Jump to content

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    3246
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்" இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
  2. ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
  3. ஆம் இங்கு நாளயில் இருந்து ஒரு கிழமைக்கு லீவு. இங்கு இலங்கையில் புது வருடம் களை கட்டுகிறது. பலர் வெளிநாடுகளில் இருந்து லீவு வந்துள்ளார்கள். சிங்களவனும் தமிழனும் ஒன்றாக கயிரிளுக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றார்கள். நாடு அந்த மாதிரி இருக்கு
  4. நானும் இந்த அர்த்தத்தை நம்பிக்கொண்டிருந்தேன். ஒர் இந்திய பாண்டிச்சேரி கத்தோலிக்க பாதிரியார் ஒரு பிரசங்கத்தில் இப்படி கூறினார்.
  5. நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணம் ஆகும் என்று மத அறிஞர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்களின் இந்த அறிக்கை பல சமூக ஊடக பயனர்களிடம் பேசு பொருளாகிஉள்ளது , மேலும் இதுபோன்ற நாடக காட்சிகளில் அடிக்கடி பங்கேற்ற பிரபலங்கள் உட்பட, இப்போது அதன் தாக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். வைரலான வீடியோ கிளிப் கடந்த ஆண்டு மார்ச் 29, 2023 தேதியிட்ட ரமலான் ஒலிபரப்பில் இருந்து எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ரமழான் ஒளிபரப்பு நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர்கள் குழு பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ஒரு அறிஞர் மற்றொருவரை கேள்வி எழுப்பினார். தொலைக்காட்சி நாடகங்களில் நடிகர்களுக்கு இடையே நடக்கும் நிக்காஹ் சடங்குகள் செல்லுபடியாகும் திருமணமாக கருதப்படுமா என்று விசாரித்தார். அதற்கு பதிலளித்த மதகுரு, "ஆம், நிச்சயமாக, இரண்டு சாட்சிகளுடன் ஒரு தொலைக்காட்சி நாடகக் காட்சியில் நிக்காஹ் நடத்தப்பட்டால், அது சரியான திருமணமாக கருதப்படும் என பதில் அளித்தார். அறிஞரின் கூற்றுப்படி, இரண்டு நடிகர்கள் ஒரு நாடகத்தில் நிக்காஹ் காட்சியை நடித்தால், அவர்களின் திருமணம் உண்மையில் செல்லுபடியாகும் என்று கருதப்படும். மத அறிஞரின் கூற்று பரவலான சர்ச்சையைக் கிளப்பியுள்ளது, பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் இந்த விஷயத்தை பேசி வருகின்றனர். https://www.madawalaenews.com/2024/03/i_924.html
  6. ஐசே சொல்லவே இல்லவா, நானும் கொழும்புலாதானே வா ஈக்கேன். அனியாயம் வா, ரெண்டு பேரும் செட் ஆகி ஈக்கலாம், புதுக்கடைக்கு கூட்டிட்டுபோத்து, தெருவேர கடையிலா பாபத் ஓடர் பண்ணி தின்டிக்கலாம் வா
  7. மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani) தெரிவாகியுள்ளார். இதன்மூலம் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் அல் சவூதின் ஆட்சியின் கீழ் இடம்பெறும் மற்றுமொரு சர்ச்சைக்குறிய விடயத்தில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. 27 வயதான ரூமி அல்கஹ்தானி, மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் தான் பங்கேற்பது குறித்த தகவலை திங்கட்கிழமை (25) தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். “மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் சவூதி அரேபியாவின் முதல் பங்கேற்பு இது” என அவர் தெரிவித்துள்ளார். இதனை அந்த நாட்டின் செய்தி ஊடக நிறுவனமும் செய்தியாக வெளியிட்டுள்ளது. https://www.madawalaenews.com/2024/03/i_922.html
  8. நல்ல விடயம். முஸ்லீம்கள் மதம் என்று வந்தவுடன் ஒன்றினைந்து விடுவார்கள். இங்கு இலங்கையில் எவ்வளவு பேர் கஸ்டப்ப்டுகின்றார்கள்?
  9. பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று மீண்டும் க‌ல்முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதான‌து மீண்டும் தேர்த‌லை மைய‌ப்ப‌டுத்தி த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றும் செய‌லாகும் என‌ "புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்" தெரிவித்துள்ள‌து. இது ப‌ற்றி அக்க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ர் முஸ‌ம்மில் அபூசாலி தெரிவித்த‌தாவ‌து க‌ல்முனையில் வ‌ட‌க்கு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் ஒன்றை அர‌சு உருவாக்க‌வில்லை. மாறாக‌ க‌ல்முனை பிர‌தேச‌ செய‌ல‌க‌த்தின் கீழ் இய‌ங்கும் உப‌ செய‌லக‌ம் ஒன்றே உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ உப‌ செய‌ல‌க‌த்தை த‌மிழ் செய‌ல‌க‌ம் என‌ த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் அழைத்து த‌மிழ் ம‌க்க‌ளை ஏமாற்றின‌ர். பிர‌தேச‌ செய‌ல‌க‌ங்க‌ள் இன‌ ரீதியில் அமைய‌ முடியாது என‌ அர‌சாங்க‌ம் சொன்ன‌தை தொட‌ர்ந்து க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌ல‌க‌ம் என‌ அழைக்க‌த் தொட‌ங்கின‌ர். க‌ல்முனை வ‌ட‌க்கு செய‌லக‌ம் என்ற‌ ஒன்றையும் அர‌சு வ‌ர்த்த‌மாணி மூல‌ம் உருவாக்க‌வில்லை என்று தெரிந்தும் தேர்த‌ல் ந‌ன்மைக்காக‌ அப்பாவி த‌மிழ் சிவில் ம‌க்க‌ளை இன‌வாத‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ள் உசுப்பேற்றி விட்டுள்ள‌ன‌ர். ஆக‌வே இப்பிர‌ச்சினைக்கு தீர்வாக‌ மேற்ப‌டி உப‌ செய‌ல‌க‌த்தை அர‌சாங்க‌ம் ர‌த்து செய்து, த‌மிழ் ம‌க்க‌ள் 99 வீத‌ம் வாழும் பாண்டிருப்புக்கு, பாண்டிருப்பு பிர‌தேச‌ செய‌ல‌க‌ம் ஒன்றை வ‌ழ‌ங்க‌ அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ "புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்" அர‌சையும் த‌மிழ், முஸ்லிம் எம்பிமாரையும் கேட்டுக்கொள்கிற‌து. https://www.madawalaenews.com/2024/03/i_472.html
  10. நீங்கள் இப்படி சொலுறீங்கள் அங்கு பின்வருமறு பாடுகின்றார்கள் நாங்க தமிழர்! Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் . நாங்க தமிழர்! கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம். நாங்க தமிழர்! கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம். நாங்க தமிழர்!
  11. இப்பொழுது எல்லோரும் படிக்கின்றார்கள் மக்களை உசுப்பேற்றுவதற்கு இப்படியான கருத்துக்களை அரசியல் வாதிகள் கூறுகின்றார்கள். சப்பிதுப்பி படிப்பது படிப்பல்ல‌
  12. றிப்தி அலி) பலஸ்தீன் தனி நாட்டை உரு­வாக்க அரபு நாடு­களின் கூட்­ட­மைப்­பினால் மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்கு இலங்கை ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என குவைத் அழைப்பு விடுத்­துள்­ளது. சவூதி அரே­பி­யாவில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இந்த முயற்­சிக்கு குவைத் தொடர்ச்­சி­யாக ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றது என இலங்­கைக்­கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். புதைர் தெரி­வித்தார். இலங்­கையும் இந்த முயற்­சிக்கு ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என தூதுவர் தெரி­வித்தார். குவைத்தின் 63ஆவது தேசிய தினம் மற்றும் 33ஆவது விடு­தலை தினம் ஆகி­ய­வற்றின் நிகழ்­வுகள் கடந்த கடந்த திங்­கட்­கி­ழமை (26) கொழும்பில் இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் உரை­யாற்றும் போதே இலங்­கைக்­கான குவைத் தூதுவர் கலஃப் எம்.எம். புதைர் இந்த அழைப்­பினை விடுத்தார். இதே­வேளை, ஐந்து வரு­டங்­க­ளுக்குள் பலஸ்­தீன அர­சாங்­கத்தை அமைக்க வேண்­டி­யது அவ­சியம் என ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க வலி­யு­றுத்தி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த நிகழ்வில் தொழில் மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாண­யக்­கார பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டார். இங்கு அவர் நிகழ்த்­திய உரையின் போது இலங்­கைக்கும் குவைத்­திற்கும் இடையில் நீண்ட கால­மாக காணப்­படும் உற­வினை சுட்­டிக்­காட்­டி­யமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த நிகழ்வில், சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­ய­வர்த்­தன, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி உட்­பட அமைச்­சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.- Vidivelli https://www.vidivelli.lk/article/16566
  13. கூடிய சீக்கிரம் பாங்கு சத்தம் இங்கு கேட்கும்
  14. இதைதான் நானும் இங்கு சொல்கின்றேன் அக்கா கேட்க மாட்டர்கள். சமீபத்தில் என்னுடய சிங்கள நண்பன் என்ன்டிடம் கூறினான் யாழில் அந்த மாதிரி உழைக்கலாமாம். கொழும்புடன் ஒப்பிடும்போது செலவு குறைவு அங்குள்ள இளைஞர்களும் பெரிதாக உழைப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையாம். தன்னுடைய ஈபிஎஃப் ப‌ணம் வந்தவுடன் அங்கு ஏதாவது வியாபரமுயற்சியை ஆரம்பிப்பதாக கூறினான்.
  15. இது சிங்களத்தில் பஸ்பங்குவ எனப்படும். வெனுவல் கட்டை கசாயம்
  16. வாழ் நாள் முழுவதும் வேதனையை அனுபவித்த மனிதர். இவர் ஒருபோதும் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு பட்டிருப்பார் என்று நம்பவில்லை. இன்றும் புலிகளின் சொத்துக்களை ஆட்டைய போட்டு வசதியாக வாழுபவர்கள் இருக்கின்ரார்கள். பழி ஒருபக்கம் பாவம் ஒருபக்கம்
  17. நாங்க தமிழர்! நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம். நாங்க தமிழர்! கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம். நாங்க தமிழர்! கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம். நாங்க தமிழர்! குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம். நாங்க தமிழர்! என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம். நாங்க தமிழர்! எங்கட பிள்ளை கனடாவில் நல்லாய் படித்து நல்ல வேலையில் இருக்கிறார் என்று சொல்லுவம். மற்றவன் பிள்ளை வந்தா இங்கே பாடசாலை கூட சேர முடியாது சொல்லுவம். நாங்க தமிழர்! Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் . நாங்க தமிழர்! கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம். நாங்க தமிழர்! கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம். நாங்க தமிழர்! நாங்கள் அகதியாய் வந்து ஐயா சாமி என்று கெஞ்சி மண்டாடி காட் எடுத்து படம் காட்டுவம். அதை கூட மற்ற தமிழன் செய்ய விட மாட்டம். நாங்க தமிழர்! நாட்டுக்கு வந்து வெளிநாடு என்று படம் காட்டுவம். ஆனால் எவனாவது வெளிநாடு வருவதை விரும்பவே மாட்டம். நாங்க தமிழர்… எங்கள் கதை சொல்லி கொண்டே போகலாம் பாக்கிற உங்களுக்கு bour அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்துறன். https://vampan.net/53243/
  18. புலிகளால் அப்பாவிகள் கொல்லப்பட்டது உண்மைதான் உதாரணமாக, மத்திய வங்கி குண்டு வெடிப்பு, அதிபர் ஆனந்தராஜ, கெபிடிகொல்லாவா படுகொலை போன்றவைகள்.
  19. ஆம் பல வருடங்களிக்கு முன்பு நான் ஒரு செய்தி வாசித்தேன் இது உண்மையோ தெரியவில்லை. ஒரு முறை கனடவுக்கு நடிகர் பிரசந்த் மற்றும் பல நடிகைகள் வந்து இது போல் ஒரு ஸ்டார் நைட் செய்தார்களாம். இதில் பல ரசிகர்கள், மேடையில் நடிகைகள் ஆடுப்போது பண நோட்டுக்களை அவர்களை நோக்கி வீசி எறிந்து இன்பமடைந்தார்களாம் இது உண்மையோ தெரியவில்லை.
  20. யாழில் இளம் தலைமுறையினர், சினிமா நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம் ; மனோ கணேஷன் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்கள், இலங்கை-தமிழக கலாச்சார உறவுகளுக்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது. இப்படியான பிரமாண்டமான கலை நிகழ்வுகள் நடத்தப்படும் போது, அவற்றுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும். தமிழக சினிமா ஒரு பிரமாண்டமான பணம் கொழிக்கும் வியாபாரம். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. அதனால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். அதேவேளை, வடக்கில், “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்ற ஒரு சிந்தனை நிலைப்பாடும் இருக்கிறது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்து, யாழ் மாவட்ட எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி தீர்மானிக்க வேண்டும். சினிமா கலைஞர்கள் அழைத்தால் வருவார்கள். வேண்டாம் என்றால், வர மாட்டார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, நேற்று முதல்நாள் யாழ்ப்பாண முற்றவெளியில் நடந்த தமிழக சினிமா கலைஞர்களின் கலை நிகழ்வில் நடந்த தூரதிஷ்ட சம்பவங்களை கடந்து போக வேண்டும். இதை விட இசை நிகழ்வு கலவர பூமியாக மாறி, பலர் கொலையுண்ட சம்பவம் கொழும்பில், 2004ம் வருட டிசம்பர் மாதம் நிகழ்ந்தது. பொலிவுட் நடிகர் ஷாருக் கான் கலை நிகழ்ச்சி நடத்த கொழும்பு வந்த போது, குண்டு வீசப்பட்டது. நடிகர், ஷாருக், அப்படியே திருப்பிக்கொண்டு விமான நிலையம் போனவர்தான். இன்று, அவரது உலக வரைபடத்தில் இலங்கை இல்லையாம். அந்த வெடிப்பில், எனது சில நண்பர்கள் உட்பட, பல ரசிகர்கள் இறந்தார்கள். பிரபல சோம தேரரின் நினைவு தினமன்று இந்த கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடாகி இருந்ததால், அந்த நிகழ்வை சிங்கள-பெளத்த தீவிர அமைப்பினர் எதிர்த்து போராடியதால், ஒரு பதட்ட நிலைமை அன்று நிலவியது. அதையடுத்து, இத்தகைய கலை நிகழ்வுகள் தொடர்பில், பல விதிமுறைகள் அமுலுக்கு வந்துள்ளன. சினிமா ஒரு தொழில். அங்கே யாரும் கலை சேவை செய்யவில்லை. அது ஒரு பணம் புழங்கும் தொழில் என்பதால்தான், இன்று சினிமா பெரும் வளர்ச்சி அடைந்த தொழிலாகி உள்ளது. பணம் கொடுத்தால், சகாரா பாலைவனத்திலும் அவர்கள் ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். சினிமா, பணம் கொழிக்கும் வியாபாரம் என்பதால்தான் பல புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களே அதில் இருக்கிறார்கள். கலைஞர்களை அழைத்தால் வருவார்கள். வர வேண்டாம் என்றால் வர மாட்டார்கள். இலங்கை வந்து செல்வது என்பது மிகப்பெரும் பணம் கொழிக்கும் முன்னணி வருவாய் இல்லை. பக்கத்தில் இருக்கும் நாடு என்பதால், சடுதியாக வந்து விட்டு, ஆடி, பாடி, நிகழ்வு நடத்தி போகலாம் என்று வருகிறார்கள். இனி எம்பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸ், யாழ் மாநகரசபை, சிவில் சமூகம் ஆகியோர் யாழ் மாவட்ட ஒருகிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி, இப்படியான நிகழ்வுகளுக்கு விதிமுறைகளை அறிவிக்கலாம். முழுக்க, முழுக்க ஏற்பாட்டாளர்களின் கைகளில் மட்டும் பொறுப்புகளை வழங்கி விட்டு, ஒதுங்க கூடாது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட எம்பிக்களுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பும், அதிகாரமும் உண்டு. இளம் தலைமுறையினர், இசையை கேட்க, நட்சத்திரங்களை பக்கத்தில் போய் பார்க்கத்தான் ஓடி வந்தார்கள். அதற்குள் போதையில் சிலர் இருந்திருக்கலாம். இப்படியான ஒரு தரப்பு இளையோர் எங்கும் உள்ளார்கள். கொழும்பிலும், சென்னையிலும், லண்டனிலும், சிக்காகோவிலும் உள்ளார்கள். முற்றவெளியில், ஒலி அமைப்பு அரங்கத்தின் மீது இளையோர் ஏறி நின்றார்கள். பாரம் தாங்காமல் அந்த அரங்கு உடைந்து போயிருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கலாம். இன்று, கொழும்பில் இந்நிகழ்வுகள் நடக்கின்றன. தொடர்ந்தும் நடக்கும். யாரும் வந்து முறைப்படி பார்க்கலாம். அதற்கான கட்டமைப்புகள் இங்கே இருக்கின்றன. கொழும்பை போன்று, யாழில் உள்ளக, வெளியக அரங்க கட்டமைப்புகள் இல்லை. கொழும்பிலும், சுகததாச உள்ளக அரங்கில் அதிகபட்சம் ஐயாயிரம் பேர் கூடலாம். இலட்சக்கணக்கில் கூட உள்ளக அரங்கு சரிவராது. வெளியக விளையாட்டரங்குதான் சரி. யாழில் கலாச்சார மண்டபத்தை ரூ. 200 கோடி அளவில் முதலிட்டு கட்டிக்கொடுத்த இந்திய அரசுக்கு அப்போது, இந்த முற்றவெளியை, கொழும்பு சுகததாச அரங்கம் மாதிரி கட்டிக்கொடுங்கள் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் யோசனை முன்வைத்து கூறி இருக்கலாம். இனியாவது, வெளிநாட்டு அரசுகளோ, புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளோ, இதை செய்யலாம். உள்நாட்டில் அடுத்த பல வருடங்களுக்கு பணம் இல்லை. அடுத்து, “இது போர் நிகழ்ந்த பூமி, துன்பம் நிறைந்த பூமி, இங்கே ஆடல், பாடல், கச்சேரி வேண்டாம். அப்படியே, இருந்தாலும் அவை உரிமை கோஷங்களாக மட்டுமே இருக்க வேண்டும்” என்று கூறும் கருத்தும் சமாந்திரமாக இழையோடுகிறது. இது ஒரு தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாடு. இதை மறைக்க முடியாது. அப்படி இல்லை என்று கூறவும் முடியாது. ஆகவே, இது தொடர்பிலும், அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினர் இடையே கலந்துரையாடல் நடக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மக்களின் நிலைப்பாடு இதுவாகத்தான் இருக்குமானால், விடை சுலபமானது. யாழ்ப்பாணத்தில் இனிமேல் தமிழக சினிமா கலைஞர்களை கொண்டு இத்தகைய ஆடல், பாடல், இசை நிகழ்ச்சிகளை நடத்தாமல் விடலாம். https://www.madawalaenews.com/2024/02/i_22.html
  21. நீங்கள் இரு நாட்டிலும் வாழ்ந்தவர் என நினக்கின்றேன். எனக்கு குளிர்தான் தாங்குவதற்கு மிக கடினம், நான் விசா கிடத்தும் இதனால் இன்றுவரை வரவில்லை. அமெரிக்காவிம் மாகணங்களில் இலங்கை தட்ப வெட்ப நிலையுடைய‌ மாகணம் எது? கலிபோர்னியா / ப்ளோறிடாவே அல்லது ப்னிக்ஸ் போற்னவா?
  22. இங்கு கொழும்பில் பல நிறுவனங்கள் இப்பொழுது கனடாவிற்கு படிக்க மாணவர்களை அனுப்புகின்றார்கள் இது ஒரு பெரிய வியாபரமாக நடக்கின்றது. பல சிங்களவர்கள் நியுசிலாந்துக்கு செல்கின்றார்கள் மாஸ்டர் செய்யும் தகுதியுள்ளவர்கள் முழு நேரமாக வேலை செய்யலாம்.
  23. கொழும்பிலும் பல வருடங்களுக்கு முன் சிங்கள பகுதியில் ஷாருகான் போன்ற பொலிவூட் நடிகர்களை கொண்டு ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது அதில் ஒரு குண்டு வெடித்து தலை தப்பினால் போதும் என அவர்கள் ஒட்டி போய்விட்டார்கள்
  24. அருமையான கட்டுரை. நானும் என்னை இப்பொழுதே வரப்போகும் தனிமையான நாட்களுக்காக தயார் செய்து கொண்டு வருகின்றேன்
  25. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தமிழர்கள் மட்டுமே விளையாடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பார் சீமான் பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வீரவணக்க பொதுக்கூட்டத்தில், அவர் இவ்வாறு பேசியுள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ''கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, எவரோடும் சமரசம் இல்லை, எவரோடும் கூட்டணியும் இல்லை. நோட்டுக்கும், சீட்டுக்கும் எவரோடும் பேரமில்லை. சாவோ, வாழ்வோ தனித்துதான். வெற்றியோ, தோல்வியோ தனித்துதான். ஒத்தையடி பாதையில்தான் செல்வேன். CSK னு ஒரு கிரிக்கெட் அணி இருக்குல. அதுல, ஒருத்தர் கூட தமிழர் கிடையாது. நாம் ஆட்சிக்கு வந்தால், 11 வீரர்களும் தமிழனாகதான் இருப்பான், உங்க அண்ணனும் வந்து விளையாடுவேன்'' எனக் கூறினார். சீமானின் இந்த பேச்சு, தற்போது தமிழகத்தில் நெட்டிசன்களின் பேசுபொருளாக மாறியுள்ளது https://www.madawalaenews.com/2024/01/i_858.html
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.