Jump to content

Sasi_varnam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1969
  • Joined

  • Last visited

  • Days Won

    13

Everything posted by Sasi_varnam

  1. இந்த கருத்தாடலின் ஒரு அங்கமாக விளங்கக்கூடிய ஒரு திரியை கோஷன் கடந்த மாதம் திறந்து சில கருத்துக்கள், பதிவுகளை வைத்திருந்தார். அதாவது இன்றைய நாளில் தமிழ் மக்களுடைய தேவை என்ன நிலைப்பாடு என்ன என்கிற தலைப்பு என நினைக்கிறன். அதில் நாம் எதிர்நோக்கும் சவால்கள், தடைகள் போன்றன குறித்தும் அடிப்படைகள் கேள்விகள், அலசல்கள் கூட வைக்கப்பட்டிருந்தது. இன்றைய சூழலில் நான் நினைக்கிறேன் இந்த 13 குறித்து சிங்கள மக்களிடம் பிணக்குகள் வளர்ப்பது தவிர்த்து, இன்னும் சொல்லப் போனால் காலாவதியாகிய, நிராகரிக்கப்பட்ட 13 ஐ இணைத்து தமிழர்களின் பிரச்சினையை கதைப்பதை கூட தள்ளி வைத்து விட்டு, இன்றைய இலங்கையின் யதார்த்த சூழலில் சிங்கள மக்கள்படும் ஒட்டு மொத்த துன்பங்களுக்கும் காரணம் இந்த அதிகார மையம், அதிகார குவியல் ஒரே இடத்தில் இருப்பது தான், அந்த 75 வருட அதிகார குவியலால் நாட்டுக்கு, சிங்களவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தீமைகள் என்ன? இனிமேலும் இப்படியே போனால் அந்த மக்கள் எதையெல்லாம் சந்திக்கப் போகிறார்கள் போன்றன குறித்த பிரக்ஞயை உருவாக்குதல் வேண்டும். அவர்களுக்கும் கூட (சிங்களவர்களுக்கு)அதிகார பரவலாக்கல் எவ்வளவு நன்மையை அவர்களுடைய மாகாணங்களுக்கு, அவர்களுடைய மக்களுக்கு பயனளிக்கும் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். அதாவது எமது பிரச்சினையை முன்வைத்து பேசுவதை சற்றே முதுகுக்குப் பின் மறைத்து விட்டு, சிங்களவனுடைய சிக்கல்களை பேசலாம். குறிப்பாக இந்த கொழும்பு சார்ந்த அதிகார மையம்!! அந்த உரையாடலில் தெளிவு பிறக்கும் பட்சத்தில் அப்படியே பக்கத்தில் உள்ளவனுக்கும் பாயாசம் எண்டது போல் நாமும் எமக்கு கிடைக்கவேண்டியதை சரியான புரிதலோடு, உடன்பாட்டோடு பெற்றுக்கொண்டு அனைத்தையும் கட்டி எழுப்பலாம். அதே நேரம் இந்தியா எப்படியெல்லாம் எமக்கு சகுனியாக இருந்திருக்கிறது... இனிமேலும் கூட இருக்கும் என்பதையும் சேர்த்தே உரையாடலாம். தமிழர்களின் போராட்டம் என்றுமே இதர இனங்களுக்கோ, மதங்களுக்கோ எதிராக தொடங்கிய, வழிநடத்தப்பட்ட தொன்றன்று என்ற உண்மையை அழுத்தி சொல்லி புதிய, இளைய சமுதாயத்தை நோக்கி குரல் கொடுத்து பார்க்கலாம். இதெல்லாம் நடக்கிற காரியமா தெரியவில்லை. ஆனால் குறைந்த பட்சம் அந்த சிங்கள மக்களிடம் எமது பிரச்சினைகளை பேசக்கூடிய ஒரு வெளியை உருவாக்கலாம்!! 🙂
  2. அப்படி விம்பகத்திலிருக்கும் படப்பிரதியை அகற்றினால் உங்கள் ஆக்கத்தில் நீங்கள் இணைத்த அந்த படமும் கூட அகன்றுவிடும் என்று நினைக்கிறன். இணையவன் நீங்கள் பரிந்துரைக்கும் படங்கள் இணைப்பது தொடர்பான சரியான முறையை பற்றி மீண்டும் ஒருமுறை அறியத்தருவீர்களா?
  3. யாழ் இணையத்தின் முகப்பில் வரும் Browser--> Activity --> முகப்பு --> Leaderboard --> Our Picks --> Club என்ற பயன்பாட்டு தலைப்புகள் தெரியும் அதில் Browser--> பிரிவின் கீழே காணப்படும் >> Forums / Gallery / Blogs / Events / Online Users இதில் Gallery இதை தெரிவு செய்து அங்கே இருக்கும் [Add Image] ஐ அழுத்தி அதில் காணப்படும் பிரிவில் Continue without using an Album தெரிவுசெய்து உங்களிடம் இருக்கும் படத்தை (உங்கள் கணனியில் இருக்கும்) படத்தை தெரிவு செய்து தரவேற்றம் செய்து கொள்ளுங்கள் பிறகு நீங்கள் புதிதாக எழுதும் திரியில் Insert Image என்னும் பயன்பாட்டை தெரிவு செய்ய நீங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்த உங்கள் படம் அங்கே காட்டும், அதை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் படத்தை நீங்கள் உருவாக்கும் அந்த திரியில் இணைத்து விடலாம். எல்லா புகழும் ஏராளனுக்கே
  4. இதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன்... தொடருங்கள் ஜஸ்டின் 👍
  5. மன்னிக்கவும் அண்ணா.. நிறைய விஷயங்கள் தெரிந்த நீங்கள் இப்படியான டுபாக்கூர் மீம்ஸ் படங்களை பகிர்வதை தவிர்க்கலாம். 🙏
  6. வணக்கம் நிழலி இந்த அறிக்கை; அதன் பின்னணி, நோக்கம் என்ன? RAW அல்லது இதர கட்டமைப்புகள் இப்படியான செய்திகளை பரப்பி எதை சாதிக்க நினைக்கிறார்கள்? இதை இன்னும் தெளிவாக எழுதுவீர்கள் என்றால் சிறப்பு.
  7. இந்த 2 செய்தியில் ஒன்று அமெரிக்காவின் தன்னிச்சையான 85 மில்லியன் நிவாரண உதவி. இரண்டாவது...பிறநாட்டு உதவிகள் துருக்கிக்கு கிடைப்பததிற்கான ரஸ்யாவின் அனுமதி. எது உண்மை என்று "ரஷியா" செய்திகளை தேடினால் எதோ "ரகசிய" செய்திகளை தேடியது போல இருக்கு .... US exempts Syrian earthquake aid from sanctions ~அல்ஜஷீரா, பிபிசி https://www.aljazeera.com/news/2023/2/10/us-issues-sanctions-general-exemption-for-aid-to-syria The United States has issued a six-month sanctions exemption for all transactions related to providing disaster relief to Syria after earthquakes killed more than 22,000 people in the war-battered country and neighbouring Turkey. “I want to make very clear that US sanctions in Syria will not stand in the way of life-saving efforts for the Syrian people,” Deputy Secretary of the Treasury Wally Adeyemo said after the US Treasury’s Office of Foreign Assets Control (OFAC) issued the exemption on Thursday
  8. U.S. Assistance to Emergency Earthquake Response Efforts in Türkiye and Syria PRESS STATEMENT ANTONY J. BLINKEN, SECRETARY OF STATE FEBRUARY 9, 2023 The February 6th earthquakes that struck southeastern Türkiye and northern Syria have devastated millions. Within hours of the first quake, the United States, at the direction of President Biden, quickly mobilized federal agencies and partners to urgently provide life-saving assistance in close coordination with our Turkish Allies and partner organizations in Syria. Since Monday, supplementing the excellent work of our Embassy and Consulate teams, hundreds of additional U.S. personnel have arrived in the region to help save lives and assist those in need. Today we announced $85 million in urgent humanitarian assistance to support these efforts. USAID’s Disaster Assistance and Response Team is already hard at work in southern Türkiye. Two of our most highly trained Urban Search and Rescue Teams are conducting operations in support of Turkish rescue efforts in Adiyaman, one of the hardest hit areas. These teams have specialized equipment and canines for search and rescue operations. Joining them are emergency managers, hazardous materials technicians, engineers, logisticians, paramedics, and planners. Our existing humanitarian partners in both Türkiye and Syria are providing critical emergency relief, including food, water, shelter, medical care, and support staff for search and rescue efforts. U.S. helicopters are conducting airlift operations, transporting rescue personnel to sites where they are needed most. We are grateful to the Government of Türkiye for re-opening the border so aid can flow into northwest Syria, and we welcome news today of the first UN aid convoy arriving via the Bab al-Hawa crossing. We call on the Assad regime to immediately allow aid in through all border crossings; allow the distribution of aid to all affected areas; and to let humanitarians access all people in Syria who are in need, without exception. In both Türkiye and Syria, the United States will remain committed to doing whatever it takes, for as long as it takes, to provide necessary assistance to those impacted by these earthquakes. The United States will continue to support the people of Türkiye and Syria, and we welcome and encourage support from our international partners in this time of great need. Turkey Wants Russian Green Light for Sending Aid to Syria Through New Border Crossings Ankara in talks with Moscow to use new Syria border crossings Russia’s approval key to get foreign aid into Syria faster
  9. ம்ம்... இதன் உண்மையான பெயர் "சரஸ்வதி மஹால்" என்பது தான் உண்மையென கதை அடிபடுகிறதே. மதநல்லிணக்கம் பேணப்படவேண்டிய பட்டிணத்தில் சரஸ்வதி எதுக்கு? 🤐
  10. நேற்று இந்த செய்தியை கேட்டது முதல் மனதில் வெறுமை குடிகொண்டதை போல ஒரு உணர்வு. வாணி அம்மா பாடிய அத்தனை பாடல்களும் மனதுக்கு இதமானதும், நெருக்கமானதுமான பாடல்கள். உங்கள் குரல் என்றும் எங்களோடு கலந்திருக்கும் அம்மா. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போனது .. கண்ணீர் அஞ்சலிகள்🙏
  11. புட்டினை நீங்கள் விரும்பத்தக்க தலைவர் வரிசையில் பார்ப்பதை தவறாக நான் எடுக்கவில்லை. 👍 ஆனால் குறிப்பிட்ட இரண்டு நாடுகள் விடயத்தில் அவரால் மேற்கொள்ளபட்ட வழிந்த தாக்குதல் / போர் முனைவு; பெரும் உயிர் அழிவுகளையும், சொத்து அழிவுகளையும், நாடுகள் முழுவதும் சிதறி ஓடும் அகதிகளையும் உருவாக்கி உள்ளதே; அதை தான் நாங்கள் கண்டிக்கிறோம். 🙏
  12. இப்படி கருத்து சொல்லிக்கொண்டே இந்த திரியில் பேசப்படும் ரெண்டு நாடுகள் விவகாரத்தில் ரஷ்ய "அல்ட்டிமேட் ஸ்டார்", "தானைத்தளபதி" புட்டினை போற்றியும், வாழ்த்தியும் அறிக்கை விட்டுக்கொண்டு இருந்தால் எப்படி?
  13. 75 வருசமா இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வக்கற்ற அரசியல்வாதிகளும் அவ்வாறே தான் தேவையேயில்ல!!
  14. அமெரிக்காவின் அமைப்புகள் பைடனை சோதனை இட்டதை போல் ரஸ்ய அமைப்புக்கள் புட்டினை நெருங்க கூட நினைக்குமா? இதுதான் ஜனநாயக நாட்டுக்கும், பெயரளவில் ஜனநாயகம் உள்ள நாடுகளுக்கும் வித்தியாசம். இந்த செய்தியை தானே விசுகர் ஒற்றை வரியில் முதல் கருத்தாக "இது ஜனநாயகம்" என்று எழுதி இருந்தார். இதை புரியவைக்க 50 பதில் பதிவுகள், கருத்துக்கள் தேவையாய் இருந்து இருக்கிறது. 🤣
  15. விசுகு அண்ணா ... யதார்த்தமான கருத்துக்களால் போட்டு தாக்குறீங்க. இனிமேல் உங்கள் மீதான பார்வையும் மாறலாம்.😄
  16. எனக்கென்னமோ புட்டின்+ ரஸ்யா என்பது ஒரு போதை வஸ்த்தை போன்ற ஒரு சமாச்சாரம். அதை உட்கொண்டவர்கள் அந்த போதையிலேயே இருக்க விரும்புகிறார்கள். மற்றும்படி இதுக்கும் அரசியல் நுண்ணறிவு, சமகால பார்வை, தார்மீக சிந்தனை இவற்றுக்கெல்லாம் தொடர்பே கிடையாது.
  17. அப்பாடா தப்பித்தேன் இதுக்கு யாராவது பதில் எழுத்தமாட்டார்களா என்று கையை பிசைந்தது கொண்டு இருந்தேன்😃
  18. வாங்கடா வாங்க ... எல்லாரும் வரிசையா வந்து உங்கட அரதப்பழசான பௌத்த பாசிஸ பேரினவாத சிந்தனை சிதறல்களை கொட்டிவிட்டு போங்கோ.
  19. இலங்கைக்கு போனால் கல்கிஸ்ஸை டெம்பிலர்ஸ் ரோடில் இருக்கும் சித்தாலேப ஆயுர்வேத மசாஜ் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள். அரிய மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெயில் 1:30 மணித்தியால மசாஜ் அப்புறம் குளியல், ஆயூர்வேத தேநீர்.. உங்கள் உடம்பில் இருந்து குண்டலினி சக்தி பிரவாகிக்கும். கொழும்பின் அந்த கடும் வெயிலிலும் உங்களை சுற்றி A/C போட்டதை போல ஒரு குளிர்மையை 2, 3 நாட்கள் உணர்வீர்கள். உடம்பு பஞ்சாய் மிதக்கும். கட்டணம் 7- 10 ஆயிரம் மட்டில் வரும். Very Happy Ending in deed!!! மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம்.
  20. பூலோக சுவர்க்கம் ரஸ்யாவை யாரும் அணுகினீர்களா? இப்படியுமா நையாண்டி செய்வீங்க பாஸ் ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.