Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. முருங்கை கீரையின் 5 மகத்துவங்கள் அ-அ+ முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. * மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை. * ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். * குழந்தையின்மைப் பிரச்சனைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. * முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. * முருங்கைக்கீரையின் சாறு இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது. குறிப்பு: மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு சிறப்பு. https://www.maalaimalar.com மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு அ-அ+ பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. பழைய சோறு உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. பழைய சோறு... தமிழர்களின் பாரம்பரிய உணவு. கஞ்சி உணவு அரிசிச் சோறும் தண்ணியும் கலந்த ஒரு கலவை. கஞ்சியில் உள்ள நீரை மட்டும் காலையில் அருந்துவார்கள். இதை நீராகாரம் என்பார்கள். பழைய கஞ்சியை நீராகாரம், பழங்கஞ்சி, பழந்தண்ணி, புளிச்ச கஞ்சி, பழஞ்சோறு, பழையது, கஞ்சித்தண்ணி என்பார்கள். பழைய சோற்றில் வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த உணவில் உள்ள நல்ல பாக்டீரியா உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும். நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த இந்த உணவு செரிமானக்கோளாறுகளைப் போக்கி செரிமான மண்டலம் சிறப்பாகச் செயல்பட உதவும். நீண்டநாள் இளமையுடன் இருக்கவும், முதுமை ஏற்படாமல் தடுக்கவும், எலும்புகளை வலிமைப்படுத்தவும், உடல் சூடு ஏற்படாமல் தடுக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை நீக்கவும், சோர்வு நீக்கி சுறுசுறுப்பு தரவும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும், வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கவும், வாதம், பித்தக் கோளாறுகளில் இருந்து விடுதலை தரவும் உதவக்கூடியது பழைய சோறு. சத்துகள் நிறைந்த, தாது உப்புகள் நிறைந்த பழைய சோற்றுக்கு சம்பா அரிசி ஏற்றது. அதிலும் கைக்குத்தல் அரிசி மிகவும் சிறப்பு. முதல் நாள் வடித்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து மறுநாள் உண்ணக்கூடியதே பழைய சோறு. முதல் நாள் சமைத்த உணவில் நீர் ஊற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம் சேரும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளிக்கொடுக்கும். பழைய சோற்றைச் சாப்பிட்டு வந்தால் எந்தவிதக் காய்ச்சல்களும் நம்மை நெருங்காது. கோடை காலத்தில் கண் நோய்கள், அம்மை, மஞ்சள் காமாலை மற்றும் பல நோய்கள் பாதிக்காமல் இருக்க பழைய சோறு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. நோய்கள் வரும்முன் காக்க சிறந்த உணவு. அரிசி சோறு மட்டுமல்ல கேழ்வரகு, கம்பு போன்றவற்றை இடித்து மாவாக்கி காலையில் ஊற வைத்து மாலையில் நீர் விட்டுக் கரைத்து உப்பு சேர்த்துக் காய்ச்ச வேண்டும். முதல்நாள் காய்ச்சி வைத்த மாவை மறுநாள் காலை எடுத்து தண்ணீர் அல்லது மோர் சேர்த்துக் கரைத்து துவையல், ஊறுகாய் சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் ஆற வைத்தும் குளிர்காலத்தில் சூடாகவும் சாப்பிடலாம். மண்பானையில் செய்து வைத்துக் கொண்டால் நான்கு நாள் வரை கூட இதைப் பயன்படுத்தலாம். https://www.maalaimalar.com/
  2. வெந்தயக்குழம்பு... தனி ருசி! அ+ அ- எந்த வேலையையும் ஈஸியா செய்றதுக்கு வழி என்னன்னு தெரியுமா என்று அம்மா அடிக்கடி கேட்பார். அந்த வழி. அந்த வேலையை ரசித்து ரசித்துச் செய்யவேண்டும் என்பார். சமையல் என்பதும் கலையே! அற்புதமானதொரு வேலைதான்! இந்த வேலையை எல்லா வீட்டுச் சமையலறையிலும் அம்மாக்களோ, மனைவிமார்களோ, சகோதரிகளோ நமக்காக, ரசித்து ரசித்து, ஆத்மார்த்தமாகச் சமைப்பார்கள். அப்படி முழுஈடுபாட்டுடன் செய்தால், சமைப்பது எளிது. பொதுவாகவே இதில் இன்னும் எளிதானது... வெந்தயக்குழம்பு! குழம்பு, காரக்குழம்பு, வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என்றெல்லாம் பண்ணுவார்கள். இந்த வெந்தயக்குழம்பு, எல்லா வீடுகளிலும் பண்ணுவதில்லை. ஏன் இப்படி வெந்தயத்தை விரோத மனப்பான்மையுடன் பார்க்கிறார்கள்? உண்மையில், வெந்தயக்குழம்பு எளிமையானது. சுவையானது. உடலையும் குளிர்ச்சிப்படுத்தக்கூடியது. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள மரகதம் பாட்டி, ‘வெந்தயக்குழம்பு பிரமாதம். பேச்சிலர்ஸ் கூட ஈஸியாப் பண்ணி இறக்கிடலாம்’ என்று விளக்கினார். என்னென்ன தேவை? சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு பூண்டு - எட்டு அல்லது பத்து பல் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் அல்லது ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 டீஸ்பூன் மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன் புளி - ஒரு கோலிக்குண்டு அளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி - சிறிதளவு இப்படித்தான் செய்யணும்! முதலில் புளியை நன்றாக ஊறவைத்து கரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அந்தச் சக்கையை நீக்கிவிடுங்கள். இதையடுத்து வெந்தயத்தை வெறுமனே வாணலியில் வறுத்து நைசாக பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் நன்றாக எண்ணெய் காய வைத்து தாளிக்கும் பொருட்களை அதில் இட்டு, நன்றாகத் தாளித்துக்கொள்ளவேண்டும். சின்ன வெங்காயத்தை உரித்து ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள். அந்த வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து பொன்னிறமாக வரும்வரை நன்றாக வதக்குங்கள். பிறகு, புளித்தண்ணீர் சேர்க்கவும். மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி , மல்லிப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து போதுமான நீர் விட்டு கொதிக்கவிடுங்கள். குழம்பு எண்ணெய் பிரிந்து வரும் போது வெந்தயப்பொடி சேர்த்து நன்றாகக் கிளறுங்கள். அப்புறம் என்ன... ஒருவித புதிய சுவையுடன் வெந்தயக்குழம்பு தயாராகிவிட்டது. நீங்கள் சாப்பிடவேண்டியதுதான் பாக்கி! சுவைக்கும் சுவையாச்சு. உடம்பின் உஷ்ணத்தையும் தணிக்கவும் செய்யும். சட்டுன்னு செஞ்சு, பட்டுன்னு இறக்கிடலாம்... வெந்தயக்குழம்பு! https://www.kamadenu.in/news/cooking/3897-vendhyakuzhambu.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category
  3. தயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய் அ-அ+ வெங்காய ஊறுகாய் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று இந்த ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - பத்து, புளி - எலுமிச்சை அளவு, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, பெருங்காயம் - தேவையான அளவு, வெல்லம் - நெல்லிக்காய் அளவு, கடுகு - அரை டீஸ்பூன். செய்முறை : வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். கால் டீஸ்பூன் கடுகை வெறும் கடாயில் வறுத்து பொடித்து கொள்ளவும். மிக்ஸியில் காய்ந்த மிளகாய், ஊற வைத்த புளி, உப்பு ஆகியவற்றை போட்டு விழுதாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கால் டீஸ்பூன் கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். ஊறுகாய் அடிபிடிக்காமல் அடிக்கடி கரண்டியால் கிளறிக்கொள்ளவும். ஊறுகாய் சுண்ட சுருள வதங்கி எண்ணெய் பிரிந்து வெங்காயம் நல்ல மணம் வந்தவுடன் வறுத்து பொடித்த கடுகை போட்டு ஊறுகாயில் கலந்து ஆறிய பின் ஊறுகாயை காற்று புகாத டப்பாவில் வைக்கவும். சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி. குறிப்பு - சின்ன வெங்காயத்தை அரைத்து சேர்க்கலாம். https://www.maalaimalar.com
  4. வாழை இலை ஃபிஷ் ஃப்ரை என்னென்ன தேவை? மீனை பொரிக்க... நெய் மீன் அல்லது வஞ்ஜர மீன் - 200 கிராம், லெமன் ஜூஸ் - சிறிது, மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு, சோம்புத்தூள், மஞ்சள் தூள் - தலா 1/4 டீஸ்பூன், பொரிக்க எண்ணெய் - தேவைக்கு. கிரேவி செய்ய... பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1/2 கப், டொமேட்டோ சாஸ் - 1/4 கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 2½ டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - சிறிது, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. வாழை இலையில் வைத்து மடிக்க... பெரிய வாழை இலை - 1, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2, இஞ்சி பூண்டு - 2 டீஸ்பூன், எண்ணெய் - சிறிது. எப்படிச் செய்வது? மீன் பொரிக்க கொடுத்த பொருட்களை கலந்து மீனில் பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு எண்ணெயில் பொறித்தெடுக்கவும். மொறு மொறுவென்று பொரிக்கத் தேவையில்லை. கிரேவிக்கு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, வெந்தயம் தாளித்து இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி டொமேட்டோ சாஸ், உப்பு, மிளகாய்த்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும். வாழை இலையை தீயில் வாட்டிக் கொள்ளவும். பின் இலையின் மேல் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மற்றும் கிரேவியை வைத்து அதன் மேல் மீனை வைத்து மீனின் மேல் கிரேவி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு வைத்து இலையை நன்றாக மடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வாழ இலையுடன் கூடிய மீனை வைத்து மூடி போட்டு இருபுறமும் பிரவுன் கலர் வரும் வரை மிதமான தீயில் சுட்டு எடுக்கவும். http://www.kungumam.co.in/
  5. சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட் அ-அ+ வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு காய்கறிகள் சேர்த்து கொடுத்தால் வைட்டமினும் நார்ச்சத்தும் கிடைக்கும். இந்த ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முட்டை - 3, துருவிய கேரட், கோஸ், பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்ந்த கலவை - கால் கப், கொத்தமல்லி - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், சீரகத்தூள் -கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை பொடி - 2 டீஸ்பூன், பால் - 2 டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை : கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், மிளகுத்தூள், சீரகத்துள், முட்டை, பொட்டுக்கடலை, பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கரைத்த மாவை சிறிய ஆம்லெட்டுகளாக ஊற்றி சுற்றிலும் நெய் விடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு நன்றாக வேக விட்டு எடுக்கவும். சூப்பரான முட்டை வெஜிடபிள் ஆம்லெட் ரெடி. வெறும் ஆம்லெட் மட்டும் சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி காய்கறிகள் கலந்து செய்து கொடுப்பதால் வைட்டமினும் நார்ச்சத்தும் அதிகமாக கிடைக்கும். சுவையும் வித்தியாசமாக இருக்கும். https://www.maalaimalar.com
  6. முருங்கைக் கீரையில் இவ்வளவு மருத்துவ பலன்களா! ஓர் அவுன்ஸ் முருங்கைக்கீரையின் சாற்றில் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து படுக்கைக்குப் போகும் முன் சாப்பிட வயிற்றிலுள்ள எல்லாவிதமான பூச்சிகளையும் வெளியேற்றும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இக்கீரையின் சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். இது இரத்தத்தோடு சேரும் கொழுப்பையும் குறைக்கும். இக்கீரையின் சாற்றோடு தேனும், சுண்ணாம்பும் சேர்த்துத் தொண்டையில் தடவ, குரல்கம்மல், இருமல், நாவறட்சி நீங்கும். இலையை மட்டும் சுத்தமாக அரைத்துப் பிழிந்து இச்சாற்றை கண்களில் விட்டுக்கொண்டால் மெட்ராஸ் ஐ என்று சொல்லும் கண்வலி குணமாகும். குழந்தை பிறந்து பால்சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைப் பிஞ்சை, மிளகுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும். முருங்கைக்கீரையின் சாற்றுடன், உப்பு மற்றும் வசம்புத் தூளையும் சேர்த்து குழைத்து வயிற்றின் மேல் பற்றாகப் போட வயிற்று வலியுடன் கூடிய உப்பிசம் சரியாகும். முருங்கைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான கண்வலி, கண்எரிச்சல், கண்களிலிருந்து நீர்வடிதல் போன்றவை குணமாகும். பார்வை மங்கல் மற்றும் மாலைக்கண் நோய் குறையிலிருந்தும் நிவாரணம் பெறலாம். முருங்கைக்கீரையை ஆய்ந்து மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் கைக்கால் அசதி, உடல்வலி நீங்கும். சிறுநீரைப் பெருக்கும். உதிரப்போக்கைக் கட்டுப்படுத்த முருங்கைப்பிஞ்சை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். http://www.dinamani.com
  7. அதென்ன புடலங்காய் விதை சட்னி? ருசிக்கலாமா? தேவையான பொருள்கள்: புடலங்காய் உள்ளே உள்ள விதை - 2 கிண்ணம் வெங்காயம் பெரியது - 2 தக்காளி - 2 பூண்டு - 3 பல் காய்ந்த மிளகாய் - 4 உப்பு - தேவைக்கேற்ப தாளிக்க: கடுகு - 1 தேக்கரண்டி வெள்ளை உளுந்து - 1தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது செய்முறை: முதலில் புடலங்காயை இரண்டாக கீறி உள்ளே உள்ள பஞ்சு போன்று உள்ளதை தனியே எடுத்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், புடலங்காய் விதை இவைகளை நன்கு வதக்கவும். ஆறிய பின் மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து அரைத்த விழுதைச் சேர்க்கவும். நன்கு கொதித்த பின் உப்பு சேர்த்து இறக்கவும். சுவையான புடலங்காய் விதை சட்னி ரெடி. http://www.dinamani.com
  8. கீரை, வெஜிடபிள் சப்பாத்தி... யம்மி ப்ளஸ் ஹெல்த்தி! தினம்தோறும் நம் சமையலில் முடிந்த வரை காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்க்க முயல்கிறோம். இருப்பினும் குழந்தைகளைத் தினமும் கீரை மற்றும் காய்கறிகள் சாப்பிட வைப்பது அவ்வளவு எளிதல்ல. இவற்றைச் சப்பாத்தியுடன் சேர்த்துக் கொடுப்பதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் மனதைக் கவர்வதோடு மட்டுமல்லாமல், உடம்புக்கும் ஆரோக்கியத்தை அளிக்க முடியும். கோதுமையுடன் காய்கறிகள், கீரைகள், சோயா, ஓட்ஸ் சேர்த்துச் செய்யும் சப்பாத்திகள் உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, நீரிழிவு உள்ளவர்களுக்குச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டினுள் வைக்கவும் உதவுகின்றன. மேலும், வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தவை. இவற்றில் புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து இருப்பதுடன் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன சென்ற இதழ் `கிச்சன் பேஸிக்ஸ்’ பகுதியில் நாம் கோதுமையில் இருந்து பேஸிக் மாவு தயாரித்து அதை உபயோகித்து விதவிதமான சப்பாத்தி மற்றும் ரொட்டிகள் தயாரிப்பது எப்படி என்று பார்த்தோம். இந்த இதழில் கீரைகள், காய்கறிகளைச் சேர்த்து சூப்பர் சுவையுடன் பல்வேறு வகையிலான சப்பாத்தி மற்றும் தேப்லாக்களை எளிதாகத் தயாரிப்பது பற்றி அறிவோம். நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வோம். மேத்தி தேப்லா, சோயா - மேத்தி தேப்லா, ஓட்ஸ் - மேத்தி தேப்லா: வெல்லத்தைக் கால் கப் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ள வும். வெந்தயக்கீரையை ஆய்ந்து, நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். மூலி தேப்லா: துருவிய முள்ளங்கியில் இருந்து தண்ணீரைப் பிழிந்துகொள்ளவும். பிழிந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும். மூலி தேப்லா வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம். தூதி தேப்லா: துருவிய சுரைக்காயுடன் உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக்கொள்ளவும். முட்டைகோஸ் தேப்லா: முட்டைகோஸை கேரட் துருவியில் பொடியாகத் துருவிக் கொள்ளவும். பப்பாளிக்காய் தேப்லா: தோல் மற்றும் உள்ளிருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, துருவிக்கொள்ளவும். கத்து (Kaddu) பாலக் தேப்லா: துருவிய பறங்கிக்காய், பாலக் கீரையை அரிந்து நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கரேலா தேப்லா: பாகற்காய்த் தோலைத் துருவி, உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக்கொள்ளவும். பத்து நிமிடங்கள் கழித்துப் பாகற்காயில் இருந்துவரும் தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். பிழிந்த தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும். இப்படிச் செய்வதன் மூலம் பாகற்காயில் இருக்கும் கசப்பு போய்விடும். வெங்காயச் சப்பாத்தி: பொடியாக நறுக்கிய வெங்காயத்தை உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக்கொள்ளவும். கேரட் வெங்காயம் சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம். சோயா தால் சப்பாத்தி: பருப்பை மலர வேக வைத்துக்கொள்ளவும். கீரை சப்பாத்தி : ஏதாவது ஒரு வகை கீரையை உபயோகித்து சப்பாத்தி செய்யவும். கீரையை நறுக்கி, நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அரைக்கீரை / சிறுகீரை / முளைக்கீரை / வல்லாரைக்கீரை / மணத்தக்காளிக்கீரை: நறுக்கிய கீரையை மாவு மற்றும் இதர பொருள்களுடன் சேர்க்கவும். பசலைக்கீரை / முடக்கத்தான் கீரை/ பொன்னாங்கண்ணிக்கீரை/ அகத்திக்கீரை / முருங்கைக்கீரை / தூதுவளை / முள்ளங்கிக்கீரை: வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிச் சற்று சூடு ஏறியதும் நறுக்கிவைத்துள்ள கீரையைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சீரகத்தூள், ஓமம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துச் சற்று வதக்கி இறக்கி ஆறவிடவும். பொன்னாங்கண்ணி கீரை சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம். சோயா - புதினா - சதகுப்பி சப்பாத்தி, ஓட்ஸ் - சதகுப்பி சப்பாத்தி: சதகுப்பி கீரையை ஆய்ந்து நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலி யில் சிறிது எண்ணெய் ஊற்றி, சற்றுச் சூடு ஏறியதும் நறுக்கிவைத்துள்ள கீரையைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் சீரகத்தூள், ஓமம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, சற்று வதக்கி இறக்கி ஆறவிடவும். ஓட்ஸ் சதகுப்பி சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம். ஆலு சப்பாத்தி: உருளைக் கிழங்கைத் தோல் உரித்து, உப்பு சேர்த்த தண்ணீரில் குழைய வேகவைத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம். பீட்ரூட் சப்பாத்தி: துருவிய பீட்ரூட் மற்றும் வெங்காயத்துடன் பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசிறி வைத்துக் கொள்ளவும். கான்டினென்டல் சப்பாத்தி வீடியோவைக் உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்து காணலாம். கான்டினென்டல் சப்பாத்தி: காய்கறிகளை நன்கு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சோயா - மேத்தி - கார்லிக் நான் / கார்லிக் நான்: வெந்தயக்கீரையை ஆய்ந்து, நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மாவைப் பிசையும்போது பூண்டு சேர்க்க வேண்டாம். ஓர் உருண்டை கோதுமை மாவைச் சற்று கனமான நாண்களாக இடவும். ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டை நாண் மேல் தூவி லேசாக அழுத்தி விடவும். நாணின் பின்புறம் தண்ணீர் தடவி, ஈரமான பக்கத்தை நன்கு சூடான தோசைக்கல்லில் போட்டு லேசாக அழுத்தி வேக வைக்கவும். மேல்பக்கம் லேசாக வெந்ததும் தவாவைத் திருப்பி ரொட்டியை நேரடியாக தீயில் காட்டி வேக வைக்கவும். மீண்டும் தவாவை அடுப்பில் வைத்து கீழ் பாகத்தை நான்கு வேக வைத்து பரிமாறவும். பட்டாணி சப்பாத்தி: வேகவைத்த பட்டாணி மற்றும் பச்சை மிளகாயைக் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். பொங்கல் சப்பாத்தி: பொங்கலை நன்கு மசித்து வைத்துக்கொள்ளவும். பருப்புக்கீரை சப்பாத்தி: மாவில் தண்ணீர் தேவைப்பட்டால் மட்டுமே ஊற்றவும். உப்புமா சப்பாத்தி: உப்புமாவை நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக்கிழங்கு சப்பாத்தி: சர்க்கரைவள்ளிக் கிழங்கைத் தோல் உரித்து, பச்சை மிளகாய், உப்பு சேர்த்த தண்ணீரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும். பனீர் சப்பாத்தி: திரண்ட பாலை வடிகட்டி அரை மணி நேரம் துணியில் கட்டித் தொங்கவிடவும். வடிகட்டிய தண்ணீரைத் தனியாக எடுத்துவைத்து, மாவு பிசையும்போது இந்தத் தண்ணீரைப் பயன்படுத்தவும். செய்முறை: கோதுமை மாவில் உப்பு, கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்துப் பிசறிக்கொள்ளவும். அதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியான மாவாகப் பிசைந்து அரை மணி நேரம் மூடிவைத்து ஊறவிடவும். பிறகு, சம அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஓர் உருண்டையை எடுத்து மைதா அல்லது கோதுமை மாவில் தொட்டுக்கொண்டு ஆறு அங்குலம் அகலம் உள்ள மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு லேசாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு சிறிது எண்ணெய்விடவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் சூடாகப் பரிமாறவும். ஸ்கூல் மற்றும் ஆபீஸ் லஞ்ச் பாக்ஸிலும் கொடுத்துவிடலாம். பொதுவாக இந்த வகைச் சப்பாத்தி மற்றும் தேப்லாவுக்குத் தனியாக சைடிஷ் எதுவும் தேவைப்படுவதில்லை. தயிர், தயிர்ப் பச்சடி, மாங்காய் சுண்டா, நெல்லிக்காய் சுண்டா, மாங்காய்த் தொக்கு, தக்காளித் தொக்கு இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் பரிமாறலாம். எண்ணெய், உப்பு - தேவையான அளவு தேப்லா வகைகளைப் பொதுவாக 15 நாள்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். தேவையானபோது தோசைக் கல்லில் சூடுபடுத்திச் சாப்பிடலாம். குறிப்பு: உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கும் காய்கறிகள் தண்ணீர்விட்டுக்கொள்ளும். இந்தத் தண்ணீருடன் காய்கறிகளைக் கோதுமை மாவில் சேர்க்கவும். மேலும் தண்ணீர் சேர்ப்பதற்கு முன்னர், மாவில் சேர்த்திருக்கும் அனைத்துப் பொருள்களையும் நன்கு அழுத்திப் பிசிறவும். இவ்வாறு செய்யும்போது காய்கறி மற்றும் கீரைகளில் இருந்து மேலும் தண்ணீர் கசிந்து வரும் வாய்ப்பு உள்ளது. பிறகு, தேவைப்படும் தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கெட்டியான மாவாகப் பிசையவும். அரை மணி நேரம் ஊறிய பிறகு, மாவில் சேர்த்திருக்கும் காய்கறிகள், கீரைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் கசியலாம். அதனால் கெட்டியாகப் பிசைந்து வைத்து இருக்கும் மாவு சற்றுத் தளர்த்தியாகி இருக்கும். கையில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு மீண்டும் மாவைப் பிசைந்து உபயோகிக்கவும். சப்பாத்தி, பராத்தா மற்றும் தேப்லாவைப் பதப்படுத்தும் முறை: ஓர் உருண்டையை எடுத்து மைதா அல்லது கோதுமை மாவில் தொட்டுக்கொண்டு ஆறு அங்குலம் அகலம் உள்ள மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டவும். சூடான தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு லேசாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு சிறிதளவு எண்ணெய்விட்டு லேசாக வேகவைக்கவும். இரண்டு புறமும் பாதி வெந்ததும் எடுத்து ஆறவைக்கவும். பட்டர் பேப்பரை ஆறு அங்குலம் அகலம் உள்ள சதுரத் துண்டுகளாகக் கிழித்து வைத்துக்கொள்ளவும். ஆறிய சப்பாத்தி ஒன்று பட்டர் பேப்பர் ஒன்றும் என மாறி மாறி அடுக்கவும். ஒரு வேளை சாப்பாட்டுக்குத் தேவையான அளவு சப்பாத்தி அடுக்கை ஒரு `ஜிப்லாக்' பையில் வைத்து, காற்றை நன்கு வெளியே தள்ளிவிட்டு, பையைச் சீல் செய்யவும். பையின் மேல், உள்ளே வைத்திருக்கும் சப்பாத்தி, பராத்தா, தேப்லாவின் பெயர் மற்றும் அதைச் செய்த தினம் ஆகியவற்றை எழுதவும். இப்போது இந்தப் பையை ஃப்ரீஸ் செய்யவும். இப்படி ஃப்ரீஸ் செய்த சப்பாத்தி, தேப்லா, பராத்தாக்களை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். ஃப்ரீஸ் செய்த சப்பாத்தி, தேப்லா, பராத்தாக்களைத் தேவையானபோது எடுத்து பத்து நிமிடங்கள் வெளியே வைக்கவும். பட்டர் பேப்பரை எடுத்துவிட்டுச் சூடான தோசைக்கல்லில் போட்டு வெந்தவுடன் திருப்பிப் போட்டு வேகவைக்கவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் பரிமாறவும். https://www.vikatan.com
  9. நாரத்தங்காய் ஊறுகாய் செய்வது எப்படி? அ-அ+ வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. இன்று நாரத்தங்காய் வைத்து சுவையான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நாரத்தங்காய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெந்தயம் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை : நாரத்தங்காயை நன்றாக கழுவிய துடைத்த பின்னர் துண்டுகளாக வெட்டி விதைகளை நீக்கி விடவும். வெட்டிய நாரத்தங்காய் துண்டுகளை ஜாடியில் போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். இதை பத்து நாள்கள் வரை தினமும் கிளறிவிடவும். வெறும் வாணலியில் வெந்தயம், காய்ந்த மிளகாயைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். நன்கு ஊறிய நார்த்தங்காயுடன் அரைத்த பொடியைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து ஊறுகாயுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். குறிப்பு : நாரத்தங்காய் ஊறுவதற்கு 10 நாள்களாகும். தேவைப்படும்போது தாளித்துக்கொண்டால் ஊறுகாய் ஃப்ரெஷ்ஷாகவும், மேலும் சுவையாகவும் இருக்கும். https://www.maalaimalar.com/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.