பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  5,107
 • Joined

 • Last visited

 • Days Won

  2

பிழம்பு last won the day on May 7 2015

பிழம்பு had the most liked content!

Community Reputation

164 Excellent

About பிழம்பு

 • Rank
  கருடன்
 • Birthday January 1

Contact Methods

 • Website URL
  http://

Profile Information

 • Gender
  Male
 • Location
  ஈர்பற்ற திசை
 • Interests
  வாழ்தல்

Recent Profile Visitors

2,584 profile views
 1. ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஈரோடு மாவட்டம், அறச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள், கலானி - விஜயகுமார் தம்பதியர். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இந்த தம்பதி வருத்தத்தில் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கலானியை பரிசோதித்த மருத்துவர்கள், ‘நீங்க கர்பமாக இருக்கீங்க’ என்ற இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல்,‘ஸ்கேன் செஞ்சு பார்த்ததில்,'' உங்களுக்கு வயிற்றுல 3 குழந்தைகள் இருக்கு’ என மருத்துவர்கள் சொல்ல, தம்பதியர் துள்ளிக்குதித்து மகிழ்ந்திருக்கிறார்கள். அதையடுத்து, தொடர்ந்து அறச்சலூர் அரசு மருத்துவமனையிலேயே முறையான சிகிச்சை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன், கலானியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்துக்காக அவருடைய கணவரும், உறவினர்களும் சேர்த்திருக்கின்றனர். ஒருவாரமாக சிகிச்சையில் இருந்த கலானிக்கு, திடீரென இன்று காலை பிரசவ வலியெடுக்க, மருத்துவர்கள் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர். ஏற்கெனவே, ஸ்கேன் ரிப்போர்ட்டில் 3 குழந்தைகள் வயிற்றில் இருப்பது தெரிய வந்ததால், தாயையும் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டி மருத்துவர்கள் ஆபரேஷன் செய்திருக்கின்றனர். அப்போதுதான் மருத்துவர்களே வியந்துபோன அந்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் 3 குழந்தைகள் என்று இருக்க, நான்காவதாக ஒரு குழந்தை வயிற்றில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதைக் கண்ட மருத்துவர்கள் அதிசயித்துப்போயிருக்கின்றனர். அதன்பிறகு, சரியாக மதியம் 12.30 மணியளவில் நான்கு குழந்தைகளையும் ஆபரேஷேன் செய்து வெளியே எடுத்திருக்கின்றனர். பிறந்த 4 குழந்தைகளையும் மருத்துவர்கள் கையில் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தபோது, கலானியின் கணவர் மற்றும் உறவினர்கள் அனைவருமே சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டனர். மேலும், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருக்கின்ற செய்தி மருத்துவமனை முழுக்க பரவ, எல்லோர் முகத்திலும் ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். இது சம்பந்தமாக கலானியின் கணவர் விஜயகுமாரிடம் பேசினோம். “30 வருஷத்துக்கு முன்னாடி இலங்கையில இருந்து உயிருக்குப் பயந்து தப்பிச்சு வந்த லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருத்தன். நான் அப்போ சின்னப் பிள்ளையாக இருந்தாலும், அங்கிருந்து அகதியா தமிழகத்துக்கு வந்தது இன்னும் கஷ்டமா இருக்கு. எனக்கு கல்யாணம் ஆகி மூன்றரை வருஷமாகியும் குழந்தை பிறக்கவே இல்லை. ‘ஏன் உங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை’ன்னு பலரும் கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாம பல நாள் மனசுக்குள்ளயே கண்ணீர் விட்டிருக்கேன். அந்தக் கடவுள் என்னைக்கு இருந்தாலும் எனக்கு நிச்சயமாக குழந்தையைக் கொடுப்பார்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அந்த நம்பிக்கை இன்னைக்கு வீண் போகலை. இத்தனை வருஷம் காத்திருந்ததுக்காக இன்னைக்கு எனக்கு 2 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தை என மொத்தம் 4 குழந்தையை ஆண்டவன் கொடுத்திருக்கான். நான் தமிழ்நாட்டுக்கு அகதியா வந்து, ஒரு பெயின்டரா வேலைபார்த்து இன்னைக்கு வரைக்கும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். ஆனா, என்னோட 4 குழந்தைகளும் என்ன மாதிரி கஷ்டப்படக் கூடாது. நல்லபடியா என் குழந்தைகளை வளர்ப்பேன்” என முடித்தவரின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாய் கொட்டியது. இது சம்பந்தமாக மருத்துவர்கள் கூறுகையில், “ஸ்கேன் ரிப்போர்ட்டுல 3 குழந்தைகள்தான் தெரிஞ்சது. ஒருவேளை குழந்தை வயிற்றுல திரும்பியிருந்ததால ஸ்கேன்ல தெரியாம இருந்திருக்கும். மற்றபடி, சுகப்பிரசவத்துக்கு சாத்தியம் இல்லாததால சிசேரியன் செஞ்சி இப்போ அம்மாவும், 4 குழந்தைகளும் நல்லபடியா இருக்காங்க. நோய்த் தொற்று ஏற்படாத வகையில் 4 குழந்தைகளும் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள். ஈரோடு மருத்துவமனையில் இதுவரை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் வரைதான் பிறந்திருக்கிறது. ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை” என்று நெகிழ்ந்து போனார்கள். https://www.vikatan.com/news/tamilnadu/136380-erode-woman-give-birth-to-4-children-in-single-delivery.html
 2. முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதி மறுத்ததாக வரும் செய்திகளை இளைய தலைமுறையினர் நம்பி ஷேர் செய்கின்றனர். உண்மை என்ன என்று அப்போதைய காங்கிரஸ் செயலாளர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார். இன்று இலங்கை பிரச்சினை, தமிழனப்பிரச்சினை முதல் அனைத்திலும் முன்னிற்கும் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர் என்பது இன்றைய இளம் தலைமுறை அறியாத ஒன்று. காமராஜர்பால் பற்றுக்கொண்டு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தவர் பழ.நெடுமாறன். இந்திரா காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார். தவறவிடாதீர் 1973 முதல் 1979 வரை காமராஜர் மறைவின்போதும், இந்திரா தமிழகம் வந்தபோது மதுரையில் திமுக கருப்புக்கொடி காட்டி நடந்த கல்லெறி சம்பவத்திலும், கல்லெறியிலிருந்து இந்திரா காந்தியை தலையணையால் மூடி காத்தபோது மண்டை உடைந்து ரத்தம் ஆறாக பெருகிய நிலையிலும் அகலாது நின்றார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 1979-ல் காங்கிரசிலிருந்து விலகினார். கருணாநிதி மறைவின்போது அவருக்கு மெரினாவில் இடம் தர தமிழக அரசு மறுத்தபோது அதற்கு ஆதரவாக முகநூல், வலைதளங்களில் காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி, அதனால் இது சரிதான் என்று மீம்ஸ்களும், செய்திகளும் பரப்பப்பட்டது. இதை பலரும் மறுத்தாலும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறனிடம் கேட்டறிந்தால்தான் சரியாக இருக்கும் என ஆங்கில நாளேடு ஒன்று பேட்டி கண்டுள்ளது. அதில் பழ நெடுமாறன் கூறியதாக அந்த செய்தியில் வந்திருப்பதாவது: “காமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார். பின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை. இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை.” என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் ஆவல் கணேசனிடம் கேட்டபோது நெடுமாறன் தெரிவித்தது உண்மைதான், கருணாநிதி காமராஜருக்கு உரிய மரியாதை அளித்தார், வலைதளங்களில் வரும் தகவல்கள் தவறானது என்று தெரிவித்தார். https://tamil.thehindu.com/tamilnadu/article24643454.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read
 3. இந்தியாவையும் தாண்டி கடல் கடந்து இலங்கையில் இருந்தும் திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி பிரார்த்தனைகள் நடைபெறுவதாக அந்நாட்டு சமூக அபிவிருத்தித்துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலை சீரானது. தவறவிடாதீர் திமுக தலைவர் குணமடைந்து மீண்டு வரவேண்டும் என்று பல்வேறு மாநில, தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர்கள், பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் என ஏராளமானோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். நலம்பெற சிறிசேனா வாழ்த்து இந்தியாவையும் தாண்டி கடல் கடந்த வெளிநாட்டில் இருந்தும் கருணாநிதி நலம்பெற வேண்டும் என்று வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளன. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற வேண்டும் என வாழ்த்துக் கடிதம் அனுப்பி இருந்தார். கடந்த ஜூலை 30 அன்று சென்னை வந்த இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்குச் சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் இலங்கை அதிபரின் வாழ்த்துக் கடிதத்தை நேரில் வழங்கினர். இந்நிலையில் இலங்கையில் உள்ள ஹட்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்நாட்டு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கூறுகையில், ''தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி குணமடைந்து மீண்டும் மக்கள் பணிகளைத் தொடர வேண்டும் என இலங்கையில் மலையகப் பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் பிரார்த்தனைகள் செய்தவண்ணம் உள்ளனர்'' எனத் தெரிவித்தார். https://tamil.thehindu.com/tamilnadu/article24594824.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers
 4. பாதாம், முந்திரி போன்ற உலர் கொட்டை வகைகளை தொடர்ந்து உண்டு வந்தால் விந்தணுவின் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாதாம், ஜாதிபத்திரி கொட்டைகளை இரு கைகள் நிறைய எடுத்துக்கொண்டு அதை 14 நாட்களுக்கு தினசரி உண்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பாலுறவுத் திறனும் அதிகரிக்கும் என்பதை கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். மேற்கத்திய நாடுகளில் சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு, புகைப் பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் ஆகியவற்றால் மேற்கத்திய நாடுகளில் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தால் கருத்தரித்தல் வாய்ப்பு உயரும் என்பதற்கு ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஏழில் ஒரு தம்பதிக்கு கருத்தரிப்பதில் சிக்கல் இருக்கிறது. இதற்கு 40-50% ஆண்களும் காரணம். மனித இனமே இல்லாமல்... விந்தணுக்கள் குறைவது மனித இனத்தையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடும். 18 முதல் 35 வயது வரை உள்ள ஆரோக்கியமான 119 ஆண்களை தேர்வு செய்து அவர்களை இரு பிரிவாக பிரித்தனர். அதில். ஒரு பிரிவுக்கு தினமும் வழக்கமான உணவுடன் 60 கிராம் கொட்டை வகைகள் வழங்கப்பட்டன. மற்றொரு பிரிவினருக்கு வழக்கமான உணவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. படத்தின் காப்புரிமை Getty Images குறிப்பிட்ட நாளுக்கு பிறகு இரு பிரிவினரின் விந்து சோதிக்கப்பட்டது. இதில் கொட்டை வகைகளை உண்டவர்களின் விந்தணு எண்ணிக்கை 14% வரை அதிகரித்திருந்திருந்தது. விந்தணுக்களின் திறன் 4%, நகரும் தன்மை 6% அதிகரித்துக் காணப்பட்டது. விந்தணுக்களின் அளவும் 1% அதிகரித்திருந்தது. இது ஆரோக்கியமான விந்தணுக்கள் எப்படி இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனத்தின் வரையறையுடன் பொருந்திப் போகிறது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டிஆக்சிடன்ட்டுகள், பி வைட்டமின் ஆகியவை மிகுந்த உணவுகளும் கருவுற வைக்கும் திறனை மேம்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். இவை அனைத்தும் கொட்டை வகைகளில் இருப்பதுடன் மற்ற சத்துகளும் உள்ளன. முறையான உணவுப் பழக்கம் உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளால் கருவுற வைக்கும் திறன் அதிகரிக்கும் என்பது அந்த ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டது என்கிறார் அதை நடத்திய டாக்டர் ஆல்பர்ட் ஹுட்டஸ். இவர் ஸ்பெயினின் ரோவிரா ஐ விர்கிலி பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர். அப்படியே ஏற்க முடியுமா? ஆனால் இந்த ஆய்வு முடிவுகளை அப்படியே ஏற்க முடியுமா என சந்தேகம் தெரிவிக்கின்றனர் சில ஆய்வாளர்கள். ஏனெனில் இந்த ஆய்வு ஆரோக்கியமான நபர்களிடம் மட்டுமே செய்யப்பட்டடது. எனவே கருத்தரிக்க வைக்கும் திறன் குறைபாடுள்ள ஆண்கள் உள்ளிட்ட மற்ற பிரிவு ஆண்களுக்கும் இது பொருந்துமா என்பது கேள்விக்குறியே என எச்சரிக்கின்றனர் அந்த நிபுணர்கள். கொட்டை அளிக்கப்பட்ட பிரிவு ஆண்களுக்கு வாழ்க்கையில் சாதகமாக இருந்த மற்ற அம்சங்களை ஆய்வு செய்தவர்கள் கருத்தில் கொள்ள தவறியிருக்கும் வாய்ப்பும் உள்ளது என ஆய்வில் தொடர்பில்லாத ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆண்ட்ரலாஜி பேராசிரியர் ஆலன் பேஸி கூறுகிறார். இந்த ஆய்வு முடிவுகள் கருத்தியல் ரீதியாக ஆர்வமூட்டுவதாக இருந்தாலும் கருவுற வைத்தலில் இது எந்தளவுக்கு பலன் தரும் என்பதை உறுதியாக சொல்லமுடியாது என்கிறார் டாக்டர் விர்ஜினியா போல்டன். இவர் லண்டன் கய்ஸ் மருத்துவமனையின் முன்னாள் கிளினிகல் எம்பிரியாலஜிஸ்ட் ஆலோசகர் ஆவார். ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமுன் நமது நோயாளிகள் புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் நிறுத்தச் செய்வதுடன் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வைக்க வேண்டும் என்கிறார் விர்ஜினியா. ஆய்வு முடிவுகள் ஸ்பெயினின் பார்ஸிலோனாவில் உள்ள மனித இனப்பெருக்கம் மற்றும் கருவியல் துறையின் வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/science-44729952
 5. ஒருவரின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து அளிக்கும் போது, அவருக்கு எப்போது மரணம் நிகழும் என 95 சதவீதம் துல்லியமாக கூகுள் கண்டுபிடித்துக் கூறுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இன்றைய நவீன, அவசரமான வாழ்க்கை முறையில் மனித உயிர்கள் பிறக்கும் முறை அனைவருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. மரணம், அது எப்போது சம்பவிக்கும், எந்த நேரத்தில், தேதியில் என்பதுதான் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட முடியாத விஷயமாக இருக்கிறது. வாழ்க்கையின் சூட்சமம் அந்த ஒரு விஷயத்தில்தான் அடங்கி இருக்கிறது. சாகும் தேதி தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் என்று கூறுவார்கள். அது விரைவில் கூகுள் தொழில்நுட்பத்தால், நனவாகப் போகிறது. கூகுள் நிறுவனத்தின் மெடிக்கல் பிரைன் டீம் ஒருங்கிணை ஆர்ட்டிபிஷயல் இன்டலிஜன்ஸை உருவாக்கி, மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்கள் எப்போது இறப்பார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வைத்துள்ளது. இது முதல்கட்ட சோதனைதான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் உடல்நலன் சார்ந்த விவரங்கள், மருந்துகள், மாத்திரைகள், போன்றவற்றின் உள்ளீட்டு விவரங்களைக் கூகுள் ஏஐ-யிடம்(ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்)அளித்தால், அந்த நோயாளி இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிருடன் இருப்பார் என்ற விவரத்தை 93 முதல் 95 சதவீதம் துல்லியமாகக் கணித்துக் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அது குறித்த விவரங்களை அளித்தாலும், எப்போது, எந்தத் தேதியில், எந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், அடுத்து எத்தனை நாட்களுக்குப் பின் அவர் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும், அல்லது பரிசோதனைக்கு வர வேண்டுமா என்பதையும் கூகுள் ஏஐ தெரிவிக்கிறது. இது குறித்த ஆய்வறிக்கை கடந்த மாதம் தி நேச்சர் வார ஏட்டில் வெளியாகி இருந்தது. அதில் மார்பகப் புற்றநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரின் உடல்பரிசோதனை குறித்த விவரங்கள் இந்தக் கூகுள் ஏஐயில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவரின் வாழ்நாள் குறித்து கேட்கப்பட்டது. அந்த பெண் குறித்து ஆய்வு செய்த கூகுள் ஏஐ, 19.9 சதவீதம் உயிர்வாழ அந்த பெண்ணுக்கு சாத்தியம் இருக்கிறது என்றது. ஆனால், மருத்துவர்களோ 9.3 சதவீதம் மட்டுமே உயிர்வாழ சாத்தியம் என்று தெரிவித்தனர். ஆனால், மருத்துவர்கள் கணிப்பின்படி அந்த பெண் இன்னும் சில மணிநேரங்களில் இறந்துவிடுவார் என்று முடிவு செய்தனர். ஆனால், இறுதியில் கூகுள் ஏஐ கணிப்பின்படி, அந்த பெண் அடுத்த சில நாட்களுக்கு உயிருடன் வாழ்ந்து அதன்பின் இறந்தார். கூகுல் ஏஐயில் செயல்படும் மனிதர்களின் நரம்புமண்டலம் போன்ற ஒருவகையான மென்பொருள் நாம் அளிக்கும் விவரங்களைத் தானாகவே கற்றுக்கொண்டு, தன்னை மேம்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது. கடந்த காலத்தில் இறந்த நோயாளிகளின் உடல்நலன் தொடர்பான புள்ளிவிவரங்களை அளித்து கூகுள் ஏஐயிடம் அவர்கள் இறந்த நாட்கள், தேதி குறித்து கேட்கப்பட்டது. அதில் கூகுள் ஏஐ கூறிய தேதிகள், நேரம் ஏறக்குறைய 95 சதவீதம் சரியாக பொருந்தியது கண்டு மருத்துவர்கள் வியந்துவிட்டனர். அந்த புள்ளிவிவரங்களைக் கொடுத்ததும் கூகுள் ஏஐ செயல்பட்ட விதம், வேகம், அதன் துல்லியத்தன்மை ஆகியவற்றைக் கண்டு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் வியந்துள்ளனர். எதிர்காலத்தில் கூகுள் நிறவுனத்தின் இந்த ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு மருத்துவமனைகளிலும், கிளினிக்களிலும் கொண்டுவரப்படும். அப்போது, ஒருநோயாளின் நோய் குறித்த விதம், அவரின் உடல்நலன் சார்ந்த விவரங்கள் மூலம் அவர்களின் வாழ்நாள் குறித்த துல்லியத்தன்மை, அவர் குணமடைவாரா, எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதையும் அறிய முடியும். மேலும், கூகுள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒருவரின் உடல்நலன் குறித்த விவரங்களை அளிக்கும் போது ஒருவருக்கு மாரடைப்பு எப்போது வரும், சாத்தியங்கள் குறித்து கண்டுபிடித்துக் கூற முடியும். கூகுள் மெடிக்கல் பிரையன் தொழில்நுட்பம், மருத்துவர்களோடு இணைந்து செயல்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் ஒருவருக்கு நீரழிவுநோய் வருமா என்பதையும் கண்டுபிடித்துக் கூற முடியும.் இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://tamil.thehindu.com/india/article24219126.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers
 6. ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளரை விடுவிக்கக் கோரி, அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் சற்றுமுன்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அக்கரைப்பற்று 40 ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை, எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. குறித்த தவிசாளரை விடுவிக்கக் கோரி பிரதேச தமிழ் மக்கள் கோசங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://newuthayan.com/story/11/தமிழ்-முஸ்லிம்கள்-இடையே-முறுகல்-அக்கரைப்பற்றில்-பதற்றம்-தவிசாளரை-விடுவிக்கக்-கோரி-ஆர்ப்பாட்டம்.html
 7. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தமிழர்களின் பெயர் பட்டியலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தடைப் பட்டியலில் இடம்பெறும் 86 தனிநபர்கள் பட்டியலுடன் இந்தப் 14 தமிழர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஐக்கிய நாடுகள் ஒழுங்கு விதிகள் சட்டத்தின் 47ஆம் பிரிவின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (ரிஆர்ஓ), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (ரிசிசி) உள்பட 8 அமைப்புகளுக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது அத்துடன், தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குறிப்பிடப்படும் புலம்பெயர் நாடுகளில் வாழும் 86 தனி நபர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இணைத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் 100 பேர் இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/13/புலிகளுடன்-தொடர்புடைய-14-பேருக்கு-இலங்கைக்குள்-நுழையத்-தடை-வர்த்தமானி-வெளியிட்டது-பாதுகாப்பு-அமைச்சு.html
 8. பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி ஹற்றனில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம் இன்று இடம்பெற்றது. ஹற்றன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினர். பிக்குமார் மற்றும் பிரதேச மக்கள் மலர் தட்டுக்களை ஏந்தியவண்ணம் ஹற்றன் மல்லியப்பு சந்தியிருந்து நீக்ரோதாரம விகாரைக்கு ஊர்வலமாகச் சென்று விகாரையில் பூசை வழிபாடுகளில் ஈடுப்பட்டனர். http://newuthayan.com/story/16/ஞானசாரரை-விடுவிக்கக்-கோரி-மலர்-ஏந்தி-ஊர்வலமாகச்-சென்று-அஞ்சலி.html
 9. பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் தாயிலான் குடியிருப்பு மக்களும் இணைந்து மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியை இன்று வியாழக்கிழமை காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் ஆகியை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு அமையத்தின் பிரதி நிதி ஒட்தார குணவர்த்தன கலந்து கொண்டதோடு,விருந்தினர்களான மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஹமட் முஜாகிர், உறுப்பினர்கள், நகர சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளை பராமரிக்கும் இடமாக உருவாக்கப்பட்டுள்ளதோடு, கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு அதனை பழக்கப்படுத்தி பயனுள்ள நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/2018/84590/
 10. மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று வியாழக்கிழமை (21) காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த பொருள் பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது. மன்னார் பிரதான பாலத்தடி கடற்கiயில் இன்று காலை மீனவர் ஒருவர் மீன் பிடிக்க கடலில் போட்டிருந்த வலையை கடலில் இருந்து எடுத்துக்கொண்டிருந்த போது குறித்த வலையில் பொருள் ஒன்று சிக்கிய நிலையில் குறித்த மீனவர் அதனை மீட்டு கடற்கரைக்கு கொண்டு சென்றார். குறித்த பொருளில் உள்ள மண்ணை அகற்றிய நிலையில அது ஒரு பிள்ளையார் சிலை என தெரிய வந்துள்ளது. குறித்த பிள்ளையார் சிலை பழைமை வாய்ந்ததா?அல்லது அண்மைக்காலங்களாக மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சிலையா? என்பது தொடர்பில் மீனவர்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/84597/
 11. மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்களை கொடூரமான முறையில் தாக்கிவிட்டு அங்கிருந்த நகை, பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை கொளையடித்து சென்றுள்ளனர். வாள், கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்த ஐந்திற்கும் மேற்பட்டவர்களினாலே இக் கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை நடந்த இச் சம்பவத்தில் 5 இலட்சத்திற்கும் அதிகமான உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்தனர் இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- மிருசுவில் ஆசைப்பிள்ளையேத்தம் படித்த மகளிர் திட்டத்தில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை ஒரு மணியளவில் வந்த கொள்ளையர்கள் வீட்டின் ஜன்னலை கழட்டி வீட்டிற்க்குள் புகுந்துள்ளனர் உட்புகுந்தவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த வீட்டு உரிமையாளரை போர்வையால் சுற்றி கட்டி சுவருடன் சேர்த்து தாக்கியுள்ளனர். இதன் பின்னர் அறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த இரு பெண்களை வாள் மற்றும் கத்தி என்பவற்றை காட்டி அச்சிறுத்தி அவர்கள் அணிந்திருந்த சங்கிலி, காப்பு, மோதிரம், தோடு என்பவற்றை அபகரித்துள்ளனர். தொடர்ந்து வீட்டிற்க்குள் சல்லடை போட்டு தேடுதல் நடத்திய கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களையும் 30 ஆயிரம் ரூபா பணத்தினையும் கொளையிட்டுள்ளனர்.வீட்டிற்குள் சல்லடை போட்டு தேடுதல் நடத்தி கொள்ளையிட்ட அவர்கள் அங்கிருந்து தப்பி செல்லும் போது தங்களை பின் தொடர்ந்து செல்லாதவாறு வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிளின் பிளக்கையும் பிடுங்கி சென்றுள்ளனர். இது தவிர வீட்டிற்குள் இருந்த தொலைபேசிகளையும் அபகரித்து சென்ற கொள்ளையர்கள் தொலை பேசிகளை அயல் வீட்டு வளாகத்திற்குள் எறிந்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதன் பின்னர் அயலவர்களின் துணையுடன் கொள்ளையர்களின் தாக்குதலிக்கு இலக்காகி தலையில் காயமடைந்தவர் மீட்க்கப்பட்டு சாவகச்சேரி ஆதர வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்த கொடிகாமம் காவல்துறையினர்; கைரேகை உள்ளிட்ட தடையங்களை பதிவு செய்ததுடன், விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர் http://globaltamilnews.net/2018/84609/
 12. புதிய விஷயங்களை நினைவில் கொள்ளும்போது யாருமே சற்று சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், எந்த வேலையும் செய்யாமல் `சும்மா' அமர்ந்திருப்பதால் நினைவுத்திறன் அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? மங்கலான வெளிச்சத்தில் சாய்ந்து அமர்ந்து நினைவுகளை ஒருமைப்படுத்த வேண்டும். 10-15 நிமிடங்கள் அமைதியான சூழலில் அமர்ந்திருந்தால் உங்கள் நினைவுத்திறன் சிறப்பாக செயல்படுவதை உணரமுடியும். இதன் மூலம் அந்த நேரத்தை உபயோகமாகப் பயன்படுத்த நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் கிடைக்கும் பலனைவிட அதிக பலன் கிடைக்கும். எந்த வேலையும் செய்யாமல் அமர்ந்திருக்கும்போது, பிற செயல்களை தவிர்ப்பது அவசியம். இது மூளையில் நினைவுகள் பதிவதை பாதிக்கும். இ மெயில் பார்ப்பது, ஸ்மார்ட்ஃபோன் பார்ப்பது ஆகியவற்றை இச்சமயங்களில் தவிர்க்க வேண்டும். எந்த இடையூறுகளும் இன்றி மூளை தன்னை வளப்படுத்திக்கொள்ள அனுமதிப்பது அவசியம். படிப்பில் மந்தமான மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் மறதி நோய், சில வகை டிமென்ஷியா எனப்படும் நினைவுத்திறன் இழத்தல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நல்ல பலனைத் தரும். எந்த இடையூறுகளுமற்ற ஓய்வான சமயத்தில் நினைவுத்திறனை மேம்படுத்த முயற்சிப்பது சிறந்த பலனை தரும் என்பது 1900-ஆம் ஆண்டிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி உளவியலாளர் ஜார்ஜ் இலியாஸ் மியூலெர் மற்றும் அல்ஃபோன்ஸ் பில்ஜெக்கர் ஆகியோர் இதை உறுதி செய்து ஆவணப்படுத்தினர். இதற்காக சிலரை வைத்து அவர்கள் ஆய்வு செய்தனர். படத்தின் காப்புரிமை Getty Images ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களிடம் எவ்வித பொருளும் தராத ஒலிக்குறிப்புகளை கற்குமாறு மியூலெரும் பில்ஜெக்கரும் பணித்தனர். கற்பதற்கு சிறிது அவகாசம் தந்த பிறகு அவர்களில் ஒரு பகுதியினரிடம் உடனடியாக மேலும் சில ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டன. மற்றொரு பிரிவினருக்கு ஆறு நிமிட இடைவெளிக்கு பிறகு ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டன. ஒன்றரை மணி்நேர இடைவெளிக்குப்பிறகு அந்த இரு பிரிவினருக்கும் வழங்கப்பட் ஒலிக்குறிப்புகளை நினைவுபடுத்தி கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். இதில் கிடைத்த பதில்களில் குறிப்பிடத்தக்க அளவு மாறுபாடுகள் தெரியவந்தன. ஓய்வு கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒலிக்குறிப்புகளில் 50 சதவிகித்தை சரியாக நினைவுகூர்ந்தனர். இடைவெளியே அளிக்கப்படாமல் ஒலிக்குறிப்பை படித்தவர்கள் 28% அளவுக்கே அவற்றை மீண்டும் நினைவுபடுத்த முடிந்தது. தகவல்கள் மூளையின் நினைவகத்தில் பதிந்துகொண்டிருக்கையில் புதிய தகவல்கள் வந்துகொண்டே இருப்பது நினைவகப் பதிவுப்பணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதிலிருந்து தெரிகிறது. இது தொடர்பாக உளவியலாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளை தொடர்ந்து ஆய்ந்தறிந்த போதும் 2000-ஆவது ஆண்டிலேயே இதைப்பற்றி விரிவாக அறிய முடிந்தது. எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் செர்கியோ டெல்லா சலா மற்றும் மிசோரி பல்கலைக்கழகத்தின் நெல்சன் கோவன் ஆகியோரின் ஆய்வுகள் இதற்கு முன்னோடியாக இருந்தன. மூளையில் நினைவுப்பதிவின்போது இடையூறுகள் குறைந்தால் பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் ரீதியான பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவுத்திறனை மேம்படுத்துமா என்றும் கண்டறிய இக்குழு ஆர்வம் கொண்டிருந்தது. மியுலெர் மற்றும் பில்ஜெக்கரின் அதே பணியில் சலாவும் கோவனும் ஆய்வு மேற்கொண்டனர். சோதனைக்குட்படுத்தப்பட்டவர்களுக்கு 15 வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. இச்சோதனைகளின்போது இடையறாது தொடர் ஆய்வுகளுக்குட்படுத்தப்பட்டனர். மற்றும் சிலர் இருட்டு அறையில் தூக்கம் வராத வகையில் படுக்கவைக்கப்பட்டிருந்தனர். சிறு இடையூறுகளும் நினைவுப்பதிவில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது இச்சோதனையில் உறுதியானது. இதில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய வார்த்தைகளின் எண்ணிக்கை 14 சதவிகிதத்தில் இருந்து 49% ஆக உயர்ந்திருந்தது. நரம்பியல் பாதிப்பற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் கிடைத்த எண்களுக்கு இது இணையானதாகும். எனினும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இச்சோதனையில் எந்த பெரிய முன்னேற்றத்தையும் காணமுடியவில்லை. படத்தின் காப்புரிமை Getty Images இது தவிர அடுத்த சோதனைகளின் முடிவுகளும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தன. இதில் சோதிக்கப்பட்டவர்களுக்கு சில கதைகள் கூறப்பட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஓய்வுக்கு வாய்ப்பளிக்கப்படாதவர்கள் கதையின் 7% தகவல்களையே சரியாக கூறினர். ஆனால் போதிய ஓய்வுக்கு பின் பதில் கூற வாய்ப்பளிக்கப்பட்டவர்கள் கூறிய பதில்கள் 79% சரியாக இருந்தது. அதாவது நினைவுத்திறன் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் 11 மடங்கு அதிகரித்துள்ளது. அதே நேரம் ஆரோக்கியமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நினைவுத்திறன் மேம்படல் 10% - 30% ஆக இருந்தது. டெல்லா சலா மற்றும் கோவனின் மாணவரான மிஷேலா டெவார் இதில் தொடர் ஆய்வுகளை பல்வேறு பின்னணிகளில் மேற்கொண்டு வருகிறார். ஆரோக்கியமானவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் குறுகிய நேர ஓய்வு வாய்ப்பு என்பது மெய்நிகர் சூழலில் வெவ்வேறு இடக்குறியீடுகளையும் நினைவில் பதியுமளவுக்கு பலன் தரும் என்பது தெரியவந்தது. இது இளம் மற்றும் முதியவர்களுக்கும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆரம்ப நிலை அல்சைமர் நோயாளிகளுக்கும் பலன் தரும் என்பது தெரியவந்துள்ளது. சோதனைக்குட்படுத்தப்பட்ட ஒவ்வொருவரும் மங்கலான வெளிச்சம் கொண்ட நிசப்தமான அறையில் அமர வைக்கப்பட்டனர். மொபைல் ஃபோன் போன்ற இடையூறு ஏற்படுத்தும் சாதனங்கள் ஏதும் தரப்படவில்லை. அதே நேரம் வேறு எந்த குறிப்பான அறிவுரையையும் தரவில்லை என்கிறார் டெவார். சோதனைகளின் முடிவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் வியக்கத்தக்க வகையில் பதில் தந்திருந்தனர். இந்த ஆய்வுகளில் இருந்து மூளையில் நினைவுப்பதிவு நடைமுறையை தெளிவாக அறியமுடியவில்லை. ஆனால் இதுபற்றிய சில மறைமுக விடைகள் கிடைத்துள்ளன. நினைவுகள் முதலில் மூளையில் பதிந்து பின்னர் நிலைகொண்டு நீண்டகால பதிவாக மாறுகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. இந்நிகழ்வு தூக்கத்தின்போதே பெரிதும் நிகழ்வதாக முன்பு கருதப்பட்டு வந்தது. டெவாரின் பணிகளை தொடர்ந்து 2010ல் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் லிலா டெவாச்சி என்பவர் சில ஆய்வுத்தகவல்களை வெளியிட்டார். நினைவுகள் மூளையில் பதிவது என்பது தூக்கத்தின்போது மட்டும் நடப்பதில்லை. விழித்திருந்தாலும், அமைதியான சூழலில் எடுக்கும் ஓய்வின்போதும் நினைவுப்பதிவு நடக்கும் என்கிறார் அவர். இவரது ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு ஜோடி ஜோடியாக படங்கள் காட்டப்பட்டன. அதாவது ஒரு முகம் மற்றும் பொருள் அல்லது காட்சி இணைத்துக்காட்டப்பட்டது. பிறகு அவர்கள் படுக்க அனுமதிக்கப்பட்டு குறுகிய நேரத்திற்கு அப்படியே இருக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது ஹிப்போகேம்பஸ் பகுதிக்கும் விஷுவல் கார்டெக்ஸ் பகுதிக்கும் தகவல் பரிமாற்றம் அதிகரித்துக்காணப்பட்டதை அவர் கண்டார். இது போன்று தகவல் பரிமாற்றம் அதிகம் நடக்கப்பெற்றவர்கள் அதிக நினைவுகளை இருத்திக்கொள்ளும் திறனை பெற்றிருந்தனர். படத்தின் காப்புரிமை Getty Images இந்த ஆய்வுகள் குறித்து எய்டன் ஹார்னர் உள்ளிட்ட மற்ற உளவியலாளர்கள் உற்சாகமும் ஊக்கமும் அடைந்துள்ளனர். இது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பலவேறு நபர்களுக்கு சிகிச்சை தர இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள். நினைவுத்திறனை அதிகரிக்க தினமும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்குவது நடைமுறையில் கடினம் என்கிறார் எய்டன் ஹார்னர். எனினும் புதிய தகவல்களை மனதில் இருத்த இந்த நுட்பம் மிகவும் உதவும் என்கிறார் அவர். இதுபோன்று ஒரு மூதாட்டி குறுகிய ஓய்வில் தன் பேத்தியின் பெயரை நினைவுக்கு கொண்டுவர முடிந்ததாக டெவர் தம்மிடம் கூறியதாக சொல்கிறார் ஹார்னர். நாட்டிங்ஹாம் டிரென்ட் பல்கலைக்கழகத்தின் தாமஸ் பாகுலி என்ற பேராசிரியர் இதை வரவேற்றாலும் சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிறார் அவர். அல்சைமர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே பல சிகிச்சை உத்திகள் வழங்கப்பட்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறார் அவர். மேலும் கடுமையான டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இதை செயல்படுத்த முடியாது என்கிறார் அவர். நோயாளிகளுக்கு மருத்துவ ரீதியான பலன் தவிர மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் பலன் தரும் என்கின்றனர் பாகுலியும் ஹார்னரும்... பல மாணவர்களின் கல்வித்திறனில் 10% - 30% மேம்பாடு இருந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எல்லா பக்கத்திலிருந்தும் தகவல்கள் கொட்டும் இக்காலத்தில் ஸ்மார்ட்ஃபோன்களை மட்டுமல்ல..மூளையையும் ரீசார்ஜ் செய்வது அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். https://www.bbc.com/tamil/science-44527402
 13. தினமும் நாம் பல வகையான உணவுகளை உட்கொள்கிறோம். இவற்றிலுள்ள சத்துகள், புரதம் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் நாம், அவற்றை எந்த எவ்வளவு சாப்பிடவேண்டும் என்பதை கணக்கிடுவதில்லை. நாம் சாப்பிடும் உணவின் அளவை நினைவில் வைத்துக்கொளவது என்பது கடினமான ஒன்று. சத்தான உணவுகளுக்கும் பாஸ்புட்களுக்கு மத்தியில் நாம் பல நேரங்களில் அகப்பட்டுக்கொள்ளக் காரணம், அவற்றிலிருந்து தேர்வுசெய்ய நமக்கு பல வாய்ப்புகள் உள்ளது என்பதே. ஆக, எந்த உணவை எவ்வளவு சாப்பிட வேண்டும்? உணவிற்கான அளவு என்ன? உங்களின் உள்ளங்கையே அதற்கான சிறந்த அளவுகோல் என்கிறார் உணவு நிபுணரான மோனிகா செயிமிக்கா. நமது கைகளின் அளவை வைத்து எத்தகைய உணவை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பிரிக்கமுடியும் என்கிறார் அவர். ` காய்கறிகள், புரதம், பழங்கள், பால் வகை உணப்பொருட்கள் என நம்மிடம் பல வகையான உணவுக்குழுக்கள் உள்ளன. ஆகவே, சிறந்த, சமமான, சரியான அளவிலான உணவுகளை தேர்வு செய்வது என்பது நமக்கு மிகவும் முக்கியமானது. இதை சரியாக நினைவில் வைத்துக்கொள்ள நம் கைகளின் அளவை நினைவில் வைக்க வேண்டும்.` அவர் கூறும் வழிமுறைகள் என்னென்ன? படத்தின் காப்புரிமை Jeffrey Greenberg/UIG via Getty Images பழவகைகள்: அது ஒரு ஆப்பிளாக இருந்தாலும், சோளமாக இருந்தாலும் உள்ளங்கை அளவை நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் அவர். நாம் சாப்பிடும் தட்டில் 1/3 பங்கு கார்போஹைட்ரை இருந்தல் வேண்டும். புரதம்: சிறந்த அளவிலான புரதச்சத்தை உணவில் சேர்த்துக்கொள்ள மாமிசம், மீன், பருப்பு, பயறு ஆகியவற்றை ஒரு நாளின் உணவில் இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துறைக்கிறார். புரதத்தின் அளவு என்பது உங்கள் கையில் பின்பகுதி அளவு இருத்தல் வேண்டும். பால் வகை உணவுகள்: பால் அல்லது பாலுக்கு மாற்றாக உள்ள உணவுகளை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று பகுதிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். பால்வகை உணவு என்பது, தீப்பெட்டி அளவிலான வெண்ணை, சிறிய கோப்பை ஆளவு பால் அல்லது சிறிதளவு தயிரான இருக்கலாம். குறைந்தது 80% நேரங்களில் சத்தான உணவையே உட்கொள்ள முயலவேண்டும் என்கிறார் மோனிகா. `சில நாட்களில் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்னவேண்டும் என்பதுபோல தோன்றுவது மனித இயல்பே. ஆனால், அதையே ஒரு வழக்காமக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. மீண்டும் சத்தான உணவுகளை சாப்பிடும் பழக்கத்திற்கு திரும்புவதே சிறந்தது` என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/global-44550932
 14. 14 வயது சிறுமி என்றால் உங்கள் மனதில் விரியும் காட்சி என்னவாக இருக்கும்? அவள் பள்ளிக்கு செல்வாள். தோழிகளுடன் மகிழ்வாக சிரித்துக்கொண்டிருப்பாள். கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பாள். ஆனால் அந்த வயதில் யாரோ ஒருவனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் கர்ப்பமாகி யாரின் உதவியும் கிடைக்காமல் அச்சிறுமி அபலையாக அலைய நேர்ந்தால் எப்படி இருக்கும். அது போன்ற நெஞ்சை உருக்கும் நிகழ்வுதான் இது... உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டம் டெல்லியிலிருந்து சுமார் 680 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அந்தச் சிறுமி பஹ்ரைச் மாவட்டத்தில உள்ள ஒரு கிராமத்தில்தான் வசிக்கிறாள். பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட அந்த 14 வயது சிறுமிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குழந்தை பிறந்தது. அது ஜூன் மாதம் 2016ம் ஆண்டு. அந்தச்சிறுமியின் வயிறு உப்பத் தொடங்கியது நன்றாகவே தெரிந்தது. அண்டை வீட்டு பெண் என்ன நடந்தது என கேட்டாள்..அப்போதுதான் தான் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதைச் சொன்னாள் அச்சிறுமி. அதே கிராமத்தை சேர்ந்த 55 வயது நபர்தான் அந்த கொடுஞ்செயலை செய்தது. கத்தி முனையில் வன்புணர்வு... தந்தையும் மகளும் கல்வி அறிவு அற்றவர்கள். தாய் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். களிமண்ணாலான குடிசை வீடுதான் அவர்கள் வசிப்பிடம். அவர்களது வாழ்க்கைத்தரம் என்பது வறுமைக்கோட்டுக்கெல்லாம் வெகு கீழே இருந்தது. தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த அக்குடும்பத்தின் இரு மகள்களில் மூத்தவளுக்கு எப்படியோ சிரமப்பட்டு திருமணம் செய்து வைத்துவிட்டார் அந்த தந்தை. இளையவளுக்கு என்ன செய்வது என்பதுதான் அந்த தந்தை முன் இருந்த பெருங்கவலை. அப்படிப்பட்ட சமயத்தில்தான் அந்த தந்தைக்கு ஒரு தகவல் கிடைத்தது. ஏழைக்குடும்பத்து திருமண வயது பெண்களுக்கு லக்னோவில் அரசு உதவித்தொகை கிடைக்கிறது என்ற செய்திதான் அது. இதை கூறிய அந்த நபருடன் பணத்தை பெறுவதற்காக தன் மகளை லக்னோவுக்கு அனுப்பி வைத்தார் அந்த தந்தை. அப்போது நடந்த விபரீதத்தை வேதனை தோய்ந்த வார்த்தைகளுடன் விவரித்தார் அந்த அப்பாவி தந்தை. "என் மகளை லக்னோவிற்கு அழைத்துச்சென்ற அந்த படுபாவி கத்தி முனையில் வன்புணர்வு செய்துவிட்டான். பிறகு நன்பாராவிலும் வீட்டுக்கு திரும்பும் போதும் அக்கொடுமையை புரிந்துள்ளான்". பயம் காரணமாக தனக்கு நேர்ந்ததை வீட்டில் சொல்லவில்லை அச்சிறுமி. ஆறு மாதத்திற்கு பின்தான் நடந்த எல்லாமே தந்தைக்கு தெரியவந்தது. உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த தந்தை. இது நடந்தது 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி. தாழ்த்தப்பட்டவருக்கு எதிராக குற்றம் இழைத்தவருக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்பது சட்டம். அந்த நபர் கைதான பின் ஜாமீன் தரலாமா கூடாதா என்பது நீதிபதியின் முடிவுக்குட்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் குற்றம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின்பும் தவறிழைத்தவர் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமோ இழப்பீடோ தரப்படவில்லை. இதற்கிடையில் குழந்தையை பெற்றெடுத்துவிட்டாள் அச்சிறுமி. தங்களுக்கே சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிக்கொண்டிருந்த குடும்பத்தில் இன்னுமொரு உறுப்பினர் சேர்ந்துவிட்டதால் நிலைமை இன்னும் மோசமானது. இந்தச்சூழ்நிலையில் வழக்கை விசாரித்து வந்த காவல் துறை குழந்தையின் டிஎன்ஏவும் குற்றம் சாட்டப்பட்டவரின் டிஎன்ஏவும் பொருந்தினால் மட்டுமே இதில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துவிட்டது. டிஎன்ஏ அறிக்கைக்காக காத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாலியல் வன்புணர்வுக்காளானவர்கள் நலனுக்காக கடுமையான சட்டங்கள், விதிமுறைகள், நீதிமன்றங்கள் உருவாக்க வேண்டும். ஆனால் இவை எல்லா சமயத்திலும் பாதிக்கப்பட்டவருக்கு சாதகமாக அமையுமா என்பது கேள்விக்குறியே. தாழ்த்தப்பட்ட குடும்ப சிறுமி வன்புணர்வினால் கருவுற்றது தெளிவாக தெரியும் நிலையில் தேசிய அளவிலான அமைப்போ அல்லது மாநில அளவிலான அமைப்போ அல்லது மாவட்ட அளவிலான அமைப்போ அச்சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டியிருக்க வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாகியும் நீதிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது அச்சிறுமி. இவ்விஷயத்தை விசாரிப்பதற்காக சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு சென்றேன். இதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவளது தந்தையுடனும் பேசினேன். அந்தக்காவல் நிலையத்தில் தலைமை பொறுப்பில் இருந்த பெண் அதிகாரி நான் சென்றிருந்த போது உள்ளூர் முக்கிய பிரமுகருடன் பிரச்னை ஒன்றை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்கிடையிலும் எனது வருகையின் காரணம் பற்றி கேட்ட இந்த அதிகாரி அதை சர்க்கிள் அலுவலகத்தில்தான் கேட்க வேண்டும் என்றார். அடுத்து மதியம் 2 மணியளவில் பஹ்ரைச் சர்க்கிள் அலுவலகத்திற்கு சென்றேன். அப்போது சர்க்கிள் அதிகாரி அங்கு இல்லை. அப்போது அங்கிருந்த அதிகாரியின் உதவியாளர் என்னிடம் சிலவற்றை கூறினார். லக்னோவில் மட்டும் டிஎன்ஏ சோதனை தொடர்பான 5500 வழக்குகள் தேங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் டிஎன்ஏ அறிக்கை இல்லாமல் ஒருவரை எப்படி கைது செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். Image caption இரண்டு ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட படம் பாதிக்கப்பட்டவருக்கு சட்டப்படி இழப்பீடு தரப்பட்டதா என கேட்டேன். முதல் தகவல் அறிக்கைப்படியும் மருத்துவ சோதனை அடிப்படையிலும் இழப்பீட்டுத்தொகையில் 50% உடனடியாக தரப்படும் என்றார் அவர். 2016 ஏப்ரலில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தரப்படும். கூட்டு வன்புணர்வால் பாதிக்கப்பட்டிருந்தால் 8 லட்சம் ரூபாய் இழப்பீடு என்றும் அவர் கூறினார். இந்த சிறுமியை பொறுத்தவரை இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும். சிறுமிக்கு இழப்பீடு வழங்கப்படும் பட்சத்தில் அதை பக்கத்து அறையில் அமர்ந்துள்ள போலீஸ்காரர்தான் தருவார் என அந்த உதவியாளர் தெரிவித்தார். இழப்பீடு தருவது குறித்த அந்த போலீஸ்காரரிடமே கேட்டுவிட்டேன். விசாரணை அதிகாரி எழுத்துமூலம் பரிந்துரைத்தால் தான் இழப்பீடு தருவேன் என அந்த போலீஸ்கார ர் தெரிவித்தார். சர்க்கிள் அதிகாரி வந்தவுடன் அவரிடம் இதே கேள்வியை எழுப்பினேன். அப்போது அந்த உதவியாளர் கூறினார்....2 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் இழப்பீடு தந்திருக்க வேண்டும்... இப்போதும் பிரச்னையில்லை. நாளையே அதை தந்துவிடலாம்... என்றும் அவர் கூறினார். இவர்கள் இந்த விஷயத்தையே வெகு சாதாரணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக புரிந்துவிட்டது. உரிய சமயத்தில் சிறுமிக்கு பணம் கிடைத்திருந்தால் அதை வைத்து சிகிச்சைக்கும் வழக்கு செலவுகளுக்கும் பயன்படுத்தியிருக்கலாம். காவல் துறையின் அலட்சியம் காரணமாகவோ அல்லது தவறு காரணமாகவோ இப்படி நடந்துள்ளது. படிப்பறிவில்லாத சிறுமியும் அவளது தந்தையும் எப்படி தோற்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். மருத்துவ அறிக்கையில் சிறுமியின் வயது 19 என இருந்தது எப்படி? சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படும்போது அவளுக்கு வயது 14 என்கிறார் அவளது தந்தை. நீதிபதியிடம் தந்த வாக்குமூலத்திலும் வயது 14 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் வயது 20 என குறிப்பிடப்பட்டிருந்த்து. பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 18க்கு கீழ் இருக்கும் பட்சத்தில் அந்த புகாரை சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவு 21ன் கீழ் வழக்காக பதிவு செய்ய வேண்டும். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் இவ்வாறு பதிவு செய்யவில்லை. இதைக்கேட்டதற்கு 2 ஆண்டுகளுக்கு முன் சிறுமிக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை அவர் தந்தார். பாதிக்கப்பட்டவரின் துல்லியமான வயதை உறுதிப்படுத்த கை எலும்பின் எக்ஸ்ரே, அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால மருத்துவ அறிக்கையிலோ சிறுமிக்கு 19 வயது என எழுதப்பட்டிருந்தது. சிறுமிக்கு வன்கொடுமை நடக்கும் போது 14 வயது என தந்தை கூறியிருந்த நிலையில் அறிக்கையில் 19 என எப்படி குறிப்பிட்டீர்கள் என கேட்டேன். எக்ஸ்ரே ஒரு போதும் பொய் சொல்லாது என்றார் அந்த அதிகாரி. போலீஸ் அறிக்கையை கூர்ந்த ஆராய்ந்தபோது அதில் சந்தேகத்துக்கிடமான சில விஷயங்களை கண்டுபிடித்தேன். எக்ஸ்ரே தாளில் சோதனை வரிசை எண் 1278 என்றும் மருத்துவ அறிக்கையில் வரிசை எண் 1378 என்றும் இருந்தது. இறுதி அறிக்கையில் 1278ல் உள்ள 2 என்பது 3 என நீல மையால் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் இறுதி அறிக்கையில் ஒரு பகுதி நீல மையிலும் இன்னொரு பகுதி கறுப்பு மையிலும் எழுதப்பட்டிருந்தது. அதில் சிறுமியின் கைரேகையும் பெறப்பட்டிருந்தது. இதையெல்லாம் பார்த்த பிறகு மருத்துவ அறிக்கையில் செய்யப்பட்டிருந்த முறைகேடுகளை எப்படி கண்டுகொள்ளாமல் செல்லமுடியும் என்றேன். எனது இந்த கேள்விக்கு பதில் தராத அவர்கள் இந்த வழக்கை பற்றி உங்களுக்கு சொன்னது யார் என பதில் கேள்வி கேட்டார்கள். 2016 ஜூன் 24ல் முதல் தகவல் அறிக்கை பதிவாகிறது. இதற்கு 25 நாட்களுக்குபின்தான் நீதிபதி முன் அச்சிறுமி வாக்குமூலம் அளிக்கிறாள். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் 24 மணி நேரத்திற்குள் பெறப்பட வேண்டும். தாமதம் ஏதும் நேர்ந்தால் அதற்கான காரணத்தை போலீசார் நீதிபதியிடம் எழுத்து மூலம் தெரிவித்திருக்கவேண்டும். இதில் போலீஸ் விசாரணையில் சிறுமியின் தந்தைக்கு நம்பிக்கை இல்லை. குற்றம் செய்தவர் பணத்தை கொண்டு காவல் துறையின் கையை கட்டிப்போட்டுவிட்டார் என்பதுதான் அத்தந்தையின் குற்றச்சாட்டு. மருத்துவ அறிக்கையில் இருந்த முரண்களை வழக்கறிஞர்கூட கண்டுபிடித்து இழப்பீடு பெற்றுத்தர முயற்சிக்காதது எனக்கு ஆச்சரியமே. போலீஸ் மற்றும் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்துவிட்ட சிறுமியின் தந்தை கிராமத்தலைவரின் உதவியுடன் நாட்டின் முக்கியமான 11 பதவிகளில் உள்ளோரிடம் முறையிட்டார். ஆனால் யாருமே அச்சிறுமியை 2 ஆண்டாகியும் கண்டுகொள்ளவில்லை. பிரதமர், முதல்வர், மாவட்ட ஆட்சியர், தேசிய மனித உரிமை ஆணையம், மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், போக்குவரத்து அமைச்சர், எம்எல்ஏ, தேசிய மகளிர் ஆணையம், மாநில பெண்கள் ஆணையம், காவல் தலைமை ஆய்வாளர் என 11 இடங்களுக்கு அனுப்பப்பட்ட முறையீட்டு கடிதங்களின் நகலும் என்னிடம் உள்ளன. பஹ்ரைச்சிலிருந்து கடந்த ஜூன் 3ம் தேதி திரும்பியபோது இது குறித்து மாவட்ட ஆட்சியர் மாலா ஸ்ரீவஸ்தவாவுக்கு தொலைபேசியிலும் மின்னஞ்சலிலும் தெரிவித்தேன். எனது தகவலின் பேரில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதா என ஒரு வாரம் கழித்துக் கேட்டேன். அதை சரிபார்த்துக்கொண்டிருப்பதாக சாதாரணமாக கூறிவிட்டார் அவர். சிறுமிக்கு இழப்பீடு தருவது குறித்து சம்மந்தப்பட்ட துறைக்கு கூறியிருப்பதாகவும் அவர் கூறினார். மற்ற நடவடிக்கைகள் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. இதன்பின் நான் உத்தர பிரதேச தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முறையிட்டேன். சிறுமியின் குடும்பத்தை தனது லக்னோ அலுவலகத்துக்கு அனுப்புமாறு அந்த ஆணையர் என்னிடம் கூறினார். ஆனால் அக்குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாடுகிறது என்பதால் நேரில் சென்று சந்திப்பதே சரியாக இருக்கும் எனக் கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். அச்சிறுமியின் ஊருக்கு போவதற்கு தங்கள் அமைப்பில் யாருமில்லை என அவர் கூறினார். போலீசாரும் கூட அச்சிறுமிக்கு உதவவில்லை. இந்த கட்டுரையை எழுதும்வரை உதவி அவளை சென்றடையவில்லை. போலீஸ், மருத்துவர், வழக்கறிஞர், பத்துக்கும் அதிகமான சமூக சேவை அமைப்புகள் என யாரிடமிருந்தும் சிறுமிக்கு உதவி கிடைக்கவில்லை. நான் அச்சிறுமியின் குடும்பத்தினரிடம் பேசும் வரை இதற்கு இழப்பீடு என்ற ஒன்று இருப்பதே அவர்களுக்கு தெரியாது. எந்த அதிகாரிகளும் இது பற்றி அவர்களிடம் கூறவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் கைதாகும் வரையோ டிஎன்ஏ சோதனை அறிக்கை வரும்வரையோ அந்த சிறுமிக்கு எந்த உதவியும் கிடைக்காது. தற்போது அந்த சிறுமி பக்கார்பூர் என்ற கிராமத்தில் உறவினர் வீட்டில் வசிக்கறார். அந்த குழந்தை, சிறுமியின் தந்தை பாதுகாப்பில் உள்ளது. அவர் தினக்கூலியாக தன் வயிற்றை கழுவி வருகிறார். வன்புணர்வு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது ரூ.15,000 கொடுத்து கருக்கலைப்பு செய்யுமாறு குற்றமிழைத்தவர் கூறியுள்ளார். மேலும் அந்த சிறுமியின் நடத்தையையும் அந்நபர் கேள்விக்குள்ளாக்கியிள்ளார். இந்த பிரச்னையில் குற்றப்பத்திரிகை எதுவும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. டிஎன்ஏ அறிக்கை வராததால் வழக்கு 2 ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. அந்த சிறுமி கர்ப்பம் ஆகவில்லை என்றால் இவ்வழக்கில் மேற்கொண்டு எதுவும் நடக்குமா என்பது சந்தேகமே. மேலும் அச்சிறுமிக்கு 18 வயதுக்கு மேலிருக்கும் பட்சத்தில் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது. பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண் இவ்வளவு மோசமாக நடத்தப்படுவது இது முதல்முறையல்ல... இது போன்ற செய்திகள் டிவிக்களில் விரைவு செய்திகள் பிரிவில் 15 நொடிகளில் கடந்து சென்றுவிடும். இதில் அடுத்து என்ன நடக்கிறது...தீர்வு கிடைத்ததா என்றெல்லாம் யாரும் பார்க்கமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்ள அரசு அமைப்புகள் கூட இது போன்ற சம்பவங்களை கண்டுகொள்வதில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க சட்டம் பல்வேறு வாய்ப்புகளை தந்துள்ளது. ஆனாலும் அச்சிறுமிக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தால்... * குற்றம் இழைத்தவர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியாக இல்லாமல் இருந்தால் எஸ்சி/ எஸ்டி சட்டம் 1989ன் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். * மருத்துவ பரிசோதனை அறிக்கையும் முதல் தகவல் அறிக்கையும் இருப்பின் இழப்பீட்டுத் தொகையில் 50% உடனே வழங்கப்பட வேண்டும். * பாதிக்கப்பட்டவருக்கும் அவர் சார்ந்திருப்பவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். * பாதிக்கப்பட்டவர் சிறப்பு நீதிமன்றத்திலோ அல்லது பிரத்யேக சிறப்பு நீதிமன்றத்திலோ சாட்சியங்களையோ ஆவணங்களையோ தாக்கல் செய்ய மனு அளிக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டும். * பாதிக்கப்பட்டவருக்கும் சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டிய கடமை சிறப்பு நீதிமன்றத்திற்கோ அல்லது பிரத்யேக சிறப்பு நீதிமன்றத்திற்கோ உள்ளது. மேலும் விசாரணையின்போது பாதிக்கப்பட்டவர்களின் சமூக பொருளாதார நலனுக்காக குறிப்பிட்ட தொகை வழங்கப்பட வேண்டும் . * பாதிக்கப்பட்டவர், சாட்சி, தகவல் தந்தவர் மிரட்டலுக்கு ஆளாகும் பட்சத்தில் விசாரணை அதிகாரியும் காவல் அதிகாரியும் இது பற்றி அறிக்கை தரவேண்டும். * பாதிக்கப்பட்டவர் தரப்புக்கு முதல் தகவல் அறிக்கையின் பிரதியை இலவசமாக வழங்கவேண்டும். * பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நிதியுதவி தருவது மாநில அரசின் பொறுப்பு * முதல் தகவல் அறிக்கை பதியும் போதும் புகார் பெறும்போதும் பாதிக்கப்பட்டவருக்கு உள்ள உரிமைகள் விளக்கப்பட வேண்டும் * இழப்பீடுகள் குறித்த தகவல்களை வழங்குவது மாநில அரசின் கடமை. * விசாரணை ஏற்பாடுகள், சட்ட உதவிகள் குறித்த தகவலை பாதிக்கப்பட்டவருக்கு எடுத்துச்சொல்வது மாநில அரசின் கடமை. * பாதிக்கப்பட்டவருக்கு அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உதவியையோ அல்லது வழக்குரைஞரின் உதவியையோ நாடும் உரிமை உண்டு. * சிறப்பு பிரத்யேக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை பதியப்பட்டு 2 மாதங்களுக்குள் வழக்கு முடிக்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு கீழானவராக இருந்தால்... * இதுபோன்ற சமயங்களில் குற்றம் இழைத்தவர் மீது போஸ்கோ சட்டம் என அறியப்படும் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும். * பாதிக்கப்பட்டவர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தால் 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு தரப்படவேண்டும். * விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்டவருக்கு குற்றம் இழைத்தவரால் எவ்வித கெடுதலும் நேராமல் பாதுகாக்க வேண்டியது விசாரணை அதிகாரியின் பொறுப்பு. * போஸ்கோ சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு அமைக்க வேண்டும். இதன் மூலம் வழக்குகளை விரைந்து தீர்க்கமுடியும். * போலீஸ் அறிக்கை அல்லது புகார் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுக்கும் * சிறப்பு நீதிமன்றம் வழக்கை எடுத்த 30 நாளுக்குள் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது முக்கியம். * விசாரணை அல்லது சிறப்பு நீதிமன்றங்கள் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிப்பது அவசியம். * பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் அவர்களாக சட்ட உதவி கோர இயலாவிட்டால் சட்ட உதவி ஆணையம் மூலம் ஒரு வழக்குரைஞரை ஏற்பாடு செய்ய வேண்டும். * பாதிக்கப்பட்டவரிடம் விசாரணை தொடங்குமுன் அவர்கள் நிபுணர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியை பெற அனுமதிக்கப்பட வேண்டும். * பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் ஆனால் குற்றம் இழைத்தவருக்கு குறைந்தது 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படவேண்டும். பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்டோருக்கான சட்டங்கள் * உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அறிக்கை தாக்கல் செய்த 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர் நீதிபதி முன் நிறுத்தப்பட வேண்டும். தாமதம் நேரிடின் அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் * குற்றவியல் நடைமுறைச் சட்டம் 357 சி-யின் படி பாதிக்கப்பட்டவருக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தரப்பட வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது * 1987 சட்ட உதவிகள் சட்டப்படி எந்தப் பெண்ணும் குழந்தையும் தாழ்த்தப்பட்டவரும் பழங்குடியினரும் அரசின் சட்ட உதவி மையம் மூலம் வழக்குரைஞர்களை பெற உரிமையுள்ளவர்கள் ஆவர். * பாதிக்கப்பட்டவர் நிதியுதவி கோரியோ இழப்பீடு கோரியோ சட்ட உதவி ஆணையத்துக்கு மனு செய்யலாம். * மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சக திட்ட்டங்களின் கீழ், எவ்வித வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக மருத்துவ மற்றும் சட்ட உதவிகள், கவுன்சலிங் வழங்கப்படும். * வன்புணர்வால் பாதிக்கப்பட்டவர் எந்த காவல் நிலையத்திலும் தனக்கு நேர்ந்த கொடுமையை புகார் செய்ய இயலும். காவல் நிலைய வரம்பில் குற்றம் நடக்காவிட்டாலும் புகார் அளிக்கலாம். இது போன்ற இடங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை பூஜ்யம் முதல் தகவல் அறிக்கை எனப்படும். * முதல் தகவல் அறிக்கை யை பதிவு செய்ய போலீஸ் அதிகாரி மறுக்கும் பட்சத்தில் குற்றவியல் சட்டம் 2013 பிரிவு 166ன் கீழ் அவரை தண்டிக்க முடியும். இதில் அவருக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைப்பதுடன் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும்.https://www.bbc.com/tamil/india-44561589
 15. குடியேறிகளை கைது செய்யும்போது குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்காமல் இருதரப்பையும் ஓரிடத்தில் சேர்த்தே அடைத்து வைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை தொடர் அழுத்தத்தின் காரணமாக பிறப்பித்துள்ளார். ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் கைதுசெய்யப்படும்போது பெற்றோர் மற்றும் குழந்தைகள் தனித்தனியாக இடத்தில் வைக்கப்படுவது குறித்து டிரம்பின் கொள்கைக்கு முன்னதாக சர்வதேச ரீதியாக பலத்த எதிர்ப்பு எழுந்தது. டிரம்ப் பிறப்பித்துள்ள புதிய ஆணை எப்போதிலிருந்து அமலுக்கு வரும் எனபது தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே அமலில் இருந்த உத்தரவின்படி பிரிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்து டிரம்ப் பிறப்பித்த இந்த புதிய உத்தரவில் எதுவும் குறிப்பிடவில்லை. கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெற்றோரிடம் பிரிக்கப்பட்டு சுமார் 2342 குழந்தைகள் தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புதிய உத்தரவொன்றில் புதன்கிழமையன்று கையெழுத்திட்ட டிரம்ப், ''குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருதரப்பும் ஓரிடத்தில் வைக்கப்படுவர்'' என்று தெரிவித்தார். ''பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தனியாக அடைத்து வைக்கப்படும் காட்சியை எனக்கு காண பிடிக்கவில்லை'' என்று குறிப்பிட்ட அவர், ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் யாரையும் சட்டப்படி தண்டிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என்று தெரிவித்தார். படத்தின் காப்புரிமை AFP முன்னதாக, குடியேறிகள் தொடர்பான பிரச்சனையில் அதிகரித்து வரும் கண்டனங்களை மீறி அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை தனித்தனியாக பிரிக்கும் தனது அரசின் கொள்கையை ஆதரித்து டிரம்ப் கருத்து வெளியிட்டார். வணிக மாநாடு ஒன்றில் பேசிய அவர், சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் குடும்பங்களில் பெற்றோர் கைது செய்யப்பட்டால் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியான இடத்தில் வைக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகள், அமெரிக்காவுக்கு அழுகல் போல பாதிப்பு உண்டாக்குவர் என முன்னர் டிரம்ப் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. https://www.bbc.com/tamil/global-44557661