Jump to content

Elugnajiru

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    2546
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Elugnajiru last won the day on June 4 2015

Elugnajiru had the most liked content!

1 Follower

Profile Information

  • Gender
    Male
  • Location
    காலப்பொதுவெளி
  • Interests
    நிந்தனை செய்வது, தேடி நிதம் சோறுண்பது.செருக்குடனிருப்பது.

Recent Profile Visitors

4935 profile views

Elugnajiru's Achievements

Proficient

Proficient (10/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Dedicated Rare
  • Posting Machine Rare
  • Collaborator

Recent Badges

799

Reputation

  1. முதல் புலம்பெயர்ஸ்களைத் திட்டுவதை விடுத்து உங்கட பிரச்சனைகளைப்பற்றி முதலில் பொதுவெளியில் பேசுங்கோ. புலிகளது புலம்பெயர் முதலீடுகளை ஆட்டை போட்டவர்கள் மற்றும் சுரேன் செரேந்திரன் கோஸ்டியை விமர்சிப்பதைத் தவிர இவர்கள் யாரைக்குறிவைக்கிறார்கள். தமிழர்பகுதியில் போதைப்பாவனை விபச்சாரம் அதிகரிப்பு இவைகளைப்பற்றிபேசாது புலம்களை விமர்சனம் செய்வது அவர்களுக்கும் தாயகத்துக்கும் இடயிலான சிறிதளவான தொடர்பையும் அறவே இல்லாதொழிப்பதற்கான முயற்சி இந்துக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் யார் நகரின் முதல்தரப் பாடசாலையில் படிப்பதற்காக அரசாங்கத்தால் ஒழுங்குசெய்யப்படும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் ஏழை மாணவர்களுக்கான வாய்ப்பைத் தடிப்பறித்து அதன் வெட்டுப்புள்ளிகளை அதிகரிக்கப்பண்ணி அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பணம் படைத்தவர்களுடன் அந்த ஏழை மாணவர்களைப் போட்டிபோடப்பண்ணி அவர்களுக்கான சந்தர்ப்பங்களை மறுதலித்த ஒரு கூட்டம் யாழ் குடாநாட்டில் வாழ்கிறது அந்தக்கூட்டத்தின் அங்கத்தவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கல்லூரியில்தான் படிக்கிறார்கள். அதுதவிர இந்துக்கல்லூரியில் அனுமதி பெற கையூட்டுப்பெற்ற அதிபர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்ட கதை இன்னும் நினைவிலிருந்து போகவில்லை. அப்போ அங்கே கையூட்டுப்பெற்று பாடசாலை அனுமதி பெற்றவர்களும் படிக்கிறார்கள் ஏழை மாணவர்களது வாழ்வில் விளையாடி வெட்டுப்புள்ளிகளை அதிகரிக்கப்பண்ணியவர்களும் இருக்கிறார்கள். தவிர யாழ்ப்பாணத்தில் இப்போது ஆவாகுழு என இயங்கும் வன்முறைக்குழு சன்னா குழு எனும்பெயரில்தான் இயங்கியது அதன் வன்முறைத்தலைமை படிச்சது யாழ் இந்துக்கல்லூரியில்தான் அவனது பெயர் பிரசன்னா இப்போ சுவிஸ் நாட்டில் வாழ்கிறான் அவனது எடுபிடிகளாகத் திரிந்தவர்களில் பலர் யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பவர்கள். அதைப்பற்றியும் ஒருக்கால் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் பட்டிமன்றம் நடாத்தலாம்தானே. ஏன் கடந்த பத்துவருடத்துக்கு மேலாக மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழரசுகட்சியின் தலைவராக இருக்கிறார். கடந்தமாதம் நடந்த தலைமைக்கான தேர்தலில் முறைகேடுகள் நடந்தன யாப்பு விதிகளின்படி இத்தேர்தல் நடைபெறவில்லை என வழக்காடினார்களே அப்போதுதான் அந்த யாப்பில் என்ன எழுதி இருக்கு எனப்பொதுவெளிக்குத் தெரிந்தது. அதில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் இரண்டுவருடத்துக்குமேல் பதவி வகிக்க முடியாது. பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை நூத்தி அறுபதுபேர்தான் ஆனால் வாக்களித்தவர்கள் அதைவிட அதிகம். ஆனால் நீதிமன்றம் சென்றவர்கள் என்ன சொன்னார்கள் எனத்தெரியுமா நாம் தெரிவுசெய்த செயலாளரை ஏற்று நடைமுறைப்படுத்தினால் சிறீதரன் தலைவராக முடியும் என. அப்படியாகில் தங்களுக்குச் சார்பாக நடந்தால் யாப்புவிதிகள் தூக்கிவீசப்படும் . இதைபத்தியும் யாழ் இந்து பேசலாமே. ஏன் புலம்பெயர்களை நஞ்சு குடித்துச்சாகச்சொல்லுறியள். தமிழர் பகுதியிலிருந்து மேல்படிப்புப்படித்து வெளிநாடுகளுக்குப் புறப்படுபவர்களில் இந்த முதல் நிலைப்பாடசாலைகளில் படித்தவர்களே அதிகம் அதைப்பற்றியும் பேசலாமே காரணம் கணக்கெடுத்தல் யாழ் இந்துக்கல்லூரியிலிருந்து வெளியேறியவர்களே அதிகமாக இருக்கும். அதுசரி யாழ் இந்துக்கல்லூரி எனப்பீத்திக்கொள்கிறார்களே இவர்கள் என்ன அப்பாடசாலையின் அசிரியர்கள் படிப்பித்ததுடன் போய் பரீட்சை எழுதிப் பாசாகினவயளோ யாழ்ப்பாணத்தில் மூலை முடுக்குகளில் உள்ள ரியூட்டரிக் கொட்டில் வாங்கில் தேய்க்காமலா இருக்கினம்.
  2. இப்போ யாழ் களத்தில் எந்தக்கருத்துக்களையும் பகிரமுடியாது. அப்படி ஏதாவது கருத்தெழுதினால் சாணி கரைச்சு முகத்தில அடிக்க நிறையப்பேர் ஒரு கைபார்ப்பம் வரட்டும் என வரிசைகட்டி நிற்கிறார்கள். கொஞ்சக்காலத்துக்கு யாழ் களத்தைவிட்டு விலகி இருப்பது நல்லம் என நினைக்கிறன். அங்க என்ன மாதிரி?
  3. நன்றி, இது 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச்சட்டத்தைவிட அதிகமாக இருக்கலாம் (ஏன் இருக்கலாம் எனக்கூறுகிறேன் எனில் பதின்மூன்றைபற்றி இப்படி மேலே குறிப்பிட்ட பொதிபோல் எவரும் எனக்கு அறிமுகப்படுத்தியதில்லை) நிச்சயமாக மேலே கூரிப்பிட்ட விடையங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்து அவை அனைத்தும் முழுமையாகவும் நிரந்தரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் நாம் பல விடையங்களில் முன்னேற்றமடைந்திருப்போம். இதைத்தான் ஜெகத் கஸ்பார் சொன்னாரோ "தமிழர்கள் தட்டையான மனநிலையுடையவர்கள்" என காலம் கடந்துவிட்டது. இப்போ வீட்டுக்கட்சி யாருக்கு என அடிபடுகிறோம்.
  4. எப்படி இருக்கும் இவர் ஜி எல் பிரிசுடன் சேர்ந்து தயாரித்த தீர்வுப் பொதி அது எப்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டது ? அதனது பிரதி ஏதாவது யாரிடமாவது இருக்குதா? அல்லது கிட்டர் சுவிஸில இருந்து கப்பலில் வரும்போது ஒரு சமாதனப்பொதியைக் கொண்டுவந்ததாக புலிகள் சொன்னார்களே அதுபோல பொய் புளுகா? ஏன் சார் அவர்களது தீர்வுப்பொதியை நீங்களோ அல்லது நம்பிக்கையான வேறி யாராவதோ 13 க்கு மேல் அதிகரமுள்ளதாகத் தயாரித்ததாகச் சொல்லப்படும் நகலைப்பற்றிய விபரம் தரமுடியுமா? சுத்தமான பொய்
  5. புலிகளது பிரசன்னம் இலங்கைத்தீவின் அரசியல் களத்திலும் போராட்ட களத்திலும் தவிர புலம்பெயர் தேசம்க்களிலும் 2009 பின்பு படிப்படியாக அற்றுப்போய்விட்டது. அதன் பின்பு இலங்கைத் தீவில் தமிழர் அரசியல் பேசுபவர்கள் ஜனநாயக வழியிலேயே நாம் தமிழர் உரிமையைப்பெற்றுக்கொள்ளப்போராடுகிறோம் என புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டமைப்பு எனும் மிகப்பெரிய செல்வாக்கான அமைப்புக்குள் நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர் அவர்கள் இதுவரை காலமும் நடாத்திய போராட்டம் அதன்மூலமாகப் பெற்றுக்கொண்டவை கற்றுக்கொண்டவை இவைகளைப்பற்றி கணக்கில் எடுத்தால் எதுவுமே இல்லை. இதில் ஒருசில தலைவர்கள் சொல்லுகிறார்கள் சிங்களவரது மனதை வெல்லவேண்டுமென அதற்காக ஒரு தலைவர் சிங்களத் தலைவர் ஒருவரது கைகளிலிருந்த சிறீலங்காவின் தேசியக்கொடியை யாழ்ப்பாணத்தில் பறித்துக்கூட அசைத்துக்காட்டினார்.இன்னுமொருவர் நான் எனது சிறுவயதில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து விளையாடி படித்து மகிழ்ந்ததை எனது வாழ்வின் பெரும்பேறாகக் கருதுகிறேன் என சிங்கள ஊடகமொன்றுக்கு செவ்வி வழங்கியிருந்தார். தவிர புலிகள் முஸ்லீம் மக்களை யாழ் குடாவிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பு எனக்கூறினார். தவிர புலிகள் பல சந்தர்ப்பங்களில் யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனவும் கூறினார் ஆனால் இவைகள் அனைத்தும் செய்தும் சிங்களவர் மனம் இன்னமும் மாறவில்லை. ஆக இப்போது கடந்த 2009 ல் இருந்து புல்கள் அகற்றப்பட்ட தமிழர் அரசியல் பரப்பில் விரும்பியபடி அரசியல் செய்து தமிழர் உரிமையைப்பெற்றுக்கொடுக்கும் வாய்ப்பை அதுவும் ஜனநாயக வழிமுறைகளில் தழ்க்கட்சிகள் அனைத்தும் பெற்றுள்ளது. புலிகளதும் ஏனைய ஆயுதமேந்திய இயக்கங்களது காலமும் கிட்டத்தட்ட முப்பதுவருடமாகும் இதில் புலிகளைத் தவிர ஏனைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் அனைத்தும் புலிகளது அச்சுறுத்தல் அல்லது போர்க்கால ஜனநாயக விதிமீறகளால் இல்லாதொழிக்கப்பட்டார்கள். ஆனால் புலிகளது இராணுவ மற்றும் அரசியல் (சிலர் நினைக்கலாம் அவர்களிடம் என்ன அரசியல் நிலைப்பாடு இருந்த்தது என அப்படி எண்ணுபவர்கள் அவர்களும் ஏதோ அரசியல் என காமடி செய்தார்கள் என்றே வைத்துக்கொள்ளுங்கள்) ஆகியவற்றின் உச்சம் எனப்படுவது 1994 ந் பின்னதான காலப்பகுதியாகும் அதில் அதி உச்சம் எனப்படுவது ஆனையிறவின் வீழ்ச்சி அதன்பின்னதான ஒரு சில போர்முனைகள் அரசியலில் பல சர்வதேசநாடுகளில் நடந்த பேச்சுவார்த்தைகள். அவை அனைத்தும் 2009 டன் இல்லாதொழிந்துவிட்டது ஆக ஒரு பதினைந்து வருடத்துக்குள்ளான புலிகளது காலம் விலகி 2009 ல் இருந்து 2023 வரைக்குமான தமிழர் அரசியல் கட்சியினரது ஜனநாயக வழிமுறைகளிலான போராட்டம் எதையாவது பெற்றுத்தந்ததா? மாறாக போதைவஸ்துப்பாவனை அதன் விற்பன சர்வதேச சந்தைக்குக் கைமாற்றிவுடும் தளம் ஆகியனவற்றின் சொர்க்கபுரியாக இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதி மாறியிருக்கிறது. வடக்குக் கிழக்கில் வாழும் மக்கள் தமது பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர் நீங்கள் நாடாளுமன்றில் தமிழர் இனப்பிரச்சனையை மட்டும் கதையுங்கோ அது தீர்ந்துவிட்டால் தமிழ்ர் பகுதியில் பாலாறும் தேனாறும் ஓடத்தொடங்கும் எனச்சொல்லியா அனுப்பிவிட்டவர்கள். சரி அவர்கள் அப்படிச் சொல்லியிருந்தாலும் இவர்கள் யாருக்காக உரிமை எடுத்துத் தரப்போகிறார்கள் மூளை மந்தமாக்கப்பட்ட இளையோரை உள்ளடக்கிய ஒரு சந்ததிக்கான உரிமையையா எடுத்துத் தரபோகிறார்கள்? நாட்டில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப்பிரச்சனையில் போதைப்பாவனைப் பிரச்சனை மதன்மையாக இருக்கின்றது இந்தப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துக்கட்சிகளும் வேற்றுமை சுயநலம் பாராது மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுத்து இந்தப்போதை அரக்கனிடமிருந்து இலையோரையும் எதிர்காலச்சந்ததிகளையும் காப்பாற்ற வேண்டும் எனும் எண்ணம் இல்லாத தமிழர் அரசியல்வாதிகள் எமக்கான தீர்வுக்காக நேர்மையாகப் பொராடுவார்கள் என எப்படி உறுதிகூறமுடியும். அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனையை வீரியமாக எதிர்கொண்டு போராடி வெற்றிபெற்றால் நீண்டகாலமாக இருக்கும் தமிழர் உரிமைதொடர்பான பிரச்சனைக்கான போராட்டத்தை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான அனுபவம் கிடைக்கும் மாறாக சிங்களம் இவர்களது போராட்டம் வலிமையானது இதனை நாம் தட்டிக்கழிகமுடியாது எனப்பயப்படும் தவிர நாம் கையேந்தி நிற்கிறோமே எமை அழித்த இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது போராட்ட அணுகுமுறைகளுக்கு நேர்மையான முறையில் முகம்கொடுக்கும். அதைவிடுத்து ஒரு கட்சியின் தலைவர் செயலாளர் பதவிக்காக காலை வாரிவுடும் நிகழ்ச்சியில் எப்போதோ இல்லாதொழிக்கப்பட்ட புலிகளை உள் இழுத்து உங்களது வக்கிரத்தை வாந்தி எடுக்காதீர்கள் புலிகள் ஜனநாயக விரோதிகளாக போர்க்குற்றவாளிகளாக இருந்துவிட்டுப்போகட்டும் அத்வே உண்மையாகவும் இருக்கட்டும் சர்வதேச விசாரண என வரும்போது உங்களது ஜனநாஜகத்தின்மீதான கரிசனையை விசாரணை ஆணையத்தின்முன்பு வையுங்கள் அதுவரை அந்தக்குற்றச்சாட்டுகளுக்கான சாட்சிகளைச் சேகரியுங்கள் நிரல்படுத்துங்கள். உண்மை காலம் கடந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.
  6. சில வேளைகளில் இவர்களை நினைத்தால் சிரிப்பாய்த்தான் இருக்கு. பாகிஸ்தானிலிருந்த வந்த ஏ கே 47 ஆயிரம் ரவைகள் அது எப்படியப்பா பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டுப்பகுதியிலிருந்து ஒரு ஈ காக்க கூட உள்நுளையமுடியாது உண்மையும் அதுவே. அப்படி இருக்கையில் எப்படி அது கேரள விளிஞ்சியம் வரைக்கும் பயணம் செய்யுது? சரி அதைவிடவும், விடுதலைப்புலிகள் அமைப்பு சிறு கைத்துப்பாக்கி முதற்கொண்டு கனரக ஆயுதங்கள் வரைக்கும் பெருந்தொகையாகக் கையாண்டவர்கள் அதைவைத்தே அவர்கள் எதிரிகளைத் தோற்கடிக்க முடியவில்லை ஒரேயொரு ஏ கேயை வைத்து இனிமேல் என்ன செய்யப்போகிறார்கள்? இப்போது இலங்கைத்தீவில் வாழும் தமிழர்களுக்கு ஆயுதப்போராட்டத்தின்மீது அறவே நம்பிக்கை இல்லை என இந்தியாவுக்குத் தெரியும் உண்மையும் அதுதான். அப்படி ஒரு ஆயுதப்போராட்டம் வருமாகில் அது ஒன்றும் ஏ கே 47 தூக்கிப்போராடும் போராட்டமாக இருக்காது ஏ ஐ தொழில்நுட்பத்துடனான மிகவும் திறன்வாய்ந்த துல்லியமான போராட்டமாக அது இருக்கும். உதாரணமாக உக்ரைன் நாட்டுடன் சண்டையும்போது ரஸ்யா ஈரானில் தயாரித்த ட்றொணைப் பயன்படுத்தியது ஆனால் அது வினைத்திறன் குறைந்தது அதேவேளை இப்போது உக்ரைன் உள்ளூர் தொழில்நுட்பத்துடனேயே அதைவிட வீரியம் நிறைந்த ட்ரோனைப் பயன்படுத்துகிறது. துல்லியம்கூட ஓரளவுக்கு முன்னேற்றமானதாகும். முள்ளிவாய்க்காலுக்கு சிறிது முன்னைய காலத்தில் புலிகளிடம் இவை கிடைத்திருந்தால் யுத்தத்தின் போக்கே மாறியிருக்கும். ஆக இந்த ஏ கே 47 புலுடாவெல்லாத்தையும் இந்தியா ஏறக்கட்டி வைப்பதைத்தவிர வேறு வழியில்லை.
  7. உங்களுடன் பயணம் செய்த சக தொழிலாழனை நண்பனாக ஏற்று அவரை எங்களுக்கு அறிமுகமாக்கி உருவகம் கொடுத்து இறுதியில் எம்மையும் அவருக்காகப் வேண்டுதல் செய்ய வைத்துவிட்டீர்கள் அவரது ஆன்மா வீடுபேறடைய மனமார வேண்டுகிறேன். யாரோ கண்காணாத ஒருவருக்காக மனங்கலங்கினால் அங்கு மனிதம் வெல்கின்றது என அர்த்தப்படும்.
  8. இந்தப் பெர்யமனிதனுக்கு இது வேணும் காரணம் இவருக்கு 2021 ல விசம் வைத்துச் சாக்கட்டப்பார்த்து ஜேர்மனியில வைத்து வைத்தியம் செய்து காப்பாத்திவிட ஆற்ரையோ கயித்தை விழுங்கிப்போடு ரஸ்யாவுக்குத் திரும்பினால் போய்ச்சேரவேண்டியதுதான். முள்ளிவாய்க்கலுக்குள்ள கடைசிவரைக்கும் முண்டுபிடிச்சுக்கொண்டு நிண்டதா கேள்விப்பட்டன் அது உண்மையாக இருந்தால் அதைப்போலதான் இதுவும். கொஞ்சம் அந்தப்பக்கம் போய் தூர நிண்டு என்ன நடக்குது எண்டு பார்த்தால் இதுகளுக்காகவோ.... என இருவரும் காறித்துப்பியிருப்பினம்.
  9. ஒரு ஆறு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் இருக்கும் ஒருவர் எனக்குக் கூறியிருந்தார் முப்பது இலட்சத்துக்கும் ஐம்பது இலட்சத்துக்கும் இடையில் செலவு செய்தால் சட்டத்தை படிக்காமலேயே படித்ததாக தராதரப் பத்திரம் எடுக்கலாமாம் அதுவும் ஒரிகினலாக. ஆனால் ஒரு விடையம் இவர்களால் நீதிமன்றில் வழக்காடமுடியாதாம் மற்றப்படி உள்ளூருக்குள்ள சில விடையங்களையோ அல்லது சில நிறுவனங்களிலோ வேலை செய்யலாமாம். நானும் இதை முழுதாக நம்பவில்லை அங்கிருந்து சொன்னவரது கருத்துத்தான் அதுக்காக என்னை அட்ச்சுத் துவைக்காதையுங்கோ.
  10. கடந்த காலங்களில் இவர்களது தகிடுதித்தங்களை வெளியே இருந்து விமர்சித்தவண்ணமே இருந்தனர், அவர்களது கருத்தை உண்மையாக்குமாப்போல் செய்யும் சுத்துமாத்தால் இப்போ இவர்கள் நடுத்தெருவில் மானங்கெட்டு நிற்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அவர்கள் ஜனநாயக விரோதிகள் என விமர்சித்துக்கொண்டிருந்த இவர்களே ஒரு ஜனநாயகப் பொதுவெளியில் யாப்பு மற்றும்ம் சட்ட வரையறைகளுக்குள் ஒரு நிர்வாகக்குழுவைத் தெரிவுசெய்யும் விடையத்தில் எந்தவித இங்கிதமும் இல்லாது நடந்துள்ளார்கள். இந்த வழக்கை நீதித்துறைக்கு யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை வெளியே சொல்ல எந்தவொரு வெகுஜன ஊடகத்துக்கும் துணிவில்லை.
  11. நீங்கள் அவலை நினைத்து உரலை இடிக்கிறியள் மதுரா பாலா காலத்துக்கு முன்னதான திரைப்பட நடிகர் மற்றும் பாடகர்கள் பற்றிய வருகை எதுவும் புலிகள் சம்பந்தப்பட்டு இருக்கவில்லை.
  12. வாசே இந்த உத்தி இப்போதும் கையாளப்படுகிறது. கருனாநிதியின் மகன் ஸ்ராலினை அரசியலுக்கு இழுத்துவர மீசா எனும் சட்டத்தில் சிறை சென்றவர் என்பது அப்போது அனைவரையும் வியப்பிலாள்தியது. ஆனால் இப்போ உதயநிதி அரசியலுக்கு வர அப்படியான சிறை செல்லல்கள் உதவாது காரணம் இவர்கள் இப்போது சிறை சென்றாலும் உழ்ழலில் போகிறார்கள் என சமூகவலைத்தளம் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டுடும். அதனால் உதயநிதிக்கு அறிமுகமாக சினிமாக்கவர்ச்சி தேவைப்பட்டது அதையும் இடையில் நயனதாராவுடன் இணைத்து செய்திகள் பரப்பப்ப்டாடது சினிமாக்கவர்ச்சி மற்றும் நெகட்ரீவ் விமர்சனங்கள் ஒன்று சேர்ந்து எதை அவர் விரும்புகிறார்களோ அதன்மூலம் சம்பந்தப்பட்டவர் மிகவும் பரவலாக அறிமுகமாவார். அதேபோல் உதயநிதியது மகன் இரண்டாயிரத்துக் குழந்தை எனும் வகையில் வருகிறார் அவரது எதிர்காலம் அந்த வயது மக்களிடம்தான் என்பதைத் தெரிவுசெய்து அவர்களுக்கு உதயநிதியின் மகனை அறிமுகப்படுத்த.... சமூகவலைத்தளங்களில் வெளிநாட்டில் படிக்கபோன இடத்தில் ஒரு போலந்துக்காரப் பெண்ணுடன் டேட்டிங் செய்கிறார் என பரவலாக செய்தியைச் சிதறடித்து ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டின் இளசுகளுக்கு இதுதான் பேசு பொருள் அதே போன்றதே அன்றாடப் பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போராடாமல் சிந்தனைச்சிதறல்களை மக்கள் மத்தியில் அதுவும் இளம் சந்ததிகளின்மத்தியில் ஏற்படுத்தி ஒரே இடத்தில் கட்டிப்போடுவதே இலக்கை நிர்ணயித்தவனது வேலை. இதில் நாங்கள் கிழடுகட்டைகள் (என்னைத் திட்டாதையுங்கோ இப்போதெல்லாம் முப்பது வயதைக் கடந்த அல்லது அண்மித்த ஆண்கள் எல்லாம் இளம் பெண்களுக்கு அங்கிள்தான்) கடந்தகாலங்களில் இவைகளைக் கடந்துவந்தாலும் யதார்த்தம் எம்மைச் சுட்டதனால் புலம்புகிறோம்.
  13. நடிகை அமலாவை ஐரோப்பியாவுக்குக் கொண்டுவந்தது புலிகள் இல்லை டுசில்டோர் புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஒன்றரை வருடத்துக்கு முன்வரை இருந்த இன்டோ சிலோன் சுப்பர் மார்க்கற் நிர்வாகம்.
  14. "இலங்கையைச் சீரளிக்கும் நிகழ்சித்திட்டத்தின் ஒரு பகுதியே தமன்னாவின் கெட்ட ஆட்டமாகும்." எனது கருத்திடுகையில் இறுதி வரியில் குறிப்பிட்ட விடையத்தைப் புரியாது நீங்கள் இப்படி எழுதியிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. காரணம் யாழ் களத்தில் தர்க்கரீதியாக பல கருத்திடுகைகளுக்கு வாசிப்பவர்களது சந்தேகங்களை அல்லது செய்தியிலுள்ள மயக்கத் தனமையை விளக்கிக் கருத்திடும் உறவுகளில் நீங்களும் ஒருவராவர். ஒருசிலரது நிலைப்பாட்டுகள் உங்களது தர்க்கங்களுக்கு ஒத்துப்போகாதுவிடினும் கருத்திடுகயின் உள்ளடக்கத்திற்கு இன்னுமொரு பார்வையும் உண்டு என புரியவைப்பவர் என்பதானல். இதைத்தவிர இதே விடையத்தில் ஆரம்பத்திலும் நான் கருத்துத் தெரிவித்திருந்தேன் அதில் தமன்னாவது வருகை யாழில் உள்ளவர்களைச் சீரழிச்சுப்போட்டுது எனக் கூறவரவில்லை. நூற்றுக்கணக்கில் தமது உளவாளிகளை இறக்கியும் உள்ளூரில் அனைத்துமட்டத்திலும் எம்மவர் மத்தியிலும் ஊடுருவியும். தமிழ்த்தேசியம் பேசுபவர்களது கடந்தகால தப்புக்களையும் அசிங்கங்களையும் ஆவணப்படுத்தி மிரட்டியும். புதிதாக யாராவது களத்துக்கு வந்தால் அவர்களை தங்கள் வலைக்குள் வளைத்துப்போட்டும் காரியம் சாதிக்கும் தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகூடிய சக்தியுடன் இறுமாப்பாக எழுந்து தங்கள் காரியங்களை நினைத்தமாத்திரத்தில் சாதிக்கும், ஐரோப்பியாவின் உறபத்திப் பொருளாதார வல்லரசான ஜேர்மனியை ஆறாம் இடத்துக்குப் புறம்தள்ளி வலிமையான நாடாகத் திகழும் இந்தியாவுக்கு தமன்னா எனும் ஒரு துருப்புச்சீட்டைத் தவிர வேறெதையும் தேடிப்போகமுடியாது என நான் சொல்லவரவில்லை.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.