Search the Community

Showing results for tags 'முள்ளிவாய்க்கால்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 7 results

  1. கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன? தவறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்! அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான்! தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன? நண்பர்களே, உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்! வெறுமே நியாயப்படுத்துவதாலேயே கலைஞர் மீதான அந்தக் குற்றச்சாட்டை வரலாற்றுப் பக்கங்களிலிருந்து அப்புறப்படுத்தி விட முடியும் என நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? முதலில் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்! இனப்படுகொலை நடந்து எண்பது ஆண்டுகள் ஒன்றும் ஆகி விடவில்லை; வெறும் ஒன்பது ஆண்டுகள்தாம் ஆகின்றன. அந்த நேரத்தில் கருணாநிதி என்னென்ன செய்தார், என்னவெல்லாம் பேசினார் என்பவற்றையெல்லாம் ஊடகங்கள் வழியே பார்த்தவர்கள், கேட்டவர்கள் அத்தனை பேரும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம். இனப்படுகொலையை நிறுத்தக் கோரிப் போராடியதற்காக உங்கள் கூட்டணிக் கட்சியினரான காங்கிரசுக் குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்ட இளைஞர்கள் இன்னும் இங்கேதான் இருக்கிறார்கள்!... அதே கோரிக்கைக்காகத் தங்கள் உடம்பையே தீக்கு இரையாக்கிச் செத்துச் சாம்பலான முத்துக்குமார் முதலான ஈகையர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினர் இன்றும் இதே மண்ணில்தான் வாழ்கிறார்கள்!... ஈழ துரோகத்தால் உடைந்து போன தன் தமிழினத்தலைவன் அரியணைக்குப் பசை தடவுவதற்காகக் கருணாநிதி நடத்திய செம்மொழி மாநாட்டை, புறக்கணித்த தமிழ்ப் பெரும் அறிஞர் தொ.பரமசிவன் தற்பொழுதும் நம்மிடையேதான் இருக்கிறார்!... செம்மொழி மாநாட்டின்பொழுது அந்த ஊரிலேயே இருக்க ஒவ்வாமல் தங்களைத் தாங்களே நாடு கடத்திக் கொண்டு தொ.ப., வீட்டுத் தாழ்வாரத்துக்குப் படை எடுத்த எழுத்தாளர் பாமரன் அவர்களும் அவர்தம் மானமுள்ள நண்பர்களும் இன்றளவும் நமக்கிடையில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்!... இவர்களைப் போலெல்லாம் ஏதேனும் ஒரு வகையில் எதிர்ப்பைப் பதிவு செய்ய இயலாமல், கருணாநிதி செய்த துரோகத்தையும் அதனால் வழிந்தோடிய குருதியையும் கண்டு இரவெல்லாம் தூங்காமல் அழ மட்டுமே முடிந்த என்னைப் போன்ற கையாலாகாதவர்களும் இன்று வரையில் சாகாமல்தான் இருக்கிறோம்!... இத்தனை பேரையும் வைத்துக் கொண்டே “கலைஞர் ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யவில்லை. அஃது அவர் கைமீறி நடந்து விட்டது” என நீங்கள் சொல்வது அருவெறுப்பான பச்சைப் பொய்!!! இனப்படுகொலையை நிறுத்த மத்திய அரசுக்கு அழுத்தம் தராததோடு மட்டும் கருணாநிதி நிறுத்திக் கொண்டிருந்தால் கூட உங்களுடைய இந்தச் சொத்தை வாதத்தை ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மக்கள் தரப்பிலிருந்தும் அப்படி ஓர் அழுத்தம் ஏற்படாமல் தடுத்தவர் அவர். இனப்படுகொலை நிறுத்தம் கோரிப் போராடிய மாணவர்கள், அன்றாடம் கல்லூரியில்தான் ஒன்று கூடிப் போராட்டங்களைத் திட்டமிட்டார்கள் என்பதால், கல்லூரிகள் அனைத்துக்கும் கால வரையின்றிப் பூட்டுப் போட்டு, எரிமலையாய் வெடிக்க இருந்த மாபெரும் மாணவர் போராட்டத்தைப் பொறி விட்டபொழுதே பொசுக்கி அணைத்தார். இன அழிப்பை நிறுத்த வேண்டி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மாநிலம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தபொழுது உச்சநீதிமன்றத்தின் பெயரைப் பயன்படுத்தி அதற்குத் தடை போட முயன்றார் (பின்னர் உச்சநீதிமன்றமே, “மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தடுக்க முடியாது; இந்த வேலைநிறுத்தத்துக்குத் தடை இட முடியாது” என்று அவர் தலையில் குட்டுவது போல் தீர்ப்பளித்தது). ஈகி முத்துக்குமாருக்கு அடுத்துப் பள்ளப்பட்டி ரவி தீக்குளித்து உயிர் துறந்தபொழுது அவர் குடும்பத் தகராற்றால் தற்கொலை செய்ததாகக் காவல்துறையை வைத்துப் பொய்யறிக்கை வெளியிடச் செய்தார் (பின்னர் ஈகையர் ரவியின் இறுதி வாக்குமூலம் வெளியாகி அவர் முகத்தில் சாணியடித்தது). எவ்வளவோ முயன்றும் தன் கைமீறி ஆங்காங்கே சில போராட்டங்கள் இப்படி நடந்து விடுவதைக் கண்டு பொறுக்க மாட்டாமல், “ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் கடல் வழியாகப் போய்ப் போராட வேண்டியதுதானே! நான் கரையில் இருந்து கண்டு களிப்பேன்” என்று திரைப்பட வில்லன் போல் கொக்கரித்தார். கட்சி வேறுபாடு இன்றி அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் பகடிச் சித்திரக்காரர் பாலா (Cartoonist Bala) அவர்கள் ஈழப் பிரச்சினையில் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு பற்றி வரைந்த கருத்துப் படம் இவ்வாறு, நிகழ்ந்த கொடுமையைத் தானும் தடுக்காமல், தடுக்கப் போனவர்களையும் இழுத்துப் கட்டிப் போட்டு, மீறிப் போனவர்களையும் இழிவுபடுத்தி எள்ளி நகையாடிய கருணாநிதியைப் பற்றித்தான் நீங்கள் சொல்கிறீர்கள், அந்தக் கொடுமை அவர் கைமீறி நடந்து விட்டது என்று. இதைச் சொல்ல உங்களுக்குக் கூசாமல் இருக்கலாம்; கேட்க எங்களுக்குக் குமட்டுகிறது! உச்சக்கட்டமாக, கடந்த வாரம் (12.08.2018) தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சுப.வீ., சொன்னார், பார்வதியம்மாள் அவர்களைத் திருப்பி அனுப்பியதே கலைஞருக்குத் தெரியாமல் நடந்து போனதாம்! உளவுத்துறையையே கையில் வைத்திருக்கும் தமிழ்நாட்டு முதல்வர், இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் அரசியல் சாணக்கியர், தன் மாநில எல்லைக்குள் அண்டை நாட்டிலிருந்து அவ்வளவு முக்கியமான ஒருவர் வந்ததையும் திருப்பி அனுப்பப்பட்டதையும் கூட அறியாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் எனச் சொன்னால் ‘பெரியார் பிஞ்சு’ படிக்கும் சிறு பிள்ளை கூட நம்பாது. அப்படியே அவரை மீறித்தான் இவ்வளவும் நடந்து விட்டன எனச் சொன்னால் அதன் பொருள் என்ன? என்னதான் இந்திய அரசையே தன் கையில் வைத்திருந்தாலும் தமிழ்நாட்டின் மாநில முதலமைச்சர் ஒருவரால் தமிழினத்தைக் காப்பாற்ற இயலாது என்பதுதானே? தமிழ்நாட்டு முதல்வர் எனும் பதவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்றக் கூடப் போதுமான அதிகாரம் இல்லாதது என்பதுதானே? எனில், கருணாநிதி அந்த நேரத்தில் செய்திருக்க வேண்டியது என்ன? இந்தியா, தமிழர்களுக்கான உண்மையான பிரதிநிதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் கைவிடப்பட்ட திராவிட நாடு கோரிக்கை எனும் பேராயுதத்தை அந்நேரத்தில் மீண்டும் கையிலெடுத்திருக்க வேண்டாவா அவர்? அதையாவது செய்தாரா? இல்லை! மாறாக, தானே கழுத்தைத் திருகிப் போட்ட ‘டெசோ’ எனும் உயிரில்லாப் பிண்டத்துக்குப் பூச்சூட்டி, பொட்டு வைத்து அழகு பார்த்தார்; அதுவும் தமிழினப்படுகொலை முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து! உடனே, “தலைவர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தாலும், போராட்டங்களையெல்லாம் நடக்க விட்டிருந்தாலும் கூட முடிவு வேறாக இருந்திருக்காது; அப்பொழுதும் இதேதான் நடந்திருக்கும்” என சோதிடம் கூறத் தொடங்கி விடாதீர்கள்! இப்படியெல்லாம், கருணாநிதி இவ்வளவு வெளிப்படையாகச் செய்த பட்டப்பகல் துரோகங்களை வெறுமே “இல்லை... இல்லை” எனத் திரும்பத் திரும்பச் சொல்லியும், நான்கைந்து பொய்களைக் கூறியும் மறைத்து விட நீங்கள் முயல்வது, வரலாற்றுப் பெருநிகழ்வு ஒன்றை எச்சில் தொட்டு அழிக்கப் பார்க்கும் சிறுபிள்ளைத்தனம்! அது முடியாது! இதை இப்படிச் செய்ய முடியாது! இதற்கு வழி வேறு உண்டு! அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். கருணாநிதி மீதான இன துரோகக் குற்றச்சாட்டைத் துடைக்க உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருக்குமானால், அடுத்த முறை தி.மு.க., - காங்கிரசுக் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையும்பொழுது, காங்கிரசிடம் வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கச் செய்யுங்கள்! தமிழீழம் மலர இந்தியாவுக்கு எந்தத் தடையும் இல்லை என முறைப்படி ஐ.நா-வில் அறிவிக்கச் செய்யுங்கள்! இலங்கையில் ‘தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு’ நேர்மையான முறையில் நடக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்! கருணாநிதியின் நண்பரான ஈழத் தந்தை செல்வா முதல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் வரை அனைவரும் காணத் துடித்த தமிழீழத்தைப் படைத்துக் காட்டுங்கள்! இதை மட்டும் நீங்கள் செய்துவிட்டால் ஈழத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் மட்டுமில்லை, உலகத்தில் இருக்கும் அத்தனை கோடித் தமிழர்களும் தி.மு.க-வையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கைகூப்பித் தொழுவோம்! நெகிழ்ச்சிக் கண்ணீர் விட்டு அழுவோம்! அதுதான்... அந்தக் கண்ணீர் ஒன்றுதான்... அது மட்டும்தான் ஒன்றரை இலட்சம் பேரின் செங்குருதியில் தோய்ந்து கிடக்கும் கருணாநிதி மீதான பழிக்கறையை அழிக்கும் வல்லமை வாய்ந்தது! எனவே நாம் தமிழர் தம்பிகளோடு சண்டை பிடிப்பது, பிரபாகரன் அவர்களையும் விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்துவது, ஈழத் தமிழர்களை இழிவுபடுத்துவது, இலங்கைப் பிரச்சினைக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு என நெஞ்சில் ஈரமே இல்லாமல் கேட்பது, கருணாநிதி செய்த துரோகத்தை எடுத்துச் சொன்னால் பொதுமக்கள் மீதே பாய்வது போன்றவற்றையெல்லாம் ஏறக்கட்டி விட்டு இதைச் செய்யப் பாருங்கள்! வரலாற்றைத் திரிக்கப் பார்க்காதீர்கள்; மாற்றப் பாருங்கள்! கருணாநிதி மீதான குற்றச்சாட்டை மறைக்க முயலாதீர்கள்; போக்க முயலுங்கள்! அதுதான் கருணாநிதிக்கும் குருதி கொப்பளிக்கக் கொன்று குவிக்கப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்கும் நீங்கள் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி! ❀ ❀ ❀ ❀ ❀ படங்கள்: நன்றி நியூசு டி.எம், பகடிச் சித்திரக்காரர் பாலா. தொடர்புடைய பதிவுகள்: ✎ தமிழ் மாணவர் போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்! – இயக்குநர்.புகழேந்தி தங்கராஜ் ஆவேச நேர்காணல்! ✎ யாருக்கு அளிக்கலாம் வாக்கு? - வாக்காளப் பெருமக்களுக்கான ஒரு தேர்தல் திட்டம்! ✎ 2014 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் 5ஆம் ஆண்டு நினைவேந்தலும் - சில விளக்கங்கள், சில சிந்தனைகள், சில திட்டங்கள்! தொடர்புடைய வெளி இணைப்புகள்: ✎ அன்று பராசக்தி… இன்று ‘பல்டி’யே சக்தி! – திருமாவேலன், விகடன் ✎ ஈகையர் முத்துக்குமார் அவர்களின் நெஞ்சத்தை நொறுக்கும் இறுதிக் கடிதம் ✎ ஈழத் தமிழர் படுகொலை! கருணாநிதி துரோகம்! வரலாறு மன்னிக்காது!
  2. சோகமயமானது முள்ளிவாய்க்கால் – மண்ணில் புரண்டு கதறி அழுத உறவுகள்!!- மே-18 இன்றைய தினம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. உறவுகள் மண்ணில் புரண்டு கதறி அழுத காட்சியைக் கண்டு பலரது நெஞ்சையும் கலங்க வைத்தது. முள்ளிவாய்க்காலில் உள்ள நினைவிடத்தில் சுடயேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது http://newuthayan.com/story/11/சோகமயமானது-முள்ளிவாய்க்கால்-மண்ணில்-புரண்டு-கதறி-அழுத-உறவுகள்.html
  3. சொல்லத் தெரியவில்லை சுடர் போல எரிகிறது மனம் விம்மி வெடித்து நேற்றைய வானம் போல் பொழிந்து தள்ளிட விழிகள் இரண்டும் முட்டிக் கிடக்கின்றன அழுவதற்கான நாள் இது அல்ல எழுவதற்கான நாள் இது என்று உள்மனம் உறுதியாய் சொன்னாலும் விழி உடைத்து விழி நீர் சொரிகிறது... #ஈழத்துப்பித்தன் #மே18 2016
  4. வளமான வன்னிமண் வதையுண்டதோ பாடியவர் : வீரமணிராயு பாடல்வரிகள் : பொன்செல்வன் இசை : அக்னிஉமா படத்தொகுப்பு : ரமேஸ் , அஐந்தா ஸ்ருடியோ தயாரிப்பு : நிலாவெளியீடு
  5. மீண்டும் மீண்டும் உருவேற்றி மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி சொல்லவும் மெல்லவும் முடியாமல் உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை அணையாமல் காப்பது நம் கடனே அடையாளம் அத்தனையும் தொலைத்து அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள் எங்கள் அன்னைத் தமிழீழ பூமி உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம் இல்லாமல் செய்தனர் அதைக் கூட தினம் அங்கு தடம் அழித்து அழித்து திருவிழா பூமியாய் மிளிருது இன்று பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது செத்துக் கிடந்தவர் பிணம் கூட சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம் மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல் மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும் சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம் இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம். ‪#‎ஈழத்துப்பித்தன்‬ 11.05.2016 (படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.) http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_11.html
  6. சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு. முள்ளிவாய்க்கால் பேராவலம்முடிவில்லா ஓர் அவலம்பன் நாட்டுப்படை புகுந்துபல்லாயிரம் உயிர் தின்றுசொல்லாத கதை கோடிசுமந்து கிடக்கும் மண்ணதுவில்லாண்ட இனம் ஒன்றுவீறுகொண்டு போர் கண்டுவிடுதலைக்காய் வேள்வியொன்றைவிருப்புடனே நடத்தியதையைகண் காணச் சகிக்காதகாடையர்கள் கூட்டிணைவில்இனம் ஒன்று அழிந்ததுவேஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமேபல தேசம் வாழ்ந்தோம்பார் எங்கும வீதி வழி குவிந்தோம்பலனேதும் கிடைக்காமல்பரிதவித்து பைத்தியமானோம்இனப்படுகொலை ஒன்றைஇரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறிஇந்தியப் பெருங்கடலும் செந்நிறமாகஇடி வீழ்ந்துபோல் கிடந்தோமேஇமை மூட மறந்தோமேஆண்டுகள் ஏழுஅனல் இடை கரைந்துஅரவணைக்க ஆரும் இன்றிஅரற்றிக் கிடக்கிறோம் நாம்எங்கள் இரத்த உறவுகளே!ஆறாக உங்கள் இரத்தம்அலை புரண்டு ஓடிந்ந்திக் கடல்செங்கடல் ஆனபோதும்அகிலம் முழுதும்பரந்து கிடந்த எம்மால்எதுவுமே செய்யமுடியவில்லையேஎன்ற குற்ற உணர்வும்இயலாமையும்கண்களைக்குளமாக்கஉங்களை இழந்த நினைவுகளோடு....எங்கள் உரிமையை வென்றுஉலக அரங்கில்எமக்கான நீதியைப்பெறஅணிதிரள்வோம்அலை அலையாய்....ஓரணியில்..#ஈழத்துப்பித்தன்02.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_13.html
  7. சென்ற வாரம் **** அழுகுரல்கள் வானளவு எழுந்தது. ஆனால் அந்த குரல்கள் எந்த வல்லரசுக்கும் கேட்கவே இல்லை… தொடர்ந்து கொண்டிருந்தது அந்த இடத்தை துடைத்தழிப்பதற்கான தாக்குதல்கள் …. அப்போது தான் அண்ணா……. அந்த குரல் தேய்ந்து கொண்டிருந்தது.. தொடர்ச்சி**** இரத்த வெள்ளம் அந்த காட்டு மண்ணை சிவப்பாக்கி கொண்டிருந்தது. என் உடலும் அந்த குருதியில் குழித்தது. டேய் கவி அண்ணா இங்க ஓடி வாடா எல்லாருமே காயம்டா என் தம்பி கத்துகிறான். யாரை தூக்குவது யாரை தவிர்ப்பது என்பது புரியவில்லை. சுமார் என் உறவுகள் முப்பது பேருக்கு மேலானவர்கள் அந்த இடத்திலே சூழ்ந்திருந்தோம். அதில் குறித்த சிலரைத்தவிர அனைவருக்கும் படு காயம். கட்டு போடுவதற்கு எந்த அவகாசமும் கிடைக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசம் எமக்கு தரவில்லை. பாய்ந்து வந்து கொண்டிருந்தன சிங்களன் ஏவிய எம்மை கொல்லுவதற்கான இரும்புத்துண்டுகள். அதற்குள்ளும் தவழ்வதும் உருழ்வதுமாக ஒவ்வொருவராக பார்க்கின்றோம். அனைவரும் முனகி கொண்டு இருக்கின்றார்கள். இருந்த துணிகள் அனைத்தும் அவர்களுக்கு கட்டுப்போடும் துணிகள் ஆகின்றன. கை உடைந்ததும் கால் துண்டானதுமாக ஒவ்வொருவரும் துடித்து கொண்டிருந்தார்கள். தம்பி அண்ணா மாமா என்று பல குரல்கள் எம்மை அழைத்து கொண்டிருந்தன. முதலில் பலத்த காயமடைந்தவர்களுக்கான முதலுதவி செய்ய முனைகிறேன். ஆனால் எதுவுமே முடியவில்லை. அந்தளவு தாக்குதல் அங்கே நடத்தப்படுகிறது. இருப்பினும் அனைவருக்கும் கிடைத்த துணிகள் கொண்டு இரத்த போக்கை கட்டுப்படுத்த முயல்கிறோம். அந்த இடத்தில் என் உறவுகளில் ஏற்கனவே காலில் பலத்த காயமடைந்த நிலையில் களமுனையில் இருந்து விலகி மூத்த போராளி ஒருவரும் குடும்பமும் படுத்திருந்ததும் அவர்களது எந்த சத்தமும் எமக்கு கேட்காததும் நாம் உணராத ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் யோசிக்கவே இல்லை. ஆனால் மீண்டும் தம்பியின் குரல் “டே அண்ணா இங்க ஓடிவாடா” இங்க வந்து பாருடா…. அவனின் கூப்பிட்ட குரலுக்கு நான் ஓடி சென்ற போது அந்த காட்சி என்னால் நம்பவே முடியாது இருந்தது. தாய் தந்தைக்கு நடுவில் தூங்கி கொண்டிருந்த பொன்னும் பையனும் நடந்த சம்பவத்தால் திக் பிரமை பிடித்தவர்களாக திகைத்து போய் கிடந்தார்கள். இவற்றையும் தூக்கி நெஞ்சோடு அணைத்து கொள்கிறேன். செல்லங்களுக்கு ஒன்றும் இல்ல மாமா இருக்கான் குட்டிக்கு ஒன்றும் இல்லை என்று அணைத்த வாறு பங்கருக்குள் பாய்கிறேன். உண்மையில் அதிசயமா அல்லது எது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை காரணம்.அனைவரும் சாகும் தருவாயில் காயமடைந்து கிடந்த போதும் அந்த குழந்தைகளுக்கு எந்த கீறல்களும் இல்லை. அவர்கள் இருவரும் தப்பி இருந்தார்கள். பங்கருக்குள் அவர்களை இருந்தி விட்டு திரும்ப அங்கே போன போது, ஏற்கனவே காயத்தால் உடைந்து போய் கிடந்த கால் மீண்டும் ஒரு தடவை பல இஞ்சி எலும்பை உடைத்தெறிந்து பிஞ்சு போய் கிடந்தது. தம்பி என் பிள்ளைகளை காப்பாத்து. அவர் அப்பிடித்தான் சொல்லி கொண்டிருந்தார். அவரது காலுக்கு மம்பெட்டி பிடியை கழட்டி வைத்து கட்டுகிறேன். அவரது கால் தோலில் மட்டும் தொங்கிய படி கிடக்கிறது. இரத்தம் தொடர்ந்து வெளியேறி கொண்டே இருக்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் இரத்தத்தை கட்டுப்படுத்த பலவாறு முனைகிறேன் இரத்தமோ தொடர்ந்தும் வெளியேறுகிறது. கட்டுப்படவில்லை…. முயற்சியில் சிறு வெற்றி அதனால் அவரது மனைவியின் காயத்துக்குமான இரத்தக்கட்டுப்படுத்தலை செய்து முடித்து நிமிரும் போது மீண்டும் அந்த குரல் அண்ணா…. அந்த குரல் தேய்ந்து கொண்டே போனது… நாளை அந்த குரலுக்கு என்ன நடந்தது…? கூறுகிறேன் தொடர்ந்து வாசிக்க http://www.kavikkural.com/2016/03/20/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-11/