• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'கவிதை'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 37 results

  1. இயற்கையின் இனிமையைத் தொலைத்து‌ மழலையின் சிரிப்பை மறந்து‌‌‌‌ நண்பனின் நகைச்சுவையைப் பிரிந்து‌‌‌ பெற்றோரின் பேணலைப் புறக்கணித்து‌‌ இரவு பகலாய் நிம்மதியைத் தொலைத்து பணப்பேயின் பிடரியைத் தொடர்ந்து பின் பலிகடாவாகி‌ சர்க்கரையை சகவாசம் செய்யும் நாமனைவரும்‌‌‌ இயந்திரமாய் திரியும் இவ்வாழ்க்கையில்‌‌ சுவரில்லா சித்திரமாய்‌‌ நரக‌ வாசம் செய்யும் நகரவாசிகளே !!!‌‌‌‌‌‌
  2. அருள்மொழிவர்மன்

    மறுஇரவு முழுநிலவாகுமோ!

    இரவில் இன்பம் தரும் உன் விரல்கள் பகலில் விலகிப் போக வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு மறுஇரவு முழுநிலவாகுமோ!
  3. கண் தெரியும் தூரம் வரை….. காலம் தின்று..துப்பிய …., எச்சங்களின் மிச்சங்களாய்…., செத்துப் போன வீடுகளின், எலும்புக் கூடுகள் ! வெறுமைகளை மட்டுமே…, வெளியே காட்டிய படி…, உண்மைகளை ஆழப் புதைத்து.., கண் மூடித் துயில்கின்ற….., வரலாறுகளின் சுவடுகள் ! அந்தத் திருக்கொன்றை மரத்தினுள்.., ஆளப் புதைந்திருக்கும் ….., வைரவ சூலம் மட்டும்…., எத்தனை வடை மாலைகளையும், எத்தனை தேசிகாய்களையும்,…., தன் மீது சுமந்திருக்கும் ? அந்தக் கருக்குவாச்சி மரம், எத்தனை காதலர்களின், இரவு நேரச் சந்திப்புக்களை…, விரக தாபங்கள் சிந்தும், கற்பூர சத்தியங்களை…., தன்னுள் புதைத்திருக்கும் ? காவோலைச் சேலை இழந்து…., கதியால் கரங்களால் …, தங்கள் மானம் காத்து.., காவிளாய்ச் செடிகளின் விரிப்பில், மறைந்து கிடக்கிறதே நிலம் ! ஒரு காலத்தில்,, கரும் பேட்டுக் குஞ்சுகளாய்…, வரம்புகளில் மரக்கறிகளும், வளவு நிறைந்த மிளகாய் மரங்களுமாய்., நான் செய்த தோட்டம் ! நத்தை பொறுக்கும் செண்பகங்களும்…., மிளகாய் கடிக்கும் கிளிகளுமாய் …, கல கலத்த தோட்டம்….! எனது மகன் …, உழக்கிய துலா கூட…., இன்னும் நிமிர்ந்தே நிற்கிறது ! மகன் கனடாவிலும்,,,. மகள் ஜெர்மனியிலும…..! பிள்ளைப்பெறு ….., பாக்கப் போன மனுசியும், பிள்ளையள் பாவம் எண்டு…. அங்கையே நிண்டுட்டுது ! அக்கினி சாட்சியான....., வசிட்டர் வடக்கிலும், அருந்ததி தெற்கிலுமாய்...., ஆரிட்டைப் போய் அழுகிறது ? உனக்கென்னப்பா பிரச்சனை எண்டு...., ஊரே பொறாமைப் படுகுது ! எனக்கென்ன குறைச்சல் ? ஆஸ்பத்திரி மாதிரி.., எல்லா மருந்துகளும்..., அலுமாரிக்குள்ள அடுக்கி இருக்கு ! ஆரோ ஒருத்தி வந்து.., அடிக்கடி சமைப்பாள் !, பொறுங்கோ….வாறன் ! வல்லுவத்துக்குள்ள போன் சிணுங்குது ! ஒரு பேரனோட இங்கிலிசும்…, மற்றப் பேரனோட ஜெர்மனும்.., தமிழில கதைக்க வேணும் ! எனக்கென்ன குறைச்சல் ?
  4. சிறகு முளைக்கும் முன்னரே..., இறக்கை விரிக்க வைத்த நாள்! பொத்திப் பொத்திப்.., பிள்ளை வளர்த்தவர்கள்..., பெற்ற மனசுகளை இறுக்கிய நாள் ! எங்கு போனாலும் பரவாயில்லை.., இங்கு மட்டும் வேண்டாம் ராசாக்கள் ...! எங்காவது தூர தேசம் போய் விடுங்கள் ! நாங்கள் உயிரோடு இருந்தால்.... நாளைக்கு எங்களுக்கு..., கொள்ளி போட வந்து விடுங்கள்! காணியை விற்றார்கள், கழுத்தில் கிடந்ததை விற்றார்கள்! கைகளில் கிடந்ததை விற்றார்கள்! காதுகளில் கிடந்ததையும் விற்றார்கள்! நாளைய நம்பிக்கைகளை, எஜன்சிகளிடம் கையளித்தார்கள்! உலகப் படத்தையே காணாதவர்கள்.., சில நாட்களுக்குள்..., உலகம் முழுவதையுமே.., உள்ளங் கையில் வைத்திருந்தார்கள்! இன்றோ...., கோவில்கள், கும்மாளங்கள், கும்பாபிஷேகங்கள்,,,,,, கறிப் பாட்டிகள்...,சாறிப் பாட்டிகள், கொண்டாட்டங்கள்....எனக், கொடி கட்டிப் பறக்கிறார்கள்! இடைக்கிடை...., சந்திப்புகளின் போது..., பியருக்குக் சொட்டைத் தீனியாய்.., பாரைக் கருவாட்டுப் பொரியலாய், கருவேப்பிலைக் கொத்தாய், கறுத்தக் கொழும்பான் மாம்பழமாய், யாழ்ப்பாண நினைவுகள்..., அவர்களுடன் வாழ்கின்றன! கொஞ்சம் போரடித்தால்...., ஊர்ப்பக்கம் ஒரு முறை.., எட்டிப்பார்த்து......, சோர்ந்து போன ஈகோக்களைக், கொஞ்சம் நிமிர்த்திய திருப்தியுடன்.., நீட்டிய வால்களை ..., மீண்டும் சுருட்டிக் கொள்வார்கள்! பீஜித் தீவில் ..., மொரிசியஸ் தீவில்..., தென்னாபிரிக்காவில்..., மலேசியாவில்...சிங்கப்பூரில், தமிழர்கள் வாழ்வது போல..., அமெரிக்காவில்....கனடாவில்..., இங்கிலாந்தில்....அவுஸ்திரேலியாவிலும், தமிழர்கள் வாழ்வார்கள்!..
  5. என் முதலாவது காதலியே...! உன்னை நெஞ்சோடு…, இறுக்கமாக அணைத்த நாள், இன்னும் நினைவிருக்கின்றது! நீ…,! எனக்கு மட்டுமே என்று.., பிரத்தியேகமாக... படைக்கப் பட்டவள்! உனது அறிமுகப் பக்கத்தில், எனது விம்பத்தையே தாங்குகிறாயே! இதை விடவும்…,, எனக்கென்ன வேண்டும்? உனது நிறம் கறுப்புத் தான்! அதுக்காக…., அந்தக் கோபாலனே கறுப்புத் தானே! அதுவே உனது தனித்துவமல்லவா? உன்னைப் பற்றி…, எனக்கு எப்பவுமே பெருமை தான்! ஏன் தெரியுமா? ஜனநாயகமும்...சோசலிசமும், உடன் பிறந்த குழந்தைள் போல.. உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!, உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது? என்னவளே...! தோற்றத்தில்…, நீ கொஞ்சம் பெரிசு தான்! அதுவும் நல்லது தானே! அதிலும்,,, ஒரு வசதி தெரியுமா? எந்த தேசத்தின் பணமானாலும், உனது ஆடைகளுக்குள் இரகசியமாக, மறைத்து விடலாமே! உன்னை அடைவதற்கு.., நான் பட்ட பாடு…, உன்னைத் தொடுவதற்கு, நான் கடந்த தடைகள், அப்பப்பா..! இப்போது நினைத்தாலும், இதயத்தில் இலேசாக வலிக்கிறதே! விதானையிடம் கூட…, கையெழுத்துக்கு அலைந்தேன்! விதானையின் விடுப்புக்களுக்கு…, விடை சொல்லிக் களைத்தேன்! பாம்புகள் போல நீண்ட வரிசைகளில், பல பகல் பொழுதுகள்..,, பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்! நாளைக்கு வந்திருவாள் என்றார்கள், நாலு நாட்கள் எடுத்தது! சில வேளைகளில்.., உனது அழகிய மேனியில்.. அன்னியர்கள் சிலர், ஓங்கிக் குத்துவார்கள்! அந்த வேளைகளில்.., உன்னை விடவும், எனக்குத் தான் வலிக்கும்! ஒரு நாள்…, உன்னை அந்நியர்களின் வீட்டில், அனாதரவாய்க் கை விட்டேன்! எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா? உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்! எனக்கோ, இரவு முழுவதும் தூக்கமேயில்லை! எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்.., இமைகளை மூட முடியவில்லை! விடிந்ததும்.., ஓடோடி வந்தேன் உன்னிடம்! உன்னைக் காணவில்லை என்றார்கள்! இதயத்தின் துடிப்பே,,,. அடங்கிப் போன உணர்வு! இரண்டு நாட்களின் பின்னர்.., அந்த உத்தியோகத்தரின், 'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,, உனது சக தோழிகளுடன்.., நாலாவது காலாகி..... நீ மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்! அப்போதும் கூடப் பார்..! உனது கறுப்பு நிறம் தான்…, உன்னை மீட்டுத் தந்தது! பத்து வருடங்களின் பின்னர்…, இன்னொரு காதலி வந்தாள்! நீ எனது முதல் காதலியல்லவா? உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை! கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்! வஞ்சகர்கள் அவர்கள்! இரண்டு லட்சம் கேட்டார்கள்! இரண்டு லட்சத்தை.., எங்கே தேடுவேன்! அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்! என் சொந்தங்கள் மீது,,,, எரி குண்டுகள் போடவாம்! ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்! உனது முகம் வாடியது தெரிந்தது! இறுக்கமாய் மனதை வரித்து, உன்னிடம் சொன்னேன்…! சரி தான் …. போடி! (உருவகக் கவிதை)
  6. ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நகரத்தின் புதிய தந்தை எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து நாற்காலியைக் கைப்பற்றிய நகரத்தின் புதிய தந்தைக்கு அவர் பராமரிக்கவேண்டிய பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது. சாதுவானவர்கள், அடங்காதவர்கள், ஊதாரிகள், அயோக்கியர்களென அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது. அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார். ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார். சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார். அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார் நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி ஒருவரும் வாய்திறக்கவில்லை -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 15.2.17) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்) (அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
  7. வார்த்தைகள் யாவும் வலுவிழந்து போகின்றன கார்த்திகை வானம் போல மனம் கனத்துக் கிடக்கின்றது நேற்று வரை எம்மோடு இருந்த நீ இல்லை என்ற சொற்கேட்டு இடி விழுந்த கோபுரம் போல இதயம் நொருங்கிக் கிடக்கின்றது ஆற்றல் மிகுந்த பேராசானே! நீ ஆக்கி வைத்த இலக்கியங்கள் இன்னும் நூறு தலைமுறைக்கு ஈழத் தமிழர் கதை சொல்லி வாழும் பழகிட இனித்திடும் வெல்லமே பார்வையாலே பேசும் பெருமகனே ஈழத்தமிழர் பெயர் சொல்லி எவர் இரந்து கேட்டாலும் இல்லை எனாமல் நிறைந்து வளங்கும் வள்ளலே உன்னால் உயர்ந்தவர் பலர் - எம் உள்ளத்தில் என்றும் நீ இருப்பாய் பெரும் கனலாய் வருகின்ற எம் படைப்புக்களின் இனியும் நீ வாழ்ந்து கொண்டேய் இருப்பாய்... #ஈழத்துப்பித்தன் 2002 காலப்பகுதிகளில் நாம் யாழ் களத்தில் நுழைந்த போது எம்மை தட்டிக் கொடுத்து வயது இடைவெளி பாராது சக நண்பனாய் எம்மோடு பழகியவரும் பல்துறைக் கலைஞனுமான "இராஜன் முருகவேள்" (சோழியான்) அவர்களின் நினைவு சுமந்து...
  8. பொய்த்துத்தான் போகாயோ ******************************* சத்தம் இன்றி - பெரும் யுத்தம் இன்றி சலசலப்பு ஏதுமின்றி சிணுங்கி வழிகிறாள் சிலநாளாய் வானமகள் முன்பெல்லாம் அவள் வரவு கண்டு ஆனந்தித்த பொழுதுகள் அளவுக்குள் அடக்க முடியாதவை மனம் ஆனந்தப்பூங்காற்று பாடி மமதையிலே திழைத்திருக்கும் மண் மணம் நாசி ஊடு புகுந்து மண்ணில் வாழ்ந்த நாளை மறுபடியும் மறுபடியும் கிளறி நிற்கும் ஊர் போய் வந்த பின்னர் உறவுகள் நிலை கண்ட பின்னர் பெய்யெனப் பெய்யும் மழை பிய்ந்த கூரை வழி வழிந்து நிறைவில்லா வீடுகளை நிறைத்து நின்றதனை கண்டதனால் நீ எம்மவர் நிலை மாறுமட்டும் பொய்த்துத்தான் போகாயோ எனும் பெரும் ஏக்கம் நெஞ்சமெங்கும்... #ஈழத்துப்பித்தன் 01.02.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_20.html
  9. மீண்டும் மீண்டும் உருவேற்றி மீளவும் நினைவில் பெருந்தீ மூட்டி சொல்லவும் மெல்லவும் முடியாமல் உள்ளத்தில் அனல்கின்ற சிறுபொறியை அணையாமல் காப்பது நம் கடனே அடையாளம் அத்தனையும் தொலைத்து அடுத்தவனின் கருச் சுமந்து கிடக்கிறாள் எங்கள் அன்னைத் தமிழீழ பூமி உள்ளத்தில் சுழன்றாடும் சிறு நெருப்பை உருவேற்றி கடத்துவோம் நாளை உலகுக்கு இனம் ஒன்று அழிந்ததன் அடையாளம் இல்லாமல் செய்தனர் அதைக் கூட தினம் அங்கு தடம் அழித்து அழித்து திருவிழா பூமியாய் மிளிருது இன்று பட்ட துயர் பகிருவோம் நாளை தலைமுறைக்கு கொத்துக் கொத்தாய் குதறி எடுத்த கொத்துக் குண்டின் தடம் கூட இல்லாமல் போனது செத்துக் கிடந்தவர் பிணம் கூட சிதை மூட்ட ஆளின்றி சீன அமிலம் தின்று தீர்த்தது முத்தான எம் முகவரி முடிந்து போனதை பதிந்து வைப்போம் மலை மலையாய் குவிந்த எம்மவர் மண்டை ஓடுகள் மேல் மலையாய் எழுந்து நிற்குது ஆக்கிரமிப்பின் சின்னம் அங்கு மாண்டவர் வரலாற்றை எம்மினமே மறுதலித்துக் கிடக்குது இன்று ஆண்ட தமிழினத்தின் அரச முடி நிலம் சரிந்து மீள முடியா அடிமையான கதை சொல்லி உனை உருவேற்று இன அழிப்பின் ஆதாரமாய் எஞ்சிக் கிடப்பது மே 18 மட்டுமே உன்னுள் தீ மூட்டி உனை உருவேற்றி உலகுக்கு அதை காட்டு பேதங்கள் ஆயிரம் எம்மை பிரித்துக் கிடந்தாலும் சாவுக்கு அழுவதற்கேனும் சமத்துவம் காணுவோம் இன அழிப்பின் அடையாளம் மே 18 அதை இறுகப் பற்றுவோம். ‪#‎ஈழத்துப்பித்தன்‬ 11.05.2016 (படங்கள் பறந்த வாகனத்துள் இருந்து மனம் கனத்துச் சுட்டவை.) http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_11.html
  10. சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு. முள்ளிவாய்க்கால் பேராவலம்முடிவில்லா ஓர் அவலம்பன் நாட்டுப்படை புகுந்துபல்லாயிரம் உயிர் தின்றுசொல்லாத கதை கோடிசுமந்து கிடக்கும் மண்ணதுவில்லாண்ட இனம் ஒன்றுவீறுகொண்டு போர் கண்டுவிடுதலைக்காய் வேள்வியொன்றைவிருப்புடனே நடத்தியதையைகண் காணச் சகிக்காதகாடையர்கள் கூட்டிணைவில்இனம் ஒன்று அழிந்ததுவேஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமேபல தேசம் வாழ்ந்தோம்பார் எங்கும வீதி வழி குவிந்தோம்பலனேதும் கிடைக்காமல்பரிதவித்து பைத்தியமானோம்இனப்படுகொலை ஒன்றைஇரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறிஇந்தியப் பெருங்கடலும் செந்நிறமாகஇடி வீழ்ந்துபோல் கிடந்தோமேஇமை மூட மறந்தோமேஆண்டுகள் ஏழுஅனல் இடை கரைந்துஅரவணைக்க ஆரும் இன்றிஅரற்றிக் கிடக்கிறோம் நாம்எங்கள் இரத்த உறவுகளே!ஆறாக உங்கள் இரத்தம்அலை புரண்டு ஓடிந்ந்திக் கடல்செங்கடல் ஆனபோதும்அகிலம் முழுதும்பரந்து கிடந்த எம்மால்எதுவுமே செய்யமுடியவில்லையேஎன்ற குற்ற உணர்வும்இயலாமையும்கண்களைக்குளமாக்கஉங்களை இழந்த நினைவுகளோடு....எங்கள் உரிமையை வென்றுஉலக அரங்கில்எமக்கான நீதியைப்பெறஅணிதிரள்வோம்அலை அலையாய்....ஓரணியில்..#ஈழத்துப்பித்தன்02.05.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/05/blog-post_13.html
  11. அன்னையர் தினம்..! அகிலத்தின் அன்னையர்களுக்கு…, இது ஒரு தினம் ! என் தேசத்து அன்னையருக்கு.., இது ஒரு செய்தி! எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம், நினைத்துப் பார்க்கையில்…! இதயத்தின் ஆழத்தில் …, எங்கோ ஒரு மூலையில், இலேசாக வலிக்கின்றது! அப்பா என்னும் ஆண் சிங்கம், பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்.., அடங்கிப் போன அம்மா! பிரசவங்களின் போதெல்லாம்,, மரணத்தைத் தரிசித்து…, மீண்டு வருகின்ற அம்மா! ஆண் என்றாலும். பெண் என்றாலும், ஆண்டவன் தானே தருகின்றான் என்று, ஆறுதல் கொள்ளும் அம்மா! அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை, ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்லை! ஆயுள் காப்புறுதியும் இல்லை! உரிந்த வேப்பம் பட்டைகளும், நல்லெண்ணையில் பொரித்த, வெறும் முட்டைப் பொரியலும், கொஞ்சம் வசதியிருந்தால்…, பச்சைக் காயம் ஆறி ப்போகக், கொஞ்சம் நற் சீரகம்! எப்போது தூங்குகிறாள்? எப்போது விழித்துக் கொள்கிறாள்? என்பது யாருக்குமே தெரியாது! ஒரு வேளை…, எரியாத ஈர விறகுகளுக்கும், அரிக்கன் லாம்புகளுக்கும் மட்டுமே, தெரிந்திருக்கக் கூடும்! அக்காக்களையும், தங்கைகளையும்.., ஓடி..ஓடிக் கவனிப்பாள்!, ஏனம்மா. எங்களை மட்டும் கடையிலா வாங்கினாய்? இல்லையப்பு…, உங்களுக்கு விளங்காது! இது தான் எப்போதுமே அவளது பதில்! நாளை அவளுக்கு எப்படியோ? உங்களுக்கென்ன? ஆம்பிளைச் சிங்கங்கள் நீங்கள் என்பாள்! அம்மா வைத்துக்கொள்ளுங்கள்! எதைக் கொடுத்தாலும், இன்னொரு பிள்ளையிடம் , அன்று மாலையே அது போய் விடும்! ஏனம்மா? என்று கேட்டால்…, எனக்கென்னதுக்கப்பு? அவன் பார்த்துக்கொள்ளுவான்! அவள் மீது கோபம் தான் வரும்! ,ஏன் அவ்வாறு செய்தாள்? அக்காவின் மீது…, அவளுக்கு விருப்பம் அதிகமா? தனக்குக் கொள்ளி வைக்கப் போகிறவன், கடைக் குட்டி…., அவன் மீது அவளுக்கென்ன, தனியான பாசமா? அன்று புரியவில்லை ! இன்று…., எல்லாமே புரிகின்ற போது.., அருகில் அவள் இல்லை! அம்மா…! சமன் படுத்த முயன்றிருக்கிறாள்! மேடு பள்ளங்களை… நிரவ முயன்றிருக்கிறாள்! சமுத்திரத்தின் அலையாக, வாழ்ந்து காட்டியிருக்கிறாள்! எவ்வளவு உண்மை? வசதியானதிடமிருந்து…, வசதி குறைந்தததுகளுக்கு, வசதிகளைப் பகிர்ந்திருக்கிறாள்! அவளுக்கு எல்லாமே குஞ்சுகள் தானே? இன்று எல்லாமே புரிகின்றது! இறைவன் என்பவன்…, எதற்காக.. அன்னையைப் படைத்தான் என்று! தான் போகாத இடங்களுக்கெல்லாம், தாயைத் தனது பிரதிநிதியாக்கினான்! அன்னையர் தின வாழ்த்துக்கள்!
  12. என் குரல் ஓய்ந்து போனதா?ஓய வைக்கப்பட்டதா?முடக்கப் பட்டு மண்ணுக்குள்மூடப்பட்டதா?புயல் புகுந்து சுழன்ற மண்ணின்பூ என்றுதானே சொன்னார்கள்இன்று புயலடித்து தின்றவாடிய மலரிதழாய்கூடு விட்டு வெளியில் வரமுடியாது செத்து கிடக்கிறதுகாரணம் தெரியவில்லைஅருகில் நின்றவரை கேட்கிறேன்திரும்பி கூட பார்க்காது போகிறான்நான் பார்ப்போரை கேட்டு கேட்டுகளைத்து என் தங்ககம் செல்கிறேன்.தேடி தேடி செத்துப் போன மனம்தோற்றுப் போய் கிடக்கிறது. தொடர்ந்து வாசிக்க ....http://www.kavikkural.com/2016/03/21/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/
  13. ஆனந்த விகடனில் இந்த வாரம் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி" என்ற எனது கவிதை தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ளது, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்குள் பனித்துளி ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக் கூட்டிவருவதைப்போல் இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம் கொண்டுவந்துவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம். நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி முழு வயலையும் வானத்தையும் தலைகீழாகப் பிரதிபலிக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் வெம்மையில்ஆவியாகிறது. மறுநாளும் அதே நெற்பயிரில் அதேபோல் பனித்துளி வானத்தையும் வயலையும் பிடித்துவைத்திருக்கிறது. பருவத்தே பூத்துவிடுகிறது மனசுக்குள்ளும் பனித்துளி இழப்பின் சுவடின்றி புத்தம் புதிதாக! (நன்றி ஆனந்தவிகடன் 20.1.16)
  14. ஆனந்த விகடனில் சென்ற வாரம் (30.12.15) "திருடன் விளையாட்டு” நிலாக்கனவு" என்ற எனது இரு கவிதைகள் வெளியாகியுள்ளன, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் திருடன் விளையாட்டு ராஜா ராணி மந்திரி போலீஸ் திருடன் சீட்டெழுதிப் போட்டு விளையாடியது சண்டையில் முடிந்தது. அழுதுகொண்டே ஓடி வந்த நிலா சொன்னாள்.... “ராஜா - ராணி மந்திரி - போலீஸ், எல்லாரும் திருடன்!” நிலாக்கனவு நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் அந்தக் கனவில் நிலாக்குட்டி வருகிறாள் விழித்துப் பார்த்தால் நிலாக்குட்டி என்னை துயிலெழுப்புகிறாள் கனவில் அவளைக் கண்டுகொண்டிருந்ததை கதையாகச் சொல்கிறேன் நிலாக்குட்டி தூங்கிப்போகிறாள். கனவு கலைந்து நான் துயிலெழுகிறேன் கதையைச் சொல்லலாமென்றால் நிலாக்குட்டி தூங்கிக்கொண்டிருக்கிறாள். -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன்)
  15. ஆனந்த விகடனில் இந்த வாரம் (26.11.15) "நடு விழா" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நடு விழா! என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள் என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள் என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள் என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள் என்னை நட உன்னை அழைத்தார்கள்! நன்றி: ஆனந்த விகடன்.
  16. ஆனந்த விகடனில் இந்த வாரம் (18.11.15) "சிறுவர்களின் வீடு" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சிறுவர்களின் வீடு சுற்றுச்சுவரில் ஒரு சிறுவன் பச்சிலையால் ஸ்டம்ப் வரைகிறான். வாசலில் ஒரு சிறுவன் பாண்டி விளையாடுகிறான். முற்றத்தில் ஒரு சிறுவன் மழையிலாடுகிறான். கூடத்தில் ஒரு சிறுவன் பல்லாங்குழி விளையாடுகிறான். சமையலறையில் ஒரு சிறுவன் சாமிக்குப் படைப்பவற்றை ருசிபார்க்கிறான். கழிப்பறையில் ஒரு சிறுவன் கதவைத் திறந்துவைத்துப் போகிறான். குளியலறையில் ஒரு சிறுவன் சத்தமாகப் பாடுகிறான். படுக்கையறையில் ஒரு சிறுவன் அம்மாவின்மேல் கால்போட்டுத் தூங்குகிறான்.... ஞாபகங்களால் வேய்ந்த என் வீட்டில் சிறுவர்கள் மட்டுமே வசிக்கிறார்கள்! -சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்.
  17. ஆனந்த விகடனில் இந்த வாரம் (28.10.15) "பூம்பாவாய்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பூம்பாவாய் பூம் பூம் மாடு வாசலில் நிற்கிறது. அதன் அலங்கார உடை கண்டு அறியாதார் அதிசயிப்பர். கொம்புகளின் கூர்மை குத்திக் கிழிக்குமோ என்று குழந்தைகள் அஞ்சும். பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால் செய்கிற வேலையை விட்டுவிட்டு ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள். நான் அந்த மாட்டுக்கு இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன் அவளிடம் கேட்டுக்கொண்டு! (நன்றி: ஆனந்தவிகடன் 28.10.15)
  18. இந்த வார ஆனந்த விகடனில் (8.10.15-14.10.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதைவெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! வடை மழை வயற்காட்டிலிருந்து திரும்பும்போது கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில் தேன் மிட்டாயோ வரிக்கியோ மறக்காமல் வாங்கி வருவார் அப்பா வானம் இருட்டிக்கொண்டு மழை வரும் அறிகுறி தெரிந்தால் உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா. மழை வரும் நாளில் கண்டிப்பாக வடை சுடுவாள் என்று தூறலோடு ஓடிவருவார் அப்பா, அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு. ‘என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று ஓடிவரும் பிரியாக்குட்டியிடம் அம்மா சொல்வாள் ‘இன்னைக்கு உங்கப்பா உனக்கு மழை வாங்கி வந்திருக்கார்’ என. அதையும் நம்பிவிடுவாள் மின்னல் கண்ணைப் பறிக்கும் என்ற பயமின்றி ஜன்னல் வழியே கைநீட்டி மழை வாங்கிக்கொள்ளும் பிரியாக்குட்டி. -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி. ஆன்ந்த விகடன் 14.10.15)
  19. இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! உள்ளுறையும் ஈரம் ஊருக்கு வரும்போதெல்லாம் அம்மாவிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி மழையேதும் பெய்துச்சா? அம்மா கூடுதலாக இன்னொரு பதிலும் சொல்வாள் விடுப்பில் வந்தபோது நீயும் வீட்டுக்கு வந்து போனாய் வழக்கம்போல் என் நலத்தை விசாரித்துச் சென்றாய் என்று. நான் இல்லாதபோதும் என் மண்ணில் மழை பொழிவதும் என் மனையில் நீ புகுவதும் எனக்கு மகிழ்ச்சியே. பிடிவாதம் என்ற செல்லாக்காசின் இரு பக்கங்களாய் நீயும் நானும்! -சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்
  20. 27.8.15 ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, தளத்தின் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். மந்திரக்காரி! என்னை ஒரு நாய்க்குட்டியாக இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக தலையணை மெத்தையாக கண்ணீர்த்துளிகளை ஒற்றி மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல் அவளிடம் இருக்கிறது. பிறர் காணும்போது அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும் என்னை மாற்றிக்காட்டும் மாயவித்தைக்காரி அவள். வார நாட்களில் என்னை நானாக்கி வாசல் நிலையில் சாய்ந்து நின்று வழியனுப்பிவைப்பாள் மந்திரக்கோலை முதுகில் மறைத்து! - சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்
  21. நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்... அதைத் தாங்கக் கூடிய மக்கள் ஆதரவென்னும் கவசம் எம்மிடம் உண்டு! எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது! எமது ஆத்ம பலமோ அதைவிட வலிமை வாய்ந்தது! எதிரியின் குண்டுகள் வெடிக்கும்... ஆனால் எமது விடுதலை நெஞ்சங்கள் எரிமலையென வெடிக்கும் சத்தத்தில் அதன் சத்தம் அமுங்கிவிடும்! நாம் அணிவகுத்துள்ளோம்... நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது அணிவகுப்பு எமது தமிழ்ஈழ மக்களிடையே அணிவகுத்துச் செல்கிறது! நாம் செல்லும் இடமெல்லாம்... எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்! மக்களிடத்தில் உள்ள பிரதேசம் சாதி மதமென்னும் பேய்களும் அலறி ஓடுகின்றன... எமது படையணி விரைகிறது... எம தேசத்தை மீட்க! நாம் செல்லும் இடமெல்லாம்... காடுகள் கழனிகள் ஆகின்றன! வெட்டிப் பேச்சு வீரர்கள் மிரண்டோடுகின்றனர்...! உழைப்போர் முகங்களில் உவகை தெரிகிறது ஏழைகள் முகங்களில் புன்னகை உதயமாகிறது. (1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை) ------------------------------
  22. இளம்பிறை கவிதைகள் ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் நிரம்பித் ததும்பும் நீர் உங்கள் கிணற்றிலிருந்து தூர் வாரி வெளியேற்றப்படும் வெற்று மண்ணாய்க் கொட்டப்படுகிறேன் நான். என் கிணற்றில் எப்போதும் நிரம்பித் ததும்பும் நீராக இருக்கிறீர் நீங்கள். இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி திருப்பித் துரத்தும் பேராறு எதிர்பாரா தருணத்தில் சாபச் சாம்பலை வீசிமறையும் வரம் கேட்ட தெய்வங்கள் புழுதி மண்ணில் புரண்டழுது அடம்பிடிக்கும் குளிப்பாட்டி துடைத்தெடுத்த நினைவுகள் தனித்தனியே விழிப்பைச் சுற்றிலும் பசித்த மலைப் பாம்புகளாகத் தொங்கிக்கொண்டிருக்கும் பயத்தின் நாவுகள் இருள் வனத்தில் மின்மினிப் பூச்சிகளாகிப் பறந்துகொண்டிருக்கும் உயிர் மனம் கவ்விப் பறக்கும் பெரும் பறவையொன்றின் வெளிர் வண்ண இறகுகள் உதிர்ந்து கிடக்கும் வற்றிய ஏரியில் வானம் உரசிப் பறக்கும் முன்பு அமர்ந்து மீன் தின்ற பறவைகளைப் பார்த்து வரப்போகும் மழைக்காலத்தை எண்ணிக் கொண்டது ஏரி நீங்களும் நனைவீர் ஜென்மம் முழுதும் செலவழித்தே வாழ்ந்தாலும் தீரப் போவதில்லை அவமதிப்புகளால் பொறிக்கப்பட்ட என் துயர நாணயங்கள் என் ஒரு கரத்தை இன்னொரு கரத்தால் பற்றிக்கொண்டு எழுந்து நிற்பது உங்களை சபிக்கவோ . . . முந்திச் செல்லவோ . . . என்ற அச்சம் பதற்றம் அறவே தவிர்ப்பீர் வாழ்வதற்காக மட்டுமே எரியும் காட்டில் தீச்சுடர் பார்க்கத் திரளும் நீங்களும் நனைந்து மகிழும் மழைநாள் . . . வரும் எனக்கு. கனவுகள் எவையுமற்று பெரு வெள்ளச் சுழல்களில் சிக்கி உள்ளிழுத்துச் செல்லப்படும் நீந்தப் பழகாத கன்றுக்குட்டியின் உயிர் போராட்டத்துடன் விடியும் பொழுதுகளில் தடைகள் கடந்து விரைந்தோடிக்கொண்டிருக்கிறேன் என் தூரம் எங்கோ கிடக்கிறது அன்பு வண்ணம் பூசப்பட்ட உள்ளங்களின் வஞ்சகம் புரிந்த பின் பொய்யும் நடிப்பும் பொறுக்க முடியா இயல்பின் நெருக்குதல் சுமந்து விரைந்தோடிக்கொண்டிருக்கும் நானோ அசதியுறும் போதெல்லாம் அவமதிக்கப்பட்ட பிரியங்களின் உறைந்த ரத்தகட்டிகள்மீது சற்றயர்ந்து, கண்மூடிக்கொண்டிருக்கிறேன் கனவுகள் எவையுமற்று. காலச்சுவடு: ஜூலை 2012
  23. இப்ப போகலாமென மனம் அடித்துக் கொள்கிறது. 83இன் பின்னர் மறந்து போயிருந்தவையெல்லாம் நினைவிற்குள் மீண்டன. கறுப்பு வெள்ளைப் போட்டோ ஆல்பம், புத்தகக் கவருக்குள் ஒளித்து வைத்த காதல் கடிதங்கள், திண்ணைச் சுவரில் எண்ணெய் பிசுக்காய் அப்பியிருக்கும் ஆச்சியின் அடையாளம். பின்முற்றம் கக்கூஸ் கிணற்றடி இத்தனை காலமாய் மறந்து போயிருந்த அனைத்தையும் கூட்டி நினைவிற்குள் மீட்க புகாராய் எதுவும் ஒட்டமாட்டேன் என்கிறது. என் மண் என் நாடு என் மக்கள் படபடக்கின்றது மனம் தங்குவதற்கு வசதியான இடம் சப்ப “சுவிங்கம்” சாப்பாட்டு ஒழுங்கும் போக முன்பே செய்ய வேண்டும். இல்லாதவர்களுக்குக் குடுக்க கொஞ்ச பழைய உடுப்பு சொக்லேட்டுப் பெட்டிகள், பென்சில்கள், ரப்பர்கள் எல்லாவற்றையும் பரப்பிவிட்டு கையில் “பாஸ்போட”, “ரிக்கேற்ருடன்” விழிக்கின்றேன். எந்த முகத்தோடு போவதென்று தெரியாமல்.....!!!! http://www.ilankathir.com/?p=2896
  24. வழக்கமாக எழும் நேரத்திலேயே இன்றும் எழுந்து விட்டேன்...! விழிக்கும் போதே கடவுளிடம் பிராத்தனை செய்து கொண்டேன் நேற்று நடந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதிருக்க... இன்னும் கொஞ்சம்நேரம் தூங்கி இருக்கலாம் என கெஞ்சுகிறது அந்த கீழிமைகள்... நேற்றைய தினங்களின் பிடிக்காமல் போன முன் அனுபவங்களால் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன் இன்றாவது ஒழுங்காக இரு என்று... இருந்தும்., தேவதை ஒருத்தியின் உதாசீனப் பார்வையிலும், கசக்கி, பிழிந்து வெளியேத் தள்ளி பின்பு வழக்கம் போல புறப்பட்ட பேருந்து பயணத்திலும் .. டேய்.. வீட்ல, சொல்லிட்டு வந்துட்டியா என சபித்துவிட்டுப் போன ஆட்டோக்காரனிடமும்... அலுவலகம் சென்று மறதியால் செய்த பிழைக்காக மேலாளரிடமும்... வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன... அந்த பிரியமற்ற தினத்தின் கோரமான நிகழ்வுகள்... இன்று படுப்பதற்கு முன் மறுபடியும், வேண்டிக்கொண்டேன்.. இன்று போல நாளையும் இருக்கக் கூடாதென்று....! -வேடந்தாங்கல்
  25. உள்ளாடையும் கிழிந்து அந்தரங்கம் காட்டுகிறாள் கோயில் பிச்சைக்காரி.. அவளையும் தாண்டிச்செல்கிறார்கள் சாமிக்கு பட்டுச் சேலை சாத்த... http://www.ilankathir.com/?p=2593