colomban

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,616
 • Joined

 • Last visited

Community Reputation

226 Excellent

About colomban

 • Rank
  Advanced Member
 • Birthday 03/23/1972

Profile Information

 • Gender
  Male
 • Location
  Doha, Qatar

Recent Profile Visitors

3,165 profile views
 1. மாயா அவர்களே, 90% பொருளாதர அகதிகளே நாடு கடத்தப்படுகின்றார்கள்
 2. இங்கு வரும் ஒட்டகங்கள் கவனம் என அறிவிப்பு வைத்திருப்பார்கள். விபத்து ஏற்பட்டால் சாரதி முடிந்தார்.
 3. நெடுக்கு ஐயா 83 கலவரத்தில் எத்தனை பேரை சிங்களவர்கள் பாதுகாத்தார்கள் தெரியுமா? என் அனுபவத்தில் கண்ணால் கண்டது. இன்னும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். நீங்கள் புலிகளின் “Diehard” என்பதால் இவை உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை.
 4. இங்கு இவர் மக்கள் இறந்ததாலும் பரவாயில்லை என கூறியது மிகவும் தவறு. மனசாட்சியுள்ள எவனும் இவ்வாறு கூறமாட்டான். அதேபோல் புலிகளும் அதிபர் ஆனந்தராஜாவை சுட்டுக்கொன்றது, அரசாங்கத்தை பலிவாங்குகின்றோம் என மத்திய வங்கியில் குண்டு வைத்து பல அப்பாவி உயிர்களை பலி எடுத்தது என பல உதாரணங்கள் தரலாம். (இக்குண்டு வெடிப்பில் எனக்கு Audit & Assurance பாடம் படிப்பித்த ஒர் அப்பாவி சிங்கள ஆசிரியர் கொல்லப்பட்டார்.) ஆகவே இரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டும்.
 5. இது சாரதியின் பிழை! சிறுவன் வேண்டாம் என்று சொல்ல சொல்ல இந்த சாரதியே இரயில் கடவையை இவ்வாறு கடக்க முயன்றுள்ளான்.
 6. புலிகள் கொழும்பில் பல தாக்குதல்கள் நடத்தியபோது எத்தனையோ அப்பாவிகள் இவ்வாறு பலியாடுகளாக்கப்பட்டார்கள்.
 7. இந்த செய்தியை படிக்க வியப்பாக இருந்தது. முன்பு இதே வென்னப்புவயில் இருந்து படகு மூலம் பலர் இத்தாலிக்கு செல்வார்கள். 90களில் எனக்கு வழமையாக முடி வெட்டும் சலூன் நண்பரும் இவ்வாறே சென்றார். இந்தக்கூட்டத்த‌தை பார்த்தால் பெரியளவு படிக்காதவர்கள் என்றே தெரிகின்றது. இவர்களுக்கு எப்படி தெரியும் தமிழர்கள் வாழும் ரியூனின் தீவு ப்ரான்ஸ்ஸிற்கு சொந்தமானதென்று? இங்கு சென்று அகதி அந்தஸ்து கோரினால் அதை ப்ரான்ஸ் அரசாங்கமே கையாளும், இறுதியில் ப்ரான்ஸ் குடியுரிமை கிடைக்கும். ஆகவே நிச்சயமாக இவர்களுக்கு பின்னால் படித்த பல்வேறு சட்டத்தில் உள்ள் ஓட்டைகள் தெரிந்த மாபியா கும்பல்கள் இயங்குகின்றது.
 8. மட்டக்களப்பான் பட்டைகிளப்பான் என்னும் நியதிக்கு ஏற்ப. வடபகுதி மக்ககளை விட யுத்தத்தினாலும் இயற்கை அழிவுகளுனாலும் பல இழப்புக்கள் சந்தித்தாலும் அவற்றை எல்லாம் தாண்டி முன்னேறியுள்ளார்கள். உண்மையில் திறமைசாலிகள்.
 9. இவர்கள் அப்பாவிகள். 27 வருடம் என்பது எவ்வளவு பெறுமதியானது. புலிகளும் தாங்கள் திட்டத்திற்கு இவர்களை ஒரு கருவியாக பாவித்துள்ளார்கள்.இதி சரியா? புலிஆதரவாளர்கள் இதற்கு என்ன சொல்லப்போகின்றர்கள்?
 10. இலங்கையிலும் இஸ்லாமிய மதவாதம் ஆரம்பித்து விட்டது. இதை தடை செய்ய முயன்ற ஞனாசரவையும் சிறையில் அடைத்து விட்டார்கள்.
 11. கொடியில் போட்ட பாவாடை காணவில்லை என்றால் கூட‌ சிங்கள ராணுவம் என கூறும் மக்களிடம் என்னவென்று கதைப்பது. அதற்காக சிங்கள ராணுவம் ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவரவில்லை. இத்தகைய சமூக பிறழ்வுகள் உலகம் முழுவதும் காலம் காலமாக நடைபெறுகின்றது. தனிப்பட்ட நப‌ர்களின் பிரச்சினை. கொலையாளியால் வாக்குமூலமும் வழங்கப்பட்டுள்ளது.
 12. இப்பொழுதுதான் சூரியன் FM இல் ராசாத்தி ஒன்ன காணாத பாட்டை கேட்டுவிட்டு யாழைத்திற‌ந்தால் வைதேகி காத்திருந்தால் படத்தின் நினைவுகள்
 13. -பாறுக் ஷிஹான்-இலங்கையில் தற்போது மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார்.வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தொகுதி விவசாயிகள் வலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் குறித்த கிளிநொச்சி விவசாயியின் தோட்டத்துக்கு களப்பயணம் சென்றிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை UNDP நிறுவனம் செய்திருந்தது.முதலில் குறித்த விவசாயியின் வீட்டில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாயிகளுக்கான சிறிய கருத்தமர்வு இடம்பெற்றது. ஓய்வுநிலை உதவி விவசாய பணிப்பாளரும், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் விவசாய ஆலோசகருமான ச. சிவநேசன் தலைமையில் கருத்தமர்வு ஆரம்பமானது.இந்நிகழ்வில் வளவளராக கலந்து கொண்ட ஆர். சஞ்சீபன் குறித்த விவசாயி தொடர்பிலும் வலை வீடு தொடர்பிலும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.இவரை முன்னோடி விவசாயி என நாம் ஏன் அழைக்கின்றோம் என்றால், கடந்த பல தசாப்த காலங்களாக விவசாயத் துறையில் வெற்றிகரமாக சாதித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு இலங்கையில் விவசாயத்தில் மூன்றாம் இடத்துக்கான NAC விருதினையும், ஜனாதிபதி விருதினையும் பெற்றுள்ளார். இவ்வருடம் NAC இரண்டாம் இடத்துக்கான விருதினையும் பெற்று சாதித்துள்ளார்.ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் தனது குடும்ப உறுப்பினர்களை மாத்திரம் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றார். நீர் பற்றாக்குறை காரணமாக தற்போது 3 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே விவசாயம் செய்து வருகிறார். அவர் தனியே வலைவீட்டில் மட்டுமல்லாது அதற்கு வெளியிலும் சாதாரண முறையில் பல்வேறு மரக்கறிப் பயிர்களையும் பயிரிட்டுள்ளார்.இவர் வலைவீட்டில் பிரதானமாக முதலில் கீரையை பயிரிட்டுள்ளார். ஒரு சதுர மீற்றரில் நான்கைந்து பிடிகளைப் பெற்றுள்ளார். 120 சதுர மீற்றரில் மொத்தமாக நானூறு பிடிகளைப் பெற்றுள்ளார். பிடி ஒன்று 30 ரூபாய் வீதம் 12000 ரூபாயினை 35 நாள்களில் வருமானமாக பெற்றுள்ளார். இதனை நாங்கள் வலைவீட்டுக்கு வெளியில் செய்வதாக இருந்தால் 45 – 50 நாள்கள் வரை செல்லும். அடுத்து வலைவீட்டில் சின்ன வெங்காயம் பயிரிட்டு இருக்கிறார். அதன் மூலம் 50 நாட்களில் 45000 ரூபாய் வருமானமாக பெற்றுள்ளார்.அடுத்து பூக்கோவாவையும் வெற்றிகரமாக பயிரிட்டு கிலோ 150 படி விற்றுள்ளார். பூக்கோவா இலைகளையும் பிடி 20 ரூபாய் படி சந்தைப்படுத்தியுள்ளார்.பூக்கோவா முற்றிலும் இயற்கை முறையில் பயிரிட்டு இருந்தமை சிறப்பம்சமாகும். இதனை விட கறிமிளகாயும் சிறிய அளவில் பயிரிட்டிருந்தார். இவர் வலைவீட்டுக்கு வெளியே குறைந்தளவு இரசாயனங்களை பயன்படுத்தி மிளகாய், கறிமிளகாய், பயிற்றை, புடோல், வாழை, பாகல் ஆகிய பயிர்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.வெயில் காலங்களில் வழமையான முறையில் மரக்கறிப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதில் நிறைய சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வலைவீட்டில் மேற்கொள்ளும் போது நுண்நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டுள்ளதால் வெப்பத்தை குறைத்து, பூச்சி தாக்கத்தையும் குறைத்து வெற்றிகரமாக பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் கரவெட்டி, அல்லைப்பிட்டியை சேர்ந்த விவசாயிகளும் வலைவீட்டில் வெற்றிகரமாக கீரைப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வருகிறனர்.வலைவீட்டில் தக்காளி பயிர்ச்செய்கை வெற்றியை கொடுக்கவில்லை என்பதனை இங்கே பதிவு செய்ய வேண்டும். இதற்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்திப்பதில் விவசாயத் திணைக்களம் பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.வலைவீட்டில் வெற்றிகரமாக பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கான அடிப்படைகள்* பொருத்தமான ஈரப்பதன் (RH) 60 – 80 % இற்குள் இருக்க வேண்டும்.* பொருத்தமான வெப்பநிலை 18 – 32 பாகை செல்சியசுக்குள் இருக்க வேண்டும்.* நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.* நிழல் வலைகளை உபயோகித்து வெப்பத்தையும் சூரிய ஒளியையும் கட்டுப்படுத்த முடியும்.* தேவையான போது பொலித்தீனால் கூரையை மூடுவதனால் மழையில் இருந்து பாதுகாக்க முடியும்.வலைவீட்டில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் போது இவ்வருடம் கூடிய பின்னடைவு ஏற்பட்டமைக்கு பிரதான காரணம், ஏப்பிரல் மாதம் எதிர்பார்க்காத அளவுக்கு வெப்பநிலையில் உயர்ச்சி காணப்பட்டது.திறந்தவெளியில் வெப்பநிலை சராசரியாக 39 பாகை வரைக்கும் சென்று விட்டது. சாதாரணமாக 32 , 33 ஐ மிஞ்சி போவதில்லை. வலைவீட்டுக்குள் வெப்பநிலை 40 பாகை வரை காணப்பட்டது.வலை வீட்டுக்குள் தண்ணீரை ஸ்பீரே பண்ணும் போது இருந்த வெப்பநிலையை விட 8 – 10 பாகை செல்சியஸ் வெப்பநிலை குறைந்ததை அவதானிக்க முடிந்தது.வலைவீட்டில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதில் உள்ள சவால்களாக, எதிர்பாராத காலநிலைமையும், சரியான பயனாளிகளை தெரிவு செய்யாமை, சரியான ஆர்வமின்மை, புதிய தொழிநுட்பம், அறிவுறுத்தல்களை சரிவர கேட்டு பின்பற்றாமை ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.இத்தகைய வலைவீட்டு தொகுதிகளை நிர்மாணித்து, தொடர்ச்சியாக கண்காணிக்கும் பணியினை Uthayan Micro Irrigation & Agro Services நிறுவனத்தினர் மேற்கொண்டிருந்தனர். இந்த வலைவீடுகளை வடக்கில் 20 விவசாயிகளுக்கு UNDP நிறுவனம் செய்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.madawalaenews.com/2018/08/net.html
 14. எனக்கு சொல்லப்படுவது போலுள்ளது
 15. போன கிழமைதான் இங்கு பல சீனர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். சீன வம்சாவளி சிங்களவர்கள் என ஓர் இனம் வரப்போகின்றது. கொழும்பு மருதானையில் சாகிராக் கல்லூரிக்கு அருகே சீனர்களின் கடைகளை காணலாம். இவர்களும் புத்தரை கும்பிடுபவர்களே இவர்களால் தமிழர்களுக்கு ஏது நன்மை இல்லை 19 சீன, இலங்கை தம்பதிகள் இலங்கையில் திருமணம் இலங்கையின் நிகோம்போ நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற மிகப் பெரிய திருமண விழாவில் 19 சீனா மற்றும் இலங்கைத் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களில் 12 தம்பதி சீனாவையும், 7 தம்பதி இலங்கையையும் சேர்ந்தது. திருமணம் புரிந்த தம்பதியினர் சீன அரசுக்குச் சொந்தமான கட்டமைப்பு பொறியியல் நிறுவனத்தில் பணியாற்று வருகின்றனர். இங்கு பணியாற்றும் காலத்தில்தான், தம்பதியினர் ஒருவரை ஒருவர் சந்திதுள்ளனர். அதனால், “ஒரு மண்டலம் ஒரு பாதைக்காக நாங்கள் கூடினோம், இலங்கையில் திருமணம் செய்து கொண்டோம்” என்ற முழகத்துடன் இச்சிறப்புத் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி பெங் சுன்சுயே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெங் சுன் சுயே கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டம் நம்மை எல்லாம் ஒருங்கிணைத்ததைப் போலவே, திருமணம் புரிந்து கொண்ட தம்பதியினரையும் ஒன்றிணைத்துள்ளது. புதுமணத் தம்பதிகளின் பிரகாசமான வாழ்வைப் போல சீனா-இலங்கையின் உறவும் பிரகாசிக்கும் என்பதில் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார். இத் திருமண நிகழ்வு, இலங்கை திருமணம் செய்வதற்கான சிறந்த இடம் என்ற அந்தஸ்துக்கு மேலும் வலுவூட்டியுள்ளது. http://tamil.cri.cn/news/southasia/519/20180817/171598.html