Jump to content

naanal

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Posts

    98
  • Joined

  • Last visited

About naanal

  • Birthday 04/24/1959

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Location
    ஜேர்மனி
  • Interests
    சுற்றுலாபயணம். மாற்றின மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் வரலாறு போன்றவற்றை அறிந்துககொள்வதில் ஆர்வம்.

naanal's Achievements

Explorer

Explorer (4/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

0

Reputation

  1. வைதேகிக்கும் மற்றும் அனிதா ,reporter , நிலா , K P M பிறந்தநாளை கொண்டாடும் சகலரும் உங்கள் எண்ணங்கள் ஈடேறி இன்பமுடன் நீடுவாழ வாழத்துகிறேன்.
  2. உங்களை www.tamilseithekal.blogspot.com அன்புடன் வரவேற்கின்றேன்.

  3. ஒட்டகத்தைத் தேடி நேரம் 15.20 பஸ் மெதுவாக ஓடிக்கொண்டிருந்தது. 15.30 மணிக்குச் சந்திக்கிறன் என்றனான். எப்படியாவது நேரத்திற்குப் போய்ச் சேரவேணுமென்றால், ஒவ்வொரு சந்தியிலையும் சிவப்பில நாலுதரம் நின்று சொதப்புது. குட்டிபோட்ட பு}னைபோல நான் படுகிற அந்தரம் புரியாமல் பஸ் ஆறித்தேறிப்போய் நின்றதும் நிற்காததுமாகப் பாய்ந்து குதித்து இறங்கியபடி நேரத்தைப் பார்த்தன். நேரம் 15.27 கொஞ்சம் எட்டி நடந்தால் எப்படியும் நேரத்திற்குப் போடுவன். ஒட்டகத்துக்கு முதல் போட்டனென்றால் நல்லது, இல்லையென்றால் அறுத்தே ஆளைக் கொண்டுபோடும் பாவி. நடை மெல்ல ஓட்டமாக மாறியது. நேரம் 15.33 மூச்சிரைத்தபடி சுற்றுமுற்றும் பார்த்தன் ஆளைக்காணவில்லை. மக்டொனால்ஸ் வாசலிலை இருந்த நீளக் கதிரையிலை......... அந்த பெஞ்சிலதானே இருக்கிறன் என்றது. அப்பாடா ஆள் இல்லை. மெதுவாகப் போய் பெஞ்சில உட்கார்ந்தன். நேரம் 15.35 காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி! பார்த்திருந்து பார்த்திருந்து பு}விழி நோகுதடி! பாடலை ரசித்தபடி குரல் வந்தபக்கம் பார்த்தால் சில்லறைக்காக விரித்திருந்த துண்டை ஏக்கமாகப் பார்த்தபடி. கிற்றாரைத் தட்டிக்கொண்டு பாடினான் நாடோடிப் பாடகன். நேரம்15.40 காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி! பார்த்திருந்து பார்த்திருந் பு}விழி நோகுதடி! மீண்டும் ஒலித்த இளையராஜாவின் இனியபாடலை மனதுக்குள் அசைபோட்டபடி, கடைவீதியில் சென்றுகொண்டிருந்த சனக்கூட்டத்தை வேடிக்கை பார்த்தன். அதிலை ஒரு கூட்டமாக சிரிப்பும் கும்மாளமுமாக இளவயசுப் பெட்டையள். அந்தக் கூட்டத்திலை பால்த்தேத்தண்ணி நிறத்திலை வடிவானதொரு பிள்ளையாக்கிடக்குதென்று பார்த்தால் காட்டுவமோ விடுவமோ என்கிறமாதிரி இரண்டு நூல்ப்பட்டியில தொங்குகிற பெனியனும் கட்டைக்காற்சட்டையுமாக சும்மா சொல்லக்கூடாது வடிவாகத்தன் இருக்குது பிள்ளை. விளம்பரத்திலை நடிக்கலாம். மூக்கும் முழியும் எங்கட நாட்டுச் சாயலாகத்தான் கிடக்கு. நேரம்15.45 ஒட்டகம் வந்தபாட்டைக்காணம். உது எப்பவுமே இப்படித்தான் ஒரு காரியத்தையும் ஒழுங்காகச் செய்யாது. வாய்மட்டும் பெரிசா......... கொஞ்சம் ரென்சனா எழும்பி அப்படியும் இப்படியுமாக நடந்தன். ரெலிபோன் எடுத்துப்பார்ப்பமோ? சீ! சீ! வேண்டாம் அநியாயத்திற்கு ஒருக்கால் கதைக்க 59 சதம் கொடுக்கக் கட்டாது. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி! பார்த்திருந்து பார்த்திருந்து பு}விழி நோகுதடி! மூன்றாவது தடவையாகப் பாடிக்கொண்டிருந்தான். நேரம் 15.55 மேகக்கூட்டம் கூடி இருண்டு மழை வரும்போலத் தெரியுது. பதினைந்து மிஸ்கோல் அடிச்சட்டன் திருப்பி எடுக்கக்காணம். உதோட இனி ஒரு சாவகாசமும் வைக்கக்கூடாது. சனியனை இன்றையோட கைகழுவிவிடவேணும். கோபமா முன்னாலை கிடந்த கோலாக்கப்பை எட்டிக் காலால் அடித்தன். எந்தக் குறுக்கால போற கண் கெட்ட பரதேசியடா எறிஞ்சது. கோப்பை குருட்டுப் பிச்சைக்காரனுக்குமேலை விழுந்ததிலை கோபமாகக் கத்தினான். ஆராவது கண்டவையோ என்று கலவரமாப் சுற்றுமுற்றும் பார்த்தபடி கொஞ்சம் எட்டி உட்கார்ந்தன். நேரம் 16.00 நாசமாப்போன வெறும் பயல் கார் இடிச்சுச் சாக,.... குருடனின் வசைமாரி தொடர்ந்தது. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி! பார்த்திருந்து பார்த்திருந்து பு}விழி நோகுதடி! ஒன்பதாவது தடவையாப் பாட்டுவர எரிச்சலா பாட்டுக்காரனை முறைச்சன். 24 பதில் கிடைக்காத மிஸ்கோல். இந்தமுறை தொடர்ந்து கைத்தொலைபேசியை அடிக்கவிட்டன். குரல் ஒலித்தது. நீங்கள் தொடர்புகொண்டிருப்பது ஒட்டகத்தாரின் வீட்டுத் தொலைபேசி. ஒட்டகத்தார் தற்பொழுது வேறு நபருடன் இணைப்பில் இருப்பதால் அடுத்த வாய்ப்பு உங்களுக்காக ஒது............... எரிச்சலாக இணைப்பைத் துண்டித்தன். நல்லா இருட்டிக்கொண்டு வந்தது. நேரம் 16.04 மெதுவாகத் தூறல்விழத்தொடங்கியது. தொலைபேசி ஒலித்தது எடுத்தா ஒட்டகம். என்ன வந்திட்டீரே? எரிச்சலா பல்லை நெறுமியபடி இல்லை இன்னும் வெளிக்கிடவில்லை. என்ன ஒற்றுமைபாரும் நானும் இன்னமும் புறப்படேல்லை. அடுத்த பஸ்ச பிடிச்சன் என்றால் எப்படியும் ஒரு அரைமணித்தியாலத்தில வந்திடுவன். என்ன விளையாடுறியே நான் வந்து அரை மணியாச்சு என்று கத்தினன். வீணாக் கத்திப் பிரசரை ஏத்தாதையும் அரைமணித்தியாலத்தில சந்திப்பம். இணைப்புத் துண்டிக்கப்பட்டது. ஒரு மன்னிப்புக்கூட கேட்டுதே திமிர்பிடிச்ச ஒட்டகம். வரட்டும்... கறுவினபடி நேரத்தைப் பார்த்தன். நேரம் 16.10 மழை சோவெனக் கொட்டத்தொடங்கியது. சுழல் காத்துவேற சுற்றுமுற்றும் சனங்கள் ஓட்டமும் நடையுமா! பாட்டுக்காரன் அவசரஅவசரமாக சில்லறையள் கிடந்த துண்டைக் கவனமாச்சுத்திப் பொக்கற்றுக்கை தள்ளினபடி கிற்றாரையும் தூக்கிக்கொண்டு ஓடத்தொடங்கினான். ஏய் ஏய் இந்தப்பாட்டையும் ஒருக்கால் பாடிப்போட்டுப் போ! ஏளனமாக உச்சரித்தன். மழை மழை இது முதல் மழை............... விசர் விசிர் உனக்கென்ன விசரே? என்று கத்தியபடி ஓடினான் பாட்டுக்காரன். நேரம்16.15 ஒட்டகம் வரும். ஆனால் வராதோ? வந்தாலும் வருமோ? குணத்தைக் காட்டிவிட்டுதோ? கொட்டும் மழையில் பைத்தியமாக நான். ஒட்டகம்? -------------------- நட்புடன் நாணல்
  4. மத்தியஸ்த்தம் மீண்டும் தமாசானதொரு கதை திட்டின கோபம் அடங்காத ஒட்டகம் என்னுடன் சேர்ந்து பேருந்தில் ஏறினாலும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரே இருந்த பேருந்தில் எனக்குப் பக்கத்தில் உட்காராமல் நான்கு ஐந்து இருக்கைள் தள்ளி உட்கார்ந்தது. கொஞ்ச நேரத்திலை சரிவரும் என்றால் வராதாம். யன்னலுக்கு வெளியே ஓடுற காட்சியளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. எட்ட இருந்து பார்க்க வடிவாத் தெரியவில்லை கண்ணும் கலங்கியிருக்குமாப்போல கிடந்தது. அதிகமாத் திட்டிப்போட்டனோ? எதுக்கும் அலட்டிக்கொள்ளாத ஒட்டகம் இப்படிப் பேசாமல் இருக்க பாவமாகக்கிடந்தது. சரி முதலிலை நான் கொஞ்சம் இறந்கிப் போவமோ? எதுக்கும் அவதானமாக இருக்கவேணும். பொது இடமெண்டும் பார்க்காமல் நாலுபேருக்கு முன்னாலை இடக்குமிடக்கா எதையாவது சொல்லி மானத்தை வாங்கிப்போடும். இடையிலை யாரரையாவது வைத்துக் கதைப்பமோ? என்று யோசித்தவாறு அடுத்த இருக்கையிலை இருந்தவரைப் பார்த்தன். கிள்ளி எடுக்கச் சதையே இல்லாமலுக்கு எலும்புக்கு ஒரு தோலைச் சுத்திவிட்டது போல ஒல்லியும் உயரமுமாக முட்டைக் கண்ணும் அதிலை ஒரு வட்டக் கண்ணாடியுமாக, உடம்பிலதான் ஒன்றுமில்லையென்றால் தலையிலையும் ஒன்றையும் காணம் வெட்டவெளியாக்கிடந்தது. முட்டையிலை மயிர்பிடுங்கிறது என்றது இதைத்தானோ? தமாசான ஆளாக்கிடக்கு. விசயகாரனா இருப்பானோ? எதுக்கும் கேட்டுப் பார்ப்பம். அண்ணை ஒரு உதவி. காதிலை விழுந்தமாதிரித் தெரியேல்லை. பேப்பரைப் படிக்கிறதிலை தீவிரமாக இருந்தார். இந்தமுறை சற்றே உரத்து வணக்கம் அண்ணை உங்களைத்தான்! ஒரு சின்ன உதவி செய்வியளே? முகத்துக்கு முன்னாலை பிடிச்சிருந்த பத்திரிகையைச் சற்றுப் பதித்து என்னவென்று கேட்குமாப்போல என்னைப் பார்த்தார். அது வந்து ....... வந்து..... சின்ன உதவிதான். அங்கை பாருங்கோ அந்த நாலாவது சீற்றிலை உக்காந்திருக்கிற ஒட்டகத்தை, அது என்ரை நண்பன்தான் ஆனால் இப்ப கொஞ்சம் மனஸ்தாபம் அதுதான் கதைக்கமாட்டனென்று கோபித்துக்கொண்டு அங்கை உட்கார்ந்து இருக்கிறது. அதனிடம் சொல்லுங்கோ, நான் அப்படித் தவறாக் கதைத்தற்கு மன்னிப்புக் கேட்கிறனென்று. நான் மற்றவர்களின் விடயத்தில் தலையிடுவதில்லை என்றொரு கொள்கை வைத்திருக்கிறன் அதனால் உதவமுடியாமைக்கு மன்னிக்கவேணும். சீ சீ நீங்களொன்றும் உங்கட கொள்கையை விடவேண்டாம். சும்மா நான் சொல்லுறதை அப்படியே ஒட்டகத்திடம் சொன்னால்போதும். No No I can´t do it. இப்ப உங்களை என்ன பிரச்சனையைத் தீர்த்துவைக்கவே கேட்டனான். ஒரு கிளிப்பிள்ளைபோல காதாலை கேட்டதை அப்படியே வாயாலை சொல்லுங்கோ அவ்வளவுதான் ரொம்பச் சுலபமான வேலை. அரை மனதா அந்தப்பக்கம் திரும்பி Hallo Hallo Mr. ஒட்டகம் எனக்குப் பக்கத்திலை இருக்கிறவர் தான் உம்முடன் நடந்துகொண்டவிதத்திற்கு மன்னிப்புக் கேட்கிறாராம். அடுத்த நொடியே கோபமா என்ன வெறும் மன்னிப்புக் கேட்கிறாராமோ? எப்ப பார்த்தாலும் கேடுகெட்ட மிருகமே! ஓசிச் சீவியம் நடத்திறவன் என்றெல்லாம் வாய்க்குவந்தபடி திட்டுகிறது. பிறகு மன்னித்துக்கொள் என்ற ஒரு சொல்லோட சரி. நான் என்ன மானம் ரோசமில்லதவனே. எனக்கென்றும் ஒரு சுயகௌரவம் இருக்கு. எல்லம் முடிஞ்சுது இன்றையோட எங்களுக்குள் இருந்த நட்பெல்லம் முறிந்துவிட்டது, முடிந்தது என்று சொல்லுங்கோ என்று என்று ஒட்டகத்தார் கத்த நான் பக்கத்தில இருந்தவரைப் பார்த்து அதுதான் மன்னிப்புக் கேட்கிறனே பக்கத்து ஆளுக்குச் சொல்லமுதல் ஒட்டகத்தாரிடமிருந்து சத்தமாக பதில் வந்தது. வெறும் மன்னிப்புத்தான் என்றால் எல்லாம் முடிந்துபோச்சுது. நான் மெதுவா ஒல்லிக்குச்சியருக்குப் பக்கத்தலை நகர்ந்து உட்கார்ந்து. என்ன பிரச்சனை என்று சொல்லுறன் கேட்டுப்போட்டு நீங்களே சொல்லுங்கோ முடிவை....... அது சரிவராது நான் உங்களோட இருந்து என்ன நடந்ததென்று நேரிலை பார்க்கவில்லை அதாலை என்னாலை............ முடிக்கவிடாமல் ஒட்டகத்தார் உங்களை என்ன இப்ப உங்கட மகள் ஆரோட சுத்துறாள். உங்கட வங்கிக் கணக்கில எவ்வளவு பணமிருக்கு? மனிசி வடிவானஆளோ? என்று சொந்தக் கதையளேயே அந்த ஆள் கேட்டவர். எங்கட விசயத்தைத்தானே................. ஒல்லிக்குச்சியர் கோபமாகக் கையில இருந்த பத்திரியைத் தூக்கிஒட்டகத்தாரை நோக்கி விசிக்கிப்போட்டு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று எதெதோ முணுமுணுத்தக்கொண்டு இரண்டு இருக்கை தள்ளி அங்காலை இருந்த ஒரு வடிவான பொம்பிளைக்குப் பக்கத்திலை போய் இருந்தார். பாருமன் அந்த ஆளுக்கு வந்த கோபத்தை இப்ப நாங்கள் என்ன கதைத்துப்போட்டமென்று இப்படிக் கோபித்துக்கொண்டு போட்டார் என்று என்னைப்பார்த்துச் சொல்லிக்கொண்டு இருந்த இடத்தைவிட்டு எழும்பின ஒட்டகத்தார். அந்த வடிவான பொம்பிளயிற்குப்பக்கத்திலை உட்காரந்து அக்கா அக்கா ஒரு உதவிசெய்யவேணும் உங்களுக்கு அந்நதப்பக்திலை கிள்ளி எடுக்கச் சதையே இல்லாமலுக்கு எலும்புக்கு ஒரு தோலைச் சுத்திவிட்டது போல ஒல்லியும் உயரமுமாக முட்டைக் கண்ணும் அதிலை ஒரு வட்டக் கண்ணாடியுமாக ஒல்லிக்குச்சியர்போல இருக்கிற அந்த ஆள் எங்களோட கோபித்துக்கொண்டு................................ கதை தொடர்ந்தது. -------------------- நட்புடன் நாணல்
  5. ஒட்டகத்தாரும் ஓசிப்பேப்பரும் நாட்டுநடப்புகள் தந்த மனஅழுத்தத்தில சோம்பலோட சோபாவிலை சாய்ந்திருக்க கிணிங்ங்ங்................................ அழைப்புமணி. சலிப்போடபோய் கதவைத்திறந்தால் வழமைபோல ஒட்டகத்தார்தான். நான் என்னவாக்கும் இந்த நேரத்திலை என்று யோசிக்க ஒட்டகத்தாரே விசயத்தைச் சட்டென்று போட்டுஉடைச்சார். இரண்டு மூன்று நாளாக் காலமையளிலை கவனித்தன் உங்கட வீட்டு வாசலிலை பேப்பர்போடுறவன் நிண்டதை அதுதான் நீங்கள் படிச்சு முடிச்சிருந்தால் நானும் ஒருக்கால் இன்றையப் பத்திரிகையை படிப்பமென்று வந்தனான். அதுசரி மணி பதினொன்றாகுது இன்னமும் வீட்டு உடுப்போட நிக்கிறியள், இன்றைக்கு லீவோ? என்று அடுக்கிக்கொண்டுபோனார். நான் கூடுதலாக இரவிலைதான் வேலை செய்கிறனான் என்றன் எரிச்சலோட அது என்ன பக்டரிவேலையே? நான் பெருமையா, எழுத்தாளன்! சனங்களெல்லாம் விழிப்படையவேண்டும் விழித்தெழவேணும் என்பதற்காக எனது தூக்கம் தொலைத்து விடிய விடிய விழித்திருந்து எழுதுபவன். சீர்திருத்தவாதி மெதுவா கொம்பியு}ட்டர் பக்கம் திரும்பிய ஒட்டகத்தார். ஒம் ஒம் மேசைக்குக் கீழை கிடக்கிற போத்தலுகளைப் பார்க்கவே நல்லா விளங்குது. உங்களைப்போல கொஞ்சப்பேர் நாலுசுவருக்கை நடக்கிற உங்கட ஒவ்வொரு சிறு எழுச்சி நிகழ்வுகளையும் ஒன்றுக்கு ஒன்பது பெயரிலை பு}தக்கண்ணாடியாலை பார்க்கிறதுபோல பெரிதுபடுத்தி சினிமாவுக்குப் போடுற செற்போல போட்டு பில்டப்கொடுத்திலை, அரேபியப் பாலைவனத்தில இருந்த உனக்கு என்ன தெரியுமென்று கதைக்கிறீர். வாயிருக்கென்றதுக்காக கண்டதையும் கதைக்காதையும் என்று இடையில புகுந்து கத்த, பொறும் பொறும் நான் சொல்லவந்ததை சொல்லிமுடிச்சாப்பிறகு கதையும்.... ஓசிச் சீவியம் நடத்துகிற ஒட்டகம் உனக்கு என்ன தெரியும் அரசியலையும் போராட்டங்களையும்பற்றி நான் ஒன்றும் ஓசிச் சீவியம் நடத்தேல்லை. கொம்யுனிசத்தை செயல்படுத்துகிறன். என்ன? இருக்கிறவன் இல்லாதவனுக்குக் கொடுத்தால் பொருளாதார ஏறுறத்தாள்வு குறையும் அதுதான் என்ரை கொள்கை. நீரும் உம்மட கொம்யுனிசமும். முதலாளித்துவத்தின்ரை முதுகெலும்பே வங்கியும், காப்புறுதிக் கம்பனியளும். சனங்களெல்லாம் வாழ்நாளெல்லாம் கடனாளியாக் கிடக்கவேணும் என்று முதலாளித்துவம் நினைக்க அளவுக்குமிஞ்சிக் கடன் கொடுத்ததாலை வங்கியளே திவாலாகுது. உலகமயமாக்கல் முண்டுகொடுக்குமெண்டால் அதுவும் வளர்த்த கடா மார்பில பாய்ந்த கதையாப் போட்டுது. பாரும் ஒரு சுற்றுச் சுற்றிவந்து பழையபடி எங்கை நிற்குமென்று சரி சரி ஓசிப்பேப்பருக்கு வந்திட்டு சவடால் விட்டுக்கொண்டு நிற்காதையும் பேப்பரைப் பிடியும். சொந்தமாக ஞானம் இருக்க வேணும் இல்லாவிட்டால் இருக்கிறவன் சொல்லுறதைக் கேட்டகவேணும் நான் சொல்ல வந்ததைச் சொல்லிப்போட்டுப்போறன். அங்கை வன்னியிலை இருந்தவை அநியாயத்துக்கு உங்கட செயல்திறனைப்பற்றி நீங்களும் ஏதோ பெரிதா செய்யிறியள் என்று எடைப்போட வெளிநாடுகளிலை இருந்த புலம்பெயர் தமிழரும் உங்கட மாயையில மயங்கியிருக்க நீங்கள் என்னடா என்றால் பில்டப் கொடுத்ததோட சரி சந்தோசமாக களத்தில உள்ளவை எல்லாத்தையும் செய்வினம் என்று இருந்திட்டு கடைசி கிளைமாஸ் காட்சியிலை எல்லாம் முடிந்தாப்போல வாற பொலிஸ்போல நீங்களும் சுதாகரித்துக்கொண்டு செயலிலை இறங்க அங்கை எல்லாம் முடிஞ்சுது. ஆனாலும் அந்தச்சோகத்திலையும் ஒரு நன்மை உங்கட புலம்பெயர் சமூகத்தின் பலம் என்ன என்பதை உங்களுக்குமட்டுமல்ல உலகத்திற்கே புரிந்துவிட்டது. பெரிய பாடமொன்றை மிகப்பெரியதொரு விலைமதிப்பற்ற பின்னடைவை விலையாகக் கொடுத்துப் படிச்சிருக்கிறியள். இனிவரும் காலங்களில் அந்தப் பலத்தையும் ஒற்றுமையையும் ஒருங்கிணைத்துச் சரியான செயல்திடடுங்களோட செயல்படுங்கோ சீக்கிரம் இலக்கை அடையலாம் என்று சொல்லிக்கொண்டு ஒட்டகத்தார் ஓசிப்பேப்பரோட நடையைக்கட்ட எனக்கும் எதோ கொஞ்சம் புரிந்தமாதிரிக்கிடங்ததிலை மறுபேச்சில்லாமல் தலைகுனிந்தன். This post has been edited by naanal: Jun 3 2009, 09:51 AM -------------------- நட்புடன் நாணல்
  6. செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது எங்கள் ஒவ்வொருவரது வீட்டையும் இழவுவீடாக்கிய அந்தக் கொடிய வைகாசி 17...... பல்லாயிரம் எம்மவர் இன்னுயிர்களையும், எமது கனவு, எமது இலட்சியம் எமது ஏக்கம், எமது கொள்கை, எமது அமைப்பு, எமது தலைமை என அனைத்தையுமே அநியாயமாக் காவுகொண்ட அந்த இருரண்ட வைகாசி 17 கடந்து வாரங்கள் வாரங்கள் உருண்டோடி மாதமொன்று ஆகப்போகிறது. இனச்சுத்திகரிப்பின் அதி உச்சமாக இருபதாயிரத்திற்கு மேற்பட்ட நம்மவரைக் காவுகொடுத்தபின் கடந்துபோன இருபதுநாட்களில் எதைச் செய்தோம் எதைச் செய்துகொண்டிருக்கிறோம்? எதைச் செய்யப்போகிறோம்? எப்படிச் செய்யப்போகிறோம்? இந்த உலகம் வெகு வேகமாக உருண்டோடிக்கொண்டிருக்கிறது. நித்தம் நித்தம் புதிய பிரச்சனைகள் தோன்றிக்கொண்டிருக்கின்றன. நாமும் இந்தக் கால ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடாவிட்டால் இன்னும் சில வாரங்களில் அதிகப்டசம் சில மாதங்களில் எம்மையும் எமது பிரச்சனைகளையும் இந்த உலகம் மறந்துவிடும். சிங்கள அரசைப் பாருங்கள் எல்லம் முடிந்துவிட்டது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தனது இலக்கை நிறைவு செய்ததுடன் முடிவடைந்தது, என்று அறிவித்ததுடன் வெற்றிவிழாக் கொண்டாடுவதுடன் நின்றுவிடவில்லை எவ்வளவு விரைவாக அடுத்தகட்ட நகர்வுகளையும் தம்மை ஸ்திரப்படுத்தும் செயல்களையும் செயல்படுத்துகிறான். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் மென்மேலும் பலவீனப்பட்டவர்களாகிறோம். நாம் மீண்டும் மீண்டும் நடந்ததையே கதைத்து வேதனைப்பட்டு எமது மன உளைச்சலை அதிகரிப்பதையும் சுற்றிலும் உள்ளவர்களையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வேலையையும், வெறுமனே எதிரியைத் திட்டித்தீர்ப்பதையுமே செய்துகொண்டிருக்கிறோம். ஆக்கபுhர்வமா எதைச்செய்தோம்? ஒவ்வொருவரும் சிந்தித்துப்பார்த்தால் புரியும். நாம் உடனடியாகச் செய்யவேண்டியது, நம்முன் இருக்கும் அடுத்த கடமைகளை, செயல்த்திட்டங்களைப் பட்டியலிடுவது. அவற்றைத் துறைசார் நிபுணத்தவமுடைய நம்மவர் துணையுடன் இணைந்து விவாதித்து குறை நிறைகளை ஆராய்ந்து சரியான வடிவமைத்துச் செயல்படுத்துவது என்பனவாகும்.. 1.போரினால் தம்முயிரைத் தவிர அனைத்தையும் இழந்து முட்கம்பிகளிற்குள் வாழும் உறவுகளுக்குரிய அன்றாட தேவைகளான உணவு அடிப்படைச் சுகாதார உதவிகள் சென்றடைய வழியமைப்பது. 2.போரின் பாரிய தாக்கத்தால் மனவலு இழந்து பெரும் மன உளைச்சலில் இருக்கும் அவர்களுக்குத் தேவையான உளவலு ஊட்டலிற்காண நிபுணத்துவ உதவிகள் சென்றடைய வழிசெய்வது அவர்களை மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு மீள உதவுதல். விரைவில் தமது சொந்த இடங்களிற்குத் திரும்புவதற்குரிய புறச்சூழலை ஏற்படுத்துவது. மீளக்குடியமரும்போது அவர்களது சுயபொருளாதாரத்திற்கான வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்துவது. இவற்றிற்குச் சமாந்தரமாகச் செய்ய வேண்டிய அடுத்த நடவடிக்கை அண்மைய காலத்தில் தோன்றிய உரிமைப்போராட்டங்களில் மிகவும் வளர்ச்சி கண்டதும் கூர்மைப்பட்டதுமான எமது அமைப்பின் பாரிய வளர்ச்சி உலக அரசியல்வல்லுணர்களையும், போரியல் வல்லுணர்களையும் ஆச்சியப்பட வைத்ததுடன் எமது போரியல் நுட்பங்கள் அவர்களால் ஆய்வுகளுக்குட்படுத்தப்படும அளவிற்கு இருந்தது. அதேபோல யாருமே எதிர்பாராத வேகத்திலேயே, உலகெங்கும் கிளபரப்பி விருட்சமாய் நின்ற ஒரு பாரிய அமைப்பு முதல்நிலை இரண்டாம் நிலைத் தலைமைகள் அனைத்தையும் ஒரே இரவில் இழந்து கட்டளைப்பீடமே இல்லாது தனது சகல வளங்களையும் இழந்து பாரிய பின்னடைவைச் சந்தித்து நடந்துமுடிந்திருப்பதுவும் பலரது ஆய்வுக்கும் உட்ப ட்டிருக்கிறது. ஆதலால் நாமும் எமது பாரிய எழுச்சிக்கும் அதேபோல பெரு வீழ்ச்சிக்குமுரிய காரணங்களை அறிவதற்குரிய சுயவிமர்சனங்களையும் சுய ஆய்வுகளையும் எமது அடுத்தகட்ட நகர்வுகளைற்கு முன் செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதும் அர்த்தமுள்ளதுமான உடனடித் தேவையுமாகும். அதைவிடுத்து சுயவிமர்சனமே எமக்குத் தேவையற்றது எங்கள் செயற்திட்டங்கள் முற்றிலும் சரியானவை என எண்ணிச் செயற்பட்டால் இனிவரும் காலங்களிலும் நாம் பாரிய பின்னடைவுகளைச் சந்திக்கும் சாத்தியங்களை அதிகரிக்கும் என்பதனை மறந்துவிடக்கூடாது. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுதந்திரமான வாழ்விற்குரிய போராட்டம் எவ்வளவு முக்கியமோ அதேபோல அதற்குரிய பொருத்தமா செயற்திட்டங்களும் நகர்வுகளும்கூட அத்தியாவசியமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொண்டு நிதானமாச் சிந்தித்துச் செயல்ப்படவேண்டிய இக்கட்டான காலகட்டமிது என்பதைக் கருத்தில்கொண்டு செயல்ப்படுவோமாக. பெற்ற தோல்விகளிலிருந்த படித்த பாடங்களுடன் மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய உத்திகளுடன் எழுவோம். வெறும் அரட்டைகளைத தவிர்த்து ஆக்புhர்வமான ஆய்வுகளைக் கள உறவுகள் முன்வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்...............
  7. சுயத்தைத் தொலைத்தவர்கள் ஒட்டகம் புகுந்த வீடு, ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இப்படியான பொழுதுபோக்கான வியங்களை எழுதும்போது அதிகமான களத்துறவுகள் ஓடிவந்து படித்தீர்கள். நாணல் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும் மெல்ல எழுதத் தொடங்கினீர்கள். ஆனால் மத்தியஸ்தம். செய்தது, செய்துகொண்டிருப்பது, செய்யவேண்டியது என யதார்த்தமாக சிந்திக்க வேண்டிய அழுத்தமான கருத்துக்களை மீள் ஆய்வு செய்ய வேண்டிய விடயங்களை மெல்ல உங்கள் முன் வைக்கத் தொடங்கியதும். ஒரு சின்ன இடைவெளி. பதில் கருத்தை முன்வைக்கத் தயக்கம். யாரிந்த நாணல்? நல்லவனோ? இல்லைக் கெட்டவனோ? பசுத்தோல் போர்த்திய புலியோ? புலித்தோல் போர்த்திய குள்ள நரியோ? என்று ஒருவித குழப்பம் சஞ்சலம் பலருக்கும் வந்திருக்கும். நாணல் எனும் முகமூடிக்குள் யாராயிருக்கம்? எதற்காக இப்படியான கருத்துக்களை முன்வைக்கமுயலுகிறான். என்ற சந்தேகம் தோன்றியிருக்கும் இதுவும் நியாயமான சந்தேகம்தான். இப்படியெல்லாம் தோன்றினால் நல்லது சற்றே சிந்திக்கத் தொடங்விட்டம் என்பதுதான் அர்த்தம். அதுமட்டுமில்லை அநேகமான களத்துறவுகளும் கொஞ்சம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவை அதனால் உணர்வுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான எதிர்க்கருத்துக்களும் சட்டென்று வைக்கப்படுவது வழமை. ஆனால் இங்கு எந்தவிதமான கருத்துக்களுமே வைக்கப்படவில்லை அந்த ஆக்கங்களை களத்தில் எழுதும்போதே இப்படியானதொரு நிலை ஏற்படும் யாரும் பதில் கருத்து முன்வைக்கமாட்டார்கள் எனத் தெரிந்துதான் எழுதினேன். இதிலும்கூட வரவேற்கத்தக்க மாற்றம் சட்டென்று யாரும் வசைபாடும் வகையில் எனது கருத்துக்களுக்குப் பதில்களைக்கொட்டித்தீர்க்கவ� �ல்லை. அதனால் உங்களது சிந்தனையிலும் இந்தவிடயங்கள் மேலோட்டமாக, உணர்வுபுர்வமான அல்லாது அறிவுபுர்வமான சிந்தனையைத் தூண்டியிருப்பது புரிகிறது. ஆனாலும் பதில் கருத்து எழுத ஒருவிதப் பயம். ஆமோதிக்கும்விதமான கருத்துக்களை எழுதினால் எங்களது சமுதாயம் என்னைப்பற்றி என்ன நினைக்கும்? தமிழர் நலனுக்கு எதிரானவன் எனமுத்திரை பதிக்கப்பட்டு ஒதுக்குவிடுவார்களோ என்ற பயம் தடுக்கிறது. எதிரான கருத்துக்களை முன்வைக்கவும் தயக்கம் எனக்துத்தான் விடயம் புரியவில்லை பிற்போக்கானவன் என நினைப்பார்களோ என்ற நினைப்பு. இப்படியாக தனது கருத்து எது என்பதை ஆணித்தராகச் சொல்லமுடியாதவர்களாக நாம் வளர்க்கப்பட்டிருக்கிறம். கள உறவு புத்தன் எழுதிய உந்தவயசில... ... குட்டிகதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. எமது சமுதாயம் எங்களை சுயசிந்தனையற்று சுற்றஉள்ளவர்களின் கருத்துக்களையும் விருப்பு வெறுப்புக்களையும் பிரதிபலிப்பவர்களாகவே வளர்தத்திருக்கிறது. பிறந்தது முதல் கட்டையில் போவதுவரை சுயத்தைத் தொலைத்தவர்களாக வாழக் கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்ட� �ு. நான் விரும்பும் உடை நான் விரும்பும் கல்வி நான் விரும்பும் வாழ்க்கைத்துணை எனது குறிக்கோள் என எதிலுமே என்னால் சுயமாக ஆணித்தரமான முடிவெடுக்கமுடியாமல், யார் யாரினதோ விருப்பு வெறுப்புகளுக்கும் இசைந்து எனது சமுதாயம் என்ன நினைக்குமோ என்ற பயந்து பயந்து வாழ்வதல்ல உண்மையான அர்த்தமுள்ள வாழ்க்கை. இந்தப்பயத்தை தூக்கித் தூரப்போடுங்கோ! இந்த சமுதாயம் என்ன நினைக்குமோ? சுற்றிலும் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக உங்கள் விருப்புகள் எண்ணங்களை மூடி நீங்கள் அணிந்திருக்கும் முகமூடிகளைக் கிழித்து எறியுங்கோ. பிரகாசமான உலகம் கண்களில் தெரியும். சுயசிந்தனையில் தோன்றும் சரியான கருத்துக்களுக்கு வடிவம் கொடுங்கோ நிறைந்த தேடுதல் சிந்தனையைத் தூண்டும் சிந்தனை சீரிய கருத்துக்களைத் தரும். நான் வைக்கும் இந்தக் கருத்துக்களைக்கூட நீங்கள் ஏற்கவேண்டுமென்றில்லை. நான் ஏன் இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேன். இதை முன்வைப்பதால் எனக்கென்ன லாபம். இதை ஏற்பதாலோ அன்றி மறுப்பதாலோ உங்களுக்குள்ள ஆதாயங்கள் அல்லது பாதிப்புக்கள் என்ன? எனக்குப் பதில் தரவேண்டுமென்பதோ அல்லது களத்தில் பதில்கருத்து எழுதவேண்டுமோ என்பதல்ல முக்கியம். சிந்தியுங்கோ! செயல்படுங்கோ! ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செய்படும் காலம் வெகுதூரமில்லை.
  8. ஒட்டகத்தாரின் தொ(ல்)லைபேசி இலக்கம் இரகசியமாக உங்களுக்குமட்டும் பகலெல்லாம் நல்ல வெயிலடிச்சு மரங்களெல்லாம் வாடிப்போய்கிடக்கிறதே என்று முற்றத்தில நின்ற மரங்களுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டு நின்றன். எதிர்வீட்டு முற்றத்திலையும் நடமாட்டம் தெரிந்ததும் நேற்றுப்பட்ட அவஸ்த்தை ஞாபகத்திற்குவர கொஞ்சம் சுதாகரித்துக்கொணடு கண்டும் காணாததுபோல மற்றப்பக்கமாகத் திரும்பித் தண்ணீர் ஊற்றுவதில் தீவிரமானன். சில நொடி தாண்டியிருக்காது. அண்ணை! அண்ணை! என்ன கண்டும் காணாததுபோல நிக்கிறியள்? எதிர் வீட்டிலிருந்து குரல் வந்தது. அது.... எதோ யோசனையில கவனிக்கேல்லை என்று சமாளிச்சன். பரவாயில்லை. நான் வீட்டிற்குப் புதுத் தொலைபேசி இணைப்பு எடுத்திட்டன் அதுதான் உங்களுக்கும் இலக்கத்தைத் தருவம் என்று கூப்பிட்டனான். தெருவைத்தாண்டி வந்து இந்தாங்கோ பத்திரமாக வைச்சிருங்கோ எந்தநேரமும் எடுக்கலாம் கோபிக்கமாட்டன் என்றவாறு அட்டையை நீட்டினார். வாங்கிப் பார்த்தால் ஒட்டகத்தார் தொலைபேசி: 0900....... வடிவா வெளிச்சத்தில பிடித்துப் பார்த்தன் 0900....தான் சந்தேகமா வேலையிடத்து இலக்கத்தை மாறித்தந்திட்டியளோ? சீ! சீ! சரியான இலக்கம்தான் படிச்சுப்பாத்திட்டத்தானே தந்தனான். 0900... நானும் விடாமல் பொதுவா இந்தமாதிரி 0900 என்று தொடங்குகிற இலக்கங்களை தொழில் நிறுவனங்கள்தானே வைத்திருக்கிறவை. பேசுவதற்கு அதிக கட்டணம் வாங்கும் இலக்கமென்று நினைக்கறன். ஓம்! ஓம்! அது சரிதான். ஆனால் நான் அவ்வளவு கூட வாங்கவில்லை உள்நாட்டு இணைப்புக்களுக்கு நிமிடத்துக்கு 59 சதம்தான் என்ன 59 சதமோ? சந்தேகமென்றால் ஒருக்கால் அடித்துப்பாரும். உது எனக்குக் கட்டுபடியாகாது. ஒருக்கால் அடிச்சுப்பாருமன் சந்தேகத்தோடு கைத்தொலைபேசியை எடுத்து இலக்கங்களை அழுத்தினன். இரண்டுதடவை மணி அடித்ததும். வணக்கம் நீங்கள் இப்பொழுது ஒட்டகத்தாரின் வீட்டுத்தொலைபேசியுடன் இணைப்பில் உள்ளீர்கள். ஒட்டகத்தார் வேறொருநபருடன் பேசிக்கொணடிருப்பதனால் அடுத்ததாக அவருடன் பேசுவதற்கான சந்தர்ப்பம் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவரை காத்திருக்கவும். டன்ன நன்ன நன்ன... ஒட்டகத்தைக்கட்டிக்கோ......டண்ட.. ................... பாடல் வந்தது சிறிது நேரத்தில் இன்னும் சில நொடிகள் இணைப்பிலிருக்கவும் அடுத்த சந்தர்ப்பம் உங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான் சட்டென்று கோபமா இணைப்பைத் துண்டித்தன். கோபப்படாதையுங்கோ! இதிலை ஒன்றும் பகிடி, விளையாட்டு இல்லை. நான் சொல்லுகிறதைக் கேட்டுப்போட்டு பிறகு சொல்லும் சரி, பிழை. கொஞ்சக்காலத்துக்கு முதல் இழப்பீடு ஒன்று பெறுகிறவிடயமா காப்புறுதி நிறுவனத்துக்கு தொலைபேசியிலை தொடர்புகொண்டன். அவங்கள் சொன்னாங்கள் நிமிடத்திற்கு 89 சதமென்று நானும் இப்படித்தான் கோபப்பட்டு தொடர்பில்வந்தவனைக் கண்டபடி திட்டிக் கேட்டனான். அதுக்கு அவன் நேரம் பொன்னானது போனால் வராது பெறுமதி மிக்கது. அதோட ஒப்பிடும்போது நீங்க தாற காசு வெறும் தூசுமாதிரி, என்று சொன்னான். அப்பத்தான் எனக்கு நேரத்தின்ரை அருமை புரிந்தது. அவன்ரை நேரம் மட்டும்தானோ பெறுமதியானது என்ரையும்தானே? உடனே என்ரை இலக்கத்தையும் மாற்றிப்போட்டன். இப்ப எனக்குக் காசுக்குக் காசுமாச்சு. அதோட சும்மா பொழுதுபோகாமல் எடுத்துக் கதைக்க வந்த விசயத்தைச் சட்டென்று கதைத்து முடிக்காமல் காலிலை ஒட்டின சுவிங்கம்போல இழுபடுகிற தொலை பேசியளும் இப்ப வாறேல்லை வந்தாலும் சட்டென்று கதைத்து முடித்திடுவினம். அதோட கண்ட கண்டு நிறுவனங்களின்ரை விளம்பர அழைப்புக்களும் வாறதே இல்லை. நீரும் வேணுமென்றால் இந்த மாதிரி மாத்திப்பாரும் சுகம் தெரியும். அதுபோக காசென்று எடுக்காமல்விடாதையும் எந்தநேரத்தில ரெலிபோன் எடுத்தாலும் கோபிக்கமாட்டனென்றவாறு ஒட்டகத்தார் திரும்பி நடந்தார். -------------------- நட்புடன் நாணல்
  9. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும், கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்...... ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும் சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்! இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே! ஒட்டகம் புகுந்த வீடு கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்......................... யாரது காலமை ஒன்பது மணிக்கு அருமையான என்ரை தூக்கத்தைக் கெடுக்கிறது என்ற யோசனையோட மெதுவா எழும்பிப்போய் வாசல்கதவைத் திறந்தன். வணக்கம் அண்ணா! நம்பமுடியாமலுக்கு..... கண்ணைக் கசக்கிக்கொண்டு வடிவா உற்றுப்பார்த்தன், நேரா மேலை கீழை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நம்பவே முடியவில்லை. வணக்கம் அண்ணே! என்ன அப்படிப் பார்க்கிறியள். அருமையான காலைத் தூக்கத்தைக் கெடுத்துப்போட்டன்போல? இன்னும் என்னாலை நம்பவேமுடியவில்லை. சுண்டி இழுக்கிற நிறமும் தொலைக்கட்சி விளம்பரங்களிலை வாற பொம்பிளையள்போல ஒல்லியும் உயரமுமா கண்ணுக்கு முன்னாலை ஒரு ஒட்டகம் ஒட்டகமேதான். என்ன அப்படிப் பார்கிறியள் நான் ஒட்டகத்தார் உங்கட எதிர்வீட்ற்குப் புதிதாக் குடிவந்திருக்கிறன். சுதாகரித்துக்கொண்டு வணக்கம், சந்தோசம் புதிதாக்குடிவருவதும் அதுவுமா ஒரு பொங்கல் பொங்குவமென்றால் அரிசி கொண்டுவர மறந்துபோனன். அதுதான் உங்கிளிடம் இருக்குமென்றால் கொஞ்சம் கைமாத்தா தர இயலுமே? இதென்ன கேள்வி புதிதாக் குடிவந்திருக்கிறியள் குடிபுகுதலும் அதுவுமா கொஞ்சம் நில்லுங்கோ வாறன் என்று சொல்லிக்கொணடு; குசினிக்குப்போய் ஒரு பாத்திரம் நிறைய அரிசியை அள்ளிக்கொணந்து கொடுத்தன். சட்டென்று குனிந்து பாத்திரத்தை வாங்கின ஒட்டகம் நன்றியென்று சொல்லிக்கொண்டு கிறுகிறுவெனத் தன்ரை வீட்டிற்குள் புகுந்து மறைந்தது. அப்பாடா! என்று ஆசுவாசமாக சோபாவில சாய்ந்து ஒரு ஐந்து நிமிசமிருக்காது திரும்பவும் கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்ங்......................... திரும்ப யாராக்கும் என்று யோசித்தவாறு கதவைத் திறக்க உங்களிடம் பால் இருக்கே? அதையும் மறந்போனன். பொங்கலுக்கு.... குசினியில இருந்து ஒரு பக்கற் பாலை கொணந்து கொடுத்தன். வாங்கினகையோட அட உது லிடில் பக்கற்போலகிடக்கு இனி அந்தக் கடையில வாங்காதையும் வேற நல்ல கடையள் இருக்குது பிறகு சொல்லுறன் என்றவாறு விறுவிறெண்டு வீட்டிற்கை புகுந்து கதவைச் சாத்தினார். இனியென்ன எழும்பியாச்சு பல்துலக்கி முகம் கழுவுவம் என்று குளியல்அறைக்குள்ள போய் அலுவலை முடிக்கேல்லை அதற்குள்..... கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்ங்......................... திரும்ப அழைப்புமணி வாயில திணிச்ச பிரசோடபோய் கதவைத் திறந்தால்! பொங்கலுக்குச் சக்கரையுமெல்லோ மறந்துபோனன். வாய் நிறைஞ்ச நுரையோட கதைக்கமுடியாமலுக்கு குசினிப்பக்கம் கையைக் கட்டினன். தன்ரை வீடுபோலக் கொஞ்சமும் கூச்மில்லாமல் குசினியில புகுந்து அலுமாரியைத் திறந்து சக்கரையென்று எழுதி ஒட்டியிருந்த டப்பாவை டக்கெண்டு எடுத்துக்கொண்டு ஒழுங்கான ஆள்போலக்கிடக்கு ஒவ்வொரு டப்பாவிலையும் எழுதி ஒட்டி வடிவாச் சுத்தமா அடுக்கி வைத்திருக்கிறீர். டப்பாவோட கொண்டுபோறன் மிச்சத்தைப் பிறகு கொணந்துதாறன். பதிலுக்குக் காத்திராமல் சட்டென்று மறைந்தார். என்ன மிருகமோ இப்படி வெட்கமில்லாமலுக்கு என்று யோசித்துக்கொண்டு முகங்கழுவிக்கொண்டு குசினியிற்கைபோய் கோப்பியைப்போட்டு கப்பில ஊத்த....... மிண்டும் கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்ங்......................... மணி ஒலித்தது. சலிப்போடபோய் கதவைத் திறந்தால் பெரியதொரு அண்டாவைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஒட்டகத்தார். என்ன? என்றன் ஏளனமா அதொன்றும் பெரிய பிரச்சனையில்லை. என்ரை அடுப்பிற்கு இன்னும் கரண்ட் கனக்சன் கொடுக்கேல்லை அதுதான் பொங்கலை இங்கையே பொங்குவம் என்று வந்தனான் என்று சொல்லிக்கொண்டு பதில் சொல்லமுன்னமே கிறுகிறெண்டு குசினியிக்கைபோய் பானையை அடுப்பில வச்சார். கோப்பி வாசனை வருமாப்போலகிடக்கு என்று சுற்றும்முற்றும் பார்த்தவர் மேசையிலகிடந்த கோப்பியைக் கண்டதும் காலையிலை இருந்து ஓடியோடி வேலை செய்து களைச்சுப்போனன் என்று சொல்லிக்கொண்டு கேட்டுக் கேள்வியில்லாமலுக்கு கப்பிலை ஊத்தி இரண்டு உறிஞ்சு உறிஞ்சிப்போட்டு உம் சுமாராத்தான் இருக்கு. பாலை நல்லா வத்தக் காய்ச்சி இரண்டு கரண்டி நெஸ்கபேயும் ஒரு கரண்டி சீனியும்போட்டு நுரைவாறமாதிரி நல்லா இழுத்து ஆத்திப்போட்டுக் குடிச்சுப்பாரும் ருசி தெரியும். நான் திரும்பவும் எனக்கொருகப் கோப்பிபோட்டுக் குடிச்சிட்டு ஒட்டகத்தாருக்கு ஒத்தாசையா முந்திரி, திராட்சை, ஏலக்காய் என்று சகலதும் எடுத்துக்கோடுக்க ஒருவழியாப் பொங்கிமுடிச்ச ஒட்டகத்தார் நேரம் வலுகெதியாப்போட்டுது விருந்தினர் வரப்போகினம் இன்னுமொருநாள் ஆறுதலாகக் கதைப்பம் என்றவாறு பானையையும் தூக்கமாட்டடாமல் தூக்கிக்கொண்டு தன்ரை வீட்டை நோக்கி மெதுவாக நடந்தார். -------------------- நட்புடன் நாணல்
  10. உதவிசெய்யவும். ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு எப்படி அனுமதி பெறுவது?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.