• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Search the Community

Showing results for tags 'கண்ணதாசன்'.



More search options

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. காலமெல்லாம் கண்ணதாசன்- ஆர்.சி.மதிராஜ் திரைப்பாடல்களில் எப்போதும் பட்டொளி வீசிப் பறப்பது கவியரசு கண்ணதாசன் கொடி. அவரின் நிழலில் நாம் ஆறுதல் பெறலாம். அமைதியுறலாம். காதலிக்கலாம். கண்ணீர் உகுக்கலாம். கவிஞரின் ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒரு கதை இருக்கும். கதைக்குள் ஒரு வாழ்க்கை இருக்கும். வாழ்க்கைக்குள் நாம் இருப்போம். நமக்காக, நம்மைப் பற்றி எழுதப்பட்டவை கண்ணதாசனின் பாடல்கள். பிறப்பு, வளர்ப்பு, சடங்கு, சம்பிரதாயம், காதல், காமம், திருமணம், சிக்கல், பிரச்சினை, வாழ்க்கை, உறவு, பிரிவு, வெறுப்பு, அமைதி, தத்துவம், மரணம் என்று அவர் தொடாத எல்லை, இல்லை! ஒரு படைப்பு, நம் ஆன்மாவைத் தொடவேண்டும். கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் நம் ஆன்மாவை வருடிவிடுபவை. நம் ஆன்மாவுக்குள் ஓயாது அடித்து அலைக்கழிக்கும் அலையும் அவரே. நம் ஆன்மாவுக்குள் அமைதியை நிலவச்செய்யும் ஆழ்கடலும் அவரே. நான் ரசித்த, சிலிர்த்த கவியரசரின் பாடல்களுக்குள், நான் அடைந்த ஆறுதலுக்குள், நான் பெற்ற அமைதிக்குள் உங்களையும் கூட்டிச்செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவே இந்தப் பயணம். கண்ணதாசன் எனும் தேர், வலம் வந்த வீதிகளில்... எனது நடைவண்டிப் பயணம் இது. வாருங்கள் கவியரசரின் சுண்டுவிரல் பிடித்து... அவருக்குள்ளேயே நுழைவோம். பாடல் : கண்ணே கலைமானே படம் : மூன்றாம் பிறை இசை : இளையராஜா குரல் : ஜேசுதாஸ் இயக்கம் : பாலுமகேந்திரா கவிஞரின் கடைசிப்பாடலாக அமைந்த பெருமை பெற்றது `கண்ணே கலைமானே' பாடல். கவியரசரின் கடைசிக் காலடிச் சுவட்டில் பிஞ்சுப் பாதம் பதித்து, திரும்ப அவருக்குள் நடந்துபார்க்கும் சுகம் அலாதியானது. ------------------------------ பல்லவி கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன் ராரிரரோ...ஓ..ராரிரோ... ராரிரரோ...ஓ..ராரிரோ... சரணம் 1 ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதிலொரு அமைதி நீயோ கிளி பேடு - பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது சரணம் 2 காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் உனக்கே உயிரானேன் - எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சந்நிதி ------------------------------ நாயகனிடம் ஒரு பொம்மை கிடைக்கிறது. உயிருள்ள பொம்மை. குழந்தை மனதுடன் குமரிப்பெண் வடிவில் அவன் கைகளில் தஞ்சமடையும் பொம்மை. யாருமற்ற அவனுக்கு, அவளே எல்லாமுமாக இருக்கிறாள். குழந்தையாக, குறும்பாக, காதலாக, கண்ணீராக... அவளைத் தன் சிறகுகளுக்குள் ஒரு பொக்கிஷம்போல பொத்தி வைத்துக்கொள்கிறான் நாயகன். இரவும் பகலுமாய் அவளைப் பார்த்துக்கொள்கிறான். இறைவனிடமும் இதையே வேண்டிக்கொள்கிறான். குழந்தைகளை, குறிப்பாகப் பெண் குழந்தைகளை, குழந்தைகளாகக்கூடப் பார்க்கத்தெரியாத நஞ்சு கலந்த இன்றைய சமூகத்திற்கு மிக மிக அவசியமான ஒரு பாடலை அள்ளித்தந்திருக்கிறார் கவியரசர். அந்தக் காட்சியில் ஒலிப்பது, தாலாட்டுப்பாடலா என்றால், ஆமாம், தாலாட்டுப்பாடல்தான். காதல் பாடலா என்றால் ஆமாம்... காதல் பாடல்தான். அமைதி வேண்டும் நெஞ்சுக்கு ஆறுதல் சொல்லும் பாடலா என்றால், இதிலென்ன சந்தேகம்... அதுவேதான். காதலியாய் இருக்கும் குழந்தைக்காக பாடுவது போல முதல் சரணத்திலும் இரண்டாவது சரணத்தில் குழந்தை மனம் கொண்ட காதலியிடம் சொல்வது போலவும், அத்தனை நுட்பமாய் எழுதியிருக்கும் கவியரசரின் திறன் சொல்லுக்குள் அடங்காதது. ஊமை என்றால் ஒரு வகை அமைதி ஏழை என்றால் அதிலொரு அமைதி நீயோ கிளிப் பேடு - பண்பாடும் ஆனந்தக் குயில் பேடு ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது ஊமை என்பதை ஊனத்தைச் சொல்வதாக அல்லாமல், சொல்லற்று, நினைவுகளற்று, உயரத்திலிருக்கும் ஒரு பறவை தன் சிறகசைப்பை நிறுத்தி சற்றே அந்தரத்தில் மிதக்குமே... அப்படி ஓர் அமைதி... அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் நாயகனும் நாயகியும் இருக்கின்றனர். பேடு என்ற சொல்லுக்கு அர்த்தம், ஆணுமல்லாத பெண்ணுமல்லாத மூன்றாம் பாலினம் என்கிறது அகராதி. ஆனால் குழந்தையாகவும் இல்லாமல் குமரியாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் சிக்கித்தவிக்கும் நாயகியைக் குறிப்பிட கிளிப்பேடு, குயில்பேடு என்று அர்த்தம் கொள்ளலாம். அதிலும் சிறகுகள் முளைக்காத, பறக்கத் தெரியாத ஒரு கிளிக்குஞ்சுபோல் நாயகி இருக்கிறாள். பெண்களின் ஏழு நிலைகளில் முதல் நிலை பேதை. கள்ளம் கபடமற்ற குழந்தைமை பொங்கும் முதல் நிலை. இப்படி அவளைப் பேதையாக்கி வைத்திருக்கும் தெய்வத்தின் சதி, ஏனென்று தெரியாமல் புலம்பும் நாயகனின் நிலை நம்மையும் உடைத்துப்போடுகிறது. பார்த்துப் பார்த்து வளர்க்கும் குழந்தையிடமும், பார்த்துப் பார்த்து வளர்த்த காதலியிடமும் மனசு எதிர்பார்ப்பது ஒன்றைத்தான். அவர்கள் நம்முடனேயே இருக்கவேண்டும். எப்போதும் நம் அரவணைப்பில் நாம் அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். சிறகுகள் முளைத்தபின்னும் நம்மை விட்டுப் பறந்துவிடக்கூடாது. நாம் ஒருபோதும் பிரிந்துவிடக்கூடாது. வளர்த்த அன்பை மறந்துவிடக்கூடாது. அணைத்த கைகளை உதறிவிடக்கூடாது. எவரின் மனம்தான் பிரிவை விரும்பும்? அதுவும், பிடித்தவரின் பிரிவை? குழந்தை மனம் கொண்ட நாயகி, ஐந்து வயது வரைக்குமான நினைவுகளிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அதற்குப் பின்பான அவளது மனம் சுத்தமாக அழிக்கப்பட்ட சிலேட்டு போல் நினைவுகள் துடைக்கப்பட்டிருக்கிறது. எப்போதேனும் அவளுக்கு நினைவு திரும்பினாலும் இந்த என் நேசத்தை அவள் மறந்துவிடக்கூடாது என்பது நம்முடையதைப்போலவே நாயகனின் பிரார்த்தனையாகவும் இருக்கிறது. உனக்கே உயிரானேன் - எந்நாளும் எனை நீ மறவாதே நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சந்நிதி என்கிற நான்கு வரிகளுக்குள் நாயகனின் ஒட்டுமொத்தக் காதலையும் நம்மால் உணர்ந்துவிட முடிகிறது. கவிஞரின் வரிகளுக்கு வழிவிட்டும், நம்முன் வழியவிட்டும், பின்னணி இசையில் பாந்தமாய் உடன்வரும் இசைஞானியின் இசை, பாடலின் அடிநாதம். பாடல் முடிந்தபின்னும், ராரிராரோ.... ஓ.. ராரிராரோ... என்று நம் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் ஜேசுதாஸின் குரல், பாடலின் உயிர்நாதம். இது காதலுக்கு மட்டுமின்றி அன்புக்கான வேதம். சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி இந்தப் படத்தில் கதை நாயகியாகவே வாழ்ந்திருப்பார். `ஏனோ தெய்வம் சதி செய்தது, பேதை போல விதி செய்தது' என்ற வரிகள் அவரது அஞ்சலிக்காக பலராலும் எடுத்துக்காட்டப்பட்ட வரிகள். ஒரு தாலாட்டுப்பாடலே அப்படத்தின் நாயகிக்கு அஞ்சலிப்பாடலாகவும் அமைவதெல்லாம் வரமன்றி வேறென்ன? - பயணிப்போம் https://www.kamadenu.in/news/series/378-rc-mathiraj-new-series-kalamellam-kannadasan.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category