Jump to content

திண்ணை தொடர்பான விதிகள்


Recommended Posts

திண்ணை தொடர்பான விதிகள்:

யாழ் உறவுகள் தமக்குள் உரையாடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள திண்ணை பகுதியில் இன்றில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் கள விதிகள்

யாழ் களத்தின் பொதுவான விதிகள் அனைத்தும் திண்ணைக்கும் பொருந்தும் (உதாரணமாக தனிநபர் தாக்குதல், வா போ போன்ற ஒருமையில் சக உறுப்பினரை அழைப்பது, அநாகரீகமாக உரையாடுவது..), இவற்றுடன் மேலதிகமாக கீழே உள்ள விதிகள் திண்ணை பயன்பாட்டுக்கான பிரத்தியேகமான விதிகள்

1. திண்ணையில் கதைப்பவை வெளியில் கொண்டு செல்லவோ, பரப்புவதோ, பிரதி பண்ணுவதோ தவறு

2. திண்ணையில் உரையாடப்பட்டவற்றை களத்தில் உள்ள திரிகளில் ஒட்டுதலும், தனியாகத் திரி திறந்து இடுவதும் கூடாது

3. திண்ணையில் தமது அடையாளங்களை (பெயர் / முகவரி / பால் / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் உரையாடும் உறவின் அடையாளங்களை கோருவதும் (பெயர் / பால் / முகவரி / தொலைபேசி இலக்கம் போன்றவற்றை) கண்டிப்பாக தவிர்க்க வேண்டியவை

4. ஒரு திரியில் எழுதிய விடயத்தை அப்படியே கொண்டு வந்து திண்ணையில் இடுவதை தவிர்க்கவும். இதற்கு பதிலாக எழுதிய விடயம் உள்ள திரியின் இணைப்பை குறிப்பிடலாம்

5. கருத்துக்களத்தில் இருந்து நீக்கப்பட்ட எந்தக் கருத்தும் / பதிவும் கண்டிப்பாக திண்ணையில் இடுதல் கூடாது

6. நிர்வாகத்தால் எடுக்கப்படும் முடிவுகள் நிர்வாகத்தில் உள்ளவர்களுடன் தவிர ஏனையோருடன் திண்ணையில் வைத்து கதைப்பதும் கலந்தாலோசிப்பதும் தவறு. நாற்சந்திப் பகுதியில் மட்டுமே இதற்கான திரி திறந்து கதைக்கலாம்

திண்ணை தொடர்பான களவிதிகளை மீறுபவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்

1. ஒரு முறை மீறியது கவனிக்கப்பட்டால் அல்லது எமது கவனத்துக்குள் கொண்டு வந்தால்: கள உறவுக்கு நிர்வாகம் தனி மடல் மூலம் திண்ணை தொடர்பான விதிகளை மீண்டும் அறியத்தரும் / நினைவுபடுத்தும்

2. இரண்டாம் முறை: 1 மாதம் திண்ணையில் தடை

3. மூன்றாம் முறை: திண்ணையில் நிரந்தரத் தடை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.