Jump to content

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2547
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by Elugnajiru

  1. ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கியதுபோல இப்போ சுமந்திரன் தமிழரசுக்கட்சியை முடக்கிவிட்டார் இனிமேல் சிங்களவன் காலடியில மெதுவாகப்போய் விழுந்துகிடக்கவேண்டியதுதான். பார்க்க சட்டத்தரணி தவராஜா அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு. இப்போதான் சுமந்திரன் சரியான முகவரிக்குப்போன கடிதமாக அங்க இங்க எண்டு திரிஞ்சு செல்லிடம் சென்றிருக்கிறார். மாகாப்பிரபு இங்கையும் வந்திட்டியளோ எனச் சிங்களவன் தலையில கைவைக்கப்போகிறான். ஆமை புகுந்தவீடும் ஆமினா புகுந்தவீடும் உருப்படாது எனச்சொல்வது சுமந்திரன் விடையத்தில சரியாகப்படுகுது. அதுசரி நீதிமன்றில் குட்டையை குழப்பிவிட்டு கோணேஸ்வரம் கோயிலுக்கு ஏன் போனவராம் கடவுளே கண்பியூஸ் ஆகப்போகிறார். இந்த மேதாவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரெல்லோ. அப்ப இவர் தனது இனத்துக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமயத்துக்கும் விசுவாசம் இல்லாதவரா?
  2. முதல் புலம்பெயர்ஸ்களைத் திட்டுவதை விடுத்து உங்கட பிரச்சனைகளைப்பற்றி முதலில் பொதுவெளியில் பேசுங்கோ. புலிகளது புலம்பெயர் முதலீடுகளை ஆட்டை போட்டவர்கள் மற்றும் சுரேன் செரேந்திரன் கோஸ்டியை விமர்சிப்பதைத் தவிர இவர்கள் யாரைக்குறிவைக்கிறார்கள். தமிழர்பகுதியில் போதைப்பாவனை விபச்சாரம் அதிகரிப்பு இவைகளைப்பற்றிபேசாது புலம்களை விமர்சனம் செய்வது அவர்களுக்கும் தாயகத்துக்கும் இடயிலான சிறிதளவான தொடர்பையும் அறவே இல்லாதொழிப்பதற்கான முயற்சி இந்துக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் யார் நகரின் முதல்தரப் பாடசாலையில் படிப்பதற்காக அரசாங்கத்தால் ஒழுங்குசெய்யப்படும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் ஏழை மாணவர்களுக்கான வாய்ப்பைத் தடிப்பறித்து அதன் வெட்டுப்புள்ளிகளை அதிகரிக்கப்பண்ணி அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பணம் படைத்தவர்களுடன் அந்த ஏழை மாணவர்களைப் போட்டிபோடப்பண்ணி அவர்களுக்கான சந்தர்ப்பங்களை மறுதலித்த ஒரு கூட்டம் யாழ் குடாநாட்டில் வாழ்கிறது அந்தக்கூட்டத்தின் அங்கத்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கல்லூரியில்தான் படிக்கிறார்கள். அதுதவிர இந்துக்கல்லூரியில் அனுமதி பெற கையூட்டுப்பெற்ற அதிபர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்ட கதை இன்னும் நினைவிலிருந்து போகவில்லை. அப்போ அங்கே கையூட்டுப்பெற்று பாடசாலை அனுமதி பெற்றவர்களும் படிக்கிறார்கள் ஏழை மாணவர்களது வாழ்வில் விளையாடி வெட்டுப்புள்ளிகளை அதிகரிக்கப்பண்ணியவர்களும் இருக்கிறார்கள். தவிர யாழ்ப்பாணத்தில் இப்போது ஆவாகுழு என இயங்கும் வன்முறைக்குழு சன்னா குழு எனும்பெயரில்தான் இயங்கியது அதன் வன்முறைத்தலைமை படிச்சது யாழ் இந்துக்கல்லூரியில்தான் அவனது பெயர் பிரசன்னா இப்போ சுவிஸ் நாட்டில் வாழ்கிறான் அவனது எடுபிடிகளாகத் திரிந்தவர்களில் பலர் யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்கள். அதைப்பற்றியும் ஒருக்கால் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் பட்டிமன்றம் நடாத்தலாம்தானே. ஏன் கடந்த பத்துவருடத்துக்கு மேலாக மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழரசுகட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்தமாதம் நடந்த தலைமைக்கான தேர்தலில் முறைகேடுகள் நடந்தன யாப்பு விதிகளின்படி இத்தேர்தல் நடைபெறவில்லை என வழக்காடினார்களே அப்போதுதான் அந்த யாப்பில் என்ன எழுதி இருக்கு எனப்பொதுவெளிக்குத் தெரிந்தது. அதில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் இரண்டுவருடத்துக்குமேல் பதவி வகிக்க முடியாது. பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை நூத்தி அறுபதுபேர்தான் ஆனால் வாக்களித்தவர்கள் அதைவிட அதிகம். ஆனால் நீதிமன்றம் சென்றவர்கள் என்ன சொன்னார்கள் எனத்தெரியுமா நாம் தெரிவுசெய்த செயலாளரை ஏற்று நடைமுறைப்படுத்தினால் சிறீதரன் தலைவராக முடியும் என. அப்படியாகில் தங்களுக்குச் சார்பாக நடந்தால் யாப்புவிதிகள் தூக்கிவீசப்படும் . இதைபத்தியும் யாழ் இந்து பேசலாமே. ஏன் புலம்பெயர்களை நஞ்சு குடித்துச்சாகச்சொல்லுறியள். தமிழர் பகுதியிலிருந்து மேல்படிப்புப்படித்து வெளிநாடுகளுக்குப் புறப்படுபவர்களில் இந்த முதல் நிலைப்பாடசாலைகளில் படித்தவர்களே அதிகம் அதைப்பற்றியும் பேசலாமே காரணம் கணக்கெடுத்தல் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து வெளியேறியவர்களே அதிகமாக இருக்கும். அதுசரி யாழ் இந்துக்கல்லூரி எனப்பீத்திக்கொள்கிறார்களே இவர்கள் என்ன அப்பாடசாலையின் அசிரியர்கள் படிப்பித்ததுடன் போய் பரீட்சை எழுதிப் பாசாகினவயளோ யாழ்ப்பாணத்தில் மூலை முடுக்குகளில் உள்ள ரியூட்டரிக் கொட்டில் வாங்கில் தேய்க்காமலா இருக்கினம்.
  3. இப்போ யாழ் களத்தில் எந்தக்கருத்துக்களையும் பகிரமுடியாது. அப்படி ஏதாவது கருத்தெழுதினால் சாணி கரைச்சு முகத்தில அடிக்க நிறையப்பேர் ஒரு கைபார்ப்பம் வரட்டும் என வரிசைகட்டி நிற்கிறார்கள். கொஞ்சக்காலத்துக்கு யாழ் களத்தைவிட்டு விலகி இருப்பது நல்லம் என நினைக்கிறன். அங்க என்ன மாதிரி?
  4. நன்றி, இது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தைவிட அதிகமாக இருக்கலாம் (ஏன் இருக்கலாம் எனக்கூறுகிறேன் எனில் பதின்மூன்றைபற்றி இப்படி மேலே குறிப்பிட்ட பொதிபோல் எவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை) நிச்சயமாக மேலே கூரிப்பிட்ட விடையங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்து அவை அனைத்தும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாம் பல விடையங்களில் முன்னேற்றமடைந்திருப்போம். இதைத்தான் ஜெகத் கஸ்பார் சொன்னாரோ "தமிழர்கள் தட்டையான மனநிலையுடையவர்கள்" என காலம் கடந்துவிட்டது. இப்போ வீட்டுக்கட்சி யாருக்கு என அடிபடுகிறோம்.
  5. எப்படி இருக்கும் இவர் ஜி எல் பிரிசுடன் சேர்ந்து தயாரித்த தீர்வுப் பொதி அது எப்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டது ? அதனது பிரதி ஏதாவது யாரிடமாவது இருக்குதா? அல்லது கிட்டர் சுவிஸில இருந்து கப்பலில் வரும்போது ஒரு சமாதனப்பொதியைக் கொண்டுவந்ததாக புலிகள் சொன்னார்களே அதுபோல பொய் புளுகா? ஏன் சார் அவர்களது தீர்வுப்பொதியை நீங்களோ அல்லது நம்பிக்கையான வேறி யாராவதோ 13 க்கு மேல் அதிகரமுள்ளதாகத் தயாரித்ததாகச் சொல்லப்படும் நகலைப்பற்றிய விபரம் தரமுடியுமா? சுத்தமான பொய்
  6. புலிகளது பிரசன்னம் இலங்கைத்தீவின் அரசியல் களத்திலும் போராட்ட களத்திலும் தவிர புலம்பெயர் தேசம்க்களிலும் 2009 பின்பு படிப்படியாக அற்றுப்போய்விட்டது. அதன் பின்பு இலங்கைத் தீவில் தமிழர் அரசியல் பேசுபவர்கள் ஜனநாயக வழியிலேயே நாம் தமிழர் உரிமையைப்பெற்றுக்கொள்ளப்போராடுகிறோம் என புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமைப்பு எனும் மிகப்பெரிய செல்வாக்கான அமைப்புக்குள் நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர் அவர்கள் இதுவரை காலமும் நடாத்திய போராட்டம் அதன்மூலமாகப் பெற்றுக்கொண்டவை கற்றுக்கொண்டவை இவைகளைப்பற்றி கணக்கில் எடுத்தால் எதுவுமே இல்லை. இதில் ஒருசில தலைவர்கள் சொல்லுகிறார்கள் சிங்களவரது மனதை வெல்லவேண்டுமென அதற்காக ஒரு தலைவர் சிங்களத் தலைவர் ஒருவரது கைகளிலிருந்த சிறீலங்காவின் தேசியக்கொடியை யாழ்ப்பாணத்தில் பறித்துக்கூட அசைத்துக்காட்டினார்.இன்னுமொருவர் நான் எனது சிறுவயதில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து விளையாடி படித்து மகிழ்ந்ததை எனது வாழ்வின் பெரும்பேறாகக் கருதுகிறேன் என சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியிருந்தார். தவிர புலிகள் முஸ்லீம் மக்களை யாழ் குடாவிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு எனக்கூறினார். தவிர புலிகள் பல சந்தர்ப்பங்களில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனவும் கூறினார் ஆனால் இவைகள் அனைத்தும் செய்தும் சிங்களவர் மனம் இன்னமும் மாறவில்லை. ஆக இப்போது கடந்த 2009 ல் இருந்து புல்கள் அகற்றப்பட்ட தமிழர் அரசியல் பரப்பில் விரும்பியபடி அரசியல் செய்து தமிழர் உரிமையைப்பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை அதுவும் ஜனநாயக வழிமுறைகளில் தழ்க்கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ளது. புலிகளதும் ஏனைய ஆயுதமேந்திய இயக்கங்களது காலமும் கிட்டத்தட்ட முப்பதுவருடமாகும் இதில் புலிகளைத் தவிர ஏனைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் புலிகளது அச்சுறுத்தல் அல்லது போர்க்கால ஜனநாயக விதிமீறகளால் இல்லாதொழிக்கப்பட்டார்கள். ஆனால் புலிகளது இராணுவ மற்றும் அரசியல் (சிலர் நினைக்கலாம் அவர்களிடம் என்ன அரசியல் நிலைப்பாடு இருந்த்தது என அப்படி எண்ணுபவர்கள் அவர்களும் ஏதோ அரசியல் என காமடி செய்தார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்) ஆகியவற்றின் உச்சம் எனப்படுவது 1994 ந் பின்னதான காலப்பகுதியாகும் அதில் அதி உச்சம் எனப்படுவது ஆனையிறவின் வீழ்ச்சி அதன்பின்னதான ஒரு சில போர்முனைகள் அரசியலில் பல சர்வதேசநாடுகளில் நடந்த பேச்சுவார்த்தைகள். அவை அனைத்தும் 2009 டன் இல்லாதொழிந்துவிட்டது ஆக ஒரு பதினைந்து வருடத்துக்குள்ளான புலிகளது காலம் விலகி 2009 ல் இருந்து 2023 வரைக்குமான தமிழர் அரசியல் கட்சியினரது ஜனநாயக வழிமுறைகளிலான போராட்டம் எதையாவது பெற்றுத்தந்ததா? மாறாக போதைவஸ்துப்பாவனை அதன் விற்பன சர்வதேச சந்தைக்குக் கைமாற்றிவுடும் தளம் ஆகியனவற்றின் சொர்க்கபுரியாக இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதி மாறியிருக்கிறது. வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் நீங்கள் நாடாளுமன்றில் தமிழர் இனப்பிரச்சனையை மட்டும் கதையுங்கோ அது தீர்ந்துவிட்டால் தமிழ்ர் பகுதியில் பாலாறும் தேனாறும் ஓடத்தொடங்கும் எனச்சொல்லியா அனுப்பிவிட்டவர்கள். சரி அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தாலும் இவர்கள் யாருக்காக உரிமை எடுத்துத் தரப்போகிறார்கள் மூளை மந்தமாக்கப்பட்ட இளையோரை உள்ளடக்கிய ஒரு சந்ததிக்கான உரிமையையா எடுத்துத் தரபோகிறார்கள்? நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப்பிரச்சனையில் போதைப்பாவனைப் பிரச்சனை மதன்மையாக இருக்கின்றது இந்தப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக்கட்சிகளும் வேற்றுமை சுயநலம் பாராது மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இந்தப்போதை அரக்கனிடமிருந்து இலையோரையும் எதிர்காலச்சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணம் இல்லாத தமிழர் அரசியல்வாதிகள் எமக்கான தீர்வுக்காக நேர்மையாகப் பொராடுவார்கள் என எப்படி உறுதிகூறமுடியும். அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனையை வீரியமாக எதிர்கொண்டு போராடி வெற்றிபெற்றால் நீண்டகாலமாக இருக்கும் தமிழர் உரிமைதொடர்பான பிரச்சனைக்கான போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுபவம் கிடைக்கும் மாறாக சிங்களம் இவர்களது போராட்டம் வலிமையானது இதனை நாம் தட்டிக்கழிகமுடியாது எனப்பயப்படும் தவிர நாம் கையேந்தி நிற்கிறோமே எமை அழித்த இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது போராட்ட அணுகுமுறைகளுக்கு நேர்மையான முறையில் முகம்கொடுக்கும். அதைவிடுத்து ஒரு கட்சியின் தலைவர் செயலாளர் பதவிக்காக காலை வாரிவுடும் நிகழ்ச்சியில் எப்போதோ இல்லாதொழிக்கப்பட்ட புலிகளை உள் இழுத்து உங்களது வக்கிரத்தை வாந்தி எடுக்காதீர்கள் புலிகள் ஜனநாயக விரோதிகளாக போர்க்குற்றவாளிகளாக இருந்துவிட்டுப்போகட்டும் அத்வே உண்மையாகவும் இருக்கட்டும் சர்வதேச விசாரண என வரும்போது உங்களது ஜனநாஜகத்தின்மீதான கரிசனையை விசாரணை ஆணையத்தின்முன்பு வையுங்கள் அதுவரை அந்தக்குற்றச்சாட்டுகளுக்கான சாட்சிகளைச் சேகரியுங்கள் நிரல்படுத்துங்கள். உண்மை காலம் கடந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.
  7. சில வேளைகளில் இவர்களை நினைத்தால் சிரிப்பாய்த்தான் இருக்கு. பாகிஸ்தானிலிருந்த வந்த ஏ கே 47 ஆயிரம் ரவைகள் அது எப்படியப்பா பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து ஒரு ஈ காக்க கூட உள்நுளையமுடியாது உண்மையும் அதுவே. அப்படி இருக்கையில் எப்படி அது கேரள விளிஞ்சியம் வரைக்கும் பயணம் செய்யுது? சரி அதைவிடவும், விடுதலைப்புலிகள் அமைப்பு சிறு கைத்துப்பாக்கி முதற்கொண்டு கனரக ஆயுதங்கள் வரைக்கும் பெருந்தொகையாகக் கையாண்டவர்கள் அதைவைத்தே அவர்கள் எதிரிகளைத் தோற்கடிக்க முடியவில்லை ஒரேயொரு ஏ கேயை வைத்து இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள்? இப்போது இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டத்தின்மீது அறவே நம்பிக்கை இல்லை என இந்தியாவுக்குத் தெரியும் உண்மையும் அதுதான். அப்படி ஒரு ஆயுதப்போராட்டம் வருமாகில் அது ஒன்றும் ஏ கே 47 தூக்கிப்போராடும் போராட்டமாக இருக்காது ஏ ஐ தொழில்நுட்பத்துடனான மிகவும் திறன்வாய்ந்த துல்லியமான போராட்டமாக அது இருக்கும். உதாரணமாக உக்ரைன் நாட்டுடன் சண்டையும்போது ரஸ்யா ஈரானில் தயாரித்த ட்றொணைப் பயன்படுத்தியது ஆனால் அது வினைத்திறன் குறைந்தது அதேவேளை இப்போது உக்ரைன் உள்ளூர் தொழில்நுட்பத்துடனேயே அதைவிட வீரியம் நிறைந்த ட்ரோனைப் பயன்படுத்துகிறது. துல்லியம்கூட ஓரளவுக்கு முன்னேற்றமானதாகும். முள்ளிவாய்க்காலுக்கு சிறிது முன்னைய காலத்தில் புலிகளிடம் இவை கிடைத்திருந்தால் யுத்தத்தின் போக்கே மாறியிருக்கும். ஆக இந்த ஏ கே 47 புலுடாவெல்லாத்தையும் இந்தியா ஏறக்கட்டி வைப்பதைத்தவிர வேறு வழியில்லை.
  8. உங்களுடன் பயணம் செய்த சக தொழிலாழனை நண்பனாக ஏற்று அவரை எங்களுக்கு அறிமுகமாக்கி உருவகம் கொடுத்து இறுதியில் எம்மையும் அவருக்காகப் வேண்டுதல் செய்ய வைத்துவிட்டீர்கள் அவரது ஆன்மா வீடுபேறடைய மனமார வேண்டுகிறேன். யாரோ கண்காணாத ஒருவருக்காக மனங்கலங்கினால் அங்கு மனிதம் வெல்கின்றது என அர்த்தப்படும்.
  9. இந்தப் பெர்யமனிதனுக்கு இது வேணும் காரணம் இவருக்கு 2021 ல விசம் வைத்துச் சாக்கட்டப்பார்த்து ஜேர்மனியில வைத்து வைத்தியம் செய்து காப்பாத்திவிட ஆற்ரையோ கயித்தை விழுங்கிப்போடு ரஸ்யாவுக்குத் திரும்பினால் போய்ச்சேரவேண்டியதுதான். முள்ளிவாய்க்கலுக்குள்ள கடைசிவரைக்கும் முண்டுபிடிச்சுக்கொண்டு நிண்டதா கேள்விப்பட்டன் அது உண்மையாக இருந்தால் அதைப்போலதான் இதுவும். கொஞ்சம் அந்தப்பக்கம் போய் தூர நிண்டு என்ன நடக்குது எண்டு பார்த்தால் இதுகளுக்காகவோ.... என இருவரும் காறித்துப்பியிருப்பினம்.
  10. ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவர் எனக்குக் கூறியிருந்தார் முப்பது இலட்சத்துக்கும் ஐம்பது இலட்சத்துக்கும் இடையில் செலவு செய்தால் சட்டத்தை படிக்காமலேயே படித்ததாக தராதரப் பத்திரம் எடுக்கலாமாம் அதுவும் ஒரிகினலாக. ஆனால் ஒரு விடையம் இவர்களால் நீதிமன்றில் வழக்காடமுடியாதாம் மற்றப்படி உள்ளூருக்குள்ள சில விடையங்களையோ அல்லது சில நிறுவனங்களிலோ வேலை செய்யலாமாம். நானும் இதை முழுதாக நம்பவில்லை அங்கிருந்து சொன்னவரது கருத்துத்தான் அதுக்காக என்னை அட்ச்சுத் துவைக்காதையுங்கோ.
  11. கடந்த காலங்களில் இவர்களது தகிடுதித்தங்களை வெளியே இருந்து விமர்சித்தவண்ணமே இருந்தனர், அவர்களது கருத்தை உண்மையாக்குமாப்போல் செய்யும் சுத்துமாத்தால் இப்போ இவர்கள் நடுத்தெருவில் மானங்கெட்டு நிற்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அவர்கள் ஜனநாயக விரோதிகள் என விமர்சித்துக்கொண்டிருந்த இவர்களே ஒரு ஜனநாயகப் பொதுவெளியில் யாப்பு மற்றும்ம் சட்ட வரையறைகளுக்குள் ஒரு நிர்வாகக்குழுவைத் தெரிவுசெய்யும் விடையத்தில் எந்தவித இங்கிதமும் இல்லாது நடந்துள்ளார்கள். இந்த வழக்கை நீதித்துறைக்கு யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை வெளியே சொல்ல எந்தவொரு வெகுஜன ஊடகத்துக்கும் துணிவில்லை.
  12. நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறியள் மதுரா பாலா காலத்துக்கு முன்னதான திரைப்பட நடிகர் மற்றும் பாடகர்கள் பற்றிய வருகை எதுவும் புலிகள் சம்பந்தப்பட்டு இருக்கவில்லை.
  13. வாசே இந்த உத்தி இப்போதும் கையாளப்படுகிறது. கருனாநிதியின் மகன் ஸ்ராலினை அரசியலுக்கு இழுத்துவர மீசா எனும் சட்டத்தில் சிறை சென்றவர் என்பது அப்போது அனைவரையும் வியப்பிலாள்தியது. ஆனால் இப்போ உதயநிதி அரசியலுக்கு வர அப்படியான சிறை செல்லல்கள் உதவாது காரணம் இவர்கள் இப்போது சிறை சென்றாலும் உழ்ழலில் போகிறார்கள் என சமூகவலைத்தளம் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டுடும். அதனால் உதயநிதிக்கு அறிமுகமாக சினிமாக்கவர்ச்சி தேவைப்பட்டது அதையும் இடையில் நயனதாராவுடன் இணைத்து செய்திகள் பரப்பப்ப்டாடது சினிமாக்கவர்ச்சி மற்றும் நெகட்ரீவ் விமர்சனங்கள் ஒன்று சேர்ந்து எதை அவர் விரும்புகிறார்களோ அதன்மூலம் சம்பந்தப்பட்டவர் மிகவும் பரவலாக அறிமுகமாவார். அதேபோல் உதயநிதியது மகன் இரண்டாயிரத்துக் குழந்தை எனும் வகையில் வருகிறார் அவரது எதிர்காலம் அந்த வயது மக்களிடம்தான் என்பதைத் தெரிவுசெய்து அவர்களுக்கு உதயநிதியின் மகனை அறிமுகப்படுத்த.... சமூகவலைத்தளங்களில் வெளிநாட்டில் படிக்கபோன இடத்தில் ஒரு போலந்துக்காரப் பெண்ணுடன் டேட்டிங் செய்கிறார் என பரவலாக செய்தியைச் சிதறடித்து ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் இளசுகளுக்கு இதுதான் பேசு பொருள் அதே போன்றதே அன்றாடப் பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போராடாமல் சிந்தனைச்சிதறல்களை மக்கள் மத்தியில் அதுவும் இளம் சந்ததிகளின்மத்தியில் ஏற்படுத்தி ஒரே இடத்தில் கட்டிப்போடுவதே இலக்கை நிர்ணயித்தவனது வேலை. இதில் நாங்கள் கிழடுகட்டைகள் (என்னைத் திட்டாதையுங்கோ இப்போதெல்லாம் முப்பது வயதைக் கடந்த அல்லது அண்மித்த ஆண்கள் எல்லாம் இளம் பெண்களுக்கு அங்கிள்தான்) கடந்தகாலங்களில் இவைகளைக் கடந்துவந்தாலும் யதார்த்தம் எம்மைச் சுட்டதனால் புலம்புகிறோம்.
  14. நடிகை அமலாவை ஐரோப்பியாவுக்குக் கொண்டுவந்தது புலிகள் இல்லை டுசில்டோர் புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஒன்றரை வருடத்துக்கு முன்வரை இருந்த இன்டோ சிலோன் சுப்பர் மார்க்கற் நிர்வாகம்.
  15. "இலங்கையைச் சீரளிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஒரு பகுதியே தமன்னாவின் கெட்ட ஆட்டமாகும்." எனது கருத்திடுகையில் இறுதி வரியில் குறிப்பிட்ட விடையத்தைப் புரியாது நீங்கள் இப்படி எழுதியிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. காரணம் யாழ் களத்தில் தர்க்கரீதியாக பல கருத்திடுகைகளுக்கு வாசிப்பவர்களது சந்தேகங்களை அல்லது செய்தியிலுள்ள மயக்கத் தனமையை விளக்கிக் கருத்திடும் உறவுகளில் நீங்களும் ஒருவராவர். ஒருசிலரது நிலைப்பாட்டுகள் உங்களது தர்க்கங்களுக்கு ஒத்துப்போகாதுவிடினும் கருத்திடுகயின் உள்ளடக்கத்திற்கு இன்னுமொரு பார்வையும் உண்டு என புரியவைப்பவர் என்பதானல். இதைத்தவிர இதே விடையத்தில் ஆரம்பத்திலும் நான் கருத்துத் தெரிவித்திருந்தேன் அதில் தமன்னாவது வருகை யாழில் உள்ளவர்களைச் சீரழிச்சுப்போட்டுது எனக் கூறவரவில்லை. நூற்றுக்கணக்கில் தமது உளவாளிகளை இறக்கியும் உள்ளூரில் அனைத்துமட்டத்திலும் எம்மவர் மத்தியிலும் ஊடுருவியும். தமிழ்த்தேசியம் பேசுபவர்களது கடந்தகால தப்புக்களையும் அசிங்கங்களையும் ஆவணப்படுத்தி மிரட்டியும். புதிதாக யாராவது களத்துக்கு வந்தால் அவர்களை தங்கள் வலைக்குள் வளைத்துப்போட்டும் காரியம் சாதிக்கும் தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகூடிய சக்தியுடன் இறுமாப்பாக எழுந்து தங்கள் காரியங்களை நினைத்தமாத்திரத்தில் சாதிக்கும், ஐரோப்பியாவின் உறபத்திப் பொருளாதார வல்லரசான ஜேர்மனியை ஆறாம் இடத்துக்குப் புறம்தள்ளி வலிமையான நாடாகத் திகழும் இந்தியாவுக்கு தமன்னா எனும் ஒரு துருப்புச்சீட்டைத் தவிர வேறெதையும் தேடிப்போகமுடியாது என நான் சொல்லவரவில்லை.
  16. சிங்கள அரச தலைமைக்கு தமிழர்கள்தான் முதல் எதிரி ஏனையோர் எதிரிகளாக இருந்தாலும் அவர்களைக்கண்டால் வாலைச் சுறுட்டிகொண்டு நிப்பினம். இந்திய ஏகாதிபத்தியம் தான் நினைத்தமாதிரிக் காய்களை நகர்த்துகிறது தமிழர்பகுதியில் அவர்கள் சிங்களத்துகுக்குத் தெரிந்தே எல்ல இடங்களிலும் தங்கள் கரங்களை விரித்து வளைத்துப்பிடித்துள்ளார்கள் இதைப்பற்றி சிங்களம் வாய் திறக்கமுடியாது காரணம் விடுதலைப்புலிகளைப்போல் இன்னுமொரு அமைப்பை நாம் மாலைதீவில் புளொட்டை இறக்கினமாதிரி இறக்கிவிடுவம் எண்டு சொன்னால் பொத்தீருவினம். அடுத்து தெற்கு அங்கு பொருளாதார மீட்சி எனக்கூறிக்கொண்டு அனைத்து இடங்களையும் வளைத்துப்போட்டுக் கபளீகரம் செய்வதை சிங்களவர்கள் கவனிக்க மாட்டார்கள் (தற்போதைக்கு) தவிர போர்க்குற்றம் மனித உரிமை பொறுப்புக்குறல் விடையத்தில் அவர்களுக்கு ஆதரவாக நின்றால் சிங்களவன் மது உண்ட மந்தியாகிவிடுவான். இல்லாதுவிட்டால் நீர்மூழ்கிக்கப்பலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது அடாத்தாக இலங்கைத் துறைமுகத்துக்குள்ள கொண்டுபோவானா? ஒரு இறைமை உள்ள நாட்டின் எல்லைக்குள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இராணுவத் தளபாடங்களை நகர்த்துவது என்பது எவ்வளவு பாரதூரமான விடையம். நான் ஆரம்பத்தில் நினைத்தேன் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப்பகுதி (முக்கியமாக வடக்கு) தான் இந்தியாவின் ஒருமாநிலமாக மாறிவிட்டது என இப்போது பார்த்தால்தான் தெரியுது இலங்கைத் தீவு முழுவதும் இந்தியாவின் இன்னுமொரு மாநிலமாகி நீண்ட நாள் ஆகிவிட்டதென. இல்லாதுவிடின் ஜே வி பி யின் அனுரகுமாரவை ஏதோ பஜகவின் தமிழ்நாட்டுப் பிரிவு செயலாளர் அண்ணாமலையை டெல்கிக்குக் கூப்பிட்டுக் கதைப்பதுபோல் கதைக்கமுடியுமா. இலங்கையைச் சீரளிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஒரு பகுதியே தமன்னாவின் கெட்ட ஆட்டமாகும்.
  17. புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள் ஏதோ யோகியம் எண்டமாதிரி நாங்கள் நினைக்கிறம் தமன்னா ரஜனிகாந்தின் படத்தில அரையும் குறையுமா நிண்டு காவாலா எனும் பாட்டுக்கு ஆடுறதை த்ப்லைக்காட்சியில் போட்டு தங்கள் பிள்ளைகளை அதே மாதிரி ஆடச்சொல்லி (நண்டு சிண்டுகளுக்கு) பழகிப் பின்னர் பிறந்த நாள் விழா சாமத்திய வீடுகளில மேடையில் ஏத்தி ஆடுறதும் நாங்கள் சொல்லும் குற்றத்தில சேருமா இல்லையா? நான் அறிய ஒரு தாயும் மகளும் யாழ்ப்பாணத்தில பவுடர் வித்துக்கொண்டு திரிகினம் அவர்களுக்குப் பஞ்சம் என்றோ அல்லது குடும்பத்தில் ஆண்தலைமை போரில் இறந்தோ காணமல் போனதோ இல்லை ஆனால் மேலதிக சொகுசு தேவைப்படுகுது மகளது கைப்பையில் அவர் தனது தொலைபேசி இலக்கத்தை எழுதி வைத்திருக்கிறார், அவருக்கு போதைப்பொருள் கொடுத்து விற்கச்சொன்னவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். அவரை தாயும் மகளும் பொஸ் எனத்தான் அழைக்கிறார்கள் இகைவிட தமண்ணா வந்ததும் கரிகரன் வந்ததும் மோசமான செயலா? இலங்கை அரசாங்கம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் எனும் திட்டத்தைக் கொண்டுவந்ததே வருமானம் குறைவான குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களில் நன்றாகப் படிக்கக்கூடியவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதாந்தம் கொடுப்பனவுகளை வழங்கி அவர்களது கல்விக்கு ஊக்கமளிப்பதற்காகவே. ஆனால் இப்போது என்ன நடந்தது இலங்கையில் முதல் நிலைப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கான போட்டிப்பரிட்சையாக மாற்றியமைக்து ஏழை மாணவர்களுடன் வசதிபடைத்த மாணவர்களைப் போட்டி போடவைத்து தங்களது பிள்ளைகளை சிறந்த மாலைநேர ரியூசன் கல்வி நிறுவனக்களில் சேர்த்து மதிப்பெண்கள் பெறப்பண்ணி ஏழை மாணவர்களது சந்தர்ப்பங்களைத் த்ட்டிப்பறிக்கிறார்களே அதை விட இது மோசமான செயலா? இல்லாவிடில் மாவட்டம்தோறும் முதல்நிலைப் பாடசாலைகள் தங்களது மாணவர் சேர்க்கையில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வரும் மாணவர்களுக்கு அனுமதியில் முதலிடம் கொடுத்து அனைத்து மாணவர்களையும் ஏழை மாணவர்களுடன் போட்டிக்கு முகம்கொடுக்கப்பண்ணும் முறையைவிட இது மோசமான செயலா? சரி இல்லாதுவிட்டால் அரசாங்கம் பட்டதாரிகளையும் உயர்தரப் பரீட்சையில் நல்லதராதரம் எடுத்தவர்களையும் தெரிவுசெய்து அவர்களுக்கு கற்றல் கற்பித்தல் சம்பந்தமான சிறப்புப் பயிற்சி கொடுத்து ஆசிரியர்களாக்கி வருடத்தில் பாதி நாளே பாடசாலை நாளாக்கி ஆனால் வருடம் முழுமைக்கும் மாதாமாதம் சம்பளம் கொடுத்து வருடத்துக்கு இரண்டுதடவை ரெயில்வே வாரண்ட் கொடுத்து பிள்ளைகளைப் ப்டிப்பியுங்கோ எனச்சொன்னால் அப்படி அவர்கள் தங்களது மாணவர்களுக்கு கற்பித்திருந்தால் தமிழர் பகுதி ஈறாக இலங்கைத் தீவு எங்கும் ஏன் ரியூட்டரிக்கொட்டில்கள் மானவர்களால் நிறைந்திருக்கு அங்கு படிப்பிக்கும் ஆசிரியர்கள் என்ன தேவ லோகத்திலிருந்தா வந்தவர்கள்? உங்களுக்குத் தெரியுமா எத்தனை பாடசாலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளின் மாணவர்களுக்க்ச் சரியாகப் படிப்பிக்காது அவர்களே ரியுட்டரிக் கொடில்களில் மாங்கு மாங்கு எனப் படிப்பித்து சித்தியடையும் மாணவர்களது படங்களை பேனர்களில் அச்சடித்து தங்கள் மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள் என விளம்பரப்படுத்துகிறார்கள். அவர்களிடம் வினவுங்கள் அவர்கள் படிப்பிக்கும் பாடசாலையில் அவரது வகுப்பில் அதே பாத்தில் எத்தனைபேர் சித்தியடைந்தார்கள் என பூச்சியம் இவைகளைவிட தமண்ணா வருவது தவறா?
  18. நான் இதுபற்றி ஒரு காணொளி பார்த்தேன் கனடா டமிழர் பேரவை சார்பில் ஒரு பெண் உட்பட்ட மூவர் சில விளக்கங்களைச் சொன்னார்கள் அதில் தாங்கள் பயணம் தொடர்பான விடையங்களை ஒருவரிடம் கொடுத்ததாகவும் அவர் தங்களுக்கு மின்னஞ்சல்மூலம் தகவல்களைத் தந்துகொண்டே இருந்ததாகவும் மகிந்தவைச் சந்திக்காமல் இமாலயமலைக்கு ஏற முடியாது எனவும் காரணம் நாடாளுமன்றில் அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள்தான் பெருவாரி எனவும் தாங்கள் ஏதாவது பிரச்சனைக்கான உடன்பாட்டுக்கு வந்தால் மகிந்த தரப்பு குழப்பக்கூடாது எனவும் கூறியிருந்தார்கள். அவர்களது கூற்றுப்படி இமாலயப் பிரகடனத்தை சிங்களம் ஏற்று நாளைக்கெ தீர்வைத் தட்டில் வைத்துத் தரப்போகினம் அதுதான் மகிந்தவைத் தடவிக்குடுத்தனாங்கள் எனச்சொல்லினம். ஆனா ஒன்று மட்டும் தெரிகிறது கனேடியத் தமிழர் பேரவயில் உள்ள சிலரை சிங்களமும் இந்தியாவும் தங்கட கையுக்குள் கொண்டுவந்திட்டுது அந்த விடையம் ஏனையவர்களுக்கும் தெரியும் ஆனால் இதை தாங்கள் வெளியில சொன்னால் கனேடிய தமிழர் பேரவை இனிமேல் இல்லாமல் போயிடும் எண்டு பம்முகினம். ஆனால் உடைவு நடந்துவிட்டது நிஜம்போலத்தான் இருக்கு. இந்த விடையத்தில சுரேன் சுரேந்திரனுக்கும் ரூட் ரவியருக்கும் இந்தியா கொடுத்த கனேடியத் தமிழர் பேரவையை உடை எனும் அசைன்ட்மன் சக்சஸ். இந்தியாவினதும் சிங்களத்தினதும் கண்களைக்குத்திய விடையம் கனடாவின் அரசியலில் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களது ஆதிக்கம் மிகவும் முக்கியமாக இருக்கு இப்படியான நிறுவனங்களை உடைத்துக் குழப்பிவிட்டால் அவங்கள் தங்களுக்குள் அடிபட்டே மற்றையதை இழந்துவிடுவார்கள் உதாரணத்துக்கு இப்போ தமிழரசுக்கட்சிக்குள் சுமந்திரன் புகுந்து விளையாடுவதுபோலவும் ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக் கூட்டணியை முடக்கியதுபோலவும் கனடாவில் கனேடியத் தமிழர் பேரவையை உண்டு இல்லை என்றாக்கிவிட்டால் தங்களதுபாடு கொண்டாட்டம்தான் என சிங்களமும் இந்தியாவும் நினைக்கிறது.
  19. இன்னுமொரு அரிதாரம் பூசிய முகம், அரசியலில் அறிமுகமாகிறது. கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த தமிழ்நாட்டின் ("தமிழகம்" நன்றி பிஜோபி யின் தமிழ்நாட்டு ஏஜண்டு ஆளுனர் ரவி) முண்ணணித் திரைப்பட நடிகர் விஜை அவர்களை இந்திய நடுவண் அரசின் அமுலாக்கல்துறை (அதாவது வருமானங்கள் தொடர்பான கண்காணிப்புத்துறை) அதிகாரிகள் வரவழைத்து விசாரணைக்குப் பின்பு அனுப்பிவிட்டார்கள் என்பது நினைவிருக்கும். அந்த விசாரணையில் கணக்குக்காட்டாத வருமானம், அவ்வருமானத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் முதலீடுகள் தொடர்பாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டு தங்களுக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்திசெய்த பின்னரே அனுப்பியிருந்தார்கள். அந்த விசாரணையில் சில பல உண்மைகளைத் தெரிந்துகொண்ட அமுலாக்கல்துறை எதிர்காலத்தில் தேவைப்படுவதற்காக அவற்றை ஆவணப்படுத்தியும் வைத்திருப்பார்கள் என்பது புலனாய்வுபற்றிய அரிவரிப்பாடம் மட்டும் தெரிந்தவர்களுக்கே சாதாரணமாக மனதில்படும். ஆனால் "விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளோ" எங்கள் தளபதி கறைபடாத கைகளையுடையவர் ஆகவே அவரை எந்தக்கொம்பனாலும் அசைக்கமுடியாது என ஊளையிட்டார்கள். இன்னுமொருபுறத்தில் விஜைக்கு இப்படியான விசாரணையும் தேவைப்பட்டது தவிர ஆளும் ப ஜ க அரசுக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அமிர்த்ஸா அவர்களுக்கும் தேவைப்பட்டது. காரணம் தங்கள் சொல்லுக்கு ஆடக்கூடிய ஒரு கைப்பாவை முகவும் செல்வாக்கனவராக இருக்கவேண்டும் அவர் மிஸ்டர் கிளீன் என அவரது ஆதரவாளர்களால் உணரப்படவேண்டும் இந்த மிஸ்டர் கிளீன் எனும் பிம்பத்தை நாம் தான் அவருக்கு ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும் என ப ஜ க மிகவும் துல்லியமாகத் திட்டம் போட்டது. அதன்மூலம் விஜையது விஜையது விசிலடிச்சன் குஞ்சுகளுக்கு அண்மையானவர்களது ஆதரவும் கூடும் எனும் கணக்கிடல்மூலம் தனது அரசியல் சதுரங்கத்தை தமிழ்நாட்டில் ஆரம்பிக்க உருட்டும் பகடக்காயாக விஜை உருவாக்கப்பட்டார். இந்திய உபகண்டத்தில் பல்வேறு மாநினங்கள் இருந்தபோதும் பொருளாதாரத்தில் மிகவும் முன்னிலையில் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் அபரிமிதமான முதலீடுகளும் கல்வி முதலீடுகளும் தொழில்நுட்ப அறிவாற்றலும் செறிந்துகாணப்படுவதும் தவிர சகிப்புத்தன்மை ஒருங்கிணைவு ஆகியவற்றில் ஓரளவு முன்னேற்றமுடையதும் முக்கியமாக ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிப் பயணிக்கும் உள்ளகக் கட்டமைப்பை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நிர்வகிப்பதும் ப ஜ வுக்கும் அவர்களை முண்டுகொடுக்கும் வடநாட்டு மார்வாடிகளுக்கு எரிச்சலூட்டும் விடையம் தவிர எப்போது இந்தக் கனிந்தபழம் தங்கள் கைகளுக்கு வந்துசேரும் எனும் கனவில் வாழும் அவர்களது காதுகளுக்குத் தேன்வார்க்கச் சிறுகச் சிறுகத் திட்டமிட்டு நடாத்தப்படும் அரசியல் சதுரங்கத்தின் ஓரங்கம்தான் விஜை அவர்களது அரசியல் கட்சியின் பெயர் அறிவிப்பு. இப்பெயர் ஒன்றும் விஜையது மூளையிலிருந்து உதித்ததல்ல இதை ப ஜ க ஏஜண்டு ஆளுனர் ரவியின் வாயிலிருந்து உதித்த "தமிழகம்" எனும் வார்த்தை எச்சத்தில்தான் இப்பெயர் கருவுற்றது. தனது கணக்குக்காட்டாத பணவருவாயின் தகிடுதித்தங்களை இன்றுவரைக்கும் மறைத்த நடுவண் அரசின் எஜமானர்களுக்குத் தனது விசுவாசத்தின் ஒரு பகுதியாவது காட்ட தனது கட்சியின் பெயரின் ஒருபகுதியிலாவது அவர்களது எச்சிலை இட்டு நிரப்புவது ஒன்றும் ஆச்சரியமில்லையே! "தமிழக வெற்றிக் கழகம்" அறிவிப்பு வந்தாச்சு. இந்த அறிவிப்பு எப்போ வந்திருக்கு! அப்போ இப்போ என்றிருந்த நடிகர் விஜயகாந் அவர்கள் காலமாகிக் கடைசிநாள் காரியம் முடிந்த கையுடன் வந்திருக்கு. மண்ணுக்குள் புதைத்த வரது உடலை கரையான் மற்றும் இன்னபிற நுண்கிருமிகள் உள்நுளைந்து டீகொம்போஸ் பண்ண ஆரம்பித்தனவோ இல்லையோ அதற்கும் இந்தாபிடி ஒரு விருது எனக்கொடுத்து அவர்களது கட்சியின் தொண்டர்களைக் குசியாக்கி " ஆமா இவைங்களை என்னமோண்ணு அநியாயத்துக்கும் நினைச்சோமே, ஆனா இவைங்க அநியாயத்துக்கும் நியாயமானவங்களா இருக்காங்களே" என தொண்டர்கள் மூக்கில விரலை வைக்க, இதுதாண்டா தருணம் என ஆரம்பிங்கடா கச்சேரியை என விஜையை உசுப்பிவிட்டாச்சு. அந்தக்கையோடு நாம் தமிழர் கட்சியை உண்டு இல்லை என ஆக்குறம் அவர்களுக்கு இருக்கும் ஆதரவுத்தளத்தை அசைத்து இந்தப்பக்கம் திருப்புறம் எனச்சொல்லி அமூலாக்கல்துறை நாம்தமிழர்களது இரண்டாம் நிலைத்தலைவர்களது வீடுகளுக்கு சோதனைசெய்ய உள்நுழைந்துள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களில் கணிசமானவர்கள் சீமானது நாம்தமிழர் ஆட்சியில் ஈழம் வெல்லலாம் எனக் கனவுப்பால்குடித்து மேற்படி இரண்டாம் நிலைத்தலைவர்களுடன் தாம் வாழும் நாடுகளிலிருந்து தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆபத்து அவசரத்துக்கு காசு உதவி மற்றும் காதுகுத்து, குலசாமிக்கு மொட்டையடிப்பு ஆகியவற்றுக்கு "சப்றைஸ்" பரிசுப்பொட்டலங்கள் பணமுடிச்சுகள் அனுப்பி தாங்களும் குதூகலமாகி அவர்களையும் குதூகலப்படுத்து கடைசியில கூமுட்டையாகிவிடும் கோஸ்டிகளால் இப்போ இந்த இரண்டாம் கட்ட தலைகளுக்கு ஆபத்து வந்துவிட்டது. திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் போதை கடத்தல் கும்பல்களில் இலங்கையைச் சேர்ந்த சிங்களவர்கள் இஸ்லாமியர்கள் தமிழர்கள் என கலந்துகட்டி ஒரு பட்டியலே இருக்கு, இக்கும்பலில் முன்னாள் போராளிக்குழுக்கலிள் இருந்தவர்களும் உள்ளார்கள் ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அக்கும்பலில் உள்ள அனைவரும் (யார் சிங்களவர் இஸ்லாமியர் புலிகள்தவிர்ந்த தமிழர்கள்) விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய சிறப்பி முகாமுக்குள்(?) இருந்து போதைப்பொருள் கடத்துகிறார்கள் அதன்மூலம் ஆயுதங்கள் கடத்தத் திட்டமிடுகிறார்கள் கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கிறார்கள் அவர்களை மத்திய புலனாய்வுக்குழு விசாரணை வளையத்துக்குள் கைது செய்துள்ளது (?) எனப் பத்திரிகைகளில் கண்டமேனிக்கு வதந்திபரப்பும் இந்தப் புலனாய்வுப்புலிகள் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம்தமிழர்களது ரசிகப்பெருமக்களைப் புலிகளது ஏஜண்டு எனப் பெயர் சூட்டினால் நம்ம சனம் நம்பும்தானே (அத்துதானே நம்பாம") அப்போ தமிழ்நாட்டின் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விஜையை வைத்து இன்னுமொரு அங்குலம் நெருங்கியாச்சு. அப்போ விஜையது அரசியல் எதிர்காலம்? அவர்தானே நாடாளுமன்றத் தேர்தல் எனது குறி இல்லை 2026 சட்டசபைத் தேர்தலில் நான் குதிக்கப்போகிறென் எனச்சொல்லிப்போட்டார். மார்வாடிகளது கைகளுக்கு பொருளாதாரம் போகவேண்டுமெனில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம் அப்போ யார் ப ஜ கவின் கைத்தடியோ அவர்தார் முதல்வர். சிலவேளை ட்ரில்லியன் டாலர் கைக்கு எட்டும்போது அண்ணாமலைக்கு வசசுபோய் நடைபயணம்போகமுடியாத அளவுக்கு உடல் நிலை சீரற்றதாக இருக்கலாம் இருக்கவே இருக்கிறது இன்னுமொரு மலை. நாடாளுமன்றத் தேர்தலில் விஜையது ஆசீர்வாதத்தில் பி ஜெ பி கணிசமான வாக்குகளை அள்ளினால். வரப்போகும் சட்டசபைத்தேர்தலில் விஜை கட்சியின் இரண்டாம் நிலைத் தலைகளது வீடுகளுக்குள் அமூலாக்கத் துறையை அனுப்பினால் அலுவர் முடிந்துவிடும். விஜையது பணத்தில் ஒரு சினிமா ரசிகன் எப்படி அரசியல் கட்சியின் தொண்டனாக மாறி மக்கள் முன்பு வாக்குகள் சேர்க்கவேண்டும் எனும் பயிற்சியை முடித்துப் பட்டம்பெற்ற இரண்டாம் நிலைத்தலைவர்கள் பி ஜே பியினுடன் இணைந்தால் சட்டமன்றத்தேர்தலில் விஜை பி ஜே பி சொன்னதைச் செய்யத்தான் வேண்டும். அமூலாக்கல்துறை இருக்கும்மட்டும் எங்களுக்குத் திருவிழா. விஜை அரசியலில் வெல்வாரா? இல்லை மூழ்குவாரா? இதைப்பற்றி யோசிக்கும்போது திருமதி தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது நினைவிருக்கு, அவரது (நடிகர் சத்தியராஜ்) வீட்டுக்கும் அமூலாக்கல்துறைச் ச்சோதனையை நடத்திவிட்டால் போச்சு என. கதையோட கதையாக இந்திய உழவுத்துறையது கைகளுக்குள் புலம்பெயர் தேசமொன்றில் வாழும் ஒரு பெண்ணும் நாம் தமிழர் கட்சியுடன் கருத்துவேறுபாடுகொண்டுள்ளதால் அகப்பட்டுள்ளார். கொஞ்சம் பொறுங்கோ யாரோ கதவைத்தட்டினம் அமூலாக்கல்துறையாக இருக்கப்போகிறது.
  20. ஒருவனுக்கு ஒருத்தி எனச்சொல்லும் ராமரின் இதிகாசத்தில் சீதையைத் தீக்கிளிக்கச்செய்தார் ராமன் ஆனால் அவரது கோவிலின் கவிழாவுக்கு இந்திப்படங்களின் நடிகை கங்கணா ரணவதைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அதை விடுங்கோ இந்தச் சிலையை வடிவமைத்தவர் ஒரு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சிற்பியாவார். சிலையின் நெற்றியிலுள்ள நாமத்தை நீக்கிவிட்டுப்பார்த்தால். அச்சு அசலாக பால முருகன் போலவே காட்சிதருகிறது. இஙு தமிழ்க்கடவுள் வென்றுவிட்டான்
  21. இங்கு விடையம் என்னவெனில் 2009 க்குப் பின்பு தமிழர் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாகச் எதிர்பாராத விடையமாகச் சிங்களமும் அவர்களது அரசியல்வாதிகளும் அவர்களது சிந்தனையைச் செயல்வடிவம் கொடுக்கும் நாடாளுமன்றமுமே இருக்கு இதை யாராலும் மறுதலிக்க முடியாது தமிழர் தலைமைகள் (?) அங்குபோய்தான் தங்கள் கோரிக்கைகளை வெளியிடமுடியும் . அந்த நாடாளுமன்றில் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு சிங்கள அடிப்படைவாத, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் அடிப்படைவாதத்தை சபையில் கக்குவாராக இருந்தால். நான் தமிழ் அடிப்படைவாதம் மட்டுமல்ல அதற்கு மேலாகவும் இருப்பேன். இங்கு தமிழ் தலைமைகள் விட்டுக்கொடுப்பு நடந்ததை மறப்போம் சகோதரத்துவம் எனப் பேசி எம்மை இழக்காரமாகப் பார்க்கும் மனநிலைக்கு சிங்களம் வந்துவிட்டது என்பதை ஆணித்தரமாக நான் கூறுகிறேன். தற்போதைய தமிழர் அரசியல் பேசும் அனைத்துத் தரப்பும் ஒருமித்த குரலாக ஒரே கோரிக்கையை எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாது வைக்குமாகவிருந்தால் நான் தமிழ் அடிப்படைவாதத்தைப்பற்றிப் பேசவேண்டியவனாக இருக்கமாட்டேன் காரணம் எமக்கான தமிழ்த்தலைமை அல்லது தலைமைகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டாலும்கூட சிங்களத்தரப்புக்கும் முள்ளிவாய்க்காலில் கொலைக்களத்துக்கு இட்டுச்சென்ற சர்வதேசத்துக்கும் தமது நிலைப்பாட்டை சரியானபடி சொல்கிறார்கள் என்பதால் ஆகும் ஆனால் நிலைமை அப்படி இல்லையே. சாணாக்கியன் சிங்களத்தியைக் கலியாணம் கட்டுவதும் சுமந்திரனது பெடியன் சிங்களத்தியைக்கட்டுவதும் எம்மை சந்தேகமடைய வைக்கிறது. அது எதுபோல் என்றால் ஐநா செயலர் பஙி மூன்னினது உறவுப்பெண் கேரளத்து நம்பியாரது உறவினரைக் கலியாணம் கட்டியதுபோல. முள்ளிவாய்க்கால் அவலம் முடிவுற்றபோது கொழும்பில் சிங்களவருடன் பால் சோறு பகிர்ந்தவர்கள் சகொதரத்துவத்தைப்பற்றி யோசிச்சார்களா. சரி புலிகள் படுகொலைப்பாவிகள் ஆனால் அங்கிருக்கும் அப்பாவிகள் நிலை என்ன எனச் சிறிதும் சிந்த்தித்தார்களா இல்லையே.
  22. பின்லாந்து பின்லாந்தியருக்கே இங்கிலாந்து இங்கிலாந்துக்காரர்களுக்கெ அவை எம்மைப்போன்ற வந்தேறிகுடிகளுக்கானதல்ல. சிலவேளை கனடா வந்தேறு குடிகளுக்கானதாக இருக்கலாம் காரணம் அது பல்லின மக்களது குடியேற்ற நாடாகவே இப்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இலங்கைத்தீவில் தமிழினம் என்பது நீண்டகாலமாக வாழும் இனக்குழுமம் அவர்களுக்குத் தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் யோக்கியதை இருக்கு அதை மறந்துவிட்டுப் பேசாதீர்கள்.
  23. சிறீலங்காவின் நாடாளுமன்றில் ஒரு சிங்கள உறுப்பினர் ஒரு மாதத்திற்குள் சாணாக்கியனின் காதலி ஒரு சிங்களப்பெண் அவரைத்தன் சாணாக்கியன் திருமணம் செய்யவுள்ளார் எனக்கூறும் போது சாணாக்கியன் எந்தப்பதிலும் கூறவில்லை. அப்படி அவர் சுத்தமானவராக இருந்தால், தனது நாடாளுமன்றப் பதவியின் அடிப்படை உரிமையை சம்பந்தப்பட்ட ஊறுப்பினர் மீறுகிறார் எனக்கூறியிருக்கவேண்டும். இந்த ஆதாரம் போதுமா நான் வாழுவது பின்லாந்து நாட்டில் இப்போது பின்லாந்தின் அடிப்படைவாதிகளும் பணக்காரர்களுக்குமான கட்சியும் சேர்ந்தேதான் அரசை அமைத்திருக்கிறது குறிப்பிட்ட அளவு பல்லின மக்கள் இங்கும் வாழுகிறார்கள். அதில் அனேகமானவர்கள் வேலைசெய்தே தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள். பின்லாந்தின் அடிப்படைவாதக்கட்சி என்ன சொல்லுது என்றால் பின்லாந்து பின்லாந்தியர்களுக்கே என, இலங்கைத் தீவிலிருந்து நான் புலம்பெயரக்காரணமானது சிங்கள அடிப்படைவாதமே ஆனால் சிங்கள் அடிப்படைவாதம் எனப்படுவது சிங்களவர்களுக்கு இருந்தே ஆக வேண்டும் அதேவேளை மாற்று இனத்தவர்களுக்கான உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என. பின்லாந்தின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்கள் அனைத்தும் பின்லாந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது அது கனடாபோன்ற பல்லினமக்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுடன் ஒத்துப்போகாது. ஏன் பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுடனேயே ஒத்துப்போகாது. பின்லாந்து மக்களது எண்ணங்களுடன் நான் ஒத்துப்போகிறேன் அந்தவகையில் சுத்த தமிழ்தேசிய அடிப்படைவாதம் எனக்கு இருந்தால் எவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் அப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். நான் எந்தவிதமான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதுபோல் நான் எந்தவிதமான சிந்தனை உடையவனாக இருக்கவேண்டும் என்பதையும் எனது எதிரிதான் தீர்மானிக்கிறான். சும்மா சகோதரத்துவம் தேசிய ஒருமைப்பாடு எனக்கூறிக்கொண்டிருந்தால் சுரணை கெட்டவனாக இருப்பதுபோன்றதாகும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.