவிர பெரும்பான்மையோரை சந்திக்கும் போது இவர்களெல்லாம் கூட மக்கள் பிரநிதிகளாகி வந்திருக்கின்றார்களே என்று எண்ணதோன்றும்.

குடி ,கூத்தி,எடிபிடி ,அடாவடி என்ற அத்தனையும்அவர்களிடம் இருக்கும் .(விக்கிரமின் தூள் நல்ல உதாரணம் ).

தொண்டனாக இருந்து இந்த பதவிக்கு வர அவர் பெரும்பாடு பட்டிருப்பார் ,அளப்பரிய தியாகங்கள் வேறு கட்சிக்கு செய்திருப்பார் ஆனால் அவர் ஒரு ரவுடிதான் ,இவர்களை மக்கள் பிரதிநிதியாக்கி தமிழ் நாட்டை கொண்டு

நடாத்துவதால் தமிழ்நாடு இந்த நிலையில் இருக்கிறது .இது முழு இந்தியாவிற்கும் பொருந்தும் .ஆமிக்காரனை பார்த்து சென்றலா? ஸ்டேட்டா? என்று கேட்டவர்களும் இருக்கின்றார்கள்.

தமிழ் நாட்டில் படித்த ,மிக அறிவுள்ள ,சமூக அக்கறை கொண்ட எத்தனையோ ஆயிரம் பேர்கள் இருக்கின்றார்கள் ஆனால் அங்கு இருக்கும் அரசியல் நடைமுறையால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருக்கின்றார்கள்.

கடவுளே என்று எமது அரசியலில் இப்படியான கேவலங்கள் இல்லை என்று அன்று நினைத்தேன் இப்போ அதைவிட கேவலம் போல் இருக்கு எமது நிலைமை .

நுணாவிலான் சொன்னது போல் பெயர்களை என்னால் எழுதமுடியாது ,ஒன்று சட்ட பிரச்சனை ,மற்றது பல உறவினர்கள் நண்பர்கள் கூட அதில் அடக்கம் .

அண்மையில் யாழில் கூட கனடாவில் இருந்து ஒருவர் நாடு கடத்தப்படும் செய்திவந்தது ,அவர் யார்? ஏன் நாடு கடத்தப்பட்டார் என்பது யாருக்கும் தெரியுமா ? எழுதினால் யாழ் தாங்காது .

Share this post


Link to post
Share on other sites

நன்றி இன்னுமொருவன்

தங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும்

இதுவே என் கருத்தும் நிலையும்

யாழில் வந்ததிலிருந்து ARJUN இன் எழுத்தை வாசித்தவர்களுக்கு புரியும் அவர் தலைவரும் புலிகளும் சாதாரணமனிதர்கள்தான். அவர்களும் தப்புவிட்டார்கள் என எழுதிவந்தது.

ஆனால் இன்றைய எழுத்துக்களைப்பார்த்தால் எம்மைவிட புலிகள் புனிதர்களாக கடவுள்களாக இருக்கவேண்டும் இருந்திருக்கவேண்டும என்கிறார். இந்த மாற்றம் தான் உதைக்கிறது.

சும்மா வெளியில் நின்று பார்ப்பவர்களின் பேச்சென்பதை புரிந்த கொண்டதனால்தான் நான் சிவப்புடன் நிறுத்திக்கொண்டேன்.

Share this post


Link to post
Share on other sites
arjun    1,731

எமக்கான அரசியலில் நாம் எங்கு நிற்கின்றோம் என்று எப்போ நினைத்துப்பார்த்தாலும் ஒருக்கா தலையை சுற்றும்.நாட்டில் இருந்தும் புலம் பெயர்ந்தும் எமக்கான பிரதிநிதிகள் விடும் அறிக்கைகளை பாருங்கள்,ஆளுக்கு ஆள் தான்தோன்றித்தனமாக, எவ்வளவு முரண்பாடுகளுடன் கூடிய அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள், இவர்கள் விடும் அறிக்கைகளை பார்த்தால் இவர்கள் தங்களுக்குள்ளேயே கதைப்பதில்லை போலிருக்கும் அல்லது நான் என்ன சொன்னாலும் யார் என்னை கேட்பது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.கடந்த ஆறுமாதங்களாக சம்பந்தன்,சுரேஷ்,சுமந்திரன்,சிறீதரன் விடும் அறிக்கைகளில் எந்த வித பொதுமையும் இல்லை. இவர்களே இப்படியென்றால் மற்றவர்களை பற்றி எழுதித்தான் தெரியவேண்டுமா?

இதைதான் சுத்துமாத்து அரசியல் என்று சொல்வதோ தெரியாது, ஏன் எங்கட அரசியல் இப்படி நடக்கின்றது என கேள்வி கேட்டால் எவருக்குமே, ஒரு தமிழர்களுக்குமே உண்மையான அக்கறை இல்லை என்பதுதான் பதில், இதில் தலைவர்களுக்கு மட்டும் அது எப்படி வரப்போகின்றது.

“முதல் எங்கட அலுவல் அதன் பிறகுதான் தான் எதுவேண்டாலும்”

இதுதான் தமிழனின் தாரகமந்திரம், எங்கட அலுவல் என்பது எப்போதுமே முடியப்போகும் ஒன்றல்ல. (அது அப்படியே பரம்பரை பரம்பரையாக போய்க்கொண்டே இருக்கும்)

பிறகு எங்களுக்கு எப்படி நாடு,விடுதலை,சுதந்திரம் இவையெல்லாம் கிடைக்கும், அதற்கான அரசியல் செய்ய முற்படும் ஒரு சிலரையும் குழப்பி அதற்குள் தங்கட அலுவலை எப்படி பார்க்கலாம் என்பது தான் பெரும்பான்மையானோர் சிந்தனையாக இருக்கும் போது எமக்கு விடுதலையாவது கிடைப்பதாவது.

சுதந்திரத்திற்கு முதல் வெள்ளைகளை பந்தம் பிடித்து முடிந்தவரை முழு சொந்த பந்தங்களை எல்லாம் அரச உத்தியோகத்தில் போட்டு மற்றவர்கள் முதுகில் சாவரி விட்ட இனம், இவர்கள் சவாரி ஏறியது சிங்களவர்,முஸ்லிம்கள் ,ஒடுக்கபட்ட தமிழர்கள் அனைத்தும் அடங்கும்,

சுதந்திரம் கிடைத்த போது பிரிவினை பற்றி ஏன் கதைக்கவில்லை,காரணம் பல சாவரிகள் இல்லாமல் போய்விடும் என்பதற்காக மட்டுமே. வெள்ளைகள் போக, பெரும்பான்மை சிங்களவன் கொஞ்சம் சிந்திக்க தொடங்கினான். எங்கும் தமிழன் எதிலும் தமிழன் இதற்கு என்ன செய்யலாம் என்று. (எனது விலங்கியல் ஆசிரியர் பிரான்சிஸ் சொல்லுவார் தான் பெரதேனிய பல்கலைகழகத்திற்கு போகும் சந்தர்ப்பங்களில் தனக்கு இந்துக்கல்லூரிக்குள் நிற்பது போன்ற உணர்வே இருக்கும் என்று,அவ்வளவு தமிழ் அதிலும் இந்து மாணவர்கள் நிரம்பியிருப்பார்கள்.)

அரசியல், அதுவும் இன துவேச அரசியலை ஆரம்பித்தான் சிங்களவன் (பண்டாரநாயக்காவும் சுதந்திர கட்சியும் என்றே சொல்லலாம்) அதுவே இன்றுவரை சிங்கள கட்சிகளின் அரசியலாகி, போட்டி போட்டுக்கொண்டு இரு கட்சிகளும் இனவாதத்தை கக்குவதும், நடைமுறையிலும் குடியேற்றம்,தரப்படுத்தல், இனஅழிப்பு, மொழிதடை என்று சகல வழியிலும் இலங்கை சிங்களவனுக்கே சொந்தம் என்பதை நிலைநாட்ட தொடங்கிவிட்டது .

அப்போ நாம் என்ன செய்துக்கொண்டிருந்தோம்?

எரிகிற வீட்டில புடுங்குகின்றது லாபம் என்பதுதான் தமிழன் நிலைப்பாடு. எனது ஊரில் பெரும்பாலும் விவசாயிகளும் வியாபாரிகளும்.இவர்கள் நான் பெயர் கேள்விப்படாத சிங்கள இடங்களில் எல்லாம் வியாபாரம் வைத்திருந்தார்கள்.கெக்கிராவை,அக்குரசை, அதைவிட கண்டி,கொழும்பு,குருநாகல்,பதுளை எல்லாம் இவர்கள் தான் முக்கால் வாசி கடைகளும்,ஊரில் இவர்களுக்கு பெரிய வீடுகளும் பல லொறிகளும் இருக்கு.அதைவிட பலர் சிங்கள சின்ன வீடு வேறு.வியாபாரம் கூட மோட்டு சிங்களவனை சுத்தி செய்வது பற்றி சொல்லி சிரிப்பார்கள்.இவர்கள் ஒருவருக்கும் எமது அரசியல் பற்றி அக்கறை இல்லை,சிங்களவன் என்ன செய்தாலும் அவனை நாங்கள் சுற்றி விடுவோம் என்ற நம்பிக்கை மட்டும் இவர்களை விடவில்லை,கலவரம் வந்து அடுத்த மாதமே எரிந்த கடையை திறப்பதுதான் எண்ணமே தவிர இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்று நினைக்கவில்லை,தீர்வு வந்தால் வியாபாரம் எங்கு செய்வது.

2002 நான் இலங்கை சென்றபோது இரத்தினபுரி,பதுளை,நுவரேலிய சந்திகளில் தமிழ் கடைகள் பல இருந்தன எங்கும் தமிழ் பாட்டு வேறு.இதுதான் தமிழன்.

எமது சாத்திவீக அரசியல் போகட்டும்,ஆயுத அரசியல் எப்படி?

(தொடரும்)

Share this post


Link to post
Share on other sites
ரதி    1,951

தொடருங்கள் அண்ணா :)

Share this post


Link to post
Share on other sites

2002 நான் இலங்கை சென்றபோது இரத்தினபுரி,பதுளை,நுவரேலிய சந்திகளில் தமிழ் கடைகள் பல இருந்தன எங்கும் தமிழ் பாட்டு வேறு.இதுதான் தமிழன்.

எமது சாத்திவீக அரசியல் போகட்டும்,ஆயுத அரசியல் எப்படி?

(தொடரும்)

நான் 2003 இல் இந்த இடங்களுக்கெல்லாம் போயிருந்தேன்.

நாங்கள் போன வாகனம் உட்பட தமிழ்ப்பாடல் போடவில்லை. போட்டாலும் மிகவும் ஒலி குறைத்தே போட்டார்கள். சில கடைகளில் வானொலியிலும் சிடியிலும் தமிழ்ப்பாடல்கள் ஒலித்தன. அவை இசுலாமிய நண்பர்களுடையவை.

தமிழர்களை தாழ்த்தி எழுதுவதற்காக இங்கு இவை எழுதப்பட்டுள்ளதாகவே படுகிறது. :( :(

Share this post


Link to post
Share on other sites