Jump to content

தனிக்காட்டு ராஜா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9910
  • Joined

  • Last visited

  • Days Won

    38

Everything posted by தனிக்காட்டு ராஜா

  1. நான் துபாயில் இருக்கும் போது மூட்டைப்பூச்சி, கரப்பான் பூச்சி இவற்றின் தொல்லை தாங்க முடியாமல் வேலை இடத்தில் உறங்கிய சம்பவமும் உண்டு மூட்டைப்பூச்சி சட்டையில் இருந்ததால் கம்பனியின் கான்ரக்ட் கேன்சல் ஆனது ஒரு தடவை அது வாங்காளிகள் சட்டையில் சும்மாவே குளிக்க மாட்டாங்கள் குளிர் வந்தால் கேட் கவா வேண்டும் நம்ம சனம் எங்க ஒத்துக்குவாங்க வரட்டும்பொறுமை காப்போம்
  2. பிரான்ஸ் சனம் ஒன்றூம் வாயை தொறக்கல்ல மூட்டைப்பூச்சிக்கு @suvy😷
  3. முகநூலிலும் பரப்பி விட்டு இருக்கிறானுகள் என்னத்த சொல்ல
  4. இந்த நாடு உருப்படாது என்பதற்கு இதை விட வேற என்ன சொல்ல முடியும் முஸ்லீம்களையும் , சிங்களவர்களையும் , தமிழர்களையும் சண்டைக்குள் இழுக்கும் செயலையே இந்த மனுசன் செய்து வருது
  5. முடிஞ்சால் வந்து இலங்கையில வம்பு இழுத்து பாருங்க பின்ன தெரியும் எத்தனை சாதி எத்தனை வசை சொல் வந்து காதில் பாயுமென
  6. இப்பெல்லாம் கடவுள் இருந்தால் நல்லது என்று யோசிக்க தோன்றுகிறது.
  7. நன்றி சபேஸ் அண்ணை சிரித்து விட்டு கடந்து போவதுதான் சாமியார் பழகிடுச்சி மிக்க நன்றி அண்ணை நன்றி ஏராளன் அனுபவங்கள் என்னை ஏதோ ஒரு வகையில் முழுமையாக்கிறது என்று சொல்லலாம் எது வந்தாலும் வாழ்க்கையில் பழகப்பட்டுவிடுகிறது
  8. விலகி போனாலும் விட மாட்டியள் போல தொடரட்டும் மார்ட்டீன் எங்க போனான்
  9. அதில் மாற்று கருத்து இல்லை முந்தய காலங்களில் உட் சுத்தம் பெண்கள் செய்ய ஆண்கள் வெளிச்சுத்தம் செய்வார்கள் பாடசாலையில் இப்ப வகுப்பறை கூட கூட்ட விடுவதில்லை பெற்றோர் பிள்ளைகளை பிறகு எப்படி பிள்ளை வேலை பழகும். எப்போது வளைக்க முடியும் பாடசாலையில் என்ன செய்தாலும் மனித உரிமை மீறல் ஆப்பிசர் வந்துவிடுகிறார் ஆனால் பல லச்சம் பேர் பாதிக்கப்பட்ட போது பாயில சுருண்டு படுத்திருந்திருப்பார் போல
  10. யாழுக்கு கடன் பட்டவனாக யாழ் இயங்காமல் போய்விடக்கூடாது என்பதற்க்காக பள்ளி நேரங்களில் கூட எழுதியது உங்களுக்கும் என்னை தூண்டியது நீங்களும் ஒருவர் நன்றி அண்ண மிக்க நன்றி
  11. எனது அம்மாவை யாழ்வைத்தியசாலையில் இதய நோய் பிரிவில் சேர்த்த போது ஒரு பெண்மணி வந்தார் அவர் அதிகமாக கிளிகள் வளர்த்திருந்ததால் மூச்செடுக்க சிரமமாக உள்ளது என அவருக்கும் இதே போல பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்
  12. எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன் காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . வேலையிடத்தில் எனது உயரதிகாரியை சந்தித்து எனக்கு பயணம், சாப்பாட்டு செலவு அதிகமாகிறது என்னால் வேலைக்கு ஒழுங்காகவும்,குடும்ப சூழ்நிலை காரணமாகவும் நேரத்துக்கும் வரமுடியாமல் உள்ளது என்னை நீங்கள் வேறு பாடசாலைக்கு விடுவித்தால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என சொல்ல அவர் விடுதலை தர மறுத்துவிட்டார். காரணம் அதிக வேலைகளை இழுத்துப்போட்டு செய்த காரணத்தால் மாறுதல் எடுக்கவும் முடியவில்லை தினம் தினம் தலைக்கவசத்துடன் நிற்பேன் யாராவது என்னை ஏற்றிக்கொண்டு போவார்கள் என‌. அன்றைய நாள் நானும் கையை காட்ட‌ ஒருவர் ஏற்றினார் ஏற்றிய அவர் என்னை நியாபகம் இருக்கா என அவர் கேட்க? இல்லையென நான் சொல்ல அவரோ நீங்கள் என்னை ஒரு நாள் ஏற்றி சென்று இருக்குறீங்க என அவர் சொல்ல ம் இருக்கலாம் (நாம் செய்யும் நல்லது எங்கோ ஓர் இடத்தில் நாம் அவதியுறும் போது அது வந்து சேரும்) நான் தனியே போகும் யாரும் தலைக்கவத்துடன் நின்றால் ஏற்றிப் போவ‌து ஏற்றிச்செல்வது வழமை என்றேன். ம் தற்போது பலர் செல்வார்கள் ஆனால் ஏற்றுவதில்லை அதற்கு காரணமும் உண்டு சிலர் தனியே நின்று ஏறி யாரும் அற்ற இடத்தில் இறங்குவதாக சொல்லி கத்தியை காட்டி கொள்ளை அடிச்ச சம்பவங்கள், மற்றது போதைப்பொருள் கடத்திய சம்பவங்களும் நடந்ததால் யாரும் ஏற்றிச்செல்வதில்லை என்றேன். நீங்க எங்க போகணும் தம்பி? அண்ண கல்முனைக்கு போகணும் சரி ஏறுங்க எங்க வேலை செய்யறீங்க பாடசாலையில் வேலை செய்கிறன் அப்படியா சொந்த இடம் எது? என் ஊரை நான் சொல்ல‌ அப்படியானால் நீங்கள் எடுக்கும் சம்பளம் பஸ்ஸுக்கும் சாப்பாட்டுக்கும் செலவாக‌ போயிடுமே தம்பி என கேட்டார் ஓம் அண்ணன் இப்படித்தான் போகிறது என நானும் சொல்ல காத்தான்குடி வருகிறது அங்கே அண்ணை மிக கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள் இங்கே மனித எருமை மாடுகள மிக அதிகமாக குறுக்காக பாய்ந்து பாதையை கடந்து செல்லும் என நான் சொல்ல அவர் சிரிக்கிறார். என்ன உங்க குரல் சத்தமே வருகுதில்ல போங்க காரணத்தை சொல்கிறேன் என நானும் சொல்ல‌ நீங்கள் எங்க வேலை செய்கிறீர்கள் என்று கேட்க அவரோ நான் மிதிவெடிகளை அகற்றும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என சொன்னார் அப்போது மிதிவெடி மிகவும் பயங்கரமானதாக இருக்குமே நான் கேட்க லேசான மழைதூறல் வேற வாகனம் புதுக்குடியிருப்பை அடைகிறது .................. புது குடியிருப்பு பகுதி சன நடமாட்டம் குறைவான பகுதி ஆங்காங்கே சிலசில ஓலை குடிசைகள் இருக்கும் அங்கே இருக்கும் மக்கள் சீசனுக்கு ஏற்றால் போல் முந்திரிகை , நாவல் பழம் , சோளன் அவித்து பாதையோரம் விற்பது வழமை மழையும் அதிகரிக்க‌ நாங்களும் ஒரு ஓலை குடிசை நோக்கி ஒதுங்க அங்கே அம்மா மழையில் நனைந்து கொடுகி நின்றா சோள‌ன் இருக்கிறதா? ஓம் மகன் இருக்கு எங்கள் இருவருக்கும் தாருங்கள் எனச் சொல்ல அவர் சோளனை அடுப்பில் இருந்து எடுத்து இருவருக்கும் தருகிறார் இருவரும் மெதுவாக கதைத்துக் கொண்டிருக்கும் போது மின்னல் வெட்ட‌ இடியும் காதை பிளந்து கொண்டிருந்தது. அப்போது அந்த சிறுவனை நான் காண டேய் தம்பி இங்க வாடா என நான் கூப்பிட அவன் ஓடுகிறான் பின்னங்கால் *** அடிபட ஏன் தம்பி அவன் உங்கள காண ஓடுகிறான் என அந்த அம்மாவும் என்னை ஏற்றி வந்த அண்ணரும் கேட்க நான் வெட்ட எடுத்த கோழி போல‌கத்துர குரல் இவனாலதான் வந்தது என நான் சொல்ல என்ன நடந்தது என இருவரும் கேட்க ஒரு கிழமைக்கு முன்னன் நான் நல்லா கேட்டுத்தான் இவனிட்ட நாவல் பழம் வாங்கினன் பாவி பழம் பழுக்க சுண்ணாம்பு தண்ணி தெளிச்சிருக்கான் போல அத சாப்பிட்ட நாளில் இருந்து தொண்டை இப்படி இருக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை மூணு நாளைக்கு முன்னம் எல்லாம் கைப்பாசைதான் என சொல்ல இருவரும் சிரிக்கின்றனர். அந்த அம்மாவோ தம்பி இவங்க வாகரையிலிருந்து பழம் எடுத்து விற்கிறவங்கள் நீங்கள் யோசிக்கலையா முழுப்பழமும் மொத்தமாக பழுத்த்திருக்குமா என ? ஓம் அம்மா அது தெரிஞ்சுதான் கேட்டன் பல வருசமா இந்த ரோட்டால போய்வாரதால எனக்கு நல்ல அனுபவம் இவங்க கிட்ட என நானும் சொல்ல சோளம் கதையோடு கதையாக முடிந்து விட்டது இன்னுமொரு சோளனை தாங்கள் இருவரும் எடுக்கிறோம். ஏன் அண்ண‌ நீங்கள் இன்றைக்கு வேலைக்கு லீவா என நான் கேட்க இல்ல தம்பி நான் வேலையை விட்டு எழுதிக்கொடுத்து விட்டு வருகிறேன் வேலையை முற்றாக விட்டு வருகிறேன் என்று அவர் சொன்னார். ஏன் என்ன காரணம்? தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் மிக கஷ்டமே வேலையில்லாதது நானும் கேட்க ம்ம்ம் தம்பி நேற்றைய நாள் வேலை செய்திருக்கும்போது நண்பர் ஒருவர் மிதிவெடியில் தனது காலை வைத்து இழந்து விட்டார் அதனால் நானும் பல வருடமாக வேலை செய்கிறேன் நேற்றைய சம்பவம் என்னை மிகவும் பாதித்தது அதனால் வேலையை விட்டு விலகுகிறேன் என்றார் அவர் ...........ம்ம்ம் திருமணம் ஆகிவிட்டதா? இல்லை ஏன் கட்டவில்லை நாளைக்கும் எனக்கும் இந்த நிலை வந்தால் என்ன செய்வது?? பதில் சொல்ல முடியாமல் நானும் ஏன் அவர் பயிற்ச்சிகள் எடுக்கவில்லையாயென நானும் கேட்க புதுசாக புதுசாக வேலையில்லா திண்டாட்டத்தில் நிறைய பேர் வந்து இணைகிறார்கள் எங்களுக்கு சுமார் ஒரு வருட காலம் பயிற்ச்சி தந்தார்கள் தற்பொழுது நிறைய பேர் பூரணமாக பயிற்சி பெறுவதில்லை வேலையென‌ வந்து இணைகிறார்கள் தற்போது மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அகற்றுவது சிரமம் என்றார் நாங்கள் வேலை செய்து துப்பரவாக்கிய பகுதியில் தான் அந்த வெடி வெடித்தது நாங்கள் அகற்றிய பகுதியில் மழை நீர் ஒடியதால் அதிலிருந்த வெடி ஒன்றே நீரோட்டத்தில் வந்து மண் மூடி இருந்து அது ஒருவருக்குமே தெரியவில்லை வெளியாக்கிய பகுதியென நினைத்து மீண்டும் அகற்ற செல்லும் போதே வெடித்தது என அவர் சொல்ல மனம் கனத்தது. பாவம் அவரும் குடும்பஸ்த்தர் இரு குழந்தைகள் உள்ளது ஒரு நாளைக்கு 20 மீற்றர் நிலம் கூட அகற்ற முடியாமல் விதைத்து வைத்திருக்கிறார்கள் நான் கூட ஒருதரம் சிக்கினேன் அது மிகப்பழையது வெடிக்கவில்லை தப்பித்துவிட்டேன் என அவர் காலைப்பார்க்கிறார் முழங்கால் தொடக்கம் தேய்ந்து இருந்தது சரி அண்ண மழை ஓய்கிறது வாருங்கள் போவோம் என நான் சொல்ல அந்த கடைகார அம்மாவோ கவனம் மனே பார்த்து போங்கள் ரோட்டு முழுக்க தண்ணியாக் கிடக்கு என சொல்ல நீங்களும் நனையாமல் போங்க இருட்டுகிறது என காசைக்கொடுக்கிறேன் அவவோ முழுக்க நனைந்திருந்தார் மழை நின்றாலும் தூவானம் எம்மவர்க்கு அடித்துக்கொண்டே இருக்கும் ..................................
  13. இன்னும் கொஞ்சம் விவரிக்கலாம் என் இருந்தன் மிக நீண்டதாகிவிடும் என்பதால் சுருக்கி விட்டேன் அண்ண உங்கள் ஊக்கம்தான் மிக்க நன்றியும் நீங்கள் ஆலமரம் நான் அதன் கீழுள்ள அறுகு மரம் அவரையும் இணைக்கலாம் என இருந்தன் இன்னும் நீண்டுகொண்டு போகும் என்பதால் இணைக்கவில்லை கருத்துக்கு மிக்க நன்றி அக்கா பல பாகம் இருக்கிறது அக்கா தொடரமுடியாது போல் உள்ளது பார்ப்போம் மிக்க நன்றி பாலர் எங்கள் ஊரில் அந்தக்காலம் பொலிசுக்கு போவதில்லை ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சென்றவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் சுட்டதும் நம்ம பொடியங்கள்தான் இறந்ததும் நம்ம ஆட் கள்தான் முதலில் கடிதம் அனுப்புவார்கள் விலகச்சொல்லி விலகாவிட்டால் வெடி தான் நன்றிஉங்கள் அனுபவ பகிர்வுக்கும் மிக்க நன்றி சபேஸ் பொழுது போக்குக்கு சும்மா எழுதியது அக்காவுக்கும் நன்றி உங்கள் ஊக்கம் தான் அக்கா என்னை இன்னும் எழுத தோன்றியது அடுத்த இறுதிகிறுக்கல் தூவானம் அதன் பின்னர் ஓர் இடைவெளி மீண்டும் சில காலம் கழிந்த பின் களத்தில் சந்திக்கலாம்
  14. உரிய முறையில் கழிவ;கற்றல் நடைபெறாமல் இருக்கும் வேளைகளில் கூட இது பற்றி அறிவித்திருக்கலாம் படிச்ச பெரிய மனிசரே ஆயிரம் பிழைகள் செய்யும் போது படிக்கும் பிள்ளைகள் செய்யும் வேலை நாம் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை நாமும் கடந்து வந்தவர்களே ஆண்கள் பாடசாலைகளில் பாத்றூம்களில் இருக்கும் பெண் நிர்வாணச்சித்திரத்திரத்திற்கு அடிக்க வாளிக்கணக்கில் பெயிண்ட் வாங்குவார்கள் அதற்கு அடிக்க என்றால் பாருங்கோவன்
  15. இது நாங்கள் நாள் தோறும் பார்க்கிறது அண்ண இப்ப புறாக்கள் , நாய் பூனை , வராத வண்ணம் இரும்பு வலை கதவுகள் அடிச்சு க ஏறும் படிகளுக்கு கதவு போல இட்டிருக்கிறார்கள் உதாரணமாக நாய் மலம் போனால் அதை சுத்தப்படுத்தி கழுவிக்கொண்டு வர 2 பாடங்கள் அடிபட்டு விடும் மற்ற வகுப்பறைக்கும் தண்ணி சென்றால்? அதுவே 3ம் மாடியாக இருந்தால் இங்க கம்பு சுத்துற ஆக்களுக்கு அவல் என நினைச்சு உரல இடிக்கிறதுதான் மிச்சம்
  16. அவளது நண்பியை பார்க்க சென்றால் அவள் பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டாள் பல்கலைக்கழகத்திற்கு சென்று இது உங்கள் மோட்டார் சைக்கிள் நம்பரா? ஓம் என்றாள் அவள் இதை இறந்து போன இசுறிகா எடுத்துப்போயிருக்காவா? ... ம் அவளும் யோசித்து விட்டு ஓம் ஒரு நாள் எடுத்துப்போனவள் அவங்க வீட்டுக்கு கெல்மட் போட்டிருந்தவவா? இல்ல அன்றைக்கு பக்கத்துலதான் வீடு என எடுத்திட்டு போனவள் ஓ சரி பொலிஸ் பிடிச்ச என்று ஏதேனும் சொன்னவவா? இல்ல அப்படி ஒன்றும் சொல்லல சேர் சரி நாங்க திரும்ப தேவைப்பட்டால் கூப்பிட்டுவம் சரி என அவளும் செல்லிவிட்டு போகிறாள். மீண்டும் பொலிஸ் நிலையம் வந்து த‌ண்டப்பணம் கொடுத்த பொலிஸ் உஸ்த்தியோகத்தர் யார்? என பார்த்தால் முனசிங்க ஆவார் அவரா இருக்குமோ? என ஊகிக்க தொடங்க தண்டப்பணம் விதித்த அவர் ஏன் அவளது சாரதி அனுபதிப்பத்திரத்தை இங்கு சமர்பிக்கவில்லை என யோசிக்க தொடங்கி அதை வைத்து அவளை மிரட்டி இருப்பாரோ? என அவரை சந்தேகப்பட ஆரம்பமானோம் அவளுக்கு குறுந்தகவல் அனுப்பிய அந்த முகநூல் கணக்கு வேற முடக்கப்பட்டதால் இசுரிகாவின் வீட்டு சென்று உங்கள் மகளின் மடிக்கணணியை நாங்கள் பரிசோதிக்க வேண்டும் ஆனால் யார் வந்து கேட்டாலும் அதைப்பற்றி சொல்லவும் கூடாது என சொல்லிவிட்டு அதைக்கொண்டு செல்கிறோம் எங்களது ஓய்வறையில் அதை வைத்து அவளது முகநூலை எங்களது தொலை பேசியில் மாற்றி எடுத்துக்கொள்கிறோம். இரு நாட்களின் பின்னர் முனசிங்க ஐயாவின் முகநூலை பார்க்கிறோம் அவருக்கு கணக்கு இல்லையென‌ முகநூல் காட்டுகிறது சமந்த சொல்கிறான் ஆரம்பத்தில் இந்தாளுக்கு இருந்தது நான் பார்த்திருக்கிறேன் என்றான் சந்தேகம் இன்னும் வலுக்க அவளுடை தொலைபேசி இலக்கம் ஏற்கனவே எங்களிடம் இருந்ததால் அவளின் இலக்கத்தில் சிம் ஒன்றை பெற்றுக்கொள்கிறோம் அடுத்த நாள் காலை முனசிங்க ஐயாவுக்கு சமந்த கோல் எடுக்கிறான் பொலிஸ் நிலையத்தி இருந்தே ஹலோ முனசிங்க நீ அடிச்சு தூக்கி மலைக்கு கொண்டு போன 3 பெண்களின் வீடியோ என்னிடம் இருக்கு இப்ப விசாரணை செய்யுற அந்த பொலிஸ்க்காரரிட்ட கொடுக்கப்போறம் என சொல்லிவிட அவர் யார்ர? நீ உனக்கு என்ன வேணும் எவ்வளவு காசு வேணூம் அந்த வீடியோவ கொடு காசு தருகிறேன் கண்டு பிடிச்சன் என்றால் சுட்டுவிடுவேன் உன்னை என்று மிரட்டுகிறார் அவர் நாங்களோ அப்ப சரி நாங்கள் முகநூலில் அப்டேட் பண்ணுகிறோம் என சொல்லி அந்த போணை ஓவ் செய்தோம். முனசிங்க ஐயா ஓடி வருகிறார் வேருத்து விறுவிறுத்துக்கொண்டு வருகிறார் நாங்களும் எதுவும் தெரியாத மாதிரி பொலிஸ் நிலையத்தில் இருந்தோம் வந்த அவர் உள்ளே போனவர் வரவில்லை கொஞ்ச நேரம் கழிந்த பின் வருகிறார் நாங்களும் என்ன சேர் எதுவும் பிரச்சினையா? என கேட்க இல்லையென சொல்லிவிட்டு பதட்டத்துடன் போகிறார் நாங்களும் உள்ள சென்று என்ன ஐயா வந்தவர்? என கேட்க ஒரு போண் நம்பரைக்கொடுத்து யார் என கண்டு பிடிக்க சொன்னவர் நாங்களும் சிம் காட் யார்ல பேருல இருக்கு சொல்ல கேட்டுவிட்டு போகிறார் என உள்ள உள்ளவர்கள் சொல்ல ஓ அப்படியா என கேட்டுவிட்டு உயரதிகரியான எங்கள் நிலைய பொறுப்பதிகாரிய சந்திக்க போகிறோம் கேஸ் என்ன மாதிரி போகிறது என அவர் கேட்க முனசிங்க ஐயாவ எடுத்து விசாரிக்க உத்தரவு தரவேண்டும் என கேட்க ஏன் என்ன பிரச்சினை என கேட்க அவர்தான் அந்த பிள்ளையை கொலை செய்திருக்கிறார் என சொல்ல அவர் செஞ்சிருக்க மாட்டார் அவரை எடுத்து விசாரிக்க உயர் இடத்திடம் அனுமதி பெறவேண்டும் நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டும் என சொல்கிறார் உயரதிகாரி .சேகரித்த சான்றுகளை நாங்கள் காண்பிக்க நீங்கள் நீதிபதியிடம் அனுமதி வாங்கி வாருங்கள் என சொல்கிறார் உயரதிகாரி நாங்கள் நீதிபதியிடம் அனுமதி வாங்க நீதிமன்றம் செல்கிறோம் அப்போது தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கிறது அப்போது முனசிங்க துப்பாக்கி பிரயோகத்தில் இறந்துள்ளார் என்ற செய்தி எங்களுக்கு வருகிறது. நீதிபதியிடம் சென்று அதே ஆதாரங்களை எல்லாம் காண்பிக்க அவரோ இதை இத்தோடு விடுங்கள் கொலைக்குற்றாவாளி அவரே தற்கொலை செய்துள்ளாராம் என சொல்கிறார் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைபோல ஆகிவிட்டது ஏற்கனவே பொலிசுக்கு கெட்ட பெயர் இதையும் மக்களிடம் சொன்னால் பொங்கி விடுவார்கள் எதற்க்காக கொலை செய்திருக்கிறார்? எல்லாம் பாலியல் லஞ்சம் தான் ஐயா என சொல்கிறோம் சரி நீங்கள் போங்கள் நாங்களும் பொலிஸ் நிலையம் வந்து அவளது கணணியை அவள் பெற்றோரிடம் கொடுத்து விட்டு அவள் தற்கொலைதான் அம்மா செய்திருக்கிறாள் உண்மையை கண்டு பிடித்தால் உங்கள் பெண்ணை இந்த ஊட காரர்கள் விற்று விடுவார்கள் என சொல்லி சமந்த நானும் கொலைகுற்றவாளீக்கான நீதி யென்பது நீதி தேவதையின் தராசு தட்டிலே உள்ளது உள்ளது வழங்கப்படாமலே என பேசிக்கொண்டு முனசிங்க ஐயாட இறுதி அஞ்சலிக்கு போகும் போது சம்ந்த கேட்கிறான் நாம் போகும் போகும் போது முனசிங்க ஐயா சுட்டு இறந்து போகிறார் என்றால் யாரோ உன்னை கைது பண்ணபோறாங்கள் என ஏன் சொல்லி இருக்கக் கூடாது என அவன் கேட்கிறான் நானும் எப்பவுமே கிறிமினலாவே யோசிக்கிற இப்பதான் உனக்கு பொலிஸ் மூளை கிடைச்சு இருக்கு சொல்லி போகிறோம் போகும் போது நான் ஏன் நம்ம உயரதிகாரி கூட இதில சம்மந்தப்பட்டு இருக்கலாம் தானே என நிலையத்துக்கு செல்ல எங்களை சிரித்த முகத்துடன் வரவேற்றார் உயரதிகாரி அப்போது சமந்த சொல்கிறான் இந்தாள் மீதும் ஒரு கண்ணை வை என சொல்லி கண்ணைக்காட்டுறான் அடுத்த மாதம் இருவருக்கும் வேறு இடம் வேலை வருகிறது.அவன் கொழும்பு நான் மட்டக்களப்பில் முற்றும் .
  17. சில நேரங்களின் பறவைகள் , மிருகங்கள் அதை உட் கொண்டு வகுப்பறைகளை அசுத்தப்படுத்துவதால் அதற்குரிய நடவடிக்கையாக இருக்கலாம் எனது பாடசாலையில் உணவுக்கழிவுகளை அவர்கள் மீண்டும், எடுத்து செல்ல வேண்டும் அதே போல் பொலித்தீன் கழிவுகள், பொலித்தீன் பாடசாலைக்குள் எடுத்தும் வரமுடியாது துணிப்பைகள்தான் அப்படி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கு நான் உயர்தர பரீட்சைக்கு உதவியளாராக முஸ்லீம் பாடசாலைக்கு ஒன்றுக்கு கடமைக்காக சென்றேன் வகுப்பறைகளை பார்த்த போது அவ்வளவும் காக்கைகளால் எடுத்துக்கொண்டுவரப்பட்ட லஞ் சீற்றகள் அதுமட்டும் இல்லாமல் மாட்டு எலும்புகள் துப்பரவு செய்து எடுக்கவே மணிக்கணக்காகியது (சாகிறா பாடசாலை கல்முனை) நாய்களும் எலும்புகளை எடுத்துக்கொண்டு வகுப்பறைகுள் கொண்டு சென்று அதை சப்ப படாத பாடு பட்டு முடிச்ச பிறகு மலம் சலம் கழித்து போயும் இருந்தது பின்னர் அந்த பாடசாலையில் பணி புரியும் ஊழியரை வைத்து துப்பரவு செய்யப்பட்டு மண்ணென்ணெய் ஊற்றியும் விட்டார்கள் அவ்வளவு மணம் இது கூட ஒரு பிரச்சினையா க இருக்கலாம் மதத்தை கொண்டு உட்சொருகாமல் வேலையைப்பாருங்கப்பா இதுக்குள்ள இது வேறயா ??
  18. அந்த மாதத்தில் சரியான கிராக்கி மீனுக்கு அந்த நேரத்திலே அந்த சம்பவம் நடந்தது தேற்றாத்தீவு எனும் ஊரில் தகவலுக்கு நன்றி எங்கள் ஊரில் அந்தமீனை எடுக்கவே மாட்டார்கள் இறந்து போன அந்த பெண்ணின் அம்மா நாய்க்கென்றே எடுத்து சென்றுள்ளார் அந்த மீனை மீனவர்கள் எச்சரித்தும்
  19. தனது சொந்த இன மக்களையே கொழும்பில் வச்சி செய்த அரசாங்க்கமும் ஆதரவாளர்களும் இருக்கும் வரைக்கும் இவர்கள் மற்ற இன மக்களின் வலிகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனது கருத்து அப்படி புரிந்து கொண்டார்கள் ஆனால் இலங்கை வேற மாதிரி இருக்கும்
  20. அண்மையில் மட்டக்களப்பில் பேத்தை மீனை உண்ட ஒரு பெண் மற்றும் அவரது அம்மா ஆகியோர் இறந்து போனார்கள் கேள்விப்பட்டதா?? அவாக்கு சென்ற 7ம் மாசம் 26ம் திகதி கனடா போகவேண்டிய பெண் விசா வந்திருந்தது கணவர் அங்கே பிள்ளைகளும் ஆஸ்பத்திரியில் இருந்து மீண்டு வந்தார்கள் அவ்வளவு விசம் இருக்குமா என்பதே எனது கேள்வி பேத்தை மீனில்???
  21. அடி பிசகாமல் பின்னால் வாங்கோ பிறகு வெடி விழும் இதுவரை இலங்கையில் 42 துப்பாக்கி சூடு நடந்துள்ளது இன்றும் யாரோ ஒரு நடிகருக்கு வெடியாம் தப்பிவிட்டார் போல செய்தி சொல்லிச்சு அண்ண அண்மையில் கிளிநொச்சியில் நகைக்காக நடந்த கொலை மிக பயங்கரமானது ஒரு வயது போன அம்மா கேள்விப்பட்டிருப்பியள் என நினைக்கிறன் விசாரிக்க சென்றது நம்ம பொடியங்கள் அவங்க அனுபவத்தை சொல்ல நான் எனக்கு தேவையான கதையாக எழுத நினைத்து எழுதுவன் சம்பவம் சிலது உண்மைகளே ஏராளன்
  22. ம் நன்றி அண்ண ஊர் முழுக்க புதிய புதிய கொண்டாட்டங்களையும் களியாட்டங்களை கொண்டாந்து இறக்குறார்கள் அதைப்பார்த்த பிள்ளைகளுக்கு இங்கிருக்க விருப்பமும் இல்லை எல்லாம் வெளிநாடு நாட்டம் பிடிக்கிறது இது யாருக்குமான கருத்து அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி அண்ணை மெனக்கெட்டு வாசிக் கிறீர்களே அதுவே மிகப்பெரிய விசயம் அனுபவம் படுவதை கதையாக்கி விடுவது என் வழமை ஒரு மாமன் வந்து போனான் அவனுக்கு எழுதினது 17 வருடங்கள் கழித்து ம் நடக்கும் உண்மை ம் அப்படித்தான் எழுத நினைத்தன் நேரம் வேற ஆகிவிட்டதால் எழுதி முடிய அப்படியே போஸ்ட் பண்ணிவிட்டேன் மிக்க நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு அக்கா
  23. மாமா! மாமா! ஆரும் இல்லையோ வீட்டில...... ஓம் ஓம் நிற்கிறம் என்ன தம்பி? மாமா இல்லையா மாமி? இல்ல அவரு தோட்டத்துப்பக்கம் போயிருக்காரு ஓ அப்படியா வந்தால் சொல்லுங்க மகளுக்கு சாமத்திய கல்யாணம் வச்சிருக்கன் எல்லோரும் குடும்பத்தோட கட்டாயணம் வரணூம் வரச்சொல்லி சொல்லுங்க சரி அவரு வந்தால் சொல்லுறன் ம் உள்ள வாங்க வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு போங்க இல்ல மாமி ஆயிரம் வேலை கிடக்கு நான் வந்து போனத சொல்லுங்க மாமாகிட்ட சரி சொல்லுறன் தம்பி இஞ்சாருங்கோ உங்க மருமகன் இப்பதான் வந்து போகிறார் யாரு ? மதிமோகனா? ஓமோம் அவர்தான் என்னவாம் இஞ்சால பக்கம் காத்து அடிச்சிரிக்கி அவங்க எல்லோரும் நாட்டுக்கு வந்திருக்காங்களாம் பிள்ளைக்கு சாமத்திய வீடு செய்ய ஓ!!! அதுவா செய்தி ம் என்ன மாதிரி உங்க வீட்டுப்பக்கத்தால பல வருசம் கழிச்சி இப்பதான் கண் தெரிஞ்சிருக்கு போல என மனைவி மெதுவாக குத்திக்காட்டினாள். ம் பின்ன உன்ன கல்யாணம் கட்டவேணாம் என்று எல்லோரும் சொல்ல கல்யாணம் கட்டினத்துக்கு தண்டனைதான் அது . என்ற அம்மாவுக்கு உன்ற அம்மாவை பிடிக்காது ஆனால் உன்னை எனக்கு பிடிச்சி போக அம்மா சொல்லியும் அத கேட்காம உனக்கு மாப்பிள்ளை பார்த்தவுடன் நீ என்னத்தான் கல்யாணம் கட்டவேணும் என்ற ஆசையில் ஓடிவர இருவரும் வீட்ட விட்டு ஓடி கல்யாணம் பண்ணுனம் பாரு அதுதான் எல்லோருக்கும் பிரச்சினை . ம்கும் அப்ப ஓடிப்போனவங்க ஒருத்தரும் கல்யாணமும் கட்டல பிள்ளையும் பெறல அவங்கள சேர்த்தும் எடுக்கல உங்க குடும்பம மட்டும் தான் புதுனமாக குடும்பம் என்றாள் மனிசி. மனிசி: சரி இப்ப சாமாத்திய கல்யாணத்துக்கு போறதா இல்லையா?? என்ன சத்தத்த காணல இல்ல போகணும்தான் போகாமலும் இருக்க முடியாது இத்தன வருசம் கழிச்சி கூப்பிட்டு இருக்காங்கள் ஆனால் நீ உடுப்பு எடுக்கணும் என்று சொல்லுவா அந்த பிள்ளைக்கும் கைல ஏதாவது கொடுக்கணும் அதத்தான் யோசிக்கிறன். இப்ப உள்ள விலைவாசிக்கு உனக்கும் 3 பொம்புள பிள்ளைகளுக்கும் உடுப்பு எடுக்க 50000 ற்கு மேல வேணுமே எங்க போறது? சரி போய் வங்கில மீதி இருக்கிற காச எடுத்து வாரன் என வெளிக்கிடுகிறேன் எனக்கு காலில் ஏதோ முள் பட்டு கனநேரமாக தைத்துக்கொண்டே இருந்தது வங்கிக்கு கணக்கை சரிபார்த்தா 40000 மட்டுமே இருந்த்து அவ்வளவையும் எடுத்துக்கொண்டு மனிசிட்ட கொடுக்க அவளும் பிள்ளைகளும் கடைக்கு செல்கிறார்கள் அப்போது உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகி விட்ட செய்தி வரவே மூத்த‌ பிள்ளையின்ற பெறுபேறைப்பார்க்க தொலைபேசியை எடுத்து நம்பரைப்பார்த்து அடிக்க மகளூக்கு மூன்று பாடங்களிலும் சித்தி பெற்று அவளுக்கு வைத்தியத்துறையில் அனுமதி கிடைத்திருந்தது சந்தோசத்தில் திக்குமுக்காட மனிசியும் பிள்ளைகளும் வரவே செய்தியை சொல்ல அந்த சந்தோசத்தில் மிதக்குறோம். அக்கா வைத்திய‌ர் ஆகிட்டா நீங்களும் அக்கா போல படிச்சு வைத்தியர் ஆகணும் நானும் சொல்ல அவர்களும் சந்தோசத்தில் தலையசைக்கிறார்கள். மனிசி உடுப்புக்களை சரிபார்க்கிறாள் இதுகளுக்கு வந்திருக்குமே அறுபது எழுபதினாயிரம் என நான் சொல்ல மகளோ அப்பா அம்மாவும் 25000 ரூபா காசோடதான் வந்தாவு என சொல்ல இனி சோத்துக்கு என்ன செய்யப்போற என பார்ப்போம் என நானும் புலம்ப இந்தாங்கோ புது வேட்டி சட்டை பதிலுக்கு நான் கேட்டனாக்கும் நீங்க கேட்காட்டியும் அவ்வளவு சனம் வரும் பழைய வேட்டியோடையோ? நிற்கிறது என அவள் கேட்டுவிட்டு வாங்கி வந்த உடுப்புக்களை வீட்டிலும் சட்டைக்கு மேலால போட்டு அழகு பார்த்தாள் ( இந்த பொம்புளைகளுக்கு இதுதான் வேலை என மனசு சொல்லிக்கொள்கிறது) அடுத்த நாள் காலை சாமத்திய வீட்டுக்கு செல்ல மகள் வைத்திய துறைக்கு தெரிவு செய்யப்பட்டது என் சட்டை கொலரை மெதுவாக தூக்கி என் கழுத்தை மெதுவாக நிமிர செய்திருந்தாள் என் குடும்பத்திற்கும் மரியாதை தரும்படி . நானும் பிள்ளைகளும் அந்த ஹோட்டல் அறைக்கு செல்கிறோம் மிக பிரமிப்பாக இருந்தது வாழ் நாளில் இப்படி ஆடம்பரமான அறைக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். சிவப்பு கம்பள வரவேற்பில் நாங்கள் செல்ல வட்ட மேசையில் உறவுகள் நிறைந்திருந்தார்கள் எதிரே என் அம்மையாரும் என்னை நிமிர்ந்து பார்த்து குனிந்து விட ஒரு மூலை மேசையை நான் தேடி அமர்கிறேன். அப்போது என் பிள்ளை வைத்தியத்துறைக்கு தெரிவான கதை வட்ட மேசை முழுவதும் பேசப்படும் செய்தி காதில் கேட்கிறது . பாட்டு சத்தம் பலமாக இருக்க பலர் பாடினார்கள் ஆனால் பாட்டு ஒரு பக்கம் போக இசை வேற ஒரு பக்கம் போனது கேட்டதற்கு டி , ஜே என்றார்கள் எனக்கோ அவங்களை ஏறி மிதிக்கணும் போல இருந்தது மாமா வாங்கோ என மதிமோகன் அழைக்க யூஸ் எடுத்த நீங்களா? இல்ல மருமகன் தம்பி இவ்வளவு பேருக்கும் யூஸ் கொடுங்கள் என சொல்ல அவன் பிழிந்து கொண்டு வருகிறான். அப்போ பாட்டு நிற்க மகளை பல்லக்கில் நாலு பொடியங்கள் சுமந்துவர பிள்ளை வந்து இறங்குறாள் அவளை மேடைக்கு அழைத்து செல்ல பல பெண் பிள்ளைகள் பாட்டுக்கு நடனமாடி கூட்டிச்செல்கிறார்கள் என் பிள்ளைகளோ அதை இமைமூடாமல் பார்க்கிறார்கள். நேரம் செல்ல சாப்பாட்டு மேசைக்கு செல்ல வகை வகையாக சாப்பாடு ஆடு ,கோழி, மீன், மரக்கறி என பல விதமான சாப்பாடுகள் நிறைந்து வழிந்திருந்தது ஆனால் நம்ம சனத்துக்குதான் அதை எப்படி எடுக்க வேண்டும் சாப்பிட வேண்டும் என்று இப்பவரைக்கும் தெரியவில்லை அளவுக்கு மீறி சாப்பாட்டை எடுத்து வந்து குப்பை வாளியை நிறைத்து இருந்தார்கள். அதைப்பார்த்த எனக்கு வார்த்தைகள் வரவில்லை எத்தனையோ ஆயிரம் பேர் இந்த உணவு இல்லாமல் பரிதவிக்கிறார்கள் இங்கு ஆனால் இங்கு வீணாகுதே என நினைத்து வேதனை அடைந்தேன். நிகழ்வுகள் மெதுவாக நிறைவேற மருமகனிடம் கேட்டேன் எவ்வளவு மருமகன் மொத்த செலவு என கேட்க அவனோ ஒரு ஒண்டரை கோடி செலவு மாமா என்றான்.. ஓ அப்படியா கொஞ்சம் அதிகம்தானே என நான் சொல்ல இதெல்லாம் சின்ன காசு மாமா என்றான் மகள் கம்பஸ் என்ற பண்ணி இருக்குறா டொக்டருக்கு ஓ அப்படியா சந்தோசம் ஏதும் உதவிகள் தேவைகள் என்றால் கோல் எடுங்க மாமா என்றான் .அவன் பிள்ளைக்கு ஏதாவது செய்யலாம் என போனால் ஒரு கிப்டும் வாங்க வேண்டாம் என சொன்னதால எதுவும் கொடுக்க முடியல அன்றைய இரவு முளுக்க மனிசிக்கும் பிள்ளைகளுக்கும் அதே கதைதான். மாத முடிவில் மதிமோகனுக்கு வெளிநாட்டில் அழைக்கிறேன் அப்போது அவன் கொடுத்த போண் நம்பர் வேலை செய்யவில்லை மகளுக்கு கொழும்பில் தங்கி படிக்க‌ வீடு பார்க்க பணம் தேவைப்பட...... மனைவியோ இருந்த வளையல்களை கொடுக்க அடகு வைத்து பணத்தை கொடுத்து விட்டு தூங்குகிறேன் அடுத்த நாள் அதிகாலை மனைவியை எழுப்ப அவள் எழும்பவில்லை மூத்த மகள் எழும்பி வந்து தேத்தண்ணி குடித்து போங்கள் என சொல்லி தேத்தண்ணி ஊற்றி வந்தாள். மகள் நீங்க படிச்சது போல உன்ற தங்கச்சிகளையும் நன்றாக படிக்க வச்சி விடு அப்பதான் சொந்தக்காரன் கூட நம்மளை மதிப்பான் என சொல்லி தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச‌ செல்கிறேன் நான் மகளோ மற்ற மகள்களை எழுப்புகிறாள் படிப்பதற்கு. தோட்டத்தில் நான் விசிறிய எண்ணெய் மயக்கத்தில் இறந்து கிடந்த பாம்பின் எலும்புகளே என் காலில் குத்தி தைத்திருக்கிறது. என்பது அப்போதுதான் எனக்கே தெரிய வந்தது ஆனால் ஒன்றூம் செய்யவில்லை என்பது பெரிய ஆறுதலாக இருந்தது . வேலிக்கு வைக்கும் முள்ளே காலுக்கு தைக்கும் யாவும் கற்பனை முற்றும் .
  24. உங்களது இருவரது கருத்துக்கு ஏற்றால் போல நடக்க வேண்டும் என்பது எனது விருப்பமே ஆனால் அது எனக்கு கனவு போலவே கடந்து போய்விட்டது நன்றி வணக்கம்
  25. உங்கள் பார்வை ஒரு கோணத்தில் தான் உள்ளது அல்லிராஜா , சுபாஸ்கரன் என்பவர்கள் இலங்கையிலே என்ன செய்கிறார்கள் என்பதும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் உங்கள் கணிப்பின் படி சீமான் முதலமைச்சரானால் ஈழம் கிடைக்குமா ? அல்லது இந்திய ஆரசை வற்புறுத்தி ஈழத்தை பெற்றுத்தருவார் என நீங்கள் நினைக்கிறீர்களா?? இதற்கு இலங்கை அரசாங்கம் என்ன செய்யும் இதற்கான விடைகள் என்ன????
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.