Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76585
  • Joined

  • Days Won

    766

Everything posted by தமிழ் சிறி

  1. கனவில் சவப்பெட்டிகளை கண்டேன் – கனடாவில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கம். ஏதோ நடக்கப் போகிறது என உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன் என கனடாவில்; படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயாரே இவ்வாறு தெரிவித்துள்ளார். கனடாவின் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயாரான இவர் இலங்கையில் பொல்கஹவெல பிரதேசத்தில் வசிப்பதாக தெரியவந்துள்ளது. கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில், கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணியளவில் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவதினமன்று 35 வயதுடைய இளம் தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை. இவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே அவரைத் யாரோ தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்த நிலையில், அவரை தாக்கிய தாக்கிய நபரை அவரால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. எவ்வாறாயினும், தம்மைத் தாக்கியவர் இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார். சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதையும் உணர்ந்தார். இதனையடுத்து, தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார். இந்நிலையில், 911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர். அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து சாந்தி ரமேஷ் (அயல் வீட்டுப் பெண்) என்பவர் தெரிவிக்கையில், வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவரை இரு பொலிஸார் அழைத்துச் சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும், துயரமானதும் சம்பவம் என தெரிவித்துள்ளார். கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் பிரதானி – எரிக் ஸ்டப்ஸ் கூறுகையில், எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேகநபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். இதன்போதே இந்த சம்பவத்தில் இறந்த நிலையில் 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இந்த குடும்பங்கள் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள். அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார். வைத்தியசாலைக்குக் கொண்டுச்செல்லும் போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவித்தார். https://athavannews.com/2024/1372810
  2. இதனால்… பின் 🚽 விளைவுகள் இருக்காதோ…. 🤔 சந்தனம் மிஞ்சினால்….. 🫠
  3. அப்படி, தண்ணீர் மட்டும் கேட்டாலும்….. 🚰 Gas தண்ணி வேணுமா… Gas இல்லாத தண்ணி வேணுமா ? “கிளாசில்“ ஊற்றி தரவா… இல்லாட்டி போத்திலோடை தரவா? அதற்குள் ஐஸ் கட்டி போடவா… வேண்டாமா ? என்று கேட்டு கடுப்பேத்துவார்கள். 😁 😂 அவர்கள் அலுப்பு தாறதெண்டு முடிவெடித்தால், எந்த ரூபத்திலும் தந்தே தீருவார்கள். 🤣
  4. யாயினி & அல்வாயன் இது நான் எழுதிய பதிவு அல்ல. “உண்மை உரைகல்” என்பவர் முகநூலில் பதிந்த பதிவை இங்கே இணைத்துள்ளேன். கட்டுரையின் அடியில் அவரின் பெயரையும் இணைத்துள்ளேன். தவறான புரிதல் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன்.
  5. யாழ். மத்திய கல்லூரி – பரியோவான் கல்லூரிகளுக்கு இடையேயான மாபெரும் கிரிக்கெட் சமர். வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. 117வது முறையாக நடைபெறும் இப்போட்டி, நாளை சனிக்கிழமை வரை மூன்று தினங்கள் நடைபெறும். கிரிக்கெட் போட்டியில் நேற்று (07) முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி அணி வலுவான நிலையை பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி 157 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய பரியோவான் கல்லூரி முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது இரண்டு விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் உதயனன் அபிஜோய்ஷான்த் அதிரடியாக 39 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றதோடு அன்டர்சன் சச்சின் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார். இதன்படி பரியோவான் கல்லூரி அணி இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்க யாழ். மத்திய கல்லூரியை விடவும் 48 ஓட்டங்களால் மாத்திரமே பின்தங்கியுள்ளது. முன்னதாக யாழ். மத்திய கல்லூரி சார்பாக முதல் இன்னிங்ஸில் மத்திய பின் வரிசையில் வந்த ஷகாதேவன் சயன்தன் 55 ஓட்டங்களை பெற்றார். இதன்போது பரியோவான் கல்லூரி சார்பில் அருள்சீலன் கவீஷன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு குகதாஸ் மதுலன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். https://www.thinakaran.lk/2024/03/08/sports/47495/யாழ்-மத்திய-கல்லூரி-பரிய/
  6. பூமி வெப்பமாகி கொண்டு வருவதற்கான சான்று. 😂 🤣
  7. நான் கண்ட யாழ்ப்பாணம்!! 40 வருடங்களின் பின்பு ஒரு மாத சுற்றுலாவாக இலங்கை சென்றேன். நான் 75, 80ளில் பார்த்த அதே கோலத்தில் தான் யாழ்ப்பாணம் இன்றும் இருக்கின்றது. கார்பெட் ரோட்டுக்களையும் வீடுகளின் வாசல் கேட்டுக்களையும் தவிர பெரிய மாற்றம் ஒன்றும் நடந்து விடவில்லை. உலக நகர வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருக்கின்றது. அங்கே இருப்பவர்களுக்கு அதன் தாக்கம் தெரியாது உலக நகரங்களை பார்த்த ஒருவருக்கு இதன் தாக்கம் நன்கு தெரியும். யாழ்ப்பாண நகரத்து கடைகளில் முன்னால் உள்ள குப்பைகளும் அசுத்தமும் யாழ் மாநகர சபையின் செயல் திறன் எப்படி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. மட்டக்களப்பு நகரம் யாழ்ப்பாண நகரத்தை விட சுத்தம் சுகாதாரத்தில் மேலோங்கி இருந்ததை அவதானிக்க முடிந்தது. யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிட அழகும் தனியார் பேருந்துகளின் அழகும் அலங்கோலமாக இருந்தது. ஆபிரிக்க நாடுகளைத் தவிர மற்றய நாடுகளில் தனியார் பஸ்களும் அரசு பஸ்க்களும் போட்டி போட்டு வீதிகளில் ஓடுவதை பார்க்க முடிவதில்லை. அரசு பேருந்துகளும் டிப்பர் வாகனங்களும் ரோட்டில் வரும்பொழுது எமன் எதிரே வருவது போல எண்ணம் தோன்றுகிறது. அவ்வளவு ஆபத்து நிறைந்ததாக வீதிகளில் ஓடுவதை நான் நேரடியாக பார்த்தேன். அரசு பேருந்துகள் போதையில் ஓட்டுபவர்களை விட மிகவும் ஆபத்தான முறையில் ஓட்டுகிறார்கள் என்பதை எல்லா இடங்களிலும் அவதானிக்க முடிந்தது. ராணுவ முகாங்கள் எல்லா இடங்களிலும் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. பூங்காக்கள் போல ராணுவ முகாங்கள் இருப்பது மிகவும் அழகாக இருக்கிறது. ஆனாலும் இவ்வளவு ராணுவ முகாங்கள் வட பகுதிக்கு தேவையா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. பலாலியில் ஒரு வீதி நேரடியாக ராணுவமுகாமுக்கே சென்றுவிட்டது. பின்பு நான் சுதாஹரித்துக் கொண்டு பாதையை மாற்றினேன். வீதி பிரியும் இடத்தில் எந்தவித அடையாளமும் இல்லாததால் நான் ராணுவ முகாமுக்குள் சென்று விட்டேன். ஆனாலும் அங்கே காவலுக்கு நின்றவர்கள் எந்தவித பதட்டப்படவும் இல்லை. புண்முகத்துடன் நின்றார்கள். நானும் அவர்களுக்கு கைகாட்டி விட்டு திரும்பி வேறு பாதையால் சென்றுவிட்டேன். அவர்கள் எல்லோரும் தங்கள் பாட்டில் தங்கள் கடமையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களுடன் எந்தவித பிரச்சனையோ அல்லது சோதனைகளோ நடைபெறுவதாக தெரியவில்லை. ஆனாலும் ராணுவ முகாங்கள் அதிகமாகத்தான் இருக்கின்றது. வன்னியில் காடுகள் சார்ந்த பல பகுதிகளில் ராணுவ முகாங்கள் மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த சிறிய நாட்டுக்கு இவ்வளவு ராணுவ முகாங்கள் தேவையா என்று எனது மனதுக்குள் கேள்வி எழுந்தது. உலகம் மாறிவிட்டது, உணவு வழங்கும் முறைகள் உணவு உண்ணும் முறைகள் எல்லாம் மாறிவிட்டது. ஆனாலும் யாழ்ப்பானத்தில் உள்ள எந்த ஒரு உணவகத்திலும் அல்லது டீக்கடையிலோ பேப்பர் கப்பில் ஒரு காப்பியையோ அல்லது டீயையோ ( Take away ) பெற்றுக் கொள்ள முடியவில்லை. இது நல்ல சுகாதார தரத்துக்கு இன்னும் இவர்கள் முன்னேறவில்லை என்பதை காட்டியது. அதனால் நான் எந்த ஒரு கடையிலும் டீயோ காப்பியோ குடிக்கவில்லை. காரணம் சாதாரண கடைகளில் டீ கப்பை சுத்தம் செய்யும் முறை சுகாதாரத்துக்கு ஏற்ற முறையல்ல. யாழ்ப்பாணத்தில் யாரும் முகம் பார்த்து புன்னகைத்துக் கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் முறைத்து பார்ப்பது போலத்தான் பார்த்துக் கொள்கிறார்கள். காரணம் ஒருவரை ஒருவர் தெரியாததாகவும் இருக்கலாம் அல்லது பயமாகவும் இருக்கலாம் அல்லது இவரை பார்த்தால் தனக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்றும் எண்ணலாம் எப்படி இருந்தாலும் மகிழ்ச்சி இல்லாதவர்களாகவும் மற்றையவர்களை பார்த்து புன்னகைக்க தெரியாதவர்களாகவும் இருப்பது கவலையாக இருந்தது. உண்மை உரைகல்
  8. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை தாக்க முயன்றதாக இரா. சாணக்கியன் எழுப்பிய சிறப்புரிமை பிரச்சினை குறித்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” சாணக்கியன் பிரதமரைச் சந்திக்கச் சென்ற வேளை, அவர் மீது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தாக்குதல் நடத்த முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், உடல் ரீதியான காயங்களையோ அல்லது தாக்குதலையோ மேற்கொள்ள எந்த உரிமையும் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளே பாதுகாக்கின்றமையினால், இது குறித்து கவனம் செலுத்தி, அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இது தொடர்பில் முறையான விசாரணையையும் நடத்த வேண்டும்” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1372640
  9. வெடுக்குநாறி ஆலய பூசகரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை! சிவராத்திரியை முன்னிட்டு பூஜைக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி ஆலய பூசகரையும், நிர்வாகசபை உறுப்பினரையும் நேற்று நெடுங்கேணி பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் வவுனியா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1372652
  10. மட்டக்களப்பில் சங்குக் கடத்தலில் ஈடுபட்ட தேரர் கைது! மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளைக் கடத்தி வந்த தேரர் உட்பட இருவர் கல்குடாவில் வைத்து அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் கல்குடா பொலிஸாரிடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1372655
  11. இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்! இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு உச்சி மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் இதனை தெரிவித்தார். இதேவேளை போர் தொடுக்க எல்லா காலகட்டத்தில் நாம் இருக்கவேண்டும் என்றும் அமைதி காலகட்டத்திலும் நாம் தயார் நிலையில் இருத்தல் அவசியம். மேலும் நிலம், வான், கடல் என எந்தவழியிலும் எவரேனும் இந்தியாவை தாக்கினால் அவர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். மேலும் இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகளுக்கு நாம் நினைவுட்டுகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2024/1372633
  12. கனடாவில் இலங்கையர்கள் படுகொலை விவகாரம் : வெளியான முழுமையான தகவல்கள்! கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 19 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவனும் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின், தெற்கு ஒட்டாவாவிலுள்ள பார்ஹேவன் புறநகரில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இந்த பயங்கரம் நிகழ்த்தப்பட்டுள்ளது. புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தப் படுகொலைச் சம்பவத்தில் குறித்த வீட்டில் வசித்துவந்த தாய் மற்றும் பிள்ளைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தவகையில், 35 வயதுடைய தர்ஷினி பண்டாரநாயக்க எனும் தாய், அவரது 7 வயது பிள்ளையான இனுக விக்ரமசிங்க, 4 வயது பிள்ளையான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயது பிள்ளையான ரியானா விக்ரமசிங்க, 2 மாதக் குழந்தையான கெல்லி விக்ரமசிங்க, மற்றும் குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சலாகே காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் நேற்றையதினம் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா (Febrio De-Zoysa) எனும் சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர், தனது 19 ஆவது பிறந்த தினத்தை படுகொலை செய்யப்பட்ட குறித்த குடுப்பத்தாருடன் இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடியிருந்தாகவும் இவரும் இலங்கையிலிருந்து கனடாவுக்கு மாணவர் விசாவில் வருகை தந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் 5 பேர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பார்ஹேவன் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தப் படுகொலைச் சம்பவம் நிகழ்த்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2024/1372680
  13. வடக்கின் பெரும் போர்-யாழ் நகர் எங்கும் பெரு விழா..! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு கல்லூரிகளினதும் கீதங்களுடன் போட்டி ஆரம்பமானது. https://thinakaran.com/வடக்கின்-பெரும்-போர்-யாழ/
  14. ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372617
  15. அமெரிக்க ஜனாதிபதியை நேரலை விவாதத்திற்கு வருமாறு ட்ரம்ப் அழைப்பு! அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரலை விவாதம் ஒன்றிற்கு வருமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் தலைவருடன் எந்தவொரு நேரத்திலும் நேரடி விவாதத்தில் பங்கேற்க தாம் தயாராக உள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னதாக நேரடி விவாதங்களில் பங்கேற்பது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எதுவித கருத்தினையும் வெளியிடவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க குடியரசுக்கட்சியின் வேட்பாளர் போட்டியில் இருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹேலி வெளியேறியதை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக நிக்கி ஹேலி பதவிவகித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக்டசி வேட்பாளர் ஜோபைடனுக்கு எதிராக குடியரசுகட்சியின் சார்பில் களமிறங்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372557
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.