யாயினி

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  6,988
 • Joined

 • Last visited

 • Days Won

  13

யாயினி last won the day on March 9

யாயினி had the most liked content!

Community Reputation

1,405 நட்சத்திரம்

About யாயினி

 • Rank
  Advanced Member
 • Birthday March 30

Contact Methods

 • AIM
  ----------------------------------------
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Female

Recent Profile Visitors

7,574 profile views
 1. உங்களுக்கு மட்டும் சந்தேகங்களும் கேள்விகளும் அடிக்கடி வருகிறதே ஏன் ரதி..? எங்களுக்கு சந்தேகம் வந்தாலும்கேட்பதற்கு பயம் இல்ல கேட்டாலும் ஏதோ ஒரு ஜந்து வந்து போகிறது என்ற மாதிரியான நிலைப்பாடு தான்....அவதானித்தவரையில்...
 2. மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். 👉பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். 👉உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். 👉மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. 👉பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது. 👉பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். 👉நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை. 👉நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். 👉ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும். 👉தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன். 👉முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு. 👉தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது. 👉மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன. 👉புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன். 👉நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன். 👉தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால் 👉ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி. 👉துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை. 👉பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி. 👉ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது. 👉சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது. 👉ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும். 👉குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது. 👉சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர். 👉சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது. 👉பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது. 👉நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும். 👉நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க… ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது. 👉தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை. 👉காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும். 👉மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம். 👉“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது. 👉தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம். 👉இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம். 👉காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும். 👉குளிர் காலத்தில் குயில் கூவாது. 👉எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார். அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர். 👉லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர். அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 👉கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும். 👉கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும். 👉யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம். 👉கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம். 👉1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான். 👉ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு. 👉வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். 👉ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள். 👉பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும். 👉ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது. 👉தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ. 👉சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது. 👉விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும். 👉சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும். 👉யானை குதிரை நின்று கொண்டே தூங்கும். 👉நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும். 👉டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும் 👉புழுக்களுக்கு தூக்கம கிடையாது. 👉நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
 3. May 18, 2017 முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களுக்கும் விடுதலை போராளிகளுக்கும் சிரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.!!!
 4. தேசத்தை, தேசியத்தை, மொழியை ஆத்மார்த்தமாக நேசித்த ஆத்ம உயிரோட்டம் அனைத்தும் அடங்கி இன்றுடன் (மே17) எட்டு ஆண்டுகளாகிவிட்டன. 17 ,05,2017
 5. மெல்லென பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்..
 6. உலகத்தில் வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள். 14.05.2017
 7. டயுலஸ் முடிந்து எழும்பும் போது சடுதியாக விழுந்ததினால் ஏற்பட்ட நிலை இது..தலையின் பின் பக்கம் சிதைவு ஏற்பட்டுள்ளது..ஒரு மாத கால வைத்தியசாலை பராமரிப்பிலிருந்து நேற்றைய தினம் றீகாப் என்ற பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்:.அவர் கவலைப்படும் அளவுக்கு நாம் எதுவும் சொல்வதில்லை..ஆகவே இந்த நிலையிலிருந்து மீளுவார் ; மீள வைக்கவேண்டும்.பார்க்கலாம்.உங்கள்வருகைக்கும் தகவல் பகிர்வுக்கும் மிக்க நன்றி. நன்றி!
 8. ஓம் இரதி நான் இயல்பாகவே எதுவும் கதைக்க கேட்க மாட்டன் அதனால் அவர்களுக்கு எப்போதும் என்னால் எந்த சிரமமும் ஏற்பட்டதில்லை..கண்டிப்பாக என் கடமையைத் தான் செய்யிறன்.. மிக்க நன்றி . மிக்க நன்றி கிருபன் அண்ணா. நன்றி தாத்தா. நன்றி கண்மணியக்கா!
 9. சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.💐
 10. கடந்த ஒரு மாதமாக இந்த வகை ஸ்ரோக் வந்த எனது தாயாரோடு நேரத்தை செலவிட்டுக் கொண்டு இருக்கிறேன்...இதனால் ஏற்படப் போகும் தாக்கத்திலிருந்து மீளுவதும் கடினமாக போகிறது.....வைத்தியர்களைப் பொறுத்தரை (thalamus.) என்ற வகை ஸ்ரோக் வந்தவர்கள் உயிர் பிழைப்பது அபூர்வம் என்று சொல்கிறார்கள்..எந்த நிமிடத்திலும் என்னவும் ஏற்படாலம்...ஏற்கனவே நீரளிவு,மற்றும் கிட்னிபெயிலிராகி டயலஸ் போன்றவை நடந்து கொண்டு கொண்டு இருப்பதனால் உயிர் பிழைப்பது கடினம் என்றே சொல்கிறர்கள்..இதனைப் பற்றிய மேலதிக தகவல்கள் அறிய ஆவலாய் உள்ளேன்...நெடுக் அண்ணா மற்றும் யாராவது அறியத் தந்தால் உதவியாக இருக்கும்....
 11. #எல்லாம்_ஆயிற்று தனிமை எவ்வளவு கொடுமையானது. அதுவும் முதுமையில் தனிமை ஒரு பேரிடர். அந்தத் தனிமையில் நோய்மையும் சேர்ந்து கொண்டால்! அவருக்கு அறுபத்தைந்தும் அவர் மனைக்கு அறுபத்தாறும் வயதாகிறது. மூப்புக்கே உரிய நோய்கள் இருக்கிறதே! Alzheimer's- ஒருவகையான மறதி நோய்- அது அந்தம்மாவை தொற்றிக்கொள்கிறது. அப்போ அவருக்கு? அவருக்கும் இருக்கிறது.. புற்று நோய். வாய்ப்புற்று. கடந்த காலங்களில் அறுவைசிகிச்சை செய்தார்கள். கீமோவும்தான். தாடை என்புகள் தேயுமளவுக்கு சிகிச்சை செய்தார்கள். என்ன பயன்? வாழ்க்கை எவ்வளவு சுமையாகப் போயிற்று. போதாக்குறைக்கு அவர் மனைவியை வேறு அவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு குழந்தையைப் போல. குழந்தைக்கு டைபர் மாற்றுவதைப் போல அவர் மனைவிக்கும் டைப்பர் மாற்ற வேண்டி இருக்கிறது. தினமும் அதைத்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் அவரால் வண்டி ஓட்டக்கூட முடிவதில்லை. அவ்வளவு ஏன்! பேசக்கூட முடிவதில்லை. வைத்தியசாலைக்குப் போக வேண்டி இருந்தது. டெக்சி எடுத்துக்கொண்டார். போக வேண்டிய இடத்தை ஒருதுண்டு பேப்பரில் எழுதிக்காட்டினார். அவரது கடைசி விஜயத்தின் போதுதான் அதைச் சொன்னார்கள். அவருக்கு இன்னுமொரு சத்திரசிகிச்சை செய்ய வேண்டி இருக்கிறது. இடதுபக்க கன்னத்தையும் சற்றே நாக்கையும் சேர்த்தாற்போல.. அவர் வீடு திரும்பிய போது பெரிதாக ஆர்ப்பாட்டங்கள் இல்லை. எல்லாம் வழமை போலவே இருந்தது. மனைவின் டைப்பரை மாற்றிவிட்டார். ஒவனை ஆன் செய்து உணவுப் பொதியை உள்ளே வைத்து மூடிவிட்டார். மாலைச் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார். எல்லாம் வழமை போலவே இருந்தது. வழமை என்பது எப்போதும் வழமையாகவே இருப்பதில்லை. சமனிலை குலைந்து எல்லாம் கூடி அழுத்துகிற போது மனிதன் ஆழ்கடல் அமைதிபோல இருக்கிறான் என்பதால் உள்ளே கொதித்துக்கொண்டிருக்கிற கங்குல் அடங்கிற்று என்று பொருளில்லை. முடிவுகள் ஒரு நொடியில் தீர்மானிக்கப்பட்டாலும், அந்த ஒரு நொடி வெறும் ஒரு நொடியில் தீர்மானிக்கப்பட்டதில்லை. அது ஒரு கூட்டுத் திரட்சி. பெரியவர் உள்ளே சென்றார். வெளியே வருகிற போது அவரது கையில் ஒரு பிஸ்டல் இருந்தது. முகத்தில் சலனமில்லை. மனைவியைப் பார்க்கிறார். அவருக்குப் பதிலாக துவக்கு மனைவியின் வலது கன்னத்தை முத்தமிடுகிறது. 'டும்' இடதுபக்கமாக சரிந்து விழுந்து அந்த உடல். விடுதலைதான் கட்டுண்ட மனுடத்தின் இலக்கு. மரணம் ஒரு விடுதலை. இனியும் என்ன இருக்கிறது இந்த வாழ்வில்! பெரியவர் வசதியாக இருக்கையில் அமர்ந்து கொண்டார். துவக்கு வாய்வழி மூளையைக் குறிவைத்தது. 'டும்'. ரத்தமும் மூளைச் சிதறல்களும் பின் சுவற்றை 'சதக்' என அறைந்தன. பெரியவருக்கு இனி இந்த வாழ்க்கை குறித்து எந்த வழக்குகளும் இருக்காது. அவருக்கு இந்த பூமியோ, பூமிக்கு அவரோ பாரமாக இருக்கப்போவதில்லை. விடுதலை, விடுதலை! வெடித்த துவக்கு அக்கம் பக்கம் இருந்த யாரையும் சென்று சேரவில்லை. இப்போதெல்லாம் துவக்குச் சத்தம் யாரையும் கிளர்ச்சி அடையச் செய்வதில்லை. அனுகுண்டை வைத்து மிரட்டிக்கொண்டிருக்கிறோம், துவக்காவது மண்ணாக்கட்டியாவது. நாழிகள் பல கழிந்து ஒவனில் இருந்த உணவு கருகி ஏதோ ஒரு அபாயச் செய்தியை ஒருவரிடம் கொண்டு சேர்த்தது. கதவுகள் தள்ளித் திறக்கப்பட, உள்ளே நுழைந்த அவர், அந்தப் பூ மரணத்தை முதலில் காணும் பாக்கியம் பெற்றார். பொலிஸ் படை வந்தது. அவர்களது வழமையான கடமைகள் தொடங்கிற்று. முடிவொன்றுக்கு வர அவர்களுக்கு தேவையாக இருந்தது மூடப்பட்ட ஒரு பழைய சேமிப்புக் கணக்கும், வெறுமனே $1.14 பணம மீதியாய் இருந்த ஒரு வங்கிப் புத்தகமும்தான். 'தற்கொலை' எனப் பிரகடனப்படுத்தி காவல்துறை தனது கடமை நிறைவேற்றிற்று. அது ஒரு சமூகக் கொலை என்பது அவர்களும், இந்த உலகமும் அறியமாட்டார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. உங்களது மரணம் இந்தப் பரந்த பூமியில் நிகழ்ந்த இன்னுமொரு மரணம் மட்டுமே! மூன்று வாரங்கள் கடந்து போயிற்று. அந்த வீட்டிற்கு புதிதாக ஒரு இளஞ்சோடி குடிவந்திருந்தனர். ஒரு கம்பியூட்டர் இன்ஜினியரும், அவனது மனைவியும். அவர்கள் ஒன்றும் வாழ்வைக் கொண்டாட வந்தவர்களில்லை. அவர்களும் இன்னுமொரு ஆணும் பெண்ணும்தான்... குறிப்பு: Bukowskiயின் hell is the lonely place கவிதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது இது. தகுதியான யாராவது இதை ஒரு குறுப்படமாக எடுப்பீர்கள் என்றால் நான் திரைக்கதை எழுதித் தருகிறேன். இந்தக் கவிதை வருசங்களாக ஒரு குறும்படமாக என்னில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு shot by shot ஆக, frame by frame ஆக. Amor என்கிற பிரன்ச்சுப் படம் இதே போல ஒரு கதை அமைப்புக் கொண்டதே. இப்போது Bukowskiயின் அந்தக் கவிதையை வாசித்து விடுங்கள். #Hell_is_a_lonely_place he was 65, his wife was 66, had Alzheimer's disease. he had cancer of the mouth. there were operations, radiation treatments which decayed the bones in his jaw which then had to be wired. daily he put his wife in rubber diapers like a baby. unable to drive in his condition he had to take a taxi to the medical center, had difficulty speaking, had to write the directions down. on his last visit they informed him there would be another operation: a bit more left cheek and a bit more tongue. when he returned he changed his wife's diapers put on the tv dinners, watched the evening news then went to the bedroom, got the gun, put it to her temple, fired. she fell to the left, he sat upon the couch put the gun into his mouth, pulled the trigger. the shots didn't arouse the neighbors. later the burning tv dinners did. somebody arrived, pushed the door open, saw it. soon the police arrived and went through their routine, found some items: a closed savings account and a checkbook with a balance of $1.14 suicide, they deduced. in three weeks there were two new tenants: a computer engineer named Ross and his wife Anatana who studied ballet. they looked like another upwardly mobile pair. படித்ததிலிருந்து....