Jump to content

குட்டி,குட்டி சந்தேகங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் :lol::D:lol:

Link to comment
Share on other sites

  • Replies 62
  • Created
  • Last Reply

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அது ரோஸ் இதழ்களின் பஞ்சுத் தன்மை போன்று மென்மையாக இருப்பதால்!

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

சுயநலம் மிக்க பெண்களை விரும்புவதால்!

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஆம்!

:icon_mrgreen: :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்.

அந்தக் காலத்தில் toaster வராததால்... பாணை roast பண்ணி எடுத்திருப்பாங்க போல. அதுதான் அப்படி ஆகி வந்திருக்கும்.. அக்கா. :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

உஷ்.. அப்பா.. எத்தின தரம் சொல்லி இருப்பன் இப்படி இடக்குமிடக்கா கேள்விகளை யோசிக்காதீங்கன்னு.. மகா சனங்கள் கேட்கிறதா இல்ல. இருந்தாலும் பதில் சொல்லித்தானே ஆகனும்.

ஆண்கள் எல்லாம் பெண்களில் இருந்து தானே பிறப்பெடுக்கிறாங்க.. அதுதான்.. ஜீன் வழி பாதியாகவும்.. தொப்புள் கொடி வழி.. பாதியாகவும் அது பொண்ணுங்கட்ட இருந்து 100% தொத்திடுது. என்ன அது பொண்ணுங்களுக்கே 200% இருக்கிறது தான் ஆபத்து. :lol:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கட.. வுள் தவறு. அட (f)வுள் அடிச்சீங்கன்னான்னு கேள்வி அமைச்சிருக்கனும்..! கேள்வில் ஏதோ எழுத்துப்பிழை என்று நினைக்கிறன். அதனால... இந்த குட்டி.. நீங்கள் தலைப்பில் கூவி அழைப்பது போல.. நம்ம.. குட்டியிடமே கேட்டுவிடுவது நன்று.. அல்லது.. சந்தேகத்தை குழியில போட்டு புதைக்கிறது தான் தீர்வுக்கு ஒரே வழி..!

:D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது கேள்விக்கு ஒருவருக்கும் சரியான பதில் தெரியவில்லை...கிருபன் சொன்ன காரணம் ஓரளவுக்கு ஓகே ஆனால் மற்றப் பாண்களும் மென்மையாகத் தானே இருக்கிறது[ஊரில்] அப்படி இருக்கையில் ரோஸ்ட் பாணுக்கு மட்டும் ஏன் இந்தப் பெயர் வந்தது?

இரண்டாவது கேள்விக்கு எது உண்மையான பதில் என பகலவன் சொன்னால் நன்றாக இருக்கும்...கிருபன் பெண்கள் சுயநலமாய் இருந்தால் ஆண்களும் சுயநலமாக இருக்க வேண்டுமா?...எதிலும் தனித் தன்மையுடன் இருக்க மாட்டீங்களா :rolleyes: எல்லாவத்தையும் பெண்களிடம் இருந்து கொப்பி பண்ணுவதே வேலையாய் போச்சுது...ஆண்கள் சுயநலவாதிகள் என்பதை நெடுக்ஸ் ஒத்துக் கொண்டதே பெரிய விசயம் :icon_idea:

மூன்றாவது கேள்விக்கு நினைப்புத் தான் பிழைப்பை கெடுக்குமாம் என்ட பழமொழி இருக்குது தெரியுமா பகலவன்...கடவுள் இருக்கிறார் என எதை வைத்து சொல்கிறீர்கள் கிருபன்?...நெடுக்ஸ் கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதற்கு உங்கள் பதிலை எழுதுங்கள் அதன் பிற்கு குட்டி வந்து தன்ட பதிலை எழுதட்டும்.

இன்னம் நிறைய குட்டி,குட்டி கேள்வி இருக்குது கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாய் கேட்கிறேன் :)

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

எனக்கு வேற வேலை இல்லை தான் அது எல்லோருக்கும் தெரிஞ்ச‌ விச‌யம் ஆனால் உங்களுக்கு வேற வேலை இல்லாமலா என்ட‌ திரிக்கு பதில் எழுதினீங்கள் :lol: :lol: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?

அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

ஆகா... கலக்கீட்டிங்க விசுகு.

இது, குட்டிச் சந்தேகத்தில் அடங்குமா? ரதி ஆண் என்று, யாழ் களத்தில் 90% வீதமான உறுப்பினர்கள் நம்புகின்றார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?

அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

நான் ஆண்/பெண் என்று சொன்னாலோ நீங்கள் நம்பவா போறீங்கள்

Link to comment
Share on other sites

1 . 'பேக்' பண்ணிய பாணை 'ரோஸ்ட்' பண்ணியது போல இருப்பதால்.

2 . கேள்வியே பிழை. பெண்கள்தான் ஆண்களை விட சுயநலமானவர்கள்.

3 . 'கடவுள் இருக்கிறார்' என நம்புபவனிற்கு கடவுள் இருக்கிறார். இல்லை என நினைப்பவனுக்கு கடவுள் இல்லை.

Link to comment
Share on other sites

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

மற்றப் பாண்களை விட ரோஸ் பாண்களைக் கூடிய நேரம் பேக் பண்ணுறபடியால் தான் அப் பெயர் பெற்றது. அதனால் தான் அவை மொறுமொறுப்பாகவும் உள்ளன.

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

எம் தமிழ் சமுதாயத்தில் முன்னேறிய ஆண்களுக்கே மதிப்பளிப்பதால் போலும் (படிப்பாயினும் சரி, உத்தியோகமாயினும் சரி).

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

ஒவ்வொருவர் நம்பிக்கையையும் பொறுத்தது.

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...

ஏன் சில ஆண்கள் பெண் பெயர்களில் யாழில் எழுதுகின்றார்கள்???

Link to comment
Share on other sites

1) தெரியாது

2) ஆண்களுக்கு சுயநலம் கூட பெண்களுக்கு பொறாமை அதிகம்

3) ஒவ்வொருத்தரின் நம்பிக்கையை பொறுத்தது கடவுள் இருப்பதும் இல்லாததும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதற்கு உங்கள் பதிலை எழுதுங்கள் அதன் பிற்கு குட்டி வந்து தன்ட பதிலை எழுதட்டும்.

அப்ப கேள்வி கடவுள் பற்றியது தான்... என்று நம்புவதால்..

கடவுள் என்ற எண்ணப்பாடு.. எதுவரை.. நாம் எமது அறிவால்.. விளங்க முடியாதவை நிகழும் வரை அல்லது இருக்கும் வரை தான். அந்த வகையில் நோக்கின்.. அறிவு தான் கடவுள்..! அறிவை பெருக்கினால் கடவுள் சுருங்கும்.. அறிவைக் குறைத்தால் கடவுள் வியாபிக்கும்..!

கடவுள்= k 1/அறிவு

k= சாதாரண மனிதர்களின் மூளைச் செயற்பாட்டுக் குணகம். (மனிதர்களுக்கு அதை =1 என்று வகுத்தால்..)

கடவுள் = 1/அறிவு :) :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஆணா? பெண்ணா? :lol::D :D

பையன் கலியாணம் கட்டுற வயசிலை வந்து நிண்டு கொண்டு தெரிஞ்சு என்ன பண்ணப் போறியள் அண்ணை..? :(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எனக்கொரு சந்தேகம் ரதி அக்கா..? உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் வருகுது..? (எனக்கு நீங்கள் பெண் என்பதில் சந்தேகமே வருவதில்லை... :icon_mrgreen: நேற்றுக் கனவில தேம்ஸ் நதிக்கரையிலை உங்களுக்குப் பக்கத்திலை போன பெட்டையைப் பார்த்தன் ரதி அக்கா..ஆனால் இடையில நெடுக்காலபோவான் தடியோடை வந்து பெண்களை பார்க்காதை எண்டு என்ர கனவைக் கலைசசுப் போட்டார்.. :(:lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன் கலியாணம் கட்டுற வயசிலை வந்து நிண்டு கொண்டு தெரிஞ்சு என்ன பண்ணப் போறியள் அண்ணை..? :(:lol:

அவர் பதில் தராததற்கு ஏனப்பா என் மீது பாய்கிறீர்கள்?

எல்லாம் உங்களுக்காகத்தான் என்றால் நம்பவா போகின்றீர்கள்?

அப்புறம் ஐம்பதிலும் ஆசை வரும் என்பீர்கள்??? :lol::D :D

Link to comment
Share on other sites

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

இன்னும் ரோஸ் பாண் சந்தேகம் தெளிய இல்லையா? :icon_mrgreen:

ஓவனில் வைத்து எடுப்பதெல்லாம் பேக் பண்ணுவது என்று சொல்லுவதில்லை. ஓவனில் மெதுமையாக சமைப்பதை பேக் என்றும் மொறு, மொறு என்று சமைப்பதை ரோஸ்ட் என்றும் சொல்லுவது வழக்கம். (உதாரணம்: Roast chicken, Roast lamb Roast beef roast potatoes என்று தான் சொல்லுவார்கள்) அந்த வகையில் ரோஸ்ட் பாணின் மேல்பகுதி மொறு, மொறு என்று இருப்பதால் அந்தப் பெயர் வந்து இருக்கலாம்.

(கிருபன் அண்ணா, எந்தக் கடையில பஞ்சு போன்று மெதுமையான ரோஸ்ட் பாண் விக்கிறாங்கள்? :o ஹோவிஸ்ஸைத் தந்தது ரோஸ்ட் பாண் என்று உங்களை ஏமாத்துறாங்கள் அண்ண... ^_^:D)

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

சில ஆண்களுக்குத் தமது அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் தன்மை குறைவு. பொறுமையாக இருந்து சந்தர்ப்பம் பார்த்து செயலில் வெளிப்படுத்துவார்கள் அதுவரைப் பொறுமை இல்லாத பெண்கள் தான் ஆண்கள் சுயநலமாக இருப்பது போல நினைக்கிறார்கள். :rolleyes: (அதையும் தாண்டி ஒருவன் சுயநலமாக இருக்கிறான் என்றால், பெண்கள் என்ன சொல்லுவீங்கள்... 'உங்கட அம்மா உங்களைச் சுயநலமா வளர்த்திருக்கிறா' என்று தானே? இப் நீங்களே சொல்லுங்கோ, அது யாரோட சுயநலம்? :D)

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாது, ஆனால் மனிதனை மீறிய ஒரு சக்தி உள்ளது. (அந்த சக்தி கடவுளாகக் கூட இருக்கலாம்... :icon_idea:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்

அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால் :lol:

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல :icon_idea:

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை :icon_idea:

ரதி,

உங்களிடம் சிறு சந்தேகம்.

உங்களுக்கு வேற வேலையே இல்லையா ? :lol:

:lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது? எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்:

இரண்டும் துய தமிழ் சொற்கள் அல்ல, குட்டி எழுதியதே சரி

2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?

எதில சுயநலம், சுயநலத்திற்கு உங்கள் வரவிலக்கணம் என்ன

3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இருந்திருந்தால் இத்தனை அழிவுகளும் வந்திருக்குமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் பெண்கள் சுயநலமாய் இருந்தால் ஆண்களும் சுயநலமாக இருக்க வேண்டுமா?...எதிலும் தனித் தன்மையுடன் இருக்க மாட்டீங்களா :rolleyes: எல்லாவத்தையும் பெண்களிடம் இருந்து கொப்பி பண்ணுவதே வேலையாய் போச்சுது...

இப்படியான விடயங்களில் கொப்பியடிப்பதே பெருமையான விடயம்தான்! :icon_mrgreen:

கடவுள் இருக்கிறார் என எதை வைத்து சொல்கிறீர்கள் கிருபன்?...

எங்கே கடவுள் இருக்கின்றார் என்று சொன்னேன். உங்கள் கேள்வியையும் எனது பதிலையும் திரும்பவும் படித்துப் பாருங்கள்! :icon_idea:

கிருபன் அண்ணா, எந்தக் கடையில பஞ்சு போன்று மெதுமையான ரோஸ்ட் பாண் விக்கிறாங்கள்? :o ஹோவிஸ்ஸைத் தந்தது ரோஸ்ட் பாண் என்று உங்களை ஏமாத்துறாங்கள் அண்ண... ^_^:D

சின்ன வயதில் பேக்கரியில் இருந்து சுடச் சுட வந்த ரோஸ் பாணைச் சாப்பிட்ட நினைவு. கருவல் (மேல் பகுதி) சாப்பிடுவதில்லை. எப்பவும் பஞ்சு போல இருக்கும் உள்ப் பாணைத்தான் அதன் சூட்டோடு பிய்த்துத் தின்பதால் மென்மை என்று நினைத்தேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோஸ் பாணுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது என தப்பிலி,அலைமகள்,குட்டி எழுதிய பதில்கள் நன்றாக இருந்தது.என் சந்தேகம் தீர்ந்தது...இர‌ண்டாம்,மூன்றாம் கேள்விக்கான பதில்களில் திருப்தியில்லை ஆனாலும் அவர‌வர் தங்களுக்கு தெரிந்த பதில்களை தந்து உள்ளனர்...வேலை மெணக்கு என் திரியின் பதில் அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...இனி மேலும் எனக்கு ஏற்படும் குட்டி,குட்டி சந்தேகங்களை தீர்த்து வைக்கும் படி அன்பாக கேட்டுக் கொள்கிறேன்.

இப்ப எனக்கொரு சந்தேகம் ரதி அக்கா..? உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் வருகுது..? (எனக்கு நீங்கள் பெண் என்பதில் சந்தேகமே வருவதில்லை... :icon_mrgreen: நேற்றுக் கனவில தேம்ஸ் நதிக்கரையிலை உங்களுக்குப் பக்கத்திலை போன பெட்டையைப் பார்த்தன் ரதி அக்கா..ஆனால் இடையில நெடுக்காலபோவான் தடியோடை வந்து பெண்களை பார்க்காதை எண்டு என்ர கனவைக் கலைசசுப் போட்டார்.. :(:lol: )

இதுக்கு பேசாமல் நீங்கள் அவரையே கனவில் கண்டிருக்கலாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் சந்தேகம் தீரலையே???

இப்படி நடுவில் தவிக்கவிட்டு போவது நியாயமா ரதி??? :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:lol::D

கறுப்பிக்கு வர‌,வர‌ லொல்லு கூடிப் போச்சு ^_^

என் சந்தேகம் தீரலையே???

இப்படி நடுவில் தவிக்கவிட்டு போவது நியாயமா ரதி??? :lol::D :D

வி.அண்ணா நீங்கள் லண்ட‌ன் வந்தாலோ அல்லது நான் பிரான்ஸ் வந்தாலோ கட்டாயம் சந்திப்பம் [நீங்கள் விருப்ப பட்டால்] அதன் பிற்கு தான் உண்மையான உங்கள் சந்தேகம் தீரும்.

எங்கே கடவுள் இருக்கின்றார் என்று சொன்னேன். உங்கள் கேள்வியையும் எனது பதிலையும் திரும்பவும் படித்துப் பாருங்கள்! :icon_idea:

கட‌வுளைப் பற்றி உங்கள் வினாவுக்கான பதில் எனக்கு உப்பத் தான் விளங்கிட்டுது :)

Link to comment
Share on other sites

இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...

ஏன் சில ஆண்கள் பெண் பெயர்களில் யாழில் எழுதுகின்றார்கள்???

அப அலை அக்கா ஆணா pouting.gif

எனகும் குட்டி சன்தேகம்பா

குட்டி என்டா பெடியனா பெடையா

Link to comment
Share on other sites

குட்டி கூறியது போல், றோஸ்ட் செய்த பாண் பேச்சு வழக்கில் திரிந்து ரோஸ் பாணாக மாறிவிட்டது.

ஆண்களைவிடப் பெண்களே அதிக சுயநலவாதிகள். அவர்களில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோதே இந்த சுயநலம் உருவாக்கம் பெறுகிறது. அந்தவகையில் பார்க்கும்போது, பெண்களே அதிக சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்.

கடவுள் என்ற ஒன்று இல்லை. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியே கடவுள். இந்த சக்தியை மனிதன் உரிய முறையில் பயன்படுத்தினாலே வளமாக வாழ முடியும். இந்த சக்தியைத் தவறான முறையில் பயன்படுத்தும்போதே, மனிதன் சொந்த மற்றும் புறச் சிக்கல்களை உருவாக்குகிறான். எம்மைச் சுற்றியுள்ள சக்தியையே கடவுள் என சித்தரிக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.