Jump to content

கற்பகதரு

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2867
  • Joined

  • Last visited

  • Days Won

    4

கற்பகதரு last won the day on May 11 2020

கற்பகதரு had the most liked content!

Profile Information

  • Gender
    Not Telling

Recent Profile Visitors

7039 profile views

கற்பகதரு's Achievements

Mentor

Mentor (12/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • Posting Machine Rare

Recent Badges

674

Reputation

  1. எனது நினைவு வித்தயாசமாக இருக்கிறதே? மிகுந்த அளவிலன பேரம்பேசலின் பின்னர் ரனில் PTOMS இடைக்கால நிருவாகத்தை ஏற்றுக்கொண்டு சீமேந்தும் தொலைதொடர்பு சாதனங்களும் தமிழீழம் செல்ல அனுமதித்ததும், அந்த வார இறுதியில் சந்திரிக்கா மகிந்தவின் நிர்ப்பந்தத்தில் அதனால் ரனில் அரசை கலைத்ததும், அதை தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்து மகிந்தவை அமோக வெற்றி பெற செய்ததும், அடுத்து வந்த மாவீரர் நாள் செய்தியில் மகிந்த ஏதோசெய்வார் என்ற நம்பிக்கை வெளிப்பட்டதுமே எனது நினைவு.... அறளை பெயர்ந்து விட்டதோ என்ற பயம் வருகிறது. 🤫
  2. சிவராம் என்னிடம் நேரடியாக நீங்கள் சொன்னது போலவே சொன்னார்.
  3. வேண்டாம், சில ஆய்வுகளின் படி, அதிகம் ஓடுவதும் சிலருக்கு முழங்கால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையை உருவாக்குகிறது. நாளுக்கு ஒரு மணித்தியாலம் வேக நடை போங்கள். சோறு, புட்டு, இடியப்பம், பாண் போன்ற அரிசி, மா, தானிய வகை உணவுகளை வாரத்துக்கு ஒருமுறை சிறிய அளவு என்று குறைத்து கொள்ளுங்கள். இரவு ஒரு பழம் மட்டும் சாப்பிட்டு தண்ணீர் குடியங்கள். காலையில் என்ன நிறை என்று நாளும் நெறுத்து பாருங்கள். ஒரு மாதத்துக்கு பிறகு நிறை குறைவதையும், உயர்இரத்த அழுத்தம் குறைவதையும் நன்கு தூங்க முடிவதையும் அவதானிப்பீர்கள். இந்த முறைகளில் இருந்து ஒரு வாரம் தவறினாலும் எல்லா பயனும் இழந்து போய் மீண்டும் நிறை கூடி, நோய்களும் வர தொடங்கும்.
  4. ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கு இன்னமும் விரக்தி, வேதனை எல்லாம் ஆரம்பமாகவில்லையா?
  5. மாற்று வழி மாணிக்கங்களான எங்கள் தீர்வுக்கான பாதைகள் உங்களுக்கு துரோகங்களாக தெரியும் என்று ஏற்கனவே நான் எழுதியிருந்தேன் இல்லையா? ஆகவே அவை பற்றி இந்த களத்தில் கருத்து பரிமாற்றம் சாத்தியமற்றது. மீண்டும், .... இந்தவிதமான சிந்தனை உள்ளவர்களிடம் இருந்து தூர விலகிவிடுவதே என்னை போன்றவர்களுக்கு பாதுகாப்பானது. தனியொருவராக இதனை செய்ய முடியாது. சிலரோடு சேர்ந்து. செய்ய முயன்றாலும் வேகமாகவே துரோகிகளாக காட்டி வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். ஆகவே நானும் என்னை போன்ற தீர்வுக்கான பாதை தெரிந்த பலரும் ஒதுங்கி இருக்கிறோம். இந்த மாற்றுவழிகளை பற்றி சிந்தித்து பார்க்க வேண்டும் என்று உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் ஈழத்தமிழரின் பொதுசன தொடர்புசாதனங்களையும் சமுக இணையங்களையும் மக்கள் அமைப்புக்களையும் தமது ஆதிக்கத்துள் வைத்திருப்பவர்கள் இவ்வாறாக புதியதொரு பிறப்புக்கு உண்மையாக மனச்சுத்தத்துடன் முயற்சிக்க வேண்டும். முன்னர் ஈழத்தமிழரின் நிலை பற்றி சர்வதேச மாநாடுகள் நடந்தன. இப்போதும் சில இணையவழி கலந்துரையாடல்கள் நடக்கின்றன. மாற்று தீர்வுகள், மாற்று வழிகள் பற்றி இவை போன்ற கலந்துரையாடல்கள் நேர்மையுடனும் உண்மையாகவே மாற்றுவழிகளையும் மாற்று தீர்வுகளையும் காணும் நோக்கத்துடனும் இடம் பெற வேண்டும். இவற்றை ஏற்பாடு செய்யுங்கள், அங்கே சந்திக்கலாம். விலை கொடுத்து பெறாதவற்றின் பெறுமதிக்கு நாம் மதிப்பு கொடுப்பது குறைவு. மாவீரர் நாள் நிகழ்வு முடிய மண்டபம் நிறைந்த மக்கள் வெளியேறும் போது இலவசமாக கொடுக்கப்பட்ட தேசிய தலைவரின் படம் இருந்த வெளீயீட்டின் பிரதிகள் மண்டபத்தின் தரை எங்கும் சிதறியிருக்க, அவரின் முகத்தை ஏறி மிதித்துக் கொண்டு வெளியேறும் மக்களை கண்டு சகிக்க முடியாமல் அவர்களை ஏசி விரட்டிவிட்டு அந்த படங்களை எடுத்து மேசைமீது அடுக்கி வைத்த எனக்கு இலவசத்தின் பெறுமதி தெரியும். இத்தனைக்கும் இதே தேசியத்தலைவரே முள்ளிவாய்க்காலில் எனது உறவுகள் பலியானதுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியதும் நானே. இலவசமாக கொடுத்தால் என்னையும் எல்லோரும் ஏறி மிதித்துக் கொண்டு போவார்கள் என்று தெரியும். ஆகவே இலவசமாக கொடுப்பதற்கு நான் அவரல்ல.
  6. இப்படி எழுதும் நீங்கள் எக்கேடு கெட்டாலும் நமக்கென்ன குறைவு என்று ஒதுங்கி போவதே சிறப்பு. வன்முறை அல்லது உண்ணாவிரதம் தவிர வேறு எதை பற்றி பேசுபவர்களுக்கும் இங்கே இடம் இல்லை. அப்படியான கருத்துகளை கொண்டிருப்பவர்களை துரோகிகளாக பார்ப்பது ஈழத்தமிழரின் வழக்கம். ஆகவே உங்களுக்கு எஞ்சியுருப்பது: உங்களுக்கு தெரியவே தெரியாது. அதற்கு காரணம் நீங்கள் பார்க்க விரும்பாததே. வேறெதுவும் இல்லை.
  7. நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றின்படி உலகமும் இயற்கையும் இயங்குவதில்லை. மாறாக, இலாபம், சுயநலம், பொதுநலம், கூட்டுநலம் ஆகியவற்றின்படியே உலகமும் இயற்கையும் இயங்குகின்றன. இந்த உண்மையை புரிந்து கொண்டு, ஒவ்வொரு கணமும் இவற்றை மனதில் நிறுத்திக்கொண்டு, அடிப்படை தேவைகளில் இருந்து மீண்டும் ஆரம்பித்து, புதியதொரு தீர்வையும் அதை அடைய புதிய வழிமுறைகளையும் தேடுங்கள் - விடிவு கிடைக்கும்.
  8. 1. இலங்கையில் உண்மையான பிரச்சினை வல்லரசுகளின் ஆதிக்க போட்டி. 2. பலியானது பெருமளவில் தமிழரும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது பெருமளவில் சிங்களவரும். 3. தமிழரும் சிங்களவரும் எதிரெதிராக உள்ளவரை தீர்வு இல்லை - அழிவுதான்.
  9. இந்த பப்பாசி காயால் யாழ். பல்கலைக்கழகத்தில் படித்து பின்னர் விரிவுரையாளராக இருந்த செந்தில்மோகன் உலகப்புகழ் பெற்றார். பிரித்தானியாவிலும் கிறீஸ்தவ ஐரோப்பிய உலகிலும் கருக்கலைப்புக்கு மருத்துவ காரணம் இல்லாவிட்டால் அனுமதி இல்லை. செந்தில்மோகன் கலாநிதி பட்டத்துக்காக தேர்ந்து கொண்ட ஆய்வு, பப்பாக்காயில் உள்ள இரசாயனங்கள் எப்படி கருக்கலைப்புக்கு உதவுகின்றன என்பதாகும். இவரது ஆய்வின் முடிவு பகிரங்கமானதும் உலகப்புகழ் பெற்றார்.
  10. எனக்கு பிடித்த சுவாமிகள் ராஜ்நீஷ். பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தவர். அவரது ஆசிரமங்கள் இப்போதும் OSHO International Meditation Resort என்ற பெயரில் இயங்கி வருகின்றன.
  11. எனது பெயரை கற்பகதரு மாற்றி விடுவீர்களா? நன்றி
  12. இலங்கையில் வாங்க விரும்புபவர்கள் “புள் தோசி” என்று கேட்டு முயற்சிக்கலாம். ”தனக்கடா சிங்களம், தன் புறடிக்கு சேதம்” என்பது நானறிந்த துளியளவும் கலப்படம் இல்லாத முற்றிலும் ஈழத்தில் உருவான தனித்துவமான ஒரேஒரு பழமொழி. 😃
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.