Search the Community

Showing results for tags '10 செகண்ட் கதைகள்'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கணினி வளாகம்
  • வலையில் உலகம்
  • தொழில் நுட்பம்
  • அறிவுத் தடாகம்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • அரசியல் அலசல்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

 • மோகன்'s Blog
 • தூயவன்'s Blog
 • Mathan's Blog
 • seelan's Blog
 • கறுப்பி's Blog
 • lucky007's Blog
 • சந்தோஷ் பக்கங்கள்
 • தூயாவின் வலைப்பூ
 • vijivenki's Blog
 • sindi's Blog
 • சந்தியா's Blog
 • இரசிகை-இரசித்தவை
 • arunan reyjivnal's Blog
 • இலக்கியன்`s
 • PSIVARAJAKSM's Blog
 • Tamil Cine's Blog
 • sujani's Blog
 • Iraivan's Blog
 • Thinava's Blog
 • குட்டியின் கோட்டை
 • வல்வை மைந்தன்
 • vishal's Blog
 • kural's Blog
 • KULAKADDAN's Blog
 • குறும்பன் வாழும் குகை
 • Thamilnitha's Blog
 • அடர் அவை :):):)
 • டுபுக்கு's Blog
 • வானவில்'s Blog
 • NASAMAPOVAN's Blog
 • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
 • vikadakavi's Blog
 • ravinthiran's Blog
 • Tamizhvaanam's Blog
 • hirusy
 • neervai baruki's Blog
 • இனியவள்'s Blog
 • senthu's Blog
 • tamil_gajen's Blog
 • சின்னப்பரின் பக்கம்
 • ADANKA THAMILAN's Blog
 • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
 • harikalan's Blog
 • antony's Blog
 • mugiloli's Blog
 • Kavallur Kanmani's Blog
 • jeganco's Blog
 • Waren's Blog
 • "வா" சகி 's Blog
 • nishanthan's Blog
 • semmari's Blog
 • Akkaraayan's Blog
 • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
 • தீபன்'s Blog
 • தமிழ் இளையோர் அமைப்பு
 • மாயன்'s Blog
 • Thumpalayan's Blog
 • Vani Mohan's Blog
 • mullaiyangan's Blog
 • NAMBY's Blog
 • பரதேசி's Blog
 • thamilkirukkan's Blog
 • Vakthaa.tv
 • colombotamil's Blog
 • மசாலா மசாலா
 • muththuran
 • கிருபா's Blog
 • நந்தவனம்
 • தமிழர் பூங்கா
 • TAMIL NEWS
 • dass
 • puthijavan's Blog
 • AtoZ Blog
 • mullaiiyangan's Blog
 • mullaiman's Blog
 • மல்லிகை வாசம்
 • karu's Blog
 • saromama's Blog
 • tamil92's Blog
 • athirvu
 • melbkamal's Blog
 • nedukkalapoovan's Blog
 • Loshan's Blog
 • ஜீவநதி
 • எல்லாளன்'s Blog
 • kanbro's Blog
 • nillamathy's Blog
 • யாழ்நிலவன்'s Blog
 • Vimalendra's Blog
 • Narathar70's Blog
 • நிரூஜாவின் வலைப்பதிவு
 • cyber's Blog
 • varnesh's Blog
 • yazh's Blog
 • MAHINDA RAJAPAKSA's Blog
 • விசரன்'s Blog
 • tamil paithiyam's Blog
 • TamilForce-1's Blog
 • பருத்தியன்
 • aklmg2008's Blog
 • newmank
 • ilankavi's Blog
 • இனியவன் கனடா's Blog
 • muthamil78
 • ரகசியா சுகி's Blog
 • tamileela tamilan's Blog
 • சுஜி's Blog
 • மசாலா மசாலா
 • Anthony's Blog
 • Gunda's Blog
 • izhaiyon's Blog
 • TamilEelamboy's Blog
 • sathia's Blog
 • லோமன்
 • kobi's Blog
 • kaalaan's Blog
 • sathiri's Blog
 • Voice Blog
 • தமிழ் செய்தி மையம் மும்பை
 • ஜீவா's Blog
 • தீபம்'s Blog
 • Iraivan's Blog
 • பிறேம்'s Blog
 • mullaikathir.blogspot.com
 • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
 • sam.s' Blog
 • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
 • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
 • sam.s' Blog
 • தயா's Blog
 • தயா's Blog
 • ஏராழன்'s Blog
 • Small Point's Blog
 • Rudran's Blog
 • ulagathamilargale.blogpsot.com
 • ramathevan's Blog
 • Alternative's Blog
 • Alternative's Blog
 • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
 • ஜீவா's Blog
 • மொழி's Blog
 • cawthaman's Blog
 • ilankavi's Blog
 • ilankavi's Blog
 • கனடா போக்குவரத்து
 • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
 • nirubhaa's Blog
 • nirubhaa's Blog
 • தமிழரசு's Blog
 • akathy's Blog
 • அறிவிலி's Blog
 • மல்லிகை வாசம்'s Blog
 • வல்வை சகாறா's Blog
 • விவசாயி இணையம்
 • அருள் மொழி இசைவழுதி's Blog

Found 11 results

 1. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் டெக்னாலஜி... டெக்னாலஜி! `கண்டேன் சீதையை...’ என்ற ஹனுமனிடம், `வாட்ஸ்அப்ல பிக்சர் அனுப்பறதுக்கு என்ன?' என அலுத்துக்கொண்டார் ராமர்! - பர்வீன் யூனுஸ் ஆட்டம்... அதிரடி! தனக்காக அமைக்கப்படும் கடுமையான ஃபீல்டிங்கைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக்கொண்டான், அடுத்த பாலில் ரன்அவுட் ஆக பெட்டிங் புக்கிகளிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்த அந்த அதிரடி பேட்ஸ்மேன்! - தினேஷ் சரவணன் திருடன் ``சார்... சார்... அடிக்காதீங்க. செத்துடப்போறான்’’ என பொதுமக்களிடம் இருந்து காப்பாற்றி, கூட்டிப்போய் திருடனிடம் மாமூல் வாங்கினார் போலீஸ்! - பெ.பாண்டியன் ஏட்டு சுரக்காய் ``ஏம்பா... நம்ம மாட்டுக்கொட்டகைக்குப் போட ஆயிரம் கீத்து வேணும்... நீ ஐந்நூறு வாங்கிட்டு வந்திருக்கே?” என்று அப்பா சொன்னதும் தலைகுனிந்தான் சிவில் இன்ஜினீயர் குணா! - தங்க.நாகேந்திரன் பிழைப்பு ``ஸ்கூல், காலேஜ்னு எதுக்கும் போகாம ஊர் சுத்திக்கிட்டு இருந்தான். ஒரு காலேஜ் ஆரம்பிச்சுக் கொடுத்தோம். வசூல் பண்ணிக்கிட்டு ஒழுங்கா இருக்கான்’’ என்றார் அரசியல்வாதி, மகனைப் பற்றி தன் நண்பரிடம்! - கி.ரவிக்குமார் துர்நாற்றம் ``யோவ்... பக்கத்துலயே பொது கட்டணக் கழிப்பிடம் இருக்குல... அங்க போகாம இங்க வந்து அடிக்கிறியே...’’ என ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க, ``சரிதான் போய்யா... அதுக்குள்ள மனுஷன் நுழைவானா?’’ என்றார் வந்தவர்! - சாய்ராம் துணிச்சல்காரன் நான்காவது மாடி தீப்பற்றி எரிந்தது. வேடிக்கை பார்த்த மக்களில் ஒருவன் மட்டும் துணிச்சலாக ஏறி, விதவிதமாகப் படம் எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பினான்! - திருச்சி ப.முத்துக்குமார் பலூன் திருவிழாவில் தொலைந்துபோன சிறுவனின் கையில் பத்திரமாக இருந்தது பலூன்! - விகடபாரதி விழா... வழங்குவோர்... ஊர்த் திருவிழா பார்த்து முடித்ததும், தாத்தாவிடம் கேட்டனர் குழந்தைகள்... ``சூப்பர் தாத்தா... இதை எப்போ மறுபடியும் டி.வி-யில காட்டுவாங்க?’’ - கி.ரவிக்குமார் ருசி ``நியூயார்க்ல இட்லி, சாம்பார்லாம் கிடைக்குதும்மா’’ என்றான், சென்னையில் இருந்தவரை பர்கர் சாப்பிட்ட மகன்! - விகடபாரதி http://www.vikatan.com
 2. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் ரேட்டிங் அம்மா சொன்ன வீட்டு வேலையைச் செய்து முடித்துவிட்டு, `ரேட்டிங்' கேட்டது குழந்தை. - எஸ்.ராமன் ரகசியம் `இதை யார்கிட்டயும் சொல்லிடாதே. ரகசியமா வெச்சுக்கோ' என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினாள் லதா. - கே.சதீஷ் பணம் ``ரெண்டு நாளா ஒரே காய்ச்சல், சளி, இருமல்...'' என்ற முதியவரிடம், ``கார்டா... கேஷா?'' என்றாள் நர்ஸ். - சி.சாமிநாதன் தயவு ``தயவுசெஞ்சு இன்னிக்காவது வாக்கிங் போயேன்'' - ஆளுயரக் கண்ணாடியைப் பார்த்துச் சொன்னான் அவன். - டி.ஏ.சி.பிரகாஷ் ஹீரோயின் கிராமத்துக் கதைக்கு, மும்பையில் அழகான ஹீரோயின் தேடினார் டைரக்டர். - பெ.பாண்டியன் எச்சரிக்கை ``அந்த ஆன்ட்டியோட மியூச்சுவல் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல அம்மாவும் இருக்காங்க. பார்த்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுங்கப்பா'' என்றான் மகன். - கோ.பகவான் உற்சாகம் ``உள்ளாட்சித் தேர்தலை எதிர்பார்த்துட்டிருந்தோம். சட்டசபைத் தேர்தலே வந்துடும்போல'' என உற்சாகமானார் வீட்டில் எட்டு ஓட்டுகள் வைத்திருந்த கதிரேசன். - மணிகண்டன் தனிக் குடித்தனம் ``என் திருமணத்துக்குப் பிறகு தனிக் குடித்தனம் போவார்கள், அப்பாவும் அம்மாவும்'' என்றான் நண்பன். - பிரகாஷ் ஷர்மா செல்ஃபி பொண்ணு ``மாப்பிள்ளை வீட்டுல பொண்ணைப் பார்க்கணுமாம். நல்ல செல்ஃபி ஒண்ணு எடுத்து, வாட்ஸ்அப்ல போடும்மா'' என்றார் அப்பா. - துரைசாமி. புறப்பாடு ``வந்ததும் போகணும்னு அடம்பிடிக்கிறியே'' என்று பாட்டி கேட்டதும், ``சார்ஜர் கொண்டுவரலே பாட்டி!'' என்றான் பேரன். - கோ.பகவான் http://www.vikatan.com
 3. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் குறி ``பேருந்து எப்போ வரும்?'' எனக் கேட்டார், கிராமத்தில் குறி சொல்லும் பூசாரி. - அபிசேக் மியாவ் முன்னேற்றம் ஸ்கூட்டர் ஓட்டத் திணறும் அப்பா, கார் ஓட்டப் பழகினார் செல்போன் கேமில். - கோ.பகவான் சத்துணவு வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டுவந்திருந்தார் சத்துணவு ஆயா. - சி.சாமிநாதன் ஒற்றுமை ``வழிகாட்ட ஒரு தலைவனே இல்லாம, எப்படி உங்களுக்குள்ள போராட்டம் நடத்துற ஒற்றுமை வந்தது?'' என ஆச்சர்யமானார் சுதந்திரப் போராட்டத் தியாகி. - பெ.பாண்டியன் ஏமாற்றம் ``ஏ.டி.எம்-ல ஒரு பேய் சார்'' என இயக்குநர் சொன்னதும், ``ஏமாந்துபோயிருக்குமே!'' என்றார் புரொடியூஸர். - கோ.பகவான் புலம்பல் ``இந்த ஆபீஸ்ல எவனாவது வேலைசெய்வானா சார்..?'' எனப் புலம்பிக்கொண்டே, ஓய்வுபெறும் வரை அதே அலுவலகத்தில் இருந்தார் ராம்கி. - கே.சதீஷ் காலண்டர் ஏழைகள் வீட்டில், வருடாவருடம் தொங்குகிறது அடகுக் கடை காலண்டர். - கட்டுமாவடி கவி கண்மணி தள்ளிச் சென்ற மரணம் சிறையில் தற்கொலைக்கு முயன்ற மரண தண்டனைக் கைதி, காப்பாற்றப்பட்டார். - கோ.பகவான் முதல் வேலை ஆபீஸுக்கு வந்ததும் முதல் வேலையாக வைஃபையை ஆன்செய்து வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜைப் படித்துக்கொண்டிருந்தாள் கார்த்திகா. - கிருஷ்ணகுமார் புலம்பல் ``பேயை காமெடியா காட்டி, என் பொழப்பைக் கெடுத்துட்டாங்களே!'' எனப் புலம்பிக் கொண்டிருந்தார், பேய் ஓட்டும் பூசாரி. - பர்வீன் யூனுஸ் http://www.vikatan.com/
 4. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஸீட்! தன் மகன், அரசுக் கல்லூரியில் இலவச ஸீட் வாங்குவதற்காக, தனியார் பள்ளியில் அதிகப் பணம் கொடுத்து சேர்த்தார் ரமேஷ்! - கண்ணன் பணம் பள்ளிக் கட்டணம் கட்டாததால், மாணவியை வகுப்பறை வாசலில் நிற்கவைத்தாள்... இரண்டு மாதமாக சம்பளம் வாங்காத டீச்சர்! - கட்டுமாவடி கவி கண்மணி தமிழன்டா! சென்னையைவிட்டு அமெரிக்கா சென்ற நண்பன் சந்தோஷமாகச் சொன்னான்... “அங்கே நிறைய தமிழ் ஆளுங்க இருக்காங்கடா!” - சுந்தரம் ராமசாமி திருட்டு! ``பென்சில் திருடினதுக்கு மிஸ் அடிச்சிட்டாங்க’’ எனக் கேவிக்கேவி அழுத மகளிடம், `‘திருடுறது தப்பு... `பென்சில் வேணும்’னு அப்பாகிட்ட கேட்டிருந்தா ஆபீஸில் இருந்து கொண்டுவந்திருப்பேன்ல!” என்றார் அப்பா. - சி.சாமிநாதன் நோ என்ட்ரி! மாடர்ன் டிரெஸ்ஸான ஜீன்ஸ், லெகிங்ஸ் போட்டுக்கொண்டு வந்தவர்களை அனுமதிக்காத கோயிலில், சி.டி-யில் ஓடிக்கொண்டிருந்தது நாகஸ்வர இசை! - அஜித் பழ(ங்)ம் கதை ``தம்பிதானே... விட்டுக்கொடுப்பா” என மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் பழநி மலைக்கோயில் க்யூவில் நின்றிருந்த சேகர்! - ஸ்ரீகேஷ் திருட்டு டிக்கெட் ‘பிளாட்பாரம்’ டிக்கெட் இரண்டு வாங்கிக்கொண்டு ரயில் நிலையத்துக்குள் சென்றான், ‘வித்அவுட்’டில் வரும் தன் நண்பனை அழைக்க! - கி.ரவிக்குமார் அக்கறை கோயில் திருவிழாவில் தன் குழந்தையைத் தவறவிட்டு `காணவில்லை’ என அழுதபடி தேடிக்கொண்டிருந்தவளின் இடது கையில் பத்திரமாக இருந்தது கைபேசி! - துரை.சந்தானம் உதவி வங்கியில் ஃபார்ம் நிரப்பும்போது, வாலன்ட்டியராக பேனா கொடுத்து உதவியவரைத் தேடிப்போய் `நன்றி’ சொன்னேன். “சார், நான் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்...” என்று ஆரம்பித்தார் அவர்! - எஸ்கா விதி ``துப்பாக்கியில் சைலன்ஸர் இருந்தும் எப்படி மாட்டிக்கிட்ட?” என்றான் சக கைதி. ``செத்தவன் கத்திட்டானே!” - சோகமாகச் சொன்னான் கொலைகாரன்! - கெளதம் http://www.vikatan.com
 5. 10 செகண்ட் கதைகள் ஷாக் ட்ரீட்மென்ட் ``சின்னப் பிரச்னைதான், ஸ்கேன் ரிப்போர்ட்ல பயப்படுற மாதிரி ஒண்ணும் இல்லை’’ என்று சொன்ன டாக்டர், ``முப்பதாயிரம் ரூபாய்க்குள்ள முடிஞ்சிடும்’’ என்றார்! - ந.கன்னியக்குமார் கொண்டாட்டம் ``என்ன ஆச்சுன்னு தெரியலை... காலையிலேர்ந்து கரன்ட்டே இல்லை. ஒரு டி.வி புரோகிராம்கூடப் பார்க்க முடியலை. இந்தப் பொங்கல், பொங்கல் மாதிரியே இல்லை’’ - அலுத்துக்கொண்டாள் மாளவிகா! - அஜித் விலை மகனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனதைக் கேட்டு, ``என்னாச்சுப்பா..?’’ எனக் கனிவோடு விசாரித்த அப்பாவிடம் ``மொபைல்ல லேசா ஸ்க்ராட்ச், லேப்டாப்புக்கு ஒண்ணும் ஆகலை. ஹெட்போன்தான் அறுந்துருச்சு’’ என்றான் விக்னேஷ்! - எஸ்கா இது டாப் 10 அல்ல..! தீபாவளிக்கு வெளியான படத்தை ‘தேறாது’ என விமர்சனம் செய்த டி.வி-யில், மூன்று மாதத்துக்குள் ‘புத்தம் புதிய அதிரடி நகைச்சுவை படம்’ என்ற அறிவிப்போடு அதே படம் ஒளிபரப்பானது! - ச.பூபால் சிங் விளக்கவுரை ஆசிரியர்: ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ - இந்தக் குறளுக்கு அர்த்தம் தெரியுமா? மாணவன்: ஓ... ‘வைஃபை’ சார்! - கே.லக்‌ஷ்மணன் வாழப் பழகாதவர்! தன் வாழ்நாளில் லஞ்சமே வாங்காத கந்தசாமியின் உடல், ஆயிரம் ரூபாய் அழுத பின்னர்தான் குடும்பத்துக்குக் கிடைத்தது! - சாய்ராம் நிழல் ``உன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகிட்டே உன் ஃபேஸ்புக் ஐ.டி எல்லாம் சொல்லாதே. உன் ஃப்ரெண்ட்ஸ் யார் யார் எல்லாம் என்னென்ன கமென்ட் அடிச்சாங்கனு செக் பண்ணிட்டு இருப்பாரு.’’ ``சரிம்மா. ஆனா, ஆல்ரெடி அவர் என்னோட ஃபாலோயரா இருந்தா?” என்றாள் மகள்! - சி.பி.செந்தில்குமார் கனவுகளே... ``ஃபாலோ யுவர் ட்ரீம்ஸ்’’ என்றேன். ``அதைத்தான் செய்றேன். கண்டுக்கவே மாட்றா’’ என்றான் நண்பன்! - ஆர்.எல்.பிரியதர்ஷினி கடிதல் `` `ஹோம்வொர்க் செய்யும்போது டி.வி பார்க்கக் கூடாது’னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?’’ எனக் கடிந்துகொண்டாள் திவ்யா, தன் அம்மாவை! - ந.கன்னியக்குமார் ஸ்கூப் நியூஸ் மூன்று பேர் காணாமல்போன வழக்கில் தலைவரை விசாரிக்க வந்த அதிகாரிகளின் வாகனம், அவரது பண்ணை வீட்டில் மூன்று இடங்களில் ஸ்பீடு பிரேக்கர்களை ஏறிக் கடந்தது! - கி.ரவிக்குமார் http://www.vikatan.com/
 6. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் விஷ மருந்து டயாபடீஸுக்கு மாத்திரைகள் தந்துவிட்டு, மீதம் ஒரு ரூபாய் சில்லறை இல்லாததால் அதற்குப் பதிலாக அவனிடம் மருந்துக்கடைக்காரர் சாக்லேட் ஒன்றைத் தந்தார்! - தக்கலை லீலாஇராம். பிரார்த்தனை `சிவப்பு விளக்கு அணையக் கூடாது’ என வேண்டிக்கொண்டான், சிக்னலில் பொம்மை விற்கும் சிறுவன்! - வினோத் குமார். கால்ஷீட் “ஹீரோயின் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிட்டீங்கன்னா, அட்வான்ஸ் குடுத்திரலாம். நாளைக்கே பிரசாரத்துக்கு அழைச்சிட்டு வந்துடறேன்” என்றார் தலைவரிடம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்! - பெ.பாண்டியன் செல்ஃபி நேரம் மயானத்தில் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. முகத்தை மூட கடைசி வரட்டி காத்திருந்தபோது, ‘`முகத்தை மூடப்போறேன்... செல்ஃபி எடுக்கிறவங்க எடுத்துக்கலாம்’’ எனக் குரல் வந்தது! - விசயன் செம கலாய்... ஜாலியாகக் கலாய்த்ததில் கோபப்பட்டு வெளியேறினார் வேணு மாமா. ‘Venu Uncle Left’ எனக் காட்டியது வாட்ஸ்அப் குரூப்! - ரஹீம் கஸாலி தெளிவு “ `வேலைக்குப் போற மருமகள்தான் வேணும்’னு சொல்றியே ஏன்?” “அப்போதான் குழந்தைகளைப் பார்த்துக்க, நம்மை வீட்டோட வெச்சுப்பாங்க!” -கி.ரவிக்குமார் தீர்மானம் `காப்புக் கட்டிய பிறகு, வெளியூர் போகக் கூடாது!’ என்ற ஊரார் உத்தரவுக்குப் பணிந்து, ‘கோயிலிலேயே திருடுவது’ எனத் தீர்மானித்தான் திருடன்! -கி.ரவிக்குமார் வாழ்க்கை முரண் ``மின்சாரம் கிடையாது; இணையம் பாதிப்பு. மொபைல் சிக்னல் இல்லாமல், வீட்டுக்குள்ளேயே கிடந்து, குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்த காலத்தைத்தான் `இயல்பு வாழ்க்கை பாதித்தது’ என்கிறார்கள்’’ எனப் புலம்பினார் ராமசாமி தாத்தா! - சிவலிங்கராஜன்.எஸ் கோரிக்கை கடைசிக் காலத்தை முதியோர் இல்லத்தில் கழித்த வசந்தி பாட்டி சொன்னார், “அநாதை இல்லத்தையும், முதியோர் இல்லத்தையும் ஒரே இடத்தில் வைக்கலாம். ரெண்டு பேருக்கும் அன்பு கிடைக்கும்!” - ரம்யா தேவநாதன் காணவில்லை ‘‘டாட்... இங்க இருந்த ரிவர் எங்கே?” - பாலத்தின் மேல் காரில் சென்றுகொண்டிருந்த யுவன், அப்பாவிடம் கேட்டான்! - விகடபாரதி http://www.vikatan.com/anandavikatan
 7. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் ஹோம்வொர்க் ‘‘டேய்... ஹோம்வொர்க்கை முடிச்சிட்டியா?’’ என்று மகனிடம் குரல்கொடுத்த அதே நேரத்தில், ‘ரிப்போர்ட் ரெடியா?’ என பாஸிடம் இருந்து இமெயில் வந்தது `வொர்க் ஃப்ரம் ஹோம்' ரகுவுக்கு! - சாய்ராம் கஷ்டம் இன்ஜினீயரிங் காலேஜ் ஓனர் வருத்தத்துடன் சொன்னார், “நான் கான்வென்ட் ஸ்கூல் நடத்தவேண்டியது தம்பி... தெரியாத்தனமா இன்ஜினீயரிங் காலேஜ் ஓப்பன் பண்ணிட்டேன். அதான் கஷ்டப்படுறேன்.” - வைத்தீஸ்வரன் பாலகிருஷ்ணன் லைக் “ஃபேமிலியுடன் ஒரு வாரம் ஃபாரின் டூர் போறேன், feeling happy” என்ற ராஜேஷின் ஸ்டேட்டஸுக்கு, தன் ஃபேக் ஐ.டி-யில் இருந்து லைக் போட்டான் ஏரியா திருடன்! - எஸ்கா குழந்தை ஆண்டுவிழா மேடையில் தவறவிட்ட நாடக வசனத்தை, வீட்டுக்கு வந்து சரியாகச் சொன்னது குழந்தை! - பெ.பாண்டியன் மந்திரி பூதம் விளக்கைத் தேய்த்ததும் வெளிவந்த பூதம், “என்ன வேண்டும் எஜமானரே... தங்கமா, பணமா?” என்று கேட்க, “அதெல்லாம் நானே சம்பாதிச்சுட்டேன். மாட்டிக்காம மட்டும் பார்த்துக்கணும்” என்றார் மந்திரி! - அஜித் நவீன பாரி புதிதாக வாங்கிய காரை பார்க் செய்வதற்காக வீட்டுவாசலில் இருந்த அரசமரத்தை வெட்ட ஆள் அனுப்பினான், தன் தாத்தா தனக்குப் பெயர்வைத்த காரணம் தெரியாத பாரி! - சாய்ராம் வாழ்த்துக் கணக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியே புத்தாண்டு வாழ்த்து அனுப்பிக்கொண்டு இருந்தார் முருகர். விநாயகரோ, தன் புரொஃபைல் பிக்சரையும் ஸ்டேட்டஸையும் புத்தாண்டு வாழ்த்து என மாற்றினார்! - து.விஜயகுமார் பாஸ்வேர்டு சீக்ரெட் “காலையில இருந்து நீங்க சொல்றதை எல்லாம் பையன் கேட்கிறானே... என்னங்க செஞ்சீங்க?” என்ற மனைவியிடம், “வைஃபை பாஸ்வேர்டை மாத்திட்டேன்” என்றார் குருபாதம்! - எஸ்கா காலம் அரைக்கால் பேன்ட், ஸ்பைக் முடி, கையில் காப்புமாக வந்த தம்பியைத் திட்டிக்கொண்டிருந்த அப்பா, பூபோட்ட சட்டையும், பெல்ஸ் பேன்ட்டும், முன் நெற்றியில் சுருண்டு விழுந்த முடியுமாகச் சிரித்துகொண்டிருக்கிறார் இளவயதுப் புகைப்படத்தில்! - சங்கர் அப்பா அவன் அந்த கம்பெனியின் மேனேஜர். தன் அப்பாவை ஒருநாள் தன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றான். தனக்குக் கீழே பணிபுரியும் ஊழியர்களை அறிமுகப்படுத்திவிட்டுப் போனதும் அவர்களிடம் கேட்டார் அப்பா... ``என் பையன் ஒழுங்கா வேலைபார்க்கிறானா?’’ - எம்.ஜி.ரவிக்குமார் http://www.vikatan.com
 8. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் 18 வயது ‘‘பிறந்த நாள் அதுவுமா ஏன்டா சோகமா இருக்க?” என்ற நண்பனிடம், ‘‘எனக்கு 18 வயசு ஆகிருச்சுடா... இனிமே போலீஸ், கோர்ட் எல்லாம் பார்த்து, ரொம்ப பத்திரமா இருக்கணும்டா” என்றான் முருகன்! - உதயகுமார் ஆசுவாசம் தேர்வு முடிந்ததும் துள்ளிக்குதித்து விளையாடியது, பாடம் சொல்லிக்கொடுத்த அம்மாவின் மனம்! - கி.ரவிக்குமார் இது சத்தியம் கோர்ட்டில் குற்றவாளிக் கூண்டில் நிற்பவரிடம் பகவத் கீதையைக் காட்டி, `‘இதன் மீது ஆணையாக...’’ என சத்தியம் செய்யச் சொன்னார்கள். ‘`நான் இதைப் படித்ததே இல்லையே, பரவாயில்லையா?’’ எனக் கேட்டார் கூண்டில் நிற்பவர்! - எம்.ஆர். மூர்த்தி விளம்பரம் ‘வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு, சிறப்புத் திரைப்படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ - வழங்குவோர் உங்கள் Maggi’! - சந்தியா கங்காதரன். போணி கூட்ட மேடையில் பாராட்டிவிட்டு எல்லோரும் எழுந்து போக, ஒன்றுகூட விற்கவில்லை, முதல் கவிதைப் புத்தகம்! - பெ.பாண்டியன் அழகிய விஷம் ஆர்கானிக் முறையில் விளைந்த பொருட்களை விற்க, அழகாக அடுக்கிவைத்திருந்தார்கள் பாலித்தீன் பைகளில் பேக்செய்து! - ஸ்டீல் கண்ணன் `நான்’ யார்? “நான் இருக்கும் வரை உன்னால் உலகாள முடியாது!” என்ற முனிவரை சிறையில் இட்ட மன்னன், ‘நான்’ ஐ புரிந்துகொண்டு அவர் காலில் விழுந்தான்! -கி.ரவிக்குமார் பார்ட்டி... பயம்! “சத்தம் போடாதீங்கடா... ஹவுஸ் ஓனர் வந்தா அவ்ளோதான்!” - பார்ட்டி ஆரம்பித்ததில் இருந்து பத்து தடவை புலம்பியிருப்பான் குமார். வந்த ஹவுஸ் ஓனர், ஒரு ஃபுல்லைத் தூக்கிக்கொண்டு போனார்! - எஸ்கா தீர்ப்பு `எந்த மாதிரி தீர்ப்பு வருமோ?’ நினைத்தபோதே நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது... வேண்டாத தெய்வம் இல்லை இருவரும். ஜட்ஜ் தீர்ப்பை வழங்கினார், “இன்னிக்கு நோ எலிமினேஷன்!” - புதுவண்டி ரவீந்திரன் கண்டனம் இணையத்தில் பரவிவரும் ஆபாசப் பாடலைத் தடைசெய்யக் கோரிச் சென்ற மாபெரும் கண்டன ஊர்வலத்தை, மெதுவாக ஊர்ந்து கடந்தன ஆற்றுமணல் அள்ளிய லாரிகள்! - இன்பா http://www.vikatan.com/anandavikatan
 9. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேசாத பேச்சு! ``வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு... வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’ - மணப்பெண்ணின் செல்போனை வாங்கிவைத்தார் தாத்தா! - கி.ரவிக்குமார் ஞானம் கணவன் வாங்கிவந்த காய்கறிகளைப் பார்த்த மனைவி, “பரவாயில்லையே... நீங்களும் காய்கறி வாங்கக் கத்துக்கிட்டீங்களே! எல்லா காய்கறியிலயும் பூச்சி அரிச்சிருக்கு. கெமிக்கல் பூச்சிக்கொல்லி தெளிக்காத நல்ல காய்கறிதான்” – மனம்விட்டுப் பாராட்டினாள்! - கீர்த்தி நடிப்பு `ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்...’ - செல்போன் வீடியோவில் கத்திக்கொண்டிருந்த மகளைப் பார்த்து விக்கித்து நின்றவரின் பக்கத்தில் வந்தவள் ``டப்ஸ்மாஷ் சூப்பரா பண்ணியிருக்கேன் இல்லப்பா!” என்றாள்! - எஸ்.ரமணி சின்ன மீன்... பெரிய மீன்! வீடு கட்ட வாசலில் கொட்டிவைத்திருந்த ஜல்லி, மணல் குவியலைப் பார்த்து சத்தம்போட்ட கவுன்சிலருக்கு 5,000 ரூபாய் தந்து தள்ளிக்கொண்டு போனான்... 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு அவனை கவுன்சிலராக்கிய அப்பாவி ! - ஸ்ரீ ரங்கம் ஏ.எஸ்.முரளி சுதந்திரம்?! சுதந்திர தின விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர் சிறைக்குள் இருந்த கைதிகள்! - சொக்கம்பட்டி தேவதாசன் அனுபவம்... அறிவு! “நல்லா படிக்கிறவங்ககூடச் சேர்ந்தாதான் படிப்பு வரும். இவங்ககூட ஏன்டா சேர்ற?” “அப்பதாம்ப்பா, அவங்க நல்லா படிப்பாங்க!” - கி.ரவிக்குமார் ஒன்று எங்கள் சாதியே... சாதிக் கலவரத்தால் ஊரே அடித்துக்கொண்டு ரத்த‌க்களமான பிறகு, ஒற்றுமையாக விலங்கு மாட்டிக்கொண்டு ஒரே வண்டியில் ஏறினர் கலவரத்துக்குக் காரணமானவர்கள்! - கா.ரமேஷ் ஆடுகளம் 10 வயதில் கோல்ஃப், கிரிக்கெட், டென்னிஸ் என எல்லாமே விளையாடுகிறான் பையன்... வீடியோ கேம்ஸில்! - பெ.பாண்டியன் சந்தேகம் ``உன் ஆபீஸுக்கு போன் பண்ணினேன். நீ வரலைனு சொன்னாங்க. எங்கே போயிருந்த?” - சந்தேகமாகக் கேட்டவனிடம், காட்டமாகச் சொன்னாள்... “உங்க ஆபீஸுக்கு!” - கி.ரவிக்குமார் பாடம்! நூறு முறை படித்தபோதும் புரியாத கூட்டு வட்டியும், தொடர் வட்டியும் புரியத் தொடங்கியது... வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும்போது! - நவநீ குரு http://www.vikatan.com
 10. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பேசாத பேச்சு! ``வந்திருப்பவர்களிடம் முதலில் பேசு... வராதவர்களிடம் அப்புறம் பேசலாம்’’ - மணப்பெண்ணின் செல்போனை வாங்கிவைத்தார் தாத்தா! - கி.ரவிக்குமார் ஞானம் கணவன் வாங்கிவந்த காய்கறிகளைப் பார்த்த மனைவி, “பரவாயில்லையே... நீங்களும் காய்கறி வாங்கக் கத்துக்கிட்டீங்களே! எல்லா காய்கறியிலயும் பூச்சி அரிச்சிருக்கு. கெமிக்கல் பூச்சிக்கொல்லி தெளிக்காத நல்ல காய்கறிதான்” – மனம்விட்டுப் பாராட்டினாள்! - கீர்த்தி நடிப்பு `ஐ லவ் திஸ் லவ்வபிள் இடியயயட்...’ - செல்போன் வீடியோவில் கத்திக்கொண்டிருந்த மகளைப் பார்த்து விக்கித்து நின்றவரின் பக்கத்தில் வந்தவள் ``டப்ஸ்மாஷ் சூப்பரா பண்ணியிருக்கேன் இல்லப்பா!” என்றாள்! - எஸ்.ரமணி சின்ன மீன்... பெரிய மீன்! வீடு கட்ட வாசலில் கொட்டிவைத்திருந்த ஜல்லி, மணல் குவியலைப் பார்த்து சத்தம்போட்ட கவுன்சிலருக்கு 5,000 ரூபாய் தந்து தள்ளிக்கொண்டு போனான்... 1,000 ரூபாய் வாங்கிக்கொண்டு அவனை கவுன்சிலராக்கிய அப்பாவி ! - ஸ்ரீ ரங்கம் ஏ.எஸ்.முரளி சுதந்திரம்?! சுதந்திர தின விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர் சிறைக்குள் இருந்த கைதிகள்! - சொக்கம்பட்டி தேவதாசன் அனுபவம்... அறிவு! “நல்லா படிக்கிறவங்ககூடச் சேர்ந்தாதான் படிப்பு வரும். இவங்ககூட ஏன்டா சேர்ற?” “அப்பதாம்ப்பா, அவங்க நல்லா படிப்பாங்க!” - கி.ரவிக்குமார் ஒன்று எங்கள் சாதியே... சாதிக் கலவரத்தால் ஊரே அடித்துக்கொண்டு ரத்த‌க்களமான பிறகு, ஒற்றுமையாக விலங்கு மாட்டிக்கொண்டு ஒரே வண்டியில் ஏறினர் கலவரத்துக்குக் காரணமானவர்கள்! - கா.ரமேஷ் ஆடுகளம் 10 வயதில் கோல்ஃப், கிரிக்கெட், டென்னிஸ் என எல்லாமே விளையாடுகிறான் பையன்... வீடியோ கேம்ஸில்! - பெ.பாண்டியன் சந்தேகம் ``உன் ஆபீஸுக்கு போன் பண்ணினேன். நீ வரலைனு சொன்னாங்க. எங்கே போயிருந்த?” - சந்தேகமாகக் கேட்டவனிடம், காட்டமாகச் சொன்னாள்... “உங்க ஆபீஸுக்கு!” - கி.ரவிக்குமார் பாடம்! நூறு முறை படித்தபோதும் புரியாத கூட்டு வட்டியும், தொடர் வட்டியும் புரியத் தொடங்கியது... வாங்கிய கடனுக்கு வட்டி கட்டும்போது! - நவநீ குரு http://www.vikatan.com
 11. 10 செகண்ட் கதைகள் ஓவியம்: ஸ்யாம் அழைப்பு “ஒரு நாளைக்காவது வீட்டுக்கு வந்துட்டுப்போங்க” என மகன்களை அழைத்தார் அப்பா. - பெ.பாண்டியன் நவீன தலைமுறை ஸ்மார்ட் போன்களுக்குக் கீழே பிரிக்கப்படாத ஒரு வாரத்து நியூஸ் பேப்பர். அப்பா ஊருக்குப் போயிருக்கிறார். - நந்த குமார் வளர்ப்பு குழந்தை அதட்டி, கண்டித்து வளர்த்தது பொம்மையை! - பர்வீன் யூனுஸ் அட்டெண்ட் வீட்டிலும், ``இதை யாராவது அட்டெண்ட் பண்ணுங்களேன்'' எனக் கத்திக்கொண்டே இருந்தாள் பிரசவ வார்டு நர்ஸ் கோகிலா. - கே.சதீஷ் சண்டை `வீட்டுல நடக்கிற சண்டையை எல்லாம் ஃபேஸ்புக்ல போடுறா' என, மனைவியைப் பற்றி நண்பர்களிடம் ட்விட்டரில் ஆதங்கப்பட்டான் ஆதவ். - பெ.பாண்டியன் மீட்டிங் `இன்று எந்த ஏ.டி.எம்-மில் சந்திக்கலாம்?' எனக் கேட்டு, திவாகருக்கு வாட்ஸ்அப் அனுப்பினாள் ஷிவானி. - கி.ரவிக்குமார் பார்ட்டி ``30 வயசுக்கு மேல, யாராவது பிறந்த நாள் கொண்டாடுவாங்களா?'' என மனைவியைப் பார்த்துக் கேட்டான் அலுவலகத்தில் பார்ட்டி கொண்டாடியவன். - கே.சதீஷ் தேடல் தங்கை கல்யாணத்தில் அண்ணனுக்கு பெண் பார்த்துவிட்டாள் அம்மா. - கட்டுமாவடி கவி கண்மணி சத்துணவு “சத்துள்ள ஆகாரமா சாப்பிடுங்க” என்றார் டாக்டர், சத்துணவு ஆயாவிடம். - சி.சாமிநாதன் பாடம் “புதிதாக ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிய முருகனுக்கு, அதை உபயோகிப்பது எப்படி எனச் சொல்லிக்கொடுத்தான் எட்டு வயது மகன் தீபக். http://www.vikatan.com/