Search the Community

Showing results for tags 'பொருத்து வீடுகள்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கணினி வளாகம்
    • வலையில் உலகம்
    • தொழில் நுட்பம்
    • அறிவுத் தடாகம்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • அரசியல் அலசல்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • Tamil Cine's Blog
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • Vani Mohan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog

Found 18 results

  1. இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அரசாங்கம் அமைக்க திட்டமிட்டு இருக்கும் பொருத்து வீடுகள் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உங்கள் கருத்துகளை தெரிவிப்பதுடன், கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவினையும் (வாக்கினையும்) செலுத்தவும். உங்களது தெரிவை / எதற்கு வாக்களித்தீர்கள் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு இக் கருத்து கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி யாழிணையம்
  2. வவுனியாவில் 10ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்க விண்ணப்பபடிவம் விநியோகம் வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநி யோகிக்கப்பட்டு வருகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ண ப்பப்படிவங்களின் விநியோகம் அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது. கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர்களினால் பொருத்து வீடு தொடர்பாக கிராமசேவையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் வீடுகளில் செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வவுனியா தெற்கு, வவுனியா நகரம் போன்ற பகுதிகளிலுள்ள பொருத்து வீடு தேவையுடையவர்களுக்கு பொருத்துவீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு வதாக வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/news/22587
  3. பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம் -எம்.றொசாந்த் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில் 2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. வடமாகாண முதலமைச்சர், வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இத்திட்டத்தை நிராகரித்ததுடன் வடமாகாண சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் கவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொருத்து வீடு வேண்டாம் என போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக பொருத்து வீட்டுத்திட்டத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு விண்ணப்பங்களையும் கோரியுள்ளது. இந்நிலையில், பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழிலிருந்து இதுவரை 189 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/189304/ப-ர-த-த-வ-ட-ட-த-த-ட-டத-த-க-க-ய-ழ-ப-ப-ணத-த-ல-ப-ர-வ-ண-ணப-பம-#sthash.HXsDjcjl.dpuf
  4. நாவற்குழியில் குடியேறிய சிங்கள குடும்பங்களுக்கு இவ்வாண்டு வீடமைப்புதிட்டம் நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமை ப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபி விருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி க்கையில் 2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.இதன்படி ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3,50000 ரூபா வீதம் வீட்டுத் திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 86.55 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது...மேலும் 3000 குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு 10 சீமெந்து பைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 24.7 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் 2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது..நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்கள்,50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளை,வீடொன்றிற்கு 5 இலட்சம் ரூபா செலவில் குறித்த மாதிரிக் கிராமத்தில் அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/news/22300
  5. வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற மக்களுக்கு கல் வீடே வேண்டும், பொருத்து இரும்புக் கூடு வேண்டாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பொருத்து வீட்டு விண் ணப்பங்களை முழுமையாக நிரா கரிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில், பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும் பொருத்தமற்ற வீட்டுத் திட்டம் என எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், மாகாணசபைகளிலும் இதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாத காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சு விவாதத்தின் போது இவ் வீட்டுத்திட்டத்திற்கான ஒப்பந்த விதி முறைகள் மீறப்பட்டுள்ளமை, ஊழலுக்கு இட மளிக்கப்பட்டுள்ளமை மோசடிக்குள்ளானவர்களுடன் உள்ள ஒப்பந்தம் உடன்பாடுகளை பாராளுமன்றத்தில் வெளியிட்டு மீள்குடியேற்ற அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் எனது தலைமையில் உள்ள மீள் குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட மேற்பார்வைக்குழுவில் இத் திட்டம் வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வருடம் டிசம்பர் 7 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாகவும் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி பணிகளுக்கும் கூடுதலான நிதி ஒதுக்குவதாகவும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்; என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்தில் எட்டு இலட்சம் ரூபா வீட்டுத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் அமைச்சர் கல்லில்லை, மணலில்லை, நீரில்லை என்ற அற்ப காரணங்களைக் காட்டி மக்களை ஏமாற்றகின்றார். பிரதமர் பாராளுமன்றில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தலையிட்டுத் தீர்வுகாணும் வாக்குறுதியை வழங்கியுள்ள நிலையில் மீள்குடியேற்ற அமைச்சர் பொருத்துவீட்டுக்கு விளம்பரம் செய்வது தவறானதாகும். ஏன் இவ்வளவு அவசரம். அமைச்சர் சுவாமிநாதனின் விசுவாசிகளும், முகவர்களும், அரச அதிபர்களையும் பிரதேச செயலாளர்களையும், ஊழியர்களையும் மிரட்டி அச்சுறுத்தி பொருத்து வீடுகளை ஏற்கவேண்டு மெனப் பேசுகின்ற செய்திகளும் கசிந்து இருக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சு, வீடு தேவைப்பட்டவர்களுக்கு கல்-சீமெந்து வீடுகளை பத்து இலட்சம் ரூபாயில் கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முறையாக செயற்படுத்துவதே இன்றைய தேவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்திப் பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகின்றோம். அமைச்சர் சுவாமிநாதனின் மீள்குடியேற்ற அமைச்சில் ஓராண்டுக்குள் இரண்டு அமைச்சின் செயலாளர்கள் துரத்தப்பட்டுள்ளனர். அமைச்சுக்கு இன்னும் ஒரு செயலாளர் நியமிக்க முடியவில்லை. அரசு செயலாளர் தர முள்ளவர்கள் இந்த அமைச்சுக்கு வரமறுக்கின்றனர். இந்நிலையில் இப் பொருத்து வீட்டுத் திட்டத்தை இருபத்தொரு இலட்சத்திலிருந்து பதினாறு இலட்சமாக குறைத்து அமைச்சர் சுவாமி நாதன் விளம்பரம் பிரசுரித்து ஒப்பேற்ற எடுக்கும் நடவடிக்கையில் மறைந்திருக்கும் மர்மந்தான் என்ன? இத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்புகிறோம். அரசையும் தமிழ் மக்களையும் அமைச்சர் சுவாமிநாதன் தவறாக வழிநடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். போரினால் அழிந்து போயுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு கல் சீமெந்தினால் கட்டப்பட்ட ஒரு இலட்சத்து முப்பதினாயிரத்திற்கும் அதிகமான வீடு தேவை. எனவே பொருத்து வீட்டு விண்ணப்பங்களை வீட்டுத் தேவையுள்ள மக்கள் நிராகரித்து கல்வீடுதான் வேண்டுமென அமைச்சுக்கு, அதிகாரிகளுக்கு எழுதிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மக்களின் வீட்டுத் தேவையை நிறைவு செய்ய அமைச்சரின் தவறான வழிநடத்தலுக்குப் பலியாகிப் பின் மன வருத்தப்பட வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றோம் என மாவை எம்.பி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். http://www.valampurii.lk/valampurii/content.php?id=12916&ctype=news
  6. என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் – டிஎம் சுவாமிநாதன் என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் கடந்த செம்ரெம்பா் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நட்ட ஈட்டினை வழங்கி விட்டு உரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். மேலும் வீட்டுத்திட்டத்தின் பொழுது இப்பொழுது பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. மண் இல்லை ,வேலைகளைச் செய்வதற்கான மேசன்மார்கள் இல்லை போன்ற பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. இதனால் நான் பிரதமருடன் பேசி முன் அமைக்கப்பட்ட ஒரு தொகை வீடுகளை நிர்மாணிப்பதற்கான முன்வந்திருக்கின்றேன். அந்த வீட்டுத்திட்டத்தின் மூலம் ஒரு வீட்டை நான் சுன்னாகத்திலே கட்டி இருக்கின்றேன். இந்த வீட்டை எத்தனையோ பேர் சென்று பார்வையிட்டு இருக்கின்றனர். ஆனாலும் இவற்றுக்கு எதிர்ப்பை காண்பதற்கு பலர் இருக்கின்றனர் அதனைப்பற்றி இச்சந்தர்ப்பத்தில் பேச விரும்பவில்லை எனினும் இத்திட்டம் முற்றுமுழுதாக மக்கள் நலம் சார்ந்ததே ஆகவே இத்திட்டம் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து நிகழ்வின் முடிவில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்களுக்கு மாற்றுத்திட்டம் ஏதும் இருக்கிறதா என ஊடகவியலாளர்களினால் தொடுக்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல் சென்றமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/archives/11987
  7. மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வீடுகளை - கல் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, வடக்கு மாகாண மக்கள் ஏற்க மறுத்த பொருத்து வீட்டை முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டைத் திணிப்பதற்கு முயலும் காரணத்தைச் சொல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு. எங்கள் மக்களுக்கு வீடு வேண்டும். அதனை நாம் திரும்பத் திரும்பக் கூறுகின்றோம். கல் வீடாகவே இருக்கவேண்டும். தொங்கிக் கொண்டிருக்கும் வீட்டினை நாம் ஏற்கமாட்டோம். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை எனக்கு 50 வருடங்களாகத் தெரியும். நாம் நீண்ட ஆய்வுகள் ஆராய்வுகளின் பின்னர்தான் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீடு வேண்டாம் என்று சொன்னோம். இதனை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த வீட்டுத் திட்டத்தைத் திணிப்பதால் எதிர்காலத்தில் சமூகப் பிரச்சினைகள் ஏற்படும். எல்லோருக்கும் எதிர்க்கும், பிரச்சினைக்குரிய திட்டத்தை முன்னெடுக்க ஏன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் திணிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறிப்பிட்டிருந்தார். எமது பிரதேச காலநிலை நிலைக்குப் பொருந்தாது இருக்கும் இந்தத் திட்டமானது மலையக கால நிலைக்குப் பொருந்தக் கூடும். அவ்வாறு பொருந்தினால் அது தொடர்பில் மலையகத் தலைவர்களுடன் பேச வேண்டும். அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம். ஒரு நாசகாரத் திட்டத்தை எம் மீது அரசு திணிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எமது மக்களின் வீட்டுத் தேவையைப் பொருத்து வீடு நிறைவு செய்யாது. உசிதமான மாற்றுத் திட்டத்தினைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/politics/01/129755?ref=morenews
  8. வடக்கு மாகாண மக்களுக்கு பொருந்தாத பொருத்து வீட்டினை மக்கள் மீது திணிக்கும் நாசகார வேலையை இந்த அரசாங்கம் முன்னெடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இருபற்றி அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாண மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்காத ஒரு வீட்டினை மக்களுக்குத் திணிப்பது தொடர்பாக கூறவேண்டிய கட்டாய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு. எமது மக்களுக்கு வீடு வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் கூறி வருகின்றோம். அது கல்வீடாக இருக்கவேண்டுமே தவிர தொங்கும் வீடாக இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். பொருத்து வீடு தொடர்பாக தனிப்பட்ட விருப்பில் இருந்து அகன்று அதாவது தனிநபர் விருப்பு மற்றும் தனிநபர் அரசியல் என்பவற்றிலிருந்து விலகி அவர்களின் விருப்பத்தை நிறைவுசெய்ய முன்வரவேண்டும். மீள் குடியேற்ற அமைச்சரை எனக்கு 50 வருடங்களாகத் தெரியும். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பின்னரே தாம் இந்தத் திட்டம் மக்களுக்குப் பொருந்தாது என முடிவெடுத்தோம் என்பதை அவர் உணரவேண்டும். அதற்குமப்பால் இந்த வீட்டுத்திட்டத்திற்காக கூறும் விலையும் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்பதுடன், இவ்வீட்டுத் திட்டத்தினால் எதிர்காலத்தில் சமூகப் பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் ஏன் இந்த வீட்டுத்திட்டத்தினை முன்னெடுக்க முயற்சிக்கின்றார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இத்திட்டத்தினை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. அரசாங்கத்தில் பல அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவும் மக்கள் விரும்பாத திட்டத்தினை மக்களுக்கு திணிக்கவேண்டாம் எனக் கூறியதும் எனக்கு ஞாபகமிருக்கிறது. அரசாங்கம் இப்படியானதொரு நாசகார வேலைத்திட்டத்தை எம்மக்கள் மீது திணிக்குமென நான் நினைக்கவில்லை. நாம் தொடர்ந்தும் கூறுவோம் எமது மக்களுக்கு வீட்டுத்திட்டம் தேவை, அதற்கு பொருத்து வீடு உசிதமானதல்ல எனவும் தெரிவித்தார். http://thuliyam.com/?p=52982
  9. பொருந்துமா பொருத்து வீடுகள்? நிலாந்தன் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கி விட்டது. வரும் ஏழாம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்ப்பத்திரிகைகளில் இது தொடர்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடமாகாண சபை இது தொடர்பாக ஏற்கனவே தனது எதிர்ப்பை வெளிக்காட்டி விட்டது. முதலமைச்சர் இது தொடர்பாக மிக விரிவான விளக்கத்தைக் கொடுத்து விட்டார். அரசாங்கத்தோடு அதிகம் இணங்கிப்போகும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்று விமர்சிக்கப்படும் சுமந்திரனுக்கும் இதில் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குமிடையில் நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் ஒன்று நடந்திருக்கிறது.தமிழ் சிவில் சமூகப்பிரதிநிதிகளும் துறைசார் நிபுணர்களும், ஊடகவியலாளர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்து விட்டார்கள். அரசாங்கத்துடன் நிற்கும்; லிபரல் ஜனநாயக வாதிகளில் முக்கியமானவர் பாக்கியசோதி சரவணமுத்து. இவருடைய மாற்றுக் கொள்கைக்கான மையத்தின் ஆங்கில இணையத் தளமாகிய கிரவுண்ட் வியூஸ்இல் இது தொடர்பாக வரிவான ஒரு கட்டுரை சில மாதங்களுக்கு முன்னரே பிரசுரமாகியிருந்தது. இத்தனை வாதப்பிரதிவாதங்கள் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அரசாங்கம் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஜனவரி 7ஆந் திகதி தொடங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பல்வேறு தரப்புக்களும் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றன. இந்திய அரசு, கத்தோலிக்கத் திருச்சபையின் தொண்டு நிறுவனங்களாகிய கியூடெக், ஹரிடாஸ், சுவிற்சலாந்தின் நிதி உதவியுடன் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் தமிழ் டயஸ்பொறாவைச் சேர்ந்த சில தொண்டு நிறுவனங்கள் எனப் பல தரப்புக்களும் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றன. அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்களில் பொருத்து வீட்டுத்திட்டம் ஆகப்பிந்தியது ஆகும். ஏற்கனவே அரசாங்கம் ஒரு தொகுதி பணத்தை பயனாளிகளுக்கு வழங்கி பயனாளிகளின் பங்களிப்போடு வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றது. தவிர படைத்தரப்பும் நல்லிணக்கபுரம் என்ற பெயரில் வீடுகளைக் கட்டிக் கொடுத்து வருகின்றது. அரசாங்கத்தின் பண உதவியோடு முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே பல முறைப்பாடுகள் உண்டு. நிலைமாறு கால கட்ட நிதிச் செய்முறைகள் தொடர்பான சந்திப்புக்களின் போது தமிழ்ச் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இது தொடர்பாக தமது குற்றச் சாட்டுக்களை முன் வைப்பதுண்டு. இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் தொடர்பாக தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பயனாளிகளும், ஊடகவியலாளர்களும் தெரிவித்து வரும் கருத்துக்களைத் தொகுத்து பின் வருமாறு கூறலாம். வீட்டுத்திட்டம் எனப்படுவது வீடற்றவர்களுக்கே. இதில் வீடுள்ளவர்களும் பயன் பெறுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. பயனாளிகளைத் தெரியும் பொழுது நடைமுறைப்படுத்தப்படும் முறைமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உண்டு. உதாரணமாக,வடமராட்சி கிழக்கில் இவ்வாறு கட்டப்பட்ட பத்துக்கும் குறையாத வீடுகளில் யாரும் தங்குவதில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. வீடற்றவர்களில் பெரும்பாலானவர்கள் வீடு கட்டத் தேவையான பணம் இல்லாதவர்களே. இவ்வாறு வீடு கட்டப் போதுமான காசு இல்லாதவர்களுக்கு அரசாங்கம் நிதி உதவி செய்து அந்தப் பயனாளிகளின் பங்களிப்போடு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் நிதி உதவி தரப்படுவதற்கு முன்னரே அவர்களை முதற்கட்ட கட்டுமான வேலைகளை தொடங்குமாறு கேட்கப்படுகிறது. வசதியில்லை என்பதால் வீடுகட்ட முடியாதிருக்கும் ஒருவரை நாங்கள் உதவி செய்கிறோம். அதற்கு முன் நீங்களும் ஒரு தொகையை கையில் வைத்திருப்பது நல்லது என்று கேட்கப்படுவதால் பயனாளிகள் கடன் வாங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாற்று உண்டு. வடமராட்சி கிழக்கில் தாலியை அடகு வைத்து வீட்டைக் கட்டத் தொடங்கியவர்களும் உண்டு. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச அலுவலர்கள் வேறொரு விளக்கத்தைத் தருகிறார்கள். வீட்டுத்திட்டம் அமுலுக்கு வந்த தொடக்கத்தில் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஒரு தொகுதி பணம் வழங்கப்பட்டது. அப்பணத்திற்குரிய கட்டுமானத்தை அவர்கள் முடித்துக் காட்டியபின் அடுத்தடுத்த கட்ட பணம் வழங்கப்படும். ஆனால் இவ்வாறு வழங்கப்பட்ட முதற்கட்ட பணத்தை ஒரு பகுதி பயனாளிகள் ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்தி விட்டு அரச அலுவலகர்கள் வந்து கேட்கும் பொழுது முதற் கட்ட கட்டுமானங்களை காட்ட முடியாதிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இது காரணமாக பயனாளிகள் வீட்டைக் கட்டுவதில் மெய்யாகவே ஈடுபாட்டோடு இருக்கிறார்கள் என்பதை எண்பிக்கும் விதத்தில் அவர்களாக வீட்டைக் கட்டும் பணிகளை முதலில் தொடங்கும் விதத்தில் நடைமுறைகள் இறுக்கப்பட்டுள்ளன என்று மேற்படி அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறு வழங்கப்படும் நிதி கட்டங்கட்டமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டமும் பூர்த்தி செய்யப்படுவதை சம்பந்தப்பட்ட அரச அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக தொழில்நுட்ப அலுவலர் ஒருவர் அதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால் பயனாளிகள் தொழில் நுட்ப அலுவலரின் இரக்கத்தில் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலமை உருவாகிவிட்டதாக ஒரு முறைப்பாடு உண்டு. இது சில தொழில்நுட்ப அலுவலர்கள் பயனாளிகளை அவமதிக்கும் ஒரு வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதாகவும், சில தொழில் நுட்ப அலுவலர்கள் இந்த முறைமையைப் பயன்படுத்தி பயனாளிகளைச் சுரண்டுவதாகவும், லஞ்சம் பெறுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு.வன்னியில் ஒரு மாவட்டத்தில் தொழில் நுட்ப அலுவலர் சிலர் பயனாளிகளிடம் குறிப்பாக குடும்பத்தலைவரை இழந்த இளம் விதவைகளாக உள்ள பயனாளிகளிடம் பாலியல் லஞ்சம் கேட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. வடமராட்சிப் பகுதியில் ஒரு பயனாளி வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கும் போது அவருடைய தாயார் இறந்து விட்டார். எனவே வீட்டுக்கதவுக்கு நிலை வைக்கும் நற்காரியத்தை அவர் சிறிது காலம் ஒத்தி வைத்திருக்கிறார். ஆனால் வீட்டுத்திட்டத்தை மேற்பார்வை செய்யும் தொழில் நுட்ப அலுவலர் மேற்படி தாமதத்தில் இருக்கும் மத நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அந்தப் பயனாளியிடம் விட்டுக்கொடுப்பின்றி நடந்து கொண்டதாக ஒரு முறைப்பாடு உண்டு. மற்றொரு சம்பவத்தில் யாழ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுத்திட்டத்தில் ஒரு தொழில் நுட்ப அலுவலரை சம்பந்தப்பட்டவர்கள் தலைக்கவசத்தால் தாக்கிக் காயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தவிர ஒவ்வொரு கட்டமாக பணத்தைக் கொடுக்கும் நடைமுறை காரணமாக மேசன்களின் பேரம் அதிகரித்திருப்பதாகவும் ஒரு முறைப்பாடு உண்டு. குறிப்பிட்ட கட்டத்தை குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடித்துக் காட்ட வேண்டும். எனவே கால எல்லை காரணமாக பயனாளிகள் மேசன்மாரில் தங்கியிருக்க வேண்டி இருக்கிறது. இதனால் மேசன்மார் சில சமயங்களில் முன்பு ஒப்புக் கொண்டதை விட கூடுதலாக கூலியைக் கேட்கும் நிலமைகளும் தோன்றுகின்றன. குறிப்பிட்ட கால எல்லைக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் பயனாளிகளும் மேசன்மார் கேட்கும் கூலியை கொடுக்க நிர்ப்பந்திக்க படுகிறார்கள். பயனாளிகள் ஒவ்வொரு கட்டத்தையும் உரிய கால கட்டத்துக்குள் முடிக்காவிட்டால் அதற்காகக் கடுமையாக நடந்து கொள்ளும் அரச அலுவலர்கள் குறிப்பிட்ட கட்டங்களைப் பூர்த்தி செய்த பின் தரப்பட வேண்டிய கொடுப்பனவு தாமதமாகும் போது அது பற்றி அலட்டிக் கொள்வதேயில்லையாம். அதாவது கொடுப்பது தானம் என்ற ஓர் உணர்வு அரச ஊழியர்களிடம் காணப்படுவதாக பயனாளிகள் முறைப்பாடு செய்கிறார்கள். தானத்தைப் பெறுபவர் அதற்குரிய பணிவோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? என்று பயனாளிகள் கேள்வி கேட்கிறார்கள். இவை நிர்வாக நடைமுறையில் உள்ள பிரச்சினைகள். அதே சமயம் மற்றொரு முக்கிய குறைபாடு இந்த வீட்டுத்திட்டங்களில் உண்டு என்று அவற்றை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கும் போது கட்டுமானப் பொருட்களின் விலை எதுவாக இருந்ததோ அதே விலை வீட்டைக் கட்டி முடிக்கும் தறுவாயிலும் இருப்பதில்லையாம். இதனால் ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கும் போது செய்யப்பட்ட விலைமதிப்பீடுகள் கட்டி முடிக்கப்படும் போது ஏறிவிடுகின்றன. அரசாங்கம் இந்த அதிகரிப்பைக் கவனத்தில் எடுப்பதில்லையாம். இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் தொடர்பில் கடுமையாக விமர்சிப்பவர்கள்வீட்டுத்திட்டங்களில் பயனாளிகளைப் பங்காளிகளாக்குவது என்பது நடைமுறையில் பயனாளிகளைக் கடனாளிகளாக்குவதிலேயே முடிகிறது என்று கூறுகிறார்கள். காசில்லாத படியால் வீடு கட்ட முடியாதிருந்த ஒரு குடும்பத்துக்கு வீடுகட்ட காசு தருகிறேன் என்று கூறி முடிவில் அந்தக்குடும்பம் தனது சக்திக்கு மீறிக் கடன்படும் நிலைமையே உருவாகியிருப்பதாக பயனாளிகள் விமர்சிக்கிறார்கள். பயனாளிகளைப் பங்காளிகளாக்குவது என்பது குறிப்பாக வீட்டுத் திட்டத்தைப் பொறுத்தவரை ஒரு நல்ல முயற்சிதான். ஏனெனில் தனது சொந்த வீட்டை வேறு யாரோ கட்டித் தருவதை விடவும் தானே ஒவ்வொரு கல்லாகப் பார்த்துக் கட்டுவதில் ஒரு திருப்தியும் நிறைவும் உண்டு. தனது வீட்டுக்குரிய பொருட்களைத் தானே தேடித்தேடி தெரிவு செய்து தனது வீட்டைத் தானே ஓரளவுக்கு தனது விருப்பப்படி கட்டுவதில் ஒரு திருப்தியும் சந்தோசமும் உண்டு. ஆனால் இவ்வாறு பயனாளிகளைப் பங்காளிகளாக்கும் திட்டம் முடிவில் பயனாளிகளை தமது சக்திக்கு மீறிக் கடன்படுவதில் கொண்டுபோய் விடுகிறது என்று பயனாளிகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் குறைப்படுகிறார்கள். இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன் வைக்கும் சிவில் அமைப்புக்கள் பயனாளிகளை பங்காளிகளாக்குவதை விடவும் சில அமைப்புக்கள் கட்டித்தரும் வீடுகள் பரவாயில்லை என்று கருத்துத் தெரிவிக்கின்றன. குறிப்பாக கியூடெக், ஹரிடாஸ் போன்ற நிறுவனங்கள் வீடுகளைக் கட்டி முடித்துவிட்டு பயனாளிகளிடம் சாவியைத் தருகின்றன.படையினரால் உருவாக்கப்பட்டுவரும் நல்லிணக்க புரங்களிலும் இப்படித்தான். இந்த ஏற்பாடு தம்மைக் கடனாளியாக்குவதில்லை என்று ஒரு தொகுதி பயனாளிகள் கூறுகிறார்கள். இவ்வாறு அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் தொடர்பில் விமர்சிக்கும் பயனாளிகள் அரசு சாரா நிறுவனங்கள் கட்டித்தருவதைப் போல அரசாங்கமும் வீடுகளைக் கட்டித்தந்தால் நல்லது என்று ஒரு கருத்தை முன்வைத்து வரும்; ஒரு பின்னணியில்தான் பொருத்து வீட்டுத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த விழைகிறது. வீடற்ற தமிழ் மக்களின் ஒருபகுதியினர் குறிப்பாக இப்பொழுதும் தற்காலிக தகர வீடுகளிலும், தொத்துப்பறி வீடுகளிலும் வசிப்பவர்கள் பொருத்து வீடோ, பொருந்தா வீடோ எதுவானாலும் கிடைத்தால் சரி என்ற ஒரு மனோ நிலையோடு காணப்படுவதை சில ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பசித்திருப்பதை விட கஞ்சி மேலானது என்று கருதும் ஒரு தொகுதி தமிழ் மக்கள் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிக்கிறார்கள். இது தொடர்பில் புத்திபூர்வமான விளக்கங்களை அவர்கள் பொருட்படுத்தவில்லை. பொருத்து வீட்டை விஞ்ஞான பூர்வமாக விமர்சிக்கும் பலரும் ஏற்கனவே நன்கு செற்றில்ட் ஆகிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களே என்றும் இவர்கள் பாதுகாப்பான கல் வீடுகளில் வாழ்ந்தபடி பொருத்து வீடு வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றும் மேற்சொன்ன பயனாளிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். பொருத்து வீடு வேண்டும் என்று தமது பெயர்களைப் பதிந்த ஒரு பகுதியினர் இப்பொழுதும் தற்காலிக வீடுகளிலேயே வசித்து வருகிறார்கள் என்று மேற்சொன்ன ஊடகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இதனிடையே கடந்த கிழமை கிளிநொச்சியில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது. கிளிநொச்சிக் கச்சேரிக்கு முன்பு சுலோக அட்டைகளைத் தாங்கியபடி ஒரு பகுதி மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள். இவ்வாறான ஓர் அரசியல் சூழலில் குறிப்பாக தமிழ் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் அமைச்சரவை பொருத்து வீட்டிற்கு அனுமதியை வழங்கியிருக்கிறது. இதன்படி வரும் 7ஆம் திகதி பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம் அமுலுக்கு வர வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் வரும் 9ஆம் 10ஆம் திகதிகளில் முன் வைக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு காலச்சூழலில் பொருத்து வீட்டுத்திட்டம் அமுல் செய்யப்படுமாகவிருந்தால் அது இரண்டு விடயங்களை எண்பிப்பதாக அமைந்து விடும். முதலாவது அந்த வீடுகளைக் கட்டித்தரப் போகும் கோப்பரேற் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உள்ள நலன்சார் உறவு எவ்வளவு வலிமையானது என்பது.பயனாளிகளைப் பங்காளிகளாக்கும் திட்டம் பயனாளிகளைக் கடனாளிகளாக்கியிருக்கிறது அதேசமயம் பொருத்து வீட்டுத்திட்டமோ அரசாங்கத்தில் உள்ள சிலரைக் பெரும்கோடீஸ்வரர்களாக்கப் போகிறதா? என்று ஒரு பயனாளி கேட்டார். இரண்டாவது ஆட்சி மாற்றத்தின் பங்காளிகளாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேரம் எங்கே நிற்கிறது என்பது. அதாவது தமிழ்த்தரப்புப் பேரம் தாழ்ந்து செல்கிறதா இல்லையா என்பதை நிரூபிக்கப்போகும் ஒரு சந்தர்ப்பம் அது. http://globaltamilnews.net/archives/11503
  10. பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் நாளை போராட்டம் மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடு க்கவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதி ராக முதல் முறையாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயல கம் முன்பாக காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஆரம்பத்தில் இருந்தே பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பொருத்து வீடுகள் தமது சூழலுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள், தமது வாழ்க்கை முறை, தமது பிரதேசத்தின் காலநிலை, பாரம்பரிய கட்டடமுறை என்பவற்றை கருத்திற்கொண்டு வீடுகளை அமைத்துத்தருமாறும் வலியுறுத்தி யுள்ளனர் http://www.onlineuthayan.com/news/21535
  11.  'சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்' தன்னுடைய அமைச்சுப் பதவியை முறையாக செய்யமுடியாவிடின், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187568/-ச-வ-ம-ந-தன-பதவ-த-றக-கவ-ண-ட-ம-#sthash.MAgADxh4.dpuf
  12. வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏன் இந்த வீட்டுத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், எவ்வாறு உங்களால் இவ்வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கமுடியும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, எந்த நாடுகளிலும் தற்போது பொருத்து வீடுகளே அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருட்செலவு, ஆட்செலவு என்பன குறைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்க்கலாம். ஆனால், நான் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளேன். மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இரமணைமடுத் திட்டத்தை ஆரம்பித்தபோது எதிர்த்தார்கள், பொருளாதார மத்திய நிலையத்தை ஆரம்பித்தபோது எதிர்த்தார்கள் 30 வருடமாக மக்கள் கஷ்ரப்பட்டுள்ளார்கள். இனியும் அவர்கள் கஷ்ரப்படவேண்டுமா? எனது திட்டத்திற்கு மாற்றுத்திட்டம் வைத்திருப்போர் மக்களுக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்கட்டும். எப்படியிருப்பினும் விரைவில் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பேன் எனத் தெரிவித்தார். http://thuliyam.com/?p=49294
  13. "வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைப்பதற்கு தீர்மானம்" வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் சுவாமிநாதன் வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். வடமாகாணத்தில் பொருத்து வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/13669
  14. இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவதனை ஏற்க முடியாது – TNA குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு இடம்பெயர் மக்களுக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படுவுதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொருத்து வீட்டுத் திட்டத்தை முன்னெடுக்க புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். சீமெந்து கற்களிலான வீடுகள் அமைக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் 65000 வீட்டுத் திட்டமானது கூடுதலான செலவில் மேற்கொள்ளப்படுவதாகவும் இதனை விடவும் குறைந்த செலவில் வீடுகளை நிர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/6793
  15. காலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படவிருந்து நிராகரிக்கப்பட்ட பொருத்து வீட்டு திட்டத்தினை, மலையகத்திற்கு பொருத்தமானதா என ஆராய்ந்து பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில், முன்கூட்டியே பாகங்கள் தயாரிக்கப்பட்டு பின் கட்டப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்படும் பொருத்து தனி வீடமைப்பு திட்டம் காலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படுவது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த திட்டம் குளிர் கால சீதோஷண நிலைமைகள் கொண்ட இலங்கை மலைநாட்டுக்கு பொருத்தமானதா என ஆராய்வது முறையானது என நான் நம்புகிறேன். எனவே இதுபற்றி பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழுவிலும் இவ்விவகாரம் விரைவில் பரிசீலிக்கப்படவுள்ளது. உலகின் குளிர் மற்றும் மத்திய சீதோஷண வலய நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறையாக்கப்படும் இந்திட்டம், மலையக சீதோஷண நிலைமைகளுக்கு பொருந்துமா என்பது விஞ்ஞானப்பூர்வமாக பரிசீலிக்கப்பட்டு, நடைமுறையாக்கப்படுமானால், அடுத்த ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் என்ற எங்கள் திட்டம், மலையகத்தில் வெற்றி பெற பெரும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே எமது பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், தான் பொறுபேற்றுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு மூலமாக, மலைநாட்டில் லயன்களை ஒழித்து தனி வீடுகளை கட்டி வருகிறார். இந்த மலைநாட்டு வீடமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்த நாம் விரும்புகிறோம். அடுத்த ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுவது தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுரிமை இலக்குகளில் ஒன்றாகும். இதன் மூலமாகவே தோட்டத்துறை வாழ் தமிழ் மக்களின் லயன் வாழ்க்கை முறைமையை முழுமையாக ஒழித்து, வீடில்லா பிரச்சினையை தனி வீடுகள் மூலம் தீர்க்க முடியும். இந்நிலையில் தனி வீடுகளை அமைப்பதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை வீடுகள் கட்டப்படுவதற்கான மூலப்பொருட்களை மலைநாட்டில் திரட்டுவதாகும். இதனால் பாரிய தாமதம் ஏற்படுகிறது. ஆகவே மாற்று மூலப்பொருட்களை பயன்படுத்தி, உதிரி பாகங்களை தொழிற்சாலைகளில் செய்து, அவற்றை கொண்டு வந்து, பொருத்து வீடுகளை சடுதியாக கட்டும் திட்டத்தை நாம் ஆராய வேண்டும். உலகின் பல குளிர் வலய பகுதிகளில், சடுதியாக வீடுகள் கட்டப்பட வெற்றிகரமாக வழி ஏற்படுத்தியுள்ள இந்த பொருத்து வீட்டு திட்டம், மலைநாட்டில் நடைமுறையாக்கப்பட வாய்ப்புள்ளதா என்பதை நாம் ஆலோசித்து பார்க்க வேண்டும். வடக்கில் 65,000 தனி பொருத்து வீடுகளை கட்ட முடிவு எடுக்கப்பட்டு இருந்தாலும் கூட, அது இன்று அப்பிரதேச மக்கள் வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வெளியிட்ட எதிர்ப்புகள் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், வடக்கின் சீதோஷண நிலைமைகளுக்கு பொருந்தி வராது என்ற காரணம் இன்று ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. எனவே இதை குளிர் சீதோஷண நிலைமைகளை கொண்ட மலைநாட்டில் நிர்மாணிக்க முடியுமா என நாம் பார்க்க வேண்டியுள்ளது. மலைநாட்டின் நூறு வருடங்களுக்கு மேல் இழுபட்டு வரும் வீடில்லா பிரச்சினைகளை தீர்த்து தனி வீடுகள் கட்டும் திட்டத்தை, இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள எமது நல்லாட்சியின் முதல் ஐந்து வருட ஆட்சி காலத்துக்குள் முடித்துவிட எமது கூட்டணி விரும்புகிறது. இன்றைய எமது அரசாங்கத்திற்கு உள்ளே நாம் நிதானமாக காய் நகர்த்தி செயற்பட்டு வரும் இந்த காலத்துக்குள், இந்த பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், இதை என்றுமே இதை தீர்த்து முடியாது. ஏற்கனவே எமது பிரதித் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், தான் பொறுபேற்றுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு மூலமாக, மலைநாட்டில் லயன்களை ஒழித்து தனி வீடுகளை கட்டி வருகிறார். இந்த வீடமைப்பு திட்டத்துக்கு இலங்கை, இந்திய அரசுகள் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த மலைநாட்டு வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்த நாம் விரும்புகிறோம். இந்த பின்னணியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுபற்றிய சிபாரிசை நாம் முன்வைத்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழுவும் இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் உரிய முடிவை எடுக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/10168
  16. பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது -எஸ்.ஜெகநாதன் அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போது இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 'ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட இந்தப் பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இதனால் அதனைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சரியான வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும். இதன் மூலம் மீள்குடியேறிய அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்' என்றார். மீள்குடியேற்ற அமைச்சால் அமைக்கப்படவிருந்த இந்த பொருத்து வீடுகள் ஒவ்வொன்றும் தலா 2.1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை. இந்த பொருத்து வீடுகள் யாழ்ப்பாண சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத மற்றும் தரமில்லாத வீடுகள் என வடமாகாண சபையால் நிராகரிக்கப்பட்டது. எனினும், இது நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தார். இழுபறி நிலையில் இருந்த இந்த வீட்டுத்திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/173374#sthash.3BG1jRMh.dpuf
  17. பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை -சொர்ணகுமார் சொரூபன் அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “65 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வீட்டுத்திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட பொருத்து வீடுகளை நேரில் சென்று இன்று பார்வையிட்டேன். எனக்கு அந்த வீடுகளில் திருப்தியில்லை. வீடுகள் நீண்டகாலத்துக்கு பாவிக்க வேண்டும். அது அவ்வாறு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் ஈஸ்வரன் சரவணபவன் ஆகியோர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்த வீட்டுத்திட்டம் சரியில்லையென்பதை தெளிவுபடுத்தி மாற்றுத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். பொருத்தமானவற்றை தெரிவு செய்து, அதன் மூலம் பயனாளிகள் பயனடைய வேண்டும். மக்களுக்கு வீடுகள் எவ்வளவு முக்கியம் என்று எனக்குத் தெரியும். வீடுகள் இல்லாதவனுக்குத் தான் வீட்டின் அருமை தெரியும். இந்த 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை மாற்றுவழிகளில் பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுக்கான மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்” என்றார். - See more at: http://www.tamilmirror.lk/172187#sthash.OTPHRnF8.dpuf
  18. வட மாகாண முதலமச்சரிடம் பேச்சு மட்டுமே செயலில் எதுவுமில்லை என இந்து கலாச்சார மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மக்களின் நலன்கள் தொடர்பில் வட மாகாண முதலமச்சரின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண மக்களுக்கு 65000 வீடுகள் அமைக்கும் திட்டத்தினை நிராகரித்து வட மாகாணசபை அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த வீடமைப்பு திட்டம் உருவாக்கப்படவில்லை எனவும், ஜெனீவாவை திருப்திபடுத்தும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் விக்னேஸ்வரன் கடிதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தத்தின் பின்னர் வடக்கு மாகாணம் மக்களின் நலனுக்காக எதனையும் செய்யாது அரசாங்கத்தை விமர்சனம் செய்வதில் காலத்தை செலவிட்டு வருவதாக சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு தமிழ் மக்களின் சமூக, பொருளாதார மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கங்கள் முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் வட மாகாணசபை நிராகரித்து வருவதாகவும் இது வடக்கு மக்களை பாரதூரமான வகையில் பாதிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நோக்கங்கள் மற்றும் அரசியல் நோக்கங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130985/language/ta-IN/article.aspx