• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  6,304
 • Joined

 • Last visited

 • Days Won

  24

மெசொபொத்தேமியா சுமேரியர் last won the day on April 11

மெசொபொத்தேமியா சுமேரியர் had the most liked content!

Community Reputation

1,649 நட்சத்திரம்

1 Follower

About மெசொபொத்தேமியா சுமேரியர்

 • Rank
  Advanced Member
 • Birthday April 4

Contact Methods

 • Website URL
  http://poongkaadu.blogspot.fr/

Profile Information

 • Gender
  Female
 • Location
  மெசொப்பொத்தேமியா
 • Interests
  எதைச் சொல்லுறது

Recent Profile Visitors

 1. மெசொபொத்தேமியா சுமேரியர்

  "ஓ  வாவ்" Wow

  நாய்க்கதை மிக்க அருமையாக இருக்கு புத்தா 😀 வாசிச்ச பிறகும் சிரிச்சு முடியேல்லை
 2. மெசொபொத்தேமியா சுமேரியர்

  "நாய்க்காப்பகம்"

  குசும்புக் கிறுக்கல்
 3. மெசொபொத்தேமியா சுமேரியர்

  கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்

  வணக்கம் மோகன் நான் உங்களுக்கு எழுதிய தனிமடல் இப்படிக் காட்டுது
 4. மெசொபொத்தேமியா சுமேரியர்

  பெண்கள் போகக் கூடாதா ???????

  உங்கள் வீட்டில் சுதந்திரம் தானே பெண்களுக்கு ??
 5. மெசொபொத்தேமியா சுமேரியர்

  அக்காவும் நானும்

  சரி சரி அதுக்காகக் கண்ணைக் கசக்க வேண்டாம் 😀 😜🤪 நீங்கள் யாருக்கும் பார்சல் - பரிசு அனுப்புவதில்லையா ???? என் ஆசை உங்களுக்குத்தான் அண்ணா விளங்கியிருக்கு 😀
 6. மெசொபொத்தேமியா சுமேரியர்

  அக்காவும் நானும்

  பகுதி 4 இப்பிடியே அக்காவின் பொய், புளுகு, பாட்டு எல்லாம் கேட்டு அலுத்துப்போன ஒரு செவ்வாய்க்கிழமை வேலை முடிய என் கணக்கை முடித்து பலன்ஸிங் செய்ய என் கணக்கில் 580 பவுன்ஸ் ஓவர் காட்டுது. எனக்குப் பயத்தில என்ன செய்யிறது எண்டு விளங்கேல்லை. மைனஸ் எண்டால் நான் பிழை விட்டுட்டன் என்று சொல்லலாம். இது அதிகமாக காசு இருக்கு எண்டால் ..... ஐயோ அக்கா என்னக்கா இவ்வளவு காசு அதிகமா இருக்கு. என்ன என்று பாருங்கள் என்றேன். நீங்கள் பயப்பிட வேண்டாம் நிவேதா. மைனஸ் எண்டால் தான் பயம். இது நான் தான் முத்திரை எதையோ உங்களுக்கு மாறி போட்டுட்டன் போல இருக்கு. அதுதான் உங்களுக்கு இவ்வளவு காசு கூட இருக்கு என்று காட்டுது. நான் எதுக்கும் என் எக்கவுண்டுக்கு மாற்றுகிறன். கவலைப் படாதேங்கோ என்றுவிட்டு அன்றைய கணக்கை நேர்படுத்தித்தர, என்னிடம் தந்திருக்கும் முத்திரைகள் எல்லாம் சரியாக இருப்பதாகத்தானே அக்கா காட்டுது. பிறகு எப்படி நீங்கள் போட்டதைக் காட்டவில்லை என்றேன் நான். அது சிலவேளை சிஸ்டம் காட்டாது. உங்களுக்கு என்ன. இப்ப எல்லாம் ஓகே தானே என்று கூற நானும் பேசாமல் போய்விட்டேன். ஒவ்வொரு வாரமும் ஒரு தமிழ் தம்பி தன் வங்கிக் கணக்கில் காசு போட வருவார். அன்றைக்குப் பார்த்து என்னிடம் வரவேண்டியவர் அடுத்தவரை விட்டுவிட்டு அக்காவின் கவுண்டர் பக்கம் போக எனக்கு என்னடா இது இந்தப் பொடியன் ஏன் என்னைத் தவிர்க்கிறார் என்று எண்ணியபடியே மற்ற வாடிக்கையாளர்களைப் பார்த்துவிட்டு நிற்க, அக்கா என்னை தன் அறைக்கு வரும்படி கூப்பிட, நானும் கதைவைத் திறந்து உள்ளே செல்கிறேன். அந்தத் தமிழ்ப் பெடியன் அக்காவின் கவுண்டரில் நிக்கிறான். நான் அவனைப் பார்த்து சிரித்தபடி என்னக்கா என்கிறேன். "என்ன நிவேதா இப்பிடிப் பெரிய பிழை விட்டிருக்கிறியள். இவர் காசு போடத் தர நீங்கள் அவற்றை அக்கவுண்டில் இருந்து காசை எடுத்திருக்கிறியள்" என்று கோபமாகக் கேட்க்கிறார். கஸ்டமர்களுக்கு முன் அது யாராய் இருந்தாலும் பண்பாகக் கதைக்க வேண்டும் என்பது பொதுவிதி. ஆனால் அக்கா சின்னப் பிள்ளையை வெருட்டுமாப்போல் என்னைக் கேட்டவுடன் எனக்கு சுரீர் என்று கோபம் வந்தாலும் நான் பிழை விட்டதாகக் கூறியபடியால் "எப்ப அக்கா" என்றேன். போன கிழமை என்றதும் எனக்கு நினைவு வந்துவிட்டது. "ஓமக்கா இவர் போன செவ்வாய் 290 பவுண்ட்ஸ் டிப்போசிட் செய்தவர். ஓ... எனக்கு இப்ப விலங்கிவிட்டுது. அந்த ஓவர் வந்த 580 பவுண்ட்ஸ் இவர் காசாகத்தான் இருக்கும். உங்களிடம் தானே அக்கா அந்தக் காசு இருக்கு. குடுங்கோ" என்றேன். அக்காவின் முகம் ஓடிக் கறுக்க "இவாவின் அக்கவுண்டில் அண்டைக்கு எதோ கூடக் கிடைத்ததுதான். எதுக்கும் நாங்கள் காமராவைச் சுத்திப் பார்த்துவிட்டுத்தான் தருவோம் என்றா". பொடியும் ஓமென்று தலையாட்ட, "அக்கா சனி ஆபீஸ் இல் தான் இருக்கிறான். நான் காமராவைச் செக் செய்துவிட்டு வருகிறேன்" என்றுவிட்டு அக்காவின் பதிலை எதிர்பார்க்காது முதலாளி சணி இருக்கும் அறைக்குள் நுழைந்து அவனிடம் நான் பிழைவிட்டுவிட்டேன் என்று விடயத்தைக் கூறினேன். பெடியனிடம் றிசீற்ரை வாங்கி அதில் நேரத்தைப் பார்த்துவிட்டு காமராவைப் பார்க்க டிப்போசிட் மேலேயும் விட்ரோ கீழேயும் இருக்க, நான் மாறி அழுத்திவிட்டிருந்தேன். அதனால்த்தான் எனது கணக்கில் 580 அதிகமாக வந்திருந்தது. நாம் காமராவைப் பார்த்தவுடன் அக்காவும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து கண்டுபிடிச்சாச்சோ என்றா ஆங்கிலத்தில். நானும் உடனே "ஓமக்கா நான் தான் தவறுதலாக விட்ரோ அமத்திவிடடேன்" என்றேன். உடனே "அந்த ஓவர் வந்த பணம் எங்கே" ?என்று சணி கேட்டான். உடனே நான் "அக்காதான் எல்லா ஓவரையும் தனக்கு மாற்றி எடுத்துவிட்டா" என்றேன். ஒரு அரை நிமிடம் யாரும் பேசாத அமைதி. அக்கா என்ன சாட்டைக் கூறலாம் என்று யோசித்துவிட்டு "நான் முத்திரைகளை மாறி நிவேதாவுக்கு மாற்றியதாக எண்ணி அதை மாற்றினேன்" என்று குரலில் தொய்வோடு கூற, நானோ கொடுப்புக்குள் வந்த சிரிப்பை அடக்கியபடி வெளியே வந்து அந்தப் பெடியனுக்கு மீண்டும் 580 பவுண்ட்ஸ்களை டிப்போசிட் செய்து றிசீற்ரையும் கொடுத்துவிட்டு மனதுள் மகிழ்வு பொங்க மிகுதி வேலைகளைத் தொடர்ந்தேன். வரும்
 7. மெசொபொத்தேமியா சுமேரியர்

  அக்காவும் நானும்

  யாழ் இணையத்தில் லண்டன் தபாற்கந்தோர் பற்றித் தெரிந்தவர்கள் யாரும் இல்லையோ ?? நான் எழுதுவதில் ஏதும் விளங்கவில்லை என்றால் இதை மேற்கொண்டு எழுதுவதில் பயனில்லை என எண்ணுகிறேன்
 8. மெசொபொத்தேமியா சுமேரியர்

  அல்லி மலர் எப்போது பூக்கும் ????

  😀
 9. மெசொபொத்தேமியா சுமேரியர்

  சத்திய போதிமரம்!… கே.கணேஷ்

  வித்தியாசமாக இருக்கிறது கதை
 10. மெசொபொத்தேமியா சுமேரியர்

  ரத்த மகுடம்

  உங்களுக்கு வயதானாலும் பரவாயில்லை உங்கள் மனதுக்கு வயதாகாமல் பார்த்துக்கொண்டால் போதும் 😄
 11. மெசொபொத்தேமியா சுமேரியர்

  யாரிடம் பகிர்வேன்!!??

  அதுதான் எம்மிடம் பகிர்ந்தாச்சே.
 12. மெசொபொத்தேமியா சுமேரியர்

  வெங்காய தோசை.

  நெய்த் தோசை , நல்லெண்ணைத் தோசை, சாதாரண தோசை போன்றவைதான் சட்னி, சம்பலுடன் உண்ணும்போது மிகு சுவையாக இருக்கும் வெங்கயத்தோசை அவற்றின் சுவையைக் குறைத்துவிடும். அதுவும் வெங்காயத்தோசை நிறையச் சாப்பிடவும் முடியாது .
 13. மெசொபொத்தேமியா சுமேரியர்

  அக்காவும் நானும்

  பக்கம் 3 வேலை தொடங்கி மூன்று மாதங்கள் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை. கெட்டிக்காரி கெட்டிக்காரி எண்ட அக்காவின் வார்த்தை கேட்டு எனக்கே புளிச்சுப்போச்சு. ஒவ்வொருநாளும் வேலை முடிய காசுக்கணக்குப் பார்த்து ஸிஸ்டத்தில் கிளீயர் செய்துவிட்டுப் போனால் அடுத்தநாள் காலையில் புதிதாகத் தொடங்கும் கணக்கு. அதில் பல பிரிவுகள் இருந்தாலும் முன்பக்க ஸ்கிரீன் Front Office என்றும் ,மற்றையது Back Office என்றும் இருக்கும். எமக்கான வேலைகள் அனைத்தும் முன்பக்க ஸ்கிரீனின் ஊடாகவே நடைபெறும். கணக்கு வழக்குப் பார்ப்பது, ஏதாவது தவறாகச் செய்தால் திருத்துவது இன்னும் பலவும் Back Office ஊடாகச் சென்றே செய்யமுடியும். எனக்கு அதை உடனே அக்கா சொல்லித்தரவில்லை. கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று இழுத்தடிதத்துக்கொண்டே இருந்தார். ஒவ்வொரு வார முடிவிலும் எனக்கு முன்னால் நின்று Balancing செய்வதாகக்கூறி கடகட என்று எல்லாவற்றையும் அழுத்துவார். எனக்கோ சிதம்பரசக்கரத்தைப் பேய் பார்த்தது என்று கூறுவினமே அதுபோல் இருக்கும். ஆனால் என் கணக்கில் பணம்சரி என்று வருவதனால் நானும் எனக்குக் சொல்லித் தாருங்கள் என்று அக்காவைக் கரைச்சல்ப் படுத்துவதில்லை. மாதம் ஒருமுறை TP டிரேடிங் பீரியட் முழு பலன்ஸ் வரும். அதை நான் இல்லாவிட்டாலும் அக்காவே செய்து கொள்ளுவார். ஏனெனில் அது மாத முதல் வாரத்தில் வரும் புதன் கிழமையே வரும்.நானோ புதனில் வேலை செய்வதில்லை. முதல் நாள் செவ்வாய் என் கணக்கு எல்லாம் பார்த்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறிய அக்கா புதன் கிழமை இரவு எனக்குப் போன் செய்து "சொறி நிவேதா உங்கள் கணக்கில் 199 பவுன்ஸ் சோட். நானுமோ எல்லாம் வடிவாத் தேடிப் பார்த்திட்டன். காசு சோட் தான்" என்றவுடன் எனக்கு நெஞ்சு பிசைய ஆரம்பிச்சிது. நேற்று எல்லாம் சரியாத்தானே அக்கா இருந்தது என்று நான் கேட்டதற்கு அது நீங்கள் ஏதும் பிழைகள் விட்டிருந்தால் உடனே காட்டாது. மாத முடிவிலதான் காட்டும். நீங்கள் மாறி ஆருக்கும் குடுத்திருப்பியள் என்றார். ஐயோ அக்கா எனக்குவேலைக்கு வர பயமாக கிடக்கு என்றேன் நான். அதுக்கெல்லாம் பயந்து வேலையை விடுறதோ ?? நீங்கள் இனிக்க கவனமா இருங்கோ. கொஞ்சம் கொஞ்சமா கட்டுங்கோ என்றுவிட்டு வைத்துவிட, பக்கத்தில கேட்டுக்கொண்டு இருந்த மனிசன் நான் வேலையை விட்டாலும் என்ற பயத்திலோ என்னவோ சிலவேளை நீ மாறிக் குடுத்திருப்பாய். எதுக்கும் நான் நாளை காசைத் தாறன். கொண்டுபோய் அக்காட்டைக் குடுத்திடு என்று சொல்ல, என்னடா திட்டப்போகிறார் என்று நினைக்க மனிசன் காசைத் தந்து விடுறாரே என்று ஆச்சரியப்பட்டபடி காசைக் கொண்டுபோய் அக்காட்டைக் குடுத்தன். அதுக்குப் பிறகு ஒரு மாதம் கணக்கு எல்லாம் மைனஸ் இல்லாமலிருக்க, வேலை செய்யும்போது மிக அவதானமாக வேலை செய்ய ஆரம்பிச்சன். ஒருநாள் கணக்கு முடிக்கும்போது 89 பவுண்ஸ் அதிகமாக இருக்க, அக்கா எதோ பிழை விட்டிட்டன் போல. இவ்வளவு காசு எப்பிடிக் கூட வரும் என்று கேட்க, ஒருநாள் கூட வந்தால் அடுத்தநாள் கணக்கு சரியாய் இருக்கும் நிவேதா. நீங்கள் கவலைப் படாமல் போங்கோ என்று அக்கா கூற, வீட்டுக்குப் போனாலும் எப்பிடி அவ்வளவு காசு ஓவராய் இருக்கு?? ஆரின் பணத்தைத் தவறாகக் குடுத்தேன் என்று இரவு எவ்வளவுதான் யோசித்தும் விளங்கவே இல்லை. அடுத்தநாள் காலை அக்காவிடம் "எப்பிடி அக்கா இவ்வளவு காசைச் சனம் வாங்காமல் போனது" என்று கேட்க நீங்கள் சிலவேளை காசைப் பிழை யாய் எண்ணி இருப்பீர்கள். இன்று கனக்குப் பாருங்கோ சரியாக இருக்கும் என்றதும் மேலும் மனத்தைக் குழப்பாமல் வேலை செய்ய, வேலை முடிவில் பணமும் சரியாக இருக்க என்னடா இது நான் தான் காசைப் பிழையாக எண்ணி வைத்துவிட்டேனோ என்ற குழப்பம் வந்தாலும், அடுத்து சனி ஞாயிறு வந்ததால் அதை மறந்து வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த வார முடிவிலும் கணக்கு ஓகே. மாத முடிவில் பார்த்தால் மீண்டும் 125 பவுன்ஸ் காசு லொஸ்ற். எனக்கு இந்த வேலை வேண்டாம் அக்கா. நீங்கள் வேறு யாரையும் பாருங்கள் என்று நான் கூற, எவ்வளவு கஷ்டப்பட்டு நான் உங்களை பழக்கி வச்சிருக்கிறன். நீங்கள் துணிவான பெண் என்று பார்த்தால் இப்பிடி வேலையை விடப்போறன் எண்டுறியள் என்று உசுப்பேற்ற, வேறு வழியின்றி சரி இன்னும் கொஞ்ச நாட்கள் பார்ப்பம் என்று மனத்தைத் திடப்படுத்தியபடி வீட்டுக்கு வந்து மனிசனிடம் சொல்ல, மனிசன் இம்முறை பணம் தந்து உடனே கட்டு என்று கூறாமல் உன் சம்பளத்தில் ஒவ்வொரு வாரமும் தருவதாகக் கூறிக் கொஞ்சம்கொஞ்சமாக கட்டு என்று சொல்ல, நானும் அக்காவிடம் அப்பிடியே சொன்னன். அக்காவும் பரவாயில்லை நிவேதா நான் கொப்பியில எழுதி வைக்கிறன். கொஞ்சம் கொஞ்சமாக கட்டி முடியுங்கோ என்றுகூற வேலையும் தொடர்ந்தது. இடையில் இரு இருப்பது பவுன்ஸ், அறுபது பவுன்ஸ் என்று மைனஸ் வர அதுவும் என் கணக்கில் ஏற என் மனமோ வேலையை விடுவதா இல்லையா என்று ஊசலாடியபடி தொடர்ந்தது. சனங்கள் வந்தால் ஒன்றாகக் காலையில் வருவார்கள், மதியம் உணவு நேரம் வருவார்கள், பள்ளி விட்டதும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வருவார்கள், மாலையில் ஐந்து தொடக்கம் ஐந்தரை வரை வரிசையில் நிண்டு உயிரை வாங்குவார்கள். இடையில் அக்கா உள் அறையில் யூ டுயூப்பில் பாட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பா, பிள்ளைகள், தங்கைகளுடன் போனில் கதைத்துக்கொண்டிருப்பா, அல்லது என்னை உள்ளே கூப்பிட்டு வைத்து கணவர் செய்யும் வேலை பற்றி பிள்ளைகள் செய்யும் வேலைப்பற்றி முன்னர் சொன்னதை மறந்து அல்லது எனக்கு நினைவில் இருக்காது என்று எண்ணி மாற்றிச் சொல்லிப் புழுகிக்கொண்டு இருப்பா. நான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தலை ஆட்டியபடி இருப்பன். ஆனாலும் உள்ள ஒரு குரல் கேட்கும் "என்ன நீ இயல்புக்கு மீறி நல்ல பிள்ளைபோல் எல்லாத்தையும் கேட்டுத் தலையாட்டுறியே. எதிர்க்கேள்வி கேளன்" என்று . ஆனாலும் நான் சிரித்தபடி தலையாட்டிக்கொண்டே இருப்பன். ஏனெண்டால் வேலைத்தளத்தில் முதலாளி நிற்பதில்லை. அக்காவைத் தவிரக் கேள்வி கேட்க வேறை யாருமில்லை. கன தூரம் கார் ஓடத் தேவையில்லை. இப்பிடியான வசதிகளால் அக்காவை சகிச்சுக் போகப் பழகினாலும் சில நேரம் நிவேதா இங்க வாங்கோ, இந்தப் பாட்டைக் கேளுங்கோ, எப்பிடி இருக்கு என்று சொல்லுங்கோ என்பா. முதல் நாள் எனக்குப் பாட்டைக் கேட்ட உடனே அக்கா பாடினது தான் என்று விளங்கினாலும் விளங்காததுபோல் "ஆரக்கா பாடினது. சுருதி சேர்ந்து பாடினால் நல்லாய் இருக்கும்" என்றன். நேர எல்லாரும் நல்லாய் இருக்கு என்று சொன்னவை. நான் தான் பாடினது. உங்களுக்கு ரெக்கோட் பண்ணினதில கேட்டதால அப்பிடி இருக்கு என்றா. எங்க பாடினாலும் பாட்டு சுருதியோட பாடினால் நல்லாத்தானிருக்கும் என்று சொல்ல நினைத்தும் சொல்லவில்லை. வரும்
 14. மெசொபொத்தேமியா சுமேரியர்

  வெங்காய தோசை.

  😀😀 எனக்குப் பிடிக்காத தோசையே வெங்காயத் தோசைதான்.