தமிழீழன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  330
 • Joined

 • Last visited

Posts posted by தமிழீழன்


 1. தமிழ், கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தி ஒன்று "ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது'.

  "தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

  ÷தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

  ÷""உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.

  ÷வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்'.தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

  - நன்றி முகநூல் -


 2. u1_thamil-035-ss.jpg

  தாயகத்தில்
  நிகழ்ந்த யுத்தம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை அழித்து பல்லாயிரக்கணக்கில்
  காணாமற்போக வைத்து துன்பத்தையே வெகுமதியாக வழங்கியிருக்கிறது. யுத்தத்தின்
  கோரம் அழிவு அடிப்படை வாழ்வாதார வீழ்ச்சியானது நாளாந்த உணவுக்கே
  அவலப்படவைத்துள்ளது.

  ஆனால் பசியோடு
  இருந்தாலும் கௌரவமாக வாழ்வதனையே எங்கள் இனம் விரும்புகிறது. இந்த
  வறுமையிலும் தன்மானத்தை விற்றுவிடாமல் பட்டினியையும் சமாளிக்கக்
  கற்றுக்கொண்ட தாய்மாரையும் சகோதரிகளையும் எங்களுக்கு கிடைக்கிற தொடர்புகள்
  குரல்களிலிருந்து அறிய முடிகிறது.

  இவர்கள்
  அதிகம் படித்திருக்கமாட்டார்கள் அழகாக அலங்கரிக்கமாட்டார்கள்
  கவர்ச்சிகரமாகப் பேசமாட்டார்கள். வெளி உலகோடு தொடர்பை ஏற்படுத்துவதைக் கூட
  விரும்பமாட்டார்கள். ஆனால் தமக்கென்று ஒரு எல்லையை வகுத்து அதனுள்ளே
  எல்லாச் சவால்களையும் சமாளிக்கக் கற்று வாழ்ந்து விடுகிறார்கள்.
  இத்தகையோரையே எங்கள் சமூகமும் கொண்டு தனது வாழ்வையும் பண்பாட்டையும்
  காப்பாற்றியதோடு சமூக ஒழுக்கநெறிகளையும் பேணிக்கொண்டது வரலாறு.

  ஆனால்
  எங்கள் இனத்தின் அடிக்கட்டுமானம் பண்பாடு பழக்க வழக்கம் ஒழுக்கம்
  எல்லாவற்றையும் சிதைத்துக் கொண்டு தாயகத்திலிருந்து ஒரு பகுதி இளம் பெண்கள்
  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களை இத்தகைய இழிவு நிலைக்குள் தள்ளி
  பணத்தைக்காட்டி எங்கள் சமூக கட்;டமைப்பையே சிதைப்பது இலங்கையரச
  புலனாய்வாளர்களாக உள்ளார்கள்.

  இலங்கையரச
  புலனாய்வாளர்களால் தயார்படுத்தப்பட்ட யுவதிகள் திட்டமிட்ட வகையில்
  புலம்பெயர் நாடுகளில் வாழும் போராளிகள், தேசியச் செயற்ப்பாட்டாளர்கள்
  மற்றும் இளையோர் அமைப்புகளில் இயங்கும் இளையோரிடம் சாதுரியமா வௌ;வேறு
  காரணங்களை முன்னிலைப்படுத்தி தொடர்புகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

  இத்
  தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ள இவர்கள் தம்மை முன்னாள் போராளியாகவும்
  ஈழவிடுதலைமீது கடுமையான விசுவாசியாகவும் தம்மை அடையாளப்படுத்திக்
  கொண்டுள்ளார்கள். இவர்களது அழகையும் கவர்ச்சியான பேச்சையும் நம்பிய பல
  தேசியச் செயற்பாட்டாளர்கள், இளையோர் அமைப்பு பிரதிநிதிகள் இந்தச்
  சதிவலையில் மாட்டிக் கொண்டுள்ளதை பல ஆதாரங்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது.
  அதிகம் முகப்புத்தகம் , ஸ்கைப் மூலம் தொடர்பில் வந்தே பலரை தமது வலையில்
  சிக்கவைத்துள்ளனர்.

  இந்த வலையமைப்பானது
  இளையோரைக் கொண்டதாக உள்ளதால் இலகுவில் இளையோர் பலரை காதல் என்ற மாயைக்குள்
  வீழ்த்தி புலம்பெயர் தேசியச் செயற்பாட்டின் உள்ளக விபரங்களையும் இலகுவாகப்
  பெற்றுக் கொள்கிறார்கள். பலர் இத்தகையோரின் காதல் வலையில் வீழ்ந்து தங்களது
  உழைப்பு வாழ்வு யாவையும் இழந்து போயுள்ளார்கள். சிலர் தங்களை இந்தக்
  குழுவின் முகவர்களாகவும் மாற்றி இயங்கத் தொடங்கியுள்ளார்கள்.

  இக்கட்டமைப்பின்
  நோக்கம் எமது அடுத்தகட்டப் போராட்ட நகர்வுபற்றிய தகவல்களை சேகரிப்பதாகவும்
  இன்று இலங்கையை அச்சமூட்டிக் கொண்டிருக்கும் புலம்பெயர் சமூகத்தின்
  ஒற்றுமைத் தளத்தை சிதைப்பதற்காகவுமே அதிகளவு தமிழ் ஆண் , பெண்களைக்
  களமிறக்கி எங்கள் இனத்தினராலேயே எங்கள் ஒற்றுமையை சிதைக்கும் திட்டத்தை
  அரங்கேற்றி வருகிறது.

  இலங்கையரச புலனாய்வுப்
  பிரிவினரால் பல பெண்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். skype facebook மூலம்
  பேசும் இவர்களை அடையாளம் காண்பது மிகக்கடினம். இவர்கள் எதிர் பார்க்கிற
  தகவல்கள் உங்களிடம் கிடைக்காவிட்டாலும் தமது தேவைக்கான மேலதிக பணத்தினையும்
  பொருட்களையும் வாங்கிக் கொண்டு காணாமல் போய்விடுகிறார்கள். 

  எதிரியின்
  தேவையும் நிறைவேறுகிற சம நேரத்தில் தங்களது சொந்த பணத்தாசையையும் இவர்கள்
  இலகுவாக நிறைவேற்றிக் கொண்டு போய்விடுகிறார்கள்.இப் பெண்கள் குறித்து
  விழிப்பாக இருக்குமாறு தேசியச் செயற்பாட்டாளர்கள் இளையோர் அமைப்பின்
  அங்கத்தவர்கள் மற்றும் தேசியச் செயற்பாட்டோடு தொடர்புபட்ட யாவரையும்
  கேட்டுக் கொள்கிறோம்.

  இந்தியா , மலேசியா ,
  தாய்லாந்து , இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் இந்தக் குழுவினரையும்
  இலங்கையரச புலனாய்வாளர்கள் அனுப்பி வைத்து இறுதி யுத்தத்தில் சரணடைந்து
  காணாமற்போனவர்களின் குடும்பங்கள் நாட்டைவிட்டு வெளியேறி வாழும் முன்னாள்
  போராளிகளின் இருப்பிடங்களையும் அறிந்து அவர்களுக்கு உயிராபத்தினையும்
  விளைவிக்கும் பல சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இதனையும் விட
  வெளிவாரிப்பட்டப்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் போலவும் ஆசிய
  நாடுகளுக்குள் பலரை களமிறக்கியுள்ளனர்.

  இந்தப்
  பெண்களும் ஆண்களும் பயன்படுத்தும் சுட்டுப்பெயர்களும் ஸ்கைப் ,
  முகப்புத்தகத்தில் ஈழம் சார்ந்தும் மாவீரர்களின் பெயர்களையும் கொண்டதாகவுமே
  அமைந்துள்ளதை அவதானித்துள்ளோம். இவர்களின் தொடர்புகள் பற்றி ஆள
  ஆராய்ந்ததில் இவர்களைக் களமிறக்கியுள்ள புலனாய்வாளர்களின் பின்னணிகளையும்
  அறிய முடிந்துள்ளது.இதில் பல ஊனமுற்ற பெண்களும் இணைக்கப்பட்டுள்ளார்கள். 

  இவர்கள்
  தங்களது ஊனத்தைக் காட்டி இலகுவாக நம்பிக்கையையும் பெறுவதோடு காதலிப்பதாகப்
  பொய்கூறி பல இளைஞர்களை ஏமாற்றியும் வருகிறார்கள். ஒரே பெண் தற்போதைய
  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்கள் படங்களை முகம்மாற்றி அனுப்பி
  நம்பவைத்து பலரது வாழ்வையும் துயரமாக்கியுள்ளார்கள்.

   

  http://www.eelam5.net/news/index.php?mod=article&cat=inraiya&article=4821


    3. கலைஞனின் துயரத்தை நானும் பகிந்து கொள்ளுகின்றேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்திக்காக பிராத்திக்கிறேன்.


 4. Vaazhai+Ilai.jpg
   

  1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
  2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
  3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
  5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
  4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்

  பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன்,
  தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..
  நன்றி - தமிழ்க்குடில் தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி
  கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

  நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது
  வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான
  நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும்
  என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

  வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது
  தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.


  நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம்
  தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான்
  நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு
  உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மைகொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு
  பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும்பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் .எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

  வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் . தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

  http://ilanthalirabcd.blogspot.fr/2011/11/blog-post_7234.html


 5. ttv01_thumb.jpg?w=452&h=317


  தமிழில்
  ஏறக்குறைய இரண்டு லட்சத்து எண்ணாயிரத்துப் பத்துக்கு மேற்பட்ட சொற்கள்
  உள்ளன. சென்னைப் பல்கலைக்கழக அகராதியில் 2,08,810 தமிழ்ச்சொற்கள் இருக்கக்
  காணலாம். அரி என்னும் ஒரு சொல்லுக்கு மட்டும் அகராதியில்
  109 பொருள்களைக் காண்கிறோம். அந்த 109 பொருள்களுள் 50 பொருள்கள் வடமொழிச்
  சொற்களைத் தழுவியவை; மற்ற 59 பொருள்கள் அரி என்னும்
  தமிழ்ச்சொல்லுக்கே உண்டு. இப்படிப் பொருள்வளம் பெற்றுள்ள சிறப்பும்
  தமிழுக்குண்டு. 59 பொருள் தமிழ்மொழிக்கு வரவேண்டுமென்றால் அது நீண்ட
  காலமாய் மக்கள் புழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். இது தமிழ்மொழியின்
  தொன்மையையும் காட்டும்.


  ஒன்றன் வெவ்வேறு நிலையை நன்கு
  காட்டுதற்கும், ஒன்றற்கும் மற்றொன்றற்கும் உள்ள வேறுபாட்டை
  உணர்த்துவதற்கும் தமிழ்மொழியில் சொற்கள் உண்டு. அரும்பு, போது, மலர், அலர்,
  வீ என்பவை ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டும். அரும்பு என்பது மொட்டு. போது என்பது மலரும் நிலையில் இருப்பது. மலர் என்பது விரிந்த பூ. அலர் என்பது நன்றாக மலர்ந்த பூ. நன்றாக மலர்ந்து விழுந்தது வீ. இவை ஒரு பூவின் வெவ்வேறு நிலையைக் காட்டுகின்றன.


  ஈ, தா, கொடு – இவற்றின் வேற்றுமையைப் பாருங்கள். யாசிப்பவன் `ஈ’ எனக் கேட்கவேண்டும். சமநிலையில் உள்ளவன் `தா’ எனக் கூறவேண்டும். உயர்நிலையில் உள்ளவன் தன்னைவிடத் தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்கும்போது `கொடு’
  எனச் சொல்லவேண்டும். இப்படியே உண்ணலுக்கும் தின்னலுக்கும் சொற்களைப்
  பயன்படுத்தும் முறையில் வேறுபாடு உண்டு. பசியடங்க வயிற்றை நிரப்புதலை உண்ணல் என்றும் சிறிய அளவு உட்கொள்ளுதலைத் தின்னல் என்றும் கூறவேண்டும். சோறு உண்டான் என்க. முறுக்குத் தின்றான் என்க.


  இவ்வளவு தனிச்சிறப்பும்
  சொல்வளமும் உள்ள தமிழ்மொழியில் அறிவியல் நூல்களை எழுத இயலாதா? ஏன் இயலாது?
  முயன்றால் இயலும். அறிவியல் தேர்ச்சியும் மொழித்திறனும் பெற்றுவிட்டால்
  எவரும் அறிவியல் நூலைத் தவறின்றி எழுத இயலும் என்று அஞ்சாமல் கூறலாம்.


  தமிழகத்தில் இன்றைய நிலை என்ன?
  பலர் தங்கள் பெயர்களைக்கூடத் தமிழில் பிழையின்றி எழுத இயலாதவர்களாய்
  இருக்கிறார்கள். ரங்கநாதன் அல்லது அரங்கநாதன் என்று எழுத வேண்டுவதை
  ரெங்கநாதன் என்றும் இரங்கநாதன் என்றும் பலர் எழுதுகின்றனர். வேங்கடசாமி
  என்று எழுதவேண்டிய பெயரை வெங்கடசாமி என்றும் வெங்கிடசாமி என்றும்,
  வேங்கடராமன் என்று எழுதவேண்டிய பெயரை வெங்கடராமன் என்றும் வெங்கட்ராமன்
  என்றும், வேங்கடாசலம் என்று எழுதவேண்டியதை வெங்கடாசலம் என்றும்
  வெங்கிடாசலம் என்றும், சீனிவாசன் என்று எழுதவேண்டுவதைச் சீனிவாசகன் என்றும்
  தவறாக எழுதுவதைப் பார்க்கிறோம்.


  இந்த நிலையில் தமிழனுக்குத் தமிழ்த்தேர்ச்சி வேண்டுமா என்று ஒரு சிலர் வீண்வாதம் புரிகின்றனர். தமிழர்களாய் இருந்தாலும் தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றால்தான் இவர்கள் பிழையின்றித் தமிழ் எழுத முடியும். பலர்
  அரசியல் அறிவும் ஆங்கில அறிவும் பொது அறிவும் பெற்றிருந்தாலும் தமிழ்த்
  தேர்ச்சியின்மையால் நாளிதழ்களிலும் வார மாத ஏடுகளிலும் நல்ல தமிழ் எழுத
  இயலாதவர்களாய் இருப்பதைக் காண்கிறோம்.
  மொழித்தேர்ச்சி இல்லாத எழுத்தாளர்கள் சிறுகதையும் நெடுங்கதையும் நாடகமும் தவறான தமிழில் எழுதுகிறார்கள்.
  இவர்கள் சிறிது மொழித்தேர்ச்சி பெற்றுவிட்டால் இவற்றை நல்ல தமிழில்
  எழுதலாம். இவர்கள் எழுதுபவையும் இலக்கியங்களாக இலங்கும். இப்பொழுதுள்ள
  எழுத்தாளர் பலர் நல்ல தமிழில் எழுதுகின்றனர். இனி நல்ல தமிழ் வளரும்.

   

  http://nanavuhal.wordpress.com/2010/01/31/ntev/


 6. சொர்க்கத்திற்கு மூன்று பேர் போனார்கள், கடவுள் அவர்களிடம்,"சொர்க்கத்தில் இப்போது இடமில்லை உங்கள் மூவரில் பரிதாபமான சாவு யாருக்குநேர்ந்ததோ அவரை சொர்க்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்" என்றாராம்.

   

  heavenly_light.jpg

   

  முதல் ஆள் தன் கதையை சொல்ல ஆரம்பித்தார், "எனக்கு நீண்ட நாட்களாகவே என் மனைவி

  நடத்தை மீது சந்தேகம் இன்று சீக்கிரமாக போய் கண்டுபிடித்து விட வேண்டும்

  என்று சாயங்காலமே அப்பார்ட்மெண்ட்டிற்கு போனேன் என் அப்பார்ட்மெண்ட் 25

  ஆவது மாடியில் இருக்கிறது நான் பார்த்தபோது வீட்டில் மனைவி மட்டுமே

  இருந்தாள் ஆனால் எனக்கு சந்தேகம் விடவில்லை வீடு முழுக்க தேடினேன்

  யாருமில்லை பால்கனி போய் தேடினேன் யாருமில்லை ஒரு சந்தேகத்தில்

  பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தேன் ஒரு ஆள் என் வீட்டு ஜன்னலில்

  தொங்கிக்கொண்டிருந்தான் எத்தனையோ அடித்தும் அவன் அங்கிருந்து விழவில்லை

  சுத்தியல் எடுத்து கைகளில் அடித்தேன் அங்கிருந்து விழுந்து விட்டான் ஆனால்

  ஒரு புதரில் விழுந்து உயிர் பிழைத்து விட்டான் என் கோபம் தலைக்கேறி

  குளிர்சாதனப் பெட்டியை அவன் மேல் தள்ளி விட்டேன் அதே நேரம் குற்ற உணர்ச்சி

  அந்த ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டேன்"

  கடவுள்,"பரிதாபம்"

  இரண்டாம் ஆள், "என் அறை 26 ஆம் மாடி மாலையில் நான் உடற்பயிற்சி செய்ய

  பால்கனி போயிருந்தேன் தவறி விழுந்து விட்தேன் ஆனாலும் அங்கிருந்த ஒரு

  ஜன்னலில் பிடித்தேன் அப்போது இந்தாள் வந்தார் காப்பாற்றுவார் என்று

  பார்த்தால் அடிக்க ஆரம்பிக்க நான் விழ அப்போதும் உயிர் தப்பி விட்டேன்

  அதற்காக சந்தோஷப்பட்ட போதே ஒரு ப்ரிட்ஜ் வந்தது அவ்வளவே"

  கடவுள்,"அய்யோ பரிதாபம்"

  மூன்றாவது ஆள்,"அவசரப்படாதீர்கள், நான்தான் அந்த ப்ரிட்ஜ்க்குள் இருந்தேன்" பரிதாபமான முறையில் இறந்தது நாந்தான் என்றாராம்.

   

  http://funnyworld-star.blogspot.com/2011/12/blog-post_25.html


 7. 404556_288310307962696_1234613147_n.jpg

  கறிவேப்பிலையை

  எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள்

  முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக

  லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின்

  ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.

  ‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில்

  உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில்

  கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து

  பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free

  radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை

  அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு

  கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து

  சாப்பிட்டுவரலாம்

  இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

   

  http://tamilenkalmoossu.blogspot.fr/2013/02/blog-post_14.html

   


 8. ஓரு மனிதனுடைய இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. ரத்தம் ஒரு நாளில் 16,80,00,000 மைல் தூரம் உடலில் பயணிக்கிறது. ஒருவன் 438 கன அடிக்காற்றை மூச்சாக உள்ளே இழுத்துக் கொள்கிறான். 750 தசைகளை அசைக்கிறான். 70,00,000 மூளை செல்களைப் பயன்படுத்துகிறான். இந்தச் செயல்களால் மனிதன் களைத்துப் போவதில்லை. ஏனென்றால் இவை எல்லாம் தன்னிச்சையாக நடக்கின்றன. இதில் நம் முயற்சி என்று எதுவும் இல்லை. 


  நாமாக முயற்சி எடுத்துச் செய்யும் சில்லறை வேலைகளால்தான் நாம் களைத்துப் போகிறோம். ஏன்? இயற்கை, தான் செய்யும் வேலைகளுக்கு கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நாம் துரும்பை நகர்த்தினால்கூட கணக்கு வைத்துக் கொள்கிறோம். இயற்கை, தன் செயல்களைச் சுமையாக நினைப்பதில்லை. மனிதன் தன் பெரும்பாலான செயல்களை சுமையாகவே கருதுகிறான். 

  இயல்பாக, மனிதன் மகிழ்ச்சியாக செய்யும் எந்தச் செயலும் அவனுக்கு களைப்பையும், டென்ஷனையும் தருவதில்லை.ஆனால் அப்படிச் செய்யும் செயல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இயற்கைதேவையில்லாத செயல்களைச் செய்ய முனைவதில்லை. தேவையுள்ளதை மட்டுமே செய்வதால் அனைத்தையும் அலட்டிக் கொள்ளாமல் செய்து முடிக்கிறது. ஆனால் மனிதன் செய்கின்ற பல செயல்கள் பயன் தராதவையாகவும், தேவையில்லாதவையாகவும்
  இருக்கின்றன. அதனால் செய்யவேண்டிய வேலைகளைச் செய்ய அவனுக்கு நேரம் போதுமானதாக இல்லை. இயற்கையின் வழி முறைகளைப் பின்பற்றினால், "நோ டென்ஷன்.
   

   

  • Like 1

 9. ss01_thumb.jpg?w=552&h=362


   

  சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.


  சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று.


  சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று.


  சாதிவெறி சைவநெறி அன்று.


  `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை.


  இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.


  சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது.


  சாதியமைப்பு என்பது எங்கோ
  வெகுதொலைவில் யாரிடமோ உள்ள ஒன்றாக இருந்திருந்தால் அதனை எதிர்க்க வேண்டிய
  கட்டாயம் சைவச் சான்றோருக்கு ஏற்பட்டிருக்காது.


  தங்களைச் சைவர்கள் எனச் சொல்லிக்கொண்டே சிலர் சாதிக்கொள்கையைக் கைக்கொண்டதோடு அன்றியும் அதனைச் சைவத்திலும் பயில முயன்றனர்.


  சாதிப் பாகுபாட்டால் சமயத்தையும் சமுதாயத்தையும் சீரழிக்கத் தலைப்பட்டனர்.


  உடலில் ஓரிடத்தில் தோன்றும் புற்றுநோய் மெல்ல மெல்ல வளர்ந்து பரவுவதைப்போன்று சமுதாயத்தில் வேரோடிக் கிளைத்தது சாதி.


  உயர்ந்த சாதி, மிக உயர்ந்த சாதி,
  மிக மிக உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, மிகத் தாழ்ந்த சாதி, மிக மிகத்
  தாழ்ந்த சாதி என வளர்ந்தது சாதியெனும் புற்று.


  சாதிப் பாகுபாடு என்று பரவத் தொடங்கியதோ அன்றே சைவச் சான்றோர் அதனை எதிர்க்கத் தொடங்கினர்.


  சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
  கோத்தி ரமும்குல மும்கொண்டு என்செய்வீர்
  பாத்தி ரம்சிவ மென்று பணிதிரேல்
  மாத்தி ரைக்குள் அருளுமாற் பேரரே.
  (5.60.3)  அறிவு நிலையில் நின்று சமயத்தை ஆராய்ந்து இலக்கணம் கூறும் நூல் பொருள்நூல் ஆகும்; பொருள்நூலே சாத்திரம் எனப்படும்.
   

  திருமூலர் அருளிய `திருமந்திரம்’, மெய்கண்டார் அருளிய `சிஞானபோதம்’ முதலிய நூல்கள் பொருள்நூல்கள்.


  சைவ சமயத்தின் பொருள்நூல்கள் யாவும் மெய்யறிவு நூல்களே ஆகும்.


  மெய்யறிவு நூல்கள் அறிவுக்கே முதலிடம் தருவன.


  அறிவதற்கு அரிய கடவுளையும்,
  கடவுளை அடைவதற்கு உரிய வழியான அன்பையும்கூட மெய்யறிவு நூலாசிரியர்கள் அறிவு
  நிலையில் நின்றே ஆராய்ந்து விளக்க முற்படுவார்கள்.


  அறிவு நூல்களாகிய
  சாத்திரங்களைப்பற்றிப் பேசுபவர்கள் அறிவுக்குப் பொருந்துவனவற்றையே
  பேசவேண்டும்; அறிவுக்குப் பொருந்துவனவற்றையே செய்யவேண்டும்.


  ss03_thumb1.jpg?w=250&h=275 அறிவு நூல்களைப்பற்றியும் பேசிக்கொண்டு அறிவுக்குப் பொருந்தாக் கொள்கைகளையும் கைக்கொள்வது அறியாமையே ஆகும்.


  சாதிப் பாகுபாடு அறிவுக்குப் பொருந்தும் கொள்கையோ?


  சாத்திரமும் பேசிக்கொண்டு சாதியையும் விடாது பற்றிக்கொண்டு வாழ்வோர் அறிவற்றோரே ஆவர்.


  அத்தகையோரையே `சழக்கர்காள்’ என விளிக்கிறார் அருட்பெரும் சான்றோராகிய திருநாவுக்கரசர் பெருமானார்.


  நூல்களைக் கசடறக் கற்பதும் கற்றவற்றுக்கு ஏற்ப வாழ முயல்வதும் அறிவு உடையவர்களின் இயல்பு.


  நூல்களைக் கற்பது பேசுவதற்கு மட்டுமே என எண்ணுவது அறிவு இல்லாதவர்களின் தன்மை.


  சாத்திரங்களைப் பற்றி வாழ முயற்சி
  செய்யாமல் சாத்திரங்களைப்பற்றிப் பேசி வாழ்பவர்களைச் "சாத்திரம் பல பேசும்
  சழக்கர்காள்" என அழைப்பதன்வழி, அறிவுக்குப் பொருந்தாத அவர்களின்
  பேச்சையும் செயலையும் தனித்துச் சுட்டிக் காட்டுகிறார் பெருமானார்.


  `சழக்கு’ எனும் சொல் அறியாமை, பொய், பயனின்மை, குற்றம், தீமை எனப் பல பொருள் தரும்.


  சாதிப் பாகுபாடு என்பது
  அறியாமையின் விளைவு, உண்மைக்கு மாறானது, பயன் இல்லாதது, குற்றம் மிகுந்தது,
  தீமை விளைவிப்பது என ஒருசேரக் குறிக்கும் பொருட்டே  இத்திருப்பாடலில்
  `சழக்கர்’ எனும் சொல்லை அப்பர் பெருமான் ஆளுகிறார் எனக் கொள்ளலாம்.


  நூல்களைக் கற்காமல் அறிவுக்குப்
  புறம்பாகப் பேசுபவர்களும், நூல்களைக் கற்றிருந்தும் அறிவுக்குப் புறம்பாகப்
  பேசுபவர்களும் ஒரே தன்மை உடையவர்களோ?


  `ஓதி உணர்ந்தும்
  பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்’ (834) எனத்
  திருவள்ளுவப் பெருந்தகை சுட்டும் பேதையரும், திருநாவுக்கரசர் பெருமான்
  சுட்டும் சழக்கரும் ஏறத்தாழ ஒத்த தன்மையரே ஆவர்.


  `அறிவற்றவர்களே, குலத்தையும் கோத்திரத்தையும் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்பது பெருமானாரின் தெளிவான கேள்வி.


  குலத்தையும் கோத்திரத்தையும் கொண்டு என்ன செய்யலாம்?


  சமயத்தைக் கெடுக்கலாம்.


  சமுதாயத்தைக் கெடுக்கலாம்.


  தம்மையும் கெடுத்துக்கொள்ளலாம்.


  குலத்தையும் கோத்திரத்தையும் கொண்டு வேறு என்னதான் செய்வது?


  சைவ நன்மக்கள் கொள்ளவேண்டுவது அன்பு.


  தள்ளவேண்டுவது சாதி.


  கொள்ளவேண்டுவதைத் தள்ளி, தள்ளவேண்டுவதைக் கொள்ளுவது அறிவுடைமை ஆகுமோ?


  `அன்பே சிவம்’ என்பார் திருமூலர்.


  `பாத்திரம் சிவம்’ என்கிறார் தமிழரசர்.


  இருவர் தமிழும் ஒன்றே.


  அன்புதான் சிவம்; சிவம்தான் அன்பு.


  இது சைவ வாய்பாடு.


  `சாதி உணர்வை விட்டுவிடுங்கள்;
  நெஞ்சில் அன்பைக் கொள்ளுங்கள்; வணங்குங்கள்; இமைப்பொழுதுக்குள் இறைவர்
  அருள்புரிவார்’ எனத் தெளிவாகச் சொல்கிறார் சைவத் தலைவர்.


  சாதி உணர்வால் ஏற்படும்
  கேட்டினையும் அன்பின் ஆற்றலையும் வலியுறுத்தும்பொருட்டே "மாத்திரைக்குள்
  அருளும் மாற்பேரரே" என அழுத்திச் சொல்கிறார் தமிழ்வேந்தர்.


  சைவநெறி அன்புநெறி.


  அன்புநெறி அப்பர் நெறி.


  அப்பர் நெறி சைவர் நெறி.


  நாம் சைவர்.


  - அ. நம்பி

  http://nanavuhal.wordpress.com/2010/03/19/saivaththil-saathi/#comment-2969

   

  • Like 1

 10. tmnn01_thumb1.jpg?w=280&h=494

   

  மாலை நேரம்.


  வீட்டுக்கு வருகிறீர்கள்.


  நல்ல பசி; வயிற்றைக் கிள்ளுகிறது.


  சாப்பிட உட்காருகிறீர்கள்.


  மேசையில் உணவு ஏதுமில்லை.


  நீங்கள் என்ன செய்வீர்கள்?


  அ. மனைவிக்கு உதவி செய்யச் சமையலறைக்குச் செல்வீர்கள்.


  ஆ. தொலைக்காட்சி பார்த்தபடி பொறுமையோடு காத்திருப்பீர்கள்.


  இ. `விருட்’டென்று எழுந்து ஏதேனும் உணவகத்துக்குச் செல்வீர்கள்.


  ஈ. எகிறிக் குதித்து எட்டு ஊருக்குக் கேட்குமாறு காட்டுக்கூச்சல் போடுவீர்கள்.


  உங்கள் விடை என்ன?


  உங்கள் விடை `அ’ என்றால்… உங்கள் மனைவி தமன்னாவாக இருக்கவேண்டும்; இல்லையெனில் கிட்…டத்…தட்…ட… ஒரு தமன்னாவாக இருக்கவேண்டும்.


  `ஆ’ என்றால்… அண்மையில்தான் உங்களுக்குத் திருமணம் ஆகி இருக்கவேண்டும்.


  `இ’, `ஈ’ – இவை இரண்டுக்கும் விளக்கம் தேவை இல்லை. `தமிழ்கூறு நல்லுலகில்’ ஏறத்தாழ ஆண்கள் எல்லாரும் இப்படித்தான் என்று சொன்னால் தவறாகாது.


  மேலே உள்ள நான்கு விடைகளுக்கு அப்பால் ஐந்தாவது விடை ஒன்று இருக்கிறது. `ஐந்தாவது விடை’ என்பதைவிட (உங்கள் விடை `அ’, `ஆ’ இல்லையென்றால்) இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் கைக்கொள்ள `மிகச் சிறந்த வழி’ என்பது பொருந்தும்.


  அந்த `மிகச் சிறந்த வழி’: இங்கு

  http://nanavuhal.wordpress.com/2010/05/25/dinner/

   


 11.    உணவு குறித்த ஒருவரின் மனோபாவம், சாப்பிடும் விதத்தை கவனிப்பதன் மூலம் அவரின் நடத்தை, குணாதிசயங்களை கணித்திட முடியும் என்கிறார்கள், வல்லுனர்கள். `சாப்பாட்டு மேஜையில் குளறுபடியானவராகவும், பிரச்சினைக்குரியவராகவும் நடந்து கொள்பவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார்' என்கிறார், புகழ்பெற்ற மேலை நாட்டு எழுத்தாளர் ஒருவர். `உணவைப் பெறுவது, சாப்பிடுவது போன்ற விஷயங்களில் சீடர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்தே அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை அறிந்து, தனக்கான சீடர்களை அந்த காலத்தில் முனிவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்' என்கிறார், டெல்லியைச் சேர்ந்த பிரபல நட்சத்திர ஹோட்டல் `செப்' மஞ்சித் எஸ்.கில்.


      "முடியும்..! அதனால்தான் இன்று நிறைய பேர் மாப்பிள்ளை, பெண் பார்ப்பதற்கு பிரபலமான ரெஸ் டாரண்ட்களை தேடி வருகிறார்கள்''- என்கிறார், சேமியர்ஸ் டஸ்கானா ரெஸ்ட்டாரண்ட் டின் விபின் சச்தேவ்.


      அவரே ருசிகரமான சம்பவம் ஒன்றையும் விளக்குகிறார்.
      "பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக குன்னூர் சென்றோம். வெளியூரில் உள்ள மாப்பிள்ளை பையன், அங்குள்ள உயர்தர ஹோட்டலுக்கு வந்தார். பெண் வீட்டு சார்பில் நாங்கள் ஏழெட்டு பேர் அங்கு சென்றி ருந்தோம்.


      மாப்பிள்ளை பையனும், பெண்ணும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பையனை, பெண்ணின் அம்மா உற்று கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது உணவு ஆர்டர் எடுப்பதற்காக `வெயிட்டர்' வந்தார். சீருடையில் வந்த அவரைப் பார்த்ததும் மாப்பிள்ளை பையன் ஏதோ பொறிதட்டியதுபோல் அருகில் சென்று விசாரித்தார். பின்பு இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். இருவரும் பள்ளித் தோழர்களாம். பத்து வருடத்திற்குப் பிறகு அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.


      வெயிட்டரை தனது பால்ய நண்பன் என்று எல்லோருக்கும் அறிமுகம் செய்துவைத்த மாப்பிள்ளை பையன், யார்- யாருக்கு என்னென்ன உணவு தேவை என்பதைக் கேட்டு, சில உணவுகளைப் பற்றி விளக்கமும் கொடுத்தார். சிறிது நேரத்தில் உணவு வந்தது.


      தனது நண்பன் கொண்டுவந்த உணவு பிளேட்களை தானே வாங்கி, அங்கே இருந்தவர்களில் வயதானர்களுக்கு முதலில் தனது கையாலே கொடுத்தார். வரிசையாக ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு, அந்தப் பெண்ணுக்கும் கொடுத்துவிட்டு கடைசியில் தனக்கு எடுத்துக்கொண்டார்.


      பேசிக்கொண்டே நிதானமான எல்லோரும் சாப்பிட்டார்கள். ஒவ்வொரு உணவாக சுவை யறிந்து அந்த பையன் சாப்பிட்டார். தேவையான அளவு மட்டுமே உணவினை எடுத்துக் கொள்ளவும் செய்தார். அனைவருக்கும் என்னென்ன தேவை, எல்லோரும் சாப்பிடு கிறார்களா என்றும் கவனித்துக்கொண்டார். எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள்.


      அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணின் அம்மாவிடம் நான், `என்ன பையனைப் பிடித்திருக்கிறதா?' என்று கேட்டேன். `அவர் நட்புக்கு கொடுத்த மரியாதை, உணவை ஆர்டர் செய்த விதம், மற்றவர்களுக்கு முதலில் பரிமாறியது எல்லாமே பக்குவமான பையனாகக் காட்டியது. அருகில் இருக்கும் ஒவ்வொருவர் சாப்பிடுவதையும் கவனித்து, அவர்களுக்கு தேவையானவைகளை எடுத்துக்கொடுத்தார். அவர் நிதானமாக சாப்பிட்ட முறையும், மேஜையில் நடந்துகொண்ட விதமும் அவரை பொறுப்புள்ளவனாக காட்டியது. அதனால் எனக்கு பையனை பிடித்துவிட்டது' என்றார். மகளும் அதையே சொல்ல, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அந்த திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.


      இந்த உண்மையை நம்ம ஊர் முனிவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து சீடர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதனால்தான் இப்போது பெரும்பாலானவர்கள் பெண் பார்ப்பதற்கும், மாப்பிள்ளை பார்ப்பதற்கும் ஹோட்டலுக்கு வந்துவிடுகிறார்கள். பையனோ, பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை சாப்பிடும் விதத்திலே அறிந்து கொள்கிறார்கள்...'' என்று கூறும் விபின் சச்தேவ், சாப்பிடும் விஷயத்தை வைத்து ஒருவரை எப்படி கணிக்கவேண்டும் என்ற டிப்சையும் தருகிறார்.


    * ஹோட்டலுக்குள் வந்து சவுகரியமாக அமர்ந்துகொண்டு, உபசரிக்க வரும் வெயிட்டரிடம் அன்பாக அணுகி, உணவு பற்றி விசாரிக்கிறவர்கள் `ஈகோ' எதுவும் இன்றி எல்லோரையும் சமமாக மதிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பார்.


      * மெனு கார்டை வாங்கி நிதானமாகப் பார்த்து ஒவ்வொரு உணவைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு, உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவர் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர் என்பதும், எதையும் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் எண்ணம் கொண்டவர் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.


      * ஒரே ஹோட்டலுக்கு தொடர்ந்து வந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவை ருசிக்கும் தன்மை கொண்டவர்கள் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.


      * அளவோடு வாங்கி, மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுவிடுபவர் திட்டமிட்டு செயல்படக்கூடிய சிக்கனவாதி என்பதை தெரிந்துகொள்ளலாம். அதையும் மீறி மிச்சம் வந்தாலும் அதை, `பேக் செய்து தாருங்கள். வீட்டுக்கு கொண்டு செல்கிறேன்' என்பவர் காரியவாதி.


      * நன்றாக மென்று சாப்பிடுபவர்கள் நிதானமானவர்கள். அவர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை ஆழமாக சிந்தித்துதான் செயல்படுவார்கள்.
      * நண்பர்களோடு வந்து, அவர்களையும் நன்றாக கவனித்து- தேவைப்பட்டால் பங்கிட்டு உண்பவர்களிடம் ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றல் இருக்கும். சுயநலம் குறைவாக இருக்கும்.


      - இப்படி வெகுநீளமாக `மனோதத்துவ' ரீதியான கணிப்பு உண்மைகளை வெளியிடும் இவர், "இந்திய உணவகங்கள் மன அழுத்தத்தை அகற்றும் மையங்களாக செயல் படுகின்றன. ஒரு நாள் முழுவதும் பல்வேறு மன அழுத்தத்தில் வேலை பார்ப்பவர்கள் அதை எல்லாம் அகற்ற வேண்டும் என்றால் பேச வேண்டும், ருசிக்க வேண்டும், மகிழ வேண்டும். அதற்காக அவர்கள் ஹோட்டல்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனால் ஹோட்டல்களின் பொறுப்புகள் சுவையான உணவு வழங்குவது மட்டுமல்ல, அதையும் தாண்டி உறவுகளை மேம்படுத்தி மனிதர்களின் மன உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.


  நன்றி - Penmai.Com


 12. 734664_433433483391415_610870512_n.jpg

  அழிந்துவரும் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் :
   
  அரிக்கன் விளக்கு
   
  காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.
   
  அம்மி
   
  குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.
   
  அண்டா
   
  அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.
   
  அடுக்குப்பானை
   
  ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.
   
  அடிகுழாய்
   
  கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.
   
  ஆட்டுக்கல்
   
  வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.
   
  அங்குஸ்தான்
   
  தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.
   
  ஓட்டியாணம்
   
  பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.
   
  எந்திரம்
   
  (அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.
   
  உரல்
   
  வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.
   
  உரி
   
  (வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.
   
  குஞ்சம் - குஞ்சலம்
   
  (பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.
   
  கூஜா
   
  (குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.
   
  கோகர்ணம்
   
  (ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.
   
  கொடியடுப்பு
   
  ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.
   
  சுளகு
   
  வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.
   
  தாவணி
   
  (இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.
   
  தொடி
   
  பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.
   
  நடைவண்டி
   
  (குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.
   
  பஞ்சமுக வாத்தியம்
   
  கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.
   
  பாக்குவெட்டி
   
  (பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.
   
  பிரிமணை
   
  (பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.
   
  புல்லாக்கு
   
  மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.
   
  முறம்
   
  (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.
   
  லோட்டா
   
  நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.
   
  மரப்பாச்சி
   
  பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.
   
  மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.
   

 13. 35889_1507915620522_1313264151_1347701_7

  வீடெங்கும் தடபுடல் அமளியென அதிர்ந்திடவே

  வீதியெங்கும் தோரணங்கள் தொங்கிச் சிரித்திடவே

  வீடியோக்காரர்களும் வித விதமாய் படம்பிடிக்க

  வீணான செலவுகள் எதற்கென்றே புரியவில்லை!

  பதின்மூன்று வயதிலவன் பத்து "ஏ"க்கள் பெற்றிருந்தான்

  பந்தலும் போடவில்லை பரிசுகளும் குவியவில்லை

  பத்தே வயதுபெண் பருவம்தான் அடைந்துவிட்டால்

  பட்டுப்புடவைகட்டி பலகாரங்கள் பல ஊட்டி

  பத்திரப்படுத்துவாதாய் பதுக்கியேவைத்தார்கள்

  பத்தியமானதாய் எதை எதையோ சொன்னார்கள்

  ஆருமில்லா அறைதனிலே அவளை அமர்த்திட்டர்

  ஆணியொன்றினையோ அவள்தலையில் செருகிட்டர்

  அதற்கான காரணம் யாதென கேட்டிட்டால்

  அமுக்கிப்போடும் பேயினை விரட்டவே என்றிட்டர்

  ஆண்பாலும் பெண்பாலும் தெரிந்திருக்கு பேயுக்கு

  அப்பெண்படும் பாடுத்தான் தெரிவது யாருக்கு?

  அவளுக்கும் அண்ணனுக்கும் இடைவெளி கூடும் 

  அப்பனுக்கும்கூட அதேகதைத்தான் தொடரும் 

  விடியலதை எதிர்ப்பார்த்து குளியாட்ட வந்திடுவர்

  விட்டப்பணம் பிடிக்க விழாவுக்கு வித்திடுவர்

  விந்தையான கதைகளை வரம்பின்றி செப்பிடுவர்

  விதிமுறைகள் பலவற்றை அவளுக்கு திணித்திடுவர்

  அழகான அழைப்பிதழ்கள் ஆயிரம் அச்சிட்டு

  அதற்கு மஞ்சளும் பூசி மங்கள நாள் பார்த்து 

  பூப்புனித நீராட்டு விழாவினை நிகழ்த்துகின்றார்

  பூப்பெய்த கதையை பூரிப்பாய் மெச்சுகின்றார்

  ஆசைவரும் அவளுக்கும் அறியாத வயதன்றோ?

  அழுதே அடம்பிடிப்பாள் விழாவெடுக்க வேண்டுமென்று

  ஆய்ந்துணர்க உறவுகளே அவசியமா இதுவெனவே

  அசிங்கத்தை அவளுக்கு ஆழமாய் உணர்த்துகவே 

  மாமியார் சொல்லியதால் மதியிழந்து நிற்காதே

  மாமன்காரன் வந்துவிட்டால் மாலைப்போடவிடாதே

  சராசரியாய் வரும் சங்கதியாம் பெண்ணுக்கு

  சாதனைப் படைத்ததுபோல் பிதற்றல்கள் எதற்கு?

  வயதிற்கு வந்துவிட்டால் ஊரெல்லாம் சொல்லுவதும்

  வாலிப நெஞ்சதனில் நஞ்சதனை புகுத்துவதும்

  காணாத வளர்ச்சிகளை காட்ச்சிக்கு கொணர்வதுவும்

  காமத்தை ஏற்றிவிடும் கடுஞ்செயலைக் கூட்டிவிடும்!!

  மூடத் தனத்தினையே மென்மேலும் நாட்டிவிடும்

  முடக்கிஒடுக்கிடவே பெண்ணியமும் தோல்வியுறும்

  வெற்றான செயல்களை வெறுத்துநீ ஒதுக்கு

  வெட்கிக் குனிந்திடும் காரியத்தை கவிழ்த்து

  விஞ்ஞான வளர்ச்சியினால் மிளிரட்டும் அறிவு

  வீணான சடங்குகளைத் தீயிட்டுக் கொளுத்து!!

   

 14. alcoholism.2jpg.jpg

   

  குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி,இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

   
  1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

   

  2.கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்தமுடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

   

  3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம்,தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது. 
   
  4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது. 

   

  குடிநோய் எந்தளவுக்கு அபாயமானது...? 

  alcoholism1.jpg

   

  மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று.  நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது.

  போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில்

  ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள். இது இளைஞர்களின்

  முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும்

  சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன.

  மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...? 

  சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் “குறுகியகால  விளைவுகள்” மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

   
  alcoholism.jpg

   

  1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

  2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

  3. பசி உண்டாகிறது.

  4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

  இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.

  குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் “தவறான கருத்துக்கள்” எவை? 

  1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்தசிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

   

  2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

   

  3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

   

  4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

   

  5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.
   
   

 15. vishwa2.gif

   
   காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒரு தலைவர், ஹைதிராபாத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி பதினைந்து நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லும்போது எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒருவர் (ஆனால் அன்றே தன் எதிர்ப்பைக்காட்டி சமுதாயத்திற்கு தான் ஒரு உதாரணம் எனக் காட்டினார் அப்துல் கலாம்) விஸ்வரூபம் என்ற ஒரு சினிமாவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக ஒரு முஸ்லீமை காட்டியதற்காக எதிர்க்கிறார். உடனே இதை ஆதரித்து ஒரு சாரரும், எதிர்த்து ஒரு சாரரும் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இவர்களில் யாருமே படத்தைப் பார்க்கவில்லை, படத்தில் என்ன இருக்கிறதென்று தெரியாது, ஆனாலும் எதிர்ப்போம்/ஆதரிப்போம். இதை ஒரு இந்து/முஸ்லிம் பிரச்சினையாக மாற்றியதில்தான் அரசியல்வாதிகளின் சாதுர்த்தியம் ஒழிந்திருக்கிறது.
   
    இதைவிட ஒரு காமெடி என்னவென்றால் ஒருவர் இப்படிக் கமெண்ட் எழுதினார். “இந்தப்படத்தில் ஐயர் அசைவம் சாப்பிடுவது போல் காட்டியிருக்கிரார்கள் அதனால் படத்தை தடை செய்ய வேண்டும்” இதற்கு எங்கே போய்முட்டிக் கொள்வதென்றே தெரியவில்லை.
   
    இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் சொன்ன உடனே அரசு பட வெளியீட்டை இரண்டுவாரம் தள்ளிவைத்துவிட்டது. தொலைக்காட்சி உரிமைதான் விஜய் டி.விக்குப் போய்விட்டதே? இப்படி வெளியீட்டை தமிழக அரசு தடை செய்ததுதான் இன்றைய இத்தனை பிரச்சினைகளுக்கும் அஸ்திவாரம். 
   
   

 16. பலபேர் மலத்தைப் பற்றி நினைக்கவும், பேசவும் கூட கூச்சப்படுகிறார்கள். வெளிக்கு எப்படி போகுதுன்னு கேட்டால், ”ஓ! அதெல்லாம் நார்மல், தாரளமாப் போய்விடுவேன். காலையில் எழுந்தவுடன் போய்விடுவேன். முதல் வேலையே இதுதான் “ என்பர். உண்மை வேறாக இருக்கும்.

  அதைப்பற்றி கொஞ்சம் அலசும் முயற்சிதான் இது..

  1.அதிகாலை எழுந்தவுடன் சில நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும். அது ஓரிரு நிமிட வேலையாக முடிந்து விட வேண்டும். பெரும் முயற்சி இருக்கக் கூடாது :)

  2.மலம் உடலிலிருந்து ஒரே கயிற்றுத்திரிபோல் கழன்று வந்துவிடவேண்டும். வெளியே தள்ளுவதற்கு அதிக முயற்சியோ, அழுத்தமோ இருக்கக் கூடாது. ஒரு பெரிய குழாயிலிருந்து சிறிய துண்டுக்குழாய் கழன்று வருவது போல வரவேண்டும்.

  3.மலத்தின் மேல் சளிபோன்ற ஒரு படலம் இருக்கவேண்டும். மாட்டுச் சாணத்தின் மேல் இவ்வித சளிப்படலத்தைக் காணலாம்.

  4.மலத்தில் துர்நாற்றம் இருக்கக்கூடாது

  5.மலம் கழிந்தவுடன் வயிறு காலியான உணர்வு இருக்க வேண்டும். சோம்பலில்லாமல் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தகுதியாகவும் இருக்க வேண்டும்.

  6.மலம் கழித்தபின் சிறிது நேரம் கழித்து மீண்டும் அது வருமாறு, உள்ளே தங்கி இருக்கக் கூடாது.

  7.பசைபோல் மலம்கழிக்கும் இடத்தில் ஒட்டக்கூடாது. முன்போ பின்போ வயிற்றை வலிக்கக்கூடாது, எரிச்சல் அரிப்பு இருக்கக்கூடாது.

  இப்படி இருந்தாத்தான் அது நார்மல், இல்லைன்னா அதுக்குப் பெயர்தான் மலச்சிக்கல்
   

   

  • Like 1

 17. சென்னை, அறிஞர் அண்ணா மருத்துவமனையின் இயற்கை நல மருத்துவ பேராசிரியர் ஹிமேஷ்வரி:   நல்ல உடம்பு, தெளிவான மனசு இரண்டும் இல்லாமல், ஒருத்தரால், தான் நினைச்சதை அடையவே முடியாது.உங்க உடம்புக்கு, என்ன நேரத்தில், என்ன செய்யணும்னு, "செல்'களுக்கு நல்லா தெரியும். கண்ணுல தூசி விழுந்தா, கண்ணை, "டேமேஜ்' பண்ணாம, அந்த தூசியை வெளியே தள்ள, உங்களுக்கு தெரியாது. ஆனா குறிப்பிட்ட செல்கள், கண்ணீர் மூலமா வெளியே கொண்டு வந்துடும். இப்படி பார்த்துப் பார்த்து, பல வேலைகளை செய்ற செல்களோட அறிவுத் திறன், செயல் திறன் மழுங்கிப் போகும் போது தான், நோய்கள் அதிரடியா நம்மை தாக்குது.நம்மகிட்டே, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' அதிகரிக்க அதிகரிக்க, நம் செல்களோட செயல்திறன் குறையத் தொடங்குது.168 விதமான, "நெகட்டிவ் மென்ட்டாலிட்டி' நம்ம மனசை பாதிக்குது. அதுல ஒண்ணோ, ஒண்ணுக்கு மேற்பட்டோ, நம்மைத் தாக்க ஆரம்பிச்சாலே போதும்... நம்ம உடம்புக்கு நோய் வந்துடும்.

  நமக்கு பசி வந்தா, உடனே நம் அறிவு,"சாப்பிடு'ன்னு சொல்லுது. அந்த நேரம் பார்த்து, கவலையான ஒரு நியூஸ் வருதுன்னு வச்சிக்கலாம்; சாப்பிடாம விட்டுருவோம். கவலைப்பட்டதால், அறிவு வேலை செய்ய மறுத்து, உடலோட தேவையை செய்ய விடாம பண்ணிருது.ஒரு மருத்துவரோட முதல் கடமை, மனசை சரிபண்றது தான். துரதிஷ்டவசமா, வணிக நோக்கில் இன்னிக்கு, நோயாளியை அமைதிப்படுத்தறதுக்கு பதிலா, பயமுறுத்துதல் அதிகமாயிட்டுப் போகுது. பயம் இல்லாம யாரெல்லாம் இருக்காங்களோ, அவங்களுக்கு, நோய் சீக்கிரம் குணமாயிடும். மனசை ரிலாக்ஸ் பண்ண சில பயிற்சிகள் இருக்கு."இந்த நோய் குணமாகட்டும்'ன்னு, நம்ம இம்யூன் சிஸ்டத்திற்கு, அப்பப்ப சில, "கமாண்ட்' கொடுக்கலாம். நம்மை அமைதிப்படுத்தும் வழிபாடுகள், தானம் செய்வது, பிறருக்கு உதவுவது எல்லாம், நம்ம மனசை சந்தோஷப்படுத்தி, நோய்கள் இன்றி இருக்க தான்

  நன்றி : தினமலர் 

   


 18. untitled.JPG

   

  வெறிச்சோடிப் போயிருந்த

  அந்த வெற்றுலகத்தில்...
  அன்புக்கான ஏக்கம் மட்டும்
  தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது!
   
  அந்த மண்டலத்தை
  என்னவென்று அழைப்பது?
  மனிதம் வாழும்
  கூடு என்றா?
  முதிர்ந்த குழந்தைகளின்
  கோவில் என்றா?
  பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த
  தனிக்குடித்தன கொட்டகை என்றா?
  புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட
  நெஞ்சங்களின் சரணாலயம் என்றா?
   
  அங்கே...
  நடக்கவே முடியாமல்,
  நான்குச் சக்கர வண்டியில்
  நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி!
  தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில்
  தாங்கிப் பிடிக்க நாதியற்று,
  தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்!
   
  இவர்களைப் போலவே..
  அங்கே..
  அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்...
  கூண்டுக்கிளிகளாகவும்,
  குற்றவாளிகளாகவும்..
   
  நன்றியில்லா நாய்களை
  சேய்களாய் ஈன்றெடுத்த
  தவறைத் தவிர,
  வேறேதும் செய்திடவில்லை...
  அந்த வயது முதிர்ந்தக் குழந்தைகள்!!
   
  அந்தப் பொக்கை வாய்களில்,
  பொன்னைவிட மேலாக
  மின்னிய புன்னகைகள்!
  தடவிக் கொடுக்கும்போது
  தன்னிலையை மறந்து,
  தமக்கென யாருமில்லையென
  ததும்பி வரும் கண்ணீர்த்துளிகள்!
   
  ஆடிப்பாடும் போது மட்டும்
  அவர்களை மறந்துப்போனார்கள்!
  அன்பாய் பேசும்போது,
  அவர்தம் பிள்ளைகளின் நினைவுகளை
  அணைத்துக்கொண்டார்கள்!
   
  "தவமிருந்துப் பெற்றேன், தங்கமாய் காத்தேன்
  தவழும் வயதில் தாங்கிப் பிடித்தேன்..
  தரணியில் உயர்ந்திட தட்டியும் கொடுத்தேன்...
  தாய் என் வளர்ப்பில் தவறேதும் இல்லை"
  இது அங்கிருந்த முனியம்மாளின் முனுகள்.
   
  "நோய்வாய்ப்பட்டு நொந்து போயிருந்தேன்..!
  என் மகளோ..
  நோய் பற்றிக் கொள்ளுமென பயந்து போயிருந்தாள்!
  கூனிக் குறுகி,
  அடக்கி அமிழ்ந்து
  இருமினேன்; தும்மினேன்!
  இனி..
  சுதந்திரமாய் இருமலாம்..சுதந்திரமாய் தும்மலாம்..
  ஆனால் இங்கில்லை,முதியோர் இல்லத்தில்
  என்று அனுப்பிவைத்தாள்!
  அவசரமாய் விட்டுச் சென்றதால்..
  பாதை மறந்து போனாள் போலும்..
  இன்னமும் வரவே இல்லை!"
  இது கருப்புசாமி தாத்தாவின் கண்ணீர் வடித்த கதை..
   
  இப்படித்தான்..
  என் பிறந்தநாள் அவியப்பத்தில்
  ஏற்றி வைத்த மெழுவர்த்திகள் போல...
  கருகி கருகிப் போன அவர்களின் கதையும்..
  உருகி உருகிப் போன என் மனமும்...!
   
  அந்த
  திறந்தவெளி சிறைச்சாலையில்
  எங்கும் இரைந்துக் கிடந்தன
  குமுறல்கள்...
  அங்காங்கே சிதறிக்கிடந்தன
  அவலங்கள்...
  அன்பு மட்டுமே
  அவற்றிற்கு நிவாரணமாக...!
   
  அந்த முதிர்ந்தப் பிஞ்சுக் குழந்தைகளின்
  அன்பு வேண்டுகோள் மட்டும்
  என் மனதை கொந்தி எடுத்து கூர் போட்டது...
  மீளப் பெறவியலாத அந்த
  இறுதி வசனம்..
   
  "உன் பிறந்த நாளுக்கு மட்டும்
  வந்து போகாதே..
  எங்கள் இறந்த நாளுக்கும் வந்து போ"
   
  கேட்ட பொழுதில் கண்ணீரை மட்டுமே
  பதிலாய் வடிக்க முடிந்தது..
  மனிதத்தை இழந்து விட்ட
  மிருகங்களை கடிந்துக் கொண்டது
  என் மனம்...
   
  • Like 2

 19. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிங்கள மக்களால் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரும் , பின்னருமாகப் பல கருத்துருவாக்கங்களை அவரும் அவருடைய கட்சியினரும் வெளியிட்டிருந்தார்கள். இக்கருத்துக்களில் ஒன்று ‘பண்டாரநாயக்கா சகாப்தம்’ என்பதாகும். இன்னுமொரு கருத்து, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் எழுதப்பட்ட மகாவம்சம் தருகின்ற தகவல்களை மையமாகக் கொண்டதாகும். பண்டாரநாயக்கா சகாப்தம்(?) கொண்டு வந்த கேடுகள் குறித்து நாம் ஏற்கனவே பல தடவைகள் தர்க்கித்து உள்ளோம். ஆகவே இச் சந்தர்ப்பத்தில் நாம் மகாவம்சம் குறித்துச் சற்று ஆழமாக கவனத்தைச் செலுத்துவது பொருத்தமாக இருக்கக்கூடும்.

   

  “முதலில் மகாவம்சம் என்ற நூல் எதனைச் சொல்கின்றது, அது எப்போது எவரால் எழுதப்பட்டது, அதற்கு ஆதாரமாக அமைந்துள்ளவை எவை?” - என்பவை குறித்து நாம் அறிந்து கொள்வது சற்று தெளிவைத் தரக்கூடும்.

  இலங்கைத் தீவின் வரலாற்றை விபரிக்கின்ற வரலாற்று நூல் ஆவணங்களில், முதன்மையாகத் திகழ்வது மகாவம்சம் என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், மகாவம்சம் இலங்கை வரலாற்றினைச் சிலவிடத்து நம்பகத்தன்மையோடும், பலவிடத்து நம்பகமற்றதாகவும் விபரிக்கின்றது - என்று கலாநிதி க.குணராசா குறிப்பிடுகின்றார். மகாவம்சம் குறித்துக் கலாநிதி க.குணராசா எழுதிய ஆய்வு நூலையும், அதற்கு உதவிய சில உசாத்துணை நூல்களையும் நாம் நன்றியுடன் பயன்படுத்திக் கொள்ள விழைகின்றோம். பல சொல்லாடல்;கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன.

   

  மகாவம்சம் பாளி மொழியில், செய்யுள் வடிவில் பாடப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தீவிற்குப்; பௌத்த சமயம் வந்த வரலாறு குறித்தும், இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. மகாவம்சம் விபரிக்கின்ற மூலக்கதைகளைக் கூறாமலேயே, மகாவம்சம் கூறுகின்ற இலங்கை வரலாற்றை அறிய முடியும். சிங்கள இனத்திற்கு அவமானம் தருகி;ற சம்பவங்கள் என்று கருதி, பலர் சில மூலக் கதைகளைத் தவிர்த்தும், புதுக்கியும், ஏன் திரித்தும் கூட எழுத ஆரம்பித்திருக்கின்றார்கள். மகாவம்சம் சொல்வதை ஏற்பதும், ஏற்காமல் போவதும் வேறு விடயமாகும். ஆனால், மகாவம்சத்தின் புனிதத்தன்மையைக் கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பலர் ஏற்கனவே உள்ள மகாவம்சத்தை, புதுப்பிக்க முற்படும் செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

   

  இலங்கையின் வரலாறு குறித்துப் பேசுகின்ற மகாவம்சத்தின் வரலாறு என்ன என்பது குறித்து முதலில் கவனிப்போம்.

   

  இலங்கையில் பௌத்த மதம் பரவி;, நிலை பெற்ற காலத்தில் பௌத்த விகாரைகளில் வாழ்ந்து வந்த பௌத்த பிக்குகள் சமய மரபுகள் குறித்தும்;, மன்னர்களின் வரலாற்றுக் கதைகள்;, அவர்களது பணிகள் குறித்தும் ஏடுகளில் எழுதியதோடு மட்டுமல்லாது, வாய்மொழி மூலமாகவும் பேணி வந்தார்கள். இவை காலம் காலமாகப் பேணப்பட்டு வந்ததோடு, “அட்டகதா” என்று அழைக்கப்பட்டும் வந்தன. இவ்வாறு பல்வேறு பௌத்த விகாரைகளில் பேணப்பட்டு வந்த ‘அட்டகதாக்கள்’, ஒரு கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அட்டகதா-மகாவம்சம்’ என்று அழைக்கப்படலானது.

   

  ‘அட்டகதா-மகாவம்சத்தின்’ ஏட்டுப்பிரதிகளைத் தழுவிப் பின்னாளில் தீபவம்சம் என்ற நூல் எழுதப்பட்டது. கிறிஸ்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண்டளவில்தான் தீபவம்சம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றார்கள். தீபவம்சத்தின் ஆசிரியர் யார் என்று அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. காலத்திற்குக் காலம் பல பௌத்த பிக்குகளால் எழுதப்பட்ட செய்யுள்களை ஒருங்கிணைத்துத்தான் ‘தீபவம்சம்’ முழுமை பெற்றிருக்கக் கூடும்.

   

  இந்தத் தீபவம்சம் என்கின்ற நூலில் இருந்துதான், தற்போதைய மகாவம்சம் என்கின்ற நூல் உருவாகியுள்ளது. தீபவம்சத்தை மீள் ஒழுங்கு செய்ததுதான் மகாவம்சம் என்று பிளீற் (குடுநுநுவு) கூறுவார். இன்னொரு வகையில் சொல்லப் போனால் ‘தீபவம்சம் என்கின்ற நூலின் மிகத்திருத்தமான வடிவமே மகாவம்சம்’ என்றும் கூறலாம்.

  இவ்வாறு பல பௌத்த பிக்குகள் காலம் காலமாக, ஏடுகள் ஊடாகவும், வாய்மொழி ஊடாகவும் பேணி வந்த செய்யுள்கள் ‘அட்டகதா’ என்றும், பின்னர் ‘அட்டகதா-மகாவம்சம்’ என்றும் அதன் பின்னர் ‘தீபவம்சம்’ என்றும், ஈற்றில் ‘மகாவம்சம்’ என்றும் ஒருங்கிணைக்கப்பட்டு மீள் ஒழுங்கு செய்யப்பட்டன. மீள் ஒழுங்கைச் செய்து மகாவம்சத்தை உருவாக்கியவர் மகாநாம தேரர் என்று சில ஆய்வாளர்கள் கருதுவார்கள். மகாநாம தேரர்தான் மகாவம்சத்தின் மூல ஆசிரியர் எனக் கொள்ளக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கருதுகின்ற ஆய்வாளர்களும் உண்டு.

   

  இது ‘மகாவம்சம்’ என்கின்ற வரலாற்று நூல் உருவான வரலாறு ஆகும்.!

  இந்த ‘மகாவம்சம்’ என்கின்ற வரலாற்று நூல் எவ்வாறு பகுக்கப்பட்டிருக்கின்றது, அது எதனைச் சொல்கின்றது என்பதனை இப்போது பார்ப்போம்.

   

  மூலநூலான தீபவம்சத்தில் 37 அத்தியாயங்கள் உள்ளன. அதேபோல மகாவம்சத்தில் முதலில் 37 அத்தியாயங்கள் அடங்கியுள்ளன. அத்தோடு மேலும் 63 அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு, எல்லாமாக நூறு அத்தியாயங்கள் மகாவம்சத்தில் தற்போது உள்ளன. 38ம் அத்தியாயத்தில் இருந்து 100வது வரையிலான அத்தியாயங்கள் ‘சூளவம்சம்’ என்ற தொடர் நூலில் உள்ளவையாகும். இவற்றைப் பாளி மொழியில் இருந்து, ஜேர்மன் மொழிக்கு, மொழி பெயர்ப்புச் செய்த வில்லியம் கெய்கர், முதல் 37 அத்தியாயங்களை, ‘மகாவம்சம்’ என்ற தலைப்பில், மொழி பெயர்த்தார். மீதி 100 வரையிலான அத்தியாயங்களை ‘சூளவம்சம் தொகுதி ஒன்று’, ‘சூளவம்சம் தொகுதி இரண்டு’ என்று மொழி பெயர்த்தார். பின்னாளில், அதாவது 1889ல், முதலியார் எல்.சி விஜயசிங்க என்பவர், ஜோர்ஜ் ரேனர் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பை மீளாய்வு செய்து மறுபதிப்பாக வெளியிட்டார். ஆனால் முதலியார் விஜயசிங்க ஒரு மாறுதலை, தலைப்புகளின் பெயரில் கொண்டு வந்தார். சூளவம்சம் கூறுகின்ற 38 முதல் 100 வரையிலான அத்தியாயங்களுக்கு ‘மகாவம்சம் தொகுதி இரண்டு’ என்று பெயரிட்டார். முதலியார் விஜயசிங்கவின் கருத்துப்படி நூறு அத்தியாயங்களும் மகாவம்சம் என்ற பொதுப் பெயருக்குள்ளேயே அடக்கமாகி விட்டன.

   

  ஆனால் இங்கே ஓர்; உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டும். பாளி மொழியில் இருந்து மகாவம்சத்தை ஜேர்மன் மொழிக்கு, மொழி பெயர்த்த வில்லியம் கெய்கர், அதனை ஜேர்மன் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்தது 1912ம் ஆண்டில்தான். அதற்கு முன்னரேயே பாளி மொழியிலிருந்து நேரடியாக ஆங்கிலத்திற்கு ‘மகாவம்ச’ என்ற பெயரில் 1837ல் ஜோர்;ஜ்; ரேனர் மொழி பெயர்ப்பு செய்ததையும், அதனைத்தான் முதலியார் விஜயசிங்க மீளாய்வு செய்ததையும் நாம் இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.

   

  எது எப்படியிருப்பினும், ‘மகாவம்சம் என்கின்ற நூல், கிறிஸ்துவுக்கு பின் 6ம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டுள்ளது’ என்றுதான் வரலாற்று ஆசிரியர்களும், ஆய்;வாளர்களும் கருதுகின்றார்கள்.

   

  தற்போதைய மகாவம்சத்தில், நூறு அத்தியாயங்கள் (பிற்சேர்க்கையாக) சேர்க்கப்பட்டுள்ள போதிலும், முதல் 37 அத்தியாயங்கள் குறித்து இப்போதைக்கு நாம் கவனம் செலுத்தலாம். ஏனெனில் அவையே கருப்பொருளாகவும் உள்ளன. இந்த 37 அத்தியாயங்களும் என்ன சொல்கின்றன? அவை தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? அவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன? என்பவை குறித்து மிகச் சுருக்கமாகத் தர்க்கி;க்க விழைகின்றோம்.

   

  மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகைகளை விபரிக்கின்றது. மகாவம்சத்தின்படி, மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில், ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கௌதம புத்தர் அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில விடயங்கள் புலனாகின்றன. பௌத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்பதும், ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.

   

  அன்புக்குரிய நேயர்களே! மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தி;ன் குறிப்புகளின்படி இலங்கைத்தீவின் ஆதிக்குடிகள் இயக்கர்கள் என்பது புலனாகின்றது. இதனை மனதில் உள்வாங்கிக் கொண்டு அடுத்த சம்பவத்திற்கு வருவோம்.

   

  மகாவம்சத்தின்படி, இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள், குறிப்பிட்ட ஒரு தினத்தில், மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில், புத்தர் அங்கே பிரசன்னமாகிப் பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் “இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம். எங்களை காப்பாற்றுங்கள்” என்று கெஞ்ச, புத்தர் அவர்களை, மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.

   

  இயக்கர்கள் அகன்றதும், அந்த இடத்தில் ‘தேவர்கள்’ கூடுகின்றார்கள். இந்தத் ‘தேவர்கள்’ என்பவர்கள் யார்? பின்னாளில் விஜயன் வருவதற்கு முன்னரேயே ஊடுருவி இருந்த ஆரியர்கள் என்பவர்கள்தான் இந்தத் ‘தேவர்கள்’!. உண்மையில் இந்தியாவிற்குள், கைபர் மற்றும் போலன் போன்ற இமயமலைக் கணவாய்கள் ஊடாக, கிறிஸ்துவுக்கு முன்னர், 2500க்கும் (கிறிஸ்துவுக்கு முன்னர்) 1500க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், ஆரியர்கள் ஊடுருவி விட்டார்கள். இந்தியத் திராவிட மக்களைத் தென்புலமாக நகர வைத்ததுடன், விஜயனின் வருகைக்கு முன்னரேயே, இலங்கையின் தென் புலங்களில் ஆரியர்கள் குடியேறினர். ஆனால் கிறிஸ்துவுக்கு முன்னர் 483ம் ஆண்டில், விஜயனின் வருகையோடுதான், ஆரியரின் வருகை ஆரம்பமானது என்று சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் பிடிவாதமாக உள்ளார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விபரமாக ஆராய்ந்து பார்த்தால், உண்மைகள் வெளிப்படும்.

   

  மகாவம்சத்தின்படி, புத்தர் இரண்டாம் முறையும், இலங்கைக்கு வருகின்றார். இம்முறை இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயப்படுத்திய புத்தர், இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து, நாக மன்னர்களையும், அவரது வீரர்களையும் பயங்கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு, ‘புத்தம்- தர்மம் -சங்கம்’ என்ற போதனைகளை அளிக்கின்றார்.

   

  இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், மகாவம்சத்தின்படி, புத்தர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்கின்றார். கல்யாணி என்ற தேசத்தின், நாக மன்னனின் வேண்டுதலை ஏற்று அங்கே செல்வதோடு, பல இடங்களுக்கும் சென்று, அந்த இடங்களை ஆசிர்வதித்துத் திரும்புகின்றார்.

   

  இந்தச் செய்திகளில் மறைந்துள்ள சில உண்மைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலங்கையின் ஆதிக்குடிவாசிகளாக இயக்கர்களும், நாகர்களும் உள்ளார்கள். மகாவம்சத்தின்படி, இயக்கர்களை அகற்றியது போல், புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், (எ.கா - நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி), மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன.

   

  மகாவம்சத்தின் இரண்டாவது அத்தியாயம், புத்தரின் மூதாதைகள் குறித்தும், மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது அத்தியாயங்கள் புத்த மத மகாநாடுகள் குறித்தும், ஆறாவது அத்தியாயம் விஜயனின் கதை குறித்தும், ஏழாவது அத்தியாயம் இலங்கைத்தீவில் விஜயன் கரை இறங்குவது குறித்தும் விபரிக்கின்றன. மிகுதி அத்தியாயங்கள் யாவும், சிங்கள மன்னர்கள் பற்றியும், அவர்களது ஆட்சி முறைகள் பற்றியும், தமிழ் மன்னர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் இடையில் ஏற்பட்ட போர்கள் குறித்தும் விபரிக்கின்றன.

   

  இப்போது மேற்கூறிய மகாவம்ச அத்தியாயங்கள் குறித்துத் தொகுப்பாக அதேவேளை சுருக்கமாகச் சில தகவல்களைத் தரவிழைகின்றோம்.

   

  விஜயனின் கதை என்பது ஒரு கட்டுக்கதையாகவும், நாடோடிக் கதைகளின் திரிபாகவும் உள்ளது என்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள். விஜயனின் முதல் மனைவியான குவேனி பற்றிய குறிப்புக்கள் எதுவும், மகாவம்சத்திற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட தீபவம்சத்தில் இல்லை. தவிரவும், பின்னாளில் அரசகுலப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து மணப்பதற்காக, மதுரையில் அரசாண்ட பாண்டிய மன்னனின் மகளையும், பாண்டிய மன்னனின் அரசப் பிரதானிகளின் பெண் மக்களான எழுநூறு பேரையும் தேர்ந்தெடுத்து, விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் (அல்லது அவ்வேளையில் இருந்த அரசனும் அவனது நண்பர்களும் என்றும் கொள்ளலாம்) மணம் புரிந்தார்கள் என்று மகாவம்சம் சொல்கின்றது.

   

  இது வேறு ஒரு சிக்கலையும் உருவாக்குகின்றது.

  விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய மகளிர்கள் என்பதனால், சிங்கள இரத்தத்துடன் பாண்டிய நாட்டுத் திராவிட இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக உருவாகி விட்டது என்ற தர்க்கமும் எழுகிறது அல்லவா? இதனைத் தாங்க முடியாத சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் சிலர், பாண்டிய மதுரையை, ‘பாண்டு மதுராவாக்கி’, மகாபாரத பாண்டவர் குலத்தில் தொடர்பு தேடி வருகின்றார்கள். ஆனால் மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜயசிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

   

  மகாவம்சம் குறிப்பிடுகின்ற மற்றைய முக்கிய அம்சங்களில், காமினி அபயன் என்கின்ற துட்ட காமினியும், எல்லாளன் என்கின்ற தமிழ் மன்னனும் அடங்குவர். துட்ட காமினியைத் தனது பாட்டுடைத் தலைவனாகத்தான் மகாவம்சம் விபரிக்கின்றது. அவனது வரலாற்றை விபரிக்கும்போது, இரண்டு அம்சங்களை மகாவம்சம் வலியுறுத்துகின்றது. ஒன்று தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள். மற்றது பௌத்த மதத்திற்கு அவன் ஆற்றிய சேவை.

   

  துட்ட காமினி எல்லாளனுக்கு எதிரான யுத்தத்திற்கு, புத்த மதத்தை முன்வைத்தான். ‘நான் அரச போகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பௌத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கின்றேன்’ என்று அந்தக் காலத்திலேயே மிகக் கவர்ச்சிகரமான கோசத்தைத் துட்ட காமினி முன் வைத்தான்.

   

  கிறிஸ்துவுக்கு முன்னர் 145ம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்துவுக்கு முன்னர் 101ம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகள், தமிழ் மன்னனான எல்லாளன் ஆட்சி செய்த காலமாகும். எல்லாளனைச் சோழ இளவரசனாகவும், தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்தவனுமாகவும், பாளி இலக்கியங்கள் கூறுவதில் உண்மையில்லை. இப்படியொரு சோழன் இந்தியாவில் இருந்ததாக, தமிழ் நாட்டு வரலாற்றில் எந்த ஆதாரமுமில்லை. எல்லாளன் என்பவன் இலங்கையைச் சேர்ந்த தமிழ் மன்னனேயாவான். அவனது நீதி தவறாத ஆட்சி குறித்துப் பல இடங்களில் மகாவம்சமும் கூறுகின்றது. இளைஞனான துட்டகாமினியுடன், 72 ஆண்டுகள் நிரம்பிய எல்லாளன் தனிச் சமர் செய்து இறந்ததன் காரணமாக எல்லாளனின் தோல்வி, தமிழீழ மக்களின் தோல்வியாயிற்று என்று திருச்செல்வம் குறிப்பிடுவார்.

   

  மகாவம்சத்தின் ஊடாக மேலும் சில விடயங்கள் தெரிய வருகி;ன்றன. அனுராதபுர சிம்மாசனத்தில் அமர்ந்து சிங்களவரும், தமிழரும் மாறி மாறி இலங்கையை ஆட்சி புரிந்துள்ளார்கள். மகாவம்சத்தின்படி, இந்த நாட்டைத் தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி ஆளும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். இயக்கர்கள், ஆரியர்கள், தமிழர்கள் என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உள்ளார்கள். எல்லாள தமிழ் மன்னன் இறந்த 57 ஆண்டுகளுக்குப் பின்னர், அனுராதபுரத்தை ஐந்து தமிழ் மன்னர்கள் ஆண்டுள்ளார்கள். மகாவம்சத்தின்படி, சிங்கள மன்னர்களால் பல சைவக்கோவில்களும், சைவச் சின்னங்களும்; அழி;க்கப்பட்டு, அவ்விடங்களில் பௌத்த தூபிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே அங்கே ஆதிக்குடிகளான இயக்கர், நாகர் என்போர் வாழ்ந்து வந்துள்ளார்கள். இவை மகாவம்சம் தந்துள்ள செய்திகளாகும்.

   

  மகாவம்சம் தருகின்ற - மறைமுகமாகத் தருகின்ற - மற்றைய முக்கியமான செய்தி, இலங்கைத் தீவு சிங்கள மக்களது மட்டுமல்ல, தமிழ் மக்களது பாரம்பரிய பூமியும் கூட என்பதுதான்.

   

  கருணையே வடிவான புத்தனை, சமநீதிக்காகப் போராடிய புத்தனை, மொழிக் கொள்கையில் தெளிவான புத்தனை, ஆரியர்களை எதிர்த்துத் திராவிடர்களுக்காக குரல் கொடுத்த புத்தனை, ஒரு புரட்சிக்கார புத்தனை, மகாவம்சமும், இன்றைய சிங்கள சிறிலங்கா அரசுகளும், பௌத்த மட பீடங்களும், பிக்குகளும் எவ்வளவு திரிபுபடுத்தியுள்ளனர் என்பதை நேரம் கருதி இயன்ற அளவில் ஒரு வரைமுறைக்குள் வைத்துச் சுட்டிக் காட்ட முனைந்தோம்;

   

  • “சிங்களதேசம் இன்னும் மகாவம்ச மனவுலகில் , அந்தப் புராணக் கருத்துலகில் புதைந்து போய்க் கிடக்கின்றது. இலங்கைத் தீவானது, தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும், சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடமை என்றும் மகாவம்சம் திரித்து விட்ட புனைகதையில், சிங்கள மக்கள் இன்னும் சிக்குண்டு கிடக்கின்றார்கள்.” தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர்தின உரை- 2005

   

  கலாநிதி க.குணராசா அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட உசாத்துணை நூல்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

   

  http://www.tamilcanadian.com/article/tamil/249


 20. Speech_Bubble_Speakers_1.jpg
   
  பாரெங்கும் எனது பெயர் மணக்கயிலே
  படிப்பிக்க ஆயிரம் பேர் இருக்கையிலே
  படிக்க மறுப்பது ஏன் குழந்தாய்? -எனை
  படிக்க மறப்பதுவும் ஏன் குழந்தாய்?
   
  வள்ளுவனுள் வாசகமாய் வளர்ந்தேனே..
  ஔவை மடி ஔடதமாய் தவழ்ந்தேனே
  கம்பன் வழி காவியமாய் கரைந்தேனே
  பாரதியில் பாக்களாய் படிந்தேனே
   
  தித்திக்கும் என்றார்கள் ஒரு சிலபேர்..
  தெவிட்டாது என்றார்கள் பற்பல பேர்..
  எத்திக்கும் எனது பெயர் செழிக்குமென்றால்
  எதற்காக எனை படிக்க மறந்து நின்றாய்?
   
  சொக்கும் தமிழ் உனையாள வேண்டாமா?
  சொல்வளமும் சிறப்புற வேண்டாமா?
  பிறச்சொல்லை புகுத்தாதே எனக்குள்ளே
  பாழாகி போவேன் நான் தரணியிலே..
   
  எனது வழி தமிழனாய் பிறந்தவனே
  எனது வம்ச வாரிசாய் வளர்ந்தவனே
  எனை வளர்க்க மறந்த மானிடனே
  எனை சுமக்க வெறுக்கும் வெறும்பயலே
   
  நான்படும் வேதனைக்கு அளவில்லையே
  நலங்குன்றி போவேனோ தெரியவில்லையே
  நாடெங்கும் தேய்கின்றேன் நாதியில்லையே
  நான் மடியும் நாட்களோ தூரமில்லையே
   
  காப்புறுதி வேண்டி நான் நிற்கின்றேன் -எனை
  கண்ணியமாய் காக்க வேண்டுகின்றேன்
  காசு பணம் தேவையில்லை காவலுக்கு -எனை
  காதலிக்க காப்பாற்ற மனமுண்டா?