archunan

புதிய உறுப்பினர்கள்
 • Content count

  139
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About archunan

 • Rank
  உறுப்பினர்
 1. இப்பிடிச் சிலகவிதைகளும் இல்லாதுவிட்டால் யாழ்களம் வெறும் பாலையாகவே இருந்திருக்கும். இப்படி நிறைய கவிதைகள் வரவேணும்.
 2. தாயகத்தில் மக்கள் அல்லல்படும் இந்தத்தருணத்தில் பளபள விழாக்கள் தேவையில்லைத்தான். ஆனால் தேசியதலைவரின் பிறந்ததினம் என்பது ஒரு தேசியநாள். அதில் பங்குபற்றுபவர்கள் இனிமேல்தன்னும் ஆடம்பரங்களை குறைத்து எழுச்சியை அதிகரித்து பங்குகொள்வதுதான் முறை. அதுசரி...சுவிஸில் போராடாமல் செத்தவனுகளுக்கு PLOTE நடாத்திய வீர(?) மக்கள் தினம் ஒரு கேளிக்கைநாள்போலவே நடாத்தப்பட்டது. அதைப்பற்றி எந்த ஒருவரும் எழுதாதது கொஞ்சம் இடிக்குது.
 3. நோர்வே மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.நா.க. அரசின் ஆலோசகர்களால் இங்கு வெளியில் தலைகாட்டக்கூட முடியவில்லை. அண்மையில் நா.க.அரசு பற்றிய ஆலோசனைக்கூட்டத்துக்கு வந்த உருத்திரகுமார்ஐயா மக்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் விடுதியில் தங்கிவிட்டு கூட்டத்தில் பங்குபற்றாமலேயே திரும்பவேண்டிய அளவுக்கு அவர்களுக்கு பெருத்த மக்கள் எதிர்ப்பு இருக்கு.
 4. புதினம்நியுஸை ஆர் நடத்துகிறார்கள் என்று எனக்கு தெரியாது. பழைய புதினம் இணையத்தின் வடிவமைப்பை எடுத்து புதிய புதினம் செய்வது சட்டப்படி பிழை! அது ஒரு பகல்கொள்ளைதான் சந்தேகமே இல்லை. ***
 5. என்னைப் பொறுத்தவரையிலும் புதினம்,புதினம்நியுஸ் இரண்டும் செய்திகளைத் தந்த தருகின்ற இணையங்கள்தான். ஆனால் அதில் வரும் ஆய்வுகள்,கட்டுரைகள் என்பனபற்றி பார்த்தால் புதினம் செய்த அளவுக்கு இன்னமும் புதினம்நியுஸ் விமர்சனம் அல்லது மறுபார்வை என்ற போர்வைக்குள் தேசியதலைவரையும் போராட்டத்தையும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்தவில்லை. புதினத்தில் வழுதி 30வருடமாக கக்காமல் அடைகாத்த மலத்தை முன்னால் சென்றவரின் பின்னால் சென்றரைப் பற்றி எழுதுவதாக சொல்லிக் கக்கியபோது புதினத்தை காத்துநின்ற பெருமக்கள் இப்போது புதினம்நியுஸை விமர்சிப்பது அல்லது விமர்சிக்கமுயல்வது நல்ல டமாஸ்தான்யா! ஏதோ தேசியம் என்பது தங்களால்தான் காக்கப்படவேண்டும் என்று கோட்டைகட்டி எழுதுபவர்களை அடையாளம் பிடிக்கடிக்கவேண்டும்.
 6. தேசியக்கொடி என்பது வெறுமனே ஒரு நீள்சதுரதுணி அல்ல.அது ஒரு மக்கள்கூட்டத்தின் உணர்வு,உயிர்ப்பு,வாழ்வு எல்லாமே. அதற்காக வாக்களிப்பது எல்லோரின் கடமையும் ஆகும்.
 7. tamilvoiceக்கு நன்றிகள்!!எங்களுக்காக தங்களை ஈகம்செய்தவர்களைப்பற்றி நினைவுபடுத்துவதற்காக நன்றிகள்!!!! வீரவணக்கங்கள்!!!!
 8. இப்போது மீண்டும் சட்டத்தரணிகள் எங்களின் மீட்பர்களாக வலம்வரத் தொடங்கி இருக்கிறார்கள்.மக்களுக்கு புரியாத நீண்ட வசனங்களை சொல்லி ஏதோ வித்தை காட்ட தொடங்கி விட்டார்கள்.போன சனிக்கிழமை கனடாவில் நாடுகடந்த அரசு என்ற பத்திரிகை வெளியீட்டு நிகழ்வுக்கு போயிருந்தேன்.அதில் பேராசிரியர் சந்திரகாந்தன் 'சில நாடுகள் நாடுகடந்த அரசை ஆதரிப்பதாக உறுதி தந்து இருக்கிறார்கள்' என்று பேசினார். அதற்குப் பிறகு பேசிய ஒருவர் 'பதினாறுநாடுகள் நாடுகடந்த அரசை ஆதரிப்பதாக' முழங்கினார். மேடையின் கீழே அவர்கள் இருவரையும் சந்தித்தேன். 'எந்தெந்த நாடுகள் ஆதரிப்பதாக உறுதிஅளித்துள்ளதாக' கேட்டேன். 'இல்லை அந்த நாடுகளின் கதைகளிலை இருந்து தெரிந்துகொண்டோம்' என்றார்கள். 'நீங்கள் அந்த நாடுகளுடன் கதைத்தனீங்களா' என்று கேட்டேன். 'இல்லை ..அப்பிடிஇல்லை..அந்த நாடுகள் நல்ல நாடுகள்.அதுதான் எதிர்பார்க்கிறோம்' என்றனா இருவரும். 'இப்பிடித்தான் அவையள் வருவினம் இவையள் புடுங்குவினம் என்று சொல்லிச் சொல்லியே எங்களின் மக்களையும் போராளிகளையும் முள்ளிவாய்க்காலில் காத்துநிக்க வைத்து கொன்று விட்டீர்கள்..இனி நாடு கடந்த அரசு என்று பொய் சொல்லி ஏமாத்தப் போகிறீங்களா?' என்று கேட்டேன். லண்டனிலும் இதே நிலைதான்.இந்தா உண்ணாவிரத்ததை நிப்பாட்டுறம். அவன் ஐக்கியநாடுகள் சபைக்கு கூட்டிப் போறன் என்று உறுதி தந்தான் என்பார்கள்.அல்லது எங்களை கூப்பிட்டு வெளிவிவகார அமைச்சர் கதைத்தார்.ஆனால் என்ன கதைத்தார் என்று வெளியே சொல்ல முடியாது என்பார்கள்.ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று எமது மக்களுக்கு தெரிய நீண்டநாள் ஆனது. இந்தக் கோமாளிஆட்டத்தின் நாயகர்கள் இப்போதும் தங்களை ஏதொ கரும்புலிகள் போல நினைத்து வலம்வருவதுதான் கேவலம்!! எல்லா இடத்திலும் இத்தகைய பொய் வதந்திகளும் புனைவுகளும்தான்.மக்கள்தான ஆறஅமர யோசித்து முடிவு எடுக்கவேணும்.
 9. சுமங்களா,ஐரோப்பாவிலை தமக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்பு தங்களுடைய விருப்பத்துக்கு மாறாக வருகிறது என்றோ தொலைபேசியில் பேசுபவர் தனது குரலின் சத்தத்தை அதிகரித்தோ அல்லது பேச்சின் ஊடாக மறைமுகமான அல்லது நேரிடையான பயமுறுத்தலையோ இடைஞ்சலையோ தருவதாகவோ அல்லது தங்களுக்கு அசௌகரியமான நேரத்தில் தொ.பே. அழைப்பு வருவதாகவோ யாராவது எந்த காவல் நிலையத்திலும் புகார் செய்தால் அவர்களின் அனுமதியுடன் அவர்களின் தொ.பே. அழைப்புகள் இடைமறிக்கப்பட்டு கேட்க காவல்துறைக்கு அனுமதியுண்டு.
 10. சாத்திரி ரொம்பத்தான் றீல் விடுறார்.எந்த இயக்க பேப்பரிலை இவற்றை எழுத்து வந்ததுகாணும்?சுஜாதா ரேஞ்சுக்கு அவிட்டுவிடுறார்.விட்டா தான்தான் கலாநிதி சிவத்தம்பிக்கும் கைலாசபதிக்கும் கிளாஸ் எடுத்தது எண்டும் புளுகுவார். சும்மா ஓசிப்பேப்பரிலை இடம் நிரப்ப எழுதிற சாத்திரி இன்னும் கொஞ்ச காலத்திலை சாகித்திய விருதுக்கு தன்ரை பெயரை தானே சிபாரிசும் செய்வார் பாருங்கோ! சாத்திரி என்ன எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் சங்கத்திலை சேர்க்க மாட்டம் என்று சொல்லி விட்டாங்களாம்.ச்ச்சும்மா போன் எடுத்தாலே தீத்தா போற சாத்திரி நல்லாத்தான் வீரம் பேசுறார் எழுத்திலை!!!
 11. நிறையப் பகிடிகள் நடக்குது இங்கை ஸ்கைப்பிலை வாங்கோ கதைப்பம்,ரெலிபோனிலை வாங்கோ கதைப்பம் என்று சில துணிந்தவர்கள்(??? ) இங்கை எழுதுவினம்.சரி கதைப்பம் என்று எடுத்தால்.........!!! அடுத்தநாள் காவல்துறைக்கு போறதோ அல்லது உடனே ஓடிப்போய் ஏதாவது ஒரு சர்வதேச பத்திரிகையாளர் சங்கத்திலை அங்கத்தவராக சேர்ந்து ஒளியுறதோ என்று பதறித் திரிவினம்.தங்கள் தங்கள் நாட்டு காவல்துறையில் தங்களின் தொலைபேசியை கண்காணிக்கும்படி புகார் கொடுத்துவிட்டு இங்கு யாழில் வந்து தங்களுடைய ரெலிபோனுக்கு எடுங்கோ என்று 'சலென்ஜ்' விடுவது நல்ல துணிச்சல் மனுசர். இவையளு;கு ஒரு கருத்து ஒரு எழுத்து ....தூ}}
 12. கட்டாயம் அந்தப் போராளிக்கு உதவவேண்டும்.உதவமுடியுதோ இல்லையோ அது உங்களின் நிலைப்பாடு. ஆனால் தயவுசெய்து அந்தப் போராளிகளை ஒருதரும் விமர்சிக்கவேண்டாம்.
 13. வணக்கம்..

  சுப'மங்களா'. நல்வரவு உங்களுக்கு. வாங்கோ!
 14. நன்றி எல்லாருக்கும்.நல்வரவு சொன்னதற்கு. காண்டீபம் இல்லாமல் அர்ச்சுனனா? அம்பும் இருக்கு நிறைய்ய. மன்மத அம்புகளும் இருக்கு.