நவீனன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  56,739
 • Joined

 • Last visited

 • Days Won

  369

நவீனன் last won the day on September 21

நவீனன் had the most liked content!

Community Reputation

7,249 நட்சத்திரம்

About நவீனன்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  Germany
 • Interests
  cricket,internet,

Recent Profile Visitors

26,461 profile views
 1. இடைக்கால அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அரசியல் தலைவர்களது உரை 'பாரபட்சம் காட்டக்கூடாது' என்ற விடயம் நிராகரிப்பு எந்தவொரு இனத்தவர் மீதும் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற யோசனையை சில கட்சிகள் நிராகரித்திருப்பது வருத்தமளிப்பதாக லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள், பாரபட்சம் காட்டக்கூடாது என்ற விடயத்தை நிராகரித்துள்ளன. இது கவலைக்குரியது என்றார். அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அரசியலமைப்பு சபையில் முன்வைக்கப்பட்டது. இதன்பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக் கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், முதற்தடவையாக பிரதமர் ஒருவர் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகளுக்கு தலைமைத்துவம் வகிக்கின்றார். சகல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இதில் பங்களிப்புச் செலுத்துகின்றனர். அது மாத்திரமன்றி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் நாம் போதியளவு அவகாசத்தை வழங்கியுள்ளோம். பல தரப்பட்டவர்களின் கருத்துக்களைக் கொண்டதாக இது அமைந்துள்ளது. மாறுபட்ட கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் பாரிய அர்ப்பணிப்பொன்று தேவைப்படுகிறது என்றார். அதேநேரம், தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக சமர்ப்பித்திருந்த யோசனைகள் இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் அரசியலமைப்பு சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20088 இனவாத கோணத்தில் அரசியலமைப்பை தயாரிக்க கூடாது இனவாத கோணத்தில் அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜே.வி.பி, சகல இன மக்களுக்கும் சமமான அங்கீகாரம் வழங்கும் வகையிலான அரசியலமைப்பின் ஊடாகவே ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற பிரதான நோக்கத்தின் ஊடாகவே நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும். பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றுவதாயின் அது அரசியலமைப்பின் ஊடாக மாத்திரமே முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவது மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவது என்ற இரண்டு விடயங்களும் ஒரே பாதையில் கொண்டுசெல்லக் கூடிய விடயங்கள் அல்ல. நிறைவேற்று ஜனாதிபதி முறையை பலப்படுத்துவது என்பது ஜனநாயகத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடாகும் என அவர் விமர்சித்தார். நேற்றையதினம் கூடிய அரசியலமைப்பு சபையில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அநுரகுமார திசாநாயக்க இந்த விமர்சனங்களை முன்வைத்தார். அரசியலமைப்பு தயாரி்க்கும் செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே கலந்துகொண்டுள்ளோம். இவ்வாறான நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கும் விடயம் கோட்பாடாக கொள்ளப்பட வேண்டும். அதனைவிடுத்து கலந்துரையாடல்கள் மூலம் சரிசெய்யலாம் என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றார். மாகாணசபைத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் அது அரசியலமைப்பின் ஊடாகவே கொண்டுவரப்பட வேண்டும். அரசியலமைப்புக்கு வெளியே கொண்டுவரப்படும் எந்தவொரு பாராளுமன்ற திருத்த யோசனைகளுக்கும் ஜே.வி.பி ஆதரவு வழங்கப்போவதில்லையெனக் கூறினார். இலங்கை பல் இன சமூகத்தைக் கொண்ட நாடாகும். எனவே சகல இன, மத மக்களும் சமமான முறையில் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதனைவிடுத்து ஒரு சமூகத்துக்கு உயர்ந்த அங்கீகராமும், ஏனைய சமூகங்களுக்கு அல்லது இனங்களுக்கு இரண்டாம் பட்ச அங்கீகாரமும் வழங்கப்படக்கூடாது. சகல மக்களின் இன, மொழி, கலாசார உரிமைகள் மதிக்கப்படும் வகையிலான அரசியலமைப்பொன்றைக் கொண்டுவருவதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் ஜே.வி.பியின் தலைவர் மேலும் கூறினார். இறைமை, தேசிய பாதுகாப்பு மற்றும் மக்களின் உரிமைகள் என்பன அரசியலமைப்பின் முக்கிய காரணங்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகள் இனவாத கோணத்தில் நோக்கப்படக்கூடாது. இனவாத கண்ணோட்டத்தினூடாக அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளில் எவரும் பங்கெடுக்கக் கூடாது என்பதுடன், அவ்வாறான எவரும் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார். http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20086 தமிழரின் சுயமரியாதையை உறுதிப்படுத்தும் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் தற்பொழுது ஈடுபட்டுள்ள அவசரமான மற்றும் அவசியமான செயற்பாடு குறித்து சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் சார்பில் நாட்டின் உயர்ந்த சட்டமான அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்தினுள் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இது அமையவேண்டும். இந்த அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளின் வெற்றியானது, சகலராலும் நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நிலையான தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதிலேயே தங்கியுள்ளது. ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் சுதந்திரமாக ஒப்புதலுடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். எமது நாடு பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடாகும். பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஜனநாயகம் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இரண்டு பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமைத்திருக்கும் அதேநேரம், ஏனைய கட்சிகள் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. இரு கட்சி கருத்தொருமைப்பாட்டுடன் எந்தவொரு அரசியலமைப்பும் தயாரிக்கப்பட முடியாது. குறிப்பாக தமிழ் மக்களின் கருத்துக்களும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளக்கூடிய அபிப்பிராயங்கள் அரசியலமைப்புக்கான அடிப்படையை வழங்க வேண்டும். அரசியல் சூழல் நிறைந்த எல்லைக்கு அப்பாலிருந்து அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம், இலங்கை தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய குணாம்சங்களைக் கொண்டதாக அரசியலமைப்பு அமையவேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் இதனை அடைய முடியாமல் போயுள்ளது. 1987-88 காலப் பகுதியில் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வதற்காக முதன் முதலில் 13ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனினும், அதனுடன் தொடர்புபட்ட சில அரசியலமைப்பின் சரத்துக்களால் அது வலுவிழந்தது. அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண பல மேம்படுத்தப்பட்ட யோசனைகளை முன்வைத்திருந்தன. ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழு பரிந்துரைகள், சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் 2000 அரசியலமைப்பு முன்மொழிவுகள் அமைச்சரவை அனுமதியுடன் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது, மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் பல்லின நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதுடன், திஸ்ஸ வித்தாரன தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பன அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பல விடயங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அரசியலமைப்பில் இணைக்கப்படவில்லை. எனினும் அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது முற்று முழுதாக மாறுபட்ட சூழலில் முன்னெடுக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது. தமது அடையாளம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில், நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஏற்பாடொன்றே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இலக்காக உள்ளது. உலகில் இதற்காக பல ஏற்பாடுகள் இருக்கின்றன. தீர்மானம் இல்லாத விளைவுகளால் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன. சிறந்த கல்வியறிவைப் பெற்றுள்ள தமிழ், சிங்களவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். சர்வதேச ரீதியில் நாடு தொடர்பில் காணப்பட்ட நன்மதிப்பு சிதைந்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ள நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை ஏற்படுத்த, புதிய உயர் சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20089 தொடரும்
 2. தமிழரின் சுயமரியாதையை உறுதிப்படுத்தும் யாப்பு உருவாக்கப்பட வேண்டும் தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் தற்பொழுது ஈடுபட்டுள்ள அவசரமான மற்றும் அவசியமான செயற்பாடு குறித்து சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன். நாம் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் சார்பில் நாட்டின் உயர்ந்த சட்டமான அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்தினுள் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இது அமையவேண்டும். இந்த அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளின் வெற்றியானது, சகலராலும் நியாயமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், நிலையான தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதிலேயே தங்கியுள்ளது. ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் சுதந்திரமாக ஒப்புதலுடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். எமது நாடு பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் வாழும் நாடாகும். பல்வேறு கட்சிகளைக் கொண்ட ஜனநாயகம் காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இரண்டு பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமைத்திருக்கும் அதேநேரம், ஏனைய கட்சிகள் தமது செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. இரு கட்சி கருத்தொருமைப்பாட்டுடன் எந்தவொரு அரசியலமைப்பும் தயாரிக்கப்பட முடியாது. குறிப்பாக தமிழ் மக்களின் கருத்துக்களும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமாகும். அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுக் கொள்ளக்கூடிய அபிப்பிராயங்கள் அரசியலமைப்புக்கான அடிப்படையை வழங்க வேண்டும். அரசியல் சூழல் நிறைந்த எல்லைக்கு அப்பாலிருந்து அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம், இலங்கை தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய குணாம்சங்களைக் கொண்டதாக அரசியலமைப்பு அமையவேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் இதனை அடைய முடியாமல் போயுள்ளது. 1987-88 காலப் பகுதியில் அரசியலமைப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மத்திக்கும் மாகாணங்களுக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்வதற்காக முதன் முதலில் 13ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. எனினும், அதனுடன் தொடர்புபட்ட சில அரசியலமைப்பின் சரத்துக்களால் அது வலுவிழந்தது. அன்றிலிருந்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் மற்றும் அரசாங்கங்கள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண பல மேம்படுத்தப்பட்ட யோசனைகளை முன்வைத்திருந்தன. ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் மங்கள முனசிங்க தெரிவுக்குழு பரிந்துரைகள், சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் 2000 அரசியலமைப்பு முன்மொழிவுகள் அமைச்சரவை அனுமதியுடன் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டது, மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் பல்லின நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதுடன், திஸ்ஸ வித்தாரன தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு என்பன அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பல விடயங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அரசியலமைப்பில் இணைக்கப்படவில்லை. எனினும் அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது முற்று முழுதாக மாறுபட்ட சூழலில் முன்னெடுக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது. தமது அடையாளம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில், நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஏற்பாடொன்றே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இலக்காக உள்ளது. உலகில் இதற்காக பல ஏற்பாடுகள் இருக்கின்றன. தீர்மானம் இல்லாத விளைவுகளால் தமிழ் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டன. சிறந்த கல்வியறிவைப் பெற்றுள்ள தமிழ், சிங்களவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். சர்வதேச ரீதியில் நாடு தொடர்பில் காணப்பட்ட நன்மதிப்பு சிதைந்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ள நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை ஏற்படுத்த, புதிய உயர் சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றார். http://www.thinakaran.lk/2017/09/22/உள்நாடு/20089
 3. இளமை புதுமை பல்சுவை

  இன்பாக்ஸ் * சாய்னாவுக்கும், சிந்துவுக்கும் பேட்மின்டனில் மட்டுமல்ல; ட்விட்டரிலும் பலத்த போட்டி. 50 லட்சம் ஃபாலோயர்களுடன் லீடிங்கில் இருக்கிறார் சாய்னா நேவால்! அசத்துங்க கேர்ள்ஸ்! * கிட்டத்தட்ட 10,000 பேர் மட்டுமே வாழும் லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ் என்னும் கலிஃபோர்னியாவில் உள்ள சிறிய நகரில் வசிக்கிறார் சுந்தர் பிச்சை. அமைதியும் அழகும் தவழும் இந்த சிறிய மலைப்பிரதேசத்தில் வீடுகளுக்கு மட்டுமே இடம். கடைகள் கிடையாது. அபார்மென்ட்டுகளும் கிடையாது. வாழ்க்கைடா! * மீண்டும் `இந்தியன்’ அவதாரம் எடுக்கிறார் உலக நாயகன். ஷங்கருடன் இணைந்து `இந்தியன்-2’ படத்துக்கான கதை விவாதம் அனல்பறக்க நடந்துகொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஷூட்டிங் ஆரம்பமாம்... சூப்பரு * ரவிச்சந்திரன் அஷ்வின் இப்போது லண்டன் வாசி. சென்னையில் சிலநாள் வாசம் மட்டுமே. `ஆஸ்திரேலியா தொடரில் அஷ்வினுக்கு ரெஸ்ட்’ எனச் சொல்லும் பி.சி.சி.ஐ. அஷ்வின் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் தொடருக்காக இங்கிலாந்திலேயே தங்கிப் பயிற்சி எடுக்கிறார் என்கிறது. நல்லவை நடக்கட்டும்! * ஓவியர், எழுத்தாளர், அரசியல்வாதி என ஆல் ரவுண்டராகக் கெத்து காட்டும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் அடுத்த அவதாரம் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர்.`மாத்ரி மா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆல்பத்தில் சில பாடல்களை எழுதி, இசையமைத்து வெளியிட்டிருக்கிறார் தீதீ. ``டார்ஜிலிங் மலைக்குப் போய்க்கொண்டிருக்கும்போதுதான் எனக்குப் பாடல் எழுதும் எண்ணம் உதித்தது. அப்படியே எழுதி டியூனும் போட்டுவிட்டேன். இப்படி மலைவாசஸ்தலங்களுக்குப் போகும்போதுதான் நமக்குள் இருக்கும் திறன்கள் வெளியே வருகின்றன’’என நெகிழ்ந்திருக்கிறார் மம்தா. கொடநாட்டுக்கும் வாங்க தோழர்! * சில ஆண்டுகளுக்கு முன்புவரை கார் ஃப்ரீக்காக இருந்த ஆர்யா, இப்போது கார்களை அதிகம் தொடுவதில்லை. சைக்கிள் ரைடு, மெட்ரோ ரெயில் பயணம், வாக்கிங், ஜாக்கிங் என லிவ் சிம்பிள் மோடில் இருக்கிறார். கலக்கல் ப்ரோ...
 4. வடக்கு இளைஞர்கள் கைகளில் மீண்டும் சயினைட் குப்பிகள்: எஸ்.பி. வடக்கு மாகாணத்தில் இளைஞர்கள் சயினைட் குப்பிகளுடன் மீண்டும் போராட்டத்தில் குதித்து விடுவார்கள் என குறிப்பிட்ட சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இது தொடர்பில் வட மாகாணசபையும், வடக்கு முதலமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் தற்கொலை சம்பவங்கள் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவம், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றமும் வட மாகாணசபையும் விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற வாய்மூல வினாவிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு 169 பேரும், 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 176 பேரும், 2012ஆம் ஆண்டு 180 பேரும், 2013ஆம் ஆண்டு 160 பேரும், 2014ஆம் ஆண்டு 168 பேரும், 2015ஆம் ஆண்டு 158 பேரும், கடந்த வருடம் 169 பேரும், இந்த ஆண்டிலிருந்து தற்போது வரை 77 பேரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு உளவள ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் , நாடளாவிய ரீதியிலும் தற்கொலைக்க முயற்சி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். https://news.ibctamil.com/ta/internal-affairs/s-b-disanayake-speech-in-parliament
 5. உலக மசாலா

  உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! இர்மா சூறாவளியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு, துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மாரத்தான் பகுதியைச் ஜுலியோ மெலெண்டஸும் ஒருவர். சூறாவளியால் வீடு உட்பட அனைத்தையும் இழந்துவிட்டார். தற்போது தன்னுடைய ட்ரக்கில்தான் வசித்து வருகிறார். ஆனாலும் பிறருக்கு உதவுவதில் மும்முரமாக இருக்கிறார். சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்ணீர், உணவுப் பொருட்கள், போர்வை என்று தனக்குக் கிடைப்பதைக் கொடுத்துவிடுகிறார். ஜுலியோவைக் கவனித்து வந்த லேன் லோஸோனோ, காற்றுப் படுக்கை ஒன்றை அளித்தார். உடனே ஜுலியோ, “இந்த உதவிக்கு மிக்க நன்றி. ஆனால் என்னைவிட மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை அளித்துவிடுவேன். உதவி வேண்டி ஏராளமான மக்கள் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லும்போதே அழுதுவிட்டார். லோஸோனோவை இந்தச் சம்பவம் உலுக்கிவிட்டது. ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். “நாங்கள் இரண்டு நாட்கள் அந்தப் பகுதி யில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம். அடிக்கடி ஜுலியோவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னிடம் எதுவுமே இல்லாதபோதும், தனக்குக் கிடைக்கும் பொருட்களைப் பிறருக்குக் கொடுப்பதற்கு எவ்வளவு பெரிய மனம் வேண்டும். இந்த நல்ல உள்ளத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதனால் எங்கள் சந்திப்பு வீடியோவுடன், இந்த ஹீரோவுக்கு ஒரு வேலையும் வீடும் கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். இதுவரை 50 லட்சம் தடவை இந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்கிறது. 3 ஆயிரம் பேர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவருக்கு ஏராளமானவர்கள் உதவுவதற்கு முன்வந்திருக்கிறார்கள்” என்கிறார் வேன் லோஸோனோ. ரியல் ஹீரோவுக்கு சல்யூட்! ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, 4 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தார். குடியிருக்க வீடு இல்லை. எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தன்னை வாடகைக்கு விட முடிவு செய்தார். “நான் வேலையற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளையும் செய்வேன். உணவும் தங்கும் இடமும் அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் போதும்” என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுக்கிறார்கள். 500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள். “என்னுடைய வாடிக்கையாளர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றவாறு நடந்துகொள்வேன். உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டுகொண்டேன். இதுவரை எந்த வாடிக்கையாளரும் என்னை மோசமாக நடத்தியதில்லை. அவர்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள். வீட்டிலுள்ளவர்களை நகைச்சுவையால் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பதே என்னுடைய முக்கியமான வேலை. மற்ற நேரங்களில் அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்வேன். அவர்களுடன் வெளியே செல்வேன். உணவருந்துவேன். இன்று என்னை வாடகைக்கு எடுப்பதற்குப் பலத்த போட்டி. ஒரு மாதத்துக்கு முன்பே பதிவு செய்துவிட்டுக் காத்திருக்கிறார்கள்” என்கிறார் கோட்டானி. விநோதமான வேலை! http://tamil.thehindu.com/world/article19733652.ece
 6. கவிதைகள்

  குட்டி மகளின் ஓவியத்தில்… இரண்டு நேர் கோடு மேலே முக்கோணம் குட்டியூண்டு வீடு எங்கள் வீடாம் மென் நடைபோகிறேன் உடன் என் குட்டிப் பெண் வீட்டருகே பச்சைப் புல் வெளியில் ஆடா மானா தெரியவில்லை அதைத் தாண்டியதும் குச்சி குச்சியாய் நீண்டிருந்தன தைலக் காடாம் அது அதை ஒட்டிய பாதையில் தைல வாசத்தோடு நடக்கிறேன் சட்டென பாதை முடிவது தெரியாமல் வெண்ணிலாவுக்குள் இறங்கிவிட்டேன் வேலைப் பரபரப்பில் செஞ்சூரியனை முதுகில் கட்டி ஓடிக்கொண்டே இருக்காமல் என் குட்டி மகளின் ஓவியத்தில் அவளோடு சேர்ந்து உறைந்தேகிடக்கலாம் - நாகராஜ சுப்ரமணி மரணப் பெருவெடிப்பு திடுக்கிட்டு சுற்றிலும் பார்த்துத் தடுமாறி பின் சுதாரித்து சிதறிய இடம் பார்த்து இழப்பை உணர்ந்து திரண்டு வந்த கண்ணீரை விழிகளில் தேக்கி தொண்டையில் வெறுமை விழுங்கி ஒற்றைப் பெருமூச்சுடன் விம்மிச் சிணுங்கி சமாதானமாகி வேறு விளையாட்டுகளில் கரைந்துபோகிறது குழந்தை ஒரு பலூனின் மரணப் பெருவெடிப்பில் www.kungumam.co.
 7. காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன் 24 “யார் அந்த ராபர்ட் முஸெல்லா?” எஸ்கோபார் கேட்டபோது யாராலும் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் -அதுவரை யாருமே முஸெல்லாவை நேரில் கண்டதில்லை. அவரது கீர்த்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.எஸ்கோபார் மட்டுமல்ல. கொலம்பிய கார்டெல் தலைவர்கள் அத்தனை பேருமே சந்திக்க ஆசைப்பட்ட நபர் முஸெல்லா.அவர் கருப்பா, சிகப்பா, ஒல்லியா, குண்டா, உயரமா, குள்ளமா எதுவுமே யாருக்கும் தெரியாது. அமெரிக்க வர்த்தகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வால்ஸ்ட்ரீட்டில் அத்தனை பேருமே முஸெல்லா பெயரை அப்போது பயபக்தியோடு உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகளில் தொடங்கி, உள்ளூர் காவல்நிலையத்தின் கடைக்கோடி போலீஸ்காரர் வரை முஸெல்லாவைப் பற்றி ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று நேரம், காலமில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள். எஸ்கோபார் முஸெல்லாவைப் பற்றி விசாரித்ததற்கு தகுந்த காரணம் இருந்தது.எண்பதுகளின் தொடக்கத்தில் திடீரென போதைத் தொழில் பெரும் சரிவினைச் சந்தித்தது. தென்னமெரிக்காவில் அரசுகளின் மறைமுக உதவியோடு கார்டெல்கள் டன் டன்னாக போதையை உற்பத்தி செய்தாலும், அதற்குரிய சந்தை அமெரிக்காவில்தான் இருந்தது. அமெரிக்காவில் விற்றது போக மிச்சம் மீதி இருந்தால்தான் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் ஷிப்பிங் நடக்கும்.இப்படிப்பட்ட நிலையில் -திடீரென ஒட்டுமொத்த அமெரிக்காவுமே இரும்புக் கோட்டையாக மாறியது.போதைப் பொருட்களை கைமாற்றிவிடும் தரகர்கள் பலரும் கைதானார்கள். அல்லது நடுத்தெருவில் நாய் மாதிரி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அறுபதுகளில் இருந்து அமெரிக்காவுக்கும், தென்னமெரிக்க கார்டெல்களுக்கும் இடையே இருந்த தொடர்பு திட்டமிட்டு ஒவ்வொன்றாக துண்டிக்கப்பட்டு வந்தது. வழக்கமான ஏஜெண்டுகள் பலரும் உயிருக்கு பயந்து இந்தத் தொழிலை விட்டு விலகி ஓட ஆரம்பித்தார்கள்.அமெரிக்காவில் தொழில் நடத்த வேண்டுமானால் முஸெல்லாவின் தொடர்பின்றி யாரும் செய்ய முடியாது என்கிற நிலை ஏற்பட்டது.எனவேதான், நம்முடைய காட்ஃபாதரும் முஸெல்லாவை வலைபோட்டு தேடிக் கொண்டிருந்தார். பெயருக்கு சைக்கிள் வர்த்தகம் செய்யும் தன்னுடைய அண்ணன் ராபர்ட்டோ எஸ்கோபாரை பிசினஸ் ட்ரிப் என்கிற பெயரில் அமெரிக்காவுக்கு அனுப்பி, முஸெல்லாவை தொடர்புகொள்ள முயற்சித்தார். பாப்லோவின் அத்தனை அமெரிக்க நண்பர்களும் முயற்சித்தும்கூட ராபர்ட் முஸெல்லாவை தொடர்புகொள்ளவே முடியவில்லை.முஸெல்லா எப்போதுமே தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருப்பார். அவரிடமிருந்து நேரடியாக எவருக்குமே தொலைபேசி அழைப்புகூட வந்ததில்லை. ஆனாலும், அமெரிக்க கிரிமினல்கள் வட்டாரத்தில் முஸெல்லாவின் பேருக்கு நல்ல மரியாதை இருந்தது. ஒரு கொடுக்கல் வாங்கலில் முஸெல்லாவின் பெயர் அடிபட்டால், வேறு யாருமே வம்பு தும்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். தொழிலில் நாணயமானவர் என்று வெகுவிரைவிலேயே பெயர் எடுத்துவிட்டார். பல அமெரிக்க அரசியல்வாதிகளின் பினாமி சொத்துகளை முஸெல்லாதான் நிர்வகிக்கிறார் என்றார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்றாடப் பிரச்னைகளும் முஸெல்லாவிடம் கொண்டு செல்லப்பட்டு, சகாயமான ரேட்டில் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டன. அவருக்கு எந்த வேலை செய்கிறோம் என்பதில் அக்கறையில்லை. செய்யும் வேலையில் எவ்வளவு லாபம் என்பதை மட்டுமே பார்ப்பார். நூறு டாலர் கிடைக்கிறது என்றால், எந்த காரணமும் இல்லாமல் கழுத்தறுக்கவும் தயங்காத கொலைவெறியர் அவரென்று பேசிக்கொண்டார்கள்.எல்லாமே பேசிக் கொண்டார்கள், கேள்விப்பட்டார்கள்தான். ஏற்கனவே சொன்னமாதிரி முஸெல்லாவை யாரும் நேரில் கண்டதில்லை. அவர் தொடர்பான எந்தவொரு குற்றத்திலுமே, அவர் பெயரை தொடர்பு படுத்தி குற்றம் சாட்டுவதற்கு ஒரே ஒரு ஆதாரம்கூட இருந்ததில்லை.‘இவரைப் பற்றி ஓவர் பில்டப்பாக இருக்கிறதே?’ என்று நமக்கு எழும் சந்தேகம்தான் ஆரம்பத்தில் எஸ்கோபாருக்கும் எழுந்தது. எனவேதான், மற்ற கார்டெல்கள் முஸெல்லாவை தொடர்புகொள்ள போட்டா போட்டி போட்டபோதும்கூட இவர் மட்டும் ஆர்வமே காட்டாமல் இருந்தார்.ஆனால் -தன்னுடைய பிரத்யேக போதை நகரில் தயாரிக்கப்படும் சரக்குகள் எதுவுமே அமெரிக்காவுக்கு கடத்தப்படாமல், மலை மலையாக கிடங்குகளில் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டதும், வேறு வழியின்றி முஸெல்லாவுக்கு சரணம் போட்டே ஆகவேண்டிய கட்டாயம். கொலம்பிய கார்டெல்கள் கடைவிரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்கிற தகவல் முஸெல்லாவுக்கு தெரியாமலா இருக்கும்? லாபத்தில் சதவிகிதம் பேசுவதில் தன்னுடைய கை ஓங்கும் வரை அவர் காத்திருந்தார். கிட்டத்தட்ட ஐம்பதுக்கு ஐம்பது என்று பேரம் பேசப்பட்ட நிலையில் களத்தில் குதித்தார். முதலில் முஸெல்லாவின் ஆட்கள் தொடர்பு கொண்டது எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல் போன்ற பெரிய அமைப்புகளை அல்ல. கொலம்பியாவில் குடும்பமாகவே சின்ன அளவில் கார்டெல் அமைத்து போதைத்தொழில் செய்து வந்த கன்ஸாலோ மோரா என்பவரை, ஆழம் பார்த்து காலை விடுவதற்காக, முஸெல்லா இவரை தேர்வு செய்திருக்கலாம். கன்ஸாலோவின் கண்டெயினரை துறைமுகத்தில் தங்கள் வாகனங்களில் ஏற்றியதுமே உரிய தொகைக்கான செக் கிழித்துத் தரப்பட்டது. ‘கையிலே காசு, வாயிலே தோசை’ என்பது முஸெல்லாவின் சித்தாந்தம். ‘கடன் அன்பை முறிக்கும்’ என்பதில் உறுதியாக இருந்தார். அவரும் யாரிடமும் கடன் சொல்லமாட்டார். அவரிடமும் யாரும் கடன் சொல்லக்கூடாது. மோராவுக்கு ஒரு டீலிங்கை முஸெல்லா முடித்துக் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல் பரவியதுமே கொலம்பிய கார்டெல்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்களில் ஒருவன் சாதித்து விட்டதாக கொண்டாடினார்கள். மோராவும், அவருடைய தந்தை மற்றும் சகோதரர்களும் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் ஓர் சிறியளவிலான வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். பேருக்கு அது ஓர் ஃபைனான்ஸ் கம்பெனியாக இருந்தாலும், முறைகேடான தொழில் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒரு சட்டபூர்வமான முகமாகவே இருந்து வந்தது. மெதிலின் கார்டெல் ஆட்களுக்கு ‘ஹவாலா’ டைப்பில் அமெரிக்காவில் இருந்து பணத்தை கொண்டு வரும் ஸ்டாக் புரோக்கர் ஒருவர் மோராவின் நெருங்கிய நண்பர். இந்த புரோக்கரோடு பாப்லோவின் குழுவினருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. இவர் மூலமாக மோராவை அவர்கள் தொடர்பு கொண்டார்கள். சுலபமான ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்கள். “முஸெல்லாவோடு நல்ல நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத லாபத்தை, எந்த முதலீடுமின்றி, உழைப்புமின்றி அந்த நட்புக்காக மட்டுமே நீங்கள் பெறுவீர்கள்...” பாப்லோவின் வாக்குறுதி மோராவுக்கு உற்சாகத்தை அளித்தது. மெதிலின் ராஜாவே, தன்னை போன்ற சின்ன லெவல் மாஃபியோவோடு தொடர்பு கொண்டு பேசியது பெரிய கவுரவம் என்று நினைத்தார்.எனவே, முஸெல்லாவை சந்தித்துவிட முடிவெடுத்தார்.முஸெல்லாவுக்கும், மோராவுக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு எமிலோ என்கிற தரகர்தான். கொலம்பிய கார்டெல்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக, தான் முஸெல்லாவை சந்தித்துத்து உரையாடவேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று எமிலோவை அவர் கேட்டுக் கொண்டார்.“முஸெல்லா யாரையும் சந்திக்க விரும்புவதில்லையே? அவருடைய முகம் யாருக்கும் தெரியாததுதான் அவரது பலம். அதுவுமின்றி இப்போதுதான் நீங்கள் எங்களோடு தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள். அதற்குள்ளாக...” எமிலோ முடிப்பதற்குள் மோரா குறுக்கிட்டார். “நான் பாப்லோ சார்பாக சந்திக்க விரும்புகிறேன்!”பாப்லோவின் பெயரைக் கேட்டதுமே எமிலோ, கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான்.“பாப்லோவின் சார்பாக என்பதால் ஒருவேளை அவர் உங்களை சந்திக்க விரும்பலாம். கேட்டுப் பார்க்கிறேன்...” (மிரட்டுவோம்) - யுவகிருஷ்ணா www.kungumam.co
 8. உடல் எடையை குறைக்கும் பரங்கிக்காய் - சுக்கு சூப் அதிகளவு உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் விரைவில் உடல் எடை குறைவதை காணலாம். இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சுக்கு - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 1 பரங்கிக்காய் - சிறிய துண்டு மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி தழை - சிறிதளவு செய்முறை : வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சுக்கு, மிளகு இரண்டையும் சேர்த்து இடித்து கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பரங்கிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய், சுக்கு, மிளகு போட்டு தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் வற்றியதும் மேலும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். தினமும் காலையில் சுக்கு சூப் குடிப்பதால் உடல் பருமன் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.
 9. புதிய யாப்பு. ஆதரவாகவும் எதிராகவும் வடக்கு கிழக்கில் மக்கள் சந்திப்பு புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு எதிராகவும் ஆதரவாகவும் வடக்கு கிழக்கில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார். ஆதரவாக தமிழரசுக் கட்சியும் எதிராக தமிழ் மக்கள் பேரவையும் மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்டு விளக்கமளிக்கவுள்ளன. அதேவேளை ஈபிஆர்எல்எப், புளொட், ரொலோ ஆகிய கட்சிகள் புதிய அரசியல் அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடவுள்ளதாகவும் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் கூறுகின்றார். இதேவேளை புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைப்பு சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் போன்ற விதப்புரைகள் அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்யக்கூடிய யோசனைகள் எதுவும் இடைக்கால அறிக்கையில் இல்லையென ஜ.பி.சி.தமிழ் செய்திகளுக்கு சுட்டிக்காட்டிய பேரவையின் மூத்த உறுப்பினர் ஒருவர் இது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். வடக்கு கிழக்கு மக்களை மாவட்டம் மாவட்டமாக சந்தித்து புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்களை தெளிவுபடுத்தி அரசாங்கத்தின் சதித் திட்டம் குறித்து மக்களை வழிப்படையச் செய்யவுள்ளதாகவும் அந்த உறுப்பினர் கூறியதாக ஜ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார். ஐக்கியதேசிய கட்சியுடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் தமிழரசுக் கட்சி கூட்டுச் சேர்ந்து தமிழ் மக்ளின் சுயநிர்ணய உரிமையை அடகுவைத்துள்ளதாகவும் இந்தியாவின் யோசனைப்படி சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். அதேவேளை இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள், சிறந்த அரசியல் தீர்வு எனக் கூறியுள்ள சட்டத்தரணி சுமந்திரன் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் சந்திப்புக்களை நடத்தி ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். மாவட்டம் தோறும் பிரச்சாரங்களை சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கவுள்ளதாக கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஜ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் ஒன்றுசேர்ந்து இடைக்கால அறிக்கைக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளதாக புளொட் இயக்க தகவல்கள் கூறுகின்றன. ரெலோவும் இந்த வேலைத் திட்டத்தில் இணைந்து கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://news.ibctamil.com/ta/politics/TK
 10. பாண்டியா சம்பவம்: கேட்ச், நோ-பால், ரன் அவுட் ஆனால் நாட் அவுட் பாண்டியா ரன் அவுட் என்று கைகாட்டிய படியே செல்லும் வார்னர், ஸ்மித். - படம். | பிடிஐ. கொல்கத்தா ஒருநாள் போட்டியில் இந்திய இன்னிங்ஸ் முடியும் தறுவாயில் பாண்டியா பேட் செய்த போது நிகழ்ந்த சம்பவம் சில சர்ச்சைகளைக் கிளப்பி பிறகு அடங்கியது. ஆட்டத்தின் 48-வது ஓவரில் பாண்டியா ஹை புல்டாஸில் கேட்ச் ஆனார். இதனையடுத்து தான் அவுட் என்று அவர் கிரீஸை விட்டு பெவிலியனுக்கு நடைபோட்டார். ஆனால் சாதுரிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்தப் பந்து இடுப்புக்கு மேல் வந்த புல்டாஸ் என்பதால் நோ-பால் மற்றும் நாட் அவுட்டாக இருக்கக் கூடுமென்று பவுலரான கேன் ரிச்சர்ட்சனை அழைத்து ரன்னர் முனையில் ஸ்டம்பைப் பெயர்த்து ரன் அவுட் செய்யுமாறு அறிவுறுத்தினார். இது நடந்து கொண்டிருக்கும் போது சிறு மழையும் பெய்து, வீரர்கள் பெவிலியன் நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஸ்மித் இது ரன் அவுட்தான் என்று நடுவர்களான அனில் சவுத்ரி மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் காரணம் பந்து டெட் பால் ஆகவில்லை என்பதே ஸ்மித்தின் தர்க்கம். ஆனால் இது நாட் அவுட் என்ற முடிவே அளிக்கப்பட்டது. ஏனெனில் தான் அவுட் என்று நினைத்தே பாண்டியா கிரீசை விட்டு நகர்ந்தார். ரன்னுக்காக அவர் முயற்சி செய்யவில்லை. இதுதான் விதிமுறை 27.7-ம் பிரிவு கூறுகிறது. நடுவர்கள் மூன்றாவது நடுவரிடம் முறையீடு செய்த போது இடுப்புக்கு மேல் சென்ற புல்டாஸ் என்று தெரியவந்ததையடுத்து நோ-பால் ஆனது, நோ-பாலாக இருந்தாலும் பந்து டெட் ஆகவில்லை என்பதால் ரன் அவுட் விதிமுறைக்கிணங்கியதுதான் என்பது ஸ்மித் வாதம். ஆனால் தான் அவுட் என்றுதான் கிரீசை விட்டு பாண்டியா நகர்ந்தார். இதனால் அவர் கிரீசை மீண்டும் எட்ட முயற்சி செய்யவில்லை. இந்த இடத்தில், பேட்ஸ்மெனுக்கு அவுட் கொடுக்காதபோது நடுவர் தலையிட்டு குறிப்பிட்ட பேட்ஸ்மென் அவுட் என்று நினைத்துதான் வெளியேறினார் என்று முடிவெடுத்து டெட் பால் என்று அறிவிக்க முடியும், ஆகவே பாண்டியா நாட் அவுட். http://tamil.thehindu.com/sports/article19729204.ece
 11. போரின் பின்னர் வடக்கில் அதிகரிக்கும் தற்கொலை வடக்­கில் தற்­கொ­லை­ செய்து கொள்­வோ­ரின் எண்­ணிக்கை கூடிக் குறைந்து செல்­வ­தா­க­வும், இந்­தப் புள்­ளி­வி­ வ­ரங்கள் தனக்­குப் பேர­திர்ச்சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும், சமூக வலு­வூட்­டல் அமைச்­சர் எஸ்.பி.திசா­நா­யக்க தெரி­வித்­தார். வடக்கு இளை­யோ­ரின் விரக்­தியைக் கண்­டு­கொள்­ளா­மல்­விட்­டால் அவர்­கள் மீண்­டும் சய­னைட் குப்­பி­க­ளு­டன் போராட்­டத்­தில் இறங்­கி­வி­டு­வர் என்­றும் அவர் எச்­ச­ரித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: வடக்­கில் இடம்­பெ­றும் தற்­கொ­லை­கள் தொடர்­பான புள்­ளி­ வி­வ­ரங்­கள் என்னை அதிர்ச்­சி­யும் அச்­ச­மும் அடைய வைத்­துள்­ளன. 2009ஆம் ஆண்டு 169 பேரும், 2010ஆம் ஆண்டு 137 பேரும், 2011ஆம் ஆண்டு 176 பேரும், 2012ஆம் ஆண்டு 180 பேரும், 2013ஆம் ஆண்டு 160 பேரும், 2014ஆம் ஆண்டு 168 பேரும், 2015ஆம் ஆண்டு 158 பேரும், 2016ஆம் ஆண்டு 169 பேரும், நடப்­பாண்­டில் 77 பேரும் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­னர். இது மிகப் பெரிய பயங்­க­ர­மான ஒரு நில­மை­யா­கும். தற்­கொலை முயற்­சி­க­ளைப் பார்க்­கும் போது அச்­ச­மாக உள்­ளது. இதற்கு எதி­ராகக் கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யுள்­ளது. விரக்­தி­யில் உள்ள வடக்கு இளை­யோர்­க­ளுக்கு உள­வி­யல் ஆலோ­ச­னை­களை வழங்க வேண்­டும். அது மாத்­தி­ர­மின்றி வடக்­குப் பிரச்­சினை தொடர்­பில் சிறப்பு அவ­தா­னம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்கு அவ­தா­னம் செலுத்­த­வில்லை என்­றால் வடக்கு இளை­ஞர்­கள் சய­னைட் குப்­பி­க­ளு­டன் மீண்­டும் போராட்­டத்­தில் கள­மி­றங்­கி­வி­டு­வர். இதற்கு நாம் மட்­டும் பொறுப்­பல்ல. வடக்கு மாகாண சபை­யும் முத­ல­மைச்­ச­ரும் இது தொடர்­பில் அவ­தா­னம் செலுத்த வேண்­டும். இந்த விட­யத்­தில் விளை­யாட முனையக் கூடாது. வட மாகா­ணத்­தில் போதி­ய­ளவு உள­வி­யல் ஆலோ­ச­கர்­கள் இல்­லாத குறை­யும் உள்­ளது. ஒரு பிர­தேச செய­ல­கத்­தில் குறைந்­தது இரு­வ­ரா­வது இருக்கவேண்­டும் – என்­றார். http://newuthayan.com/story/30835.html
 12. மனோ, ஹக்கீம், ரிஷாத்துடன் அமெரிக்காவிலிருந்து உரையாடிய ஜனாதிபதி மாகா­ண­சபை தேர்தல் திருத்த சட்­ட­மூ­லத்தை மூன்றில் இர­ண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றிக்­கொள்ளும் விட­யத்தில் இழு­பறி நிலை ஏற்­பட்­ட­தை­ய­டுத்து அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து தொலை­பே­சியில் உரை­யா­டி­யுள்ளார். இந்த சட்­ட­மூ­லத்தில் சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை பாதிக்­கா­த­வ­கை­யி­லான திருத்­தங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் ஆகியோர் வலி­யு­றுத்தி வந்­தனர். திருத்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்பில் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இந்த மூன்று கட்­சி­களின் தலை­வர்­களும் பல தடவைகள் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். இந்த இழு­பறி நிலை­யின்­போதே இந்த மூன்று கட்­சி­களின் தலை­வர்­க­ளு­டனும் தொலை­பே­சியில் தனித்­த­னி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரை­யா­டி­யுள்ளார். இந்த விடயத்தில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மூன்று தலைவர்களையும் கோரியதாக தெரியவருகின்றது. http://www.virakesari.lk/article/24768
 13. உயிர் மெய்

  உயிர்மெய் - 23 மருத்துவர் கு.சிவராமன் உறவின் உச்சத்துக்குப் பின்னரான கணங்கள் உசத்தியானவை. கோயிலின் படிக்கட்டில் அமர்ந்ததுபோல ஓர் அமைதியைத் தருபவை. அந்த வேளையில் அருகாமையில் மனைவி தன் விரல்களைப் பாந்தமாக நம் கை விரல்களோடு கோத்து, நம் முகம் பார்ப்பதுபோல நிறைவைத் தருவன. அதீதக் காதலின், அவசரத்தில் நிகழ்ந்து முடியும்போதுகூட அந்த உச்சத்தின் தருணமும் எப்போதும் குறைவானவை அல்ல. அது, கடற்கரையின் விளிம்பில் நிற்கும்போது, காலைக் கவ்விச்செல்லும் குளிர் நீர், வேகமாக மீண்டும் கடலுக்குள் திரும்பிச் செல்கையில், நம்மைப் புரட்டிப்போட எத்தனிக்கும் ஒரு மகிழ்ச்சியைத் தருவது. இப்படி இரண்டு மாதிரியுமே அல்லாமல், உச்சத்தின் மகிழ்வை ஒரு துளிகூட உணர்ந்து மகிழ முடியாமல், `வெடுக்’ என ஒரே கணத்தில் வீழ்ந்துபோகும் உணர்வைத் தரும் சிக்கலுக்கு, `விந்து முந்துதல்’ (Premature ejaculation - PME) என்று பெயர். எல்லாமே சரியாக இருந்து, சில நேரங்களில், எந்த ஒரு நோயுமாகவும் இல்லாமல், மனப் பரபரப்பின் ஒரு வெளிப்பாடாக மட்டுமே அமையும் இந்தச் சின்னப் பிரச்னை, பல குடும்பங்களின் பூதாகரப் பிரச்னையாவதும், வெகு சிலருக்கு அதனாலேயே குழந்தைப்பேறு தள்ளிப் போவதும் உயிர் மெய் விஷயத்தில் உதாசீனப்படுத்த முடியாத ஒன்று. விந்து முந்துதல் என்றால் என்ன? என்ன நிகழ்கிறது அங்கே? அப்படி என்ன மன அழுத்தத்தை இந்தப் பிரச்னை பல ஆண்களுக்கு விதைக்கிறது? `கள்ளினும் காமம் பெரிது’ என வள்ளுவன் ஆழமாகச் சொன்னது, காமம் போதையின் வகையைச் சார்ந்தது அல்ல என்பதை உரக்கச் சொல்லத்தான். குறைந்த போதை, தெளியும். நிறைந்த காமம், தெளிவைத் தரும். இந்தப் புரிதல் இல்லாமல், காமத்தை அணுகும் ஆணுக்குத்தான் அநேகமாக இந்த `விந்து விரையும் சிக்கல்’ அதிகம் வருகிறது. கூடவே, இயல்பாகச் சிலர் பரபரப்பான மனதைப் பாலகனாக இருக்கும்போதே பெறுவார்கள். அப்படி வளர்த்து எடுக்கும் மதிப்பெண் எந்திரங்கள் பின்னாளில், `எல்லாமே எனக்கு எண்கள்தாம்’ என எப்போதும் ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டே இருக்கும், எங்குமே இளைப்பாறத் தெரியாத இளசுகளுக்கும் இந்த முந்தல் வரக்கூடும். `ஐயய்யோ!’ எனும் சொல்லைத் தாங்கமுடியாத இழப்புக்குப் பயன்படுத்தலாம். `முருங்கைக்காய் வேகலை’ என்றால், `கருங்குளம் பஸ் கிளம்பிவிட்டது’ என்றால், `யூ.கே.ஜி. மிஸ் கையில் ஸ்டார் போட்டுவிடலை’ என்றால், இந்த `ஐயய்யோ’வைப் பயன்படுத்துவதுதான் பரபரப்புக் கிருமியை வாழ்க்கைப் பரிசலில் ஏற்றுவதற்குக் காரணம். கூடவே பள்ளியில் வளர்த்தெடுக்கும் சாதனை வெறி. குறிக்கோளை நோக்கிப் பயணிப்பதற்கும், அதற்காக வெறிபிடித்து ஓடுவதற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டிலும் இலக்கு ஒன்றுதான் என்றாலும், அழகாக, கவித்துவமாகப் பயணிப்பவருக்கும் வெறிபிடித்து ஓடுவோருக்கும் வித்தியாசம் உண்டு. முதலாமவர் இலக்கை அடையும்போது, நிறைவும், மகிழ்ச்சியும், உறவும், அன்பு உள்ளங்களும் ஏராளமாக உடனிருக்கும். வெறிபிடித்து ஓடுகையில் இலக்குக் கையில் கிடைக்கும்போது, இவை எதுவுமில்லாமல், இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) எனும் நோயும், கொஞ்சம் இந்த விந்து முந்துதல் நோயும் கால்சட்டையின் இரு பைகளுக்குள்ளும் ஏறி இருக்கும். உள்ளங்கை அநாவசியமாக வியர்த்தல், உள்ளங்கால் செருப்பு நனையும்படி வியர்த்தல், சாப்பிட்டவுடன் மலம் கழித்தல் போன்ற சங்கடங்களோடு வரும் இந்த `ஐ.பி.எஸ்.’ (இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்) மனப் பரபரப்பு நோயில், சிலருக்கு இந்த விந்து முந்துதலும் குடியேறிவிடும். எப்போதுமே இயல்பாக இருந்தும், மிகச்சரியான புரிதலும், பொங்கும் காதலும் இருந்தும், இந்த `விந்து முந்துதல்’ சில ஆண்களுக்கு ஏற்படுவதற்கு எப்போதுமில்லாமல், அந்தக் கணத்தில் மட்டுமே ஏற்படும் பரபரப்பும் ஒரு முக்கியக் காரணம். மூளையில் ஹார்மோன்கள் அடிக்கும் உச்சபட்சக் கும்மியில் கொஞ்சம் தடுமாறி, இரு உள்ளங்களும் பரவச நிலைக்குத் தயாராகும் முன்னர், தடுமாறி உயிரணுக்கள் வெளிப்பட்டுவிடும். அதனால் உயிரணுக்களின் பயணம் கர்ப்பப்பை நோக்கிச் செல்வது தடைப்படுவதால், கருத்தரிப்பு தாமதமாகிக்கொண்டே இருக்கும். இந்த நிலைக்கு மனம் காரணம் அல்ல என்கிறபோது, சில சிகிச்சைகள் தேவைப்படலாம். பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சுயஇன்பம்கூட இந்தச் சிக்கலுக்கான சிகிச்சையாக, உடலுறவின் நடுவே செய்யும்படிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆணுறுப்பை சற்றே மரத்துப் போகவைப்பதை நவீன மருத்துவம் பரிந்துரைக்கிறது. `நீடித்த இன்பம் பெற’ என்ற விளம்பரங்களுடன் வரும் ஆணுறைகள், இப்படியான மிக லேசான மரத்துப் போதலை, ஆணுறுப்பின் முன் பகுதியின் மேல்புறப் பகுதியில் தரும்போது, `குப்பென்று ஏறிய உற்சாகம்’ உச்சத்தை நோக்கி ஒரேயடியாகப் பயணிக்காது. மரத்துப்போக இட்ட மருந்து, சின்னத் தடையை ஏற்படுத்தும். அதனால், விந்து முந்துதல் நிகழாது. `பாஸு! நாங்க குழந்தைக்கு முயற்சி செய்யும்போது ஆணுறை எப்படி?’ என்போருக்கு எளிய சில பயிற்சிகள் பயனளிக்கும். (விளக்கம் பெட்டிச் செய்தியில்.) ஆணாதிக்க உலகில், முற்றிலுமாக இது குறித்துப் பேசுவதையே பெருத்த அவமானமாகக் கருதும் கூட்டம் இங்கு உண்டு. நடு இரவுத் தொலைக்காட்சிப் பொய்ப் பிரசாரமும், மெடிக்கல் ஷாப்பில் போய், பிட்டுப் பட போஸ்டர் மாதிரி அட்டையில் போட்டிருக்கும் மாத்திரைகளை, அநியாய விலை கொடுத்து வாங்குவதும்தான் இவர்கள் வாடிக்கை. இந்த மாதிரி போலிகள் விற்கும் மருந்துகளிலும் அல்லது நேரடியாக விற்கப்படும் போலி மருந்துகளிலும் அன்று அபின், கஞ்சா சேர்க்கப்பட்டன. இன்று அறிவியல் வளர்ச்சியில், வயாகரா ரசாயனங்களை முறைகேடாகக் கலந்து விற்கிறார்கள். `சீக்கிரம் வந்துடுதே...’ என அங்கு ரகசியமாக மருந்து வாங்கி, பின்னாளில் அந்த மருந்துகளின் பக்கவிளைவால் நிரந்தரமாக, `ஐயோ வரவே மாட்டேங்குதே...’ எனும் நிலைக்கு இந்தப் போலிகள் தள்ளக்கூடும். `விளக்கொளியும் வேசையர் நட்பும்... நெய்யற்ற கண்ணும் அறுமே’ என்பதை நாலடியாரில் படிக்காத சிலருக்கு, விலைமாதரிடம் போய்வந்த தவறான அனுபவமும் அல்லது அதனால் பெற்ற அவமானமும் சேர்ந்து, ஒவ்வொருமுறை உடலுறவின்போதும் மூளையில் அது குடியேறிக் குழப்பம் ஏற்படுத்துவதும் இந்தப் பிரச்னைக்குக் காரணம். சிறு வயதில் ஆண் பாலினச் சேர்க்கை முதலான Sexual abuse, மன அழுத்த நோய்கள் (Depression), தாழ்வு மனப்பான்மை, உடல் கட்டமைப்பு மெலிந்தோ அல்லது விருப்பம் தரும்படி இல்லாமலிருப்பதோ (Poor body image) கூட இந்தச் சிக்கலுக்குக் காரணமாக அமையலாம். முன்னர் ஒருமுறை இப்படி விரைந்து வெளியேறியதை நினைவில் வைத்துக்கொண்டு, `ஒவ்வொரு முறையும் இப்படி ஆகிவிடுமோ?’ எனப் பதறுவதுதான் மிக முக்கியமான காரணம். எல்லாவற்றையும்விட, ஏதோ ஒரு காரணத்தால் ஓரிரு முறை இப்படி விந்து முந்துதல் ஏற்பட்டு, மகிழ்வு தடைபட்ட பின்னர், அடுத்த முறை இந்த விஷயத்துக்குத் தயாராகும்போது மனைவி, `பார்த்து... இந்த முறை சரியா இருக்குமா?’ எனக் கேள்வி எழுப்புவது ஒட்டுமொத்தமாக அவனைப் பொசுங்கிப்போக வைத்துவிடுவது உண்டு. இந்த விஷயத்தில் வார்த்தைகளால் விமர்சிக்காமல், தன் அரவணைப்பால் நம்பிக்கையைத் தர வேண்டியது மனைவிதான். அப்படியான அன்பைத் தர, நெஞ்சை முட்டும் காதல் குடியிருக்க வேண்டியதும், எதையும் எதிர்நோக்கா (Unconditional love) ரொம்பவே அவசியம். கார் ஓட்டும்போது, சைக்கிள்கூட சரியாக ஓட்டத் தெரியாத மனைவிகள் சிலர், பக்கத்து சீட்டில் உட்கார்ந்துகொண்டு, `பார்த்து, லெஃப்ட்ல பாருங்க... ரைட்ல ஒடிங்க’ எனச் சொல்வது உண்டு. எரிச்சலின் உச்சத்தில், வண்டியைவிட்டு இறங்கும்போது பெரும்பாலும் அது டைவர்ஸ் வரைக்கும் போகும். அதே மாதிரி, உடலுறவின்போதும், தான் எந்த சீட்டில் இருந்தாலும் `சரி, தப்பு’ என யாரும் வழிகாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில், தப்பான பாதையில் போய்க்கூட இலக்கை அங்கே அடைய முடியும். ஏனென்றால், இந்தப் பயணத்தில், இருவருமே ஓட்டுநர்கள்; இருவருமே நடத்துநர்கள். இருவருக்குமிடையே உள்ள பல மனத்தடைகள், PME பிரச்னைக்கான இன்னொரு காரணம். ``ஆனாலும் உங்க அம்மா அப்படிப் பேசி இருக்கக் கூடாது. அவங்களுக்கு எங்க வீட்டைப் பார்த்தாலே பாகிஸ்தானைப் பார்கிற மாதிரிதான்’’ எனச் சாயங்கால வேளையில் ஆபீஸுக்கு போன் போட்டுச் சொன்னது, அநியாயத்துக்கு அந்த க்ளைமாக்ஸ் நேரத்தில் ஞாபகம் வந்து உடலுறவு உச்சம் பொசுக்கெனப் போவதும் உண்டு. இவர்களுக்கு மனைவியின் புன்னகையுடன்கூடிய முகமொழி மாத்திரை ஒன்றே போதும்... எல்லாம் சரியாகிக் குழந்தைப்பேறு நிகழ. ஒவ்வொரு முறையும்( Lifelong PME) இப்படி விந்து முந்துதல் நடக்கிறதா அல்லது சில நேரங்களில் சரியாகவும் சில வேளைகளில் (Acquired Secondary PME) மட்டும் இந்தச் சிரமம் இருக்கிறதா என்பதைப் பொறுத்துத்தான் சிகிச்சையின் அவசியமே இருக்கும். சிலருக்கு, மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள் அல்லது நரம்பு ரசாயனக் கடத்திகளின் (Neurotransmitters) மாறுபாடும் இந்தச் சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு மட்டுமே உள்ள புராஸ்டேட் கோளத்தில், (இதுதான் உச்சத்தில் விந்தைப் பீய்ச்சி அடிக்கும் கோளம்) வரும் தொற்று அல்லது அழற்சி, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று எனச் சிலவும் காரணமாக இருக்கலாம். ‘விந்து முந்துது’ எனத் துண்டைத் தலையில் சுற்றிக்கொண்டு, கூனிக் குறுகிப் போலிகளிடம் போய்ச் சிக்காமல், மனம் திறந்து, குடும்ப மருத்துவரிடம் பேசுங்கள். உளவியல்ரீதியான இந்தச் சிக்கல் ஏற்படுகையில், மருத்துவரிடம் பேசி இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதும், மருத்துவர் வார்த்தையில் கிடைக்கும் Reassurance-மே நோயைச் சரியாக்கிவிடும் என அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அங்கே தேவை அன்பான, அனுசரணையான உரையாடல் மட்டுமே; மருந்துகள் அல்ல. விந்து முந்துவதற்கு சித்த மருத்துவம் சொல்லும் மிக முக்கியக் காரணம் உடற்சூடு சார்ந்தது. `உடற்சூடு’ எனும் வார்த்தையை நவீனம் ஏற்றுக்கொள்வதில்லை. சித்தம் முதலான அத்தனை பாரம்பர்யத்துக்கும் இந்த `சூடு, குளிர்ச்சி’ எனும் சொற்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ விளக்கம் இருக்கிறது. அதிக அளவிலான பித்தத்தில் விளையும் உடற்சூட்டில் புராஸ்டேட் கோளம் வேகமாக விந்தை வெளியேற்றுகிறது. `வெள்ளைக் குங்கிலியம்’ எனும் பிசினிலிருந்து (வேப்பம் பிசின் மாதிரிக் குங்கிலிய மரத்தில் விளையும் பிசின்) தயாரிக்கப்படும் குங்கிலியப் பஸ்பம் விந்து முந்துதல் நோய்க்கும் உடல் சூட்டைத் தணிக்கவும் சிறந்த மருந்து. அரசு சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதைப் பயன்படுத்தலாம்.வெள்ளைப் பூசணி (தடியங்காய்), நிலப்பூசணி எனும் பூமி சர்க்கரைக் கிழங்கு இவையெல்லாம் அதிகரிக்கும் உடற்சூட்டைத் தணித்து இயல்பாக விந்து முந்துதலைத் தணிக்கும் எளிய உணவும் மருந்துகளும். எண்ணெய்க் குளியல் உடற்சூட்டைத் தணித்து இந்தப் பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபட எளிய வழி. அதற்காக, தமிழ் சினிமா கிராமத்து ஹீரோ மாதிரி, `வெந்நீர் வெச்சிட்டியா... இங்கே வந்து எண்ணெய் தேய்ச்சுவிடு’ என அதிகாரம் எல்லாம் பண்ணக் கூடாது. குழந்தைப்பேறு அல்ல, சோற்றுப்பேறுகூட கிடைக்காமல் போய்விடும். தேடலே இல்லாமல், அமேசானிலும் ஆண்ட்ராய்டிலுமே எல்லாவற்றையும் பெற்றுப் பழகும் கூட்டமாக நாம் வேகமாக மாறுகிறோம். அதேபோல், அகத்தின் தேடலே இல்லாமல், காதலையும் காமத்தையும் ஆன்லைனில் பெறுவோரும் பெருகிவருகின்றனர். காதலின் எந்தப் புரிதலும், காமத்தின் எந்த நுணுக்கமும் தெரியாமல், அப்படி இணைந்தோர், பயன்படுத்துவோர் கையேடு (User manual) தேடுவதுதான் இங்கே வலி நிறைந்த வரலாறு. மலரினும் மெல்லியது காமம். அதனைச் செப்பச் செய்யும் சிலராக இருப்பது மட்டும்தான் குழந்தைப்பேறுக்கு மட்டுமல்ல... வாழ்க்கைப்பேறுக்கும் வழி. - பிறப்போம்... Pause squeeze technique. இது கணவன்-மனைவி இருவரும் இணைந்து செய்ய வேண்டிய பயிற்சி. ரொம்ப விளக்கமாக இதை எழுத இயலாது என்பதால், மருத்துவரிடம் கேட்டு இந்த எளிய பயிற்சியைக் கற்றுக்கொள்ளவும். இந்தப் பயிற்சியில் வலி இருந்தால், Stop-start பயிற்சியும் பலனளிக்கும். இரண்டு வருடப் பயிற்சி. பிறகு, ஆறு மாதம் அப்ரெண்டிஸ் எனப் பயப்பட வேண்டியதில்லை. இரண்டு, மூன்று வகுப்பில் உச்சம் உறுதி. `கூபக தசைகள்’ எனும் உடலுறவின் செய்கைகளுக்கு வலுப்படுத்தும் Pelvic muscles- ஐ வலுப்படுத்தும் பயிற்சி இந்தப் பிரச்னைக்குத் தீர்வளிக்கும் என நிறுவி இருக்கிறார்கள். முஷ்டியை வலுவாக்கும் பயிற்சி மாதிரி கர்லா கட்டையைத் தூக்கி இதனை வலுப்படுத்த முடியாது. கொஞ்சம் கவனமாகப் படித்துச் செய்யவும். சிறுநீர் போகும்போது பாதியில் நிறுத்த நம்மால் முடியும். ஆபீஸில் இருக்கும்போது பிரிய நினைக்கும் வாயுவை வெளியே விடாமல் அடக்க முடியும். அதற்கு நாம் பயன்படுத்தும் தசையை மனதில் நினைத்துக்கொண்டு, சுருக்கி விரித்துச் செய்யும் பயிற்சிதான் ` Kegel excercises’ எனும் கூபக தசைப் பயிற்சி. தினமும் மூன்று முறை இதைச் செய்ய வேண்டும். விளக்கமாக இணையத்திலும் படித்துக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியில் விந்து முந்துதல் சிக்கல் தீரும். http://www.vikatan.com
 14. சாந்தம்னா சந்தோஷம்... சங்கடம்னா பெண்ணியம்... சுஜா பாலிஸி! 88-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate ரெட் பெட்ரூமில், தேவதைகளான சிநேகன், கணேஷ், சுஜா பாதுகாத்துவரும் லாக்கரை, பேய்களான ஆரவ், ஹரீஷ், பிந்து அணியினர் தங்களிடம் உள்ள சாவியால் திறக்க வேண்டும் என்கிற ‘தேவதைகள் மற்றும் பேய்கள்’ டாஸ்க் தொடர்கிறது. நள்ளிரவு 2:30 மணிக்கு எழுந்து ஆரவ் இப்போது லாக்கரைத் திறப்பதற்கான சூழல் இருக்கிறதா என்று சுற்றி சுற்றி வந்தார். ஆனால் தேவதைகள் அணியினர் பெட்டை கொஞ்சம் இழுத்துப்போட்டு லாக்கரை மறைத்தாற்போல் படுத்திருந்ததால் கொஞ்சம் கஷ்டம் என்பது அவருக்கு புரிந்தது. ஆனால், இப்படி டாஸ்க் என்னும் பெயரில் அங்கேயே பாயப்போட்டு படுத்துக்கொள்வதெல்லா, மிகவும் மோசம். நேற்று ஆரவ் சொன்னது போல், கணேஷ், சிநேகன் என இரு டாஸ்க் வெறியர்களுடன் போட்டி போட்டதற்காகவே, பேய்கள் அணியினருக்கு பாயின்ட் கொடுத்து விடலாம் என்று தான் தோன்றியது. ** விடிந்திருந்தது. டாஸ்க்கின் காரணமாக வேக்கப் சாங்கிற்கு முன்பே எல்லாரும் எழுந்திருந்தார்கள். ஆரவும் ஹரீஷூம் சுஜாவின் கைகளை ஆளுக்கொரு பக்கம் பிடித்துக் கொண்டு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இழுத்துவிளையாடிக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்று இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிநேகனுக்கும் கணேஷூக்கும் பொறாமையாக இருந்தது போல. கணேஷ் தன் வாயாலேயே அதைச் சொன்னார். ‘இப்படியெல்லாம் பண்ணா தேவதைகளுக்கு ஜெலஸ்ஸா இருக்கும்’ என்றார். சார் உங்க ஒயிஃப் பாத்திட்டு இருப்பாங்க… ஜாக்கிரதை. கோலம் போடவிடுங்கடா என்று சிணுங்கினார் சுஜா. கோலம் போட்டு லவ் யூ எழுதிட்டு வர்றேன் என்று அவர் குழந்தைத்தனமாக சொன்னது கவிதையாக இருந்தது. சுஜா வழக்கம்போல் சிணுங்கிக்கொண்டே ஏதோ சொல்ல ஆரவ், சுஜாவை எட்டி உதைத்தார். அன்பாகத்தான் செய்தார் அவ்வளவு ஃபோர்ஸாக இல்லையென்றாலும் இதெல்லாம் நல்ல பழக்கமாக தெரியவில்லை.இதற்கு முன்னரும் இப்படித்தான் ஓவியாவை செல்லமாக உதைக்கிறேன் என உதைத்து, ஓவியா ஆர்மியின் வசவுகளை வாங்கிக் கொண்டார் ஆரவ். சுஜாவிற்கு ஆர்மி இல்லை என்கிற வரை சந்தோஷம்.(இல்ல ஆரம்பிச்சுட்டாங்களா?) ‘நீ நாட்டி பாய் இல்ல நாட்டி பேய்’ என்று கலாய்த்தார் கணேஷ். 8 மணி வெள்ளைச்சாமி என்ற பெயர் பிக் பாஸூக்குத்தான் பொருத்தமாக இருக்கும். ஆட்டோமேட்டிக் டைமர் எதுவும் செட் பண்ணி வைத்திருக்கிறார்களோ என்னவோ தினமும் சரியாக 8 மணிக்கு வேக்கப் சாங்கை ஒலிக்க விடுகிறார் பிக்பாஸ். இன்றைக்கு ‘நாடோடிகள்’ படத்திலிருந்து ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா’. டைனிங் டேபிளுக்கு அருகில் தேவதைகள் மூவரும் ஆடிக்கொண்டிருக்க… தனது பேய் அங்கியை லுங்கியைப் போல் தூக்கிப் பிடித்துக்கொண்ட ஆரவ், அரை டவுசர் தெரிய ‘நாடோடிகள்’ பாட்டிற்கு ‘ஆடுகளம்’ மூவ்மெண்டுகளைப் போட்டுக்கொண்டிருந்தார். இன்றைக்கு வெளுத்துவாங்கியது சுஜாவும் கணேஷூம். அருமையாக ஆடினார்கள். பாடல் முடிந்ததும் கடைசியாக ஆரவ் கொடுத்த போஸ்… ஏன்யா காலங்காத்தால.. ** எப்படி லாக்கரைத் திறக்கலாம் என்று பேய் டீம் வழக்கம்போல் டிஸ்கஸனைத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்களும் வளைச்சு வளைச்சு மீட்டிங் போட்டு பேசுகிறார்களே தவிர.. லாக்கரை திறப்பதற்கு ஒரு முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. இஸ்ரோவில் புது புராஜக்ட் தொடங்குவதற்குக் கூட இத்தனை மீட்டிங் போட்டிருக்க மாட்டார்கள். சட்டுபுட்டுனு லாக்கரை திறந்து டாஸ்க்கை முடிச்சுட்டு அடுத்த டாஸ்க்குக்கு வாங்கடா என்றுதான் சொல்லத்தோன்றியது. இதற்கிடையில் தேவதைகளுக்கான சாப்பாடு வந்திருந்தது. ஸ்டோர் ரூமில் சென்று சுஜா எடுக்க உள்ளே புகுந்த ஹரீஷ் சுஜாவிடம் இருந்து உணவைப் பிடுங்க ஏதேதோ ட்ரை பண்ண, அதற்குள் சிநேகன் அங்குவந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். ஆரவ் சுஜாவை வெறுப்பேற்ற காலை அமுக்கி விடச்சொன்னார். பேய் என்றால் எல்லா தேவதைகளையும்தானே இரிடேட் செய்ய வேண்டும். அதென்ன சுஜாவை மட்டும்? ஷாப்ட் கார்னர் என்பதலா? அடுத்த சீனில் ஆக்சனில் இறங்கியிருந்தார்கள் ஆரவ், ஹரீஷ், பிந்து மூவரும். கணேஷிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே லாக்கர் இருக்கும் ரூமுக்குள் நுழைய முயன்றார்கள். சடாரென்று சுதாரித்த சினேகன், சுஜா, கணேஷ் மூவரும் எதிரணியினரை உள்ளே நுழையவிடாமல் தடுத்துப் பிடித்தனர். ம்ஹூம் எவ்வளவு முயன்றும் அவர்களின் கிடுக்குப்பிடியில் இருந்து நழுவ முடியவில்லை. ஒருகட்டத்தில் ஹரீஷூம் கணேஷூம் கண்ணாடிக் கதவுகளின் மீது மோதப் போக, காயப்படுத்தாதவாறு விளையாடுங்கள் என்று போட்டியின் தொடக்கத்திலேயே பிக்பாஸ் அறிவுறுத்தியிருந்ததால் இரு அணியினரும் ஒருவழியாக சமாதானத்திற்கு வந்தார்கள். ‘கேம்னா கேம் மாதிரி விளையாடணும். நாங்களும் விளையாட இடம் கொடுக்கணும். நீங்க இங்கேயே இருந்தா நாங்க எப்படி லாக்கரை திறக்குறது?’ என்று சீரியஸாக கம்ப்ளைண்ட் செய்துகொண்டிருந்தார் ஆரவ். என்ன மாதிரியான வாதம் இது.. ‘ஸ்டம்ப்பை மறைக்காம நில்லுயா அப்புறம் நான் எப்படி அவுட்டாக்குறது?’ என்று பேட்ஸ்மேனிடம் பௌலர் சொல்வது போல முட்டாள்தனமாக இருந்தது. ** ‘லூசு தேவதை’ என்று சுஜாவை ஓட்டிக்கொண்டிருந்தார் ஹரீஷ். சுஜா கீழே கிடந்த ஹரீஷீன் துணிகளைக் காலால் தள்ளிவிட ஹரீஷ் டென்சனானார். ‘காலால தள்ளுறீங்க. ஒழுங்கா இருந்த இடத்துல வைங்க’ என்று கோபமாக சொல்ல சுஜா மீண்டும் கால்களாலேயே நகர்த்த, பக்கத்திலிருந்த டேபிளை சடாரென்று தள்ளிவிட்டார். ஹரீஷ் இவ்வளவு கோவக்காரரா? ஆரவ்விடம் முறையிட்டார்… அவர் லைட்டாக கலாய்க்கிற டோனில் விசாரித்த பிறகுதான் மனிதர் கொஞ்சம் கூலானார். “என் வேலையை செய்ய விடுங்கயா… நானும் யாரையாவது இரிட்டேட் பண்ணனும்ல” என்று ஆரவ் கெஞ்சியது ஜாலியாக இருந்தது. படுதிராபையான இந்த பேய் டாஸ்க்கில் கொஞ்சமேனும் ரசிக்கும்படி இருந்தது ஆரவ்வின் மாடுலேசன்தான். “சாவடிக்குறாய்ங்களே இந்த ஏஞ்சல் பயலுக” என்று சிரிப்பு போலீஸ் மாதிரி இவர் சிரிப்பு பேயாக உலா வந்தார். பிறகு குடித்தவர்போல பேசி அலப்பறையைக் கொடுத்தார் ஆரவ். விஜயகாந்த் வாய்ஸில் பேச முயற்சி செய்தார் போல. அவர் ஸ்டைலில் தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க என்று சொல்லி அருகிலிருந்த சேரைத் தூக்க, அதற்கருகில் கால் வைத்திருந்த சுஜா தன் காலில் இடித்துவிட்டதாக கத்தினார். ஆரவ் வேண்டுமென்றே செய்யவில்லை என்று எல்லோரும் சமாதானம் சொன்னாலும், சுஜா கோபித்துக்கொண்டார். ஆமா நாந்தான் தெரியாம ஆக்ஸிடன்ட் பண்ணிக்கிட்டேன் என்று புலம்பினார். ‘ஒய் கிரியேட்டிங் சீன் சுஜா?’ என்று ஹரீஷ் கேட்டதற்கு, ‘யார் நான் சீன் கிரியேட் பண்றேனா நீங்க பண்றீங்களா?’ என்று கடுப்பானார். அவருக்குப் பரிந்து பேசி அமரச் சொன்ன கணேஷிடம் கூட ‘Wait Buddy வலி இருந்தா உட்காந்துக்கணுமா, கால் வலிச்சாலும் நின்னுக்கலாம் பரவால்ல’ என்று கடுப்பாக சொன்னதெல்லாம் செம சீன் (அய்யோ நான் சுஜாவை சொல்லலைங்க). ** இந்த பாடாவதி டாஸ்க் பார்ட் டூவிற்கு சென்றது. பார்ட் ஒன்னில் தேவதைகளாக இருந்தவர்கள் இப்போது பேய்கள். பேய்களாக இருந்தவர்கள் இப்போது தேவதைகள். அதன்படி இப்போது ஹரீஷ், ஆரவ், பிந்து மூவரும் தேவதைகளுக்கான வெள்ளை அங்கியை அணிந்துகொண்டார்கள். சிநேகன், கணேஷ், சுஜா மூவரும் பேய்களுக்கான கருப்பு அங்கியை அணிந்துகொண்டார்கள். சாவி மீண்டும் சுவரில் தொங்கவிடப்பட்டது. . புதிய தேவதைகள் மீண்டும் கும்பலாக மீட்டிங் போட்டு சாவியை எப்படி பாதுகாக்கலாம்? லாக்கரை எப்படி காப்பாற்றலாம் என்று திட்டம் வகுத்தார்கள். சுஜா இந்தநேரத்தில் உள்ளே வந்தார். கொஞ்ச நேரம் பெட்டில் அமர்ந்து விட்டு மீண்டும் இவர்களுக்கு அருகில் நடக்க, ‘நாங்கதான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்ல வெளிலபோங்க’ என்று ஆரவ் அதட்டினார். நான் பக்கத்துலயா உக்காந்திருக்கேன் நீங்க பாட்டுக்கு பேசுங்க என்று சுஜா அவர்களை வெறுப்பேற்றினார். மாத்திரை எடுக்கணும்னாங்கனு பரிதாபப்பட்டு உள்ளே விட்டா உள்ளேயே உட்காந்துக்கிட்டா எப்படிங்க என்று சிநேகனிடம் முறையிட்டார் ஆரவ். அதற்குள் டாஸ்க் தொடங்கிவிட்டதற்கான பஸ்ஸர் ஒலிக்க, சாவியை எடுக்க முயன்றபோது ஆணி உடைந்தது. பிந்து சாவியை கையில் வைத்திருந்தார். அதெல்லாம் கூடாது சாவியை சுவரில்தான் மாட்டி வைக்கவேண்டும் அதான் ரூல்ஸ் என்று சிநேகன் டீம் சொல்ல.. மொதல்ல நீங்க ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க பஸ்ஸர் அடிக்குறதுக்குள்ள நீ ஏன் உள்ள வந்த என்று சுஜாவை கேட்டார் ஆரவ். ‘நீ வா போ’னு பேசாதீங்க என்று ஆவேசமானார் சுஜா. அதை மட்டும் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ‘Women Need Respect’ என்பதையும் சேர்த்து சொன்னார். அன்பின் மிகுதியால் ஒருவரை ஒருமையில் அழைப்பது எப்படி மரியாதைக் குறைவாக இருக்கும்? ஆரவ் மட்டுமல்ல அங்கிருந்த யாருமே பெண்களுக்கு மரியாதை தராமல் இல்லை. இந்த டயலாக்கை சுஜா சொன்னது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே சிநேகனிடமும் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கிறார். சுஜா மரியாதையை எதிர்பார்ப்பதில் ஒன்றும் தவறில்லை ஆனால் அதை எல்லா நேரத்திலும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு நேரம் சிரித்துப் பேசுகிறார், குறும்பு செய்கிறார், மடியில் அமர்கிறார், கன்னத்தை கிள்ளுகிறார். அப்போது லூசு, நீ வா போ என்றால் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் தன் மீது தவறு இருக்கும் நேரம் எதிராளி கோபப்பட்டால் உடனே நீ வா போனு பேசாதீங்க என்று சொல்லி பிரச்னையை திசைதிருப்ப முயல்கிறார். ஆணியை சரிசெய்து சாவியை மீண்டும் மாட்ட, சில நொடிப் போராட்டத்தில் அதை எடுத்துவிட்டார் சிநேகன். ஆனால் சிநேகனை இந்த கருப்பு அங்கியில் பார்க்கும்போது ‘அந்நியன்’ விக்ரம் போலவே இருந்தார். இனி புதிய பேய்களின் ஆட்டம் தொடங்குகிறது. தான் பேயாக இருந்தபோதும் சரி இப்போது ஏஞ்சலாக இருக்கும்போதும் கணேஷிடம் சிக்கி படாதபாடு படுவதென்னவோ ஆரவ்தான். இந்த முறை அவருடைய கன்னங்களுக்கு ரோஸ் பவுடர் அடித்துவிளையாடிக்கொண்டிருந்தார். ஏற்கனவே அவருக்கு மீசையில்லை இதுல இவரு வேற. சிநேகன் பெட்டியை நெருங்கவிடாமல் கட்டிப்பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடினார் ஹரீஷ். அருகிலிருந்த பிந்து கவிஞரே நீங்க தேவதையா இருந்தாலும் பேயா இருந்தாலும் ஒரே எக்ஸ்பிரசன்தான் கொடுக்கிறீங்க.. எக்ஸ்பிரசனை மாத்துங்க என்று அலுத்துக்கொண்டார். பிந்து மட்டும்தான் தேவதை உடையில் பார்க்க பாரதிராஜா படப் பாடல்களின் கோரஸ் கதாபாத்திரம் போல் அழகாக இருந்தார். ‘ஹரீஷ் சட்டைல சாம்பாரா ஊத்திடுவியா நீ’ என்று சுஜாவை ஏற்றிவிட்டார் கணேஷ். (சார்… உங்களை நாங்க எவ்ளோ பெரிய ஜெண்டில்மேன்னு சொல்லிட்டு இருக்கோம். ஒரு ஜென்டில்மேன் பண்ற வேலையா இதெல்லாம்). இதுதான் சாக்கென்று தன் கையில் இருந்த சாம்பாரை ஹரீஷ், பிந்துவின் அங்கிகளில் தெளித்தார். (ஜிப்பா சூப்பர் மயில்சாமி காமெடி நினைவுக்கு வந்தது). அப்படியே ரெண்டு இட்லியையும் கொடுத்துட்டீங்கன்னா தொட்டு சாப்பிட்டுக்குவேன் என்பதுபோல் பாவமாக பார்த்தார் ஹரீஷ். சிநேகனும் தன் பங்கிற்கு கையுறையை தண்ணீரில் நனைத்து ஹரீஷ் மற்றும் பிந்துவின் முகத்தில் தடவினார். கணேஷ் ஆரவ்வின் தலையில் பிந்துமாதவியின் தொப்பியை வைத்து அழகுபார்க்க, பிந்து மாதவி ‘அது பிக்பாஸ் நினைவா வச்சிருக்கேன் ஒண்ணும் பண்ணீடாதீங்கயா ப்ளீஸ்’ என்று கெஞ்சினார். கணேஷ் ஆரவ்விடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே லாக்கரைத் திறக்கமுயல ஆரவ் தடுத்துவிட எல்லாரையும் வரச் சொன்னார் கணேஷ். மொத்த டீமும் பாய்ந்ததில் லாக்கர் கீழே விழுந்தது. அவ்வளவு களேபரத்திலும் தான் எடுத்துவந்த ரசத்தை பொறுப்பாக ஹரீஷின் சட்டையில் ஊற்றிக் கொண்டிருந்தார் சுஜா. அது மைக்கில் படுவதாக ஹரீஷ் கத்தினார். சாவி பாதி நுழைந்து உடைந்துவிட சரி போங்கடா என்று ஒதுங்கிக் கொண்டார்கள் பேய்கள் அணி. பிறகு லாக்கரைத் திறந்தால், வாழ்த்துகள் உங்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன என்று எழுதப்பட்ட சீட்டு உள்ளே இருந்தது. ஒருவழியாக அந்த டாஸ்க் முடிவடைந்தது. ** அடுத்த சண்டையை ஆரம்பித்தார்கள். சாம்பாரும் ரசமும் கலந்திருந்த தன் அங்கியை சிநேகனிடம் காட்டி ‘சுஜா இதை துவைச்சுக் கொடுப்பாங்களா?’ என்று மல்லுக்கு நின்றார் ஹரிஷ். ‘ டாஸ்க்னா அப்படித்தான் இருக்கும். என்னைக் கூட தான் எட்டி உதைச்சீங்க… நான் திருப்பி உதைக்கட்டுமா?’ என்று விட்டுக்கொடுக்காமல் பேசினார் சுஜா. ‘நாம போய் பிக்பாஸ்கிட்ட சொல்லுவோம். அவரு ரொம்ப நியாயமானவரு. இதெல்லாம் அவரே துவைச்சுக்குவாரு. ’ என்று பொத்தாம் பொதுவாக ஒரு கருத்தை உதிர்த்தார் கணேஷ். வெளியில் ஆரவ் சுஜாவைப் பற்றி பிந்துமாதவியிடம் பேசிக்கொண்டிருந்தார். ‘இந்தப் பொண்ணு ஜெயிக்குறதுக்காக எந்த எக்ஸ்ட்ரீமுக்கு வேணாலும் போகும். பொசுக்குனு என்ன சொல்லிருச்சு பாத்தீங்களா? ’ என்றதோடு, ‘இனிமே இவளோட பேசவே மாட்டேன்’ என்று சபதமேற்றுக்கொண்டார். ** ஆண்களுக்கு பொதுவாக ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எந்தப் பெண்ணிடம் முழுதாக சண்டைபோட்டு ஒதுங்க நினைக்க மாட்டார்கள். கோபப்பட்டு கத்தினாலும் சில மணிநேரங்களில் தாங்களாகவே போய் சமாதானம் செய்ய முயற்சி செய்வார்கள். அதையேதான் ஹரீஷ் இப்போது செய்யத் தொடங்கினார். குனிந்து கிச்சனை பெருக்கிக் கொண்டிருந்த சுஜாவிடம் ‘என்கிட்ட பேசுங்க இவ்ளோ ரூடா இருக்காதீங்க… அப்படி என்ன ஆகிப்போச்சு டாஸ்க்ல என்ன வேணா அடிச்சுக்கலாம் டாஸ்க் முடிஞ்சதும் சகஜமாகிடுங்க என்று வாலண்டியராக சென்று பேசத் தொடங்கினார். ‘இப்பதான் அது டாஸ்க்னு தெரிஞ்சதா?’ என்ற சுஜா எதிர்தாக்குதலுக்குப் பிறகு இரண்டு பக்கமும் வார்த்தைகள் அம்பாக சீறிக்கொண்டிருந்தது. லூசுனு கூப்பிட்டதுக்கு சாரி.. நான் சாதாரணமா தான் சொன்னேன். நீங்ககூட ஆரவ்வை அப்படி சொல்லிருக்கீங்க… ஏன் கவிஞரைக்கூட லூசுக் கவிஞரேனு நீங்க கூப்பிட்டதில்ல என்று ஃப்ளோவில் சொல்ல… இதைக் கேட்டுக்கொண்டிருந்த சிநேகன் ‘உங்க சண்டைல என்னை ஏண்டா டேமேஜ் பண்றீங்க?’ என்று காண்டாகியிருப்பார். அதற்கும் சுஜாவிடம் பதில் இருந்தது, ‘அவருக்கும் எனக்கும் வேற.. எனக்கு நீங்க க்ளாஸ் எடுக்காதீங்க நீங்க ஒரு நேரம் நல்லா பேசுறீங்க ஒரு நேரம் கோபப்படுறீங்க?’ என்று தொடர்ந்து கோபமாகவே பேச… என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்த முயன்றார் ஹரீஷ். இப்ப என்ன என்று ஹரீஷூக்கு ஒரு ஹக் கொடுத்து போதுமா போங்க என்று சண்டையை முடித்துவைத்தார் சுஜா. அவ்வப்போது சுஜா இதுபோல் அன்யூசுவல் ஆகிவிடுகிறார் என்று கவலைப்பட்டார் பிந்து. அவங்ககூட ரொம்ப க்ளோஸ் ஆகுறப்போலாம் ஏதாவது விரிசல் வந்துடுதுன்னு வருத்தப்பட்டார் ஆரவ். டாஸ்க் நேரத்தில் எப்படி இருந்தாலும் அது முடிந்ததும் நார்மலாகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் மூவரும். கணேஷ் இதை சிறப்பாக செய்வார் என்று சர்டிஃபிகேட் கொடுத்த ஆரவ். சிநேகன் டாஸ்க்கை சீரியஸாக எடுத்துக்கொண்டால் டவுன் ஆகிடுவார் என்றும் சொன்னார். ** அடுத்த டாஸ்க் ஆரம்பமானது. லிவிங் ரூமில் அனைவருக்கும் டாஸ்க்கைப் பற்றி படித்துக் காண்பித்தார் ஹரீஷ். இந்த டாஸ்க்கின் பெயர் ‘கண்கட்டி வித்தை’. ப்ளைவுட் கம்பெனி தான் ஸ்பான்சர் போல. பவுலிங் லேனில் பத்து பவுலிங் பின்களை வைத்திருப்பார்கள் அதை ஓரே நேரத்தில் வீழ்த்தியபிறகு ஆக்டிவிட்டி ரூமிற்கு செல்ல வேண்டும். அங்கு வாலில்லாத யானை ஒன்று இருக்கும் போட்டியாளர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு அதன் சரியான இடத்தில் வாலை ஒட்ட வேண்டும். இதுதான் டாஸ்க். அட நம்மூர்களில் பொங்கல் விழாக்களின் போது தெருக்களில் நடத்தும் அதே விளையாட்டுதான். ஆனால் வழக்கமாக அதில் ஒரு நடிகையின் படத்தை வைப்பார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டு போய் அவர் நெற்றியில் பொட்டு வைக்கவேண்டும். கண்கட்டியிருப்பவர் தடவித்தடவி சரியாக நடிகையின் வாயில் பொட்டுவைப்பார். வாயில வைக்கிறதுக்கு அது புட்டு இல்லடா பொட்டு என்று கலாய்ப்பார்கள். அதே கேம் தான். ஆனால் இது என்ன சம்பந்தமே இல்லாமல் யானை - வால் என்று பார்த்தால் அது அந்த ப்ளைவுட் கம்பெனியின் லோகோவாம். சிறப்பான மார்க்கெட்டிங் யுக்தி. 88 நாட்கள் இதுபோன்ற பல ஸ்பான்ஸர் டாஸ்க்குகளை பார்த்துவிட்டதால் காஸ்ட்யூம் என்ன மாதிரியாக வந்திருக்கும் என்பதை முன்னமே கணித்தார் ஆரவ். அந்த ப்ளைவுட் கம்பெனியின் பெயர் பொறித்த டீசர்ட்டை அணிந்துகொண்டார்கள். இந்த டீசர்ட்டை அணிந்துகொள்ளும்போது ‘இதை விட ஃபன்னான டாஸ்க் கொடுக்கவே முடியாதுல’ என்று சர்காஸமாக பிக்பாஸையே கலாய்த்தார் ஹரீஷ். போட்டியாளர்களே காமெடி பண்ற அளவுக்கா டாஸ்க் யோசிப்பீங்க பிக்பாஸ்? சுஜா, ஹரீஷ், கணேஷ் மூவரும் மஞ்சள் அணி. சிநேகன், ஆரவ், பிந்து மூவரும் பச்சை அணி. ஹரீஷ் முதல் முறை பந்தை உருட்ட, அத எல்லா கட்டைகளையும் கீழே தள்ளவில்லை. இரண்டாவது முறையில் எல்லாக் கட்டைகளும் விழுந்தது. ஆக்டிவிட்டி ரூமிற்கு விரைந்தார்கள். அங்கு கணேஷின் கண்கள் கட்டப்பட்டது. சுஜாவின் வழிகாட்டுதல்களைக் கேட்டு யானையின் வாலை சரியாக ஒட்டினார். அடுத்ததாக களமிறங்கியது சிநேகன் அணி, ஆரவ்வின் முதல் உருட்டிலேயே பந்து எல்லாக் கட்டைகளையும் கீழே தள்ளிவிட்டது. ஆக்டிவிட்டி ரூமில் பிந்துவின் கண்கள் கட்டப்பட்டு சிநேகன் வழிகாட்ட அவரும் யானையின் வாலை சரியாக ஒட்டினார். பத்து நிமிடத்துக்குள்ளாகவே இரண்டு அணியும் டாஸ்க்கை முடித்துவிட்டார்கள். குறைவான நேரத்தில் முடித்து டாஸ்க்கை வென்றது க்ரீன் டீம். இந்த டாஸ்க்கிற்கு பாயின்ட்ஸ் எல்லாம் கிடையாது. யானை வடிவ நினைவுக் கோப்பை ஒன்று பரிசளிக்கப்பட்டது. ** சுஜா திருமணம் செய்ய இருப்பவருக்கு அன்று பிறந்தநாள் போல அழகான ஒரு கோலமிட்டு I Miss You so much என்று அவர் பெயரைப் போட்டிருந்தார். தனது சக நண்பர்களை அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லச் சொன்னார். எல்லாரும் அவருக்காக ஹேப்பி பர்த்டே சாங் பாடினார்கள். சுஜா கண்களில் காதல் மின்ன ‘ஹேப்பி பர்த்டே அத்தான்.. நீங்க இல்லாம எனக்கு இங்க நரக வேதனையா இருக்கு!’ என்று உணர்ச்சிபொங்க தன் அன்பிற்குரியவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்துகொண்டார். (எங்கள் சார்பிலும் ஹேப்பி பர்த்டே பாஸ்..!) ** தேவதைகள் மற்றும் பேய்கள் டாஸ்க்கிற்கான மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டது. சிநேகன், சுஜா, கணேஷ் அந்த டாஸ்க்கின் முதல் பார்ட்டில் பேய்கள் லாக்கரை திறக்காமல் பார்த்துக்கொண்டதற்கு 10 பாயின்ட். இரண்டாவது பார்ட்டில் லாக்கரைத் திறந்ததற்கு 10 பாயின்ட்ஸ். இதுதவிர பிக்பாஸ் சிறப்பாக செயல்படும் ஒரு அணியைத் தேர்வு செய்து அந்த அணிக்கு 10 பாயின்ட்ஸ் தருவதாக சொல்லியிருந்தார். இப்போது 10 கொடுத்தால் 30 ஆகிவிடும் மூவரும் ஆளுக்கு 10 ஆக பிரித்துக்கொள்வார்கள். அது தப்பாச்சே என்று யோசித்த பிக்பாஸ் 5 மதிப்பெண்களை மட்டும் வழங்கினார். 25 மதிப்பெண்களை மூவரும் பிரித்துக்கொள்ள வேண்டும். இப்ப என்ன பண்ணுவீங்க? என்று தன் குரூரசிரிப்பை சிரித்திருப்பார் பிக்பாஸ். ஆளுக்கு 8 எடுத்துக்கொள்வோம் மீதம் இருக்கும் 1 பாயின்ட் யாருக்கு? என்று கேள்வி எழுந்தபோது.. ’நானே வாய்விட்டுக் கேட்குறேன்.. அந்த ஒரு பாயின்ட்டை எனக்கு கொடுத்துடுங்க. என்னை போட்டு அடிச்சாங்க.. குப்பையெல்லாம் மேல கொட்டுனாங்க தெரியுமா?’ என்று பாவமான குரலில் கேட்க மறுப்பேதும் சொல்லாமல் மற்ற இருவரும் சம்மதித்தார்கள். ஆக சுஜாவுக்கு 9 மதிப்பெண்கள் போனது. கணேஷ் தோசை சுடுகிறேன் என்று சொல்லி எதையோ முயற்சிக்க தோசைக்கல் தீய்ந்து கல்லில் இருந்து வராமல் தோசை ஒட்டிக்கொண்டது. அருகில் நின்றிருந்த சுஜா அவரின் சொந்த தோசைக்கல்லாய் இருந்திருந்தால், இந்நேரம் சாமியாடியிருப்பார். பரிசுத்தொகையே 50 லட்சம்தான் ஆனால் இவர்கள் கோதுமை மாவைக் கொட்டி, பீன் பேக்கை கிழித்து, போர்டை உடைத்து, இதோ இப்போது தோசைக்கல்லைத் தீய்த்து… பிக்பாஸூக்கு தாறுமாறாக செலவு வைக்கிறார்கள். இவர்கள் பாயின்ட்ஸெல்லாம் குறித்துவைக்கும் எக்ஸெல் சீட்டில் இந்த சேதாரங்களையும் போட்டு வச்சு பரிசுகொடுக்கும்போது அதெல்லாம் கழிச்சுட்டு குடுங்க பிக்பாஸூ…! அப்போதான் அடுத்த சீசன்ல வர்றவிய்ங்களாவது கண்ணும் கருத்துமா பாத்துப்பாய்ங்க போட்ட முதல் தப்பும். ** Ticket To finale Task 2: இந்த டாஸ்கிற்கு ‘எடுத்துட்டு ஓடு’ என்று பெயர் வைத்திருந்தார்கள். இப்படியே போனால் போட்டியாளர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்து ‘எகிறிக் குதிச்சு ஓடு’ என்று தாங்களாகவே ஒரு போட்டியை உருவாக்கி வீட்டின் காம்பவுன்டு சுவர் ஏறிக்குதித்து ஓடத்தான் போகிறார்கள். இந்த டாஸ்க் என்னவென்றால் க்ரவுண்டின் நடுவே ஒரு க்யூப் வைத்திருப்பார்கள், இரண்டு சைடும் எல்லைக் கோடுகள் இருக்கும். இரண்டு பேர் களமிறங்குவார்கள், ஒருவரை ஏமாற்றி க்யூபை எடுத்துக்கொண்டு எல்லைக் கோடைத் தாண்டிவிட்டால் அவர் வெற்றி அப்படி ஓடும்போது இன்னொருவர் தொட்டுவிட்டால் தொட்டவர் வெற்றி. இரண்டு அணியாக பிரிய வேண்டும் என்று சொன்னதும் ஹரீஷ் நக்கலாக, உங்களுக்கே தெரியும் யார் யார் ஒரு டீம்னு என்று மீண்டும் சர்காஸத்தை பிழிந்தார். குறைவான மதிப்பெண்களை எடுத்த அணி மூவரும் சேர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு அடுத்த அறிவிப்பு வரும்வரை ஒன்றாகவே சுற்ற வேண்டும். ஹரீஷ் தன்னால் ஓடமுடியாது நான் இந்தப் போட்டியில் உப்புக்கு சப்பாணி என்று பிக்பாஸில் ஸ்பெஷல் பெர்மிசன் வாங்க, ‘மிஸ் மிஸ் நானும் மிஸ்’ என்று அதே பெர்மிசனை ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டு தானும் போட்டியிலிருந்து விலகினார் சுஜா. இவர்களுக்கும் சேர்த்து அவர்கள் டீமில் யாராவது ஆடவேண்டும். ஆரவும் கணேஷூம் முதலில் களமிறங்கினார்கள். கணேஷை க்யூபை எடுத்துக்கொண்டு எல்லையைக் கடந்து வெற்றிபெற்றார். அடுத்து ஆரவும் சிநேகனும் இம்முறை ஆரவ் எடுத்துக்கொண்டு ஓட சிநேகன் அவரைத் தொட்டு அவுட்டாக்கினார். அடுத்த சுற்றில் பிந்துவும் கணேஷூம் பிந்து எடுத்தார் கணேஷ் தொட்டு அவுட்டாக்கினார். இப்படியாக தொடர போட்டியின் விதிப்படி எல்லைக் கோடை நோக்கித்தான் ஓடவேண்டும் ஆனால் கணேஷ் வேறு திசையில் எங்கோ ஓடியதால் அந்த பாயின்டும் ஹரீஷ் அணிக்குப் போனது. இறுதியில் மொத்தமாக சிநேகன் அணி வென்றது. அவர்கள் மொத்தம் 12 பாயின்ட்டுகள் எடுத்திருக்க ஆளுக்கு நான்காக பிரித்துக் கொண்டார்கள். ** விதிமுறையின் படி தோற்ற அணியினரின் கால்கள் ஒன்றாகக் கட்டப்பட்டன. மூவரும் சேர்ந்து சேது விக்ரம் போல நடந்து வந்தார்கள். சிநேகன் எல்லாருக்கும் பாட்டு சொல்லிக் கொடுத்தார்… பதனி பதனி என்று பதனி வித்ததைத் தவிர சிநேகன் கற்றுக்கொடுத்த வித்தையை வார்த்தைகளில் வடிப்பது சற்று சிரமம்தான். சரி எல்லார் காலையும் ஒண்ணா சேர்த்துக் கட்டியிருக்காங்களே.. தூங்கும்போது பாத்ரூம்போதெல்லாம்? என்று சந்தேகம் எழ அதற்கும் பிக்பாஸ் ஒரு விளக்கவுரை அனுப்பினார். பாத்ரூம் போகும்போது மட்டும் கட்டை அவிழ்த்துக் கொள்ளலாம். தூங்கும்போது நோ. போட்டியாளர்களின் சுயநலத்தில் பொதுநலமும் பொதுநலத்தில் சுயநலமும் இருந்தது இவர்கள் விட்டுக்கொடுக்கிறார்களா விட்டுப்பிடிக்கிறார்களா? என்ற குரலுடன் விளக்குகள் அணைக்கப்பட்டது. http://cinema.vikatan.com/bigg-boss-tamil/102982-is-suja-performing-some-fake-feminist-stunts-happenings-of-bigg-boss-day-88.html
 15. இளமை புதுமை பல்சுவை

  காணாமல் போன விமானங்கள்... விடை தெரியாத மர்மங்கள்! #MysteryStories 'இருட்டில் தொலைத்துவிட்டு வெளிச்சத்தில் தேடாதே' என்பார்கள். சர்வதேச நாடுகள் பலவும் இருட்டில் தொலைத்த விமானங்களை வெளிச்சம் இருக்கிறது என்கிற காரணத்தால் வேறு ஒரு இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்கிற ரீதியில் 24 மணி நேரக் கண்காணிப்பிலேயே இருந்த விமானங்கள் பலவும் தொலைந்து போய் இன்றுவரை கண்டுபிடிக்க முடியாமலே இருக்கிறது. வெறுமனே விமானங்கள் மட்டும் காணாமல் போயிருந்தால் தேடாமல் விட்டிருக்கலாம். எல்லா விமானங்களிலும் 200 பயணிகளுக்கும் மேலாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் சோகமான விஷயமாய் இருக்கிறது. குறிப்பிட்ட காலம் வரை தேடிவிட்டு கடலில் விழுந்திருக்கலாம் என ஜஸ்ட் லைக் தட் அறிக்கை கொடுத்துவிட்டு கடந்து வந்திருக்கின்றன சம்பந்தப்பட்ட அரசுகள். எல்லாமே முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற சம்பவங்கள். ராணுவ விமானங்கள், போர்க்கப்பல்கள் எனச் சர்வதேச படைகளின் கூட்டுத் தேடல்களில் இன்று வரை விடை கிடைக்காத விமானங்கள் ஏராளம். டிசம்பர் 28, 1948 அன்று, மியாமி (புளோரிடா) தலைநகரான போர்டோரிகோவின் சான் ஜுவான் விமான நிலையத்திலிருந்து டக்ளஸ் டகோடா DC-3 என்கிற விமானம் இரவு 10.03 மணிக்குப் புறப்பட்டது. 28 பயணிகள் மூன்று விமான சிப்பந்திகளுடன் பயணித்தது. “வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான தகவலுக்காக காத்திருக்கிறேன்” என விமானி செய்தி அனுப்புகிறார். அந்த விமானத்திலிருந்து கடைசியாய் வந்த தகவல் இது மட்டும்தான். இப்போது வரை அந்த விமானம் தரை இறங்காமலே இருக்கிறது. 1948, ஜனவரி 30-ம் தேதி இரண்டாம் உலகப்போரில் வீர தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் ஆர்தர் கோணிங்கம் பயணம் செய்த ஸ்டார் டைகர் விமானம் 6 பணியாளர்கள் மற்றும் 25 பயணிகளுடன் பெர்முடா தீவில் இருந்து கிளம்பிய நேரத்தில் இருந்து இதுவரை தரை இறங்கவில்லை. எங்கெங்கோ தேடியவர்கள் கடைசியில் பெர்முடா முக்கோணத்தைக் கைகாட்டிவிட்டு அப்படியே ஒதுங்கிவிட்டார்கள். 1949-ம் ஆண்டு ஜனவரி 17 அன்று பெர்முடாவிலிருந்து ஜமைக்காவுக்கு கிளம்பிய ஸ்டார் ஏரியல் விமானம் கட்டுப்பாட்டு அறையின் அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது. விமானத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற கடைசிச் செய்திகளும் சாதாரணமானவை. தேடுதலைக் கைவிட்ட பிறகு 1998ல் ஆண்டிஸின் மலைகளில் காணாமல் போனதற்கான சாத்தியக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அது ஸ்டார் ஏரியல் விமானம்தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லாததால் இப்போது வரை கிடப்பிலேயே கிடக்கிறது விமானமும் அதுசார்ந்த கோப்புகளும். 1962-ம் ஆண்டு அமெரிக்க ராணுவ விமானம் ப்ளையிங் டைகர் லைன் விமானம் 739 மாயமானது. இந்த விமானமானது மேற்கு பசிபிக் பெருங்கடலின் வழியே செல்லும்போது திடீரென்று மாயமாகிவிட்டது. விமானத்தில் 93 அமெரிக்க போர் வீரர்கள் மற்றும் வியட்நாமைச் சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் 107 பேர் பயணித்தனர். விமானம்குறித்த தகவலும் பயணிகள்குறித்த தகவலும் இப்போது வரை தேடப்படும் பட்டியலில்தான் இருக்கிறது. விமானம் வெடித்திருக்குமோ என்று பார்த்தால், அதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. விமானத்தைத் தேடுவதை கைவிட்டு மாமாங்கம் ஆகிறது. ஏர் பிரான்ஸ் விமானம் 447 விமானம் கடந்த 2009-ம் ஆண்டு 228 பேருடன் பிரேசில் வான்வெளியில் இருந்து, செனகல் வான் எல்லைக்குள் நுழையும்போது, கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்த அனைத்துத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. இன்று வரை என்ன நடந்தது ஏன் நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தீவிர விசாரணைக்குப் பிறகு, அந்த விமானம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும்போது வெடித்திருக்கும் என்று யூகித்து அப்படியே விட்டுவிட்டார்கள். 228 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் கழித்து அதன் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அது விபத்தில் வெடித்துச் சிதறியது உறுதியானது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி அன்று 00:41 மணியளவில் 239 பயணிகளுடன் போயிங் 777- 200 MH 370 விமானம் புறப்பட்டது. தகவல்களின்படி அதிகாலை 01:22 அல்லது 2.40 மணியளவில் தாய்லாந்து வளைகுடாவைக் கடக்கும்போது இவ்விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. பிரேக்கிங் செய்திகள் அலற மலேசிய சீன நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியது. விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற நோக்கில் இரு நாடுகளும் புலன் விசாரணையில் இறங்கின. உலகம் முழுவதிலும் பிரார்த்தனைகள் தொடர்ந்துகொண்டே இருந்தது. விமானம் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காத இரண்டொரு நாளில் உலக நாடுகளின் உதவியை நாடியது மலேசிய அரசு. உலகம் முழுவதிலும் இருந்து 25 நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்கள் உதவியுடன் தேடியும் ஒரு துப்பு கூடக் கிடைக்காமல் போனது. கடல் மார்க்கம் ஆகாய மார்க்கம் என இந்தியப் பெருங்கடலில் ஆரம்பித்து ஆஸ்திரேலிய கடல் பகுதி வரை சல்லடைப் போட்டு தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காமல் போன பரிதாப விமானம் போயிங் 777. இப்போது வரை விமானத்தின் பாகங்கள் அங்கே கிடைத்தது இங்கே கிடைத்தது என உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது. விமானம் என்ன ஆனது என்றுதான் இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது 2016 ஜூன் 21-ம் தேதி 29 பேருடன் தாம்பரத்தில் இருந்து அந்தமான் கிளம்பிய ராணுவ விமானம் நடுவானில் காணாமல் போனது. தகவல் கிடைத்த நொடியில் இருந்து ஆறு கப்பல்கள் பதினைந்து விமானங்கள் எனப் பல இடங்களில் தேடியும் விமானத்தின் சிறிய பகுதிகூட இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை. பயணம் செய்த 29 பேரும் இறந்துவிட்டதாக அரசு அறிவித்திருக்கிறது. பெரும்பாலான விமானங்கள் இயந்திரக் கோளாறுகளால் விபத்துக்குள்ளாகின்றன. சில விபத்துகள் வானிலை மாறுவதால் நடந்திருக்கின்றன. சில விமானங்கள் பறவை மோதுவதால் நிகழ்கின்றன. ஆனால் காணாமல் போன விமானங்கள் எப்படி நடந்தன என்கிற எந்த எந்தக் குறிப்பையும் கொடுக்காமல் காணாமல் போயிருக்கின்றன. விமானம் விபத்தில் சிக்கினால் அந்த விமான விபத்துக்குக் காரணம் என்ன என்பதைக் கறுப்புப் பெட்டியை வைத்துக் கண்டறிந்துவிடலாம். விமானி உரையாடலில் தொடங்கி விமானத்தின் அனைத்துத் தகவல்களையும் சேமித்து வைக்கும் கறுப்புப் பெட்டியை விமானத்தின் வால் பகுதியில் பொருத்தி இருப்பார்கள். எளிதில் பாதிக்கப்படாத வண்ணம் கறுப்புப் பெட்டி வடிவமைக்கப்பட்டிருக்கும். விமானம் செயல் இழந்தாலும் முப்பது நாள்களுக்கு சிக்கனல்களை வழங்கிக்கொண்டே இருக்கும். 2012 டிகிரி வெப்பத்தையும், 1000 டன் எடையையும் தாங்கும் விதமாகக் கறுப்பு பெட்டிகள் இருக்கும். எப்படி இருந்தாலும் மனிதனால் தயாரிக்கப்பட்ட சில தொழில்நுட்பங்கள் எல்லாக் காலங்களிலும் உதவியாய் இருக்கும் எனச் சொல்லிவிட முடியாது. மேற்கூறிய விமான விபத்துகளில் மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியைக் கூட இப்போதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் தொழில் நுட்ப வளர்ச்சியின் முரண். இந்த எல்லா விமானங்களும் மாயமானதற்கான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், காரணம் தெரிந்தவர் யாரும் உயிரோடு இல்லை. http://www.vikatan.com