Jump to content

மகம்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    369
  • Joined

  • Last visited

Profile Information

  • Gender
    Male
  • Location
    இங்கும் அங்கும்
  • Interests
    விடுதலைக்கான விடாமுயற்சி

Recent Profile Visitors

1405 profile views

மகம்'s Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

52

Reputation

  1. தாயகக் கனவுகளுடன் ....... [31] "காலமும், கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரித்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும், இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்." "பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்ற போதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்." "எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்." "இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும், எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் --------------------------------------- மு டி வ டை ந் த து -----------------------------------------------------------------------------
  2. தாயகக் கனவுகளுடன் ....... [30] "இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி, தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன." "பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்து வாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம். எனவே, எமது மாவீரர்களை நினைவு கூரும் இன்றைய எழுச்சி நாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன். அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்து கிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்." "எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் ..... , எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம். புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து, அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  3. தாயகக் கனவுகளுடன் ....... [29] "நான் எனது மக்களுக்காகப் போராடும் ஒரு விடுதலைப் போராளி." "அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றப்படும் தொண்டு. " மக்களின் துன்ப துயரங்களில் பங்குகொண்டு அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி அவர்களின் கஷ்டங்களைப் போக்குவதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை. "உலகெங்கும் தமிழன் பரந்து வாழ்ந்தாலும் தமிழீழத்திலேதான் தேசிய ஆன்மா விழிப்புப் பெற்றிருக்கிறது. தமிழீழத்திலேதான் தேசிய ஆளுமை பிறந்திருக்கின்றது. தமிழீழத்திலேதான் தனியரசு உருவாகும் வரலாற்றுப் புறநிலை தோன்றியுள்ளது. " "நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போராட்டமாகவும் மாறிவிட்டது. " "சுதந்திரம் என்பது பேரம்பேசிப் பெற்றுக்கொள்ளும் ஒரு வியாபாரப்பண்டமல்ல. அது இரத்தம் சிந்தி வெற்றிகொள்ளப்படும் ஒரு புனிதமான உரிமை." " ஆகாயத்தில் இருந்து வீழும் குண்டுகள் எமது கட்டிடங்களை அழிக்கலாம்; வீடுகளை அழிக்கலாம்; கோயில்கள்,பாடசாலைகளை அழிக்கலாம். ஆனால் எத்தகைய குண்டுவீச்சுகளும் எமது மனோபலத்தை அழித்துவிட முடியாது." "ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால் உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம். " "இன்றைய உலக ஒழுங்கை பலம்தான் நிர்ணயிக்கிறது." "நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும். " "மொழியும் கலையும் கலாசாரமும் வளம் பெற்று வளர்ச்சியும் உயர்ச்சியும் அடையும பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது." "கலை இலக்கியப் படைப்புக்கள் மக்களைச் சிந்திக்கத் தூண்டவேண்டும். பழமையிலும் பொய்மையிலும் பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப்பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும். மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். " --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் --------------------------------------------------------------------------------------------
  4. தாயகக் கனவுகளுடன் ....... [28] "இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி." "சத்தியத்திற்காகச் சாகத் துணிந்துவிட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்." "நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்." "சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம். செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது." "மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது. " "எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள் ." "எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். " --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன். -------------------------------------------------------------------------------------------
  5. தாயகக் கனவுகளுடன் ....... [27] "போரும் கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது." "எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரணாக நிற்க வேண்டும். " "போர்க்குணம் மிக்க ஒரு புரட்சிகர சமுதாயமாக எமது தேசத்தை உருவாக்கம் செய்யவேண்டும்." "விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனம் அதனைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். " "எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக, தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் ---------------------------------------------------------------------------------------------------
  6. தாயகக் கனவுகளுடன் ....... [26] "எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை.எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு." "சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும்.தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும்.படிப்படியாக அழிந்து போகவேண்டும்.ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடு வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை." "எமது மக்கள் சுதந்திரமாகவும்,கௌரவமாகவும்,பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்." "இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உண்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை. " "சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும். " --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் ---------------------------------------------------------------------------------------------------
  7. தாயகக் கனவுகளுடன் ....... [25] "பெண்விடுதலை என்ற இலட்சியப்போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை." "பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும்,எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாகக் கூறமுடியாது." "நாம் தமிழீழப்பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம்.தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது." "வீரத்திலும் தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்போராளிகள் தமது வீரச்சாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்." "பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் -------------------------------------------------------------------------------------------------------------
  8. தாயகக் கனவுகளுடன் ....... [23] "தமிழரின் பிரச்சினைக்கு சமாதானவழியில் நிரந்தரமான‌ அரசியற்தீர்வு காணப்படவேண்டுமாயின் தமிழர் பற்றிய‌ சில அடிப்படை உண்மைகளை சிங்களதேசம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.அத்தோடு தமிழ்மக்கள் எத்தகைய‌ தீர்வை விரும்புகிறார்கள் என்பதையும் அவர்களது அடிப்படை அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். ஈழத்தமிழர்கள் தனித்துவமான இனஅடையாளத்தைக் கொண்டவர்கள்.ஒரு தேசிய இனக்கட்டமைப்போடு,அந்த‌ இனத்துவப் பிரக்ஞையோடு வாழும் ஒரு மக்கள் சமூகம். அவர்களுக்கு வரலாற்றுரீதியான தாயகமண்ணாக சொந்த‌ நிலம் உண்டு.எமது மக்கள் விரும்புவதெல்லாம் ஒன்றுதான். தமது சொந்தமண்ணில் நிம்மதியாக நிறைவாக‌ வாழ வேண்டும் என்பதுதான்.மற்றையவர்களின் அதிகாரஆதிக்கமோ, நெருக்குவாரங்களோ இல்லாத ஒரு அரசியற் சூழலில் தம்மைத்தாமே ஆட்சிபுரிந்து கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது மக்களின் ஆழமான அபிலாசையாகும். சிங்களமக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேன்டும். இந்தப் புரிந்துணர்வின் அத்திவாரத்திலிருந்துதான் ஒரு நியாயமான, நிரந்தரமான தீர்வைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் ------------------------------------------------------------------------------------------------------- தாயகக் கனவுகளுடன் ....... [24] "குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழ- வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்." "விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்க- வில்லை.வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்தது.சுதந்திரம் வேண்டுவதைத்தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை." "கரடுமுரடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப்பயணத்தில் எமக்கு ஒரேயொரு ஊன்றுகோலாக இருப்பது எமது உறுதிதான்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  9. தாயகக் கனவுகளுடன் ....... [22] "அணையாத நெருப்பாக சுவாலை விட்டெரியும் எமது வீரவிடுதலைப் போரில் நாம் புரிந்துவரும் அதியுயர் தியாகங்களும் அற்புதமான அர்ப்பணிப்புகளும் இன்று முழு உலகத்தையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.இந்த‌ வீரவிடுதலை வரலாற்றின் கதாநாயகர்களாகத் திகழ்பவர்கள் எமது மாவீரர்களே. எமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்த‌ ஒவ்வொரு சுதந்திரப் போராளிக்கும் எமது தேசத்தின் வரலாற்றில் அழியாத இடமுண்டு.இவர்கள் சாதாரணர்- களாகச் சாவைத் தழுவவில்லை.எமது இனத்தின் இருப்பிற்காக,இவர்கள் தமது சுயத்தை அழித்தவர்கள். இந்த அற்புதமான துறவறத்தால் இவர்களது அடையாளங்கள் என்றுமே அழிவதில்லை.இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிமனித சரித்திரம்.ஆயிரமாயிரம் மாவீரர்களின், ஆயிரமாயிரம் தனிமனித சரித்திரங்கள் சங்கமமாகிய‌ பெருநதியாகவே எமது தேசத்தின் வரலாறு வீறுகொண்டு ஓடுகிறது." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  10. தாயகக் கனவுகளுடன் ....... [21] "மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கின்றேன். தாய்நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள் தமது தனிமையான‌ பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள். சுயவாழ்வின் சுகபோகங்களை கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள்.அந்தப் பொதுவான இலட்சியத்திற்காகத் தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள்.இதனை ஒரு புனிதமான‌ துறவறமாகவே நான் கருதுகிறேன்.இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விள‌ங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்கவேண்டும்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  11. தாயகக் கனவுகளுடன் ....... [20] "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண‌ நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு.ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை.அவனது உயிராக இயங்கிவந்த இலட்சியநெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.அந்த இலட்சியநெருப்பு ஒரு வரலாற்றுச்சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கிறது. ஒரு இனத்தின் தேசியஆன்மாவைத் தட்டியெழுப்பி விடுகிறது." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  12. தாயகக் கனவுகளுடன் ....... [19] "இந்த உலகைத் துறந்து,இளமையின் இனிமையான‌ உணர்வுகளைத் துறந்து,சாதாரணவாழ்வின் சகலவற்றையும் துறந்து,எமது மண்ணுக்காக,எமது மக்களுக்காக,எமது மக்களின் உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான‌ உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள்.தேசிய‌ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காக தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்- களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள்,உயர்ந்து நிற்கிறார்கள். எம் தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள். தோற்றம்,மாற்றம்,மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது.ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக்காலம் தோன்றி மறையும் நீர்க்- குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்துபோகிறது;முற்றுப்பெறுகிறது.ஆனால் எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவை- யல்ல. மரணத்தின் பின்னாலும் அவர்களது வாழ்வு தொடர்கிறது.சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப் போகவில்லை.அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்தியவாழ்வு வாழ்கிறார்கள்.சத்தியத்தின் சாட்சியாக‌ நின்று,மனவலிமையின் நெருப்பாக எரிந்து,எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி,நெறிப்படுத்திச் செல்கிறார்கள்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  13. தாயகக் கனவுகளுடன் ....... [18] "தர்மத்தின் வழி தழுவி,ஒரு சத்திய இலட்சியத்திற்காகச் செய்யப்படும் தியாகங்கள் என்றுமே வீண்போவதில்லை. எமது தேசத்தின் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை ஒப்பற்றது.உலகவிடுதலை வரலாற்றில் நிகரற்றது.இந்த‌ அளப்பரிய ஈகத்தின் ஆன்மீகசக்தி இன்று உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிவிட்டிருக்கிறது.எமது மாவீரர்களின் சுதந்திரதாகம் சாவுடன் தணிந்துபோகவில்லை.அது எமது இனத்தின் வீரவிடுதலைக் குரலாக உலககெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதி,மதம்,வர்க்கம், என்ற வேறுபாடுகளுக்கு அப்பால்,ஒரு விடுதலை இயக்கத்தின்கீழ்,ஒரு விடுதலை இலட்சியத்தின் கீழ், ஒன்றுபட்ட சமூகமாக எமது மக்கள் இன்று அணிதிரண்டு நிற்கிறார்கள்.வீரம் செறிந்த எமது விடுதலைப் போராட்டமும் அந்த விடுதலைப்போராட்டத்தில் எமது போராளிகள் ஈட்டிய‌ அபாரமான சாதனைகளும், அவர்கள் புரிந்த அற்புதமான‌ தியாகங்களுமே எமது மக்களை எழுச்சியூட்டி,உணர்வூட்டி, ஒரே அணியில்,ஒரே இனமாக,ஒரே தேசமாக ஒன்றுதிரள‌ வைத்திருக்கின்றன. எமது மாவீரர்களின் மகத்தான தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே எமது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு ஆதாரசக்தியாக விளங்குகின்றன." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  14. தாயகக் கனவுகளுடன் ....... [17] "சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை.அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள். மாவீரர்களே,உங்களது ஒப்பற்ற தியாகவரலாறுகளின் ஒன்றிணைப்பாகவே எமது தேசத்தின் வீரவிடுதலைக் காவியம் படைக்கப்படுகிறது." "சிங்கள தேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில், அந்தப்புராணக் கருத்துலகிற் புதைந்துபோய்க் கிடக்கிறது. இலங்கைத் தீவானது தேரவாதப் பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட‌ புனைகதையில் சிங்களமக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கிறார்கள். அடிமனதில் ஆழமாக உறைந்து,அசைவற்றதாக‌ இறுகிப்போன இந்தப் புராணக் கருத்துநிலையிலிருந்து சிங்களதேசம் விடுபடப்போவதில்லை.இந்தக் கருத்தியற் குருட்டுத்தனத்தால் இலங்கைத்தீவின் உண்மை வரலாற்றையும் அங்கு நிலவும் சமுதாய மெய்நிலை-- களையும் சிங்களமக்களாலும்,அவர்களது அரசியல்,மதத் தலைமைகளாலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  15. தாயகக் கனவுகளுடன் ....... [16] "விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து,அதற்காக வாழ்ந்து,அதற்காகப்போராடி,அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப்பிறவிகள்.அவர்களது வாழ்வும் வரலாறும் எமது விடுதலைக் காவியத்தின் உயிர்வரிகள்." " அமைதிவழியில்,மென்முறை தழுவி,நேர்மையுடனும் நெஞ்சுறுதியுடனும் நாம் எமது போராட்ட இலட்சியத்தை அடைய முயன்றுவருகிறோம்.காலத்திற்கு ஏற்ப,வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய, எமது போராட்டவழிமுறைகள் மாறலாம்.ஆனால் எமது போராட்டஇலட்சியம் மாறப் போவதில்லை. சத்தியத்தின் சாட்சியாக நின்று,எமது மாவீரர்களின் தியாகவரலாறு எமக்கு வழிகாட்டும். அந்தச் சத்தியத்தின் வழியில் சென்று, நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என்பது உறுதி." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.