Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76771
  • Joined

  • Days Won

    768

Everything posted by தமிழ் சிறி

  1. இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம்! இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு அனைத்து இராணுவ வீரர்களின் நலன்புரியும் சூழ்நிலையில் மிகவும் திட்டவட்டமாக முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மாத்தளையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஐக்கியப் இராணுவ மாநாட்டில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இராணுவ நலனுக்காக சேவை அதிகாரசபை இருப்பதாகவும், அது இதுவரை ஆற்றிவரும் சேவையைப் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் இராணுவ நலனுக்காக அமெரிக்காவைப் போன்று தனியான திணைக்களம் தேவை எனவும், அதற்காக புதிய கட்டளைகள் உருவாக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தேசத்திற்காக உழைத்த ஒரே எதிர்க்கட்சி ஜக்கிய மக்கள் சக்தி என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் சிலர் மேடைகளில் விசித்திரக் கதைகளைச் சொல்லி மக்களை தங்கள் கனவு உலகில் ஏமாற்றுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1376877
  2. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் செல்ல தடை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ள நிலையில் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காணமல்போன ஆவணங்கள் தொடர்பாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவினால் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்தே இவ்வாறு பல ஆவணங்கள் காணமால் போயுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்மந்த மித்ரபால குறிப்பிட்டுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையக ஊழியர்கள் உட்பட பலரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார். இதனையடுத்து, விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சம்பவத்துடன் தொடர்பில்லாத சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும் தலைமையகத்தின் கேட்போர் கூடத்துக்குள் நுழையவிடாமல் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376835
  3. யாழினி…. கோசான் தானே லக்கேஜை தூக்கிக் கொண்டு வாறது. 😂 அதாலை எனக்கு பிரச்சினை இல்லை. பக்கத்து வீட்டுக்காரியிடமும் நல்ல பெயர் எடுக்கலாம். 🤣
  4. நான் இந்த விளையாட்டுக்கு வரேல்லை ராசா…. 😂 🤣
  5. கந்தையா அண்ணை... ஐந்து கிலோ மிளகாய்த்தூளும் எனக்குத் தனிய இல்லை. பக்கத்து வீட்டு ஜேர்மன்காரிக்கும், முன்னாலை வீட்டு துருக்கிக்காரிக்கும் குடுக்கத்தான். 😋 எங்கள் மிளாகாய்த்தூள் வாசம் அவர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக அடிக்கடி சொல்வார்கள். 😂
  6. கோசான்... நீங்கள் கந்தர்மடம் போவது என்று தெரிந்திருந்தால், ஐந்து கிலோ இடித்த மிளகாய்த்தூளும், மூன்று கிலோ வறுத்த சிவப்பு அரிசிமாவும், இரண்டு கிலோ பாரை கருவாடும் குடுத்து விட சொல்லியிருப்பேனே... ச்சாய்.... அருமந்த சந்தர்ப்பம் தவறிப் போச்சுது. அடுத்தமுறை பாப்பம்.
  7. சிங்கள அரசியல்வாதிகள் தேனும், பாலும் ஓடுது என்கிறார்கள். உலக வங்கி இப்பிடி சொல்லுது. இதிலை யாரோ ஒரு பகுதி பொய் சொல்லுது என்பது மட்டும் உண்மை. 😂
  8. கண்ணை நம்பாதே.... உன்னை ஏமாற்றும்.... நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது.
  9. நாமல் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும்! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும் வேட்பாளரே வெற்றிபெறுவார். சவாலுக்கு மத்தியில் இந்த நாட்டை முன்கொண்டு செல்லக்கூடிய ஒருவர் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருக்கு பொருத்தமானவரும் அவரே. நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கு அவருக்கு மேலும் காலஅவகாசம் காணப்படுவதாக அவரது தந்தை மஹிந்த ராஜபக்ஷ ஒருசந்தர்ப்பத்தில் கூறியிருந்தார். எனவே பலவருடகால அரசியல் அனுபவம் கொண்ட ஒருவரால் முன்வைக்கப்படும் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக முன்னிலையாக போவதாக அவர் இதுவரை கூறவில்லை. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிற்ஙகினால் கட்சிக்குள் பிளவு ஏற்படும்.எனவே கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் அவ்வாறான ஒரு தீர்மானத்தை நாமல் ராஜபக்ஷ ஒருபோதும் எடுக்கமாட்டார். பொதுஜனபெரமுனவுக்குள் விரிசல் ஏற்படாத வகையிலேயே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் பலர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க தயாராக உள்ளனர்” இவ்வாறு தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1376807
  10. உலக வங்கியின் விசேட அறிவிப்பு! இலங்கையில் 57 இலட்சத்து 77 ஆயிரம் பேர் வறுமையில் வாடுவதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதன்படி அதிக பணவீக்கம், மக்களின் வருமானத்தில் அதிகரிப்பு இல்லாமை, வேலை இழப்பு மற்றும் வருமானச் சரிவு ஆகியவையே காரணங்கள் என்று உலக வங்கி வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 25.9% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வார்கள் என்பதுடன் தொடர்ந்து நான்காவது ஆண்டாக வறுமை அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும் என்று வங்கி கணித்துள்ளது. மேலும் இலங்கையின் அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1376820
  11. வணக்கம் @நியானி. ஊர்ப் புதினம் பகுதியில் உள்ள, தமன்னா திரியை... யாழ். அகவை சுய ஆக்கம் பகுதிக்கு நகர்த்தி விட முடியுமா.
  12. மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை. கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவிக்கையில், H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும் அவர் கூறினார். மேலும், இது புதிதாக உருவாகி வரும் வைரஸ் அல்ல என்றும், இது ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ளதாகவும் டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவித்தார். இதனை எதிர்கொள்ள உடனடியாக தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, கனடாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஜான் ஃபௌல்டனும் பறவைக் காய்ச்சல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார். H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறக்கூடும் என்றும், இது கொவிட் 19 ஐ விட 100 மடங்கு ஆபத்தானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1376792
  13. கணவனும் மனைவியும் சண்டையிட்டனர், மறுநாள் காலையில் அவள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டாள். கணவன் எழுந்து, பால் காய்ச்சி, காபி கலந்து, காலை உணவு தயாரித்து, குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்தினான். மதிய உணவைக் கட்டிக் கொண்டு, குழந்தைகளை பள்ளிக்கு விடுவதற்காக கணவர் புறப்படும் போது... அவள் சொன்னாள், இன்று ஞாயிற்று கிழமை! 😂 படித்ததில் பிடித்தது.
  14. மாவீரர் நாளை தடுப்பதற்கான சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை : பொலிஸ் மா அதிபர்! வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான ஆனந்த ஜயமான்னவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கரலியத்த மற்றும் மாயாதுன்னே, கோரையா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இதேவேளை வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, மகாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தாம் சமர்ப்பித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் நேற்று வாக்குமூலமொன்றையும் வழங்கியிருந்தார். வடக்கு கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இடம்பெறுகின்ற நினைவு நாளுக்கு எதிராக சட்டத்தை சிறந்த முறையில் அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் மன்றில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான சட்டவிரோத நிகழ்வுகள் தொடர்பில் அதிகபட்சமாக சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்தவுள்ளதாக நீதிமன்றில் அரசாங்கம் சார்மாக முன்னிலையான சட்டத்தரணியும் குறிப்பிட்டுள்ளார். முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த சட்டவிரோத செயல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் நீதிமன்றில் உறுதிமொழி வழங்கியிருப்பதால், இந்த மனுவை தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்படி, குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து மனு மீதான விசாரணையை நிறைவு செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376662
  15. தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். குறித்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம். https://athavannews.com/2024/1376603
  16. யாழில் மாடு கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவர் கைது! யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட மூவரைப் பொலிஸ் அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இன்று அதிகாலை குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடத்தப்பட்ட மாடுகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1376466
  17. குறுகிய காலத்தில்…. எல்லா இடமும் ரசித்து சுற்றிப் பார்த்து இருக்கின்றீர்கள். 👍🏽🙂
  18. தாய்வான் நிலநடுக்கம் : உயிரிந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு – 730 பேர் காயம். தாய்வானின் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 அதிகரித்துள்ளதுடன் 730 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தாய்வானில் இன்று (03) அதிகாலை 8.00 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கமொன்று பதிவாகியதாக தைவான் மத்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையையும் விடுத்தது. தைவான் தலைநகர் தைபேவை இந்த நிலநடுக்கம் தாக்கியது. இந்த நிலநடுக்கத்தையடுத்து, தைவான், ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், 3 மீற்றர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் எனவும் ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதுடன், 730 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறன்றனர். தாய்வானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும், இதற்கு முன்னர், 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் தொடர்ச்சியாக, 2,400 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376344
  19. முருகன் உள்ளிட்ட மூவரும் விசாரணைகள் நிறைவடைந்து வெளியேறினர். கொழும்பை வந்தடைந்த முருகன், ரொபேர்ட்பயஸ் ஜெயக்குமார் ஆகிய மூவரும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணிநேரம் விசாரணைகளின் பின்னர், அதிகாரிகள் அவர்களை விடுதலை செய்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூவரும் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். இன்று காலை திருச்சிசிறப்பு முகாமில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குறித்த மூவரும், யூ.எல் 122 விமானம் ஊடாக இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை, குறித்த மூவரும் தற்காலிக விசாவில் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்துடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழ் நாட்டு நீதிமன்றில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தியும் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார் இன்று காலை 11.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்த மூவர் மீதும் ஏற்கனவே விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்தார். இந்நிலையிலேயே விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த மூவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1376375
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.