Search the Community

Showing results for tags 'தொடரும் நல்லாட்சிப் பயங்கரவாதம்'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கணினி வளாகம்
  • வலையில் உலகம்
  • தொழில் நுட்பம்
  • அறிவுத் தடாகம்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • அரசியல் அலசல்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • Newsbot - Public club's Topics
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணனி
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Found 24 results

 1. வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தென அர­சாங்கம் இறுதி நேரத்தில் சபையில் அறி­வித்­தி­ருந்­தது. பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலத்தின் இரண்­டா­வது வாசிப்பு மீதான விவாதம் நடத்­தப்­ப­டு­வ­தாக ஒழுங்­குப்­பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் சபா­நா­யகர் அறி­விப்பு, மனுக்­களை தாக்கல் செய்தல், பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரம், வாய்­மூல விடைக்­கான கேள்­வி­நேரம் ஆகி­யன நிறை­வ­டைந்து சபையின் பிர­தான செயற்­பா­டுகள் ஆரம்­ப­மா­வ­தாக சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய அறி­வித்தார். இச்­ச­ம­யத்தில் எழுந்த சபை­மு­தல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பணிப்­பாளர் நாய­க­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சரத் ஜய­மான்ன வகிக்கும் மேல­திக சொலிஷ்டர் பத­விக்­கான கொடுப்­ப­ன­வு­களை அங்­கீ­ரப்­ப­தற்­கான பிரே­ரணை முன் நகர்த்­து­வ­தாக கூறினார். இதன்­போது எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலம் இன்று(நேற்று) எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. வெகு­வி­ரைவில் எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்றார். சபை­மு­தல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்­லவும் நாம் அதனை(வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலத்­தினை) விரைவில் கொண்­டு­வ­ருவோம் என்றார். இதே­வேளை நேற்று முன்­தினம் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடிய நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அர­சியல் கட்­சித்­த­லை­வர்­களின் கூட்­டத்­தி­லேயே வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலத்­தினை இரண்டாம் வாசிப்­புக்­காக முன் நகர்த்­து­வ­தில்லை என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் குறித்த சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் விவாதிப்பதை உடன் நிறுத்தப்படவேண்டும் என்ற ஏகோபித்த தீர்மானத்தினை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-06#page-1
 2. இராணுவத்தினரது ஏற்பாட்டில் வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) நாளை கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வடமாகாணக் கல்வி அமைச்சால் மேற்கொண்டு அதற்கான நியதிச் சட்டத்தையும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவக் கட்டமைப்பின் கீழ் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் நிர்வாத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்த்தும் அவர்களைத் தொடர்ந்தும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் வைத்திருக்க விடுமாறு கோரியுமே இராணுவத்தினரது ஒழுங்கமைப்பில் நாளை கிளிநொச்சியில் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு நாளை வரும்போது சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளது கணவனையும் அழைத்து வருமாறு போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கான அழைப்பையும் அறிவுறுத்தல் நினைவூட்டலையும் இன்றைய தினமும் தொலைபேசியூடாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணத்தில் பொதுமக்களது சிவில் அமைப்புக்களில் தேவையற்ற இராணுவத் தலையீடு தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறித்து இம்முறையும் ஜெனீவாவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள முன்பள்ளிகளில் இராணுவத் தலையீடு அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் வடமாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் இராணுவம் தமது ஆமி ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஏதோ கற்பிக்க முற்பட்ட போதும் அதற்குக் கிழம்பிய கடும் எதிர்ப்புக் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். காணாமல் போனோரது உறவினர்கள், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரி மற்றும் பட்டதாரிகள் எனப் பலரும் அரசாங்கத்திற்கு எதிராகவே போராட்டம் நடத்தி வருகின்றார்கள். வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக எவரும் போராடவில்லை வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக நீங்கள் போராடுங்கள் அதற்கு எங்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் உண்டு என போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டிய முன்பள்ளிகளை தொடர்ந்தும் இராணுவம் தனது கட்டமைப்பின் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சியாக நாளை இராணுவத்தினரது ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டம் நடைபெறவுள்ளது. http://www.tamilwin.com/community/01/143550?ref=home-feed
 3. இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவியொன்றுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து யஸ்மின் சூக்கா கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். குறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சவேந்திர சில்வா இராணுவத்திலிருந்து இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இராணுவத்தின் எஜுடன்ட் ஜெனரல் எனப்படும் இராணுவத் தலைமையக பிரதம நிர்வாக அதிகாரி பதவி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயர் அதிகாரிகளுள் ஒருவரான யஸ்மின் சூக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இது குறித்து ஐக்கிய- நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ரஆத் ஹுசைனிடம் முறைப்பாடு செய்துள்ளார். போர்க்குற்றங்களில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்குவதில்லை என்ற உடன்பாட்டை இலங்கை மீறி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையே யஸ்மின் சூக்கா போர்க்குற்றங்கள் விடயத்தில் டயஸ்போராக்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. http://www.tamilwin.com/politics/01/141668?ref=view-latest
 4. கிளிநொச்சியில் இனம் தெரியாத இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் ஒருவரினால் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வயோதிப பெண்ணை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பார்வையிட்டுள்ளார். குறித்த பெண்மனியை சிறீதரன் நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை சாந்தபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த கேதீஸ்வரன் மாரியம்மா(வயது 65) என்ற வயோதிப பெண் மீது இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் கத்தியால் குத்தியிருந்தார். இதயைடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறித்த பெண்ணை நேரில் சென்று சந்தித்திருந்தார். இதன்போது, பெண்மணி நாடாளுமன்ற உறுப்பினருடன் உரையாடுகையில், இராணுவ சிப்பாயே தன்னை கத்தியினால் குத்தியதாக கூறியுள்ளதுடன், சாந்தபுரம் கிராமத்தை அண்டியுள்ள காட்டு பகுதியில் படையினர் காட்டு மரங்களை வெட்டி விற்பனை செய்துவருவதாகவும், அந்த விடயம் வெளியே தெரிந்த நிலையில் அந்த விடயத்தை ஆடு மேய்ப்பதற்காக செல்லும் நானே சொன்னதாக கூறப்படுவதன் அடிப்படையிலேயே இராணுவ சிப்பாய் தன்னை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார். மேலும் தன்னை குத்திய இராணுவ சிப்பாய் தன்னிடம் 5 தடவைகளுக்கும் மேல் இராணுவ சீருடையில் காட்டுக்குள் நின்று வெற்றிலை வாங்கி போட்டதாகவும் கூறியுள்ளதுடன், குறித்த இராணுவ சிப்பாயை தன்னால் அடையாளம் காட்ட இயலும் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் அவதானமாக இருக்குமாறு குறித்த வயோதிக பெண்மணியை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டு கொண்டுள்ளதுடன் விபரங்களையும் பெற்று கொண்டுள்ளதுடன் சம்பவ இடத்தை நேரில் பார்iயிட்டும் உள்ளார். http://www.tamilwin.com/community/01/137787?ref=home
 5. யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். யாழ். சாவகச்சேரியில் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் உள்ள குறித்த நிலையத்தை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார். இதில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா. மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின்போது பலத்த வரவேற்பளிக்கப்பட்டதுடன் பல கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/politics/01/137670?ref=top-imp-flag
 6. வவுனியா பிரதேசத்துக்குட்பட்ட நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஒலுமடுகிராமத்தில் 24.05.2016 அன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10வயது பாடசாலை சிறுமியின் வழக்கை நெடுங்கேணி பொலிசார் குற்றவாளிக்கு சார்பாகபதிவு செய்தமை அம்பலமாகியுள்ளது. இவ் வழக்கானது 03.03.2017 இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில்எடுத்துக்கொள்ளப்பட்ட போது நெடுங்கேணி பொலிசார் குற்றவாளிக்கு சார்பாகசிறுமியை சந்தேகநபர் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. அதேவேளை,, இப்பாலியல் குற்றவாளி ஆறு மாதங்களுக்கு முன்னரே பிணையில் விடுதலைசெய்யப்பட்டிருப்பதை அவதானித்த நீதிபதி மீண்டும் சிறுமி பாலியல் துஸ்பிரயோகவழக்கை கையேற்றதுடன், எதிர்வரும் 31.03.2017 அன்று நெடுங்கேணி பொலிசார் உட்படஅனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்,நெடுங்கேணி பொலிசார் குற்றவாளிக்கு சார்பாக வழக்கை பதிவு செய்திருந்ததுடன்,நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியிருந்தமையை அவதானித்த நீதிபதி என்னிடமிருந்துவிஷேடமாக சாட்சியை கேட்டுப்பெற்றுக் கொண்டார். பாதிக்கப்பட்ட எனது மகளின்விடயத்தை நெடுங்கேணி மற்றும் வவுனியா சிறுவர் நன்நடத்தை பிரிவு அதிகாரிகள்எனது மகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக எந்தவிதமான சட்டநடவடிக்கையையும்மேற்கொள்ளவில்லை என்பதுடன், எனது மகளுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல்களை கூடவழங்கியிருக்கவில்லை. என்றார். அத்துடன் எனது மகள் பாதிக்கப்பட்டமை தொடர்பாக வன்னி மாவட்டங்களுக்கான பிரதிபொலிஸ்மா அதிபர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்த போது பிரதி பொலிஸ்மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைவாக வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில்விஷேடமாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட போதும் அது தொடர்பாக எந்தவிதமானநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார். http://www.tamilwin.com/lifestyle/01/137551?ref=home
 7. காணாமல்போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த சத்தியாகிரக போராட்டமானது இன்று 12ஆவது நாளாக நீடித்து வருகிற நிலையில், குறித்த போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் காணாமல் போன தனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். சிறுவர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எப்போது வெளியாகியதோ, அன்று தொடக்கம் குறித்த தாய் இது தனது பிள்ளை என உரிமை கோரி வருகின்றார். இருப்பினும் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. இவ்வாறு கடந்த மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது இவர் தனது கைகளில் ஜனாதிபதிக்கு அருகில் தனது மகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், குறைந்தபட்சம் குறித்த சிறுமி பற்றியேனும் ஆராய்ந்து அவரை அவரது தாயுடன் இணைக்குமாறும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்னமும் இவருக்கான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அந்த புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினை காணமுடிகின்றது. மேலும் குறித்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவத்திடம் கையளித்த தமது பிள்ளைகளை தேடவேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர், அவர்களை கையளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/living/01/137550?ref=view-latest
 8. காணாமல்போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த சத்தியாகிரக போராட்டமானது இன்று 12ஆவது நாளாக நீடித்து வருகிற நிலையில், குறித்த போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த நிலையில் காணாமல் போன தனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். சிறுவர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எப்போது வெளியாகியதோ, அன்று தொடக்கம் குறித்த தாய் இது தனது பிள்ளை என உரிமை கோரி வருகின்றார். இருப்பினும் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை. இவ்வாறு கடந்த மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது இவர் தனது கைகளில் ஜனாதிபதிக்கு அருகில் தனது மகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், குறைந்தபட்சம் குறித்த சிறுமி பற்றியேனும் ஆராய்ந்து அவரை அவரது தாயுடன் இணைக்குமாறும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்னமும் இவருக்கான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அந்த புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினை காணமுடிகின்றது. மேலும் குறித்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ராணுவத்திடம் கையளித்த தமது பிள்ளைகளை தேடவேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர், அவர்களை கையளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/living/01/137550?ref=view-latest
 9. தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வலுவான சான்றுகள் உள்ள 11 கடற்படை அதிகாரிகளைக் கைது செய்யும் முயற்சியிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இறங்கியுள்ளனர். எனினும், எந்தவொரு கடற்படை அதிகாரியையும் கைது செய்யக் கூடாது என்று அரசியல் உயர்மட்டத்தில் இருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உறுதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்தக் கடத்தல்கள் கொலைகளில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பான உறுதியான சான்றுகள் குறித்த சாதகமான தகவல்கள் எம்மிடம் உள்ள நிலையில், கடற்படையினரைக் காவலில் எடுப்பது தவிர்க்க முடியாது. அவர்கள் போர் வீரர்களாக இருந்தாலும், நாட்டில் உள்ள எவரையும் கொலை செய்வதற்கு உரிமையில்லை, இழிவான குற்றங்களில் ஈடுபடுவதற்கு சீருடையின் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்ற உண்மையை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். இந்த கடற்படையினர், தமது சீருடையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று நம்புகிறேன். ஏற்கனவே கடற்படை லெப்.கொமாண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு அரசியல்மட்டத்தில் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவ்வாறு நடந்து கொண்டால்,குற்றப் புலனாய்வுப் பிரிவின் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள். கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கோட்டே நீதிவான், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். கப்டன் டி.கே.ஜே.தசநாயக்க, லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க, லெப்.கொமாண்டர் சுமித் ரணசிங்க மற்றும் கடற்படையினரான, உதய குமார, கே.விக்கிரமசிங்க ஆகியோரே காவலில் வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2017/02/15/news/21372
 10. பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். கேகாலை, நாபே ஸ்ரீ போதியக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், அவற்றை எழுத்துடன் மட்டுப்படுத்தாமல் பௌத்த மதத்தை போதிக்கும் அரசாங்கத்தின் பொறுப்பை மேலும் செயற்பாட்டு ரீதியாக அமுல்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் விஜயத்தின் நினைவாக சந்தன மரமொன்று குறித்த விகாரையில் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/politics/01/135716
 11. கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் தாயுடன் வாழ்ந்துவந்த யுவதி ஒருவரை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த இராணுவப் படை அதிகாரி ஒருவர் நேற்றிரவு 2.00 மணியளவில் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, கடந்த வருடம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதிக்கு இராணுவச் சிவில் அதிகாரியாக இருந்த லெப்டினன் சுரங்க என்னும் இராணுவ அதிகாரி அப்பகுதி மக்கள் வீடுகளுக்குச் சென்று மக்கள் தொடர்பான குடும்ப விபரங்களைப் பெற்றுள்ளார். அவ்வேளை பாதிக்கப்பட்ட மேற்படி யுவதி, மனநலம் பாதிக்கப்பட்ட தனது தாயாருடன் வசிப்பதைத் தெரிந்து அந்த யுவதிக்கு தாம் உதவுவதாக நாடகமாடி அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அத்துடன் அவ் யுவதியைத் திருமணம் செய்வதாகக் கூறி, மிரட்டித் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ;்பிரயோகம் செய்து வந்துள்ளார். இதை அறிந்த அப்பகுதிக் கிராம மட்டப் பொது அமைப்புக்கள் இவ்விடயம் தொடர்பில் அந்த இராணுவ அதிகாரியிடம் கேட்ட வேளை, தான் அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகவும் அவரையே தான் திருமணம் செய்யப் போவதாகவும், இவ்விடயத்தில் நீங்கள் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் அதை விட்டு எங்கள் விடயத்தில் தலையிட்டால் நடப்பது வேறு எனவும் மிரட்டும் பாணியில் கூறியுள்ளார். தற்போது கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள போதும் அந்த இராணுவ அதிகாரி ஊற்றுப்புலத்திலுள்ள மேற்படி யுவதியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து இரவில் தங்கி நின்று விட்டுச் செல்வதை அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அவதானித்துள்ளனர். மேலும் இவர் பற்றிய விபரங்களை, அறிந்த போது அவர் ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் திருகோணமலை புளுக்குணாவ என்னுமிடத்தில் அவரது குடும்பம் வசிப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்படி இராணுவ அதிகாரி நேற்றைய தினம் இரவு ஊற்றுப்புலத்திலுள்ள யுவதியின் வீட்டில் தங்கி நின்றதை அறிந்த அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உடனடியாகவே இராணுவப் பொலிஸாருக்கு (சீ.சீ.எம்.பி) தகவல் வழங்கி முறையிட்டு விட்டு அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். நேற்றிரவு 2.00 மணியளவில் அங்கு சென்ற இராணுவப் பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார்கள். இந்நிலையில் பாதிக்கப்பட்ட யுவதியை இன்றைய தினம் காலை அக்கராயன் இராணுவ முகாமுக்கு இராணுவத்தினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட யுவதியிடம் அப்பகுதி மக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இவ்விடயம் பற்றி கேட்ட போது, தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி அந்த இராணுவ அதிகாரி தன்னை வற்புறுத்தி மிரட்டியதாகவும் இது பற்றி தான் தனியே வாழ்வதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்ததாகவும் தன்னை இராணுவம் மிரட்டியுள்ளதாகவும் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் மேற்படி யுவதி பலதடவைகள் அச்சுறுத்தப்பட்டவர் போல மிகவும் பயந்த நிலையில் காணப்படுகின்றார். தமிழ் மக்கள் வாழ்விடங்களை இராணுவத்தினர் அபகரித்து மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் இராணுவப் படை முகாம்களை அமைத்துத் தங்கியுள்ளமையால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் மக்கள் மத்தியில் தங்கியிருப்பதால் இப்படியான சம்பங்கள் பல இடம்பெற்றுள்ளன. இதனால்தான் தமிழ் மக்கள் வாழ்விடங்களை விட்டு இராணுவம் வெளியேறி, தமிழ் மக்கள் வாழ்வியலின் மீது இராணுவம் தலையிடுவதை நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தைத் தமிழ் மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் நீண்ட காலமாகக் கோரி வருகின்றார்கள். http://www.tamilwin.com/community/01/135026?ref=morenews
 12. கிளிநொச்சியில் வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸாரை தாக்கி ஆயுதங்களை பறித்து செல்ல புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வந்த திட்டம் ஒன்றை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பல முறை இந்த தாக்குதலை நடத்த முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. புலிகளை மீளுருவாக்க முயற்சித்து வரும் இந்த நபர்கள் விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் புதைத்துள்ள ஆயுதங்களை தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப பிரிவினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இதில் தொடர்பு பட்டுள்ளதாகவும் அவர்கள் இரவு நேரத்தில் எவ்வித தடைகளும் இன்றி ஆயுதங்களை தோண்டி எடுக்கும் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தேசிய பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தல் என பயங்கரவாத விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. எது எப்படி இருந்த போதிலும் வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என சர்வதேச ரீதியில் கொடுக்கப்பட்டு வரும் அழுத்தங்கள் காரணமாக இலங்கை பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில், புலிகளின் மீளுருவாக்கம் போன்ற கதைகள் பின்னப்பட்டு வருவதாக பேசப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் சர்வதேச ரீதியில் இதுப்போன்ற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. இதனால், புலிகளை முற்றாக ஒழித்து விட்டதாக கூறி ராஜபக்ச அரசாங்கமும் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பான விடயங்களை முன்வைத்து செயற்பட்டது. இதனடிப்படையில் வவுனியாவில் ஓரிடத்தில் நடத்த மோதலில் புலிகளை மீளுவாக்க முயற்சித்த கோபி உட்பட சிலர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது. இப்படியான சூழ்நிலையில், மீண்டும் புலிகளின் மீளுருவாக்கம் பற்றி பேசப்பட்டு வருவதாக சமூக நல்லிணக்க ஆர்வலர்கள் கூறியுள்ளனர். http://www.tamilwin.com/community/01/134474
 13. நயினாதீவில் பெளத்த சின்னங்களை அதிகரித்து, பௌத்த மத அடையாளங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக, நயினாதீவு நாகதீப புரான விகாரையில் புதிதாக புத்தர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் நாள் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கருங்கல்லில் செதுக்கப்பட்ட இந்தப் புத்தர் சிலையை திறந்து வைத்தார். நாகபாம்பு மீது புத்தர் தியானத்தில் அமர்ந்திருக்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற லெப்.கொமாண்டர் ஜெயவர்த்தன இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். இந்த சிலை திறப்பு விழாவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி ஆகியோரும் கலந்து கொண்டனர். நயினாதீவில் சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் 120 மில்லியன் ரூபா செலவில், 75 அடி உயரமுள்ள பாரிய புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் முயற்சிகள் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. இதனால் சர்ச்சைகள் எழுந்த நிலையில் உரிய அனுமதிகள் பெறப்படாததால், யாழ். மாவட்ட அரச அதிபர் இதன் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2017/01/29/news/21002
 14. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும்போது, கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தக் கூடாது என படைத்தரப்பினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இந்த உத்தரவை மீறி செயற்பட்டால்,உங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்காது எனபடைத்ரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஜனாதிபதி இந்த மாதம் 25 ஆம் திகதி வருகை தருவார், மாற்றுக் காணிகள் மற்றும் 25 லட்சம் ரூபா செலவில் வீட்டுத் திட்டங்களையும் வழங்கிவைப்பார். இவற்றை பெற்றுக் கொண்டு அமைதியாக இருப்பதே நல்லது என படையினர் எச்சரிக்கைவிடுத்தனர் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாபிலவு கிராம மக்களுக்கு சொந்தமான 524 ஏக்கர் காணி,போரின் பின்னர்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அம் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு படையினர் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கேப்பாபிலவு கிராம மக்கள் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/security/01/132512?ref=home
 15. யாழ். நகரப்பகுதியில் பொலிஸாரின் தேவைக்காக திரைமறைவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நில அளவை திணைக்கள அதிகாரி கூறியதை அடுத்து கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் கடும் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் யாழில் எந்த காணிகளும் சுவீகரிக்கப்படக் கூடாது என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று காலை யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் இந்த ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்மொழிவுகள் செய்யப்பட்டன. இதன் போது யாழ். போதனா வைத்தியசாலைக்கான அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது. வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள 4 பரப்புக் காணி வைத்தியசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இக்கோரிக்கை தொடர்பில் நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரி கருத்து தெரிவிக்கையில், வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள 4 பரப்பு காணியும் பொலிஸார் தமது தேவைக்காக சுவீகரித்து தருமாறு கோரப்பட்டுள்ளது. இது தவிர யாழ். பிரதான வீதி நீதிமன்ற கட்டத் தொகுதிக்கு முன்பாக உள்ள 3 பரப்பு காணியும் பொலிஸ் தேவைக்காக சுவீகரித்து தருமாறு கோரப்பட்டுள்ளது. அக்காணியில் யாழ். விஷேட பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயம் அமைப்பதற்காகவே இக்காணி சுவீகரிப்பதற்கான இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார். இருப்பினும் கூட்டத்தில் இருந்த யாழ். பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள காணியை தாம் கோரவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இருப்பினும் ஜனாதிபதி செயலகத்தினால் உடனடியாக குறித்த காணியை சுவீகரித்து வழங்குமாறு விடுவிக்கப்பட்ட கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதாக அத்தாட்சிகளுடன் கூட்டத்தில் நிரூபிக்கப்பட்டது. இருப்பினும் அச்சுவீகரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டு காணி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் இல்லாமல் அரசாங்க அதிபரோ அல்லது பிரதேச செயலரோ தன்னிச்சையாக காணிகளை கைமாற்ற முடியாது. காணி கைமாற்றுதல் அல்லது சுவீகரித்தல் நடவடிக்கைகளுக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஒப்புதல் நிச்சயம் பெறப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. http://www.tamilwin.com/community/01/132537?ref=morenews
 16. மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும், குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும், அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதாக பண்னையாளர்கள் கூறியுள்ளனர். குறித்த பகுதியில் இன்று மாடு மேய்த்துக்கொண்டிருந்த வந்தாறுமூலை சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று பண்னையாளர்கள் மீது அவ்விடத்திற்கு வருகை தந்து அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகை தந்த ஏனைய இரு பௌத்த பிக்குகளும் சேர்ந்து அந்த பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என கூறி கண்ணத்தில் அறைந்துள்ளனர். அத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, தாக்குதலுக்கு உள்ளான குமாரசாமி பேரின்பம் என்பவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மூன்று பண்னையாளர்கள் மீது குறித்த பௌத்த பிக்குகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அடியை வாங்கிக்கொண்ட மூன்று பண்ணையாளர்களும் இன்று இரவு வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும்,சம்பவம் குறித்து கிழக்குமாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளதுடன், நாளைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். http://www.tamilwin.com/community/01/131254?ref=home
 17. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், உதவித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில், சிறிலங்காவின் அனைத்தும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான தனது பார்வையை, இரா.சம்பந்தன் பகிர்ந்து கொண்டார் என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் நல்லிணக்க மற்றும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான செயற்பாடுகள் முடக்க நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர், சிறிலங்காவின் அமைச்சர் மனோ கணேசனையும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்து நல்லிணக்க முயற்சிகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.net/2017/01/10/news/20579
 18. வருட ஆரம்பத்தில் கடமைகளை தொடங்கும் அரச உத்தியோகஸ்தர்களுக்கான சத்திப்பிரமாணத்திற்கான அரச அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் மற்றும் அந்நிகழ்வில் விடுவிக்கப்பட்ட அறிவிப்புகள் தமிழ் உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. குறிப்பாக அரச அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரே நாட்டின் ஒரே இனம் என்பதும், உயிரிழந்த படையினருக்கான மௌன அஞ்சலி என்ற சொற்பதங்களே உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. வருட ஆரம்பத்தில் மக்களுக்கான அரச சேவையில் ஈடுபடும் உத்தியோகஸ்தர்கள் மக்கள் சேவை தொடர்பான சத்தியப் பிரமாணத்தினை செய்து கொண்டு தமது பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து அரச திணைக்களங்கள், நிறுவனங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. அரசாங்கத்தின் அறிவிப்பின் படி நடத்தப்பட்ட இந்நிகழ்வில் உத்தியோகஸ்தர்கள் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளும் குறித்துக் காட்டப்பட்டிருந்தது. அக் குறிப்பிட்டில் நாட்டில் ஒரே இனமாக என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த வாசகம் பேனாவால் வெட்டப்பட்டு, அதன் மேலும் ஒரே இனம் என்பதற்கு பதிலாக ஒரு தேச மக்களாக என்று மாற்றப்பட்டும் இருந்தது. இதே போன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இன்றுமொரு இறுதி மொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்வில் மௌன அஞ்சலிக்கான அழைப்பு விடும் போது, அங்கு பணியாற்றி உயிரிழந்தவர்களுக்கும், நாட்டிற்காக உயிரிழந்த படையினருக்குமான அஞ்சலி செலுத்துவோம் என்று நிகழ்வினை தலைமை தாங்கியவர்களினால் அறிவித்தல் கொடுக்கப்பட்டது. இச் செயற்பாடுகள் வருட ஆரம்பத்தில் புதிதாக கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகஸ்தர்களை முகம் சுழிக்க வைத்ததுடன், நிகழ்விலும் சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/130373?ref=home
 19. மன்னார் தாழ்வுப்பாடு கிராம மீனவர்கள் தமது நிரந்தர தொழிலாக சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று முதல் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி மறுத்துள்ளனர். இந் நிலையில் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் இன்று காலை முதல் தாழ்வுபாட்டு கிராமத்தில் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் இருந்து இன்று காலை சுருக்குவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் இடை மறித்துள்ளனர். அத்துடன், சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மீனவர்களிடம் தெரிவித்ததோடு, மீனவர்களை கடலுக்குச் செல்வற்கான அனுமதியையும் மறுத்துள்ளனர். சுருக்கு வலையில் மீன்பிடிக்கும் நடவடிக்கையானது சட்டவிரோதமான செயற்பாடு எனவும், குறித்த மீன்பிடி முறைமையினை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் பல்வேறுபட்ட முறையில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைமைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவற்றை நிறுத்தினால் தாங்கள் சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட மாட்டோம் என மீனவர்கள் தெரிவித்தனர். எனினும் கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க அனுமதி மறுத்ததன் காரணத்தினால் ஆத்திரமடைந்த மீனவர்கள் தமது கிரமத்திற்குள் வந்து வீதியை மறித்து வீதித்தடைகளை போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வீதியில் டயர்களை எறித்தும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதன் போது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். எனினும் அரச பேரூந்துகளை மறித்து வைத்து நீண்ட நேரமாக மீனவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தற்போது பண்டிகைக்காலம் என்பதினால் மீனவர்களின் வாழ்வாதாரம் சுருக்கு வலை தொழிலையே நம்பியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறுபட்ட தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை பயன்படுத்தி மீனவர்கள் இன்று வரை மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் தொழிலை நிறுத்தாது சுருக்கு வலையினை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபடும் எமது தொழிலை நிறுத்த முயற்சிக்கின்றனர். மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுய நலத்துடன் செயற்பட்டு மீனவர்களுக்கிடையில் பல்வேறு மோதல்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றார் என மீனவர்கள் விசனம் தெரிவித்தனர். மழை பெய்துக்கொண்டிருந்த போதும் மீனவர்கள் தமது போராட்டத்தை கைவிடாத நிலையில் தொடர்ச்சியாக முன்னெடுத்தனர். இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தனது தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த நிலையில் ஏனைய மீனவர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் எவரும் வருகைதரவில்லை. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் பங்குத்தந்தை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்களுடன் உரையாடினர். இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அருட்தந்தை ஆகியோர் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியும் எனவும் அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். http://www.tamilwin.com/community/01/129743?ref=home
 20. முசலி பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லும் நிலையில் தொடர்ச்சியாக கடற்படையினரின் கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், கடலில் இருந்து கரை திரும்பும் வரை அச்சத்தின் மத்தியிலேயே இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழமை போல் இன்று(26) காலை கடற்தொழிலுக்குச் சென்றுள்ளனர். இதன் போது கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட முத்தரிப்புத்துறை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சோதனையிட்டதோடு, படகுகளின் ஆவணங்களையும் சோதனையிட்டுள்ளனர். இதன் போது முத்தரிப்புத்துறை மீனவர்களின் 7 படகுகளையும் குறித்த படகில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர் முத்தரிப்புத்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் விசாரனைகளை மேற்கொண்ட கடற்படையினர் படகுகள் மற்றும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ததோடு, ஒரு மீனவரை தடுத்து வைத்து விசாரனை செய்த பின் விடுதலை செய்துள்ளனர். இதனால் முத்தரிப்புத்துறை கிராம மீனவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதோடு மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல அச்சப்படுவதாகவும் முத்தரிப்புத்துறை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு முத்தரிப்புத்துறை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் செல்ல முற்பட்ட ஒருவரை மக்கள் பிடித்து தாக்கிய போது தாக்குதலுக்கு உள்ளான நபர் கடற்படைச் சிப்பாயி என தெரிய வந்த நிலையில் கடற்படையினருக்கும், முத்தரிப்புத்துறை கிராம மக்களுக்கும் இடையில் முறுகள் நிலை ஏற்பட்டது. இதன் போது தாக்குதல்களுக்கு உள்ளான கடற்படை சிப்பாயிகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடற்படை சிப்பாயிகளை தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 06 பேர் கைது செய்யப்பட்டு நாளை வியாழக்கிழமை(27) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முத்தரிப்புத்துறை கிராம மக்கள் உள்ள நிலையில் கடற்தொழிலுக்குச் செல்லும் குறித்த கிராம மீனவர்கள் மீது கடற்படையினர் தொடர்ந்தும் கெடுடிபிடிகளை மேற்கொண்டு வருகின்றமை முத்தரிப்புத்துறை கிராம மீனவர்களின் குடும்பங்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/122346?ref=home
 21. வலி. வடக்கு இராணுவ உயர் பாதுகாப்பிற்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள எமது காணிகளை விடுவிக்குமாறு கோரும் வாழ்வுரிமை போராட்டத்தினை நடத்த முடியாத அளவிற்கு நாங்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கடந்த காலங்களில் இருந்த அச்சுறுத்தலையும் விட நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் மிக மோசமான அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக பொது மக்கள் கூறியுள்ளனர். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை ஆய்வு செய்யப்பட்டு இராணுவத்தின் நிழலின் கீழ் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (19) யாழ். நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வலி.வடக்கு முகாம் மக்கள் தமது தமது மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியால் இரண்டாவது தடவையாக வழங்கிய 3 மாதகால வாக்குறுதிக் காலம் முடிவுறும் நிலையில் தமது மீள்குடியேற்றம் தொடர்பில் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்வுகளை மேற்கொண்டனர். இதன் போது முகாம் மக்கள் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வாழ்வதற்கான உரிமையினை கோர முடியாத இந்த நாட்டில் வாழ்வதை விட எங்களை புலம் பெயர் தேசங்களுக்கு நாடு கடத்திவிடுங்கள் என்று வலி.வடக்கு வாசிகள் உறுக்கமான கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். எங்களை எமது காணிகளில் குடியேற்றுமாறு கோரி பல வாழ்வுரிமைப் போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். மேலும் எமது முகாங்களுக்கு ஐ.நாவில் இருந்தும், எமது நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரும் வந்தும் எங்களை மீள்குடியேற்றுவதாக உறுதியளித்து சென்றிருந்தனர். இருப்பினும் எமது மீள்குடியேற்றம் தொடர்பில் எந்த விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. தொடர்ச்சியாக நாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம். இனிவரும் காலங்களில் எம்மை மீள்குடியேற்றக் கோரிக்கையினை முன்வைத்து போராட்டங்களை நடாத்துவதற்கு பயமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஏன் என்றால் எங்களை அச்சுறுத்துகின்றார்கள். இன்றும் இந்த நூல் வெளியிட்டு நிகழ்வு நாங்கள் வரும் போது, தொலைபேசியூடாக அச்சுறுத்தல் செய்யப்பட்டது. குறிப்பாக ஏன் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது? நீ எதற்காக அந்த நிகழ்வுக்கு செல்லுகின்றாய்? என்று கேட்கின்றார்கள். மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்திலும் வலி.வடக்கு முகாம் மக்களை சம்மந்தப்படுத்தி நடாத்தப்படும் போராட்டங்கள், நிகழ்வுகளினை ஒழுங்கு செய்பவர்கள், கலந்து கொள்பவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இருப்பினும் நல்லாட்சி என்று சொல்லப்படும் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. வாழ்வுரிமைப் போராட்டங்களையோ, நிகழ்வுகளையோ நடாத்த முடியாத அச்சமான நிலையிலேயே நாங்கள் இப்போது உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எங்களை சந்திக்க வருபவர்கள் எமது பகுதிகளை முழுமையாக விடுவிப்பதாகவே சொல்லுகின்றார்கள். ஆனால் பகுதி பகுதியான சிறு நிலப்பரப்புக்களையே விடுவிக்கின்றார்கள். விடுவிக்கப்படும் பகுதிகளிலும் மூலைக்கு மூலை முட்கம்பி வேலிகளை அடைத்து வைத்து இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளார்கள். எங்களுடைய காணிகளில் மீள்குடியேற்றப்படாமல் முகாம்களில் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து வரும் நாங்கள் எமது உரிமைகளை கேட்க முடியாத அச்சுறுத்தலான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம். எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் எதிர்க் கட்சித் தலைவராக இப்போது உள்ள நிலையிலும் கூட நாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத நிலையே இன்று உள்ளது. இவ்வாறு அச்சமான நிலையில் எங்களை வைத்திருப்பதை விட புலம்பெயர் தேசங்களுக்கு எங்களை நாடு கடத்தி விடுங்கள் என்றும் தெரிவித்திருந்தனர். மேலும் இக்கலந்துரையாடலில் சகலருடைய கருத்துக்களையும் உள்வாங்கிய பின்னர் மற்றுமொறு கலந்துரையாடல் நடத்தி மீள்குடியேற்றம் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தீர்மானிக்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/community/01/121670?ref=home
 22. புதிய காணி சட்டத்தின் மூலம் வடக்கில் உள்ள காணிகள் அதன் ஆரம்ப உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் காணிகளை பாதுகாப்பு படையினர் கையகப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இலகுவான முறையின் கீழ் இந்த காணிகளை மீண்டும் வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை மதிப்புக்கு அமைய இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/community/01/120136?ref=home
 23. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஸவினால் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினர் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைகளின் அடுத்த கட்டமாக முன்னாள் கணக்காய்வாளர் ஒருவரை நிதி மோசடி விசாரணை பிரிவினர் அழைத்திருந்தனர். முன்னாள் அமைச்சர் பசிலின் அறிவுறுத்தலுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு சீட்டு குறித்து விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கணக்காய்வாளர் அமைதியாக இருந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் குணமடையும் வரை அவரின் விசாரணைகளை ஒத்திவைத்த நிதி மோசடி விசாரணை பிரிவினர், மக நெகும திட்டத்தின் தற்போதைய கணக்காய்வாளரை விசாரணைக்காக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது. நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகிய மக நெகும திட்டத்தின் கணக்காய்வாளரிடம் சூட்சுமமான முறையில் உண்மைகளை வெளிக்கொண்டுவர பொலிஸார் திட்டமிட்டனர். இதன்படி “முன்னைய கணக்காய்வாளரிடம் விசாரித்த போது அவர் பயத்தில் மயக்கமுற்று விழுந்துள்ளார். அதைப்போல் நீங்கள் பயப்படாமல் கூறுங்கள்” என்று நிதி மோசடி விசாரணை பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். பின்னர் கணக்காய்வாளர் தனது பையிலிருந்து ஒரு ஆவணத்தை வெளியே எடுத்து நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகளிடம் கையளித்துள்ளார். இதை பார்த்த அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறித்த ஆவணத்தில் மக நெகும கணக்காய்வாளர் பதவியிலிருந்து உடனடியாக விலகப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி விலகுவதற்கு காரணம் என்னவென அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர், இதற்கு பதிலளித்த கணக்காய்வாளர், “முன்பிருந்த கணக்காய்வாளர்களுக்கு நடந்த சம்பவங்கள் எனக்கு நடப்பதை நான் விரும்பவில்லை. அதனால் தான் நான் இன்றே இந்த பதவியில் இருந்து விலகிப் போகின்றேன், முன்னதாக நடந்த சம்பவங்கள் தற்போதும் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றது, அதனால் மற்றவர்களின் பாவங்களை நான் சுமக்க விரும்பவில்லை, தவறு செய்த அமைச்சர்கள் எப்படியோ தப்பித்து கொள்கின்றார்கள். இறுதியில் அமைச்சர்களின் உத்தரவிற்கு அடிப்பனிந்து கடமையாற்றிய நாங்கள் தான் நீதிமன்றத்திற்கும் சிறைக்கும் செல்ல வேண்டிவரும் எனவும், அன்று நடந்தது இன்றும் எந்த மாற்றமும் இன்றி நடந்துக் கொண்டு தான் இருக்கின்றது என மக நெகும திட்டத்தின் கணக்காய்வாளர் குறிப்பிட்டுள்ளார்”. http://www.tamilwin.com/statements/01/119624?ref=editorpick
 24. மாணவர் மீட்பு பேரவையில் காணாமல் போனோர் சம்பந்தமான தகவல்களை திரட்டிவரும் நபருக்கு நீலவாணை ரீ.ஐ.டீ பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கல்முனை குவாரி வீதியைச்சேர்ந்த செல்லத்துரை சுதாகர் என்பவரே இவ்வாறான விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கருத்துத்தெரிவித்த அவர், தான் கல்முனையில் இயங்கி வரும் மாணவர் மீட்பு பேரவையில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்து செயற்பட்டு வருவதாகவும் அண்மைக்காலமாக இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை சேகரித்து எமது அமைப்பிற்கு கையளித்ததாகவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் எனது வீட்டிற்கு வந்த பயங்கரவாத குற்றப்புலனாய்வு பிரிவினர் என்னை விசாரித்து சென்றதாகவும், வேலை நிமிர்த்தம் குறிப்பிட்ட நேரத்திற்கு என்னால் அவர்களிடம் செல்ல முடியவில்லை. எனவே அவர்கள் மீண்டும் எனது வீட்டிற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு விட்டு சென்றனர். இது தொடர்பாக நான் உடனடியாகவே கல்முனையில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். http://www.tamilwin.com/crime/01/110204