மல்லிகை வாசம்

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  793
 • Joined

 • Last visited

Community Reputation

14 Neutral

1 Follower

About மல்லிகை வாசம்

 • Rank
  இணையத் தோழன்
 • Birthday August 9

Contact Methods

 • Website URL
  mallikaiv.blogspot.com.au
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  மல்லிகை, பூந்தோட்டம்
 • Interests
  தமிழிசை, மெல்லிசை, புத்தகங்கள், எழுத்து

Recent Profile Visitors

3,001 profile views
 1. கலை நயம் பாதி மெய்யறிவு பாதி கலந்து செய்த கலவை நீ. நாத்திக மொழியில் நீ பேசினாலும் - அதில் ஆன்மிக உணர்வு கொண்டேன் நான். நடிப்புக்கு இலக்கணம் நீ என்பர் - அன்பு மனிதத்துக்கு இலக்கணமும் நீ என்பேன் பரந்த அறிவாற்றல், தூரநோக்குப் பார்வை, சீரிய சிந்தனை தொனிக்கும் உன் வீரியப் பேச்சு. சமூகப் பிரச்சினைகளின் ஆழம் அறிந்தோன்; சிக்கல்கள் நீக்க அதுவே வழி என்பான். தமிழின் அழகை உன் வாய் மொழி மொழியும்! கலையின் வனப்பை, புதுமையின் பொலிவை கமலின் ஆளுமையை அவன் படைப்புகள் பேசும்!
 2. கருத்துக்கும், என்றென்றும் வாழ்த்திடும் உள்ளத்துக்கும் நன்றிகள், சுவி அண்ணா
 3. மிக்க நன்றி தமிழ் சிறி. அடிக்கடி இங்கு வருவதுண்டு. வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்வேன். இனிமேல் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகத் தொடர்ந்தும் எழுதுவேன்.
 4. விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம் எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்; மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்; திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்; தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம் உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு! *** எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும் முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும் அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும் ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்! *** எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி. வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன் எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில; கணந்தொறும் இவ்வுலகில் தேவைகளும் கணக்கில. உள்ளத்தே உதித்த வண்ணக் கலவைகளை அள்ளித் தெளித்திடு அன்புடன் நாள்தொறும்! வையகமும் வளமாய் வண்ணப் பொலிவுறும்! - மனம் எல்லையில்லாக் களிப்பினில் வானத்தே பறந்திடும்!
 5. பெண்களுக்கு மட்டுமல்ல, குறுகிய வட்டத்திற்குள்ளேயே ஒடுங்கியிருக்காமல் முன்னேறத்துடிக்கும் எவருக்கும் புது உத்வேகம் கொடுக்கக்கூடிய ஒரு திரைப்படம். ஜோதிகாவின் முன்னைய படங்களைவிட இப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் பிடித்திருந்தது.
 6. கருநிறக் கூந்தலில் இளநரை தோன்றிட, நிறைவேறாக் கனவுகளின் நிறமும் மங்கிடுமா? இல்லற வாழ்வில் தனைச் சார்ந்த உறவுகளின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியுமாக் கொண்டவளின் தியாகங்களை அவ்வுறவுகள் தான் மதித்திடுமா? இல்லை அவை மிதிக்கப்படுமா? வாழ்வின் பருவமாற்றங்களுடன் வளர்ந்து விருட்சமான இலட்சியக்கனவுகள், நடுத்தரப்படுவம் நெருங்கிடும் காலந்தனிலும் வெறும் விதைகளாகவே வீணடிக்கப்படுமா? ஒவ்வோர் மனிதனுக்குள்ளும் இருக்கும் ஒர் தனி ஆற்றல்; தனது எது என்று இவள் என்று உணர்வாள்? எவர் இவளுக்கு உணர்விப்பர், ஊக்குவிப்பர்? தன் ஆற்றல் கண்டறிந்து, பற்றுடனும்,உறுதியுடனும் வீறுநடை போடு பெண்ணே! ஏற்றமுறும் உன் வாழ்வு! உனைப் போற்றிடும் உன் சுற்றம்! விதை விருட்சமாகித் தூற்றியோருக்கும் நிழல் தரும்!
 7. கள உறவு அஞ்சரனுக்கும், இப்பெண் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இத்துயரத்தைத் தாங்கும் மன வலிமையை இறைவன் உங்களுக்கு அளிக்கட்டும்.
 8. என்னையும் நினைவில் வைத்து இங்கு குறிப்பிட்டமைக்கு நன்றிகள் முனிவர்ஜீ. மல்லிகையின் தனித்துவமான வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும். புலம்பெயர்ந்து வெளிநாடு வந்த புதிதில் (2003ல்) அச்சிறு நகரத்தில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்திற்கான செய்திமடல் ஒன்றில் எழுதிய கவிதைக்காக உருவாக்கிய புனை பெயர் இது. அதன் பின்னர் பல காலங்களாக உபயோகிக்கப்படாமல் இருந்த இப்புனை பெயருக்கு வாசம் கொடுத்தது யாழ் களம் தான். எனது எனது பள்ளி ஆசிரியர் ஒருவர் மல்லிகை மைந்தன் என்ற புனை பெயரில் ஆக்கங்கள் எழுதி வந்தார். அப்பெயரின் பாதிப்பாகவும் இருக்கலாம்.
 9. 'இப்படி ஒவ்வொரு பண்டிகை நாளிலும், இதைக் கொண்டாடுவது அவசியம் தானா?' 'இது தமிழர் விழாவா?' என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். இப்படி பல ஆயிரம், ஏன் மில்லியன் ஆண்டுகள் கூடப் பின்னோக்கி ஆராய்ந்து கொண்டே போகலாம். என்ன ஒன்று, ஆபிரிக்கக் குரங்குகள் என்ன பண்டிகை கொண்டாடின என்று எல்லாம் ஆராய வேண்டி இருக்கும். நாம் கொண்டாடுவதற்கு ஒரு பண்டிகையும் இருக்காது.
 10. http://www.youtube.com/watch?v=Ki6eRyGVWZY http://www.youtube.com/watch?v=dLV-ufP4k9A
 11. கருத்துக்கு நன்றி, புத்தன்
 12. என் மனதில் எழுந்த சில கசப்பான எண்ணங்களை பதிய வேண்டும் என எனது உள்ளுணர்வு கூறியது. அதன் விளைவே இக்கவிதை. "மனிதனின் மனிதத்தை மதிக்க மறந்து - கொண்ட பொருளினால் அவன் மதிப்பைக் கணித்தேன்" <<< இது நான் பார்த்த சில மனிதர்களின் நடத்தை மீதான வெறுப்பினால் தோன்றிய வரி. கருத்துக்கு நன்றிகள் மைத்திரேயி அக்கா புலம் பெயர்ந்தாலும் எங்கள் ஒவ்வொருவரினதும் தனித்துவத்தை, விழுமியங்களை நாங்கள் இழக்கத்தான் வேண்டுமா? அப்படி ஒரு வாழ்க்கை தேவை தானா? இப்படியான கேள்விகள் என் மனதில் அடிக்கடி எழுவதை தவிர்க்க முடியவில்லை. கருத்துக்கு நன்றி உடையார் அண்ணா நன்றி விழி அண்ணா