நவீனன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  39,659
 • Joined

 • Last visited

 • Days Won

  262

Everything posted by நவீனன்

 1. தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம் அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூதுவனும் முத்தம்தான் என்கின்றனர் அனுபவசாலிகள். முத்தம் கொடுப்பதன் மூலம் ஏற்படும் ஏகப்பட்ட பக்கவிளைவுகளை பார்க்கலாம். அலையடிக்கும் மனதில் அமைதியைத் தருவது முத்தம். ஒரு ஆழமான முத்தம் கொடுப்பதன் மூலம் ஆக்சிடோசின், என்டோர்ஃபின், டோபோமைனின், போன்ற ரசாயனங்கள் சுரக்கிறதாம். இதனால் முத்தம் கொடுப்பவர் மீது காதலும் அன்பும் அதிகரிக்குமாம். வீட்டில் சின்னதாய் சண்டை என்றால் முகத்தை திருப்பிக் கொண்டு போவது சண்டையை அதிகமாக்கும். அதேசமயம் எதிர்பாரத நேரத்தில் நச் என்று ஒரு முத்தம் கொடுங்களேன். சண்டை போட்டவர் கூட சமாதானமாகப் போய்விடுவார். முன் விளையாட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது முத்தம். ஆண்கள் உறவுக்கு முன்பாக அதிகமாய் முத்தமிடுகின்றனர். அதேசமயம் உறவு முடிந்து நன்றி கூறும் விதமாக ஆண்களை முத்தமழையால் நனைக்கின்றனர் பெண்கள். முத்தம் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமாம். ஆழமாய் அழுத்தமாய் கொடுக்கும் முத்தம் மூலம் 23 கலோரிகள் காணாமல் போகும் என்கின்றனர் நிபுணர்கள். அதுக்கெல்லாம் இவன் சரிப்பட்டு வருவானா? இல்லையா? என்பதை ஆண்கள் கொடுக்கும் முத்தம் மூலம் உணர்ந்து கொள்வார்களாம் பெண்கள். அதேபோல முதல் முதலாக கொடுத்த அல்லது பெற்றுக் கொண்ட முத்தத்தை அதிகமாய் நினைவில் வைத்திருப்பதும் பெண்கள்தானாம். http://www.maalaimalar.com/Health/WomenMedicine/2016/12/23144904/1057840/couple-conflict-over-kiss.vpf
 2. ‘சசிகலாவுக்கு திகார் சிறைதான் சரியான சாய்ஸ்!’ - கர்நாடக அரசை நெருக்கும் அமைப்புகள் #VikatanExclusive கர்நாடக சிறையில் இருந்து சென்னை, புழல் சிறைக்கு சசிகலாவை மாற்றும் வேலைகள் வேகமெடுத்துள்ளன. 'பாதுகாப்பு கருதி இப்படியொரு முடிவை எடுக்க நேர்ந்தால், அவருக்கு திகார் சிறை மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்' என ஊழல் எதிர்ப்பு அமைப்புகள், கர்நாடக உள்துறைக்கு மனு அனுப்பியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட பிறகே, முதல்வர் பதவியை எட்டிப் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை சகாக்கள், சசிகலாவை சந்தித்து ஆசி பெற உள்ளனர். சட்டசபை வெற்றியின் மூலம் அவரது சபதம் வெற்றி பெற்றதாகவும் பேசி வருகின்றனர். "பெங்களூரு சிறைக்குச் செல்லும்போது, ஜெயலலிதா சமாதியில் சபதம் எடுத்துவிட்டுத்தான் சிறைக்குக் கிளம்பினார் சசிகலா. 'ஆட்சியைக் காப்பாற்றினால்தான், கட்சி நீடிக்கும்' என்பதால், எம்.எல்.ஏக்களை ஒரே இடத்தில் அடைத்து வைத்தனர். அவர்கள் நினைத்தபடியே ஆட்சியை தக்கவைத்துவிட்டனர். அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, சிறையில் நேற்று அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார் சசிகலா. அவருடன் டாக்டர்.வெங்கடேஷ், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகான சந்திப்பு என்பதால், அழுகை அடக்க முடியாமல் பேசிக் கொண்டிருந்தார் சசிகலா" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "சசிகலாவுடன் சுதாகரன், இளவரசி உள்ளிட்டோர் கடந்த 15-ம் தேதி முதல் சிறையில் உள்ளனர். சிறையில் அவருக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. இதையடுத்து, சிறைத்துறை அதிகாரிகளிடம் சில வசதிகளைக் கேட்டு மனு அளித்தார் சசிகலா. தற்போது கட்டில், மின்விசிறி, செய்தித்தாள்களை வழங்க உத்தரவிட்டுள்ளது சிறைத்துறை. நேற்று தினகரனுடன் நடந்த சந்திப்பில், பெங்களூருவில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதித்தார். இதற்காக, 'கர்நாடக உள்துறை அமைச்சகத்திற்கு எந்த வகையில் வேண்டுகோள் வைப்பது?' என்பதுதான் சந்திப்பின் சாராம்சமாக இருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்வது குறித்தும் விளக்கினார் தினகரன். தலைமைச் செயலக நடவடிக்கைகள், பன்னீர்செல்வம் அணியின் தோல்வி, சட்டசபைக் காட்சிகள், எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்தெல்லாம் நீண்ட நேரம் விளக்கிக் கொண்டிருந்தார் தினகரன். அனைத்தையும் கேட்டுக் கொண்டவர், 'புழல் சிறைக்கு மாற்றுவதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்துங்கள்' என்பதையே வலியுறுத்தினார் சசிகலா" என்றார் விரிவாக. "புழல் சிறைக்கு மாற்றம் செய்வதற்காக, கர்நாடக உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களை சசிகலா தரப்பில் உள்ளவர்கள் சந்தித்துப் பேசி வருகின்றனர். 'சின்னம்மாவை சென்னைக்கு மாற்றிவிட்டால் போதும்' என்ற மனநிலையில் அவர்கள் உள்ளனர். இதை எதிர்த்து கர்நாடக தமிழர்கள் மத்தியில் சசிகலா எதிர்ப்பு அணியினர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் மூலமாக, ஊழல் எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்துறையின் கவனத்திற்குப் புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர். அதில், 'ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உள்துறை அமைச்சகம் எந்த சலுகையும் அளிக்கக் கூடாது. குன்ஹா அளித்த தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறை பாதுகாப்பாக இல்லை என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைத்தால், அதை ஏற்றுக் கொண்டு, பாதுகாப்பு அதிகம் நிறைந்த திகார் சிறைக்கு அவரை மாற்றுங்கள். சென்னை சிறைக்கு மாற்றினால், ஊழல் குற்றவாளிக்கு கூடுதல் சலுகையை அளித்தது போல் ஆகிவிடும். இதற்கு கர்நாடக அரசு துணை போக வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளனர். புழல் சிறைக்கு மாற்றும் வேலைகள் நடந்தால், தொடர் போராட்டங்களை நடத்தவும் கர்நாடக தமிழர்கள் மத்தியில் பிரசாரம் நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டதால், தேர்தல் ஆணையத்தை சரிக்கட்டும் வேலைகளையும் டெல்லியில் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் செய்து வருகின்றனர். இதையறிந்து, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வேலையில் பன்னீர்செல்வம் அணியினர் செய்து வருகின்றனர். 'பொதுச் செயலாளரை முறையாகத் தேர்வு செய்யுங்கள்' என ஆணையம் அழுத்தம் கொடுக்கும் வரையில் அவர்கள் ஓயப் போவதில்லை. ஆட்சி அதிகாரத்திலும் அவர்கள் வெகுநாட்கள் நீடிக்கப் போவதில்லை" எனக் கொந்தளிக்கின்றனர் பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர். 'பரப்பன அக்ரஹாரா டு புழல்' என்ற ஒற்றை இலக்கை குறிவைத்துக் காய் நகர்த்தி வருகிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா. கர்நாடக தமிழர்களின் எதிர்ப்பு வெல்லுமா என்பதற்கு சில வாரங்களில் விடை தெரிந்துவிடும். http://www.vikatan.com/news/tamilnadu/81512-sasikala-cant-be-transferred-to-puzhal-prison---new-report.html
 3. இலங்கை யுத்தத்தை திரையில் காட்ட முனைந்த மலேசிய பெண்ணிற்கு நேர்ந்த கதி இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை மையமாக வைத்து எடுத்த ஆவணப்படத்திற்கு, முறையான அனுமதி பெறப்படாத குற்றத்திற்காக பெண் பட இயக்குனர் ஒருவரை மலேசிய நீதி மன்றம் குற்றவாளியாக இனம் கண்டுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான லீனா ஹென்றி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற 26 வருட கால யுத்தத்தை ஒரு ஆவணப்படமாக எடுத்து, பட தணிக்கை குழுவின் அனுமதி ஏதும் பெறாமல் படத்தை திரையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மேலும் குறித்த ஆவணப்படத்தில், தணிக்கை கட்டுப்பாடுகளை மீறி, யுத்த நிறுத்த வலயங்கள் மற்றும் யுத்தகள கொலைகளை காண்பித்த குற்றத்தை உறுதி செய்து, பட தணிக்கை மோசடியில் கீழ் வழக்கு பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லீனா கடந்த 2013ஆம் ஆண்டு இதே நீதிமன்றத்தினால் குற்றமற்றவராக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். குறித்த தீர்ப்பை அளித்த நீதிபதிதான் தற்போதய தீர்ப்பையும் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. அத்தோடு குறித்த தணிக்கை மோசடியிற்காக லீனாவிற்கு மூன்று வருட சிறை அல்லது 17 இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படவும், அல்லது இரண்டு தண்டனையும் ஒன்றாக வழங்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய நீதிமன்றின் தீர்ப்பினை பற்றி கருத்து தெரிவித்துள்ள லீனா, நீதி மன்றம் தீர்ப்பு தன்னை ஏமாற்றியுள்ளதாகவும், வழக்கு குறித்த போதுமான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை, தீர்ப்பு வெறுமனே வழக்கறிஞ்சரின் குற்றசாட்டுகளை மையப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து தான் மேன்முறையீடுகளை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது . http://www.virakesari.lk/article/16913
 4. 'எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் என்பதை ஏற்க மாட்டோம்!' - தமிழர்களின் ஒருமித்த குரல் #SurveyResults #ShockResult #VikatanExclusive “குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு.” குடிமக்களின் கருத்தை மதித்து, அவர்களை அன்போடு அணைத்துக்கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும். இது, செங்கோன்மை குறித்த திருவள்ளுவர் வாக்கு. இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் அரசியல், அரசு குறித்த விழுமியங்கள்... மதிப்பீடுகள் மாறி இருக்கலாம். ஆனால், ஓர் அரசு ஸ்திரமாக இருக்க வேண்டுமென்றால், அது மக்களின் கருத்துக்குக் கொஞ்சமேனும் செவிசாய்க்க வேண்டும். சரி... அரசின் கொள்கைகள் மக்களின் கருத்தைக் கேட்டபின் கட்டியெழுப்பப்படுவது பின்னர் இருக்கட்டும்... இந்த அரசு வேண்டுமா... வேண்டாமா என்று விகடன் இணையதளத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நேற்று வெளியிட்டிருந்தோம்... அதில் பிப்ரவரி 21-ந் தேதி மாலை 4 மணி வரையில் ஏறத்தாழ ஒன்றரை லட்சம் மக்கள் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்திருந்தார்கள். எப்போதும் களத்தில் எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்கும், தளத்தில் எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்கும் வித்தியாசம் இருக்கும். ஆனால், இந்தமுறை களத்தில் என்ன குரல் கேட்டதோ... அதுவே தளத்திலும் கேட்டது. அந்தக் கருத்துக்கணிப்பின், ஆச்சர்ய முடிவுகள் கீழே... எடப்பாடி பழனிசாமிதான் தமிழக முதல்வர் என்பதை நான்... ஏற்றுக்கொள்கிறேன் : 1.92% ஏற்றுக்கொள்ளவில்லை : 96.26% கருத்து இல்லை : 1.82% இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக ஆளுநர் ஏற்றுக் கொள்ளலாம் : 8.55% ஏற்றுக் கொள்ளக் கூடாது : 89.85% கருத்து இல்லை : 1.60 % தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென்று ஒரு கருத்து உலாவுவதை நான்... ஆதரிக்கிறேன் : 86.59% எதிர்க்கிறேன்: 4.08% ஆறு மாதங்கள் கழித்து முடிவு செய்யலாம் : 9.34% சசிகலா மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சமூக ஊடகங்களில் எதிராக உள்ள கருத்துகள்... பெரும்பான்மை மக்களின் எண்ணம் : 94.33 % எதிரணியினரால் கட்டமைக்கப்பட்டஒன்று : 2.24% கருத்து இல்லை : 3.43% ... http://www.vikatan.com/news/coverstory/81559-people-opinion-about-tn-contemporary-politics-surveyresults.html
 5. 'தலைவரே... மீன் செலவு என்னுடையது!' கூவத்தூர் ரிசார்ட் ருசிகரம் #VikatanExclusive ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்ட உணவில் மீன் செலவு என்னுடையது என்று பொறுப்பேற்றுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். அதோடு எம்.எல்.ஏ.க்களை மன்னார்குடி குடும்பம் சிறப்பாக கவனித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க.வில் உள்கட்சி பூசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சசிகலாவை ஆதரித்த எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. மன்னார்குடி குடும்பத்தினருடன் நெருக்கமாக இருக்கும் அமைச்சர் ஒருவரே அனைத்தையும் கவனித்துக் கொண்டார். அவர் தரப்பினர் மூலம் எம்.எல்.ஏ.க்கள் கண்காணிக்கப்பட்டனர். 11 நாட்கள் ரிசார்ட்டில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களுக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கும் காரைக்குடி செட்டிநாடு ஸ்பெலிஸ்ட் மாஸ்டர்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டது. அதோடு சைவ உணவுக்கு என்று தனி மாஸ்டர்கள் இருந்தனர். ரிசார்ட்டில் உள்ள வி.வி.ஐ.பி. டைனிங் ஹாலில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆகியோருக்கு தனி இடமும், இவர்களின் உதவியாளர்கள், டிரைவர்கள் மற்றும் கட்சியினருக்கு தனி இடத்திலும் உணவு சப்ளை செய்யப்பட்டது. வி.வி.ஐ.பி.க்கள் டைனிங் ஹாலில் மற்றவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதற்காக டைனிங் ஹால் வாசலில் அமைச்சரின் ஆதரவாளர்கள் காவல் இருந்தனர். அவர்கள் மற்றவர்களை அனுமதிக்கவில்லை. வி.வி.ஐ.பி.க்களாக கருதப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றவர்களை விட நன்றாக கவனிக்கப்பட்டனர். தினமும் அசைவ, சைவ உணவுகள் கொடுக்கப்பட்டன. அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலிருந்து வஞ்சிரம், சங்கரா, வவ்வால், சுறா, நெத்திலி உள்ளிட்ட மீன்கள் தினமும் சப்ளை செய்யப்பட்டன. இதற்காக ராயபுரத்திலிருந்து மீன்கள், ரிசார்ட்டுக்கு காரில் கொண்டு செல்லப்பட்டன. ரிசார்ட்டுக்கான பில் தொகை வந்தபோது, 'தலைவரே... மீன் செலவு என்னுடையது' என்று அமைச்சர் ஜெயக்குமார், பொறுப்பேற்றுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதுபோல பில் தொகையை கட்சியில் செல்வாக்கான நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ரிசார்ட்டின் பில் தொகையை மட்டும் கட்சியினர் வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவிட்டனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரிசார்ட்டை காலி செய்ததும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரிசார்ட் மூடப்பட்டு இருந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/81566-i-shall-pay-for-the-fish-bills-happenings-of-koovathur-resort.html
 6. 'King Arthur: Legend of the Sword' - ட்ரெய்லர் சார்லி ஹன்னம், ஜூட் லா, டேவிட் பெக்கம்(கேமியோ), ஜிமோன் ஹோன்சோ ஆகியோர் நடித்திருக்கும் 'King Arthur: Legend of the Sword' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வரும் மே மாதம் 17-ம் தேதி படம் வெளியாகிறது. கய் ரிட்ச்சி இயக்கியுள்ள படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகம். இதில் கிங் ஆர்தராக சார்லி ஹன்னம் நடித்துள்ளார். நாட்டை ஆளும் கொடுங்கோலன் வோர்ட்டிகெர்ன் ஆக ஜூட் லா நடித்துள்ளார். ட்ரெய்லர் மியூஸிக் என்ன எனக் கேட்கிறீர்களா? அது Led Zeppelin இசைக்குழுவின் 'Babe I'm Gonna Leave You!' பாடல்.
 7. இது ஒரு பல்சுவை திரி. நான் படித்தது பார்த்ததை பதிவிடுகிறேன். இயன்றவரை யாழில் வேறு திரிகளில் வராத நிகழ்வுகளை பதிவிட முயற்சிக்கிறேன். கால்கள் இல்லை... நம்பிக்கை உண்டு: மாடலிங் துறையில் சாதிக்கும் சீசர்! பிறக்கும்போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்தவர் கென்யா சீசர் (23). ஆனால் தற்போதோ இவர் ஒரு வெற்றிகரமான உள்ளாடை மாடல். கென்யா 5 வயதாக இருக்கும்போது தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு அனாதை இல்லம் அவரை தத்து கொடுத்தது. அவர் தனது புதிய குடும்பத்துடன் (ஒரேகான்) போர்ட்லாந்து சென்றார். சக்கர நாற்காலி மற்றும் ஸ்கேட்டிங் போர்டை பயன்படுத்தி அவர் நடக்கக் கற்றுக்கொண்டார். கலிபோர்னியாக்ச் சேர்ந்தவரான கென்யா, தனது வாழ்க்கை குறித்து கூறுகையில், “மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எனது கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. நான் முக்கியமாக தடகள உள்ளாடைகள் விளம்பரங்களில் நடிக்கிறேன். இது சில சமயம் வேடிக்கையாக இருக்கும். நான் வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறேன். கவர்ச்சியாக உணர கால்கள் தேவை இல்லை. எனது வேலையை விரும்பி செய்து நான் சம்பாதிக்கிறேன். எனது அழகை மக்களிடையே காட்டுவதை விரும்புகிறேன். இது எனது பலத்தை காட்டுகிறது” என்கிறார். இந்த உள்ளாடை மாடலிங் துறை மூலம் தினமும் 65 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார் கென்யா. பேஷன் துறையின் தடைகளை உடைத்து இவ்வாறு இவர் புகழ் பெறுவதன் மூலம், பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தால், தற்போது 2018 பாரா ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சி பெறுகிறார் கென்யா. வாழ்க்கையில் தனது பயணம் குறித்து, இவர் எழுதியுள்ள ஒரு புத்தகம் அடுத்த வருடம் (2016 ல்) வெளிவரவுள்ளது.
 8. வடக்கு,கிழக்கு இணைப்பு கைவிரித்தது இந்தியா வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நேற்றுக்காலை பேச்சுக்களை நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சுக்களில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வாக்குறுதியை, 1987ஆம் ஆண்டு இந்தியா வழங்கியது என்றும், அதனை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்ற வாக்குறுதியையும் இந்தியா கொடுத்தது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் 2006ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்ட போது இந்தியா அதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியா தெளிவான அக்கறை இழந்து விட்டது என்று அவர் கூறியிருந்தார். அதற்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், “1987ஆம் ஆண்டு இருந்த நிலைமை இப்போது மாறி விட்டது, கொழும்பில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இப்போது பல்வேறு வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எனினும், ஏனைய எல்லா விவகாரங்கள் குறித்து பேசும் போதும், வடக்கு, கிழக்கு இணைப்பை பணயம் வைக்கக் கூடாது. தமிழர்கள் இதனை உயிர்ப்புடன் வைத்திருந்தால் இந்தியா அதனை கருத்தில் கொள்ளாது, எனினும், இலங்கை அரசுடனான பேச்சுக்களில் இதுபற்றி கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்” என்று பதிலளித்துள்ளார். அத்துடன், இந்திய – இலங்கை உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக நடைமுறைப்படுத்த முடியாது. இந்த உடன்பாட்டை தடம்புரளச் செய்வதற்கு விடுதலைப்புலிகள் ராஜீவ்காந்தியை படுகொலை செய்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும், இந்த உடன்பாட்டை கண்டித்தது. இந்த உடன்பாட்டுக்கு எதிரானவரான மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதை விடுதலைப் புலிகளும் எதிர்பார்த்திருந்தனர். இவற்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும்” அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.onlineuthayan.com/news/24141
 9. இப்படி எல்லாம் கவிதை எழுதுவாரா, கமல்ஹாசன்?: நெட்டிசன்கள் ஆச்சரியம் - ஆவேசம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் மாநில அரசியல் நிகழ்வுகளை ரத்தின சுருக்கமாக சித்தரித்து, நடிகர் கமல்ஹாசன் பெயரால் இணையதளத்தில் உலாவரும் நேர்த்தியான, கருத்தாழம் மிக்க அற்புத வரிகளால் இயற்றப்பட்ட கவிதை பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நடிகர் கமல்ஹாசன், அடுத்தடுத்து மாநிலத்தின் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாகவும், எதிர்பாராத திருப்புமுனைகளை சந்தித்துவரும் தமிழக ஆட்சியைப் பற்றியும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்துள்ளார். சில பேட்டிகளிலும் தனது மனதுக்கு சரி என்று தோன்றுவதை வெளிப்படையாக தெரிவித்தும் வரும் கமல்ஹாசன் பெயரால் தற்போது வெளியாகியுள்ள ஒரு கவிதை இணையவாசிகள் இடையே பரப்பான விவாதப் பொருளாக மாறியுள்ளது. மன்னர்கள் ஆட்சிக் காலத்தின்போது மக்களின் மனநிலைக்கு மாறாக அரசு நடத்தும் ஆட்சியாளர்களை தட்டிக்கேட்டு, குத்திக்காட்டி, திருத்தும் வகையில் பண்டைக்கால தமிழ் புலவர்கள் தங்களது கவித்திறனை ஒரு போராயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய கவிதை வடிவத்தை ‘அறக்கவி’ ‘ஆசுக்கவி’ என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது. ‘அறம்’ எனப்படும் நீதி, நியாயம் மற்றும் தர்மத்தை ஆட்சியாளர்கள் மதிக்காமல் மீறும்போது, ஒவ்வொரு காலகட்டத்திலும் சில புலவர்கள் இதுபோன்ற அறக்கவிதைகளை இயற்றி ஆட்சியாளர்களை அகற்றும் புரட்சியாளர்களாக மக்களை மாற்றிய நிகழ்வுகள் வரலாற்றில் பரவலாக காணக் கிடக்கின்றது. அவ்வாறு, தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாக வெகு துல்லியமாகவும் ரத்தின சுருக்கமாகவும் அழகிய தமிழ்நடையில், சந்தம் நழுவாத சிந்தாக இயற்றப்பட்ட ஒரு கவிதை தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி, வைரலாக பரவியும் வருகிறது. ‘சிங்கமில்லாக் காடு’ ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை’ என்ற தலைப்புகளுடன், ‘நடிகர் கமல்ஹாசன் எழுதிய கவிதை’ என்ற அறிமுகத்துடன் பலரது பகிர்வாக உலாவரும் அந்த அற்புதப் படைப்பின் வைர (டைனமைட்) வரிகள் இதோ..:- செங்கோல் வாங்கிய சிங்கமொன்று ஜெயமாய்க் காட்டை ஆண்டது மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும் மர்மமாய் அதுவும் மாண்டது உடனிருந்த கள்ள நரியொன்றின் உள்ளத்தில் ஆசையோ மூண்டது புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே புதிய வேடம் பூண்டது! வேரில் ஊற்றிய வெந்நீராய் வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால் திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ தியான நாடகம் போட்டது! ஊரில் உள்ள உத்தமர்கள் ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென தேரில் தன்னை ஏற்றிடவே திருடர்கள் துணையைக் கேட்டது! அத்தை மறைந்த நல்வாய்ப்பில் தத்தை ஒன்றும் கிளையமர்ந்து விழியில் தீபம் ஏற்றியே வித்தைக் காட்டத் தொடங்கியது! நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு சொத்தை வாங்கிய வழக்கினது திருத்தி எழுதிய தீர்ப்பாலே நரியின் கனவோ முடங்கியது! காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த அடிமை விலங்குகள் ஓரிடத்தில் அவரவர் வேலையை மறந்துவிட்டு அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே! காசை வாங்கி வாக்களித்த கானகத்து உயிர்களெல்லாம் ஆசை வெறுத்த மனத்துடனே அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே! இவ்வாறு அந்த கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் சமூகக் கோபம், கண்ணதாசனின் உவமைநயம், வாலியின் சொல்லாட்சி ஆகியவை ஒருசேர உள்ளடங்கிய இந்தக் கவிதையை படிக்கும் கமல்ஹாசனின் ரசிகர்கள் அவர் கவிதைத்துறையையும் விட்டுவைக்கவில்லை என்ற மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் கிடக்கின்றனர். அதேவேளையில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் திருடர்கள், நரி, ஓநாய், திருடர்கள், அடிமைகள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டுள்ளதை அறிந்து ஆவேசப்படுகின்றனர். இந்நிலையில், இந்த கவிதைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து பதிவிட்டுள்ள அவர், ‘நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல. செய்தவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்’ என்று குறிப்பிட்டுள்ளார். கருத்தாழம் மிக்க இந்த கவிதை திருவிழா கூட்டத்தில் காணாமல் போன ‘அனாதை குழந்தை’ போல் தற்போது ஆகிவிட்டாலும், இணையத்தில் மறுபதிவுகளும், மறுபகிர்வுகளும் மென்மேலும் வைரலாகி கொண்டே வருவது, குறிப்பிடத்தக்கது. http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/02/21161623/1069625/Kamal-Hassan-kavithai-for-TN-politics.vpf
 10. சர்வதேச ஊடகங்களை சொல்லிசையால் திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளம் கவிஞர் ஈழத்து இளம் கவிஞர் ஒருவர் சர்வதேச ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம். இசையின் இப்போதைய உச்சமான வடிவம் சொல்லிசை. வார்த்தைகளை இசையுடன் இணைத்து வேகமுடன் ஆனால் அதிக அர்த்தத்துடன் கருத்து ஆழத்துடன் வெளிப்படுத்தும் ஒரு முறை. உலகம் முழுதும் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு இசை முறை இது. ஈழத்தில் பிறந்து தற்போது டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இளம் சொல்லிசை கலைஞன் டேரியல் தன்னுடைய புதிய படைப்புகளை இப்போது சர்வதேச முன்ணணி ஊடகங்களில் வெளியிட்டு புதிய வீச்சு ஒன்றை உருவாக்கி கொண்டிருக்கிறார். மிகவும் சிறந்த சர்வதேச இசை நிறுவனமான நொய்ஜி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச முன்னணி ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவருடைய தற்போதைய புதிய பாடலான மருந்து என்பது நவீனமுறையில் படமாக்கப்பட்டு இதுவரைகால எடிட்டிங் முறையில் காணப்படாத அழகிய முறையில் சேர்க்கப்பட்டு இப்போது யூடியுப்பில் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் மீதான எங்களின் கரிசனையை, மனித உணர்வுகள் மீதான எமது தேடலை புதிய சொற்களில் இசையாக்கும் இந்த இளைஞனையும் அவரது முயற்சியையும் இனிவரும் காலங்களில் அனைத்து ஊடகங்களும் வெளியிடும் என்று நம்புவோமாக.. http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/02/21155257/1069616/Eelam-young-poet-new-for-international-media.vpf
 11. நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்ற இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – நோர்வே தூதுவர் இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் முன்னேற்றங் காண வேண்டுமாயின் இத்துறைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனாhன விசேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்றும் பொருட்டு இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வே நிறுவனங்களின் கப்பல்கள் உலக அங்கீகாரம் பெற்றவை எனவும் இக்கப்பல்களில் பல்வேறு நாட்டினரும் பணியாற்றுவதாகவும் இலங்கையர்களும் இக்கப்பல்களில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்ளலாம எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்வார்களாயின் முன்னேற்றம் காண்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/archives/18558
 12. தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவத்தினர் வைத்திருந்தனர் : புகைப்பட ஆதாரங்களுடன் ஐ.நா.விடம் சிக்கியது Published on 2017-02-21 15:25:12 பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்துள்ளது. விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின் ஜொகனனஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது. ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு, குற்றவாளிகளாக இராணுவ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கததை கோருமாறு கேட்டுள்ளது. இந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், அரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை ஐ.நா குழு ஊடாக வழங்கியுள்ளோம். நீதியை நிலைநாட்டும் கடும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றதா என்பதை பார்ப்போம். அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எமது அறிக்கையில் கூறியுள்ளோம். ஐ.நா குழு அதன் முன்னேற்றங்களை கண்காணிக்க முடியும் என சூகா கூறியுள்ளார். குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரிகளில் மேஜர் ஒருவரும் லெப்டினட் ஒருவரும் அடங்குகிறார். பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இலங்கையின் மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அவர்களிடம் சிக்கிய பெண்களின் சத்தியக் கடிதங்களின் பெயர்கள் ஐ.நா குழுவிடம் வழங்கப்பட்டுள்ள விபரமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. இந்த அதிகாரிகளில் ஒருவர் ஐ.நா அமைதிக்காக்கும் படையில் சேவையாற்றியுள்ளார். நான்காவது அதிகாரி சித்திரவதை கொடுப்பதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். 5ஆவது அதிகாரி இந்த குற்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்த அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்தாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு முகாம்கள் தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. முகாம்கள் இயங்கியதாக கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. வவுனியாவுக்கு அருகில் ஒரு முகாம், புத்தளத்திற்கு அருகில் ஒரு முகாம். கொழும்பில் ஒரு முகாம் , கொழும்புக்கு வெளியில் வடக்கு,கிழக்கு அல்லாத ஒரு பிரதேசத்தில் ஒரு முகாம் என இந்த முகாம்கள் இயங்கி வந்துள்ளன எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. விசாரணைகளை நடத்தாமை, பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், ஐ.நா குழுவின் முன் கடுமையாக சாடியுள்ளது. சித்திரவதை மற்றும் பயங்கரமான பாலியல் தாக்குதல்களை வெளியிட்டுள்ள 55 பெண்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அமைப்பு தனது புதிய அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 48 பெண்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் ஆட்சியின் கீழ் 7 பெண்களும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது. எது எப்படி இருந்த போதிலும் இராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிலர் அப்படியான குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. http://www.virakesari.lk/article/16906
 13. மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம். பி. கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் தமது நிலங்களை விடுவித்து தருமாறு கோரி மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்துக்கு செல்லாது மக்களோடு உணவுதவிர்ப்பு போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஈடுபட்டுள்ளார். புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பத்தொன்பதாவது நாளை எட்டியுள்ள அதேவேளை சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று எட்டாவது நாளாக இடம்பெறுகிறது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் தமது நிலங்களை விடுவித்து தருமாறு கோரி மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று பாராளுமன்றத்துக்கு செல்லாது மக்களோடு உணவுதவிர்ப்பு போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் ஈடுபட்டுள்ளார். இந்த போராட்டம் கடந்த மூன்றாம் திகதி முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தெரிவித்தே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுபட்டுள்ளனர். எனினும் கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதும் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கருத்து தெரிவிக்கையில், பலதடவைகள் பாராளுமன்றில் கதைத்தும் காணிப்பிரச்சினை தொடர்பாக எந்த பதிலும் கிடைக்கவில்லை எனவே பாராளுமன்றிற்கு சென்று எந்த பலனுமில்லை. அதானால் அந்த பாராளுமன்றுக்கு சென்று எதுவும் ஆகப்போவதில்லை அதனால் நான் இன்று விடுவிப்புக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்றார். http://www.virakesari.lk/article/16908
 14. முட்டை ஓட்டில் பிரமாண்ட ஓவியம்... சத்யபாமா பல்கலைக்கழக மாணவி கின்னஸ் சாதனை..! சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் பயிலும் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி மேரி சௌம்யா, 15,045 முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி பிரமாண்ட ஓவியம் வரைந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தவருக்கு முட்டை ஓடுகளின் மீது வரையப்படும் ஓவியங்களில் தனிப்பிரியம். பத்தாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே முட்டை ஓடுகளின் மீது வரைவதை பொழுதுபோக்காக வைத்திருந்தார். உலக அளவில் மிகப்பெரிய சுவரோவியம் அதுவும் முட்டை ஓடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் என்ன என்றொரு ஐடியா அவர் மனதில் ஃப்ளாஷ் அடிக்க உடனடியாக களத்தில் இறங்கினார். முட்டை ஓடுகளைத் தயார் செய்வது, வர்ணம் தீட்டுவது என தன் வேலையை இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொண்டு மொத்தம் நான்கு மாதங்கள் இந்த ஓவியத்தை உருவாக்க எடுத்துக் கொண்டார். முட்டையில் மஞ்சள் கரு, வெள்ளை கருவை நீக்குவது, நான்கு முறை கழுவுவது, காயவைப்பது என முட்டை ஓடுகளைத் தயார் செய்வதற்கே நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரம் என நான்கு மாதங்களை செலவு செய்தார். பிறகு 288 சதுரஅடி ப்ளைவுட்டில் வரையத் தொடங்கினார். அக்டோபர் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை முட்டை ஓடுகளில் வண்ணம் தீட்டி அதை ப்ளைவுட்டில் ஒட்டி “Just fill the Plate with the Right food” மற்றும் ”Fudo e Pretious” (Food is Precious) என்ற இரு வாசகங்கள் அடங்கிய ஓவியத்தை வரைந்து முடித்தார். இதை ஒட்டுவதற்கு மட்டுமே கிட்டத்தட்ட 30 கிலோ பசை தேவைப்பட்டது. 18 லிட்டர் பெயின்ட் உபயோகித்து 15,045 முட்டைகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பிரமாண்ட ஓவியத்தை, “முட்டை ஓடுகளை வைத்து வரையப்பட்ட மிகப்பெரிய சுவரோவியம்” என்று கின்னஸ் புத்தகம் மற்றும் லிம்கா புத்தகம் இதனை அங்கீகரித்துள்ளன. இந்த ஓவியத்தினை தனது பெற்றோருக்கும், தனது கனவு நினைவேற துணை நின்ற சத்யபாமா யுனிவர்சிட்டிக்கும் அர்ப்பணிப்பதாக சௌம்யா தெரிவித்தார். http://www.vikatan.com/
 15. பன்னீர்செல்வம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல்! தேனியில் கலகலத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் புதிய அணியை உருவாக்கிவருகிறார். இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் உள்பட பதினொரு எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அ.தி.மு.க கொறடா உத்தரவை எதிர்த்து வாக்களித்ததால், இவர்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேனியில் அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கத் தமிழ்செல்வன், கதிர்காமு,ஜக்கையன் ஆகியோர் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும். இந்தத் தொகுதியில் டி.டி.வி.தினகரன் நின்று ஜெயிப்பார்" என்று கூறினர். http://www.vikatan.com/news/tamilnadu/81524-opannerselvam-will-face-election-soon-says-admk-mlas-in-theni.html
 16. 'ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றி ஆதாரங்கள் திரட்டுகிறோம்' - விடாது 'பீட்டா' பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டப் பிறகு நடந்த போட்டிகளில் 'மிருகவதை பற்றி ஆதாரங்களைத் திரட்டி வருவதாக' தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருந்த நிலையில், இந்தாண்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டங்களால் சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தமிழகமெங்கும் நடந்தது. தற்போது பீட்டா அமைப்பின் இந்தியத் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, 'இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் அதிகமாக மிருகவதை நடந்தது. மிருகவதை பற்றிய ஆதாரங்களைத் திரட்டி, சீக்கிரமே உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்' எனத் தெரிவித்துள்ளார். http://www.vikatan.com/news/india/81536-we-are-collecting-evidence-for-animal-cruelty-in-2017-jallikattu-says-peta.html
 17. பன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்! “மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் செய்யத் துணியாத செயலை, முதல்முறையாகப் பதவியேற்ற பழனிசாமி செய்துவிட்டார்” என்று சிலாகித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க-வின் முன்னணியினர். பெரியகுளம் தொகுதியின் வேட்பாளராக 2001-ம் ஆண்டு அறிமுகமாகி, தேர்தலில் வெற்றியும் பெற்று வருவாய்த் துறை அமைச்சராக ஜெயலலிதாவினால் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டார் பன்னீர்செல்வம். ஆனால், ஜெயலலிதா மீதான வழக்கைச் சுட்டிக்காட்டி அப்போது அவரின் முதல்வர் பதவி பறிக்கபட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத ஜெயலலிதா, அடுத்து என்ன செய்வது, யாரை பொறுப்புக்கு நியமிப்பது என்ற நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். சசிகலாவின் அக்கா மகனாகவும் அன்றைய அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த டி.டி.வி.தினகரன், “பன்னீர்செல்வம் நமக்கு விசுவாசமாக இருப்பார்” என்று கூற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம் தமிகத்தின் முதல்வர்கள் பட்டியலில் பன்னீர்செல்வம் பெயரும் பதிந்தது. பயமும், பவ்யமும் கலந்தே முதல்வராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம். ஆனாலும், முதல்வரின் அறையை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டார். அப்போது வருவாய்த் துறை அமைச்சராக அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையே முதல்வரின் அறையாகவும் செயல்பட்டது. ஜெயலலிதாவின் உத்தரவு இல்லாமல் எந்த உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டதில்லை. “தனக்குப் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க வேண்டாம்” என்றுகூட அப்போது அவர் சொல்லிப்பார்த்தார். பன்னீர்செல்வம் ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராகத்தான் அப்போது இருந்தார். அதன் பிறகு, ஜெயலலிதாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்ததும், தனது பொறுப்பை அவரிடமே வழங்கி, அவருடைய குட்புக்கிலும் இடம்பிடித்தார் பன்னீர்செல்வம். 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்புவந்து அவர் சிறைசெல்லும் நிலை ஏற்பட்டடதால், அவர் முதல்வர் பதவியை இழக்க வேண்டியதாயிற்று. அப்போது, தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். இந்தநிலையில், ஆட்சியை அடுத்து யார் எடுத்துச் செலுத்துவது என்ற கேள்வி எழுந்தது. நீதிமன்ற வாயிலில் இருந்த ஜெயலிலதா சற்றும் யோசிக்காமல் பன்னீரை அழைத்து முதல்வராகப் பதவியேற்றுக்கொள்ள உத்தரவிட்டார். பெங்களூருவிலிருந்து சென்னை வந்த பன்னீர்செல்வமும், அமைச்சர் பெருமக்களும் அவசரஅவசரமாக கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்கள். முதல்வராகப் பன்னீர்செல்வம் பதவியேற்றாலும் முதல்வரின் அறையை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டு, நிதி அமைச்சரின் அலுவலகத்திலேயே முதல்வராக அவர் தொடர்ந்தார். ஜெயலலிதா அறிமுகம் செய்த எந்தத் திட்டத்தையும் அவர் தொடங்கிவைக்க மறுத்துவிட்டார். நடப்பு விவகாரங்களுக்கு ஒப்புதல் வழங்கியே மாதங்களைக் கடத்தினார். எதிர்க்கட்சிகள், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தாலும் அதைக் காதில்போட்டுக் கொள்ளாமல் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாகவே நடந்துகொண்டார். அப்போது தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் கட்டப்பட்டுத் திறப்பு விழாவை நோக்கி, முதல்வரின் உத்தரவுக்காகக் காத்திருந்தன. ஆனால், ‘அம்மா வரட்டும்’ என்று அனைத்து அம்மா உணவகங்களையும் மூடியே வைத்திருந்தனர். முதல்வரின் அறையும் மூடப்பட்டு இருந்தது. வழக்கில் இருந்து விடுதலையாகி ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றபோதுதான் அந்த முதல்வர் அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்தது. அதேபோல் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் வாய்ப்பு பன்னீருக்கு வந்தது. இரண்டு முறை முதல்வராக இருந்தபோதாவது, ஜெயலலிதா இருக்கிறார் என்ற பயத்தில் அவருடைய முதல்வர் அலுவலகத்தைப் பயன்படுத்தாமல் தவிர்த்தார். ஆனால், இந்த முறை முதல்வரின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் பயன்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நிதி அமைச்சரின் அலுவலகத்தின் வாயிலில் முதல்வர் என்ற பெயர் பலகை மட்டும் மாட்டப்பட்டு முதல்வர் அலுவலகம் பன்னீரின் நிதி அமைச்சர் அலுவலகத்திலேயே செயல்படத் தொடங்கியது. அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளைக்கூடச் செயல்படுத்தாமல் தமிழகத்தின் பிரதான பிரச்னைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்திவந்தார். “முதல்வர் அலுவலகத்தைப் பயன்படுத்துங்கள் என்று கார்டனில் இருந்து உத்தரவு வரும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், உங்களின் முதல்வர் பதவியே நிரந்தரமானதல்ல என்று சொல்லாமல் சொல்லிவந்தனர் கார்டன் தரப்பினர். அதனால் முதல்வர் அலுவலகம் மீது அவர் ஆர்வம் காட்டாமல் இருந்துவந்தார். “முதல்வர் அலுவலகத்துக்கு மாறுவீர்களா’’ என்று கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் சசிகலாவுக்கு எதிராக இவர் போர்க்கொடி தூக்கியதும் அவருடைய முதல்வர் பதவி பறிபோய் புதிய முதல்வராக தமிழகத்தின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பதவியேற்றதும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றிபெற்றதும் உற்சாகமானார் பழனிசாமி. பன்னீர்செல்வத்தை பீட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு காய் நகர்த்தத் தொடங்கினார். அ.தி.மு.க-வின் இப்போதைய அதிகார சக்தியாக இருக்கும் தினகரனைச் சந்தித்துப் பேசினார்.“நம்மீது மக்களிடம் இப்போது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்யவேண்டும் என்றால், உடனடியாக நாம் கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தால் மட்டுமே முடியும். அம்மாவினால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அறிவிப்புகளை நான் பதவியேற்றதும் அறிவித்தால் நம் மீதான இமேஜ் மாறும். கொஞ்ச நாள்களில் மக்களின் மனநிலை மாறியதும் நீங்கள் ஆட்சியைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னதும், தினகரன் தரப்பு அதற்கு ஓ.கே சொல்லி... “உங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்தால் போதும்’’ என்று மட்டும் சொல்லப்பட்டது. உற்சாகமான பழனிசாமி, தனது செயலாளர்களை அழைத்து... “முதல்வரின் அறையை ரெடி பண்ணுங்கள்” என்று சொன்னதும் ஆச்சர்யபட்டனர் அதிகாரிகள். அவசரமாக முதல்வர் அறை ரெடியானதும், திங்கள்கிழமை அன்று நண்பகலில் முதல்வர் அறைக்குள் கால் வைத்தார். அங்கிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ஜெயலலிதா எந்த சேரில் அமர்ந்தாரோ, அதிலேயே அவர் அமர்ந்து முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அவர், பதவியேற்றபோது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கைதட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். முதல்வர் அறையின் வாயிலிலும், முதல்வர் பழனிசாமி என்று மாற்றப்பட்டது. ஆறு மாதங்களாக மூடிக்கிடந்த அறையில் அமரந்து ஜெயலலிதா அறிவித்த’ ஐந்து திட்டங்களின் செயல்பாட்டுக்கான ஆணை’யிலும் கையெழுத்திட்டுள்ளார். “ ‘பன்னீரால் முடியாமல் போனது பழனிசாமியால் முடியும்’ என்று பன்னீர் தரப்பை கடுப்பேற்றத்தான்... இப்படி ஓர் ஏற்பாடு நடைபெற்றது’’ என தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பன்னீர் பயந்தார்,.. பழனிசாமி பாய்ந்துள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/81485-battle-between-o-panneerselvam-and-edappadi-palanisamy.html
 18. பாதுகாப்பு துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை – HRW பாதுகாப்புத்துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இலங்கை அரசாங்கம் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும் எனினும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 25 முக்கிய விடயங்களில் பாதுகாப்புத்துறைசார் விடயங்களில் மறுசீரமைப்புச் செய்தலும் உள்ளடங்குகின்றதாகவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ரத்து செய்வதற்கு இதுவரையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பாதுகாப்புத் துறையில் மாற்றம் செய்வதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளது. கால மாறு நீதிப்பொறிமுறைமை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் முனைப்பு குறித்தும் கண்காணிக்கப்பட வேண்டுமென மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வாக்குறுதி அளித்து 18 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இலங்கைத் தலைவர்கள் முக்கிய மனித உரிமை விடயங்களுக்கு தீர்வு காண முனைப்பு காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/archives/18546
 19. மஹேல, சங்கா மற்றும் கெயில் பாகிஸ்தான் செல்ல மறுப்பு! பாகிஸ்தான் சுப்பர் லீக் தற்சமயம் டுபாயில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாக். சுப்பர் லீக்கின் இறுதிப்போட்டியை பாகிஸ்தானின் லாஹுர் மைதானத்தில் நடத்துவதற்கு பாக். சுப்பர் லீக் நிர்வாகம் மற்றும் அணி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாகிஸ்தான் செல்வதற்கு பல வீரர்கள் ஆதரவளித்துள்ள போதும், முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் கிரிஸ் கெயில் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக பாகிஸ்தான் செல்வதற்கு இவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள், லாகூரில் நடக்கவிருந்த போட்டியில் பங்கேற்க சென்ற போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதனால் பாகிஸ்தானில் விளையாடுவதற்கு தேசிய கிரிக்கெட் அணிகள் செல்ல மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/16899
 20. வங்கதேசம் உதிக்க காரணம் தாய் மொழிப்பற்று! #InternationalMotherLanguageDay #தாய்மொழிதினம் மனிதன் கண்டுபிடித்த அற்புதமான விஷயங்களில் மொழிகளுக்குதான் முதலிடம். தாய்மொழி இல்லையென்றால் நாம் என்ன செய்வோம்... யோசித்துக் கூட பார்க்க முடியாது. உலகில் செழுமையும் பழமையும் கலந்த பல மொழிகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், சமஸ்கிருதம் போன்றவை முதன்மையானவை. எழுத்துரு இல்லாத மொழிகள் எளிதில் மக்களிடையே இருந்து மறைந்து விடும். புத்தர் பேசிய மகாதி மொழி கூட அப்படித்தான் அழிந்து போனது. இந்த நூற்றாண்டுக்குள், இன்னும் பல பழமையான மொழிகள் அழிந்து போகும் நிலையில் உள்ளன. மொழிகளைக் காக்க உலகம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. ஒரு மொழியைத் திணிப்பது இன்னொரு மொழியை அழிப்பதற்குச் சமம் என்பதுதான் பொதுவான நம்பிக்கை. அதனால், தங்களது விருப்பத்தை மீறி ஒரு மொழி திணிக்கப்படும்போது போராட்டங்கள் வெடிக்கின்றன. இன்று உலக தாய் மொழி தினம். இப்படி ஒரு தினம் பிறக்கக் காரணமாக அமைந்ததும், ஒரு போராட்டமும் உயிர் தியாகமும்தான். வங்க தேசம் என்றால் உடனே 1971-ல் நடந்த போர்தான் நமக்கு நினைவுக்கு வரும். பாகிஸ்தானிடம் போரிட்டு வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்கியது இந்தியாதான். ஆனால், அந்த பிரிவினைக்கான போராட்டம் வெடிக்க முக்கிய காரணமாக இருந்தது வங்கதேச மக்களின் தாய் மொழிப்பற்று. இயற்கையாகவே வங்க தேசம் நம் மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள பகுதி. அதனால்தான் மேற்கு வங்கம், கிழக்கு வங்கம் என முன்னர் அழைப்போம். இங்கு வசிக்கும் பெரும்பான்மையானோர் முஸ்லிம்கள் என்றாலும் அவர்களது தாய்மொழி வங்காளம். அதே வேளையில் பாகிஸ்தானில் வசிக்கும் மக்களின் தாய் மொழி உருது. பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தான் முழுமைக்கும் உருது தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் இரண்டுக்குமே உருது மட்டுமே தேசிய மொழி என சட்டம் இயற்றப்பட்டது. பாகிஸ்தான் நாட்டு கரன்சியில் இருந்து வங்க மொழி அகற்றப்பட்டது. பாகிஸ்தான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், வங்க மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியில் இருந்து நீக்கியது இதனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் கடும் கோபம் கொண்டனர். 1947 செப்டம்பர் 15-ல் தாய் மொழியைக் காக்க வேண்டுமென கருதி Tamuddun Majlish என்ற அமைப்பு உருவானது. வங்க மொழியைச் சேர்ந்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போராட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்த அமைப்பின் தலைவராக டாக்கா பல்கலையின் இயற்பியல் பேராசிரியர் அபுல் காசிம் என்பவர் இருந்தார். மாணவர்களிடையே போராட்ட குணத்தை விதைத்தார். மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். களம் சூடானது. போராட்டம் தீவிரமடையவே, 1948 மார்ச் 19-ல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா, டாக்கா வந்தார். மார்ச் 24-ல் டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஜின்னா உரையாற்றினார். அப்போது, ''முஸ்லிம்களைப் பொறுத்தவரை உருதுதான் ஒரே மொழி. அதனை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு விரோதிகள்'' என்றார். பின்னர் மாணவர்களிடத்திலும் தேசிய மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பேசினார். ஆனால், மாணவர்கள் மசியவில்லை. 1947-ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் நடந்து கொண்டேதான் இருந்தது. இந்தப் போராட்டத்தில் 'வங்கதேசத்தின் தந்தை ' என்று அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் முக்கிய பங்காற்றினார். மாணவர்கள் போராட்டத்துக்கு டாக்கா மருத்துவப் பல்கலைக்கழகம்தான் முக்கிய ஸ்தலமாக இருக்கிறது என பாகிஸ்தான் கருதியது. 1952 பிப்ரவரி 21-ம் தேதி அந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், முகமது சலாலூதீன், அப்துல் ஜபார், அப்துல் பெர்கத், ரிஃப்லுதீன் அகமது, அப்துல் சலாம் ஆகிய மாணவர்கள் பலியாகினர். உலகின் முதல் மொழிப்போர் தியாகிகள் இவர்கள்தான். மாணவர்கள் பலியானதையடுத்து, டாக்கா முழுவதுமே கலவரம் பரவியது. அடுத்த நாள் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டத்தில் குதித்தனர். அப்போதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 4 பேர் இறந்தனர். வங்கதேசமே ரணகளமாகிப் போனது. வங்க தேச அரசியல் தலைவர்களையும், மாணவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆயிரக்கணக்கானோர் துன்புறுத்தப்பட்டனர். ஆனாலும் மொழிப்பற்று மிக்க மாணவர்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. 1954 மே 7-ம் தேதி வங்க மொழியை பாகிஸ்தான், அரசு மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்தது. 1956-ம் ஆண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வங்க மொழியை ஆட்சி மொழிகளுல் ஒன்றாக அங்கீகரித்து சட்டம் இயற்றியது. ஒரு கட்டத்தில் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் நடந்தது. 1971-ல் கிழக்கு பாகிஸ்தான் மேற்கில் இருந்து பிரிந்தது. தாய்மொழி மீது கொண்ட பற்றால் வங்கதேசம் என்ற புதிய நாடும் பிறந்தது. இன்று உலக தாய் மொழி தினம்! http://www.vikatan.com
 21. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், படையினரிடம் உள்ள காணிகளின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது:- வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை வழங்குமாறு, இளைஞர் அமைப்பொன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியாவை தலைமையாக கொண்டு பரந்த அளவில் செயற்படும் இளைஞர் வலையமைப்பு ஒன்று, வடபகுதியைச் சேர்ந்த 34 பிரதேச செயலகங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பப் படிவங்களை தபால் மூலம் நேற்று (திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ளது. குறித்த விண்ணப்பத்தில், பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணியின் அளவு, காணி உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி, தனியாட்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள அரசகாணியின் அளவு, ராணுவம் கையகப்படுத்தியுள்ள காணியை இழந்தவர்களின் எண்ணிக்கை, பெயர் விபரம், முகவரி மற்றும் கிராம சேவையாளர் பிரிவு என்பவற்றை காணி சுவீகரிப்பு தொடர்பாக அறியும் நோக்குடன் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தவிர, குறித்த பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனவர்களின் பெயர், முகவரி மற்றும் குறித்த குடும்பத்துடன் தொடர்புகொள்ளக்கூடிய தொடர்பு இலக்கம் என்பவற்றை கிராம சேவையாளர் பிரிவு அடிப்படையில் தருமாறும், குறித்த குடும்பத்தின் தற்போதைய குடும்ப பிரதானியின் முழுப்பெயரையும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கையையும் தருமாறும் இவ் இளைஞர் அமைப்பு கோரியுள்ளது. http://globaltamilnews.net/archives/18523
 22. தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை! உலக தாய்மொழி தினம் இன்று! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- மாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம் தோறும் உலக மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தில் தாய்மொழியை மறந்துபோனவர்கள் பலருண்டு. தம் தாய் மொழியை இழந்தவர்கள் பலருண்டு. அன்றைய ஈழத் தீவில் தமிழ் மக்கள் தீவு முழுவதும் பரவியிருந்தனர். பிற்காலத்தில் சிங்கள ஆதிக்கம் பெற்றபோது தென்பகுதியில் காலி, நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்த தமிழர்கள் எல்லாம் சிங்களத்தை பேசி, பின்னர் அந்த மொழியில் முழுமையாக தங்கி தம் தாய் மொழியை இழந்து பின்னர், தமது இன அடையாளத்தையே தொலைத்து இன்று சிங்களவர்களாக வாழ்கின்றனர். ஈழத் தீவுக்குள் நிகழ்ந்த இந்த அனுபவமே தாய் மொழி குறித்து ஓரினம் எப்படி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல மொழிகள் இன்று இல்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏழாயிரம் மொழிகள் இருந்த இடத்தில் இப்போது மூவாயிரம் மொழிகளே உள்ளதாக கூறுகின்றனர். பல ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் வரிவடிவம் பெறாமல் பேச்சு மொழியாகவே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல மொழிகள் அழிந்துவிடும் என்று மொழியியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். தாய் மொழியை போற்றிய நாடுகளே பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தாய் மொழியை புறக்கணித்து அந்நிய மொழிகளை பயன்படுத்திய நாடுகள் வீழ்ச்சியையே சந்தித்துள்ளன. உலகிற்கு நாகரிகத்தை கற்றுக்கொடுத்த, வளமான இலக்கிய பாரம்பரியத்தை கொண்ட ஆறு மொழிகளில் தமிழும் முக்கிய இடம்பெறுகிறது. சமஸ்கிருதம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், சீனம் ஆகிய மொழிகளுடன் தமிழ் மொழியும் மூத்த மொழிகளாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழ் ஹீப்ரு மொழியைக் காட்டிலும் முந்தியது. கிறிஸ்துவுக்கு முந்தைய வரலாற்றை கொண்டு. செழுமையான இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகள், நேர்த்தி மிக்க இலக்கண நூல்கள் என தமிழ் கொண்டுள்ள தனித்தும் சிறப்பு மிக்கது. ஈழத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது மொழியாற்றலால் உலக அளவில் கவனத்தை பெற்றிருந்தனர். இத் தீவின் தீர்மானிக்கும் சக்திகளாக ஈழத் தமிழர்கள் இருந்தனர். தமிழ் மக்களின் தாய் மொழி குறித்த அறிவும் ஆங்கிலப் புலமையும் பிரித்தானிய அரசில் இத் தீவின் முதல் பிரதிநிதிகளாக ஈழத் தமிழர்களை ஆக்கியது. பிந்தைய காலத்தில், சிங்கள அரசு உருவாக்கத்தின் பின்னர், ஈழத் தமிழ் மக்களின் தாய்மொழி திட்டமிட்ட ரீதியாக ஒடுக்கப்பட்டது. 1956இல் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழ் மொழிக்குரிய சம இடம் மறுக்கப்பட்டது. பின்னர் அரசால், அரச படைகளால் தமிழை ஒழித்துக் கட்டும் வேலைகள் மும்மரமாக இடம்பெற்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தமிழ் மொழி உரிமைக்கானது. தமிழ் மொழி அரசுக்கானது. அதனால்தான் தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார். ஒரு இனம் தனது தாய் மொழியை இழந்து வாழ முடியாது. தாய் மொழி இல்லையேல் அந்த இனம் அழிந்துவிடும். அது தனது பண்பாட்டை, வரலாற்றை இழந்துவிடும். தன் தாய் நாட்டை, தாய் நிலத்தை இழந்துவிடும். இதற்காகவே ஈழத் தமிழர்கள் இத்தனை ஆண்டு காலமாய் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தியாகங்களைப் புரிந்து போராடி வருகிறார்கள். இன்றும் இலங்கை அரசின் அலுவலகங்களில், அரசு வடக்கு கிழக்கில் நடும் பெயர்பலகைகளில் எங்கள் தாய் மொழி கொலை செய்யப்படுகிறது. பொலிஸ் நிலையங்களில் சிங்களத்தில்தான் முறைப்பாடு பதிவு செய்யப்படுகிறது. வடக்கு கிழக்கிற்கு வரும் பல சுற்று நிரூபங்கள் சிங்களத்தில்தான் உள்ளன. தென் பகுதியில் பிரதான அலுவலகங்களுக்குச் சென்று தமிழிலில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வடக்கு கிழக்கில் மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தமிழ் தெரியாத வைத்தியர்களிடம் எங்கள் மக்கள் நோளை சொல்கிறார்கள். இன்று கிளிநொச்சியில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களிடையே தாய் மொழி, மற்றும் தமிழ் மொழி குறித்தான பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தாய் மொழி தினத்தை ஈழத் தமிழர்கள் கொண்டாட வேண்டும். மொழி, இனம், பண்பாடு குறித்த புரிதலை இந்த நாளில் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகில் தாய் மொழி அழிக்கப்படும் அனைத்து இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். தாய் மொழியை திட்டமிட்டு அழிக்க ஒடுக்கப்படும் அத்தனை இனங்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம். இனம், மொழி, பண்பாடு, வரலாறு என ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த வாழ்வை அழிப்பது மிகவும் கொடியது. கடந்த நூறு ஆண்டுகளாக நாங்கள் இத் தீவில் அனுபவித்து வரும் கொடிய சரித்திரம் இதுவே. தாய் மொழியை பேண, தமிழ் மரபை பேண, தமிழ் இனத்தின் இருப்பை பேண எல்லோரும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. http://globaltamilnews.net/archives/18508
 23. கோலியை, இந்தியாவை எப்படி சமாளிக்கவிருக்கிறது ஆஸ்திரேலியா..? #IndVsAus #AustraliaSketch #VikatanExclusive இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் 23-ம் தேதி புனேவில் தொடங்குகிறது. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், நான்கு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த சில மாதங்களாக அந்த அணி ‛அவுட் ஆஃப் ஃபார்ம்’ல் உள்ளது. கடைசியாக, ஆசிய நாடுகளில் பங்கேற்ற ஒன்பது டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதுவே அணியில் கணிசமான மாற்றம் செய்யக் காரணம். இந்தியா, ஆஸ்திரேலியா தவிர்த்து, சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் குறித்து, பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்? மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்: “ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் படுதோல்வியைச் சந்தித்தாலும், பாகிஸ்தானுக்கு எதிராக கடும் ஆதிக்கம் செலுத்தியது. எனவே, ஆஸ்திரேலியாவை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எதிரணியின் திறமையை எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆஸ்திரேலிய அணி வலுவானதாக இருந்தாலும், இந்திய சூழ்நிலையில் அவர்கள் விளையாடுவது சிரமம்தான். இந்தக் கருத்தை ஆஸ்திரேலிய வீரர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்திய அணிக்குக் கிடைத்துள்ள சிறந்த பாராட்டாகவே இதைக் கருதுகிறேன். எதிரணியின் திறமைக்கு ஏற்ப, இந்திய அணி தயாராகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலிய அணியைக் கையாள்வது எப்போதுமே கடினம். இருந்தாலும், இந்திய அணியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.'’ ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக் கேப்டன் - ரிக்கி பாண்டிங் ''ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் திணறும். ஏனென்றால், முன்பைவிட தங்களுக்குச் சாதகமாகவே ‘பிட்ச்‘களை இந்தியா அமைக்கும். இலங்கைத் தொடரில் நடந்ததைப் பார்க்கும்போது, ஒவ்வொருமுறையும் துணைக்கண்டங்களுக்குச் செல்லும் போதெல்லாம், முதல் நாளில் இருந்தே பந்துகள் கடுமையாக ‘ஸ்பின்’ ஆகி திரும்புவதைப் பார்க்க முடிகிறது. எனவே இலங்கைத் தொடர் போல அல்லாமல், இந்தியாவில் கொஞ்சம் கூடுதலாகப் போராடிவிட்டு தோற்றால், அதைவிடப் பெரிய முன்னேற்றம் ஒன்றுமில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு இது கற்றுக்கொள்ளும் கட்டம். ஆஸ்திரேலிய பாணியில் ஆடுவதிலிருந்து இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப, வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். ''ஒருநாள் ஆட்டங்களில், 27 சதங்கள் அடித்திருக்கும் கோலி, மூன்று ஃபார்மட்டுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். என்றாலும், அவரது பேட்டிங்கின் தரம் மேலும்மேலும் கூடிக் கொண்டே இருக்கிறது. மங்கவில்லை. இருப்பினும் சச்சின், லாரா, காலிஸ் ஆகியோருடன் ஒப்பிடும் அளவுக்கு விராட் வளரவில்லை. அந்த ஜாம்பவான்கள் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் நிலைத்து நின்று ஆடியவர்கள். கோலி இன்னும் பாதி கிணறு கூட தாண்டவில்லை. கோலி அவர்களுக்கு இணையான புகழைப் பெற, இன்னும் சில காலம் ஆகும். கோலியைப் பொறுத்தவரை, சவால் என்று வந்து விட்டால், தன்னுடைய ‘கம்ஃபர்ட் ஸோனை’ விட்டு வெளியே வந்துவிடுவார். ஆக்ரோஷமடைவது அவருக்கு நல்லதாக இருக்கலாம். சில வேளைகளில் எதிரணியினருக்கு அது ப்ளஸ்ஸாக அமைந்து விடும். அவர் என்னைப்போன்ற குணாதிசியம் கொண்டவர். மனதில் நினைப்பதை வெளியில் தெரிவித்து விடும் ஒரு கேரக்டர். நான் இந்தியாவில் விளையாடும்போது ஒன்றைக் கற்றுக் கொண்டேன். அது, இந்திய அணி களத்தில் உருவாக்கிக் கொள்ளும் டீம் ஸ்பிரிட்தான். இந்த உத்வேகத்தைத் தடுத்து நிறுத்தும் அணியினால் மட்டுமே இந்தியாவில் வெற்றிபெற முடியும். ஆஸ்திரேலியாவும் அதற்கு விதிவிலக்கு அல்ல. கோலியைக் கட்டுப்படுத்த எதிரணியினர் செய்ய வேண்டியது ஒன்றுதான். அவர் `டிரைவ்’ அடிக்கும் இடங்களில், ஃபீல்டர்களை நிறுத்தி, வேறு இடங்களில் அவரை ரன் எடுக்கப் பணிக்க வேண்டும். ரன் எடுக்க நீண்ட நேரம் ஆடும்போது, நிச்சயம் தவறான ஷாட் ஆடி, விக்கெட்டை இழப்பார்.’’ ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் - ஸ்டீவ் ஸ்மித் 'இந்தியா சிறந்த அணி என்பதால், கண்டிப்பாக இந்தத் தொடர் எங்களுக்குச் சவாலாக இருக்கும். இது நிச்சயம் எங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப விரைவில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். விராட் கோலி அருமையான வீரர். இந்திய அணியை அவர் சிறப்பாக வழி நடத்துகிறார். களத்திலும் அவர் ஆக்ரோஷமாகச் செயல்படுகிறார். இதனால் அவரைக் கொஞ்சம் கோபப்படுத்திப் பார்க்க வேண்டும். அவரது விக்கெட்டைக் கைப்பற்ற, நாங்கள் அவரைப்போலவே செயல்பட வேண்டும். அவரை அவுட்டாக்கினாலே இந்திய அணி தடுமாற வாய்ப்புள்ளது. எங்கள் மூத்த வீரர்கள் இலங்கையில் சரிவர செயல்படவில்லை. அதனால் முடிவுகள் சாதகமாக அமையவில்லை. இந்தமுறை துவக்கத்தில் இருந்தே டேவிட் வார்னர் வித்தியாசமாக ஆட வேண்டும். பொதுவாக, அடித்து ஆடுபவர்களை நான் கட்டுப்படுத்துவதில்லை. வார்னர் அத்தகைய வீரர்தான். அவர் சதம் அடிப்பதோடு நிற்காமல் 200, 300 என முன்னேறவேண்டும். அதாவது இங்கிலாந்துக்கு எதிராக, கருண் நாயர் அடித்தது போல... இத்தகைய பெரிய ஸ்கோர்கள்தான் அணியை தலைநிமிரச் செய்யும். எனவே நாங்கள் மிகுந்த ஆவலுடன் இந்தத் தொடரில் பெரிய ஸ்கோர்களை நோக்கிச் செல்லப் போகிறோம்; நிச்சயமாகப் பின்வாங்கப்போவதில்லை. வெற்றிதான் முதல் இலக்கு. இருப்பினும் தோல்வியை விட ‘டிரா’ நல்ல முடிவுதான். தோல்வியைத் தவிர்க்க முடியாத சமயத்தில் மட்டுமே ‘டிரா’ செய்ய முயற்சிக்க வேண்டும். இந்த முயற்சியை கடந்த தொடர்களில் செய்யத்தவறி விட்டோம். இந்தமுறை அதைச் சரிசெய்வோம்.’’ ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் - கிளன் மேக்ஸ்வேல் “இந்தத் தொடர் சவாலாக இருக்கும். ஆஸ்திரேலிய வீரர்கள், எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை, கோலியிடம் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். அஷ்வின், ஜடேஜா போன்ற உலகத்தரமான இந்திய ஸ்பின்னர்கள், எங்கள் பேட்ஸ்மென்களுக்குச் சவால் அளிப்பார்கள். தர்மசலாவில் டி-20 ஸ்பின் பெளலிங் எடுபடும். பொதுவாக, சிறிய பவுண்டரிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். அதன்படி பார்த்தால் பெங்களூரு நல்ல பிட்ச். எங்களுக்கு அதுபோன்ற பிட்ச்கள் தொடர்ந்து கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.'' மிஸ்டர் கிரிக்கெட் - மைக் ஹஸ்ஸி 'இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விராட் கோலியிடம் வம்பு செய்யாமல் இருப்பதே நல்லது. அப்படி செய்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதுடன், நிச்சயம் அவரை இன்னும் வீறு கொண்டு ஆடவைக்கும். எனவே வார்த்தைத் தாக்குதலில் கவனம் செலுத்தி, ஆட்டத்தில் கோட்டை விடுவது நல்லதல்ல. கோலி இப்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார். இந்திய சூழ்நிலைகளில் அவர் அதிகம் புரிதலுடையவராக இருக்கிறார். எனவே அவரை விரைவாக வீழ்த்த வேண்டும் என்பதில் ஆஸ்திரேலியா குறியாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர் களத்தில் செட்டில் ஆகிவிட்டார் என்றால், சுலபமாக அதிக ரன்களைக் குவித்துவிடுவார். எங்களிடம் தெளிவான திட்டங்கள் உள்ளன. அதைக் கடைபிடிக்கவே முயற்சி செய்வோம். முக்கியமாக, நாம் நம் திறமைகளுக்கு மதிப்பளித்து அதனைக் களத்தில் ஈடுபடுத்துவதே சிறந்தது. போட்டி முடிவில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணிதான் களத்தில் தங்களது திறமைகளை பெரிய அளவில் வெளிப்படுத்திய அணியாகும்' என ஆஸ்திரேலிய வீரர்களை எச்சரித்திருக்கிறார் முன்னாள் ஆஸி மற்றும் சிஎஸ்கே அணி வீரர்! ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் - டேரன் லெமென் “விராட் கோலி எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார். கடந்த சில நாட்களாக அவரது ஆட்டத்தை வீடியோவில் போட்டுப் பார்த்தோம். அவரை எப்படி விரைவில் அவுட்டாக்குவது என யோசித்தோம். இன்னும் அதற்கான வழியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தியாவில் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடியதாகவே கருதுகிறேன். அப்படி இருந்தும் அந்த தொடரில் இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. எனவே இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்தத் தொடரில் வெற்றிபெற வேண்டுமானால் அதிக ரன்களைக் குவிக்க ஒவ்வொரு ஆஸ்திரேலிய வீரரும் முயல வேண்டும். பிட்ச்சின் தன்மையைப் பொறுத்தே அணித் தேர்வு அமையும். நான்கில், மூன்று மைதானங்களில் இப்போதுதான் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன. இங்கே நீண்ட நேரம் பேட் செய்வது முக்கியம். `இந்தியாவில் நீண்ட நேரம் இங்கிலாந்து அணியால் பேட் செய்ய முடியவில்லை’ என, அலஸ்டர் குக் சொன்னது கவனிக்கத்தக்கது. இங்கிலாந்து அணி ஓரளவுக்குத் தேவையான ரன்களையே எடுத்தது. ஆனால், அதிக ஓவர்களை ஆடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கும் இதுதான் சவால். 150க்கும் அதிகமான ஓவர்களை ஆடும்போதுதான், ஸ்கோரை அதிகப்படுத்த முடியும். இளம் வீரர்கள் இதைப் புரிந்து செயல்பட வேண்டும்.“ இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் - கெவின் பீட்டர்சன் “சுழற்பந்து வீச்சில் சிறப்பாக விளையாட, விரைவாக கற்றுக்கொள்ளுங்கள். சுழற்பந்தை உங்களால் எதிர்கொள்ள முடியாவிட்டால், தயவுசெய்து இந்தியா செல்ல வேண்டாம். எப்படி இருந்தாலும், நீங்கள் இந்தியா சென்ற பிறகு, அங்கு வலைப் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்; இது வழக்கமான நடைமுறைதான். ஆனால் அதனை நீங்கள் ஆஸ்திரேலியாவிலேயே செய்ய முடியும். என்னிடம் கேட்டிருந்தால், சுழற்பந்து வீச்சில் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து என்னால் ஆஸ்திரேலியாவிலேயே பயிற்சி அளித்திருக்க முடியும். சுழற்பந்து வீச்சில் முறையாக விளையாடுவதற்கு, சுழலுக்குச் சாதகமான ஆடுகளம்தான் தேவை என்றில்லை. மேலும் அதில்தான் பயிற்சி பெற வேண்டும் என்பதும் அவசியம் இல்லை. நீங்கள் எந்த வகையிலான ஆடுகளத்திலும் அசத்தலாம். அது நாம் கால் நகர்வுகளை எப்படி மேற்கொள்கிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. காலை முன்னால் கொண்டு சென்று, ஒருபோதும் பேட் செய்யக் கூடாது. பந்துக்காக காத்திருந்து பேட் செய்வதே சிறந்தது. எந்த இடத்தில் பந்து பிட்ச் ஆகிறது என்பதைச் சரியாகக் கணித்து விளையாட வேண்டும். 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துகளில் சிறப்பாகச் செயல்படும் உங்களால், வெறும் 80 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்துகளுக்கு எதிராக சிறந்த திறனை வெளிப்படுத்துவது ஏன் கடினமாக இருக்கிறது?’’ ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பவுலர் - மிட்செல் ஜான்ஸன் “பந்துகள் திரும்புவதற்கு ஏற்ப இந்திய பிட்ச்கள் அமைக்கப்பட்டிருக்கும். பலம்வாய்ந்த தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகள் இந்தியாவில் தொடரை இழந்துள்ளன. எனவே ஆஸ்திரேலிய அணி 2 அல்லது 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இந்தமுறை வித்தியாசமான ஆஸ்திரேலியாவை எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி. எங்களிடமிருந்து சிறப்பான போட்டியை, உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியான இந்திய அணி எதிர்பார்க்கலாம். இந்தியாவில் நாம் எதிர்கொள்வது அங்குள்ள பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளைத்தான்; இதனால் அங்கே தரமான ஸ்பின்னர்களைக் களமிறக்குவதுதான் சிறந்தது. நம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் மைதானம் சாதகமாக இருக்கும்.’’ ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் - இயான் சாப்பல் ''இந்தியாவில் ஆஸ்திரேலிய அணிக்கு ஏதாவது வாய்ப்புகள் உண்டானால், அது டேவிட் வார்னர் பேட்டிங்கினால் மட்டுமே சாத்தியமாகும். ஏனென்றால் இலங்கை மற்றும் இந்தியாவில், வார்னர் 26 ரன்களுக்கும் கீழ் சராசரி வைத்திருந்தாலும், அவர் அதிரடி ஆட்டம் ஆடும்போது, அவரையொட்டி மற்ற வீரர்களும் சிறப்பாக ஆட முடியும். இது இந்திய ஸ்பின்னர்களை யோசிக்க வைப்பதுடன், அவர்கள் தவறு செய்யவும் சாத்தியம் இருக்கிறது. அப்போது நிச்சயம் இந்திய ஸ்பின்னர்களை ஆக்ரோஷமாக அடித்து ஆடுவதையே வார்னர் விரும்புவார். இதுபோன்ற தாக்குதல் ஆட்டத்தை, இந்திய பவுலர்கள் தங்களது சொந்த மண்ணில் அதிகம் சந்தித்ததில்லை'' என்றார். ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ''இந்தியப் பயணத்திற்காக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எனக்கு ஓய்வு அளித்ததற்கு நன்றி. இந்தியாவில் கிரிக்கெட் ஆடுவதைப் பற்றித் திட்டமிடுவதற்கு முன்பாக, வீரர்கள் தங்களை உடல் மற்றும் மன ரீதியாக நன்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் வெயில் அதிகம். உஷ்ணத்தையும் சமாளிக்க வேண்டும். நமக்கு இந்த சூழல் சகஜமாகும்வரை போராட வேண்டும்” ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் பவுலர் - ஜெஃப் லாசன் '''இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த, ஆஸ்திரேலியாவுக்கு என்ன தேவை என்பதில் தேர்வுக்குழுவினர் சொதப்பி உள்ளனர். மாறாக, தொடரை வெல்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை இந்தியா சரியாகச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சில்தான், முழுக்கவனத்தையும் செலுத்த வேண்டும். ஹாசில்வுட், மிட்செல் ஸ்டார்க் என்று நம்மிடம் உலகத்தரமான பவுலர்கள் உள்ளனர். இவர்களால் எங்கு வேண்டுமானாலும் சிறப்பாகப் பந்துவீச முடியும். தங்களுக்கு சாதகமாக ஸ்பின் ஆகும் பிட்ச்களை அமைப்பது அவர்கள் உரிமை. அங்கு அஷ்வின், ஜடேஜா போன்றோரை அடித்து ஆடவே முடியாது. இந்தியாவை அதன் சொந்த மன்ணில் வீழ்த்த, ஆஸ்திரேலியாவின் வழிமுறைதான் சரிப்பட்டு வருமே தவிர இந்திய முறைகள் சரிப்படாது. அதிகளவில் சுழற்பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்யக் கூடாது. 2004-ல் கிளென் மெக்ராத், ஜேசன் கில்லெஸ்பி, மைக்கேல் காஸ்பரோவிச் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களால்தான், இந்தியாவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றது. சுழல் ஜாம்பவன் ஷேன் வார்னே கூட அப்போது திணறினார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’' ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் - உஸ்மான் கவாஜா ''2013-ம் ஆண்டில் நடைபெற்ற இந்திய டெஸ்ட் தொடர், எங்களுக்கு மிகவும் கடினமானதாக அமைந்தது. நாங்கள் அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்திருந்தோம் என்பதுடன், நாங்கள் நினைத்தபடி எதுவும் எங்கள் வழியில் நடைபெறவில்லை. தற்போது நாங்கள் முற்றிலுமாக மாறுபட்ட அணியாக உள்ளோம். அஷ்வின், ஜடேஜா பந்துவீச்சு வீடியோவை எல்லோருமே பார்த்து வருகிறோம். இதில் ஒருசில வீரர்கள், அதிகமுறை அந்த வீடியோக்களைப் பார்க்கின்றனர். கிரிக்கெட் என்பது நவீன விளையாட்டாக மாறிவிட்டதால், இப்போது அனைவருக்கும் அனைத்தும் தெரிகிறது. இது ஆட்டத்தின் ஒரு அங்கமே.'’ http://www.vikatan.com/news/sports/81515-how-australia-going-to-manage-kohli-and-india---australia-series.html
 24. முகம் மட்டுமல்ல... குரலும் எங்களுடையதுதான்... நடிகைகள் பாடிய பாடல்கள்! தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிகைகள் முத்திரை பதித்து வருகின்றனர். சிறந்த நடிப்பு, நடனம், வசனம், இயக்கம் எனப் பல பிரிவுகளில் நடிகைகள், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடுகின்றனர். பாடல்கள் பாடுவதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் நடிகைகள். பழம்பெரும் நடிகை பானுமதி தொடங்கி இன்றைக்கு ஆண்ட்ரியா வரை நடிப்பதோடு, பாடல்களைப் பாடுவதிலும் ஜொலிக்கின்றனர். அவற்றில் சிலரின் பாடல்கள் இதோ! பானுமதி: 'அன்னை' திரைப்படம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கினர். இந்தப் படத்தில் நடிகை பானுமதி பாடிய 'பூவாகி காயாகி கனிந்த மரம்' என்ற பாடல் ரசிகர்களைக் கவர்ந்த பாடல்: ஜெயலலிதா: கே.சங்கர் இயக்கி, 1969 ஆம் ஆண்டு வெளியான படம் அடிமைப் பெண். இதில் ஜெயலலிதா பாடிய 'அம்மா என்றால் அன்பு' எனும் பாடல் இன்றுவரை ரசிகர்களால் விரும்பி கேட்கப்படும் பாடல். மனோரமா: பழம்பெரும் நடிகையான மனோரமா பல பாடல்களைப் பாடியுள்ளார். பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மே மாதம் திரைப்படத்தில் இவர் பாடிய 'மெட்ராஸைச் சுத்திப் பார்க்கப் போறேன்' பாடலைச் சிறப்பாக பாடியிருப்பார். ஷாலினி: சின்ன வயதிலேயே திரைத் துறையில் நுழைந்தவர் ஷாலினி. பேபி ஷாலினியாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். பின்னர், ஷாலினி கதாநாயகியாக நடித்த அமர்க்களம் பெரும் வெற்றிப் பெற்றது. அதில் 'சொந்தக் குரலில் பாட' எனும் பாடலைப் பாடினார். இதுவே அந்தப் படத்தில் இவரின் அறிமுகக் காட்சிப் பாடலாக அமைந்திருந்தது. ஆன்ட்ரியா: நடிப்பிலும் பாடல் பாடுவதில் அசத்தி வருபவர் ஆன்ட்ரியா. தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாமல் மற்ற படங்களிலும் பாடிவருகிறார். 'கோவா' படத்தில் 'இதுவரை இல்லாத' எனும் பாடல் பலரின் ஃபேவரைட். இவர் கதாநாயகியாக நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பாடிய இந்தப் பாடலும் ஹிட். ஸ்ருதி ஹாசன்: இசையில் தனி கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பாடியுள்ளார். தேவர் மகனில் 'போற்றி பாடடி பெண்ணே' பாடல் பாடியபோது இவருக்கு வயது 6. விஜயுடன் சேர்ந்து நடித்த 'புலி' பாடத்தில் அவரோடு இணைந்து பாடிய இந்தப் பாடல் செம ஹிட்.
 25. பிம்ப அரசியலிலிருந்து விடுபடவேண்டிய தருணம் தாமதமாக வந்திருந்தாலும் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இதனை உணர்ந்து, இத்தீர்ப்பை முன்வைத்து உடனடியாக ஓர் அரசியல் விழிப்புணர்வுச் செயல்திட்டத்தை வளர்த்தெடுக்க வேண்டும். இப்போதைக்கு பொதுமக்கள் இத்தீர்ப்பை மிகவும் எளிமைப்படுத்தி புரிந்துவைத்திருக்கின்றனர். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கத் துணிந்த சசிகலாவின் அகந்தையை அடக்கி அவரையும் அவருடைய உறவினர்களையும் (சுதாகரன், இளவரசி) சாட்டையைச் சுழற்றி சிறைக்கு விரட்டிய 'நாயகன்' என்றே இத்தீர்ப்பை அவர்கள் பார்க்கின்றனர். அதுவே அவர்களுக்கு உடனடிப் பரவசத்தையும் மனநிம்மதியையும் அளிக்கிறது. அதனாலேயே ஊடகங்களும் இந்த உணர்வுகளுக்கு மட்டும் பிரத்யேக முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன. அடுத்தடுத்து நிகழும் அரசியல் பரபரப்புகளும்கூட இதற்கொரு காரணம். இந்த ஆரவாரத்தில், நாம் பெரிதும் விவாதிக்க மறக்கும் அல்லது விவாதிக்க மறுக்கும் ஒரு முக்கியமான அம்சம் இது: இந்த வழக்கின் முதன்மையான குற்றவாளி ஜெயலலிதாவே என்று அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இதன் பொருள் ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் தன் முதல்வர் பதவியை இழந்திருப்பார், சிறையும் சென்றிருப்பார் என்பதே! வரலாறு விடுவிக்காது மரணம், இந்த இரண்டிலிருந்தும் அவரை விடுவித்துவிட்டது. ஆனால், வரலாறு அத்தனை சுலபத்தில் அவரை விடுவிக்கப்போவதில்லை. விடுவிக்க நாம் அனுமதிக்கவும் கூடாது. காரணம், இது ஜெயலலிதா எனும் ஒரு தலைவர் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல; இனிவரும் காலங்களில் ஒவ்வொரு ஊழல்வாதிக்கும் இது எச்சரிக்கையாக அமைய வேண்டும். அந்த வகையில், உடனடியாக நாம் செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. இத்தீர்ப்பின் ஒளியில் ஜெயலலிதா என்னும் புனித பிம்பத்தை வெளிப்படையாக நொறுக்க வேண்டும் என்பதே அது. ஏனென்றால், தீர்ப்பு வெளிவந்த பிறகும், ஜெயலலிதாவை வணங்கப்பட வேண்டிய ஒரு திருவுருவாகத்தான் அதிமுக உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டாகப் பிளவுபட்ட இரு துண்டுகளும் 'அம்மாவின் புக'ழுக்கு உரிமை கோருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 'சிறு தெய்வ' வழிபாடு ஓபிஎஸ் தரப்பு சாதுரியமாக, சசிகலாவை மட்டும் வில்லியாக மாற்றி ஜெயலலிதாவை ஒரு சிறு தெய்வமாக உயர்த்திக்கொண்டிருக்கிறது. 'அம்மா வழியில் ஊழலற்ற ஆட்சி' என்னும் நகைமுரண் முழக்கத்தை மேலதிகப் பலத்துடன் அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். சசிகலா குடும்பத்தின் நிழலில் உயிர்த்திருக்கும் இரண்டாவது துண்டு, ஒருபடி மேலே சென்று, அம்மாவோடு சேர்த்து சின்னம்மாவையும் ஒரு சிறு தெய்வமாக மாற்ற முடியுமா என்று முயன்றுவருகிறது. 'அம்மா'வை ஏற்றவர்களால் 'சின்னம்மா'வை ஏற்க முடியாமல்போனதால், இந்த முயற்சி எடுபடாமல் போய்விட்டது. மொத்தத்தில் பிரச்னை, 'சின்னம்மா'தானே தவிர, 'அம்மா' இல்லை. சிறைக்குச் சென்றவர் அவர்தானே? திமுக, அதிமுக இரண்டும் அண்ணாவை முன்னிறுத்தியதைப் போல், பிளவுபட்ட இரு குழுக்களும் 'அம்மா'வை முன்னிறுத்தி பலப்பரீட்சையில் இறங்கியிருக்கின்றன. ஓபிஎஸ், சசிகலா இருவருமே மெரினா வில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத் துக்குச் சென்று வணங்கி, தங்களுடைய விசுவாசத்தைப் பறைசாற்றிக்கொண்டிருக் கின்றனர். ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசாகத் தங்கள் தரப்பைக் காண்பித்துக்கொள்வதன் மூலமே இந்தப் போட்டியில் வெற்றிபெற முடியும் என்பதே அவர்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது. 'ஜெயலலிதாவின் ஆன்மா' குறித்து இருவருமே பேசுகிறார்கள். கலக அரசியலும் மறு வருகையும் ஜெயலலிதாவின் சமாதிக்கு அருகில் தியானம் செய்ததன் மூலம் தன் கலக அரசியலை ஒருவர் தொடங்கினார் என்றால், சிறைக்குச் செல்வதற்கு முன் அதே சமாதியின் மீது சத்தியம் செய்து, தன்னுடைய அரசியல் மறுவருகை தொடர்பில் சபதம் போட்டிருக்கிறார் இன்னொருவர். அந்த வகையில், அதிமுக முகாமுக்குள் இப்போது நடைபெறுவது ஜெயலலிதாவின் பிம்பத்துக்கு உரிமை கோருவதற்கான வெளிப்படையான அதிகாரப் போட்டியே தவிர வேறில்லை. ஜெயலலிதாவை முதன்மையான குற்ற வாளியாக இவர்கள் இருவராலும் ஏற்க முடியாது. அவ்வாறு செய்வது அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதோடு, அவர்களுடைய இரு தரப்பையும் எதிர் காலத்தையும்கூட கேள்விக்கு உட்படுத்தும். அவர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா தேவைப்படுகிறது. எனவே, அவர்கள் இந்தத் தீர்ப்பை ஆன்மாவின்வழி கடந்துசெல் கிறார்கள். இந்தச் சந்தர்ப்பவாத நிலைப் பாட்டைக் கொண்டு அவர்கள் தங்களுடைய அரசியல் பிரவேசத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகக் கடமை ஆனால், தீர்ப்பின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்ளும் எவரொருவராலும் இந்த இரு அரசியல் பிரவேசங்களையும் சகித்துக் கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் பிம்பம் என்பது முறைகேடுகளைக் கொண்டு வளர்த் தெடுக்கப்பட்ட ஒன்று என்பதை இத்தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. ஊழல், மிரட்டல், அதிகார முறைகேடு, ஜனநாயகமற்ற தன்மை ஆகியவற்றைக் கொண்டு வளர்க்கப்பட்ட பிம்பம் அது என்பதற்கான அதிகாரபூர்வமான சாட்சியம்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒரு குற்றவாளி முதல்வராவதிலிருந்து இந்தத் தீர்ப்பு நம்மைக் காப்பாற்றியிருக்கிறது. அதேசமயம், ஒரு குற்றவாளியைத்தான் நாம் பல்லாண்டுகள் ஆட்சியாளராக வைத்திருந்தோம் என்பதையும் இதே தீர்ப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. ஒரே சமயத்தில் மகிழ்ச்சியையும் குற்றவுணர்வையும் இது நமக்கு ஏற்படுத்துகிறது. இந்தக் குற்றவுணர்விலிருந்து விடுபட வேண்டும் என்றால், முதலில் ஜெயலலிதா என்னும் பிம்பத்திலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். அவருடைய பெயரை முன்னிறுத்தி புதிய அரசியல் வாய்ப்புகள் உருவாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இன்னும் ஒரு படி மேலே சென்று, ஒட்டுமாத்த பிம்ப வழிபாட்டு உணர்விலிருந்தும் விடுபடும் முயற்சிகளைத் தொடங்க வேண்டும். ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் கடமை இது. பிம்ப வழிபாடு என்பது வலிமை மிகுந்த போதை. அந்த மயக்கத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றால், இந்தத் தீர்ப்பை ஒரு கருவியாக, அறிவார்ந்த சமூகம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். அணுக முடியாத கடின ஆங்கிலத்தில் இருக்கும் தீர்ப்பைத் தமிழில் கொண்டுசென்று அனைவருக்கும் பரப்புரை செய்ய வேண்டும். அதற்கு இதுவே தோதான தருணம் என்பதை தீபா என்னும் புதிய அரசியல் பிரவேசம் உணர்த்துகிறது! http://tamil.thehindu.com/opinion/columns/பிம்ப-அரசியலிலிருந்து-விடுபடவேண்டிய-தருணம்/article9553248.ece?homepage=true&theme=true