போல்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  2,929
 • Joined

 • Last visited

Community Reputation

231 Excellent

1 Follower

About போல்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Interests
  வாசித்தல், இசை, விளையாட்டு, ...

Recent Profile Visitors

1,596 profile views
 1. தமிழ் சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலம்! சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர்கள் கைது திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார். இந்நிலையில், குறித்த பகுதியில் முரண்பாடுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடன் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் தமிழ் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சம்பவத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமிகளே பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுமிகளை வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளேன். குறித்த சிறுமிகளின் வைத்திய பரிசோதனை திருகோணமலை வைத்தியசாலையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக கூறியிருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருப்பதாக அவர் கூறினார். இதேவேளை, குறித்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அந்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எடுத்துக்கூறியுள்ளேன். அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு எந்த வகையிலும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். http://www.tamilwin.com/community/01/147226?ref=home-top-trending
 2. வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையில் சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் வடக்கு திசை நோக்கி நகர்ந்தால் மணிக்கு 80கி.மீ. வேகத்தில் காற்று வீசி சூறாவளியை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தகவல் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியிலுள்ள தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து வங்காள தேசம் வரை பயணிக்கும் என்று வானிலை அவதான நிலைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக இலங்கையில் சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், தென் மாகாணம் போன்ற பகுதிகளில் காற்றின் வேகம் மிகவும் அதிகரித்துக் காணப்படும் என்றும் குறிப்பாக காலி, மாத்தறை உள்ளிட்ட கடற்பகுதியை அண்டிய பிரதேசங்களில் காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த நாட்களைப் போன்று நிலைமை பாரதூரமானதாக இல்லாவிடினும் காற்றின் வேகம் அதிகரிப்பதைப் பொறுத்தே நிலைமை மாற்றமடையும் என்றும், மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, வங்கக் கூடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, கடலூர் ஆகிய துறைமுகங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளன. வங்கக் கடலில் கொல்கத்தாவுக்கு 950 கி.மீ. தெற்கே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, வடக்கு, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து, வங்கதேசம் அருகே நாளை செவ்வாய்க்கிழமை (மே 30) கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதிக வேகத்தில் காற்று வீசலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. http://www.tamilwin.com/weather/01/147261?ref=view-latest
 3. யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடாத்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் பரிந்துரை வழங்கினார். வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரை தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகளும் இன்று திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. தீர்ப்பாயத்தின் அடைவிடம், சாட்சியப் பதிவுகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை அவர்கள் ஆராய்வர் என்றும் கூறப்பட்டது. http://www.tamilwin.com/community/01/147256?ref=view-latest
 4. ஒற்றையாட்சியா? சமஷ்டியா? சொல் தொடர்பில் முடிவில்லை! புதிய அரசமைப்புத் தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை இறுதிசெய்யும் நோக்கோடு கடந்த வாரம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடந்த அமர்விலும் அரசின் தன்மை குறித்து தெளிவான ஓர் இணக்கம் எட்டப்படவில்லை. புதிய அரசமைப்பிலும் அரசின் தன்மை ஒற்றையாட்சி என்பதாகவே இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த விடயத்தில் இணக்கம் எதுவும் எட்டப்படவில்லை. முன்னதாக அரசின் தன்மை ஒற்றையாட்சி என்றே குறிப்பிடப்படவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவும் வலியுறுத்தியிருந்தது. ஏற்கனவே தயாரிக்கப்பட்டு தற்போது வழிகாட்டல் குழுவில் விவாதிக்கப்பட்டுவரும் இடைக்கால அறிக்கையில் அரசின் தன்மை 'ஒருமித்த நாடு' என்று தமிழிலும், 'ஏக்கிய ராஜ்ய' என்று சிங்களத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் அது 'ஏக்கிய' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற வழிகாட்டல் குழுக் கூட்டத்தில் இதனைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஆங்கிலத்தில் யுனிட்டரி (ஒற்றையாட்சி) என்ற பதத்துக்குப் பதிலாக 'ஏக்கிய' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று தெரிவித்தார். 'யுனிட்டரி' என்று குறிப்பிடுவதே பொருத்தமானது என்று தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அதனை எதிர்த்தார். 'ஒற்றையாட்சி' என்று அதனைக் குறிப்பிடுவது யதார்த்தமற்றது என்று சம்பந்தன் நிராகரித்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல், "வார்த்தைகளில் தொங்கிக்கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பை முன்கொண்டுசெல்வது பற்றியே சிந்திக்கவேண்டும்" என்றார். இந்த விவாதத்தின் ஒரு கட்டத்தில் இடைக்கால அறிக்கையில் ஏற்கனவே 'ஏக்கிய ராஜ்ய' என்று சிங்களத்திலும், 'ஒருமித்த நாடு' என்று தமிழிலும் கொடுக்கப்பட்டிருக்கும் தெரிவுகளைப்போன்றே தற்போதைய அரசமைப்பில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே ஒற்றையாட்சி என்பதையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறுவதைப் போன்று கூட்டாட்சி (சமஷ்டி) என்பதையும் குறிப்பிடலாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது. ஆனால், அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் நிராகரித்துவிட்டன. அந்த இரு சொற்களுமே இரு வேறு அர்த்தங்களைக் குறிப்பவை என்பதால் அதனை இடைக்கால அறிக்கையில் சேர்த்துக்கொள்வது இணக்கமொன்று எட்டப்படாதமையைக் குறிக்கும் என்று காரணம் கூறின. இந்த விவாதத்தையடுத்து, இறுதிசெய்யப்படவுள்ள இடைக்கால அறிக்கையில் அரசின் தன்மை குறித்த உள்ளடக்கத்தை மட்டுமே முன்வைப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. அரசின் தன்மை ஒற்றையாட்சியா அல்லது கூட்டாட்சியா (சமஷ்டியா) என்பதைக் குறிப்பிடுவதில்லை என்று இணங்கப்பட்டது. எதுவாக இருந்தாலும் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட அதிகூடிய அதிகாரப்பகிர்வை ஏற்படுத்துவது என்பதை அனைத்துத் தரப்புகளும் ஏற்றுக்கொண்டன. http://www.tamilwin.com/politics/01/147240?ref=view-latest
 5. போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றவாளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது, மாறாக அவர்களைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைப் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிடம் குறித்த விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ள அவர், ஜகத் டயஸின் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஹெய்ட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படும் வரையில் ஹெய்ட்டியில் இலங்கைப் படையினர் நிறுத்தப்படக் கூடாது. ஜகத் டயஸ் தலைமை தாங்கிய 57வது படைப்பிரிவினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியமை பற்றிய பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilwin.com/politics/01/147159?ref=recommended3
 6. திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் தமிழ் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அந்த பிரதேசத்தில் தற்போது அமைதியின்மை நிலவுகின்றது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிசார் உள்ளிட்ட எவரையும் குறித்த பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த மூன்று சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/community/01/147213?ref=recommended1
 7. யுத்தத்தின் பின்னர் தமிழர்களில், சைவர்கள் மத்தியில் சீதனம், சாதி போற்ற தடைகள் குறைந்துள்ளதையும் கிறிஸ்தவர்கள் மத்தியில் சீதனம், சாதி போற்ற தடைகள் பெருகியுள்ளதையும் காணலாம்!
 8. தமிழினப்படுகொலைகாரன் ஒருவன் அழிந்தான்!
 9. சீ.வீ.கே.சிவஞானம் வடக்கு மாகாண அவைத்தலைவர் பதவிக்கு பொருத்தமற்றவர்! இவரை தொடர்ந்து அந்த பதவியில் வைத்திருப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல.
 10. வந்தவர்கள் தங்கள் மனிதாபிமான உதவிகளான குண்டுவீச்சு, செல் வீச்சுகள், பீரங்கி சூடுகளை இன்னும் தொடங்காமல் இருப்பது ஏனோ?
 11. மயானத்துக்கு எதிராக பிரச்சினையை கிளப்பிய அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைப்படுவதுடன் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடுகளையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்!
 12. இனப்படுகொலைகாரர்களின் சந்திப்பில் பல இரகசியங்கள்!
 13. சகல ஊடகங்களில் வந்த இந்த செய்திகளில் ஒன்றில் பாரிய தவறு இருக்கவேண்டும் அல்லது மிகமோசமான சதித்திட்டங்கள் இருக்க வேண்டும்! சிங்கள-பௌத்த இனமத வெறியர்களும் தமிழர்களுக்கு நீதியை மறுக்கும் சகல சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளும் வேண்டுவது Unitary (ඒකීය) ஏகீய தன்மைகள் கொண்ட அரசியலமைப்பை. இதையே சம்பந்தனும் வலியுறுத்தி கோபமடைந்தார் என்றால் இந்த செய்திகளில் ஒன்றில் பாரிய தவறு இருக்கவேண்டும் அல்லது மிகமோசமான சதித்திட்டங்கள் இருக்க வேண்டும்! கூட்டாட்சி (Federal) என்ற தமிழர்களின் குறைந்தபட்ச கோரிக்கைக்கு எதிராக செயற்பட்டு சம்பந்தனுக்கு ஜனாதிபதியாகும் ஆசை வந்திருந்தால் இதை வலியுறுத்தி கோபமடைந்திருக்கலாம். அல்லது செய்திகளில் முழுமையில்லாது பாரிய தவறு நடந்துள்ளது. இதை விளங்குமளவுக்கு தரமான தமிழ் ஊடகவியலாளர்கள் இல்லை!
 14. வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள சுமார் 150 குடும்பங்களின் பாவனைக்காகவே இந்த குடிநீர்த் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் பாவனைக்காக இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார். மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/development/01/147076?ref=view-latest