புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  11,424
 • Joined

 • Last visited

 • Days Won

  62

புங்கையூரன் last won the day on February 17

புங்கையூரன் had the most liked content!

Community Reputation

2,629 நட்சத்திரம்

2 Followers

About புங்கையூரன்

 • Rank
  Advanced Member
 • Birthday

Contact Methods

 • Website URL
  http://www.punkayooran.com

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

3,337 profile views
 1. பறவையினங்களில்...., நீங்கள் மட்டும் தான், எரிமலைகள துப்பும்.., கரி மேடுகளில், கூடு கட்டுகிறீர்கள்! ஒரு வேளை.., சாம்பலில் தோன்றும், அக்கினிப் பறவைகள், நீங்கள் தானோ என்றும், நினைப்பது உண்டு! உங்கள் கலப்பை அலகுகள், உழுகின்ற ஏரிக் கரைகளில்,, விளைகின்ற..., சிப்பிகளின் வயிற்றில்,, முத்துக்கள் கருக்கட்டும்! வாடைகாற்றின் ஓசையில்.., நீங்கள் நிகழ்த்துகின்ற நடனம்.., பிரபஞ்சத்தின் அசைவுகளின் துல்லியத்தை, பிரதி பலிக்கும்! பொழுது போகாத நேரங்களில், பிரமதேவன் உருவாக்கிய. படைப்புக்கள் நீங்கள்! நாணத்தில் நனைகின்ற..., பெண்களின் கன்னங்களில், வண்ணமெடுத்து.., உங்களை வடித்திருக்கிறான்!
 2. என்னப்பு நீங்கள்...இவ்வளவு அப்பாவியாய்...! வைனை மணந்து பார்த்தே...எந்த ஏரியாவில இருந்த வந்ததெண்டு சொல்லுற காலத்திலை..நீங்கள் இப்பிடி..? கள்ளை நாக்கில வைச்சே ( புளிக்காத கள்ளு) எந்தப் பனையில இருந்த இறக்கின கள்ளு என்று சொல்ல முடியுமே! என்னால் கடல் றாலுக்கும்...கழி றாலுக்கும் வித்தியாசம் சொல்ல முடியும்! மீனை மணந்து பார்த்தே ...எந்தக் கடல் மீன் என்றும் சொல்ல முடியும்!
 3. உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப் படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்! அழகுக்காக..., எமக்குள் நிகழ்ந்த மரணங்களும், ஏராளம்! எந்தத் திமிரும் இன்றி.., எளிமையாக நிற்கிறாயே! ஏன்..? உன்னிடம்,,, முகம் பார்க்கும்,, கண்ணாடி இல்லை என்பதாலா? உன் காலடியில், தவழ்கின்ற நீரே..., கண்ணாடி தானே!, புரிந்து கொள்கிறேன்! நீ பறவையினம்! நான்....,, மனிதகுலம்!
 4. மண்ணைக் கிண்டிப் பார்த்தால் .....தெரியும்!
 5. நுணாவுக்கும், அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
 6. ஆமோதிப்பவர்களும், முன் மொழிபவர்களும், வழி மொழிபவர்களும்.....வேலிப் பொட்டுக்குள்ளால ஒரு செம்மறியாடு புகுந்தால் ...மற்றச் செம்மறியாடுகளும்..அதுக்குளால...பூர முயற்சிக்கிறது போல கிடக்குது! ( நோ ஒபென்ஸ்)! ஆராவது நெடுந்தீவுக் கழியில வாற றால் சாப்பிட்டுப் பார்த்த ஆக்களோ என்றால்....விடை இல்லை என்று தான் இருக்கும்! இது ஹிந்தியர்...வியாழனின் மேட்பரப்பைப் பற்றிக் கருத்துக் கூறிற மாதிரிக் கிடக்குது! ( மீண்டும்நோ ஒபென்ஸ்)!
 7. நல்லவர்க்குக் காலமில்லை! இது நான்கு மறை...தீர்ப்பு! ஆழ்ந்த அஞ்சலிகள்!
 8. காவிய நாயகர்களைக் காலம் காவு கொண்டு விட்டது உண்மை தான்..! இருப்பினும், அவர்கள் விட்டுச் சென்ற நினைவுகள்...எமக்கு ஒரு உத்வேகத்தைத் தந்து கொண்டிருக்கும்! அவர்களது உன்னதமான நோக்கங்களை நோக்கிய பயணத்துக்கும் ஒரு தூண்டு கோலாக அமையும்! உங்கள் நினைவுகள், அவை எவ்வளவு சிறியவையாக இருப்பினும்...எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
 9. சின்னம்மா, பெரியம்மா, குஞ்சியம்மா, ஆசையம்மா.....! நீங்கெல்லாம் சோத்துக்கு ..உப்பு போட்டு சாப்பிடுகிற மனுசர் தானா? தமிழ் நாட்டு ....அம்மா...அரசியலைப் பார்க்க வாழ்க்கையே வெறுக்குது...!
 10. பொன்னம்மான் மறைந்த அன்று...சுண்டிக்குளியடியில் நின்றிருந்தேன்! அந்தச் சத்தம் இன்னும் காதில் ஒலிப்பது போன்ற பிரமை! அடுத்த வாங்கிலிருந்தவன்...அழிந்து போனதை இன்றும் நம்ப முடியவில்லை! விடியலை நோக்கிய பயணத்தில் வீழ்ந்த அனைவருக்கும்....வீர வணக்கம்!
 11. நன்றி.... தமிழ் சிறி அண்ணா! உங்கள் ஊக்குவித்தலை வாசிக்கும் போது..ஒரு அழகிய 'அப்சரஸ்' முதுகில் தடவுவது மாதிரி இருக்கும்! யாழில் கொஞ்சம் முன்போல எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்!