தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  34,478
 • Joined

 • Last visited

 • Days Won

  139

Everything posted by தமிழ் சிறி

 1. தமிழக அரசியலைப் பற்றி... இணையங்களில், வரும் "மீம்ஸ்" எனப்படும் படத்துடன் கூடிய பகிடிகள்... மிகவும் ரசிக்கக் கூடியவை. சில படங்கள்... சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கக் கூடியவை. அதனை... நீங்களும் பார்த்து ரசிக்கவும். "மீம்ஸ்" என்பதற்கு.. தமிழ் மொழி பெயர்ப்பு என்ன? என்று யாருக்காவது தெரிந்தால்.. கூறுங்களேன். அக்கா..... ஜெயிலுக்கு கிளம்பிவிட்டீர்களா, அக்கா... அக்கா.... மதிய உணவுக்கு, களிதானா அக்கா...
 2. மண் சட்டிகள்.... நவீன வடிவில்.
 3. மாமியார் வீட்டில், மருமகனுக்கு கொடுத்த விருந்து.
 4. இதை வைத்தே.... சுப்பிரமணியத்தை, பென்டு எடுக்க வேணும். ஆனால்... சுப்பிரமணியம், மோடியின் செல்லப் பிள்ளை ஆச்சே. அது நடவாது.
 5. கடலின் ஏழு மைல் ஆழத்தில், இவ்வளவு அழகிய உயிரினங்களா... பகிர்விற்கு.. நன்றி நுணா.
 6. வாவ்... பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, அகத்தியர் சொல்லிய விடயங்களை, கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்து உறுதிப் படுத்துகின்றார்கள். தமிழரின் அறிவியலை, வேற்று நாட்டுக்காரன் சொல்லி தெரிய வேண்டிய, கேவலமான நிலையில்... தமிழன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.
 7. ஊருக்குப் போகும் போது.... தலைக்கு, "வெள்ளை டை" அடித்து விட்டுப் போவது, பாதுகாப்பானது போலுள்ளது.
 8. 3000 பச்சைப் புள்ளிகளைப் பெற்ற, குமாரசாமி அண்ணைக்கு வாழ்த்துக்கள். குசா. அண்ணை என்று யாழ். களத்தில், எல்லோராலும் அன்பாக அழைக்கப் படும் இவர்.... யாழ்களத்துக்கு தினமும் வந்து... அனேகமான எல்லாத் திரிகளிலும் தனது கருத்தை, நகைச்சுவையாகவும், தேவையான இடங்களில் நாசுக்காகவும்.... தெரிவித்து, களத்தை.... சோர்வில்லாமல், உயிர்ப்புடன் வைத்திருப்பவர்களில் குமாரசாமி அண்ணாவும் ஒருவர். நான் யாழ்களத்தில் எழுத ஆரம்பித்த போது.... எழுதுவதற்கும், படங்களை இணைப்பதற்கும் இருந்த சிரமங்களை... இலகுவாக எனக்கு கற்றுத் தந்த, ஆசான் தான் குமாரசாமி அண்ணை. அவருக்கு எனது பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
 9. எல்லோரும்.... பதவியில் இல்லாத போது தான், தாம் செய்த தவறுகளுக்கு வருந்துவார்கள். இது... உண்மையான வருந்துதல் இல்லை. தாம்... தப்பிக்க, இப்படியான அறிக்கைகளை விட்டு, குளிர்காயப் பார்க்கிறார்கள்.