Archived

This topic is now archived and is closed to further replies.

அபராஜிதன்

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்

Recommended Posts

ஏப்ரல் 2ஆம் நாள் திங்கட்கிழமை ஒட்டாவா கனடிய பாராளுமன்ற முன்றலில் நன்றி தெரிவிக்குமுகமாக திரண்ட கனடிய தமிழர்களை நாடி ஆளும் கன்சவேட்டிவ் மற்றும் புதிய சனநாயகக்கட்சி, லிபரல் ஆகிய எதிர்கட்சிகளைச் சேர்ந்த 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் வரலாறாகத் திரண்டனர்.

சிறீலங்கா குறித்த விடயத்தில் கடந்த ஒரு வருடமாக கனடிய தேசமே அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக கடும்போக்கை கடைப்பிடித்து வரும் நிலையில் அதற்கு தமது நன்றியறிதலை தெரிவிக்கும் முகமாக ரொரன்ரோ, மொன்றியல், ஒட்டாவா இருந்து திரண்ட நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்கள் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை கனடிய பாராளுமன்ற முன்றலில் நடாத்தினர்.

தமிழர்களின் நன்றியறிதலை ஏற்று அவர்கள் முன் வரிசையாக நீண்ட நேரமாக உரையாற்றிய அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். அத்துடன் சிறீலங்காவில் சுயாதீன சர்வதேச விசாரணை அமைய வேண்டும் என்பதை பலரும் வலியுறுத்தினர்.

கடந்த ஆண்டில் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா வருடாந்த கூட்டத்தொடாரில் நாடுகளின் அறிக்கையில் சிறீலங்கா விடயத்தை விவாதித்த ஒரே நாடு கனடா என்பது மட்டுமன்றி, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டிலும் சிறீலங்கா விடயத்தை முதன்மைப்படுத்திய மட்டுமன்றி ராஐபக்ச பேச எழுந்தபோது கனடா பிரதமர் வெளிநடப்பும் செய்தார். சிறீலங்காவில் 2013 நடைபெறவுள்ள மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமன்றி புறக்கணிப்போம் என்ற எச்சரிக்கையும் கனடிய பிரதமர் விடுத்தார்.

அத்துடன் ஜ.நா மனித உரிமை அவையில் சமர்பிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து கனடாவும் முன்மொழிந்தும், வாக்களிக்கும் நாடாக இல்லாவிட்டாலும் அதன் வெற்றிக்காக பல நாடுகளை அணுகி காத்திரமாக உழைத்தும், பிரேரணை நிறைவேற்றப்பட்டதும், தமது மகிழ்ச்சியை வெளியிட்டு ஆதரித்த நாடுகளுக்கு உத்தியோகபூர்வமாக நன்றியறிதலை முதலாவதாக வெளியிட்ட நாடும் கனடாவே.

சமீபத்தில் உண்மைந்pலையை கண்டறிய கனடாவின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகளாகச் சிறீலங்கா சென்று திரும்பிய கிரிஸ் அலெக்ஸ்டாண்டர், ரிக் டைஸ்ரா, லிபரல் கட்சித்தலைவர் பொப் ரே, மறைந்த புதிய சனநாயகக்கட்சித் தலைவர் ஐக் லேட்டன் அவர்களின் துணைவியார் ஒலிவியா சோ, எனப் பல முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழர்களுடன் இணைந்து கொண்டனர்.

உலகில் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் மேற்கு கரையான வன்கூவரில் இருந்து கியுபெக் வரையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் கணிசமானவர்களின்; தொகுதிகளில் தமிழர்கள் யாரும் கிடையாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழர் நலனை மட்டும் முன்னிறுத்தி செயற்படும் உறவுகளின் பெருமுயற்சியே இத்தகைய பாரிய கனடிய மாற்றத்திற்கான காரணம் என்றனர் கனடியத் தமிழர்கள். இந்நிகழ்வு பாரிய எழுச்சியையும் பெரும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளதாக பலரும் பேசிக் கொண்டதாக தெரிவிக்கின்றார் எமது செய்தியாளர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=58141&category=TamilNews&language=tamil#.T3siVVnfUA8.facebook

Share this post

Link to post
Share on other sites

நானும் இந்த நிகழ்விற்கு சென்றிருந்தேன்.....அளவில் சிறிய தொகை ஆயினும் .அற்பணிப்புடனான மக்களின் பங்களிப்பு.....மூன்று வருடங் களுக்கு முன்

நாம் தெருத் தெருவாக அழுததிற்கு கிடைத்த சிறு ஆறுதல்.இது....நன்றி கனடாவுக்கு....

Share this post

Link to post
Share on other sites

கலந்துகொண்டு இந்த அரசியல் நோக்கத்திற்கு ஆதரவு கொடுத்த உறவுகளுக்கு நன்றிகள்.

Share this post

Link to post
Share on other sites

குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.

இத்தனை மக்கள் இறக்கும் போது கொடி பிடித்துத் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என எமக்கு வலியுறுத்தப்பட்டது. அதை நியாயம் செய்தும் யாழ்களத்தில் நிறையத் தடவைகள் நான் எழுதியுமிருக்கின்றேன். நேற்று எங்கே எம் தேசியக் கொடி போய்விட்டது.

ஆர்ப்பாட்டம் செய்த தருவாயில் நிறையப் பேர் மக்கள் மரணங்களை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். தேசியக் கொடி பிடிக்க வேண்டாம் என்பதை இவர்கள் ஏற்கவில்லை. இறுதி வரை வேண்டும் என்றார்கள். ஏன் நேற்றுப் பிடிக்கவில்லை?

ஜெனிவாவில் நட்நத மனித உரிமைகள் விடயத்துக்காக யாரையும் தேசிய அவை அனுப்பவே இல்லை. ஆனால் இங்கே நன்றி சொல்ல மட்டும் நின்று கொண்டார்கள்.( அந்த விடயத்தை வலியுறுத்தியதற்காக நன்றிகள். ஆனால் அதன் பின்ணனி, நோக்கம் பற்றி விபரிக்க விரும்பவில்லை) ஜெனிவாவிற்கு ஏன் ஆட்களை அனுப்பவில்லை என்றால், அங்கு நாடு கடந்த தமிழீழ அரசு, கனடியத் தமிழ்க்காங்கிரஸ் போன்றவை கலந்து கொண்டன என்பதால் தான். எம் மக்களுடைய பிரச்சனைகளை விட, அவர்களுக்கு தங்களுக்குள்ள போட்டி மனப்பான்மையும், புகைச்சலும் தான் முன்னுக்கு நிற்கின்றது என்பதை நினைத்து நொந்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

சில விடயங்கள் எழுதவே விரும்பவில்லை. அது எம்மை நாமே பலவீனப்படுத்தும். ஆனால் இப்படியான எங்களின் சிந்தனைகளை வைத்துத் தான் இவர்கள் தப்பிக்க ஏதுவானான வழியுமாக இருக்கின்றது!

நேற்று ஏன் இவர்கள் தேசியக் கொடி பிடிக்கவில்லை. கொடியை முன்னிலைப்படுத்தவிடின் துரோகிகள் என்ற பதங்களை மற்றவர்கள் மீது தெளித்ததை இவர்கள் மீதும் பாவிக்கலாமா??

Share this post

Link to post
Share on other sites

.

... நம்மளில் கனக்க தேசியக்கொடி பிடிப்பவர்களும், தமிழீழ கோசங்கள் இடுபவர்களும், நாடு கடந்து அரசாங்கங்கள் நடத்துபவர்களும், மாவீரர்நாளை புலத்தில் உடைத்தெறிந்தவர்களுக்கும் ... பின் உள்ள மர்மங்கள் ஒன்றுமே ... துரோகங்களில்லை!!!!!!!!

இப்போ உந்த கனேடிய நிகழ்வில் ... தேசிய கொடி பிடிக்காதது ... தேசத்துரோக குற்றம்??? துரோகம்???? .... இதை... தேசியக்கொடி பிடிப்பவர்களும், தமிழீழ கோசங்கள் இடுபவர்களும், நாடு கடந்து அரசாங்கங்கள் நடத்துபவர்களும், மாவீரர்நாளை புலத்தில் உடைத்தெறிந்தவர்களின் பாசையில் சொல்வதானால் ... துரோகம்!!!!!!!!!! :icon_mrgreen:

Share this post

Link to post
Share on other sites

கொடியைப் பிடித்திருந்தால் இவர்கள் வெளியே வந்திருக்க மாட்டார்கள்..! இவர்கள் வெளியே வந்திராவிட்டால் கனேடிய அரசியல்மட்டத்தில் எமக்கு ஆதரவில்லை என்று திரிக்கப்படும்..! கோழி குருடா இருந்தால் என்ன.. குழம்பு ருசியா இருந்தால் சரிதான்..!! :rolleyes:

Share this post

Link to post
Share on other sites

குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.

இத்தனை மக்கள் இறக்கும் போது கொடி பிடித்துத் தான் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என எமக்கு வலியுறுத்தப்பட்டது. அதை நியாயம் செய்தும் யாழ்களத்தில் நிறையத் தடவைகள் நான் எழுதியுமிருக்கின்றேன். நேற்று எங்கே எம் தேசியக் கொடி போய்விட்டது.

ஆர்ப்பாட்டம் செய்த தருவாயில் நிறையப் பேர் மக்கள் மரணங்களை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். தேசியக் கொடி பிடிக்க வேண்டாம் என்பதை இவர்கள் ஏற்கவில்லை. இறுதி வரை வேண்டும் என்றார்கள். ஏன் நேற்றுப் பிடிக்கவில்லை?

ஜெனிவாவில் நட்நத மனித உரிமைகள் விடயத்துக்காக யாரையும் தேசிய அவை அனுப்பவே இல்லை. ஆனால் இங்கே நன்றி சொல்ல மட்டும் நின்று கொண்டார்கள்.( அந்த விடயத்தை வலியுறுத்தியதற்காக நன்றிகள். ஆனால் அதன் பின்ணனி, நோக்கம் பற்றி விபரிக்க விரும்பவில்லை) ஜெனிவாவிற்கு ஏன் ஆட்களை அனுப்பவில்லை என்றால், அங்கு நாடு கடந்த தமிழீழ அரசு, கனடியத் தமிழ்க்காங்கிரஸ் போன்றவை கலந்து கொண்டன என்பதால் தான். எம் மக்களுடைய பிரச்சனைகளை விட, அவர்களுக்கு தங்களுக்குள்ள போட்டி மனப்பான்மையும், புகைச்சலும் தான் முன்னுக்கு நிற்கின்றது என்பதை நினைத்து நொந்து கொள்ள வேண்டி இருக்கின்றது.

சில விடயங்கள் எழுதவே விரும்பவில்லை. அது எம்மை நாமே பலவீனப்படுத்தும். ஆனால் இப்படியான எங்களின் சிந்தனைகளை வைத்துத் தான் இவர்கள் தப்பிக்க ஏதுவானான வழியுமாக இருக்கின்றது!

நேற்று ஏன் இவர்கள் தேசியக் கொடி பிடிக்கவில்லை. கொடியை முன்னிலைப்படுத்தவிடின் துரோகிகள் என்ற பதங்களை மற்றவர்கள் மீது தெளித்ததை இவர்கள் மீதும் பாவிக்கலாமா??

ஜெனிவாவில் நடந்த விடயத்திற்கு தேசிய அவையிலிருந்து ராஜ் சுப்ரமணியம் சென்றிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றாரா அல்லது அவையின் பிரதிநிதியாகச் சென்றாரா என்பதுபற்றி தெரியாது. அதைப்பற்றி அறிந்துகொண்டு எழுதுங்கள். கொடி விடயத்தை அவர்களிடமே கேட்டுக் காரணத்தை அறிவது தான் சிறந்தது. "கொடி பிடிக்க வேண்டாம்" அல்லது "கொடி கொண்டுவரவேண்டாம்" என்று சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லவில்லையெனின் அவர்களைக் குறைசொல்லி என்ன பயன்? சென்றிருந்த மக்களையல்லவா கேள்வி கேட்கவேண்டும்?

Share this post

Link to post
Share on other sites

எமக்கு இன்று ஜெனீவா தீர்மானம் பின்னராக உள்ள சர்வதேச ஆதரவை திரட்டி மேலும் பலம் சேர்ப்பதே நோக்கம்.

மொத்தமாக முப்பத்தியொரு உறுப்பினர்கள் எல்லாக்கட்சிகள் சார்பிலும் கலந்துகொண்டனர், அதாவது எமது கனேடிய அரசியல்போராட்டத்தில் பாராளுமன்றத்திடலில் இவ்வாறு கலந்துகொண்டது மிகக்குறைவு.

சிங்களம் தனக்கு ஆதரவாக ஐ.நா.வில் வாக்களித்த நாடுகளுக்கு பலவேறு விதமாக நன்றிகளை தெரிவிக்கின்றான். பல மேற்குலக முடிவுகளுக்கு பின்னால் கனடா இருந்திருக்கலாம். அடுத்த வருடம் கனடா ஐ.நா. மனித உரிமை குழுவில் இருக்கலாம். கனடா பிரெஞ்சு மொழியையும் உத்தியோகபூர்வமாக கொண்டநாடு, பல பிரெஞ்சு நாடுகளுடன் தொடர்புகொண்டது.

கனேடியத்தமிழர் தேசிய மக்கள் அவை 25,000 டாலர்களை திரட்டி உலகத்தமிழர் பேரவையிடம் கொடுத்ததன் மூலம் ஜெனீவா நடவடிக்கைகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

Share this post

Link to post
Share on other sites

கொடியைப் பிடித்திருந்தால் இவர்கள் வெளியே வந்திருக்க மாட்டார்கள்..! இவர்கள் வெளியே வந்திராவிட்டால் கனேடிய அரசியல்மட்டத்தில் எமக்கு ஆதரவில்லை என்று திரிக்கப்படும்..! கோழி குருடா இருந்தால் என்ன.. குழம்பு ருசியா இருந்தால் சரிதான்..!! :rolleyes:

புரியவில்லை. இதைத் தானே யுத்தம் நடக்கும்போது பலர் சொன்னார்கள். கொடியே பிடிக்காதீர்கள். வெளியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று. அன்று கவனயீர்ப்பு எதற்காகச் செய்தோம்?? வன்னியில் மக்கள் படுகொலையைத் தடுப்பதற்காகத் தானே?? அப்போது ஞான உதயம் வரவில்லையா? இன்று அகூதா கற்பிக்கின்ற நியாயம் உற்பட, பல விடயங்களைப் பிறர் சொன்னார்கள். அவர்களை இவர்கள் வர்ணித்த விதம் எப்படியா??உலகத் தமிழர் தடை செய்யப்பட்டபோது, குறித்த பிரிதொரு அமைப்பின் அலுவலகத்தில் தான் இவர்கள் கூட்டங்கள் வைத்தார்கள். அன்று, அந்த அமைப்பு, கொடி பிடிக்க வேண்டாம். மக்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னதற்காக, அந்த அமைப்பின் அலுவலகத்தில் இவர்கள் அலுவலக நேரத்தில் பிற்பாடு கால் வைத்ததில்லை.( அலுவலக நேரம் என்று சொன்னது புரியவில்லை எனில் தனிமடல் போடுங்கள்.)உண்மையில் நேற்றுத் தான் கொடி பிடித்திருக்க வேண்டும். யார், இதற்கு நன்றி சொல்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக.... யார் குத்தினாலும் அரிசியானச் சரி எனலாம். ஆனால் இவர்கள் குத்துவது கொஞ்ச். வீணாக்குவது பல மடங்கு!!

Share this post

Link to post
Share on other sites

ஜெனிவாவில் நடந்த விடயத்திற்கு தேசிய அவையிலிருந்து ராஜ் சுப்ரமணியம் சென்றிருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சென்றாரா அல்லது அவையின் பிரதிநிதியாகச் சென்றாரா என்பதுபற்றி தெரியாது. அதைப்பற்றி அறிந்துகொண்டு எழுதுங்கள். கொடி விடயத்தை அவர்களிடமே கேட்டுக் காரணத்தை அறிவது தான் சிறந்தது. "கொடி பிடிக்க வேண்டாம்" அல்லது "கொடி கொண்டுவரவேண்டாம்" என்று சொன்னார்களா? அப்படி அவர்கள் சொல்லவில்லையெனின் அவர்களைக் குறைசொல்லி என்ன பயன்? சென்றிருந்த மக்களையல்லவா கேள்வி கேட்கவேண்டும்?

பார்வையாளர் வரிசையில் நின்ற ஒருவர் பங்களித்தார் என்று சொல்கின்ற விளம்பரம் எதற்காக?? ஒரு கேள்வி கூடக் கேட்டாரா?  அந்த வகையில் நாடு கடந்த அரசும், விளம்பரத்துக்காகத் தான் போனது. ஆனால் இவர்களை விடக் கொஞ்சம் பரவாயில்லை. தனிப்பட்டரீதியில் சந்திக்க முயற்சித்தது.

நான் அறிந்தவரை, ஹரி ஆனந்தசங்கரியும், என்னுமொருவரும் தான் பேச கனடாவில் இருந்து சென்று வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்கள்..ஜெனிவாவின் முன்னுக்கு நின்று படம் எடுத்துப் போடுதல், போன்ற விளம்பரங்களால் மக்களுக்கு எந்தப் பலனுமில்லை.

------------------

ஏன் ஒழுங்கு செய்தவர்களிடம் ஒரு கொடி கூட இல்லாமல் போய் விட்டதா??

Share this post

Link to post
Share on other sites

எமக்கு இன்று ஜெனீவா தீர்மானம் பின்னராக உள்ள சர்வதேச ஆதரவை திரட்டி மேலும் பலம் சேர்ப்பதே நோக்கம்.

மொத்தமாக முப்பத்தியொரு உறுப்பினர்கள் எல்லாக்கட்சிகள் சார்பிலும் கலந்துகொண்டனர், அதாவது எமது கனேடிய அரசியல்போராட்டத்தில் பாராளுமன்றத்திடலில் இவ்வாறு கலந்துகொண்டது மிகக்குறைவு.

சிங்களம் தனக்கு ஆதரவாக ஐ.நா.வில் வாக்களித்த நாடுகளுக்கு பலவேறு விதமாக நன்றிகளை தெரிவிக்கின்றான். பல மேற்குலக முடிவுகளுக்கு பின்னால் கனடா இருந்திருக்கலாம். அடுத்த வருடம் கனடா ஐ.நா. மனித உரிமை குழுவில் இருக்கலாம். கனடா பிரெஞ்சு மொழியையும் உத்தியோகபூர்வமாக கொண்டநாடு, பல பிரெஞ்சு நாடுகளுடன் தொடர்புகொண்டது.

நானும் அதைத் தான் கேட்கின்றேன். கவனயீர்ப்புப் போராட்டத்தை நாங்கள் ஏன் நடத்தினோம்?? சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் கொல்லப்படும் மக்களைக் காப்பாற்றச் சொல்லித் தானே?? அப்போது மக்கள் படுகொலைத் தடுக்கின்றதை முன்னிலைப்படுத்தாமல், பிடிவாதமாகப் பல வேலைகளைச் செய்யப் போய் இத்தனை அழிவுகளையும் தடுக்க, கேட்க எமக்கு நாதியின்றிப் போய் விட்டது.

இத்தனை பேரை இழந்தபோதும் யாரும் அன்று எமக்குக் குரல் கொடுக்காமல் போனதற்கு இவர்களின் இப்படியான பிடிவாதப் போக்குக் காரணமாக இருக்கவில்லை என்கின்றீர்களா?? இன்று நீங்கள் கற்பிக்கின்ற நியாயங்களை மற்றவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் துரோகியானவர்கள்.

கனேடியத்தமிழர் தேசிய மக்கள் அவை 25,000 டாலர்களை திரட்டி உலகத்தமிழர் பேரவையிடம் கொடுத்ததன் மூலம் ஜெனீவா நடவடிக்கைகளுக்கு பலம் சேர்த்துள்ளது.

எனக்கு பதிலும் புரியவில்லை. வேறுபாடும் புரியவில்லை...

Share this post

Link to post
Share on other sites

பார்வையாளர் வரிசையில் நின்ற ஒருவர் பங்களித்தார் என்று சொல்கின்ற விளம்பரம் எதற்காக?? ஒரு கேள்வி கூடக் கேட்டாரா? அந்த வகையில் நாடு கடந்த அரசும், விளம்பரத்துக்காகத் தான் போனது. ஆனால் இவர்களை விடக் கொஞ்சம் பரவாயில்லை. தனிப்பட்டரீதியில் சந்திக்க முயற்சித்தது.

நான் அறிந்தவரை, ஹரி ஆனந்தசங்கரியும், என்னுமொருவரும் தான் பேச கனடாவில் இருந்து சென்று வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்கள்..ஜெனிவாவின் முன்னுக்கு நின்று படம் எடுத்துப் போடுதல், போன்ற விளம்பரங்களால் மக்களுக்கு எந்தப் பலனுமில்லை.

------------------

ஏன் ஒழுங்கு செய்தவர்களிடம் ஒரு கொடி கூட இல்லாமல் போய் விட்டதா??

விளம்பரம் என்றும் பார்க்கலாம், தவறில்லை. ஆனால், இந்த அமைப்புக்களின் சார்பாக ஐ.நா.வுக்கு சென்ற பலரும் தமது நேரம், குடும்பம், வேலை, பணம் என பலவற்றை தாயக மக்களின் நலன்களுக்காகவே அர்ப்பணித்தார்கள்.

ஜெனீவாவில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புக்களே தமது கருத்துக்களை முன்வைக்கமுடியும். அந்த வகையில் கிருபாகரன் அவர்கள் மட்டுமே கருத்தை வைத்தார் என நம்புகிறேன். ஆனந்தசங்கரி அவர்கள் பேசியது ஒரு சர்வதேச சட்டத்தரணிகள் அமைப்பின் சார்பாக.

முள்ளிவாய்க்கால் வரை நாம் இவ்வாறான செய்பாடுகளில் ஈடுபடவில்லை, மூன்று வருட காலமாகவே நாம் முயற்சித்து வருகின்றோம்.

Share this post

Link to post
Share on other sites

எனக்கு பதிலும் புரியவில்லை. வேறுபாடும் புரியவில்லை...

உலகத்தமிழர் பேரவை சர்வதேச ரீதியில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக செயல்பட்டு வரும் அமைப்பு. பல நாடுகளிலும் ஒரு உறவை வளர்த்துவரும் அமைப்பு. அந்த வகையில் அவர்களின் பல செயல்பாடுகளுக்கு உதவி செய்வது மூலம் கூடிய அனுகூலத்தை ஏற்படுத்த முடியும்.

Share this post

Link to post
Share on other sites

குறித்தவர் ஜெனிவா சென்றும் பேச முடியவில்லை என்கின்றீர்கள். பார்வையாளர் வரிசையில் இருந்து விட்டு வருவது தாயக மக்களின் நலன்களுக்கான அர்ப்பணிப்பு?? என்பது எவ்வகையில் பொருந்துகின்றது.

அதற்கான பதில் இங்கே இருக்கலாம். தயவு செய்து வாசித்துப்பாருங்கள்.

http://www.ncctcanada.ca/images/docs/NCCT%20Press%20Release%20-%20Forum%20on%20US%20Resolution%20-%20March%2027th%202012.pdf

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100091&hl=&fromsearch=1

Share this post

Link to post
Share on other sites

அதற்கு வழங்கிய நிதிப் பங்களிப்பு எப்படி ஜெனிவா நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்த்தது என அறியத் தரமுடியுமா??

உலகத்தமிழர் பேரவை சர்வதேச ரீதியில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னராக செயல்பட்டு வரும் அமைப்பு. பல நாடுகளிலும் ஒரு உறவை வளர்த்துவரும் அமைப்பு. அந்த வகையில் அவர்களின் பல செயல்பாடுகளுக்கு உதவி செய்வது மூலம் கூடிய அனுகூலத்தை ஏற்படுத்த முடியும்.

தமிழச்சி இதை விடயத்தை ஏற்கனவே கதைத்துள்ளார் போலுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் எழும் கேள்வி...

Share this post

Link to post
Share on other sites

நாடு கடந்த அரசின் சார்பில் (செலவில்) இங்கிலாந்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரையன், சட்டவல்லுநர் கேரன் பார்க்கர், பேராசிரியர்கள் போல் நியூமன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு, தமிழர்களுக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கான அனைத்துச் செலவுகளையும் நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

அந்த 25,000 டொலர்களும் மக்களின் பணம் என்பதை ஒத்துக் கொள்வீர்களா அகூதா? அந்த 25,000 டொலர்களும் ஐ.நா. மனித உரிமை அவையின் செயற்பாட்டிற்காகத் தான் செலவிடப்பட்டதா?

தூயவன், நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். ஒருவர் மட்டுமே சொல்லும்போது, அது பக்கச்சார்பானதாகப் பார்க்கப்படும். மக்களை விழிப்படையச் செய்வதே இப்போதைய முக்கிய தேவை.

Share this post

Link to post
Share on other sites

அதற்கு வழங்கிய நிதிப் பங்களிப்பு எப்படி ஜெனிவா நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்த்தது என அறியத் தரமுடியுமா??

தமிழச்சி இதை விடயத்தை ஏற்கனவே கதைத்துள்ளார் போலுள்ளது. ஆனால் இது எல்லோருக்கும் எழும் கேள்வி...

அமைப்பின் சார்பாக பல நாடுகளுக்கும் சென்று வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகளை சந்திக்கின்றமை ( தென் ஆபிரிக்க பிரயாணம்) ;

வண இமானுவேல் அடிகளார் அவர்களின் இந்திய பிரயாண முயற்சியும் இந்தியாவுடனான செயற்பாடுகளும்;

ஜெனீவாவில் பல அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்தல்;

பல நாடுகளில் அந்தந்த நாட்டு பிரநிதிகள் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்களில் தொடர்புகளை ஏற்படுத்தல் (ex: USTPAC in US)

22 ஆவது தொடரை நோக்கிய அரசியல் வேலைப்பாடுகள்;

GTF remains resolute that only an independent, international investigation will bring justice to the victim’s of war crimes and crimes against humanity, and their families. However, these important small steps can pave the way for an international mechanism towards truth, accountability and lasting peace on the island. http://globaltamilforum.org/gtf/

Share this post

Link to post
Share on other sites

தேசிய அவையின் சார்பில் ஐ.நா. சபைக்குச் சென்றவர் ஒரு இன்ஜீனியர். அவரால் சாதாரணமானவர்களுடன்கூட அரசியலோ, மனித உரிமைகள் பற்றியோ விவாதிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இவரைப் பற்றி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில்கூட எழுதினார்கள். அகூதா, முடிந்தால் இவரோடு நீங்கள் சிறிது நேரம் விவாதித்துப் பாருங்கள். அப்போது விளங்கும்.

Share this post

Link to post
Share on other sites

ஹரி ஆனந்தசங்கரி மட்டுமல்லாமல், வாணி என்ற ஒரு தமிழ் உறவும் கனடாவில் இருந்து சென்று பேசியிருப்பதாக அறிய முடிகின்றது...இருவரும் வழக்கறிஞர்கள், மற்றும் பல்கலைக்கழ சார்பான அமைப்பினூடாகச் சென்று பேசியிருக்கின்றார்கள்.

வாணி சமீபத்தில் எழுதிய கட்டுரை ரொரன்ரோ ஸ்ராரில்::

http://www.thestar.com/opinion/editorialopinion/article/1154643--sri-lanka-on-notice-where-do-we-go-from-here

Share this post

Link to post
Share on other sites

ஹரி ஆனந்தசங்கரி மட்டுமல்லாமல், வாணி என்ற ஒரு தமிழ் உறவும் கனடாவில் இருந்து சென்று பேசியிருப்பதாக அறிய முடிகின்றது...இருவரும் வழக்கறிஞர்கள், மற்றும் பல்கலைக்கழ சார்பான அமைப்பினூடாகச் சென்று பேசியிருக்கின்றார்கள்.

Gary Anandasangaree Legal Counsel for Canadian Tamil Congress (CTC) on behalf of Lawyers Rights Watch Canada (LRWC) made the following intervention at the UN Human Rights Council meeting today (March 2nd 2012) after the Sri Lankan government's permanent representative to the UN made her statement.

http://www.canadiantamilcongress.ca/article.php?lan=eng&cat=&id=34

தேசிய அவையின் சார்பில் ஐ.நா. சபைக்குச் சென்றவர் ஒரு இன்ஜீனியர். அவரால் சாதாரணமானவர்களுடன்கூட அரசியலோ, மனித உரிமைகள் பற்றியோ விவாதிக்க முடியாது. அவருடன் பழகியவர்களுக்கு அவரைப் பற்றி நன்றாகவே தெரியும். இவரைப் பற்றி குளோப் அண்ட் மெயில் பத்திரிகையில்கூட எழுதினார்கள். அகூதா, முடிந்தால் இவரோடு நீங்கள் சிறிது நேரம் விவாதித்துப் பாருங்கள். அப்போது விளங்கும்.

அவர்கள் முயற்சிக்கிறார்கள், தவறுகளை ஏற்கும் பக்குவமும் உள்ளது. எனவே அவற்றை சுட்டிக்காட்டி ஒன்றாக நடந்து செல்வதே வழி என எண்ணுகிறேன். மாற்று வழி இருப்பாதாக தெரியவில்லை.

Share this post

Link to post
Share on other sites