நியானி

கருத்துக்கள நிர்வாகம்
 • Content count

  1,532
 • Joined

 • Last visited

 • Days Won

  7

நியானி last won the day on February 20 2016

நியானி had the most liked content!

Community Reputation

494 ஒளி

About நியானி

 • Rank
  நிர்வாகம்
 • Birthday

Profile Information

 • Gender
  Not Telling
 • Location
  இணையவெளி
 • Interests
  தமிழ், தமிழர்

Recent Profile Visitors

1,024 profile views
 1. தமிழ் இந்துக்கள் தமிழ்க் கிறித்தவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும் எனும் தலைப்பு சரியான மூலம் இன்றி அநாமேதயமான வலைப்பதிவு ஒன்றில் இருந்து இணைக்கப்பட்டமையால் நீக்கப்பட்டுள்ளது.
 2. சம்பந்தனை எதிர்க்கும் அல்லது பிரிவினை மனோபாவம் கொண்டவன் அல்ல - சீ.வி.விக்னேஸ்வரன் எனும் திரியிலிருந்து தனிமனித தாக்குதல் கருத்துக்கள் பல நீக்கப்பட்டுள்ளன. கருத்தாடல் பண்பைக் கடைப்பிடிக்காமல் தொடர்ந்தும் சீண்டல் கருத்துக்களைப் பதிபவர்கள் மட்டுறுத்துனர் பார்வைக்குள் கொண்டுவரப்படுவார்கள்.
 3. சில திரிகளில் இருந்த தனிமனித தாக்குதல் கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. கள உறுப்பினர்கள் ஆரோக்கியமான முறையில் கருத்தாடவே கருத்துக்களம் உள்ளது. எனவே கருத்துக்களத்தில் குழுவாத கருத்தாடல்களைத் தவிர்க்கவேண்டும்.
 4. வணக்கம், தங்கள் பெயரை "நந்தி" என்று களப்பொறுப்பாளர் மாற்றியுள்ளார். . இப் புனைபெயரை அல்லது தாங்கள் பதிந்துகொண்ட மின்னஞ்சல் முகவரியுடன், கடவுச்சொல்லையும் பாவித்து கருத்துக்களத்தினுள் உள்நுழையலாம். அத்துடன் கருத்துக்கள உறவுகள் குழும அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும் அனுமதி உண்டு. நன்றி.
 5. வணக்கம், 2017 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.
 6. யாழ் களத்தின் தரத்தினை பேண நிர்வாகத்திற்கு முறைப்பாட்டு முறை மூலம் அறியத்தந்தால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
 7. செய்திகளை இணைப்போர் கவனத்திற்கு: யாழில் தொடர்ந்தும் புதிய தாயக, புலம்பெயர், உலகக் செய்திகளை இணைத்து யாழ் இணைய வாசகர்கள், கள உறுப்பினர்கள் உடனுக்குடன் புதினங்களை அறிந்துகொள்ள உதவுவதற்கு முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். எனினும் ஒரே செய்திகளை புதிய தலைப்புக்களில் பதிவது சில முக்கியமான செய்திகளை பின் தள்ளிவிடுவதனால் ஏற்கனவே உள்ளதா என்று பார்த்துவிட்டு செய்திகளை இணைத்து உதவுங்கள். இது வாசகர்களுக்கு பல செய்திகளை வழங்குவதோடு, மட்டுறுத்துனர்களுக்கு வேலைப்பளுவையும் குறைக்கும். நன்றி.
 8. நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொண்ட பல தனிமனித தாக்குதல் கருத்துக்கள், சீண்டும் வசனங்கள் மட்டுறுத்துப்பட்டுள்ளன. சில கருத்துக்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. சக கள உறுப்பினர்களை சீண்டும் வகையில் கருத்துக்கள் பதிவதைத் தவிர்த்து ஆரோக்கியமான முறையில் திரியில் கருத்தாடுங்கள். நன்றி
 9. மூலம் குறிப்பிடாமல் முகநூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்பட்ட செய்தி ஒன்று ஊர்ப்புதினத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. செய்திகளை இணைப்போர் கவனத்திற்கு: செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்த செய்தித் தளங்களில் இருந்து இணைக்கப்படல் வேண்டும். யாழ் இணையத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ள இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். செய்திகளின் உண்மைத்தன்மை முடிந்தளவு உறுதிப்படுத்தப்பட்டு இணைக்கப்படுதல் வேண்டும். செய்திகளை இணைக்கும்போது அதுதொடர்பான தலைப்பொன்று ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் அத்தலைப்பின் கீழ் பதிய வேண்டும். செய்திகள் ஏற்கனவே இணைக்கப்பட்டிருக்கின்றனவா என்று தேடற்கருவி மூலம் பார்த்துவிட்டு இணைக்கப்படுதல் வேண்டும். யாழ் கள உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களைப் புதிய செய்திகளாக செய்திப் பிரிவுகளில் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
 10. வணக்கம் ஜீவன், யாழ் கருத்துக்களம் கருத்தாடலை ஊக்குவிக்கும் களம். எனவே விதிமுறைகளுக்குட்பட்ட மாறுபட்ட கருத்துக்கள் வருவது தவிர்க்கமுடியாதது. களவிதிகளை மீறும்போதும் திரியின் திசையைத் திருப்பும்போதும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். எனினும் இத்திரியில் அரசியல் தவிர்க்கப்படவேண்டும் என்றில்லை. இத்தலைப்பின் கேள்வியே அரசியலில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது என்பதைத் தாங்கள் உணர்வீர்கள். எனவே இத்திரியில் ஆக்கபூர்வமான பதிவுகளையும், கருத்து விமர்சனங்களையும் வைத்து தொடருமாறு நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி நியானி
 11. வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமில்லாத வகையில் குழுவாதக் கருத்துக்கள் தொடர்ச்சியாகப் பதியப்பட்டைமையால் பூட்டப்படுள்ளது. தலைப்பின் திசையை மாற்றும் வகையில் கருத்து வைப்பவர்கள் பாரபட்சமின்றி மட்டுறுத்துனர் பார்வையில் கொண்டுவரப்படுவார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
 12. திரியின் தலைப்புக்கு அப்பால் சென்று குழுவாதம் தொடர்வதால் திரி பூட்டப்படுகின்றது.
 13. மூலம் குறிப்பிடாமல் இணைக்கப்பட்ட செய்தி, முகநூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட திரி போன்றன நீக்கப்பட்டுள்ளன.
 14. சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.
 15. யாழ் இணையத்தை வாழ்த்தும் கவிதைக்கு நன்றி.