• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கரும்பு

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content count

  5,054
 • Joined

 • Last visited

 • Days Won

  25

கரும்பு last won the day on January 19 2016

கரும்பு had the most liked content!

Community Reputation

367 ஒளி

About கரும்பு

 • Rank
  உங்களில் ஒருவன்
 • Birthday January 19

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

8,386 profile views
 1. ஓர் மகிழ்ச்சியான செய்தி; எமது குருநாதசுவாமி கோயில் விடுவிக்கப்பட்டு உள்ளது. ஞானி அன்ரி அங்கு சென்று கற்பூரம் கொளுத்தி வழிபாடு செய்துவிட்டு வந்ததாக தெரிவித்து உள்ளார். இன்னும் எமது வீடுள்ளபகுதி விடப்படவில்லையென்றே அறியமுடிகின்றது. குருவீதியால் கோயிலுக்கு செல்லமுடியாதாம். கல்லூரி வீதியால் வேறு ஓர் பகுதிக்கால் சுற்றி சென்று கோயில் பகுதியை அடைந்தார்களாம். கோயிலை சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது என்று ஊகிக்கின்றேன். கோயில் இடிக்கப்பட்டுள்ளது, அரசமரத்துக்கு அருகில் உள்ள நாகதம்பிராண் சிறுபகுதிமட்டும் உடைக்கப்படவில்லையாம். இவ்வாறே அருகில் உள்ள மடமும் உடைக்கப்படவில்லை, மிகுதி தரைமட்டம். கோயிலை புனருத்தாரணம் செய்ய அரசாங்கம் சிறு உதவித்தொகை கொடுக்கும் என்று அறியமுடிகின்றது. குருநாதர் பிரதம விக்கிரகம் தற்காலிகமாக 1990ம் ஆண்டில் இருந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. எமது குருநாதரை சொந்தக்காணியில் விரைவில் மீளக்குடியமர்த்தி கோயில் பூசைகள் வழமைபோல் விரைவில் நடைபெறும் என்று பிரார்த்திப்போம். ஜீவன், தயவுசெய்து அங்காளப்பக்கம் சென்றால் விரிவாக படங்கள் எடுத்து அனுப்புங்கள். நன்றி~!
 2. தீவிரசிந்தனை செய்யக்கூடியவர்கள் மட்டும் தொடர்ந்து வாசிக்கவும்.. நான் சில சமயங்களில் எனக்குள் நினைத்துக்கொள்ளும் ஓர் விடயம் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதை விளக்குவதற்கு இலகுவாக அமைவதற்காக சில உதாரணங்களை முதலில் குறிப்பிடுகின்றேன். => தோமஸ் அல்வா எடிசன் இந்த உலகில் தோன்றினார், வாழ்ந்தார், பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை செய்தார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார். => திருவள்ளுவர் தோன்றினார், வாழ்ந்தார், திருக்குறளை இயற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார். => பீட்டர் தோன்றினார், வாழ்ந்தார், பெருந்தெருக்கள் போடும்பணியில் ஓர் கூலி தொழிலாளியாக பங்காற்றினார், வாழ்ந்தார், பின்னர் மறைந்தார், => தங்கம்மா தோன்றினாள், வாழ்ந்தாள், எதுவித சமூகத்திட்டங்களிலும் பங்கெடுக்கவில்லை, வாழ்ந்தாள், பின்னர் மறைந்தாள். => இவ்வாறு வெவ்வேறு கோடானுகோடி கோடி கோடி மனிதர்கள் தோன்றினார்கள்/தோன்றுகின்றார்கள்/தோன்றுவார்கள், வாழ்ந்தார்கள்/வாழ்கின்றார்கள்/வாழ்வார்கள், எதையோ செய்தார்கள்/செய்கின்றார்கள்/செய்வார்கள் அல்லது செய்யவில்லை/செய்யமாட்டார்கள், பின்னர் மறைந்தார்கள்/மறைகின்றார்கள்/மறைவார்கள். இனி மயக்க நிலை தொடர்கின்றது.. தோமஸ் அல்வா எடிசன் அவர் இல்லாத ஒன்றை படைத்தாரா அல்லது இருக்கும் ஒன்றை விளங்கிக்கொண்டாரா? திருவள்ளுவர் திருக்குறளை எழுதினாரா அல்லது மொழியறிவை அனுபவித்து திருக்குறளை உணர்ந்தாரா? அதாவது, ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே? ஒரு விஞ்ஞானியாகட்டும், கவிஞனாகட்டும், கலைஞனாகட்டும், அவர்கள் உருவாக்கியவை அல்லது படைத்தவை என்று கூறப்படுபவை அவர்களுக்கு - அந்த தனித்தனி மனிதர்களுக்கு அவை புதிய அனுபவங்கள் ஒழிய அவை உண்மையில் ஏற்கனவே இல்லாத புதியதானவை அல்லவே? ஏற்கனவே இருந்தவையும்.. ஏற்கனவே இல்லாதவர்களும்..
 3. கேட்பதை எல்லாம் வாங்கிக்குடுத்து பழக்கினால் சிக்கல்தான்.
 4. உந்த ஜீப்பை பார்த்தால் இதைக்குடுத்து பேரீச்சம்பழம்தான் வாங்கலாம் போல கிடக்கு.
 5. ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?
 6. அவர் ஏதும் கூறலாம். ஆனால், அவர் நினைத்ததை எல்லாம் சாதிப்பதற்கு அமெரிக்கர்கள் வடகொரியர்கள் அல்லவே.
 7. தொலைக்காட்சியில் பார்த்த முகம் மாதிரி தெரிகின்றது, ஆழ்ந்த அனுதாபங்கள். தற்கொலைதான் பிரச்சனைகளுக்கு தீர்வு என்றால் நானும் எப்போவோ செத்து இருக்கவேண்டும்.
 8. விரலில அஞ்சு பவுணில போட்டிருக்கிற மோதிரத்தை பார்த்தால் எளிமை மாதிரி தெரியலையே.
 9. ஆழ்ந்த இரங்கல்கள்! உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம் ஐஸ்டின்.
 10. தகவலுக்கு நன்றி சார். இது தோட்டக்காணி, குருவீதி கிழக்குப்பக்கத்தால் முடிவடையும் இடத்தில் துண்டி ஒன்று இருந்தது அல்லவா, துண்டியுக்கு கிழக்கால் இந்த காணி உள்ளது. இதை குரட்டாவத்தை என்று அழைப்பார்கள். உங்களுக்கு மூர்த்தியை தெரியுமா? மூர்த்தி வீட்டுக்கு பின்னால் உள்ளது.
 11. நான் குறிப்பிடும் பகுதி அப்படியான இடம் இல்லை. அங்கு மிதிவெடி வைக்கவேண்டிய தேவை இல்லை. சண்டை ஏதும் நடைபெறாத இடம். தோட்டக்காணி பற்றைக்காடாகியுள்ளது அவ்வளவுதான்.
 12. பாடலை முழுமையாக கேட்க முடியவில்லை. ஏதோ இனம் புரியாத செயற்கைத்தனம் தெரிகின்றது.
 13. ஜீவன், தோட்ட காணிகளை துப்பரவு செய்து திரும்பவும் தோட்டம் செய்வது என்றால் துப்பரவு பணிக்கு மணித்தியாலத்துக்கு பதினெட்டாயிரம் ரூபாய் செலவாகும் என்று சொல்கின்றார்கள், உண்மையா? இது உண்மை என்றால் விரைவில் இந்த வேலையை உங்கு வந்து செய்யலாம் என்று நினைக்கின்றேன். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? மணித்தியாலத்துக்கு கனடா காசில் $160 உழைக்கலாம் என்றால் அடேங்கப்பா. அங்கே பற்றைக்காடுதானே உள்ளது? ஏதோ முப்பது நாற்பது அடி உயரத்துக்கு வானளாவ உயர்ந்ந்துள்ள அமேசன் காடு கணக்குக்கு காணிக்கு உரித்துடைய் ஆட்கள் வெளிநாட்டில் என்றவுடன் கணக்குவிடுகின்றார்களோ என்று நினைக்கின்றேன்.