four four bravo

கருத்துக்கள உறவுகள்
  • Content count

    177
  • Joined

  • Last visited

  • Days Won

    1

four four bravo last won the day on February 17 2010

four four bravo had the most liked content!

Community Reputation

0 Neutral

About four four bravo

  • Rank
    உறுப்பினர்

Contact Methods

  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    walkie talkie
  1. எங்களைப் போல யாழ் இணையத்தில்வந்து கருத்து எழுதியும் மற்ற இணையங்களில் ஆய்வுகள்,அலசல்கள் எழுதியும் விடுதலைப்போராட்டம் நடாத்திக்கொண்டு இருக்காமல் முத்துக்குமாரனுக்கு மட்டும் எப்படி மேனிகருக்கும் போராட்டம் மூளைக்குள் வந்தது. நல்ல கவிதை. முத்துக்குமாரனுக்கு வீரவணக்கங்கள்!
  2. மனசுநிறைய பாரங்களை ஏத்திவைத்த கவிதை. நன்டறாக இருக்கிறது. எல்லோரும் நா.க.அரசு,வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று தேர்தல்கால கூட்டுவைத்து தொலைக்காட்சியில் தோன்றி பாவ்லா காட்டுபவர்களுக்கு நடுவில் சிறையில் இருப்பவர்களையும் சிந்தித்து கவிதை எழுதும் உங்கள் கருத்துக்கள் அருமை.
  3. மிக நன்றாக இருக்கிறது. நல்ல கற்பனை
  4. மிகநீண்ட காலமாக எமதுமக்கள் மீதான இனப்படுகொலையை ஆவணப்படுத்தும் இந்த முயற்சி அவசியமானதும் தேவையானதும். இது வெளிவரும்போது சிறீலங்காவின் இனப்படுகொலையின் நீண்டசரித்திரம் உலகை அதிரச்செய்யும். இதில் செயற்பட்டுவரும் அனைவரும் என்றென்றும் நினைவில்கொள்ளத் தக்கவர்கள்.
  5. படத்தின் கதை இப்பிடித்தான் ஆரம்பிக்கிறது.மத்திய கிழக்கில்உள்ள யேமன்நாட்டில் இருக்கும் அமெரிக்கதூதரகத்தின் பாதுகாப்புக்கான 'மரைய்ன்' படைப்பிரிவு ஒன்றுக்கு தளபதியாக 'சாமுவல் ஜக்சன்' செல்கிறார்.அமெரிக்க தலையீடுகள் மற்றும் ஏகாதிபத்திய மனப்பாங்குக்கு எதிராக ஒரு பிரிவுமக்கள் தூதரகத்தின்முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.அதில் பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் இருக்கின்றனர்.திடீரென ஆர்ப்பாட்டத்திலிருந்து துப்பாக்கித் தாக்குதல் தூதரகத்தை நோக்கி நடாத்தப்படுகிறது.தூதரக அதிகாரியும் குடும்பமும் உயிர் ஆபத்துக்குள் அவதிப்படுகிறார்கள்.தூதரகத்தை காத்துநின்ற அமெரிக்க படையின் மூன்றுவீரர்கள் காயமடைகின்றனர்.ஆர்ப்பாட்க்காரர்களை நோக்கி சுடும்படி 'சாமுவல் ஜக்சன்' உத்தரவிடுகிறார்.கண்மூடித்தனமான சுடுதலின் பின்னர் 80 க்கும் மேலான் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழந்தைகள் பெண்கள் உட்பட கோரமாக செத்துக்கிடக்கின்றனர். அமெரிக்காவின் முன்னனி பத்திரிகைகள் எல்லாம் யேமனியில் அமெரிக்கபடைகள் நடாத்திய கொலைகளை கண்டித்து தலையங்கம் எழுதி வெளியிடுகின்றன.அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சு இதில் இருந்து தப்புவதற்காக 'சாமுவல் ஜக்சனை' பலிக்கடாவாக்க முடிவுசெய்கின்றனர்.'சாமுவல் ஜக்சனுக்காக' அவரின் வியட்னாம் போர்வீரர் முன்வருகிறார்.இப்படிப்போகிறது கதை......! கதை சொல்லப்பட்ட விதமும்,இசையும்(மிகஅற்புதம்),சாமுவல் ஜக்சனின் நடிப்பும் மொத்தத்தில் மிகமிக நல்ல படங்களில் ஒன்று
  6. சொல்ல மறந்துவிட்டேன்.காந்தி படத்தில காந்தியாக நடித்த 'பென்ங்கிங்ஸ்லி' இந்தப் படத்தில் மத்தியகிழக்கு நாடாகிய யேமன் அமெரிக்கதூதராக வந்து பொய்பேசும் ஒரு பாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்.
  7. போனகிழமைதான் 'Rules Of Engagement' இந்தப் படத்தை பார்த்தேன்.2000ம் ஆண்டளவில் இந்தப் படம் வெளிவந்திருக்கு.இவ்வளவுநாளும் கண்ணிலை படாமல் சனிக்கிழமைதான் தொலைக்காட்சியில் போட்டபோது பார்த்தேன்.சாமுவெல் ஜக்சன் ஒரு அமெரிக்க படை அதிகாரியாக இதில் மிகஅற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார்.போர்க்குற்றங்களும் அவை அணுகப்படும் முறைகளும் அதற்குள்ளான அதிகார சண்டைகளும் பலியாகும் மனிதமும், தனி வீரர்களும் என்று மிக அழகான கதை அமைப்பு.இராணுவ நீதிமன்ற விசாரணையும் அது எடுத்து எறிந்துவிட்டுப் போகும் உயிர்விலையும்,விவாதங்களும்,சம்பிரதாயங்களும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.மூலக்கதையின் கருவும் செய்தியும் எங்களால் ஏற்கமுடீயுதோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் படம் பார்த்து இன்னும் ஏதோ நெஞ்சுக்குள் ஊர்வது போல ......!ஒவ்வொரு பாத்திரமும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது.எங்காவது இந்தப்படம் பார்க்கக் கிடைத்தால் பார்த்தபின் எழுதுங்கள்.
  8. நல்லது சாத்திரி .எல்லோரும் மனங்களுக்குள் நினைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் அழகாக எழுதி இருக்கிறீர்கள். இந்த திருமா பற்றி ஒரு குறுக்குவெட்டு கட்டுரை இதிலும் விரிவாக யாராவது எழுத வேணும். வருணாச்சிரம தர்மமும் சாதியும்தான் இந்து மதத்தை காப்பாற்றியவை என்றும் அர்ச்சனை செய்பவன் அர்ச்சனை செய்யவேணும் என்றும் மலம் அள்ளுபவன் மலம்தான் அள்ள வேண்டும் என்று சொன்ன காந்தியின் காங்கிரசில் இணைந்து தலித் மக்களுக்கு சேவை செய்ய போகிறேன் என்று தன்னுடைய மக்களைக்கூட ஏமாற்றும் இவர் எப்படி எங்களின் விடுதலைக்கு உதவுவார்???? அவரைக் கூப்பிட்டு பொய் கக்கவைக்கும் எம்மவர்களை என்ன சொல்வது..?
  9. வாங்கோ வீமன்!நல்வரவு!!
  10. 'ஈடேது இணையேது...இறுதிவரை உங்கள் நினைப்பின்றித் துணையேது' உங்களின் காலடி பட்ட மண்ணைத் தொட்டு வணங்குவோம் வீரர்களே..வீரவணக்கம்!! அன்புத் தம்பி 'குட்டிப்பையன்26'.!.எல்லோரும் நடந்துமுடிந்த கடைசி நாட்களை யார் அழகாக சொல்லி முதலிடம் பெறுவது என்றும் ஏற்பட்ட ராணுவதோல்விக்கு தலைவர் பொறுப்பா..பொட்டர் பொறுப்பா என்று கணணிக்கு முன்பாக அமர்ந்தும் தொலைக்காட்சி கமேராவுக்கு முன்பாகவும் ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கும்போது தமிழினத்துக்காக தம்மை அர்ப்பணித்தவர்களின் நினைவு நாளை ஞாபகமாக மீட்டியதற்கு என் வணக்கங்கள். குட்டிப்பையன்26..எதிரிகளுக்கு விலைபோய் இப்போது போராட்டத்தை திட்டித்தீர்க்கும் எழுத்துக்களால் மனது சோர்ந்து விடாதீர்கள். தொடர்ந்து உங்கள் விடுதலைப் பணி தொடரட்டும். 'எல்லா கருமேகங்களும் முதல் வெடிச் சத்தம் கேட்டதும் விலகிஓடும்'
  11. வணக்கம்..தீபச்செல்வன் அண்ணா. உங்களுடைய நல்ல கவிதைகளை படித்துள்ளேன். வாங்கோ!!வாங்கோ!!!
  12. ராசராசன் அண்ணா.. உங்களுடைய தோழமையான வார்த்தைகளுக்கு நன்றிகள். உங்களுக்கு என்னை தெரியாதது பொலவே எனக்கும் உங்களை தெரியாது. ஆயினும் தோழமையுடனும் நேர்மையுடனுமான உங்களின் கருத்துக்கு பதில் தருவது தேவையானது. 1. பண்பாட்டுடன் எழுதச் சொல்லியிருக்கிறீர்கள். இதையே சாந்திக்கும் பிறிதொரு இடத்தில் நீங்கள் எழுதி இருப்பதால் உங்களின் நடுநிலைத் தன்மை எழுத்தில் தெரிவதால் உங்களுக்கு பதில் தர வேண்டிய சத்தியநிலைக்கு என்னைத் தள்ளியிருக்கிறீங்கள். அண்ணா..பண்பாட்டுடன் சொல்லப்படாத ஒரு குரூரமான விடயத்துக்கு எப்படி பண்பாட்டுடன் பதில் சொல்லி புரிய வைக்கமுடியும். 'ட்ரொஸ்க்கிக்கும் யோசப் ஸ்டாலினுக்கும் நடந்த பாட்டாளிப் புரட்சியை ஒரு நாட்டுடன் மட்டுப்படுத்துவதா இல்லை அகிலம் முழுவதற்கும் கொண்டு செல்வதா? போன்றதைப் போன்ற கருத்தாடல்களிலும் 'மென்சிவிக்குகளுக்கும் போல்சிவிக்குகளுக்கும் சோவியத் புரட்சிக்கு முன்னான பொழுதுகளில் நடைபெற்ற :புரட்சியில் பூர்சுவாக்களின் பங்கு: என்பது போன்ற விவாதங்களிலும் 'பின்நவீனத்துவத்தை யார் அதிகம் கைக்கொள்ளுவது என்ற 'மனுஸ்யபுத்திரனுக்கும் காலச்சுவடு கண்ணனுக்குமான பங்கு பற்றியும் எழுதவும் கருத்தாடல் செய்ய முயற்சிக்கவும் எங்களுக்கும் விருப்புத்தான். ஆனாலும் எத்தகைய முகாந்திரமும் இல்லாமல் தாங்கள் போற்றிப் பாடல் பாடும்போது சேர்ந்திருந்த நாங்கள் அவர்கள் தூற்றல் பாடல் எழுதும்போது எதிர்ப்புக் குரல் கொடுத்தால் சன்னதம் கொள்ளும்போது எப்படி பண்ணாட்டு வார்த்தைகளை பொறுக்கி எடுத்துக் கொண்டிருக்க முடியும்?? 2 .எனக்கும் சாந்திக்கும் எந்தவிதமான தனிப்பட்ட பிரச்சனைகளும் கிடையாது.இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சாந்தி எழுதிய 'ஐயோ..என்ரை பிள்ளை அம்பேபுஸ்ஸாவில்' என்ற கதைக்கு பாராட்டி ஒரு கருத்து எழுதியிருந்தேன். பாருங்களேன். சாந்தி மட்டுமல்ல என்னுடைய சொந்த சகோதரன் இத்தகைய கருத்தை எழுதியிருந்தாலும் என்னுடைய எதிர்வினை இப்படித்தான் இருந்திருக்கும். அண்ணா.. உங்களைப் போன்ற மானுடவிடுதலையை நேசிப்பவர்களுக்கு இந்த கருத்தாடலும் அதன் சொற்பிரயோகமும் விடுதலையின் மீதான அசையாத பற்றின் மீது சிறு சலனத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அதற்காக வருந்துகிறேன். ஆரம்பம் என்னுடையது இல்லாத படியால் நானாக முடிக்க மாட்டேன்.
  13. வார்த்தைகளை இப்படி அற்புதமாகக் கோர்க்கும் இந்த கவிதை மிக ஆழமாய் நெஞ்குள் புகுந்து அறுக்கிறது. நாங்களைப் பற்றிய நல்ல கவிதை. நிழலி இது உங்களின் ஆளுமைமிக்க வார்த்தைகள்.
  14. மார்ட்டின் நெமில்லர் ஒரு நேர்மையானவர்.அவர் கிட்லர் உயிருடன் இருக்கும் போது இந்திரன் சந்திரன் என்று போற்றிக் கவிதை எழுதி பொன்னும் பொருளும் பெற்றுவிட்டு அவர் மறைந்த பின்னால் இவரை விமர்சிக்கவில்லை. நெமில்லர் கிட்லர் உயிருடன் இருந்தபோதே அவரை விமர்சித்து சிறை சென்றார். அந்த கருத்து நேர்மை தலைவணங்க கூடியது. ஆனால் தலைவரை போற்றிப் பாமாலைகளை மே மாதம் 17ம் திகதிவரை செய்து அதற்கூடாக தன்னை ஒரு பெண்புலியிலும் பெரும் புலியாக புலத்தில் புளுகித் திரிந்துவிட்டு அவர் மறைந்த பின்னர் அவரை விமர்சிக்கும் கருத்து மஞ்கள் பத்திரிகைகாரிக்கு உரியது. சரி இப்போதுதான் தலைவரை இவர்களுக்கு புரிந்திருக்கு என்றால்...இப்போது இவர்கள் தலையில் வைத்திருக்கும் சட்டத்தரணி உருத்திகுமாரையும் நாளைக்கு அவரைப் பற்றியும் இப்போதுதான் புரிந்திருக்கு என்று சொல்லி கவிதையில் பேசி எழுதமாட்டார்களா??? ம்ம்ம்ம்....இதுகள் எழுதி ..... இப்போது இன்னும் தலைவரின்மேல் உள்ள விருப்பு கூடியுள்ளது எமக்கு. ஏனென்றால் இதுகள் எல்லாம் பொய்மை என்பதை அறிந்து அன்றே அவன் சந்திக்க மறுத்தர்னே அதற்காக.