vivasaayi

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  51
 • Joined

 • Last visited

Community Reputation

4 Neutral

About vivasaayi

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday

Profile Information

 • Gender
  Male
 1. அரசின் சுயரூபத்தை தோலுரித்த கொத்துக்குண்டு இறு­திக்­கட்டப் போரின்­போது, பொது­மக்கள் அடர்த்­தி­யாக வாழ்ந்த பகு­தி­களில் அர­ச­ப­டை­யினர் கிளஸ்டர் குண்­டு­களை வீசி­ய­தற்கு ஆதா­ர­மாக பிரித்­தா­னி­யாவின் ‘தி கார்­டியன்’ நாளிதழ் வெளி­யிட்­டுள்ள தக­வல்­க­ளையும், படங்­க­ளையும், இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­துள்ள விதம், ஆச்­ச­ரித்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. போர்க்­குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து சனல்-–4 வெளி­யிட்ட வீடியோ மற்றும் ஒளிப்­பட ஆதா­ரங்­களை மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் எவ்­வாறு அலட்­சி­யத்­துடன் நிரா­க­ரித்­ததோ அதே­போன்று தான், கிளஸ்டர் குண்­டு­க­ளையும் இப்­போ­தைய அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது. போர்க்­குற்­றச்­சாட்­டு­களை எதிர்­கொள்ளும் விட­யத்தில், மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்­துக்கு ஈடி­ணை­யற்­றது என்­பதை நிரூ­பிக்கும் வகையில் அர­ச­த­ரப்பின் கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன. கடந்த திங்­கட்­கி­ழமை ‘தி கார்­டியன்’ கிளஸ்டர் குண்­டுகள் மீட்­கப்­ப­டு­வது தொடர்­பான நான்கு படங்­களை- வெளி­யிட்­டி­ருந்­தது. வன்­னியில் கண்­ணி­வெடி அகற்றும் பணியில் ஈடு­பட்­டி­ருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறு­வ­னத்தில் பணி­யாற்­றிய அதி­காரி ஒருவர் மூலம் பெறப்­பட்ட படங்கள் அவை. இது­தொ­டர்­பார்­பாக ‘தி கார்­டியன்’ சுமத்­தி­யுள்ள குற்­றச்­சாட்­டுக்கு இது­வரை அர­சாங்­கமோ, பாது­காப்பு அமைச்சோ அதி­கா­ர­பூர்வ அறிக்கை மூலம் மறுப்பைத் தெரி­விக்­க­வில்லை. ஆனாலும், இது­தொ­டர்­பாக பாது­காப்புச் செயலர் கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்சி, இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜெயநாத் ஜெய­வீர, அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன, ஊட­கத்­துறைப் பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான ஆகியோர், செய்­தி­யா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு அளித்­துள்ள பதில்கள், வித்­தி­யா­ச­மா­னவை. “இவ்­வா­றான செய்­தி­களின் உண்­மைத்­தன்­மைகள் குறித்து தெரி­யாமல், எந்த தீர்­மா­னமும் எடுக்க முடி­யாது. கிளஸ்டர் குண்­டு­களை பயன்­ப­டுத்த வாய்ப்­புகள் இல்லை என ஆரம்­பத்தில் இருந்தே பாது­காப்பு பிரி­வினர் தெரி­வித்து வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் இப்­போது இத்­த­கைய செய்­தி­களை வெளி­யி­டு­வதன் பின்­னணி என்ன வென்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட வேண்டும். அதே­போல போர் தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. விசா­ர­ணை­களின் மூலம் இவற்றை ஆராய்ந்து தீர்­மானம் எடுப்போம்” என்று கூறி­யி­ருந்தார் பாது­காப்புச் செய­லாளர் கரு­ணா­சேன ஹெற்­றி­யா­ராச்சி. இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயநாத் ஜெய­வீர, “வெளி­யா­கி­யுள்ள படங்கள் தொடர்­பாக உறு­தித்­தன்மை இல்லை. ஆகவே, இவற்றை உண்­மை­யென எம்மால் கருத முடி­யாது. அதேபோல் இப்­போது சர்­வ­தேச ரீதி­யாக தமக்கு சாத­க­மான கார­ணி­களை முன்­வைத்து இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்க முனை­கின்­றனர். அர­சியல் ரீதி­யாக சில பொய்­யான கார­ணி­களை முன்­வைத்து இரா­ணு­வத்தை குற்­ற­வா­ளி­யாக்க முயற்­சிக்­கின்­றனர் . இரா­ணுவம் விதி­மு­றை­க­ளுக்கு முர­ணான வகையில் போர் செய்­ய­வில்லை. ஆகவே, அர­சாங்­கமும், பாது­காப்பு தரப்பும் எப்­போதும் எமது இரா­ணு­வத்தின் மீதான பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரித்தே செயற்­படும்” என்று குறிப்­பிட்­டி­ருந்தார். இவர்­களின் கருத்­துக்­களில், நேர­டி­யாக குற்­றச்­சாட்டை நிரா­க­ரிக்­காத ஒரு நழுவல் பதி­லையே பார்க்க முடிந்­தது. முன்னர் மறுப்பு வெளி­யிட்­டதைச் சுட்­டிக்­காட்டித் தப்­பித்துக் கொள்ளும் ஒரு நிலையை அவ­தா­னிக்க முடிந்­தது. அத்­துடன், இரா­ணுவம் மீது வேண்­டு­மென்றே குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு தண்­ட­னைக்­குட்­ப­டுத்த முயற்­சிகள் நடப்­பது போன்று விவ­கா­ரத்தை மாற்­றவும் முயற்­சித்­தி­ருந்­தனர். ஆனால், அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்­னவோ, கிளஸ்டர் குண்­டுகள் பற்­றிய குற்­றச்­சாட்டுக் குறித்த கேள்­விக்கு பதிலை அளிக்­க­வில்லை. மாறாக அவரே பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்தார். “அந்தப் படங்கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­தவை. இது­போன்ற படங்­களை அவர்கள் தொடர்ந்து வெளி­யி­டு­கி­றார்கள். இந்தக் குண்­டு­களை நாம் தான் பயன்­ப­டுத்­தினோம் என்று எவ்­வாறு நிரூ­பிக்க முடியும்? அவற்றில் இரா­ணு­வத்தின் இலச்­சினை இருக்­கி­றதா? போர் முடிந்து, பெரும்­பா­லான வெடி­பொருள் அகற்றும் பணிகள் நிறை­வ­டைந்து ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் ஏன் இந்தப் படங்கள் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன? எதற்­காக இவற்றை முன்­னரே அவர்கள் வெளி­யி­ட­வில்லை?” என்று அவர் எழுப்­பிய கேள்­விகள் முக்­கி­ய­மா­னவை. அது­போ­லவே, இதே செய்­தி­யாளர் மாநாட்டில், ஊட­கத்­துறைப் பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தா­னவும், அந்தப் படங்கள் இலங்­கையில் தான் எடுக்­கப்­பட்­டவை என்று எப்­படி உறுதி செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். அத்­துடன், கண்­ணி­வெ­டி­களை அகற்­று­ப­வர்கள் இவ்­வா­றான தக­வல்­களை வெளி­யி­டு­வது சட்­ட­வி­ரோ­த­மா­னது. ஜெனீவாவில் இலங்­கையை தனி­மைப்­ப­டுத்­தவும், அர­சாங்­கத்­துக்கு கெட்­ட­பெ­யரை ஏற்­ப­டுத்­தவும் மேற்­கொள்­ளப்­படும் முயற்சி என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். போர்­களின் போது இது­போன்ற குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­ப­டு­வது வழக்கம். இரா­ணு­வத்­தி­னரின் செயற்­பா­டுகள், மீறல்கள், விதி­க­ளுக்கு முர­ணான ஆயு­தங்­களின் பயன்­பா­டுகள் தொடர்­பாக குற்­றச்­சாட்­டு­களைச் சந்­திக்­காத இரா­ணு­வமே உலகில் இல்லை. குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­படும் போது, எடுத்த எடுப்­பி­லேயே நிரா­க­ரித்து விடாமல், அதன் உண்­மைத்­தன்­மையை ஆராய்ந்து, உரிய நட­வ­டிக்கை எடுப்­பதில் தான் எந்­த­வொரு இரா­ணு­வத்­தி­னதும் பெயர் காப்­பாற்­றப்­ப­டு­கி­றது. ஆனால், இலங்கை இரா­ணு­வமும் சரி, அர­சாங்­கமும் சரி தமது பெயர்­களைப் பாது­காப்­பது என்­பது, தனியே குற்­றச்­சாட்­டு­களை நிரா­க­ரிப்­பதில் தான் இருப்­ப­தாக கருதிக் கொண்­டி­ருக்­கின்­றன. மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் செய்த அதே தவறைத் தான் இப்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்­கமும் செய்து கொண்­டி­ருக்­கி­றது. போர்க்­குற்­றங்கள் தொடர்­பான வீடியோ மற்றும் ஒளிப்­பட ஆதா­ரங்­களை சனல்-4 வெளி­யிட்ட போது அதனை பொய் என்று கூறி­யது அப்­போ­தைய அர­சாங்கம். அது போலி­யாகத் தயா­ரிக்­கப்­பட்­டது என்றும், திரி­பு­ப­டுத்­தப்­பட்­டது என்றும் கூறி நிரா­க­ரித்­தது. ஆனால், அண்­மையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ­வுக்கு எழு­தி­யி­ருந்த கடிதம் ஒன்றில் அது உண்­மை­யா­னது என்­பதை ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார். அந்தக் குற்­றச்­சாட்டை எதிர்­கொண்ட விதம் தவ­றா­ன­தென மங்­கள சம­ர­வீர தனது கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். அதே மங்­கள சம­ர­வீர அங்கம் வகிக்கும் அர­சாங்கம் தான் கிளஸ்டர் குண்டுக் குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது. அது­மட்­டு­மன்றி, அமைச்சர் ராஜித சேனா­ரத்ன எழுப்­பி­யுள்ள கேள்­விகள் சிறு­பிள்­ளைத்­த­ன­மா­னவை. அடிப்­படை இரா­ணுவ அறி­வில்­லாத ஒருவர் தான் அவ்­வா­றான கேள்­வி­களை எழுப்ப முடியும். கிளஸ்டர் குண்­டு­களை இரா­ணுவம் தான் வீசி­யது என்று நிரூ­பிக்க முடி­யுமா என்று அவர் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். நிச்­ச­ய­மாக நிரூ­பிக்க முடியும். எவ்­வா­றெனின், மீட்­கப்­பட்ட கிளஸ்டர் குண்டின் பாகங்கள், RBK-–500 AO–-2.5RT வகையைச் சேர்ந்­தவை, சுமார் 500 கிலோ எடை­யுள்ள அந்த கிளஸ்டர் குண்டை 445 நொட்ஸ் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட, விமானம் ஒன்­றினால் தான் வீச முடியும். அத்­த­கைய வேகத்தில் பறக்கக் கூடிய அல்­லது 500 கிலோ குண்டை வீசக்­கூ­டிய விமானம் எதுவும் புலி­க­ளிடம் இருந்­த­தில்லை. வேறு நாட்டு விமா­னங்கள் ஏதும் வன்­னியில் குண்­டு­களை வீச­வு­மில்லை. (11 ஆம் பக்கம் பார்க்க) அரசின் சுய­ரூ­பத்தை ... (௯ஆம் பக்க தொடர்ச்சி) ஒரு­வேளை, புலி­களே அந்தப் பாரிய குண்டை வீசி­யி­ருந்தால் அதற்­கான தட­யங்­க­ளை­யா­வது போரின் முடிவில் இரா­ணுவம் கண்­டு­பி­டித்­தி­ருக்க வேண்டும். அதனை வெளிப்­ப­டுத்தி புலி­களின் போர்க்­குற்­ற­மாக நிரூ­பித்­தி­ருக்க வேண்டும். இவை எதை­யுமே செய்­யாமல் மூடி­ம­றைக்க முயன்­றதில் இருந்தே அது யாரால் வீசப்­பட்­ட­தென்­பதை கண்­டு­பி­டிப்­பது அவ்­வ­ளவு கடி­ன­மா­ன­தல்ல. இரா­ணு­வத்தின் இலச்­சினை அதில் இருக்­கி­றதா என்று முட்­டாள்­த­ன­மான கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது. எந்த நாட்டு இரா­ணு­வமும் தாம் வீசும் குண்டில் தமது இரா­ணு­வத்தின் சின்­னத்தை பொறிப்­ப­தில்லை. எந்த நாட்டுத் தயா­ரிப்பு என்று தெரியக் கூடாது என்­ப­தற்­காக, ரஷ்ய மொழியில் இருந்த எழுத்­துக்­களை அழித்து விட்டுக் குண்­டு­களை வீசி­ய­வர்கள், தமது சின்­னத்தை பொறிப்­பார்கள் என்று எப்­படி எதிர்­பார்க்க முடியும்? போர் முடிந்து ஆறு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர் ஏன் இந்தப் படங்­களை வெளி­யிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார். இது ஒன்றும் இப்­போது தான் வெளி­யான படங்கள் அல்­லது தகவல் அல்ல. ஏற்­க­னவே வெளி­யான ஒன்று தான். கண்­ணி­வெடி அகற்றும் பணியில் ஈடு­ப­டு­ப­வர்கள் மீட்­கப்­படும் வெடி­பொ­ருட்கள் பற்­றிய தக­வலை வெளி­யிடக் கூடாது என்றும், அது சட்­ட­வி­ரோதம் என்றும் பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான கூறி­யி­ருக்­கிறார். அப்­ப­டிப்­பட்ட ஒரு நிலையில் இந்த ஆதா­ரங்கள் ஆறு ஆண்­டு­க­ளுக்கு மேலாக மறைக்­கப்­பட்­டி­ருக்­கலாம். தற்­போது, அர­சாங்­கமே போர்க்­குற்ற விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஜெனி­வாவில் இணங்­கி­யுள்ள சூழலில், பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்­ப­தற்­காக, இந்தப் படங்­களை எடுத்து வைத்­தி­ருந்­தவர் ஊட­கத்­திடம் வழங்­கி­யி­ருக்­கலாம். இது­போன்று போர்க்­க­ளங்­களில் எடுக்­கப்­பட்ட பல அரிய படங்கள் பல தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் கூட வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. அவை உண்மை என்று நம்­பப்­பட்ட பொய்­களின் சுய­ரூ­பத்தை தோலு­ரித்­தி­ருக்­கின்­றன. அது­போல இந்தப் படங்கள் ஒன்றும் நீண்­ட­காலம் கழித்து வெளி­யா­க­வில்லை. போர்க்­குற்ற விசா­ரணை ஒன்­றுக்­கான சூழல் எழுந்­துள்ள போது தான் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. இந்தப் படங்கள் இலங்­கையில் தான் எடுக்­கப்­பட்­டவை என்று எவ்­வாறு உறு­திப்­ப­டுத்த முடியும் என்ற, அப்­பா­வித்­த­ன­மான கேள்வி ஒன்றை ஊட­கத்­துறை பிரதி அமைச்சர் கரு­ணா­ரத்ன பர­ண­வி­தான எழுப்­பி­யி­ருக்­கிறார். தி கார்­டியன் வெளி­யிட்­டுள்ள, சாலை பகு­தியில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட RBK-500 AO-2.5RT கிளஸ்டர் குண்டின் எஞ்­சிய வெளிப்­பா­கத்தை மீட்கும் படத்தில், இரண்டு பேர் காணப்­ப­டு­கின்­றனர் அவர்­களின் முகத்தை அடை­யாளம் காண முடி­யாமல் படம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஒருவர் ஹலோ ட்ரஸ்ட் நிறு­வ­னத்­தினர் அணியும் குண்­டு­து­ளைக்­காத ஜக்­கட்டை அணிந்­துள்ளார். அவர் உள்ளூர் பணி­யாளர் என்று தெரி­கி­றது. அவ­ரது முகத்தை தெளி­வின்றிப் பிர­சு­ரித்­துள்­ளது தி கார்­டியன். மூலப்­ப­டத்தில் அவர் யார் என்­பதை தெளி­வாக பார்க்க முடியும். மற்றவரின் பின்புறத்தில் இருந்தே படம் எடுக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாட்டவர் போலத் தோன்றுகிறது. அவர் அணிந்துள்ள ரிசேட்டின் பின்புறத்தில், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் mine clearence என்று தெளிவாக பார்க்க முடிகிறது. உலகில் வேறெந்த நாட்டிலும், சிங்கள மொழி பயன்பாட்டில் இல்லை. சிங்கள மொழி பொறித்த ரிசேட்டுடன் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுமில்லை. அதைவிட, இந்த ஒளிப்படங்களை முறைப்படி நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தாலே உண்மைகள் தெரிந்து விடும். ஆனால், சனல்-4 ஆதாரங்களைப் போன்று இவற்றையும் எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முனைந்திருக்கிறது அரசாங்கம். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் குற்றச்சாட்டுகளை நிராகரித்துப் பழகிப் போனவர்கள் என்பதால், இப்போதும் அப்படியே செய்கின்றனர் போலும். கிளஸ்டர் குண்டுக் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் எதிர்கொண்டுள்ள விதத்தைப் பார்க்கும் போது, இந்த அரசாங்கம் எவ்வாறு உண்மையான- நேர்மையான ஒரு போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் என்ற கேள்வியைத் தான் எழுப்பத் தோன்றுகிறது. http://www.vivasaayi.com/2016/06/cluster-bumb_23.html
 2. ஶ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கையெழுத்து வேட்டை-லண்டனில்நடந்த விளக்க கலந்துரையாடல் ஶ்ரீலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் அணைத்து மக்களும் கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது இதில் மெருமளவான மக்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்குபடுத்திய் இக்கூட்டதில் ஶ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை உலக அரங்கில் எடுத்துரைத்து தமிழீழ மக்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரு அங்கமாக பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக் கூட்டம் தொடர்பிலும் கருத்துப்பரிமாறப்பட்டது. இதில் மக்களும் நாடுகடத்த தமிழீழ அரசின் அமைச்சர்கள் , பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் அமைப்பு பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததுடன் எப்படி ஶ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ளலாம் அதற்காக தமிழ் மக்கள் உலகமக்களுடன் இணைந்து எப்படி செயற்படலாம் என்ற மக்கள் கலந்துரையாடலாக இந்நிகழ்வு இடம்பெற்றது. ஶ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கையெழுத்து வேட்டை-லண்டனில்நடந்த விளக்க கலந்துரையாடல் www.vivasaayi.com/2015/06/tgte-tcc-org.html
 3. முகமும் முகவரியும் அவன்தான் உலகெங்கும் பிரபாகரன் மயம்தான் -பிரபாகரனிஸ்டுகளின் ஒன்றுகூடல் http://www.vivasaayi.com/2015/05/namtamilar.html
 4. தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். யேர்மனியின் டோட்முண்ட் நகரில் மே22ம் நாள் முதல் மூன்று நாள் அமர்வாக தொடங்கியுள்ளது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து ஆற்றிய உரையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் மூன்றாவது நேரடி அமர்வில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் மாவீரர்களை மனதில் இருத்தி எனது வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அமர்வு நாம் ஐரோப்பாவில் கூட்டும் இரண்டாவது நேரடி அமர்வு. புதியயேதார் அரசியற்சூழலில் கூட்டப்படும் அமர்வு. நாம் முன்னர் கூடிய நேரடி அமர்வுகளின் போது தாயகத்தில் இருந்த அரசியற் சூழலை விட இந்த அமர்வின் போது இருக்கும் அரசியற் சூழல் மாறுபட்டது. தற்போது அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் சிறீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆட்சியாளர்களுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவு வலுவாக இருக்கிறது. இலங்கைத்தீவின் மீதான புவிசார் அரசியற்போட்டிகளின் விளைவாக நடாத்தப்பட்ட ஆட்சி மாற்றம் இலங்கைத்தீவின் மீது அனைத்துலக அரசுகள் கொண்டிருக்கும் அக்கறையையும் அதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்த மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதன் ஊடாக இலங்கைத்தீவின் புவிசார் அரசியற் சமநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் செல்வாக்கு இலங்கைத்தீவில் ஒப்பீட்டளவுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் எதிர்பார்த்தவொரு மாற்றம். இம் மாற்றத்தை ஏற்படுத்த இவ் அரசுகள் திட்டம் வகுத்துச் செயற்பட்டிருந்தன. இவர்களின் இத் திட்டத்துக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் ஆதரவு வழங்கியிருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நடவடிக்கைகளின் தலைமைத் தளபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுக்கு தமது வாக்குகளால் தண்டனை வழங்க வேண்டும் என்ற எமது மக்களின் விருப்பமும் சீனாவின் செல்வாக்கை இலங்கைத்தீவில் மட்டுப்படுத்த முனைந்த அனைத்துலக அரசுகளின் தேவையும் இங்கு ஒரே நேர்கோட்டில் சந்தித்துள்ளன. இவ் ஆட்சி மாற்றம் தமிழ் மக்களுக்கு பயன்தரக்கூடியதுதானா? தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் எவை? நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்? இவை பற்றி இந்த அமர்வில் நாம் விரிவாகப் பேச வேண்டியவர்களாக உள்ளோம். மாறியுள்ள அரசியற்சூழலைக் கவனத்துக்கெடுத்து நமது செயற்பாடுகளை அதற்கமைய வடிவமைத்துக் கொள்ள வேண்டியவர்களாக நாம் இன்று உள்ளோம். இங்கே சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அடிப்படையான மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்துமா என்பது குறித்து நாம்முதலில் சிந்திக்க வேண்டும். எத்தகை மாற்றம் சிறீலங்காவில் ஏற்பட்டுள்ளது என்பதனையும் நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். சிறீலங்காவின் அரச தலைவர் மாற்றப்பட்டுள்ளார். இது சிறீலங்காவின் வெளிநாட்டுக் கொள்கைளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவின் அரசாங்க நிர்வாகத்துறையில் நல்லாட்சி ஏற்படுத்துவது குறித்துப் பேசப்படுகிறது. சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமிழ் மக்கள் நிலைகுறித்து சிறீலங்காவின் அரசிலோ அரச கொள்கைகளிலோ மாற்றம் ஏற்படவில்லை. இவ்வாறு மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கும் அளவுக்கு நாம் வரலாற்று மூடர்களும் அல்ல. இவ் இடத்தில் சிறீலங்கா அரசில் மாற்றம் ஏற்படமுடியாமல் இருப்பதற்கான காரணங்களையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஓர் அரசு முக்கியமான மூன்று தூண்களின் மேல் கட்டப்பட்டிருக்கும். சட்டமியற்றல், நிர்வாகம் செய்தல், நீதி பரிபாலனம் செய்தல் என்பன ஒரு அரசின் பிரதான பணிகளாக இருக்கும். முறைசார் ஜனநாயக நாடுகளில் சட்டமியற்றுதல் நாடாளுமன்றத்தின் பணியாக இருக்கும். நிர்வாகம் செய்தல் அரசாங்கத்தின் பணியாக இருக்கும். நீதி பரிபாலனம் சுதந்திரமான நீதித்துறைக் கட்டமைப்பின் பொறுப்பில் இருக்கும். இவை மூன்றுமே ஒரு அரசின் அடிப்படைத் தூண்களாகும். இவற்றை விட ஊடகத்துறையும் ஒரு அரசின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படுவதுண்டு. இங்கு இன்னுமொரு முக்கியமான விடயமும் உண்டு. ஓர் அரசு பின்பற்றும் வழிகாட்டுதல் கோட்பாடுகள் எவை என்பதும் அக் கோட்பாடுகள் எவ்வளவு வலிமை மிக்கவை என்பதுவும் மிகவும் முக்கியமானவை. ஓர் அரசின் தன்மையில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அந்த அரசின் அடிப்படைக் கோட்பாட்டிலும் அரசின் தூண்களாகக் கருதப்படும் இவ் நான்கு அம்சங்களிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். இதற்கானதொரு நிலைமை சிறீலங்காவில் இன்று இல்லை சிறீலங்காவைப் பொறுத்தவரையில் அரசானாது இலங்கைத்தீவு ஒரு சிங்கள பௌத்தநாடு என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது. இக் கோட்பாடு மகாவம்ச மனநிலையில் இருந்து ஊற்றெடுக்கிறது. இதற்கமையவே நாடாளுமன்றமும் அரசாங்க இயந்திரமும், நீதித்துறையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஊடகத்துறையும் இக் கோட்பாட்டிற்கமையவே இயங்குகிறது. இதனால் சிங்கள, பௌத்த மக்களே இலங்கைத்தீவில் தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கும் ஜனநாயகமாகவே சிறிலங்கா அரசு உள்ளது. இத்தகைய அரசில் ஆட்சியாளர்கள் மாறுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. மேலும் புதிய ஆட்சியாளர்களும் இதே இனவாதக் குட்டையில் ஊறிய மட்டைகளாக இருக்கும் போது அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் எமது தேசியப் பிரச்சினைக்குத் தீர்வினைக் கொண்டு வரும் என்று இலவு காத்த கிளிகள் போல தமிழ் மக்கள் காத்திருக்க முடியாது. கிளிகள் காத்திருந்த கதையில், இவ்வாறு காத்திருந்தமை இலவம் பழத்தின் தவறா அல்லது இலவம் பழத்தின் தன்மை புரியாத கிளிகளின் தவறா? இங்கு எமக்கு சிறீலங்கா அரசின் தன்மை பற்றி நன்கு தெரியும். அவ்வாறு இருந்தும் புதிய ஆட்சியாளர்களின் மீது தமிழ் மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்ளமுடியும்? இவ்வாறு நம்பிக்கை வைத்துக் காத்திருக்குமாறு எமது தலைவர்கள் எப்படி மக்களைக் கோர முடியும்? நம்பிக்கையுடன் காத்திருப்பதன் ஊடாக எமது பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புவோமாக இருப்பின் நாம் இலவு காத்த கிளிகளை விட முட்டாள்களாகவே இருக்க முடியும். இங்குதான் நாம் சிந்திக்க வேண்டிய கேள்விகள் எழுகின்றன. அப்படியானால் நாம் என்னதான் செய்வது? எவ்வாறு முன்னோக்கி நகர்வது? அனைத்துலக சமூகத்தின் ஆதரவின்றி நாம் எதனையும் செய்து விட முடியுமா? எமது கோரிக்கைகளுக்கு அனைத்துலக ஆதரவைப் பெறுவது எவ்வாறு? ஈழத் தமிழ் மக்களை ஒரு தேசமாக வலுப்படுத்துவது எவ்வாறு? இதற்கான வளங்களைத் திரட்டிப் பெருக்குவது எவ்வாறு? போன்ற கேள்விகளை நாம் புதிய அரசியற்சூழலில் விவாதிக்க வேண்டும். இந்த அமர்வு இத்தகைய விவாதத்தைக் காத்திரமாக முன்னெடுக்கும் என்பது எனது நம்பிக்கை. கடந்த மாவீரர் நாள் செய்தியிலும் இவ் வருடப் புத்தாண்டு அறிக்கையிலும் எழக்கூடிய புதிய அரசியற்சூழலைக் கவனத்திற்கெடுத்து நான் சில கோரிக்கைளை முன்வைத்திருந்தேன். இக் கோரிக்கைகளை இவ் அமர்வில் ஒரு தடவை திருப்பிப் பார்த்துக் கொள்வதானது நாம் இப்போது விவாதிக்க வேண்டிய விடயங்களுக்கு உதவும் என நம்புகிறேன் அக் கோரிக்கைகளாக அமைந்தவை, *தமிழீழ மக்களது தேசத் தகைமையும் தாயகப்பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் *ஈழத் தமிழர் தேசத்தின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வுமுறை குறித்து தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் மக்கள் வாக்கெடுப்பொன்று அனைத்துலக சமூகத்தின் பங்கு பற்றலோடு நடாத்தப்பட வேண்டும் *தமிழீழ மக்கள் மீது சிங்களத்தால் நடாத்தப்பட்ட, நடாத்தப்படுகின்ற இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் *போர் முடிவடைந்த பின்னரும் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கு வழிவகை செய்யக்கூடியதான அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும் *தமிழீழத் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் * தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தினை அடிப்படையாகக் கொள்வதனை தாயகத் தலைவர்கள் ஏற்கக்கூடாது * தமிழர் தாயகத்தில் சிங்களம் நடாத்தும் நிலக்கபளீகரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் * தமிழர் தாயகப் பகுதியின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் புலம் பெயர் தமிழ் மக்கள் அச்சமின்றிப் பங்குபற்றக்கூடிய வகையிலானதொரு பொறிமுறை அனைத்துலகச் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்படவேண்டும் * தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி ஜனநாயக வழியில் உரையாடவும் விவாதிக்கவும் தடையாகவுள்ள அரசியலமைப்பின் 6வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் இக் கோரிக்கைகள் தொடர்பாகவும் தற்போதய அரசியற்சூழலில் விவாதித்து அவற்றை மெருகூட்டும் பணியையும் இந்த அமர்வு மேற்கொள்ளும் என்பது எனது எதிர்பார்ப்பு. நாம் தற்போது 'சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துக' என்ற கோரிக்கையை ஐ.நா. சபையின் முன் வைத்து, அதனை வலியுறுத்தும் வகையில் ஒரு மில்லியன் கையெழுத்துக்களுடன் கூடிய கோரிக்கைமனுவை ஐ.நா. சபையிடம் கையளிக்கும் இயக்கமொன்றை ஆரம்பித்திருக்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை வேகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை பிரதமர் பணிமனையின் ஊடாக ஒருங்கிணைத்து பெரும் செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம். பதிப்பகம், ஆவணக்காப்பகம், Yes to Referendum அரசியல் இயக்கம், நிலக் கபளீகர எதிர்ப்பியக்கம், தமிழ்க் கல்வி மேம்பாட்டு மதியுரைப்பீடம், உலகத் தமிழர் பல்கலைக் கழகம், மாவீரர் நினைவாலயம், இந்தியாவில் தோழமை மைய பணிமனைகள், நல்லெண்ணத் தூதுவர்கள், மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணும் மையங்கள், தாயகத்தில் சுயதொழில் வளர்ச்சித் திட்டங்கள், பசுமையைக் காப்போம் - சூழல் விழிப்புணர்வு இயக்கம், உள்ளடங்கலாக 15 செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் அமையும் இப்பெரும் செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த தேவையான வளங்களைத் திரட்டுவது என்பது குறித்தும் இம் அமர்வு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும் என்பதும் எனது நம்பிக்கை. தமிழ் மக்களின் உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என்பதனைக் கருத்திற் கொண்டு தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதிலும் நம்பிக்கை கொண்டு செயற்பட வேண்டியவர்களாக தமிழர் தேசம் உள்ளது. இந்த அமர்வு தமிழர் தேசத்தின் அரசியல் இராஜதந்திர வழிமுறையிலான போராட்டத்தை வலுப்படுத்தத் துணை செய்யும் என்ற நம்பிக்கையுடன், அமர்வில் பங்கு கொள்ளும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைக் கூறி எனது உரையினை நிறைவு செய்கிறேன். இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது தொடக்க உரையில் குறிப்பிட்டிருந்தார். http://www.vivasaayi.com/2015/05/pm-uruthirakunar.html
 5. தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் மாவீரர் ஈழத்துக்காக மாவீரர் தம் உயிர் தந்தார் மாவீரர் தமிழீழம் வாழ தம் இனம் வாழ பினமாகினர் அவர் நினைவு அது நம் இன நிமிர்வு களம் கண்ட அவர் சிரம் சாயவில்லை அவர் உடல் மட்டும் மண்ணுக்கு தமிழீழ உரமானது அவர் தந்த கொடி இது அவர் உயிர் தந்து பறந்த கொடி இது தமிழ் மானம் காத்த கொடி அவர் நினைவு உரமாக்கி புலிக்கொடி நாட்டி தமிழீழம் என்னும் விருச்சம் வளர்ப்போம் சரவணை மைந்தன் http://www.eelampoem.tk/2014/11/tamileelam.html
 6. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் மற்றும் அமைச்சின் நிரந்தர செயலாளர் அவர்கள் GTV யில் வழங்கிய சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை http://www.vivasaayi.com/2013/05/blog-post_5871.html
 7. சர்வதேச புவி தினமான இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட விழிப்பு நடவடிக்கையின்போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசன் கொழும்பு, காலி முகத்திடலில் கோல்பேஸ் சுற்றுவட்டம் முதல் பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரையிலான பகுதியில் காணப்பட்ட குப்பைகளை சேகரிப்பதை படங்களில் காணலா http://www.vivasaayi.com/2013/04/blog-post_1071.html
 8. வலி. வடக்கு, வலி.கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தமிழ் மக்களின் 6 ஆயிரத்து 381 ஏக்கர் உறுதிக் காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் நேற்று ஒட்டப்பட்டுள்ளன. யாழ்.மாவட்டக் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகத்தினால், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆ.சிவசுவாமியின் கையொப்பத்துடன், காணி எடுத்தல் சட்டத்தின் (அத் 460) 2 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலிருந்து புறப்பட்ட கிராம சேவையாளர்கள் மற்றும் பட்டதாரி பயிலுநர்கள், மாவிட்டபுரம் சந்திக்கு அண்மையிலுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லையில் வைத்து இராணுவ வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள் காணிகள் சுவீகரிக்கப்படுவது தொடர்பான அறிவித்தல்களை அந்தந்த இடங்களில் ஒட்டினார்கள். யாழ்.பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்துக்கு பலாலி, காங்கேசன்துறை ஆகிய உயர் பாதுகாப்பு வலயப் பகுதியை முறைப்படி கையளிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.vivasaayi.com/2013/04/blog-post_23.html
 9. தனி ஈழம் கோரிக்கையை முன்வைத்து வரும் மே மாதம் 19ம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் சேலம் ஏ.வி.எஸ். கலைக் கல்லூரி மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள், ஸ்ரீ பாலமுருகன் பாலிடெக்னிக் மாணவர்கள், தியாகராஜா பாலிடெக்னிக் மாணவர்கள், கருப்பூர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என சேலத்தை சேர்ந்த ஐந்து கல்லூரி மாணவர்கள் கலந்துக் கொண்டார்கள். அவர்கள் கூறுகையில் , 1967ல் தென்னாப்பிரிக்கா இனவெறி அரசுக்கு எதிராக உலகமே ஒன்று திரண்டு எதிர்த்தது. அதுபோல இலங்கைக்கு எதிராக இருந்து தனித் தமிழ் ஈழம் பெற்றுத் தர வேண்டும். அதற்காக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு வரும் மே 19ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரமாண்ட அளவில் பேரணியும் பொதுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரியில் தொடங்கி சேலம் போஸ் மைதானம் வரை பேரணியும், மாலை 5 மணிக்கு பொதுக் கூட்டமும் நடைப்பெறும். இதில் சேலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ - மாணவர்களும் கலந்துக் கொள்ளுவார்கள். தொழிலாளர் பெருமக்களும், மீனவ அமைப்புகளும் பெருமளவு கலந்துக் கொள்ளுவார்கள். நிச்சயமாக அரசியல் கட்சிகளுக்கு அழைப்பில்லை. அதை முன்னிட்டு தமிழகம் முழுக்க நான்கு கட்ட பிரசார பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடைபெறும். ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இலங்கையை கண்டிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைப்பெறக் கூடாது என்கிற பிரசாரத்தையும், ஏப்ரல் 22 முதல் 28ஆம் தேதி வரை பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாமை மூடவும், இலங்கை அகதிகளுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கவும் போராட்டம் நடைப்பெறும். ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி மே 5ஆம் தேதி வரை மீனவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மே 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும். இறுதியாக மே 19ஆம் தேதி பேரணியும், பொதுக்கூட்டமும் நடைப்பெறும். இத்தோடு எங்கள் போராட்டம் நின்று விடாது. தொடர் போராட்டமாகவே இருக்கும் என்றார்கள். http://www.vivasaayi.com/2013/04/19_20.html
 10. பிரித்தானிய நாடாளுமன்றில் ரதிமோகன் லோகினி பற்றி கதைப்பேன் உறுதிமொழி வழங்கிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை உலக தமிழ் சொந்தங்களுடனும், சகல தமிழ் அமைப்புக்களுடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்க உள்ளது. தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தின் அறிமுக நிகழ்வாக அனைத்து நாடுகளிலும் தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்து அறிமுகம் நடைபெற உள்ளது. இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சகல தமிழ் அமைப்புக்களையும்,ஊடகங்களையும் உள்ளடக்கி இன்று நடந்த அறிமுக அரங்கில் பங்கு பற்றிய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே பாராளுமன்றத்தில் இதைப்பற்றி தான் பேசுவதாக உறுதி மொழி அளித்தார் http://www.vivasaayi.com/2013/04/blog-post_7748.html
 11. இறுதி யுத்த நடவடிக்கையின் போது முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மூத்த போராளிகளை வடிகட்டுவதினில் கருணாவே முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் பங்கெடுத்த படை அதிகாரி ஒருவர் வழங்கிய தகவல்கள் பிரகாரம் சரணடைந்தவர்களது பெயர்பட்டியல்கள் கருணாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையினில் தடுத்து வைத்திருக்கப்படவேண்டியவர்கள் மற்றும் தீர்த்துக்கட்டப்பட வேண்டியவர்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் தடுத்து வைக்கப்படவேண்டியவர்கள் தொடர்பான பட்டியலில் நூற்றுக்கும் குறைவானவர்களது பெயர்களே இருந்ததை தான் கண்டிருந்ததாக அப்படை அதிகாரி மேலும் தெரிவித்தார். ஏற்கனவே முள்ளிவாய்க்காலில் அகப்பட்டுக்கொண்ட பாலச்சந்திரன் சரண் அடைந்திருக்கவில்லையென தெரிவித்த அப்படை அதிகாரி நிராயுதபாணியாக அகப்பட்டுக்கொண்டதாகவே தெரிவித்தார்.எனினும் பாலச்சந்திரன் படுகொலைக்கான ஆலோசனையினை கருணாவே வழங்கியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்ட அவ்வதிகாரி அப்போது பெரும்பாலும் கோத்தா அனைத்திற்கும் கருணாவின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட வேண்டியவர்கள் தவிர்த்து ஏனையவர்கள் வேறு பிரிவு படை அதிகாரிகளிடம் கையளித்ததாக தெரிவித்த குறித்த படை அதிகாரி அவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் பற்றி கூறமுடியாதிருப்பதாகவும் கூறினார். எனினும் சரணடைந்தவர்களுள் பலர் கொழும்பு முதல் யாழ்ப்பாணம் ஊடாக படையினரால் கூட்டிச்செல்லப்பட்டு தேவையான தகவல்கள் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறாக இருப்பினும் சரண் அடைந்தவர்களது நிலையினை அறிந்தவர்களுள் கருணாவும் ஒருத்தரென சுட்டிக்காட்டிய அவர் மகிந்த கும்பல் ஓரு வேளை போர்குற்றவாளிகளென அறிவிக்கப்படுமிடத்து அவர்களது பலியாடாக கருணாவே நிச்சயமாக இருக்கலாமெனவும் அவர் தெரிவித்தார். http://www.vivasaayi.com/2013/04/blog-post_692.html
 12. ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை அஞ்சலி திடீரென்று மாயமாகியுள்ளார். ஹைதராபாத்தில் தங்கி இருந்தபோது ஊடத்தினரை போனில் தொடர்பு கொண்டு சித்தி பாரதிதேவி மீதும் இயக்குனர் களஞ்சியம் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார்.இருவரும் தன்னை சித்ரவதைபடுத்தியதாகவும் பணம் கொட்டும் ஏ.டி.எம். மெஷின்போல் பயன்படுத்தினர் என்றும் கூறினார். இதுவரை சம்பாதித்த கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களை பறித்துக் கொண்டதாகவும் புகார் கூறினார். என் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததால் ஐதராபாத் வந்து விட்டேன் என்றும் இனிமேல் சென்னைக்கு வரமாட்டேன் என்றும் தெரிவித்தார். சித்தியுடன் ஏற்பட்ட தகராறுக்கு பின்னர் நடிகை அஞ்சலி தனது சித்தப்பாவுடன் ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். ஹோட்டலில் தங்கி அவர் படப்பிடிப்புக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் இருந்து அவரைக் காணவில்லை. அவரது சித்தப்பா வெளியே சென்றபோது அஞ்சலி மாயமாகியுள்ளார். அவரது கைபேசிக்கு அழைத்தாலும் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. அஞ்சலி இந்தி படமான போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அசின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புக்குத்தான் அவர் ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மாயமாகியுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. போல்பச்சன் பட நாயகனான நடிகர் வெங்கடேஷ், படப்பிடிப்புக்கு வராததால் அஞ்சலி மீது புகார் தர உள்ளதாக கூறியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. http://www.vivasaayi.com/2013/04/blog-post_6573.html
 13. இலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளையேனும் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை உரிய முறையில் ஏற்படுத்தாமை போன்ற காரணிகளினால் மீளவும் முரண்பாடுகள் வெடித்த சந்தர்ப்பங்கள் பல வரலாற்றில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இந்த நடவடிக்கை மிகவும் கடினமானது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கையானது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக நீண்ட காலமாக உறவுகள் நீடித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இலங்கைக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கியு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக அறிவித்த முக்கிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கருத்துச் சுதந்திரம் மிகவும் அவசியமானது எனவும், ஜனநாயக நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையான அளவில் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.vivasaayi.com/2013/04/blog-post_9.html
 14. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் செய்தி-ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான தினேஷ் அவர்களின் செய்தி video ஒருங்கிணைப்பாளர்கள், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து பேரணிக்கு அதரவாக நேரடியாக குரல் கொடுத்தார் தமிழர்களே தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கவேண்டும்.ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான தினேஷ் அவர்களின் செய்தி for video http://www.vivasaayi.com/2013/04/video_5.html