நவீனன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  44,702
 • Joined

 • Last visited

 • Days Won

  295

நவீனன் last won the day on April 29

நவீனன் had the most liked content!

Community Reputation

5,447 நட்சத்திரம்

About நவீனன்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  Germany
 • Interests
  cricket,internet,

Recent Profile Visitors

 1. 100-ஆவது நாள் பேரணியில் ஊடகங்களை கடுமையாக சாடிய டிரம்ப் அமெரிக்க அதிபராக தான்பதவியேற்ற 100-ஆவது நாளை குறிக்கும் வகையில் நடந்த பேரணியில் ஊடகங்கள் மீது கடுமையான தாக்குதலை டொனால்ட் டிரம்ப் தொடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஊடகங்கள் மீது டிரம்ப் சாடல் பென்சில்வேனியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய டிரம்ப், ஒன்றன் பின் ஒன்றாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாகவும், தன்மீதான விமர்சனங்களை எவ்வித தொடர்பும், புரிதலும் இல்லாத சில பத்திரிக்கையாளர்கள் எழுதும் பொய்யான செய்திகள் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அதிபர் அலுவலகத்தின் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுடனான இரவு உணவு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்க்க டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னர், கடந்த 1981-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகன் இந்த விருந்தில் பங்கேற்கவில்லை. http://www.bbc.com/tamil/india-39761529
 2. மீண்டும் பரபரக்கும் திருகோணமலை - கே.சஞ்சயன் கடந்த பல ஆண்டுகளாகவே இலங்கை அரசியலில் துறைமுகங்கள் பற்றிய சர்ச்சைகள் கூடுதல் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் காலத்தில், கொழும்பு துறைமுக நகரச் சர்ச்சை தீவிரமாக இருந்தது. அதற்குப் பின்னர் கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்ட பயணங்களால் சர்ச்சைகள் எழுந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், துறைமுக நகரத் திட்டத்தை புதிய அரசாங்கம் இடைநிறுத்தியதாலும், அந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் விடயத்தில் நீடித்த இழுபறிகளாலும் சர்ச்சைகள் எழுந்திருந்தன. அதற்குப் பின்னர், ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் சர்ச்சைகளுக்கு இன்னமும் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில் இப்போது திருகோணமலை துறைமுகம் தொடர்பான சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன. திருகோணமலை பற்றிய சர்ச்சைகள் இப்போது எழுந்திருப்பதற்குத் தனியே துறைமுகம் மட்டும் காரணமல்ல. அதனை அண்டியதாக சீனக்குடாவில் அமைந்துள்ள- பிரித்தானியர்களால் நிறுவப்பட்ட 99 பாரிய எண்ணெய்க் குதங்கள் தொடர்பான விவகாரமும் தான், இப்போது ஏற்பட்டுள்ள சூழலுக்கு இன்னொரு காரணம். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் வழங்கி அபிவிருத்தி செய்யவுள்ளதைப் போலவே, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவிடம் வழங்கி அல்லது அதனுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்று அரசாங்கத்திடம் இருக்கிறது. இதன் மூலம் ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவதால் ஏற்பட்டுள்ள சமநிலை மாற்றங்களை ஈடு செய்யலாம் என்று அரசாங்கம் கருதுகிறது. அடுத்து, சீனக்குடாவில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களை இந்தியாவுடன் இணைந்து, கூட்டு முயற்சியாக நிர்வகிக்கும் திட்டம் ஒன்றும் அரசாங்கத்திடம் இருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வாங்கிக் குவித்த கடன்களால் நாடு பொருளாதார ரீதியாக தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு, இதுபோன்ற வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை மாத்திரமே சாத்தியம் என்று அரசாங்கம் நம்பியிருக்கிறது. ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்க எடுக்கப்பட்ட முடிவும் சரி, திருகோணமலை விடயத்தில் இந்தியாவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளும் சரி, இதனை அடிப்படையாகக் கொண்டவை தான். இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுகளின் முக்கியமான கருப்பொருளாக இருந்தது திருகோணமலை தான். திருகோணமலை துறைமுகம் மற்றும் சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் இந்த இரண்டையும் இந்தியாவுடன் இணைந்து எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது குறித்தே பிரதான பேச்சுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தளவுக்கு முன்னேற்றங்களைப் பெறமுடியும் என்பது முக்கியமான வினாவாக இருக்கிறது. அதற்குக் காரணம், சீனாவுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு இருப்பதைப் போலவே, இந்தியாவுடன் திருகோணமலை தொடர்பான உடன்பாடுகளைச் செய்து கொள்வதற்கும் எதிர்ப்புகள் காணப்படுகின்றன. திருகோணமலை எண்ணெய்க் குதங்களை, இந்திய நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அந்தத் திட்டத்தைக் கைவிடக் கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தொடக்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தன. இதனால் நாடெங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அல்லோலகல்லோலப்பட்டன. ஒரு வழியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொழிற்சங்கங்களுடன் பேச்சுகளை நடத்தி, சீனக்குடா எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு விற்கப் போவதில்லை, என்ற உறுதிமொழியைக் கொடுத்த பின்னரே, போராட்டம் கைவிடப்பட்டது. அதற்காக இந்தத் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டு விட்டது என்று அர்த்தமில்லை. சீனக்குடாவில் உள்ள 99 எண்ணெய்க் குதங்களில் ஒருபகுதி, 2002 ஆம் ஆண்டு இந்தியாவின் ஐஓசி நிறுவனத்துக்கு 35 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஐஓசி நிறுவனம் 15 எண்ணெய்க் குதங்களை மாத்திரம் பயன்படுத்தி வருகிறது. எஞ்சியுள்ள 84 எண்ணெய்க் குதங்களையும் அபிவிருத்தி செய்து பயன்படுத்துவது தொடர்பாகவே இழுபறிகள் ஏற்பட்டுள்ளன. இதில் 10 எண்ணெய்க் குதங்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கி விட்டு, எஞ்சிய 74 குதங்களை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக அமைச்சர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரையில் தெரியவரவில்லை. எவ்வாறாயினும், புதுடெல்லியில் பேச்சுகளை நடத்தும் போது, தொழிற்சங்கங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட வேண்டாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி எச்சரித்திருந்தார் என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கத்தில், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கும் அரசாங்கம் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கவும், அதனைச் சமப்படுத்தும் வகையில் திருகோணமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரச்சினையைக் கிளப்பி விட்டிருந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அவரது தலைமையிலான கூட்டு எதிரணியினர், திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கூட, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்குத் தாரைவார்க்க அரசாங்கம் முற்படுவதாகவே குற்றம்சாட்டி வருகின்றன. திருகோணமலையில் சீனக்குடா எண்ணெய்க் குதங்கள் தொடர்பாகவும், துறைமுகம் தொடர்பாகவும் எப்படியாவது இந்தியாவுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் மே 12 ஆம் திகதி கொழும்புக்கு வரும் போது, இது தொடர்பான உடன்பாட்டைச் செய்யும் திட்டத்துடன் அரசாங்கம் இருக்கிறது. ஆனால், அமைச்சரவைப் பேச்சாளர் ஒப்பந்தங்கள் எதுவும் கைச்சாத்திடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று கூறியிருக்கின்றார். எனினும், இந்த உடன்பாட்டைச் செய்து கொள்வதில் இந்தியா எந்தளவுக்கு அக்கறையுடன், ஆர்வத்துடன் இருக்கிறது என்பது முதலாவது பிரச்சினை. அரசாங்கத்துக்கு உள்ளேயும், உள்நாட்டிலும் எழுந்திருக்கின்ற எதிர்ப்புகளை, நல்லாட்சி எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பது இரண்டாவது பிரச்சினை. திருகோணமலை என்பது இந்தியாவுக்கு முக்கியமானது. சீனக்குடா எண்ணெய்க் குதங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. ஏற்கெனவே தனது கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய்க் குதங்களின் பாதுகாப்புக் கருதி. திருகோணமலைத் துறைமுகத்தின் மீது வேறெந்த நாடும் கண் வைத்து விடக்கூடாது என்பதில் இந்தியா கவனமாக இருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த முதலாவது பயணத்தின் போது, வெளியிட்ட கூட்டறிக்கையில், திருகோணமலையை பிராந்தியத்தின் எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்கு இந்தியா உதவும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்குப் பின்னர், திருகோணமலையை பிராந்திய எண்ணெய்க் கேந்திரமாக மாற்றுவதற்குரிய எந்த நடவடிக்கையையும் இந்தியா மேற்கொண்டிருக்கவில்லை. அதுபோலத்தான், திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், இந்தியாவுக்கு நீண்டகாலப் பொருளாதார நலன்கள் கிடைக்காது என்பதால், அதிலும் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. பாகிஸ்தானில் குவடார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் சீனாவுக்குப் போட்டியாக, ஈரானின் சபஹார் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. ஆனாலும், கடல்கடந்த துறைமுகங்களில் சீனாவைப் போல பெருமளவில் நிதியைக் கொட்டுகின்ற வல்லமை இந்தியாவுக்கு இன்னமும் இல்லை என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டும். சீனாவுடன் போட்டியிடும் ஆர்வம் இருந்தாலும், வரையறுக்கப்பட்ட நிதி வளம் இந்தியாவுக்கு ஒரு தடையாகவே இருக்கிறது. இலங்கையின் துறைமுகங்களின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்பினாலும் கூட, அதற்காக பில்லியன் கணக்கான டொலர்களைக் கொட்டுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. இது இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையில் திட்டங்களை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களுக்கு முக்கியமானதொரு தடைக்கல்லாகும். அதுபோலவே, அரசாங்கத்துக்குள்ளேயும், திருகோணமலை தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டு அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது என்பதை, இதுபோன்ற தருணங்களில், காணப்படுகின்ற வேற்றுமைகளே அப்பட்டமாகவே வெளிப்படுத்தி விடுகின்றன. அரசாங்கத்துக்கு வெளியே உள்ள தரப்புகளும் திருகோணமலை விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றன. திருகோணமலை என்பது, ஹம்பாந்தோட்டையை விட முக்கியமானது. திருகோணமலை எப்போதுமே உணர்வு பூர்வமான இடமாக இருந்து வந்திருக்கிறது. அழிவுகள் நிறைந்த நான்காவது கட்ட ஈழப்போர் கூட திருகோணமலையில் தான் ஆரம்பிக்கப்பட்டது. எனவே, திருகோணமலையை முன்னிறுத்தி இந்தியாவுடன் உடன்பாடுகளைச் செய்து கொள்ளும் அரசாங்கத்தின் முயற்சிகள் எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/195742/ம-ண-ட-ம-பரபரக-க-ம-த-ர-க-ணமல-#sthash.f0EFWDmF.dpuf
 3. இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்.. 1. ஈழப்பிரியன் 2. nesen 3. suvy 4. நந்தன்
 4. நீங்கள் எழுதியபின்தான் நான் அறிந்து கொண்டேன் வெற்றிலையில் ஆண், பெண் என்று இருக்கு என்று. அது என்ன மாய் போட்டு பார்ப்பது?
 5. பிரபலமான கலை வேலைப்பாடுகளுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
 6. ஓட்டம்? ஜெ., பங்களா கொள்ளை; முக்கிய நபர் வெளிநாடு ஓட்டம்? கோடநாடுக்கு கூலிப்படையினரை அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் மரக்கடத்தல், 'மாபியா' கும்பலின் தலைவன், முன்கூட்டியே வெளிநாடுக்கு தப்பியோடியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., மீதான சொத்து குவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்து, கோர்ட்டில் சமர்ப்பித்த சொத்து பட்டியலில், வரிசை எண், 166ல் இடம் பெற்றிருந்தது, 900 ஏக்கர் பரப்புள்ள, கோடநாடு எஸ்டேட். ஜெ., மறைவுக்கு பின், இது யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த எஸ்டேட்டை விட, 99 அறைகள், 48 ஆயிரம் சதுர அடி பரப்பில், அங்கு பிரம்மாண்ட மாக கட்டப்பட்டுள்ள கோடநாடு பங்களாவே, தற்போது மர்ம தேசமாக மாறி யுள்ளது. ஜெ., மறைந்த பின், சசிகலா, இளவரசி, தினகரன் என, எல்லாரும் சிறைக்கு போய் விட்டதால், இது யாருடைய கட்டுப் பாட்டில் இருக்கிறது என்பதே, புரியாத புதிராக உள்ளது. இந்நிலையில் தான், கடந்த, 24ம் தேதி, கோடநாடு எஸ்டேட் காவலாளி, ஓம்பகதுார் மர்ம கும்பலால் கொல்லப்பட்டார்; மற்றொருவர், கடுமையாக தாக்கப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும், ஜெ.,யிடம், கார் டிரைவராக வேலை பார்த்த கனகராஜ், சேலம் அருகே விபத்தில் உயிரிழந்தார். தேடப்பட்டு வந்த சயான் என்பவர், கேரள மாநிலம், பாலக்காடு அருகே, நேற்று காலை யில், விபத்தில் படுகாயமடைந்தார். இவரது மனைவி, மகள் இறந்தனர்.இந்த தொடர் சம்பவங் களின் பின்னணியில், மன்னார்குடி குடும்பத்துடன் தொடர்பில் உள்ள,கேரளாவை பூர்வீகமாக கொண்ட நீலகிரியைச் சேர்ந்த, முக்கிய புள்ளி இருக்கலாம் என்ற சந்தேகம், போலீசுக்கு எழுந்துள்ளது. சம்பவத்துக்கு முன்பாகவே, அவர் துபாய் கிளம்பிச் சென்றிருப்பது சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. ஏனெனில், ஜெயலலிதா, சசிகலா, தற்போதுள்ள மேலாளர் ஆகியோர் தவிர, கோடநாடு பங்களாவை துல்லியமாக அறிந்த ஒரே நபர், அவர் தான். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட, 'ஜீவன்' உள்ள அந்த நபர், நீலகிரி மாவட்டம், கூடலுாரில் வசித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன், கூடலுார் வனப்பகுதியில், 'செக் ஷன் 17' நிலங்களில் உள்ள ஈட்டி மற்றும் தேக்கு மரங்களை வெட்டிக் கடத்தும், 'மாபியா'வாக வலம் வந்தார். 2008ல், ஜெ., பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் உதவியுடன், கோடநாட்டில் நுழைந்துள்ளார். மர வேலை செய்பவராக, ஜெ., மற்றும் சசிகலா வுக்கு அறிமுகமான அவர், கோடநாடு பங்களாவில், பர்னிச்சர் வேலைகளைச் செய்துள்ளார். நீலகிரி யில், கட்சியில் செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தார்.மன்னார்குடி குடும்பத்தினரிடம் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, கூடலுார் வனத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஈட்டி, தேக்கு மரங் களை வெட்டி கடத்தி, ஓவேலி என்ற ஊரில், மர அறுவை மில் நடத்தி வந்ததாக, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். அங்கிருந்து பர்னிச்சர்களாக மாற்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவந்துள்ளார்; கோவையிலும், ஒரு பர்னிச்சர் ஷோரூம் நடத்தி வருகிறார். இது குறித்து, போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: கோடநாடு பங்களாவின் அனைத்து ரகசியங்களை யும் அறிந்த நபரே, ஆட்களை வைத்து, பங்களாவில் இருந்த, 'ஏதோ' ஒன்றை கடத்தியிருக்க வாய்ப்புள் ளது. பங்களாவை துல்லியமாகத் தெரிந்துள்ளவர் என்பதோடு,கதவுகள் உட்பட மர வேலைகளையும் செய்தவர் என்பதால், அவரிடம் அந்த கதவு களுக்கான கூடுதல் சாவிகள் இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. காவலாளி கொல்லப்பட்ட அன்று, ஜெ., மற்றும் சசிகலா அறைகளிலிருந்து, 'ஏதாவது' கடத்தப்பட்டிருக்கலாம். இந்த விவகாரத்தில் தமக்கு தொடர்பில்லை என, வாதிட வசதியா கவே வெளிநாடு சென்றிருக்கலாம். அவர் திரும்பி வந்ததும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆவணங்களை அழிக்க முயற்சி? கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களாக, ஜெ., - சசிகலா இருவர் மட்டுமே இருந்தனர். இவர்களில், ஜெ., இறந்து விட்டதால், 'சசிகலா வுக்கு மட்டுமே எஸ்டேட் சொந்த மாகுமா' என்ற கேள்வி உள்ளது. ஆனால், ஜெ., இறப்பதற்கு முன், 'எஸ்டேட் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும், பொதுமக்களுக்கு செல்லும் வகையில், ஆவணத்தை தயார் செய்திருந்தார்' என்ற ஒரு தகவலும், நீலகிரி, அ.தி.மு.க., வட்டாரத்தில் பரவியுள்ளது. இதன் காரணமாக, அந்த ஆவணத்தை அழிப் பதற்கு நடந்த முயற்சியாக, இந்த சம்பவங்கள் இருக்கலாம் என்ற ஒரு யூகத்திலும், போலீஸ் விசாரணை தொடர்கிறது. - நமது சிறப்பு நிருபர் - http://www.dinamalar.com/news_detail.asp?id=1761497
 7. ஹரால்டு கிளேட்டன் யூரே நோபல் பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஹரால்டு கிளேட்டன் யூரே (Harold Clayton Urey) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * அமெரிக்காவின் இண்டியானா மாநிலத் தில் உள்ள வாக்கர்காட்டன் நகரில் (1893) பிறந்தார். சிறு விவசாயி, பள்ளி ஆசிரியர், மத போதகர் என பல பணிகளைக் கவனித்துவந்த தந்தை, இவருக்கு 6 வயதாக இருந்தபோது இறந்தார். * அதன்பிறகு, பாட்டி வீட்டில் வளர்ந்தார். அப்பா தன் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக காப்பீடு செய்து வைத்திருந்ததால் படிப்பு தடையின்றித் தொடர்ந்தது. பொறுப்பை உணர்ந்து படித்த இவர், கல்வியில் சிறந்து விளங்கினார். விவாதப் போட்டிகளில் கலந்துகொண்டார். சக மாணவர்கள் இவரை ‘பேராசிரியர்’ என்றுதான் அழைப்பார்கள். * மாண்டானா பல்கலைக்கழகத்தில விலங்கியலில் பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வெப்ப இயக்கவியல் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். * டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள நீல்ஸ்போர் இன்ஸ்டி டியூட்டில் ஃபெலோஷிப் பெற்றார். அணுக் கட்டுமானம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். பின்னர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆய்வு அசோசியேட்டாக இருந்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அசோசியேட் பேராசிரியராகப் பதவி ஏற்றார். * அங்கு ஆய்வுக் குழுவை உருவாக்கி ஆர்தர் ருவார்க்குடன் இணைந்து அணு, மூலக்கூறு, குவான்டம் குறித்த நூலை எழுதி வெளியிட்டார். அணுக்கருவியல் ஆராய்ச்சிகள் குறித்து ஆர்வம் கொண்டார். யுரேனியம் செறிவூட்டல் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஐசோடோப்களைப் பிரித்தெடுக்கும் ஆய்வில் ஈடுபட்டார். * தனது குழுவினருடன் இணைந்து வாயுப் பரவல் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் வழிமுறையை மேம்படுத்தினார். அது ‘ஹெவி ஹைட்ரஜன்’ (டியூட்டிரியம்) கண்டறிய வழிகோலியது. இதற்காக 1934-ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். * கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகத்தில் இருந்து கனமான ஐசோடோப்களைப் பிரித்தெடுத்தார். வானியல், நிலவியல், உயிரியல் துறைகளிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐசோடோப்பை பிரிப்பதில் இவரது நிபுணத்துவம் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றது. * அமெரிக்கா அணுகுண்டு தயாரிக்கும் முடிவை எடுத்ததும், இவரும் அக்குழுவில் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. போரின்போதும், அதற்கு முன்னதாகவும், ஐரோப்பாவின் பல இடங்களில் இருந்தும் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்து யூத விஞ்ஞானிகள் தப்பிச்செல்ல உதவுவதில் சிறப்பாகப் பணியாற்றினார். யுரேனியம் கமிட்டி தலைவராக 1941-ல் நியமிக்கப்பட்டார். மன்ஹாட்டன் திட்டத்தில் 1943-ல் இணைந்தார். அங்கு விஞ்ஞானிகளின் குழுவோடு இணைந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் ‘யூரே டிஃப்யூஷன்’ முறையை மேம்படுத்தினார். இத்திட்டத்தில் அணுகுண்டு உருவாக்கத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாவது குறித்த கோட்பாடுகளை உருவாக்கியதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார். * காஸ்மோ வேதியியல் துறை உருவாக தீவிர முயற்சி மேற்கொண்டார். பல்வேறு பரிசுகள், பதக்கங்கள், விருதுகளைப் பெற்றார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த ஹரால்டு கிளேட்டன் யூரே 88-வது வயதில் (1981) மறைந்தார். கோள் அறிவியலில் சாதனை புரிந்தவர்களுக்கு அமெரிக்க வானியல் கழகம் இவரது பெயரில் விருது வழங்கிவருகிறது. http://tamil.thehindu.com
 8. போட்டியில் கலந்து கொண்ட நந்தனுக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 9. மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்பை அதிகரிக்கும் ரத்த வகை சில குறிப்பிட்ட இரத்த வகை கொண்டவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் சற்றே அதிகமாக இருப்பதாக ஓர் அறிவியல் ஆய்வு கூறுகிறது. படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY உயர் இரத்த அழுத்தம் கொண்ட புரதத்தின் அளவைக் கொண்டிருக்கும் A, B மற்றும் AB ரத்த வகைகளை கொண்ட நபர்களுக்கு, இந்த வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY இருதய நோய் தொடர்பான அபாயத்தை மருத்துவர்கள் சுலபமாக புரிந்துக் கொள்வதற்கு, இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று நெதர்லாந்தின் க்ரோனின்கென் மருத்துவ மைய பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். http://www.bbc.com/tamil/science-39766578
 10. ஐ.பி.எல்: கொல்கத்தாவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத் ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் வார்னரின் அதிரடி சதத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது. ஐதராபாத்: ஐ.பி.எல். தொடரில் இன்றைய 2-வது ஆட்டம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஐதராபாத் அணியின் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தவான் ஒருபுறம் நிதானமாக விளையாட மறுபுறம் வார்னர் ருத்ரதாண்டவம் ஆடினார். 2-வது ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் குவித்த வார்னர், கிறிஸ் வோக்ஸ் வீசிய 3-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரி மூலம் 11 ரன்கள் சேர்த்தார். யூசுப் பதான் வீசிய 4-வது ஓவுரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் உடன் 17 ரன்கள் சேர்த்தார். 6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை உத்தப்பா சரியாக பயன்படுத்தவில்லை. இந்த ஓவரில் ஐதராபாத் அணி 12 ரன்கள் சேர்க்க பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 79 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் வீசிய 10-வது ஓவரில் இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 98 ரன்னைத் தொட்டார் வார்னர். 11-வது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து சதத்தை பதிவு செய்தார். வார்னர். 43 பந்தில் 7 பவுண்டரி, 8 சிக்சருடன் சதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய தவான் 30 பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அப்போது ஐதராபாத் அணி 13 ஓவரில் 139 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். சுனில் நரைன் வீசிய 16-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்த வார்னர், 17-வது ஓவரில் அவுட் ஆனார். அவர் 59 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சர் உடன் 126 ரன்கள் சேர்த்தார். கேன் வில்லியம்சன் அதிரடியாக விளையாட சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுணில் நரைன் மற்றும் காம்பீர் பேட்டிங் செய்தனர். 1 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் நரைன் கேட்ச் ஆனார். அந்த அணியின் கேட்பன் காம்பீர் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய உத்தப்பா அதிரடியாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு ஆடினார். 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் 7-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர், மழை நின்றதும் கொல்கத்தா அணியினர் பேட்டிங்கை தொடர்ந்தனர். வெற்றி இலக்கு அதிகமாக இருந்தாலும் அதிரடி வீரர்கள் சீக்கிரமே ஆட்டமிழந்ததால் பின்வரிசை வீரர்கள் ரன்களை எடுக்க மிகவும் சிரமப்பட்டனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், முகம்மது சிராஜ், கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால், 48 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிரடி சதமடித்த கேப்னர் வார்னர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். http://www.maalaimalar.com/News/TopNews/2017/05/01005730/1082888/hydrabad-won-against-kolkatta-by-48-runs.vpf
 11. ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 5 ஆண்டு போட்டியிட தடை கமிஷன் அதிரடி பரிந்துரை புதுடில்லி: 'சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அனுபவத்தின் அடிப்படையில், 'ஓட்டு போடுவதற்காக, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர், ஐந்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, ஏப்., 12ல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு பணம் அ.தி.மு.க., இரண்டாக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை சின்னமும் கிடைக்காததால், சசிகலாவின் அக்கா மகன் தினகரனும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி யின் சார்பில் மதுசூதனனும் போட்டி யிட்டனர். இந்த தேர்தலில், தினகரன் அணி சார்பில், வாக்காளர்களுக்கு, 4,000 ரூபாய் வரை வழங்கப் பட்டதாக புகார்கள் எழுந்தன. ஒத்திவைப்பு: மேலும், பல்வேறு புதிய வழிகளிலும், வாக்காளர் களுக்கு பணம் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, இடைத் தேர்தலை, தேர்தல் கமிஷன் ஒத்திவைத் துள்ளது.இந்த நிலையில், இது போல் ஓட்டுக்கு பணம் தருவதை தடுப்பது குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது, வாக்காளர் களுக்கு பல்வேறு வழிகளில் பணம் கொடுத்துள்ள னர். சில இடங்களில், 'மொபைல் ரீசார்ஜ்' செய்வது, டோக்கன் வழங்குவது என, ரொக்கமாகவும், பரிசு பொருளாகவும் வழங்கியுள்ளனர்.மக்கள் பிரதி நிதித்துவ சட்டத்தின் கீழ், வன்முறைகள் நடந்தால், குறிப்பிட்ட தொகுதியில் தேர்தலை நிறுத்தும் அதிகாரம், தேர்தல் கமிஷனுக்கு உள்ளது. அதே நேரத்தில், வாக்காளர்களுக்கு பணம்கொடுக் கப்பட்டால் அங்கு, தேர்தலை நிறுத்த அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளை பயன்படுத்தியே தேர்தலை நிறுத்த முடியும். இந்த சட்டப் பிரிவை அதிகம் பயன்படுத்த தேர்தல் கமிஷன் விரும்பவில்லை.ஓட்டு போட பணம் கொடுக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டால், உடனே தேர்தலை நிறுத்த, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம்செய்யப்பட வேண்டும் என, மத்திய அரசை ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம். தற்போது, ஆர்.கே.நகர் தொகுதி அனுபவத்தின் அடிப்படையில், இவ்வாறு பணம் கொடுக்கும் ஒரு சிலரால், மற்ற வேட்பாளர்கள் பாதிக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, பணம் கொடுக்கும் வேட்பாளர் மீது, கோர்ட்டில் வழக்கு பதிவு செய்த உடனேயே, குறைந்தபட்சம், ஐந்து ஆண்டுகள் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக சட்டத் திருத்தம் செய்யபட வேண்டு மென வலியுறுத்தி, மத்திய சட்ட அமைச்சகத் துக்கு,தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் அனுப்ப உள்ளோம்.என அதிகாரிகள் தெரிவித்தனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1761916
 12. 37 போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகள்... 1. nesen 25 2. நந்தன் 22 3. Ahasthiyan 22 4.வாத்தியார் 22 5. கிருபன் 21 6. suvy 20 7. தமிழினி 18 8. கறுப்பி 18 9. nunavilan 18 10. vasanth1 16 11. ஜீவன் சிவா 16 12. ஈழப்பிரியன் 15
 13. 37) Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders KKR வெற்றி பெறும் என்று பதில் தந்து புள்ளிகளை இழப்பவர்கள். suvy, தமிழினி, கறுப்பி
 14. சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் குறித்து, வருமான வரித்துறை விசாரணையை துவக்கியுள்ளது. இவரது, 'ஜாஸ்' சினிமா நிறுவனத்திற்கு, 1,000 கோடி ரூபாய் முதலீடு வந்தது பற்றியும், அவரது மலைக்க வைக்கும் அரசியல் தொடர்புகள் குறித்தும் விசாரிக்க திட்டமிட்டுள்ளது. சசிகலா, தினகரன், விவேக் என, அதிரடி நடவடிக்கை தொடர்வதால், சொத்துக்கள் பறிபோகுமோ என திவாகரன், வெங்கடேஷ் உள்ளிட்ட, சசிகலா சொந்தங்கள் பலரும் பீதியில் உள்ளனர். அ.தி.மு.க.,வின் தலைமை பதவி மற்றும் முதல்வர் பதவியை கைப்பற்றும் வகையில், திட்டமிட்டு, அசுர வேகத்தில் காய் நகர்த்திய சசிகலா, தினகரன் ஆகியோர், அதே வேகத்தில் சிறைக்கு சென்றனர். 'இதனால், அவர்களின் குடும்ப ஆதிக்கம், இனி கட்சிக்குள் இருக்காது' என்ற நம்பிக்கை, அ.தி.மு.க.,வினரிடம் உருவாக துவங்கியது. ஆனால், அ.தி.மு.க.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையான, 'நமது எம்.ஜி.ஆர்.,' நாளிதழில், வழக்கம் போல சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவான செய்திகள் வந்தபடி உள்ளன. முதல்வர் பழனிசாமி செய்தியை விட, அவர்களின் செய்திக்கே, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஜெயா, 'டிவி' நிர்வாகத்தை நேரடியாகவும், நமது எம்.ஜி.ஆர்., நாளிதழை மறைமுகமாக வும் கவனித்து வருபவர், விவேக் ஜெயராமன். இவர், சசிகலாவின் மறைந்த அண்ணன் ஜெயராமனின் மகன். இவரது தாய் இளவரசி, பெங்களூரு சிறையில், சசிகலாவுடன் அடைக்கப்பட்டுள்ளார். விவேக், அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். 2011ல், சசிகலாவின் மொத்த சொந்தங்களையும் கட்சியை விட்டு நீக்கிய ஜெயலலிதா, விவேக்கை மட்டும் நீக்கவில்லை; போயஸ் கார்டனின் முகவரி யிலேயே, விவேக் உறுப்பினர் அட்டை வைத்துள்ளார்.எட்டு ஆண்டுகளுக்கு முன், ஜெ.,யிடமே உறுப்பினர் அட்டை வாங்கியவர் என்பதால், அவர் மூலமாக மறுபடியும், சசிகலா குடும்பத்தினர், கட்சிக்குள் நுழைய வாய்ப்புள்ள தாக, பன்னீர் அணியினர் சந்தேகிக்கின்றனர். எனவே தான், 'விவேக்கையும் கட்சியை விட்டு நீக்க வேண்டும்' என, பன்னீர் அணியினர், சசிதரப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சியை விட்டு ஒதுங்கி கொள்வதாக, தினகரன் அறிவித்துள்ள நிலையில், அவரது மைத்துனரான, டாக்டர் வெங்கடேஷ், தன் சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள, கட்சி நடவடிக்கைகளை, அடியோடு குறைத்து அமைதியாக உள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன், தம்பி திவாகரன், அக்கா மகன் பாஸ்கரன் உள்ளிட்ட மன்னார்குடி உறவினர்கள் யாருமே, தற்போது, அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இல்லை. கோடி கோடியாக சேர்த்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள, இவர்களும் அடக்கியே வாசிக்கின்றனர். இதற்கிடையே, வருமான வரித்துறை, விவேக் மீது, தன் பார்வையை திருப்பியுள்ளது. 30 வயதைக் கூட எட்டாத விவேக், 1,000 கோடி ரூபாய் முதலீடு கொண்டதாக கூறப்படும், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக உள்ளார். இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது; 1,000 கோடி ரூபாய்க்கான பணப் பரிவர்த்தனை கள் எப்படி நடந்தன என்ற விபரங்களை, வருமான வரித்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.'ஜாஸ் சினிமாஸ் உரிமையாளர் விவேக் அல்ல. அதில், சம்பளத்துக்கு பணி யாற்றுபவர் தான்' என கூறப்பட்டாலும், அரசி யல், சினிமா, தொழிலதிபர்கள் என, பலராலும் அணுக முடியாத உச்சத்துக்கு, விவேக் எப்படி உயர்ந்தார் என்பது, வருமான வரித்துறை அதிகாரிகளை, கிறுகிறுக்க வைத்திருக்கிறது. டில்லி வரை நீண்டிருக்கும், விவேக்கின் அரசியல் தொடர்புகளும், மலைக்க வைக்கும் அளவுக்கு இருப்பதாக சொல்கின்றனர். இதனால், விரைவிலேயே, விவேக் சம்பந்தப் பட்ட நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, சசிகலாவின் தம்பியான திவாகரனும், விவேக்கிற்கு எதிரான வேலைகளில், தீவிரமாக இறங்கி உள்ளார். பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, அடிக்கடி சந்திக்கும் ஒரே ஆள், விவேக் தான். திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர், சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற போது, அவர் சந்திக்க மறுத்து விட்டார். இதில், ரொம்பவே நொந்து போன திவாகரன், விவேக்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத் துவத்தை கண்டித்து, குடும்பத்துக்குள்ளே எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளார். இதற்கு பதிலடியாக, விவேக்கும், திவாகர னுக்கு எதிராக கொந்தளித்துள்ளார். 'தினகர னுக்கு எதிராக செயல்படுவதாக சொல்லி, நீங்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டு இருக்கி றீர்கள். தினகரனோ, நானோ, கட்சிக்காரர்கள் யாரிடமும் சிபாரிசுக்காக பேசியதில்லை. ஆனால், நீங்களும், உங்கள் மகனும், அனைத்து அமைச்சர்களையும் போன் போட்டு நச்சரித்தீர் கள். உங்களால் தான் சசிகலாவிற்கு கெட்ட பெயர்' என, ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், கடும் கோபத்துக்கு ஆளான திவா கரன், விவேக்கை அரசியலில் இருந்து அப்புறப் படுத்த, தீவிரமான வேலைகளில் இறங்கி உள்ளார். பன்னீர்செல்வம் தரப்பின் போர்க் கொடி, வருமான வரித்துறையின் கண் காணிப்பு, திவாகரன் உள்ளிட்ட உறவினர் களின் கோபம் என, பல விதங்களிலும் நெருக் கடி வளையத்தில், விவேக் சிக்கி உள்ளார். விரைவில் அவரால், தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. -- நமது நிருபர் - - http://www.dinamalar.com/news_detail.asp?id=1761921
 15. கீரியா, பாறு கழுகா? கீரிப் பிள்ளை தெரியுமா உங்களுக்கு? கொஞ்சம் பெரிய அணில் மாதிரி இருக்கும் ஒரு விலங்கு இது. நீங்கள் கோடு போடப் பயன்படுத்தும் ஒரு முழு அடி ஸ்கேல் அளவு உயரம் இருக்கும். அதாவது 30 சென்டி மீட்டர். 500 கிராம் எடை கொண்டிருக்கும். இந்தக் கீரிப் பிள்ளைகளில் இதைவிடவும் பெரியதாகவோ சிறியதாகவோ பல வகை உள்ளன. இந்தியாவில் உள்ளவை சாம்பல் நிறக் கீரிப் பிள்ளைகள். கீரிப் பிள்ளைகள், சிறு பூச்சிகள், பறவை முட்டை, பல்லி, செடிகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடும். மண்ணுக்கு அடியில் குழி தோண்டி அதை வீடாக அமைத்துக்கொள்ளும். இதை ‘வளை’ என்று சொல்வோம். தென்னாப் பிரிக்காவில் மீர்காட் (meerkat) என்னும் ஒருவகை கீரிப் பிள்ளை இருக்கிறது. மீர்காட் கீரிப் பிள்ளைகள் பற்றிய கதை இது. இந்த மாதிரியான மீர்காட் வகை கீரிப் பிள்ளைகள் எல்லாம் சவானா என்ற காட்டுக்குள் வாழ்ந்துவருகின்றன. அந்தக் காட்டுக்குள் இருக்கின்றன பழங்கள் எல்லாம் பறித்துச் சாப்பிட்டுவிட்டு சந்தோஷமாக இருக்கின்றன. அவற்றுக்கு அந்தக் காட்டில் கிடைக்கும் சிவப்பு நிறப் பழம் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், அந்தப் பழம் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. அப்படி ஒரு பழம் கிடைத்தால் இந்த மீர்காட் கீரிப் பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு திருவிழாபோல் கொண்டாடும். ஆனால், அதற்காக மீர்காட் கீரிப் பிள்ளைகள் காத்திருக்க வேண்டும். மே மாதம் விடுமுறைக்காக நாம் வருஷம் முழுவதும் காத்திருப்பதுபோல. அப்படி ஒரு நாள் வந்தது. இந்த மீர்காட் கீரிப் பிள்ளைகளின் வளைகளுக்கு அருகில் உள்ள மரத்தில் ஒரு சிவப்புப் பழம் பழுத்தது. ஒரே ஒரு பழம்தான். கீரிப் பிள்ளைகளுக்கு சந்தோஷம். ஒரே ஓட்டமாக ஓடி மரத்தைச் சுற்றி நின்றுகொண்டன. சில கீரிகள் மரத்தின் மீதேறிப் பழத்தை சந்தோஷமாகத் தடவிக் கொடுத்தன. சில கீரிகள் அந்தப் பழத்தின் வாசனையை நுகர்ந்து பார்த்தன. ஆக, இன்னும் கொஞ்சம் நேரத்தில் பழத்தைச் சாப்பிடப் போறோம் என்ற சந்தோஷம் கீரிகள் கண்களில் தெரிந்தது. ஆனால், அந்த நேரத்தில் ஒரு சத்தம். கீரிகள் எல்லாம் பயத்துடன் வளைகளுக்குள் பதுங்கின. லேசாகத் தலை தூக்கிப் பார்த்தால், அந்தப் பழத்தை ஒரு பாறு கழுகு (Vulture) நுகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. கீரிகளுக்கு ஏமாற்றமும் கோபமும் ஒன்றாக வந்தன. பாறு கழுகு பழத்தைப் பறித்துக்கொண்டு பறந்தது. ஆனால், விட முடியுமா? கீரிப்பிள்ளைகள் எல்லாம் ஒன்றுதிரண்டு பழத்தை மீட்கக் பாறு கழுகைத் துரத்திக்கொண்டு போயின. பாறு கழுகும் விடாமல் பறந்துபோகும். கீரிப் பிள்ளைகள் ஒன்றின் மீது ஒன்று ஏறிப் பாறு கழுகை எட்டிப் பிடித்துவிடும். பழத்தையும் பறித்துவிடும். ஆனால், பழம் கைநழுவிக் கீழே விழப் போகும். இப்போது பழத்தை யார் கேட்ச் (catch) பிடிப்பார்கள், பாறு கழுகா, கீரிப் பிள்ளைகளா, இல்லை கிழே விழுந்து மண்ணுக்காகுமா? முடிவை ‘Catch it’ படம் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். இது ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட படம். http://tamil.thehindu.com