Jump to content

குமாரசாமி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    43059
  • Joined

  • Days Won

    438

Everything posted by குமாரசாமி

  1. அட கந்தையர் நீங்களும் இதுக்குள்ளையே நிக்கிறியள்? 🤣 அது சரி எப்ப தொடக்கம் உந்த விதியள் எல்லாம் சட்டத்துக்கு வருதாம்? 😎
  2. வட கொரிவாவை விடுங்கள். அதன் போக்கு தனி. உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் ரஷ்ய சீனமக்கள் பரந்து பட்டு வாழ்கின்றார்கள். அகதிகளாக இல்லை. அதுவும் தங்கள் சொந்த நாட்டு பிரஜாவுரிமையுடன் வாழ்கின்றார்கள். ரஷ்ய சீன பொது மக்கள் அகதிகளாக எங்கும் புலம்பெயரவில்லை..
  3. ச்...சா என்னதொரு புத்திசாலி பயல் 🤣
  4. நீங்கள் நன்றி விசுவாசத்திற்காக மேற்குலகின் செயல்களை ஆதரிக்கின்றீர்கள் என எடுத்துக்கொள்கின்றேன். நியாயம் இரண்டாம் பட்சம்.....
  5. ஜேர்மனியிலையும் முந்தி உப்பிடி கார்க்களவுகள் எக்கச்சக்கமாய் நடந்தது. இப்பவும் கார் உள்ளுக்குள் இருக்கும் முக்கிய உதிரி பாகங்களை திருடுகின்றார்கள். இருந்தாலும் முந்திய மாதிரி இல்லாமல் கார்க்களவை கட்டுப்படுத்தி விட்டார்கள். இங்கே கார்க்களவுக்கு பிரபலமானவர்கள் ஆரெண்டால் போலந்துகாரர்,உக்ரேன்காரர்,ரஷ்யக்காரர்,ருமேனியா பல்கேரியா ஆக்கள் தான் 🤣
  6. வெளிநாடுகளிட்ட கையேந்தி பிச்சையெடுத்தும் ரோசமானமில்லாமல் தங்கவேலி கட்டிக்கொண்டு திரிகின்றார்கள். நாடு இருக்கும் நிலமையில் விகாரைகள் கட்டி தங்க வேலிகளால் அடைக்க வேண்டிய அவசியமென்னவாம்? 🤣
  7. எல்லாரும் சிரிலங்காவுக்கு போய் ஆராச்சி செய்யிற அளவுக்கு அப்பிடி என்னதான் அங்கை கிடக்கு.....?😁
  8. அன்றைய இலங்கையிலும் இன்றைய இலங்கையிலும் இந்த ஏற்றத்தாழ்வு மனப்பான்மை இல்லை என்கிறீர்களா? இந்த மனப்பான்மை உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும் உள்ளது தானே? அதை எமது சமூகத்தில் மட்டும் உள்ளதென ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருப்பது எமது மூக்கை நாமே கிண்டுவது போலாகி விடும் விசுகர்...🙂
  9. ஆமைகளின் வழித்தடத்தை பின்பற்றி கடல்வழிகளை கண்டறிந்து உலகம் முழுவதும் கடல்வழிப்பயணம் மேற்கொண்ட தமிழனின் பெருமை அறியாதோர் ஆமையினை இழிவாக பார்ப்பர். ஆமையினது வாழ்க்கை முறைகளை அறியாதோர் அதனை கேவலமாக பார்ப்பர். நாம் தமிழர் கட்சிக்கு ஆமை சின்னம் பொருத்தமானதே. ஏனெனில் அது இயற்கையோடு ஒன்றி வாழும் உயிரினம். யாருக்கும் தீங்கு செய்யாத உயிரினம்.ஆறறிவு படைத்த மனிதனை விட நீண்ட காலம் வாழும் உயிரினம். ஆயிரம் முட்டைகள் போட்டாலும் அமைதியாய செல்லும் உயிரினம். ஆமையிடமிருந்து மனிதன் இன்னும் ஆயிரம் ஆயிரம் விடயங்களை படிக்க வேண்டும்.
  10. ஜேர்மனிய ஜனாதிபதியும் புட்டினுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையாம்.......கலியாண வீட்டிலை மாப்பிளையின்ரை சீப்பை ஒளிச்சு வைச்ச பீலிங்......🤣
  11. இவ்வளவு கதைக்கும் நீ ஏன் ரஷ்யா போகவில்லை என மறைமுகமாக கேட்கின்றீர்கள் அப்படித்தானே?
  12. வைரவரின் வாகனத்திற்கு எங்கு அடி விழுந்தாலும் காலை மட்டும் தூக்குமாம்🤣.அது போல் மேற்குலக விசுவாசிகளுக்கு ஏதாவது நொண்டிச்சாட்டுக்களை சொல்வதே வேலையாக போய்விட்டது.😎 ஈராக் மீது தாக்குதல் நடாத்தி விட்டு போரினால் எரிபொருள் விலையேற்றம் அதனால் அத்தியாவசிய பொருட்களும் விலையேற்றம் என்றார்கள். அதே பல்லவியை லிபியா மீது தாக்குதல் நடாத்தி விட்டு விலையேற்ற பஜனை பாடினார்கள். பலஸ்தீன விவகாரத்திலும் அதே பஜகோவிந்தம் தான். இப்போது கௌதிகளின் தாக்குதல் விடயத்திலும் பச்சைமிளகாய் விலை ஏற்றத்திற்கும் அவர்கள் தான் காரணம் என்பர். ஆனால் மலிந்த இலகுவாக கிடைக்கக்கூடிய ரஷ்ய எரிபொருள் பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஏனெனில் அங்கே மனித உரிமை மீறல் நடக்கின்றதாம். எண்ணை வழங்கொழித்த மத்திய கிழக்கில் நடக்காத மனித உரிமை மீறல்களா ரஷ்யாவில் நடக்கின்றது?
  13. நல்லாயிருக்கு....கந்தையர் 😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால் அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது. இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில் அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல் நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
  14. முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
  15. தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
  16. தனியாக இருப்பவர்களிடம் போய் கேட்டுப்பாருங்கள் நீ ஏன் தனியாக இருக்கின்றாய் என அதற்கு அவர்கள் சொல்லும் பதில் தனியாக இருப்பது பிடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.... அவர்கள் மற்றவர்களால் பலமுறை காயப்படுத்தப்பட்டிருப்பார்கள். அதனாலேயே அவர்கள் தனிமையை நாடுகின்றார்கள்.
  17. நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை. 1982 ம் ஆண்டு வந்தேன். படிக்க அனுமதியில்லை வேலை செய்ய அனுமதியில்லை அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டாய வேலை செய்ய வேண்டும் வீதி பெருக்குதல்,குப்பை அள்ளுதல். வேறு நாட்டுக்கு போக அனுமதி கேட்டேன் அதுவுமில்லை. வேறு நாட்டுக்கு செல்ல எத்தனித்தேன். சிறை வைத்தார்கள். ஜேர்மனி சுக போக வாழ்க்கை???? மண்ணாங்கட்டி வாழ்க்கை.😡
  18. எனக்கு மேற்குலகில் நடக்கும் சில பல அரசியல் கொள்கைகள் எப்படி பிடிப்பதில்லையோ அது போல் கிரம்ளின் அரசியல் கொள்கைகளும் சில பிடிப்பதில்லை. இருந்தாலும் புட்டினுக்கு ரஷ்யாவில் பலத்த ஆதரவு இல்லை என்று சொல்வதற்கில்லை. அவர் பின் பலமான ரஷ்ய மக்கள் பின் நிற்கின்றார்கள். இதை பல ஊடகங்களே சொல்லி நிற்கின்றன. ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மேற்குலகு லிபியாவிலும் ஈராக்கிலும் எதை செய்து கிழித்தார்கள் என இன்றும் எனக்கு புரியவில்லை? மாறாக உள்நாட்டு கலவரங்களை உருவாக்கி மக்களை அகதிகளாக்கியது தான் மிச்சம். எனவே இந்த மேற்குலகு தங்களுக்கு பிடிக்காத அரசாட்சி உள்ள நாடுகளை குட்டை குப்பைகளாக்கியதுதான் மிச்சம். மேற்குலகுடைய சேட்டைகளின் பாதிப்பில் இலங்கை பிரச்சனையும் அடங்கும். மேற்குலகு எவ்வளவிற்கு தீவிரமாக நேட்டோ எனும் போர்வையில் ரஷ்யாவை ஒடுக்க நினைக்கின்றதோ அந்த அளவிற்கு ரஷ்ய தேசியவாதிகளும் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள். இருக்கின்றார்கள். ரஷ்யர்களும் தமது நாடு தமது கொள்கை என்ற வீராப்புடன் இருப்பதை நாமும் ஏற்றுக்கொண்டே ஆகும் சூழ்நிலை அல்லது கட்டாயமும் உண்டு. இன்றைய ரஷ்யா அன்று சோவியத்யூனியனாக இருந்த போது ஐரோப்பாவிடம் இருந்த பரஸ்பர பொருளாதார ஒப்பந்தங்களும் அரசியல் புரிந்துணர்வுகளும் இன்று இல்லாமல் போனதின் காரணம் என்ன? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பேச்சுவார்த்தைகள் தானே பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தது. அந்த பேச்சுவார்த்தைகள் ஏன் இன்று நடை பெறவில்லை? ஆயுத முன்னேற்றமா அல்லது ஆயுத பரீட்சார்த்தமா? ரஷ்ய தேர்தல் நேர்மையாக நடந்ததா இல்லையா என்பதற்கப்பால் ரஷ்ய அதிபர் புட்டின் பின்னால் பெரும்பான்மை மக்கள் நிற்கின்றார்கள் என்பது கண்கூடு.தேர்தல் முடிவை விட அவர் பக்கம் மக்கள் நிற்கின்றார்கள்.இது வெளிப்படையாகவே தெரிந்த விடயம் நாம் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என புட்டின் சொல்வதும் மேற்குலகினர் நவீன ஆயுதங்களை பயன்படுத்துவோம் என சூளுரைப்பதும் ஒரே குட்டைக்குள் ஊறிய மட்டைகள்.
  19. புட்டின் தனது எதிராளிகளை கொல்ல நினைத்தால் காதும் காதும் வைத்த மாதிரி யாருக்குமே தெரியாமல் செய்ய முடியும். ஏனெனில் அவர் ஆட்சியில் இருக்கும் சர்வ வல்லமை பொருந்திய அரசியல் தலைவர். ரஷ்ய அரசு மட்டத்தில் இருக்கும் பரம ரகசியங்கள் மேற்குலகிற்கு தெரிய வருகின்றது என்றால் ஏன் இது வரைக்கும் மேற்குலகால் அந்த கட்டமைப்பை உடைக்க முடியவில்லை?
  20. அந்த சுதந்திரம் Afd எனும் கட்சியில் வந்து நிற்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் பெருமளவு வளர்ந்து விட்டார்கள்.மேற்கு ஜேர்மனியிலும் வளர்ந்து கொண்டு வருகின்றார்கள். மக்கள் விரும்பி வாக்களித்து Afd ஐ பல இடங்களில் தங்கள் அபிமான வேட்பாளர்களை சிறிய சிறிய அதிகார பீடங்களில் அமர்த்தியுள்ளார்கள். நண்பா! சுதந்திரம் என்பது ஓரளவிற்குத்தான். அந்த சுதந்திரம் மீறினால் நாட்டையே உலுப்பி உன்னையே அழித்துவிடும். ஒரு ஹிட்லர் உருவாக வேண்டிய காரணமும் இதுதான்.
  21. சாதி வெறிகளை ஒழிக்க அரசு ரீதியாக சட்டங்களை உருவாக்க வேண்டும். சாதி கதைப்போருக்கு தண்டனைகள் வழங்க வேண்டும். எல்லோரும் சமம் என்றொரு நிலையை சட்ட ரீதியாக கொண்டு வரவேண்டும். சாதியையும் மதத்தையும் கணக்கில் எடுக்காமல் தமிழர் பிரதேசங்களில் ஒரு ஆட்சி முறையே நடந்தது என்பதை யாரும் நம்பினால்........ சட்டங்கள் மூலமாக எதையுமே சாதிக்கலாம் என்பதையும் நம்பலாம். இல்லையேல் சிரட்டை கலாச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மௌனத்தை விட பிரம்புகளே சொன்னதை சாதித்தது என்பது உலக வரலாறு.
  22. இதை வைச்சு புட்டினுக்கும் ரஷ்யாவுக்கும் அடிக்கிறம். உக்ரேனை எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாறம். அப்பிடியே ரஷ்யாவையும் கொஞ்சம் கொஞ்சமாய் எங்கடை கைக்குள்ள கொண்டு வாறம்....😎
  23. எல்லாம் கள்ள ஓட்டுக்கள் எண்டு சொன்னாலும் சொல்லுவினம் 🤣
  24. தாய் மொழி பேசுவது காலால் நடப்பது போல.... அடுத்த மொழி பேசுவது தலைகீழாக கையால் நடப்பது போல.....
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.