Jump to content

காதலடி - நீயெனக்கு!


Recommended Posts

பூவனமே பொன்மலரே

மறந்தாயா என்னை?

புருவமதில் என் உருவமதில்

இருக்கின்றாய் பெண்ணே!

சிறு கவியாய் பெரும் கனவாய்

சிதைக்கின்றாய் என்னை -போ

வழி விடவா வரம் தரவா?

வாடுதடி நெஞ்சு!

காதலனாய் உன்

கால் கொலுசாய்

இருந்தேனே ஒரு பொழுது

காலமெலாம் போனதடி

என் கண்களை இனி

சுட்டு தள்ளு!

இருப்பேன் டா உனக்காய்

இருப்பேன் டா என்றாயப்பொழுது

இருக்கேன்மா இருக்கேன்மா

நீதான் எங்கே இப்பொழுது?

சிறுமலரே -பனிமழையே

செண்பகமே - நான்

பாவமா இல்லையா சொல்லு?

உன் பார்வையதால்

இந்த பாவியெனை- அன்று

ஏன் கொன்றாய் சொல்லு!

கேளடியோ-மயிலழகே என்

வாசலதை மண்மூடி

போனாச்சு -ஏனடியோ

வண்ண கோலம்

இனி அது எதுக்கு சொல்லு! :wink:

Link to comment
Share on other sites

காதலனாய் உன்

கால் கொலுசாய்

இருந்தேனே ஒரு பொழுது

காலமெலாம் போனதடி

என் கண்களை இனி

சுட்டு தள்ளு!

இருப்பேன் டா உனக்காய்

இருப்பேன் டா என்றாயப்பொழுது

இருக்கேன்மா இருக்கேன்மா

நீதான் எங்கே இப்பொழுது?

வர்ணன் காதல் கவிதைகளும் எழுத தொடங்கியாச்சா? காதல் கவிதை என்றாபடியால் என்னமோ வார்த்தைகள் தடுமாறி இருக்கின்றன என்பது எனது தாழ்மையான கருத்து.

வாழ்த்துக்கள். தொடர்ந்து நிஐ கவிதைகளை தாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அழகா இருக்கு..வர்ணன்.

Link to comment
Share on other sites

நன்றி ரமா உங்கள் கருத்துக்கு-

வார்த்தைகள் தடுமாறவில்ல - பாடல் வடிவில் எழுத நினைச்சேன் - அதுதான் வரிகள் அப்பிடி போய்விட்டன -!

முடிந்தவரை இனி- காதல்கவிதை- எழுதுவதை தவிர்க்கிறேன்!

நன்றி! 8)

Link to comment
Share on other sites

நன்றி கல்கி (ஆ :shock: களத்தில் இணைஞ்சு - எட்டு மாதங்களாகுது - இதுவரை 8 கருத்துதானா எழுதி இருக்கிங்க?) :wink:

நன்றி மன்மதன் -! 8)

Link to comment
Share on other sites

வர்ணா..! வாழ்த்துக்கள் அப்பு கவிதை சூப்பர்....

அனேகமா உங்களின் எல்லாக் கவிதையும் படிச்சிட்டன். எல்லாமே நண்றாக இருக்குது.... தொடரட்டும் உங்கள் பொது சேவை... :P :P :P (காதலி பற்றிய புசத்தல் :wink: ) அது....! :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை நல்லா இருக்கு வர்ணன்..!!!

Link to comment
Share on other sites

வர்ணன் அண்ணா அப்ப நீங்களும் காதலில மாட்டுப்பட்டுட்டீங்களா அச்சோ பாவம் (ஜோக் அடிக்க வராதீங்க) :P

கவிதை நல்லாயிருக்கு :P

அப்ப இனி அடிக்கடி உங்களிடமிருந்து இனி கவிதை வரும் போல :wink: :P

Link to comment
Share on other sites

நான்

பாவமா இல்லையா சொல்லு?

உன் பார்வையதால்

இந்த பாவியெனை- அன்று

ஏன் கொன்றாய் சொல்லு!

விழியாலே கொலை செய்தாவா? அழகான வரிகள். நன்றி வர்ணன் அண்ணா. மேலும் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர்ணன் அழகான கவிக்கு நன்றிகள். மேலும் எழுதுக

Link to comment
Share on other sites

வர்ணா..! வாழ்த்துக்கள் அப்பு கவிதை சூப்பர்....

அனேகமா உங்களின் எல்லாக் கவிதையும் படிச்சிட்டன். எல்லாமே நண்றாக இருக்குது.... தொடரட்டும் உங்கள் பொது சேவை... :P :P :P (காதலி பற்றிய புசத்தல் :wink: ) அது....! :(:):(

ஆஹா- ஆரம்பிச்சிட்டார்யா :x

ஏன் தல- காதலியை பத்தி புசத்தாதவர்- யாரும் இருக்காங்களா? :roll:

காதலிக்காதவர் கூட அதை செய்வாங்க - திருமணம் ஆனபின்னால - மனைவியை காதலித்து ! :wink: :wink:

தல -குள்ளயும் ஒரு கவிஞன் உறங்கிகொண்டிருக்கான் !- அதுதான் கவிதை தொடர் பகுதில எல்லாருமே-பாத்தோமே-! 8)

Link to comment
Share on other sites

நன்றி ஜெனனி-

நித்திலா என்னது -அடிக்கடி- இனி கவிதை என்கிட்ட இருந்து வருமா? :shock:

அட சும்மா போங்க -காதல் கவிதை எழுத போய் - அடிக்குமேல அடி- விழுந்துட்டுது :)

இனிமே நோ காதல் கவிதை-!

ஒன்லி............. ஏதாவது தெரிஞ்சதை எழுதிட்டு போகவேண்டியதுதான் ! :P நன்றி_! 8)

நன்றி வெண்ணிலா- இனியவள்-! 8)

Link to comment
Share on other sites

ஹாஹா "காதலனாய் உன்

கால் கொலுசாய்

இருந்தேனே" இந்தக் கொலுசை எந்தக் கவிஞரும் விட்டு வைக்கிறதா இல்லப்போல.

கவிதை நல்லாதானிருக்கு........"காலமெலாம் போனதடி

என் கண்களை இனி

சுட்டு தள்ளு"

இந்த வரிக்கு என்ன அர்த்தம்??

Link to comment
Share on other sites

வர்ணன் கவி நன்றாக இருக்கு... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்,,,, :P

தல -குள்ளயும் ஒரு கவிஞன் உறங்கிகொண்டிருக்கான் !- அதுதான் கவிதை தொடர் பகுதில எல்லாருமே-பாத்தோமே-!

ம்ம் சகோதரம் நல்லா கவிதை எழுதுறார் .... நானும் தொடர் கவிதையில் தான் கண்டன் ..... காதல் கவிதையும் ஒன்று எழுதிருக்கனும் யாழ்ல முதல் பார்த்ததாக ஞாபகம்.... :P :P :P

Link to comment
Share on other sites

ஆஹா- ஆரம்பிச்சிட்டார்யா :x

ஏன் தல- காதலியை பத்தி புசத்தாதவர்- யாரும் இருக்காங்களா? :roll:

காதலிக்காதவர் கூட அதை செய்வாங்க - திருமணம் ஆனபின்னால - மனைவியை காதலித்து ! :wink: :wink:

தல -குள்ளயும் ஒரு கவிஞன் உறங்கிகொண்டிருக்கான் !- அதுதான் கவிதை தொடர் பகுதில எல்லாருமே-பாத்தோமே-! 8)

அப்பிடி எல்லாம் சொல்லப்படாது.... :):(:(

காதல் வசந்தம்

திருமணம் இம்சை......... 8) 8) 8)

Link to comment
Share on other sites

தல அண்ணா அண்ணி இன்னும் யாழ் பாக்க தொடங்கவில்லையா அல்லது திருமணம் பெண்களுக்கு இம்சை என்கிறீர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருப்பேன் டா உனக்காய்

நீதான் எங்கே இப்பொழுது?

வாழ்த்துக்கள் வர்ணன், தங்களுக்கும் காதலோ :roll: :roll: உங்கள் கவித்திறமையுடன் காதலும் வளமாக வழர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சிறுமலரே -பனிமழையே

செண்பகமே - நான்

பாவமா இல்லையா சொல்லு?

உன் பார்வையதால்

இந்த பாவியெனை- அன்று

ஏன் கொன்றாய் சொல்லு!

ம்... கவிதை வரிகள் ரொம்பவே இரங்கி நிற்கின்றன. என்றாலும் நன்றாக இருக்கிறது. ஏன் காதல் கவிதைகளை தொடர்ந்து எழுதலாமே வர்ணன்.

Link to comment
Share on other sites

ஆஹா காதல் மழை பொழியுதா? :wink: வாழ்த்துக்கள் வர்ணன் உங்கள் காதல் நிறைவேற. கவி சூப்பர். தொடர்ந்து எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.