Search the Community

Showing results for tags 'ஆனந்த விகடன்'.More search options

 • Search By Tags

  Type tags separated by commas.
 • Search By Author

Content Type


Forums

 • யாழ் இனிது [வருக வருக]
  • யாழ் அரிச்சுவடி
  • யாழ் முரசம்
  • யாழ் உறவோசை
 • செம்பாலை [செய்திக்களம்]
  • ஊர்ப் புதினம்
  • உலக நடப்பு
  • நிகழ்வும் அகழ்வும்
  • செய்தி திரட்டி
 • படுமலைபாலை [தமிழ்க்களம்]
  • துளித் துளியாய்
  • எங்கள் மண்
  • வாழும் புலம்
  • பொங்கு தமிழ்
  • தமிழும் நயமும்
  • உறவாடும் ஊடகம்
  • மாவீரர் நினைவு
 • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
  • கவிதைப் பூங்காடு
  • கதை கதையாம்
  • வேரும் விழுதும்
  • தென்னங்கீற்று
  • நூற்றோட்டம்
 • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
  • வண்ணத் திரை
  • சிரிப்போம் சிறப்போம்
  • விளையாட்டுத் திடல்
  • இனிய பொழுது
 • கோடிப்பாலை [அறிவியற்களம்]
  • கணினி வளாகம்
  • வலையில் உலகம்
  • தொழில் நுட்பம்
  • அறிவுத் தடாகம்
 • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
  • அரசியல் அலசல்
  • மெய்யெனப் படுவது
  • சமூகச் சாளரம்
  • பேசாப் பொருள்
 • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
  • நாவூற வாயூற
  • நலமோடு நாம் வாழ
  • நிகழ்தல் அறிதல்
  • வாழிய வாழியவே
  • துயர் பகிர்வோம்
  • தேடலும் தெளிவும்
 • யாழ் உறவுகள்
  • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
  • யாழ் ஆடுகளம்
  • யாழ் திரைகடலோடி
  • யாழ் தரவிறக்கம்
 • யாழ் களஞ்சியம்
  • புதிய கருத்துக்கள்
  • முன்னைய களம் 1
  • முன்னைய களம் 2
  • பெட்டகம்
 • ஒலிப்பதிவுகள்
 • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
 • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
 • Newsbot - Public club's Topics
 • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
 • தமிழ்நாடு குழுமம்'s கணனி
 • தமிழரசு's நாபயிற்சி
 • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
 • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
 • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
 • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
 • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
 • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
 • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில் 360'
 • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
 • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
 • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
 • தமிழரசு's வரவேற்பு
 • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
 • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
 • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
 • தமிழரசு's படித்ததில் பிடித்தது
 • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
 • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
 • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
 • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
 • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

Calendars

 • நாட்காட்டி
 • மாவீரர் நினைவு

Blogs

There are no results to display.

There are no results to display.


Found 8 results

 1. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 1 ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 | பகுதி 2
 2. சொல்வனம் படம்: கே.ராஜசேகரன் அன்பு எனும் நான் என் அன்பு ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம் மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல் கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும் தாய் யானைப் பிளிறல் சத்தம் கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா முதுகாவலாளியின் குட்டித் தூக்கம் இறுதிவரை சொல்லப்படாத ஒருதலைக் காதல் கண்ணீர்த்துளி பெருக்கும் இரவின் கனிவான பாடல் பைத்தியம் கையேந்தும் அதிகாலைத் தேநீர் நோய்வாய்ப்பட்ட வயோதிகன் விரும்பிக் கேட்கும் விடுதலை மரணம் என் அன்பு… - தர்மராஜ் பெரியசாமி ஓவியக்காரி சுவரெல்லாம் கிறுக்கத் தொடங்கிய லாவண் குட்டி முதலில் காடு வரைந்தாள் மரக்கிளையில் மீன் வரைந்தாள் நதி வரைந்தாள் அதன் நீரில் விலங்குகள் வரைந்தாள் வானம் வரைந்தாள் அதன்மேலே படகு வரைந்தாள் கடல் வரைந்தாள் அதன் மேலே விமானம் வரைந்தாள் அடுத்து என்ன வரைவதென யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவள் கனவிலும் எதையோ வரைந்துகொண்டிருப்பாள். - கோ.பகவான் காதல் காலம் இன்றும்கூட சட்டை காலரில் கர்சீப்பை வைத்துக்கொண்டு போகும் ஆண்களின் முகத்தை வலிய வந்து பார்க்கிறாள் விமலா அக்கா; இன்றும்கூட நம்பிக் கொண்டிருக்கிறாள் ரயில்வே டிராக்கில் அடிபட்டு செத்த முகமழிந்த பிணம் வில்லியம் அண்ணா இல்லையென; இன்னும்கூட நின்று கொண்டிருக்கிறது அந்தப் பேருந்து நிழற்குடையும் தட்டச்சுப் பயிலக பாதாம் மரமும் காவியக் காதலுக்கு சாட்சியாய்; இன்றும்கூட உயிரோடிருக்கிறார் ஊர்ப் பெரியவர் சதாசிவம் தான் எப்போதோ செய்துவிட்ட பாதகங்களுக்கு கோயில்தோறும் பாதயாத்திரை செய்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டு; இன்றும்கூட எங்கோ வளர்கிறது வில்லியம் அண்ணாவின் வெளிர் நிறத்தில் விமலா அக்காவின் அழகான கண்களுடன் ஓர் அனாதைப் பிள்ளை; இன்னும்கூட எங்கோ மூலையில் கிடக்கிறது அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ் தடி நோட்டில் விமலா.s வில்லியம்.j என்ற பெயர்கள்... - கோஸ்ரீதரன் http://www.vikatan.com
 3. ஆனந்த விகடன் (15.2.17) இதழில் வெளியான எனது "நகரத்தின் புதிய தந்தை" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! நகரத்தின் புதிய தந்தை எல்லாவற்றையும் மாற்றப்போவதாக வாக்களித்து நாற்காலியைக் கைப்பற்றிய நகரத்தின் புதிய தந்தைக்கு அவர் பராமரிக்கவேண்டிய பிள்ளைகளின் கணக்கு கொடுக்கப்பட்டது. சாதுவானவர்கள், அடங்காதவர்கள், ஊதாரிகள், அயோக்கியர்களென அனைவரின் புள்ளிவிவரம் அவரிடமிருந்தது. அடங்காதவர்களை அவர் கலாச்சாரக் காவலர்களாக்கினார். ஊதாரிகளுக்கு வெகுமதிகள் கொடுத்தார். சாதுவானவர்களுக்கு வேலைகளைப் பகிர்ந்தளித்தார். அயோக்கியர்களைத் துணைக்கு வைத்துக்கொண்டார் நகரம் முன்பைவிட நரகமானதைப் பற்றி ஒருவரும் வாய்திறக்கவில்லை -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 15.2.17) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின்நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்) (அல்லது நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில்இணைத்துவிடவும்)
 4. 30.11.16 ஆனந்த விகடன் இதழில் தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ள எனது "மாநகரத்தின் அகதிகள்" கவிதையை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மாநகரத்தின் அகதிகள் தேசத்தின் வல்லசுரக் கனவினால் தம் வாழிடங்களை விட்டுத் துரத்தப்பட்ட ஒரு மாநகரத்தின் அகதிகள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனித்த பகுதிகளில் வசிக்கிறார்கள் வாக்குரிமையும் ரேஷன் அட்டையும்கூட சொந்த நிலத்தில் மட்டுமே அவர்களுக்குண்டு. அங்குள்ள வங்கிக் கணக்கையும் அவர்கள் இங்கிருந்தே பராமரிக்கிறார்கள். கால்வயிறு அரைவயிற்றுக் கஞ்சியோடு அங்கே சில கால்நடைகளும் மனிதர்களும் அதில் ஜீவிக்கிறார்கள் பண்டிகைகள் நிமித்தம் தம் சொந்தநிலங்களுக்கு பிதுங்கி வழியும் பேருந்துகளிலும் ரயில்களின் கழிவறை அருகிலும் பயணிக்க முடியும் என்பது இம்மாநகரத்தின் அகதிகளுக்கு இம்மாபெரும் தேசம் வழங்கியிருக்கும் சகாயம். -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 30.11.16) (எனது பதிவுகளில் படங்களை இணைக்க முடியவில்லை. யாழ் தளத்தின் நெறியாளர் அல்லது தோழர்கள் அதற்கான வழிமுறையைக் கூறவும்) (அல்லது வழக்கம்போல் நான் இணைக்க முயன்ற படத்தை இப்பதிவில் இணைத்துவிடவும்)
 5. 10.8.16 மற்றும் 17.8.16 ஆனந்த விகடன் இதழ்களில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.... யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சமக் குறியீடு நெடுஞ்சாலையோர பெரும் உணவகம் முன் நடந்துவரும் என்னை அழைக்கும்முன் நீ சற்று யோசித்திருக்க வேண்டும். விசிலூதி என்னை உண்ண அழைத்தது உன் தவறுதான். பணம் இல்லை என்பதை மறந்து பசி வந்தது என் தவறுதான் பசியோடு வருகிறவனை விசிலூதி அழைக்க உன்னைப் பணித்திருப்பது அவன் தவறுதான். இதில் யார் தவறு பெரியதென்ற வாதம் தவிர்த்து, நம் தவறுகளுக்கிடையே சமக் குறியிட்டு என்னை வெளியேற அனுமதி அய்யனே. -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 10.8.16) சேகரிப்பு நண்பர்களின் கிண்டல்கள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் எதையாவது சேகரித்துக்கொண்டே இருப்பது சேகரின் பால்ய பழக்கம் விதவிதமான இறகுகளை, இலைகளை, மலர்களை, முட்களை, கிளிஞ்சல்களை, வளையல் துண்டுகளைச் சேகரிக்கும் சேகர் பின்னாளில் விதவிதமான அழைப்பிதழ்களைச் சேகரிக்க ஆரம்பித்தான். திருமணமானமாகி வெகுநாட்களுக்குப் பிறகு தனியே வெறுங்கையோடு எதிரில்வந்த சேகர் இப்போது விதவிதமான ஞாபகங்களைச் சேகரிப்பவன்போல் தோன்றினான். -சேயோன் யாழ்வேந்தன் (ஆனந்த விகடன் 17.8.16) நன்றி: ஆனந்த விகடன் (நன்றி: ஆனந்த விகடன்)
 6. இந்த வார ஆனந்தவிகடனில் (6.7.16) வெளியாகியுள்ள "சே குவேரா, இறுதியில் விடுதலையாகிறார்!" என்ற எனது கவிதையை யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! சே குவேரா இறுதியில் விடுதலையாகிறார்…! பொலிவியக் காடுகளில் மறைந்துவாழ்ந்த சே குவேரா இப்போதெல்லாம் சர்வசாதாரணமாக எம் மாநகரத்தில் தென்படுகிறார். மதுபானக் கடையிலிருந்து வெளியே வரும்போது வியர்வையில் நசநசத்துத் தள்ளாடியபடி வரும் அவர் “ஏய்… ரெட் டீ ஷர்ட் நாயே, சொல்லிட்டு வந்துட்டியா?” எனும் தன்னைக் குறித்த காரோட்டியின் வசவுகளை வழக்கமான புன்னகையுடன் கடந்துசெல்கிறார். பெட்டிக்கடையில் நின்று அவன் புகைக்கையில் டிரேட் மார்க் சுருட்டோடு உடனிருக்கும் அவர் ஹெல்மெட் அணிந்து பைக்கில் விரைகையில் எதிர்க்காற்றில் நெஞ்சோடு ஒட்டிக்கொள்கிறார். ஒரு குறுகிய சாலையில் இளம்பெண்ணின் கழுத்துச் சங்கிலியை அவன் களவாட முயல்கையில் சற்றே பதற்றமடைந்து, சங்கிலியை ஒரு கையால் பற்றியபடி அவள் மறுகையால் பிடித்திழுத்ததில் கிழிந்து அவள் கைக்குள் சென்றுவிட்ட சே குவேரா இப்போது விட்டு விடுதலையாகிச் சிரிக்கிறார்! -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன்)
 7. இந்த வார ஆனந்தவிகடனில் (20.4.16) வெளியாகியுள்ள எனது கவிதை "மீள வரும் குளம் ... ", யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மீள வரும் குளம்..... நீர் உரசிப் பறக்கும் தட்டான்கள் தாழ்வான மரக்கிளையில் ஒரு மீன்கொத்தி மறைந்திருந்து கூவும் ஒரு போர்க்குயில் வளைந்த மொட்டைப் பனையில் ஒரு கிளி மரச்சரிவில் ஒரு மரங்கொத்தி.... பதிவுசெய்து வைத்திருந்த காட்சிகள் மீளவருகின்றன மனக்கண்ணில் வற்றிய இந்தக் குளக்கரையில். -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன் 20.4.16)
 8. இந்த வார ஆனந்தவிகடனில் வெளியாகியுள்ள எனது இரு கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. லட்டு மாதிரி இருப்பது காலையில் வேலைக்குக் கிளம்புகையில் இரண்டரை வயது எதிர்வீட்டுச் சுட்டி ‘அங்கிள், லட்டு மாதிரி இருக்கீங்க!’ என அதிரடித்தாள். ‘நான் பெரிய லட்டு, நீ சின்ன லட்டு’ என்று சொல்லிவிட்டு வரும் வழியில், பருத்த உடலா, மஞ்சள் சட்டையா என் கொஞ்சல் பேச்சா லட்டு என்றிடக் காரணம் தேடிக் குழம்பி, லட்டுகள் உருளும் சாலையில் ஓடி லட்டைக் குடித்து லட்டை உண்டு, லட்டுகள் எரியும் மாலைப் பொழுதில் வீடு திரும்பும் வரை, சின்ன லட்டு சொன்னதுதான் மனதில் ஓடியது. லட்டு மாதிரி இருக்கிற பெண்ணால் யாரையும் லட்டாக்கிவிட முடிகிறது. உயிர்த் தீ தொலைக்காட்சியின் குழப்பமான காட்சிகளை பார்க்கப் பிடிக்காமல் சட்டென்று ரிமோட்டால் அணைத்த அந்தக் கணத்தில்தான் அவளுக்கு அந்த எண்ணம் முதன்முதலாக வந்தது.... உந்திச் சுடர் பற்றி எரியும் அந்தத் தீபத்தை ஒரு நொடியில் ஊதி அணைத்துவிட்டால் எந்தக் காட்சியையும் பார்க்கத் தேவையிராது.