2009 இறுதி யுத்த முடிவின் பின், 15 வருட புலிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் போரை வென்ற, அடுத்தடுத்து பதவிக்கு வந்த "சிங்கள அரசியல்" இந்த நாட்டு சிங்கள மக்களுக்கு (தமிழர்களை விடுங்களன்) இன்றுவரைக்கும் செய்தது எதை? போராட்ட காலத்தில் வீட்டில் இருந்தவன் இப்போது ரோட்டில் பிச்சையெடுக்கிறான்.
தான் பதவிக்கதிரையில் அமர்வததற்கே 2019 இல், 263 பொது மக்களை தேவாலயம், நட்சத்திர ஹோட்டல், புனித நாள், பெருநாள் பார்க்காமல் குண்டு வைத்து தகர்த்து, சிதைத்த அரசியல் மாட்சி உள்ளவன், தமிழனுக்கு வெள்ளி தட்டில் வைத்து விடிவு, ஞாயம் வழங்கியதை போலவும் அதை எதோ நம்மவர்கள் புறங்கையால் தட்டி ஒதுக்கியதை போலவும் இங்கே கூவி கூவி 8 பக்க உரையாடலை நிகர்த்தியவர்களை நினைத்தேன். சிரிப்பதா அழுவதா தெரியவில்லை.
புலிகளை விமர்சனம் செய்வதில் தவறு கிடையாது, ஆனால் அதில் நேர்மையாக இருக்க வேண்டும், அதற்கும் அப்பால் அந்த விமர்சனத்தின் நோக்கம் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.