Archived

This topic is now archived and is closed to further replies.

arjun

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்

Recommended Posts

தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்

02 ஏப்ரல் 2012

lg-share-en.gif

cheran-ezhuthuvathu2_CI.jpg

"மழை பெய்கிறது

ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது

தமிழர்கள் எருமைகளைப் போல

எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள்

ஈரத்திலேயே நடக்கிறார்கள்

ஈரத்திலேயே படுக்கிறார்கள்

ஈரத்திலேயே சமையல்; ஈரத்திலேயே உணவு

உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட

அகப்பட மாட்டான்."

மார்ச் மாதம் இருபத்திரண்டாம் நாள் இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு தமிழர்களில் பலருடைய – குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலருடைய – செயற்பாடுகளைப் பார்க்கிற போது பாரதியின் மேற்கூறிய வரிகள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (புலிகளாக இருந்த தமிழர்களை எருமைகளாக மாற்ற முற்படுகிறேன் எனத் தயவு செய்து என் மீது கோபம் கொள்ள வேண்டாம்!)

ஐ.நா அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு ஒரு கூட்டம் தமிழர்கள் வாஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு முன்னால் திரண்டு அமெரிக்காவுக்கும் ஹிலரி கிளிண்டனுக்கும் நன்றி தெரிவித்தார்கள். இன்னொரு கூட்டம் தமிழர்கள் கனடாவிலுள்ள அமெரிக்கக் கொன்சலேற்றுக்கு முன்னால்கூடி நன்றிக் கண்ணீர் வடித்தார்கள். இன்னொரு கூட்டம் தமிழர்களே இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறுவதற்குப் பின்நின்று உழைத்த கனடிய அரசுக்கு நன்றி கூறுவதற்காகக் கனடியத் தலைநகரான ஓட்டாவாவில் அமைந்திருக்கும் நாடாளுமன்றத்துக்கு முன்னால் அடுத்த வாரம் கூடப் போகிறார்கள். 1987 இல் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்ததும் அதன் பின்னர் நடந்தவையும் நாம் மறந்து விடலாம்! சிட்டுக் குருவிகளுக்குக் கூட அற்புதமான மூளை இருக்கிறது.

Bild_176.jpg

கனடாவைப் பொறுத்தவரை இத்தகைய செயற்பாடுகளுக்கு அமைப்பு சார்ந்து பின்னணியில் இருக்கின்றவர்கள் முன்னாள் விடுதலைப் புலிகளும் அவர்களது சார்பில் முன்பு இயங்கிய நிறுவனங்களும் என்பது ஒரு கேலிக்க்குரிய முரண்நகையாகும். கனடிய வரலாற்றிலேயே மிகவும் மோமான பிற்போக்குவாத பழமை பேணும், மக்களுக்கு எதிரான ஒரு அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவாளர்களாக இருப்பதிலும் இந்த நிறுவனங்களுக்கு நாணம் கிடையாது. இது நாணயம் சம்பந்தப்பட்ட விடயம்.

ஐ.நா மனித உரிமைகள் அவையில் தீர்மானம் வெற்றி பெற்ற மறுநாளே அமெரிக்க அரசு முக்கியமான ஒரு பரிசை இலங்கைக்கு வழங்கியது. கடலோரப் பாதுகாப்பு, கடல் வலையக் கண்காணிப்பு சார்ந்த தொழில்நுட்பம், கண்காணிப்பு தொடர்பான உதாரிகள் இலங்கைக்கு வழங்கப்படுவதற்கு கடந்த முட்பது ஆண்டுகாலமாக இருந்த தடை மார்ச் 23 ஆம் நாள் நீக்கப்பட்டது, என்ற செய்தியை வாஷிங்டன் போஸட் நாளிதழ் வெளியிட்டது. பாதுகாப்பு, படைத்தளவாடங்கள், பயிற்சி போன்ற விடயங்களில் இலங்கை அரசுக்கு முக்கியமான சலுகை இது. கூடவே, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாகவும் அமெரிக்கா இலங்கைக்கு ஒரு பெரிய சலுகையை வழங்கியிருக்கிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடையும் ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதித் தடையையும் இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதில் முன் நிற்கும் அமெரிக்கா இலங்கை அரசுக்கு வழங்கியுள்ள சலுகையின் படி எண்ணெய் இறக்குமதியில் 15 வீதத்தைக் குறைத்தால் மட்டுமே போதுமானது. இலங்கை தனது எண்ணெய் இறக்குமதியில் 93வீதத்தை ஈரானில் இருந்தே பெற்றுக் கொள்கிறது. எனவேதான் நான் ஏற்கனவே இந்தப் பத்தியில் குறிப்பிட்டதுபோல இலங்கை அரசு அமெரிக்க எதிர்ப்பை இவ்வளவு மூர்க்கத்தனமாகக் காட்டுவது ஒரு ‘தேசபக்தி’ நாடகமாகவே இருக்கமுடியும்.

இத்தகைய பின்னணியில் ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தீர்மானம் பற்றிய வேறு சில தரவுகளையும் இத்தீர்மானம் ஏற்படுத்திப்போகும் தாக்கங்களையும் பார்க்கலாம்.இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எத்தகைய கடப்பாடும் இலங்கை அரசுக்குக் கிடையாது. (Non-binding). மனித உரிமைகள் அவையில் கியூபாவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்பதை நாம் நினைவு கொள்ளலாம். மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்படுகிற எந்தத் தீர்மானமும் சம்பந்தப்பட்ட நாட்டின் ஒப்பதலோடும். அந்த நாட்டுடன் கலந்தாலோசிக்கப்பட்டுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஐ.நா. அவையின் ஒழுங்குமுறை அடிப்படை விதிகளில் ஒன்றாகும். இது நிரந்தரமானது. எனவே இந்திய அரசு கொண்டு வந்த ‘திருத்தம்’ என்று ஊடகங்கள் பல தூக்கிப் பிடித்த விடயம் பெரும் ‘பம்மாத்து’ என்பதை விட வேறு எதுவும் சொல்வதற்கில்லை. ஐ.நா. மனித உரிமை அவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு அரசியல், புவியியல் - அரசியல், நாடுகளின் சுயநலம் பேணல் போன்ற, மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட காரணங்களே முன்னிலை வகிக்கின்றன.

ஐ.நா அவையின் தீர்மானங்கள் தமக்குச் சாதகமாக இல்லாத போது நாடுகள் எதிர்க்கின்றன. அதற்காக அவர்கள் முன்னிலைப்படுத்துகிற ஒரேயொரு காரணம் நாடுகளது ‘இறைமை’ ‘இறையாண்மை’ யில் எவருமே தலையிடமுடியாது என்ற பழைய வாதமாகும். இந்த இரண்டு சொற்களுமே அடிப்படையில் தவறானவை என்பது ஒருபுறம் இருக்க, உலகமயமாதலின் தீவிரம் எல்லா நாடுகளதும் ‘இறைமை’ யைத் திட்டமிட்ட முறையில் வேரறுத்து வருவதால் ‘இறைமை’ என்ற கோட்பாடே இப்போது யானை தின்ற விளாம்பழமாக மாறிவிட்டது. இன்னொரு தளத்தில். தமது சொந்த மக்களையே எண்ணுக் கணக்கற்றுப் படுகொலை செய்யும் அரசுகள் ‘இறைமை’ யைத் தூக்கிப் பிடிப்பதற்கான அறவலிமையை இழந்து விடுகின்றன. ‘இறைமை’ , "இறையாண்மை" என்பதை அரசுகளுக்கு உரியது என்று புரிந்து கொள்வதைவிட "இறைமை" மக்களிடமே உள்ளார்ந்து இருக்கிறது-இறைவனிடமும் ஆண்மையிடமும் இருந்து அது பெறப்படுவதில்லை என்ற புரிதலை நாம் முன்னிலைப் படுத்த வேண்டும். அதுதான் புதிய அரசியலாக இருக்க முடியும். இந்தப் புதிய அரசியல் ஐ.நா,அவையைத் தாண்டியது. பல்வேறு மக்களின் உணர்வொருமைப்பாட்டிலும் உணர்வுத் தோழமையிலும் (solidarity) உருவாவது.

இலங்கை பற்றிய ஐ.நா. அவைத் தீர்மானம் விவாதிக்கப்பட்ட போது ஐ.நா. அவைக்கான கியூபாவின் தூதர் அங்கதச் சுவையோடு ஒரு கேள்வியைக் கேட்டார், போரின் போது இலங்கை பயன்படுத்திய ஆயுதங்களால் நாற்பது வீதமானவற்றை அமெரிக்காவே வழங்கியது. பிறகு ஏன் இந்தத் தீர்மானத்தை நீங்களே முன் வைக்கிறீர்கள்? மீதி 60 வீதமான ஆயுதங்களை வழங்கியவர்களில் பலரும் அந்த அவையில் இருந்தார்கள்.

எனினும் மகிந்த அரசும் அதனுடைய தொண்டர் அடிப்பொடிகளும் இத்தகைய ‘மென்மை’ யான தீர்மானத்துக்கே சஞ்சலம் கொள்வது ஏன்? முதலாவதாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவது பற்றிய வேலைத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக்க வேண்டும். இரண்டாவது, இடம் பெற்று போர்க் குற்றங்களைப் பற்றிய சுயாதீனமான விசாரணை பற்றிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, இவை இரண்டையும் பற்றிய இலங்கையின் நடவடிக்கைகள் பற்றி அறிக்கைகளை மனித உரிமைகள் அவை ஆணையாளர், மற்றும் சிறப்பு அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் எனவே தொடர்ந்து நீண்ட காலத்துக்கு இலங்கை விடயம் ஐ.நா அவையில் இடம் பெறப் போகிறது. வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு முன்வராவிட்டால், அல்லது மறுத்தால் என்ன பின் விளைவுகள் நிகமும் என்பது பழையபடி சூதாட்டத்திலும் சதுரங்கத்திலும் தான் தங்கியுள்ளது. பொதுவாகவே சர்வதேசச் சட்டங்களும் ஐ,நா. தொழில்முறைகளும் மிக நீண்ட காலம் எடுப்பவை. இத்தகைய கால அவகாசம் இலங்கை அரசுக்கு மிகவும் வாய்ப்பானது. ஏனெனில், பலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்வது போல ஒவ்வொரு நாளும் திட்டமிட்ட முறையில் வடக்கு, கிழக்கின் சமூக, பொருளியல், குடியியல் மற்றும் நுண் அரசியல் நிலைமகளை மாற்றி விடலாம். இவ்வாறு ஐ.நா.அவைக்கும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமான கயிறிழுப்பில் இலங்கை அரசு சாமர்த்தியமாக வெற்றி பெற்றால் அமெரிக்காவுக்காக ஆனந்தக் கண்ணீர் சிந்திய தமிழர்கள், ஒரு கோப்பை, கண்ணீருக்குள் பழையபடி தமது தலையை மூழ்கடிக்க வேண்டியது தான்!

Share this post


Link to post
Share on other sites

மேலே எழுதப்பட்ட கருத்து சில தரவுகளை மறைத்து (மறந்து?) தன்னையும் ஒரு தமிழின ஆர்வலராகவும் தொடர்ந்தும் அரசியல் மேடையில் ஒரு நாயகனாக வைத்திருக்கவும் எழுதப்பட்டுள்ளது:

1. இலங்கை அரசாங்கம் தாம் மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்ததாகவே கருதுகிறது. மனித உரிமை பேரவையில் நடைபெற்ற வாக்களிப்பின் போது தமக்கு சாதகமாக குறைந்த வாக்குகள் கிடைத்தனது என்ற விடயத்திற்காக இலங்கையின் தலைவர்கள் அமெரிக்காவையும் இந்தியாவையும் குறை கூறுகிறார்கள்.

2. இந்தியா முன்கூட்டியே தமது முடிவை அறிவித்தமையே இலங்கைக்கு ஆதரவாக இருந்த பல நாடுகள் தமது முடிவையும் மாற்றிக் கொண்டன என வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்தார். தமது பிரேரணை தோல்வியடையும் என்ற நிலை நிச்சயமாக காணப்பட்டு இருந்தால் அமெரிக்கா வேறு நாடுகள் மீது நெருக்குதலை கொடுத்திருக்கக் கூடும்.

3.

கனடா உலக அரசியலில் மென் சக்தியாக (soft power) உள்ளது, அமெரிக்கா தலையிட முடியாத இடங்களில் அது தலையிடக்கூடியதாக உள்ளது. நன்றி சொல்வதால் ஒன்றும் குறைந்து போவப்போவதில்லை.

4. அமெரிக்கா பாலஸ்தீன மக்களுக்கு வைத்தது போன்று ஆப்பு வைக்கக்கூடாது என்றால் அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டும். அதையே எம்மில் செய்யும் சிலர் மீது இவ்வாறான 'அக்கறை' போன்ற போர்வைக்குள் வைக்கப்படும் கருத்துக்கள் மக்களை ஏமாற்றாது.

Share this post


Link to post
Share on other sites

மேலே எழுதப்பட்ட கருத்து சில தரவுகளை மறைத்து (மறந்து?) தன்னையும் ஒரு தமிழின ஆர்வலராகவும் தொடர்ந்தும் அரசியல் மேடையில் ஒரு நாயகனாக வைத்திருக்கவும் எழுதப்பட்டுள்ளது:

1. இலங்கை அரசாங்கம் தாம் மனித உரிமை பேரவையில் தோல்வியடைந்ததாகவே கருதுகிறது. மனித உரிமை பேரவையில் நடைபெற்ற வாக்களிப்பின் போது தமக்கு சாதகமாக குறைந்த வாக்குகள் கிடைத்தனது என்ற விடயத்திற்காக இலங்கையின் தலைவர்கள் அமெரிக்காவையும் இந்தியாவையும் குறை கூறுகிறார்கள்.

2. இந்தியா முன்கூட்டியே தமது முடிவை அறிவித்தமையே இலங்கைக்கு ஆதரவாக இருந்த பல நாடுகள் தமது முடிவையும் மாற்றிக் கொண்டன என வெளியுறவுத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கூறியிருந்தார். தமது பிரேரணை தோல்வியடையும் என்ற நிலை நிச்சயமாக காணப்பட்டு இருந்தால் அமெரிக்கா வேறு நாடுகள் மீது நெருக்குதலை கொடுத்திருக்கக் கூடும்.

3.

கனடா உலக அரசியலில் மென் சக்தியாக (soft power) உள்ளது, அமெரிக்கா தலையிட முடியாத இடங்களில் அது தலையிடக்கூடியதாக உள்ளது. நன்றி சொல்வதால் ஒன்றும் குறைந்து போவப்போவதில்லை.

4. அமெரிக்கா பாலஸ்தீன மக்களுக்கு வைத்தது போன்று ஆப்பு வைக்கக்கூடாது என்றால் அதற்கான நடவடிக்கைகளில் நாம் இறங்கவேண்டும். அதையே எம்மில் செய்யும் சிலர் மீது இவ்வாறான 'அக்கறை' போன்ற போர்வைக்குள் வைக்கப்படும் கருத்துக்கள் மக்களை ஏமாற்றாது.

Intention is to distrubt the just qnd right path of Eelam Tamils political goal.

But the Sri lankan genocide crowd is using ancient media spinning techniques with unknown so called Analysts.

This article is a sign that the Sri lankan genocide victims are on the right direction.

Share this post


Link to post
Share on other sites

உண்மையான ஜனனாயகத்துக்குள் வாழும் மக்களின் எமது இனநலம் சார்பாக ஏகோபித்த கருத்துக்களாக கொண்டிருப்பவை எவையோ, அவற்றின் மீதான காக்காய் எச்சங்களாக கறைபடிக்கும் இந்தக் கருமாந்திரன்ங்களின் எண்ணங்கள் மட்டும் வானத்தில் பறக்கின்றது!

செயல் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதபோதும், வாய் வைகுண்டம் ஏறுகின்றது!

Share this post


Link to post
Share on other sites

தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன்.

நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites

சேரன் அப்படியாயின் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்? அமெரிக்கா இந்தியா கனடா எல்லாமே தமது நலனில் இருந்தே செயற்படுகின்றன என்பது எவரும் அறிந்தது.ஐ நா மனித உரிமை அவையும் ஒரு கருவியே என்பதையும் அறிவோம்.

எமக்கு இன்று இருக்கும் நடைமுறைச் சாத்தியமான அரசியல் என்பது, பூகோள நலன் சார் மு்ரண்படுகளைப் பாவித்து சிறிலங்கா அரசை சீன சார்பு நிலை எடுக்கத் தள்ளுவதே.இதன் மூலமே நலன் சார் முரண்பாட்டின் பாற்பட்டு அமெரிக்கா முதலான மேற்குலகம் சிறிலங்காவை நோக்கி பொருளாதரத் தடை முதலாய நடவடிக்கைகளை எடுக்கும்.மேலும் சிறிலங்கா அமெரிக்காவிடம் சரணடைந்தாலும் ,தம்ழருக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்க வேண்டிய கடப்பாடு மேற்குலகத்திற்க்கு இருக்கிறது.ஐ நா நிபுணர் குழு அறிக்கை சனல் நான்கின் ஆவணம் எல்லாம் எமக்குச் சாதகமானவையே.இவை நாம் எமது சொந்த வாழ்க்கையைத் தொழிலைச் செய்து கொண்டு இருக்கும் போது தானாக நடந்தவை அல்ல.

தொடர்ச்சியாக நாம் போராட வேண்டும்,, அதை எல்லாத் தளங்களிலும் எல்லா தரப்பினரிடமும் நாம் தான் கொண்டு செல்ல வேண்டும்.

Share this post


Link to post
Share on other sites

உதை எழுதினவர் போராடிக் களைச்சு விழுந்து போனாராம்.. அதுதான்.. இயலாமையில்.. மற்றவர்களைப் பார்த்து திட்டுறார். :lol:

இன்று இரண்டு வடிமான கருத்துக்களை முன்னாள் இன்னாள் துரோகிகள் எதிரிக்காக எம் மக்கள் மத்தியில் திட்டமிட்டு பல வழிமுறைகளிலும் விதைத்து வருகின்றனர்..

1.விடுதலைப் புலிகளின் போர்க்களத் தோல்வி - இதனை முக்கியப்படுத்தி.. தமிழீழம் என்பதை சாத்தியமற்ற ஒன்று என்பது- இது துரோகிகள் தாங்கள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு எஜமானர்களிடம் (இந்திய.. சிங்கள) கூனிக்குறுகி மக்களின் உரிமைகளை தாரைவார்த்தை நியாயப்படுத்தி தாங்கள் செய்தது ஏதோ அதிமதிநுட்பச் செயற்பாடு என்பது போல காட்ட நினைக்கிறார்கள். ஆனால் அங்கு ஒன்றும் இல்லை.. பாவங்கள்.. எஜமானர்கள் பார்த்துப் போட்டால் வாலையாட்டிக் கொண்டு கவ்விற அளவில் தான் இவர்களின் பிழைப்பு போய்க்கிட்டு இருக்குது..!

2. புலம்பெயர் மக்கள் புலிகள் - இதன் மூலம்.. பெரும்பான்மையான புலம்பெயர் மக்களிடம் இன்றும் இருக்கும்.. தாயக.. விடுதலை நோக்கிய தமிழ் தேசிய உணர்வு.. சுயநிர்ணய கோட்பாடுகளை சிதைப்பது - எதிரி தனது படைப்பல ஆக்கிரமிப்பு மூலம் செய்ய முடியாததை இவர்கள் இங்கு புகலிடத்தில் அவனுக்காகச் செய்கின்றனர். தாயகத்தில் சிங்களப் படையோடும் இந்திய ஜவான்களோடும் நின்று கண்கட்டி.. தலையாட்டி.. காட்டிக் கொடுத்ததன்.. நவீன வடிவமாக... கொஞ்சம் உருமாற்றிய.. ஜனநாயக.. மாற்றுக்கருத்து சாயம் பூசிய.. முகங்களோடு.. இது நிகழ்த்தப்படுகிறது. தாயகத்தில் இன்னும் அதே பழைய நிலையும் பேணப்படுகிறது.

இவர்களிடம் உள்ள உண்மையான.. மக்கள் மீதான கருசணை என்பது ரின் உணவு உண்ணும் பூனைக்கு கருவாடு போல..! அடிப்படை கொள்கைகள்.. மக்கள் நலன்.. இராஜதந்திரம் எவையும் இவர்களின் எழுத்தில் வடிகட்டினாலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இந்த நிலையில்.. யாழ் இவற்றை உள்வாங்குவதன் நோக்கம்...????!

யாழும் தன்னை ஜனநாயக வாதின்னு.. வரிஞ்சு கட்டவா....???! எதற்கு இந்த வேண்டாத வேடம் நமக்கு..???!

எம்மவரின் சுத்துமாத்து அரசியலை கடந்த 35 வருடங்கள் கண்டுமா.... கடந்து வந்துமா.. நாங்கள் துரோகிக்கும் எதிரிக்கும்.. எதிர்க்கட்சிக்கும் வரவிலக்கணம் வகுக்க முடியாமல் கிடக்கிறம்..! இப்படியான ஒரு நிலையில் நமக்கு ஜனநாயகம் ஒரு கேடு..???!!!

அமெரிக்காவைப் பாருங்கள்.. தேர்தலை வைச்சு.. அரசு செய்யும் தனக்கு விரோதமான ஆட்சியாளர்களையே தூக்கி எறிய வேண்டும் என்று நினைத்தால் படைப்பலம் கொண்டும்.. அதை தூக்கி எறியும். ஜனநாயகம் என்பது.. எல்லாம்.. ஒரு தேவையோடு தான். அங்கு ஒன்றும் இலட்சியத் தன்மை காக்க வேண்டிய சட்டவிதியோ.. கட்டாயமோ இல்லை. நாம் ஒரு அடிமைப்பட்டுள்ள.. அடிமை விலங்கொடிக்க போராடும் இனம். எமக்கு ஜனநாயகத்தை விட அடிப்படை வாழ்வுரிமையை மீட்பதுதான் முக்கியம். அதை பலர் இன்னும் விளங்கிக் கொள்ளாமை.. எமது பலவீனம்..!

இவற்றின் ஒட்டுமொத்த விளைவே இவ்வாறான எழுத்துக்களும் அவறிற்கான பதிவிடல்களும்..! :icon_idea:

மேலும் இது செய்தியல்ல. கடந்த கால நிகழ்வுகள் தொடர்பில்.. தனிநபர்.. ஒருவரின் கருத்து. இதனை செய்திகள் பகுதியில் ஒட்ட என்ன தேவை இருக்கிறது..???????! அதன் நோக்கம் என்ன..??! இதனை ஆனந்தபுர நிகழ்வு நினைவு நாளில்.. முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை என்ன..?????????!

சிந்தியுங்கள்.. இத்தலைப்பிற்கான விடை கிடைக்கும்..! :icon_idea: :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

எனக்கு ஒரு முன்னாள் இரோசில் இருந்த நண்பர் ஒருவரைத் தெரியும்.அவரும் சேரனைப் போல் தான் , தமது சுய தொழில் வேலை என்று கண்ணும் கருதுமாக இருப்பார்கள்.பொது நோக்கிற்காக எவராவது எதாவது பண உதவி கேட்டால் , நீங்கள் செய்யிறது எல்லாம் பிரியோசனம் இல்லாத வேலை என்பார்.அப்ப உங்கட சரியான போராட்டம் எது என்று கேட்டால்.ஏகாதிபத்திய எதிர்ப்பு , மக்கள் போராட்டம் என்பார்.அப்ப எப்ப அதைத் தொடங்குவியள் எண்டு கேட்டா சொல்லுவார்.உங்கட கதை நல்லா இருக்கு நாங்கள் என்ன நெருப்புக்க போய் விழுகிறதோ என்று கேட்பார்.இவர்களுக்கு அந்தப் பாதை நெருப்பு என்று தெரியும் ஆனால் இவர்கள் செய்ய மாட்டார்கள், மற்றவனைப் போய் நெருப்பில் விழச் சொல்லுவார்கள்.

அந்தப் பாதை நெருப்பென்றால், நெருப்பின் சூட்டை நாம் குறைக்க முடியும்.போராடக் கூடிய மக்களுக்கு அந்தப் போராட்டத் தளம் என்பது பாதுகாப்பானதாக இருக்கக் கூடிய சூழலை நாங்கள் சர்வதேச நலன் சார் முரண்பாடுக்ினூடு உருவாக்க முடியும்.

தானும் ஒண்டும் செய்ய மாட்டங்கள் செய்யிறவங்களைக் கூறை சொல்லியே விமர்சகர்,பந்தி எழுத்தாளர். என்று பெயர் மாட்டிக் கொள்வார்கள்.

Share this post


Link to post
Share on other sites

தோழர் சேரனுக்கு, உங்கள் கருத்துடன் முரண்பட நேர்ந்தமைக்கு வருந்துகிறேன். இன்று 0 மட்டத்தில் (ground zero) வீழ்துகிடக்கும் களத்தில் உள்ள எமது மக்களின் விடிவுக்காக புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகள் சூரியனின்கீழ் அவசியமான சகல ஆட்டங்களையும் ஆடியே ஆகவேண்டும். அது எருமை ஆட்டம் மட்டுமல்ல அதற்க்குக்கீழேபோய் நாய் ஆட்டம் நாரி ஆட்டமாக இருப்பினும் நாம் ஆடியே ஆகவேண்டும் என்பது என்று வலியுறுத்துகிறேன்.

நீங்கள் எங்களுக்கு பல தெரிவுகள் இருக்கின்றது என்று கருதுகிறீர்களா? நாம் வெறென்ன செய்யலாம். செய்யவேண்டும்? நமக்கு இதைவிட வலுவான மாற்று வழிகள் இருந்தால் மட்டுமே நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கலாம்.

நான் ஒரு சமூக விஞானியோ அறிஞனோ இல்லை. ஆனாலும் நாம் ஒரு இன்மாகத் தப்பிப் பிழைத்தல் மேம்பட்டு உய்தல் தொடர்பாக எனக்குத் தெரிந்த வரைக்கும்ம் நமக்கு இதைவிட அடுத்த தெரிவுகள் இல்லை. தெரிவை உருவாக்கக்கூடிய பலத்தை உருவாக்க பெரிதாக அரசியல் வெளியும் இல்லை.இருக்கிற இறிய அரசியல் வெளிக்குள் நுளைந்து அதைப் பெருப்பிக்க வேண்டிய அவசரத்தேவை நமக்கு உள்ளது. அந்த பணிகளின் சரியான ஆரம்பமே கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழர்கலது அமைப்புகளும் அமரிக்காவுக்கும், கனடாவுக்கும் மேற்க்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நன்றி கூறும் நிகழ்வுகள். இது காலத்தின் அவசியமாகும்.

ஆனாலும் இதுதொடர்பாக நீங்கள் வைக்கக்கூடிய ஒரே ஒரு காத்திரமான விமர்சனம் உள்ளது. தமிழர்களே நீங்கள் பெரிய நாடுகளோடு நிறுத்திக்கொள்கிறீர்கள் அது தப்பு. அது தொடர்பாக எனக்கு விமர்சனம் இருக்கு. பெரிய நாடுகளோடு நிண்றுவிடாமல் தீர்மானத்தை ஆதரித்த அத்தனை சின்ன நாடுகளுக்கும் நன்றி கூறுங்கள். அவற்றுட் சில கொள்கைரீயாகவும் எம்மை ஆதரிக்கும் நிலைபாடு எடுத்தவை. அத்தகைய நாடுகள் எமக்கு அமரிக்கா போல முக்கியமானவையாகும்.ஆதரித்த அத்தனை நாடுகளுக்கும் நாம் நன்றிகூறவும் அவற்றுடனான தமிழர் நட்புறவுச் சங்கங்களை அமைத்துத் தொடர்ந்து செயல்படவும் கடமைப் பட்டிருக்கிறோம். தமிழர் மெச்சிக்கோ நட்புறவு சங்கம் தமிழர் இந்தியா நட்புறவுச் சங்கம், தமிழர் மொறீசியஸ் நட்புறவுச் சங்கமென புலம் பெயர்ந்த நாடுகளில் நூறு நட்ப்புறவு மலர்கள் மலரட்டும். நடுநிலை வகித்த நாடுகளில் மலேசியா முக்கியமானது. இலங்கைக்கு ஆதரவான அந்த நாட்டை மலேசிய தமிழர்களின் போராட்டங்களே அசைத்தது. மலேசிய தமிழருக்கு நாம் நன்றி சொன்னோமா என உரத்துக் கேட்க்க வேண்டி உள்ளது. தமிழர் மலேசிய நட்புறவு நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. இத்தகைய விமர்சனங்களுக்கே இடம் இருந்தது. அத்தகைய விமர்சனத்தையே உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்.

மேலும் நீங்கள் ஆதரித்த அல்லது நடுநிலை வகித்த நாடுகளுக்கும் நன்றி கூறுங்கள். உலக மனித உரிமை அமைப்புகள் பாசன தமிழ்நெற் வாகீசன் அமரர் மேரி கொலின் போன்ற சிங்கள தமிழ் சர்வதேச [பத்திரிகையாளர்கலையும் கவுரவியுங்கள் அது அடிப்படையில் முக்கியமானது என்பதை அழுத்திச் சொல்லியிருக்கலாம். அதனை நானும் ஆதரித்திருப்பேன்.

.

ஏனேனில் பிரபலமான ஒருசிலநாடுகளை வாழ்த்திவிட்டு முக்கியமான பல நாடுகலையும் நபர்களையும் மறந்து விடுவோம். இத்தகைய தவறுகள்தான் நாம் திரும்பத் திரும்ப இளைக்கிற தவறுகள் சிங்கள பத்தீரிகையாளர் பாசன தமிழ்வாணி வாகீசன் போன்ற உயிரைப் பணயம் வைத்து இனக்கொலை யுத்தக்குற்ற தகவல்களை சர்வதேச அரங்கிற்க்கு கடத்திவந்த நம் காலத்து நாயகர்க் நாயகிகள் பலரை நாம் ஏற்கனவே மறந்துபோனது கொடுமை. இதற்காக நம்மவரை எருமைகடா என்றால் நானும் ஆமோதிதிருப்பேன். நானும் உங்களோடு சேர்ந்து குரல் கொடுக்கவே விரும்புகிறேன் எனவே நமினத்தை இன்னும் பாதாலத்துக்குள் தள்ளிவிடக்கூடிய தங்கள் anarchistic அணுகுமுறையை விட்டு விட்டு. தோழரே தயவு செய்து மாற்றி யோசியுங்கள்.

நல்ல கருத்து கவிஞரே

Share this post


Link to post
Share on other sites

..கடைசியில பச்சை சிவப்பு குத்தும் முறை என்னையும் குழப்பிப்போட்டுது...பச்சை சிவப்பு குத்தாமல் ஆரு என்ன குத்தியிருக்கினம் என்று பார்க்க ஒரு வழி கண்டு பிடிக்கவேண்டும் :(

Share this post


Link to post
Share on other sites

பொய் தானே சொல்றீங்கள் நிழலி சேரனைப் பிடிக்கும் என்பதால் தானே பச்சை குத்தினீங்கள் :D

Share this post


Link to post
Share on other sites

பொய் தானே சொல்றீங்கள் நிழலி சேரனைப் பிடிக்கும் என்பதால் தானே பச்சை குத்தினீங்கள் :D

..உண்மையாக குத்தி இருந்தன் என்றால் கமுக்கமாக இருந்து இருப்பன்...வாசிக்க முதல் ஆரு எவ்வளவு குத்தி இருக்கினம் என்று விடுப்பு பார்க்கப் போய் இப்படியாயிற்று... :mellow: இன்னும் கட்டுரையில் என்ன எழுதி இருக்குது என்று வாசிக்கவில்லை...இரவுதான் இதனையும், பொயட்டின் பதில் திரியையும் வாசிக்க வேண்டும்

Share this post


Link to post
Share on other sites

இவர்கள் போன்றவர்கள் எல்லாம் ஏதும் மாற்றுத்திட்டம் இல்லை ஏதும் தீர்வுத்திட்டம்,மாற்று யொஒசனை ஏதும் வைத்துக்கொண்டா உபதேசம் செய்ய வெளிக்கட்டிட்டவை என்றா யாரும் நினைக்கிறீர்கள்? தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற கூட்டம் இவர்கள். தமிழ் தெரிஞ்ச ஒரே காரணத்துக்காக பப்ளிசிட்டிக்கு அலையும் கூட்டம்,

எங்கண்டை தலையெழுத்து வாசித்து தொலைக்க வேண்டி இருக்குது. :wub:

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தின் சுப்புறமணி சாமி...

Share this post


Link to post
Share on other sites

அர்ஜுன் அண்ணாவிற்கு நன்றி. 

எல்லா கருத்துக்களும் அருமையாக இருந்தன.  ஈழ தமிழர் காரியத்தில் கண்ணாய் இருப்பது கருத்துக்களில் பரிமாறப்படும் திட்டங்களில் தெரிகிறது. 

ஈழத்தின் சுப்புறமணி சாமி...

எங்களட்ட ஒரு சுப்புரட்டு சுவாமி ஆர்மியே இருக்கு ஈழத்தில். 

எங்களை விடமாட்டாங்கள்... அப்படி ஒரு கொலைவெறி...

Share this post


Link to post
Share on other sites

நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுதலாம்..........

ஆனால் இலக்கிய எழுத்து துறையில் சேரன் நீங்கள் எட்டி பிடிக்க முடியாத எடத்திட்கு சென்றுவிட்டார். அவருடைய எழுத்தின் அற்புதங்கள் எல்லைகளற்று விரிந்து கிடக்கிறது.

மாடு திட்டி காகம் கரைவதை நிறுத்தபோவதில்லை.

நான் நினைக்கிறேன் "காகம் திட்டி மாடு சாகபோவதில்லை" இப்படி வந்திருக்கவேண்டும் என்று.

எப்படி இருந்தால் என்ன எதையாவது எழுதிவிட்டோமல்லவா?

Share this post


Link to post
Share on other sites

இந்த எருமைக்கு எம்மைப்பார்த்து கத்தும் அதிகாரத்தை எந்தக்கழுதை கொடுத்தது.??? :( :( :(

Share this post


Link to post
Share on other sites

இங்கே ஒரு விடயத்திற்கு எனக்கு விளக்கம் தேவை நாம் போடும சி.ப.புள்ளிகள் கருத்திற்கா,கருத்தை பிரசுரித்தவர்க்கா போய்ச்சேரும்???? நான் கருத்திற்கே புள்ளியிட்டேன்

Share this post


Link to post
Share on other sites

இது மாகாகவியின் மகனான சேரனா??? அல்லது அவரது பெயரில் இன்னொருவனா??

ஏனென்றால், கொழுபிலிருக்கும்வரை சரிநிகர் பத்திரிக்கை நடாத்தி நடுநிலையாளனாகக் காட்டிக்கொண்ட இவர் பின்னர் கணடா சென்றவுடன் நடுநிலையென்றால் சிங்களத்தை ஆதரிப்பதுதான் என்று புதிய விளக்கம் கொடுத்தாராம் என்று கேள்வி.

ஆனால் மிக அண்மையில் இந்தியாவில் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் மிகவும் உண்மையாக, போர்ரக்குற்றவிசாரணைகளின் அவசியம் பற்றியிம், தமிழருக்கான தீர்வுபற்றியும், இந்த நூற்றாண்டின் இனவழிப்புப் பற்றியும் மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசியிருந்தார்.

இப்போதுதான் தெரிகிறது இவையெல்லாம் தனது பெயரை காப்பாற்றும் வேலைகளென்று.

பரதேசிகள்

Share this post


Link to post
Share on other sites

எண்பதுகளின் ஆரம்ப மத்தியில் (84) சேரனும் அவர் மனைவி ஊர்வசி டீச்சரும் கிழக்கில் இருந்த பொழுது அங்கு செயற்பட்ட போராட்ட அமைப்புக்களில் ஈடுபாடு இருந்ததில்லை.

இவர் எப்பொழு புலி அமைப்பில் சேர்ந்தார்?

Share this post


Link to post
Share on other sites

''தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்''

திரு சேரன் அவர்கள் கனடாவில் விரிவுரையளராம். நம்பமுடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

''தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும்''

திரு சேரன் அவர்கள் கனடாவில் விரிவுரையளராம். நம்பமுடியவில்லை.

இதையே மொழிபெயர்த்து சேரனின் சக விரிவுரையாளர்கள், மாணவர்களுக்கு அனுப்பினால்....

Share this post


Link to post
Share on other sites

கனடாவில பலகலை கழகத்தில் என்ன படிப்பிகிறார் இவர்? 

பாவம் காசு கட்டி படிக்கிற பொடியள். 

Share this post


Link to post
Share on other sites

அரசியல் பாடம்தான். இவர்களைப் போன்றவர்கள், தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விடமாட்டார்கள். இவர் அரசியலில் முதுமானிப் பட்டம் பெற்றவராச்சே, ஏதாவது செய்வார் என்று பார்த்தால், எல்லாவற்றையும் விமர்சிப்பதுதான் இவரது வேலை. உலகத்தில் எங்கு என்ன மாநாடு நடந்தாலும் அங்கு இவர் ஆஜர். இவருக்கு இலக்கியத்தில்தான் ஆர்வம் என்றால் அதோடு நிற்க வேண்டியதுதானே? அதை விடுத்து, இவர் தானும் குழம்பி, மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு வேளை புலம் பெயர் தமிழ் சமூகம் எதையும் செய்யாமல் இருந்தால், இந்த புத்திசீவிகள் கீழே உள்ள மாதிரித்தான் எழுதுவினம்

".. ஒரு சிறிய இனத்துக்கு கிடைக்கும் ஒரு சின்ன சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சிறிய சந்தர்ப்பங்களை தவற விடும் போது பெரிய சந்தர்ப்பங்களுக்கான வாய்ப்புகள் அற்றுப் போகும். நாதி அற்று இருக்கும் எம் இனத்துக்கு நண்பர்களை உருவாக்கவும் உருவாகத் தேவையான புறச் சூழல் எழும்போது அதை சரியாகப் பயன்படுத்தவும் ராஜதந்திரமாக சிந்திக்க தெரிவதில்லை.இது தான் போராட்ட ஆரம்பகாலங்களிலும், போராட்டம் தீவிரமாக நடக்கும் போதும், இன்றும் தொடரும் நிலை. இதை மாற்றுவதற்குரிய செயல்களும் இன்னும் முளைவிடுவதாக இல்லை. இதனையே நான் போராட்டம் ஆரம்பமான காலம்தொட்டே எழுதியும் தகுந்த நேரங்களில் பேசியும் வந்துள்ளேன்"

Share this post


Link to post
Share on other sites