Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76585
  • Joined

  • Days Won

    766

Everything posted by தமிழ் சிறி

  1. நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து, கசையடி விழ வாய்ப்புகள் உண்டு.
  2. ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை! இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://athavannews.com/2024/1375370
  3. வவுனியா ஓமந்தையில் பாரிய விபத்து – வைத்திய கலாநிதி அகிலேந்திரன் மரணம்! வவுனியா ஓமந்தையில் இன்று மாலை (27.03.24) இடம்பெற்ற பாரிய விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் டிப்பர் வாகனமும், கப் ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2024/1375341
  4. எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்! சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருதுகள் விழாவில் ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ என்ற பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பொத்துவில் அஸ்மினின் வரிகளில் சனுக விக்கிரமசிங்க மூலம் இயக்கப்பட்டு வின்டி குணதிலக பாடிய ‘ஐயோ சாமி நீ எனக்கு’ என்ற பாடல் 2023ஆம் ஆண்டுக்கான உணர்வுபூர்வமான, பாடல் விருதைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு சென்னையில் நடைபெற்ற 16 ஆவது எடிசன் விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப்பூர்வமான பாடலுக்கான விருது ஐயோ சாமி என்ற பாடலைப் பாடிய வின்டி குணதிலகவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இதற்கு முன்னதாக விமானத்திற்குள்ளேவைத்து அவருக்கு கேக் வெட்டி பாராட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச திரைப்படப் பாடல்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்றது. பாடலை எழுதிய பொத்துவில் அஸ்மின் மற்றும் இசை அமைத்த சனுக விக்கிரமசிங்க ஆகியோரும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். ஐயோ சாமி பாடலைப் பாடிய வின்டி குணதிலகவுக்கு 2023 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட சிறந்த உணர்ச்சிப் பாடலுக்கான விருது வழங்கப்பட்டது. அவரை வரவேற்க நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் திரண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த வின்டி குணதிலக்க, சர்வதேச விருதை நான் பெறுவது இதுவே முதல் முறை என்றும் இலங்கைக்கு சர்வதேச விருது ஒன்றை பெற்றுக்கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் குறிப்பிட்டிருந்தார். https://athavannews.com/2024/1375258
  5. சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்! புதிய Brexit கடவுச்சீட்டு விதி காரணமாக, இவ்வாண்டு சுமார் 1 இலட்சம் பிரித்தானியார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பிரித்தானிய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்படுகிறது. உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 32 மில்லியன் கடவுச்சிட்டுகள் தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆகையால் பிரித்தானியர்கள் வழக்கமாக செல்லும் ஐரோப்பிய நாடுகளான Iceland, Norway, Lichtenstein மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு செல்லும் முன்னர், தங்கள் கடவுச்சீட்டுகளை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நாடு திரும்பும் நாளில் இருந்து 3 மாதங்கள் வரையில் உங்கள் கடவுச்சீட்டு செல்லுபடியாகும் என்பதை உறுதி செய்ய வேண்டும். உங்கள் கடவுச்சீட்டானது செப்டம்பர் 2018க்கு முன்னர் விநியோகிக்கப்பட்டிருந்தால், அது 10 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் செல்லுபடியாகும். இந்த 10 ஆண்டுகள் விதியானது, கண்டிப்பாக ஐரோப்பாவை விரும்பும் பிரித்தானிய பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும் சில நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்யும் முன்னர் தங்களது கடவுடுச்சீட்டுகளை ஒருமுறை பரிசோதித்து உறுதி செய்யுமாறு பெரும்பாலானோர் அறிவுறுத்துகின்றனர். மேலும், இதுபோன்ற சிக்கலால் நாளும் நூற்றுக்கணக்கானோர் திருப்பி அனுப்பப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க பெரியவர்களுக்கு 88.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுவதுடன், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 57.50 பவுண்டுகள் வசூலிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375315
  6. மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் – உதயநிதி மத்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவதித்துள்ளார். திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பெண்களுக்கான, வங்கிக் கணக்குகளுக்கு 1000 ரூபாய் நிச்சயம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தேர்தல் முடிந்தவுடன், இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2024/1375113
  7. அமெரிக்காவில் சரக்குக் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விபத்து! அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் இன்று அதிகாலை படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் கப்பல் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன இந்த கப்பல் இலங்கை நோக்கிச் சென்றதாகவும் டாலி என்ற கப்பல் மோதியதில் 1.6 மைல் நீளமுள்ள பாலம் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளது. இந்த நிகழ்வின் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அத்துடன் பாலம் இடிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாக முதலில் தெரிவிக்கப்படாத போதிலும், விபத்தினால் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது என்றும் மேலும் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1375067
  8. திரைமறைவில்... காகத்துக்கும், நரிக்கும் சண்டை. 😂 🤣
  9. இப்தார் நிகழ்வில் காசா மக்களுக்கு உதவித்தொகையை கையளித்த கல்முனை கல்வி வலயம் ! இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால், மனிதாபிமான அடிப்படையில் 3 இலட்சம் ரூபாய் உதவித்தொகை கையளிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த உதவித் தொகை கையளிக்கப்பட்டது. இதன்போது, வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முதற்கட்ட காசோலையினை வழங்கி வைத்தார். வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய, கணக்காளரின் நெறிப்படுத்தலில், வலயக் கல்வி அலுவலக கல்விசார், கல்விசார ஊழியர்கள் மற்றும் அதிபர்களின் நிதி பங்களிப்புடன் இத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் இடம்பெறும் இப்தார் நிகழ்விற்கான செலவீனத்தை மட்டுப்படுத்தி இத்தொகையானது திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த இப்தார் நிகழ்வில் அரச நிறுவனங்களின் பிரதானிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், வலயக் கல்வி பணிமனை கணக்காளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1374992
  10. கோப் குழுவில் இருந்து ஐவரே உத்தியோக பூர்வமாகப் பதவி விலகியுள்ளனர்! கோப் குழுவின் தலைவராக ரோஹித அபேகுணவர்த்தன நியமிக்கப்பட்டதையடுத்து, அந்தக் குழுவிலிருந்து எதிரணி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பதவி விலகி வருகின்றனர். இந்நிலையில், டிலான் பெரேரா, துமிந்த திசாநாயக்க, எரான் விக்கிரமரத்ன, ளு.ஆ.மரிக்கார் மற்றும் சரித ஹேரத் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுர குமார திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, இரா. சாணக்கியன், தயாசிறி ஜயசேகர, காமினி வலேபொட, ஹேஷா விதானகே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோப் குழுவிலிருந்து விலகினாலும், இதுவரை உத்தியோகபூர்வமாக எழுத்துமூலம் அறிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எழுத்துமூலம் தெரியப்படுத்தும் வரையில் அவர்களின் பதவி விலகல் செல்லுபடியாகாது என்றும் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட கோப் குழுவில், ஆளுங்கட்சியின் சார்பில் 19 பேரும் எதிர்க்கட்சியின் சார்பில் 12 பேரும் நியமிக்கப்படுகின்றனர். சில உறுப்பினர்கள் பதவி விலகியதையடுத்து, ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை பதினெட்டாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை எட்டாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், கோப் குழுவின் கூட்டத்திற்கு 5 உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்பது போதுமானது என நாடாளுமன்றம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375005
  11. வட மாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை. வடமாகாணத்தில் கடந்த ஆண்டு 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 129 பேர் இது வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாவும், அவர்களில் 38 பேர் நீதிமன்றங்கள் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட பகுதிகளில் 14 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 44 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 11 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 05 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 04 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 06 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 04 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 08 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 07 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 13 கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் 37 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முற்படுத்தப்பட்ட நிலையில் , 05 சந்தேகநபர்கள் நீதிமன்றம் மூலம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1375023
  12. யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றது. இன்று காலை 9.25 மணி தொடக்கம் முற்பகல் 10.33 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெற்றது. காலை 6.00 மணி முதல் 7.10 மணிவரை இராஜகோபுர கும்பாபிஷேகமும் காலை 9.25 மணி முதல் 10.33 மணிவரை மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடந்த 20 ஆம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் ஆரம்பமானனதுடன் நேற்று மாலை 2.00 மணி வரை அடியார்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்துவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1374782
  13. இலங்கையில் ஏழுமலையான் கோவில் ! இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன. இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அனுகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது குறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து இலங்கையில் ஏழுமலையான் கோவிலை நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1374722
  14. 56 ஆண்டுகளாக வயிற்றில் இருந்த இறந்த குழந்தை! 56 ஆண்டுகளாக வயது முதிர்ந்த பெண்ணொருவரின் உடலில் குழந்தையொன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவம் பிரேசிலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 81 வயதான டேனிலா என்ற மூதாட்டியின் வயிற்றில் இருந்தே இவ்வாறு குழந்தையொன்றின் எலும்புக்கூட்டை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். குறித்த மூதாட்டிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளதாகவும், எனினும் அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அண்மைக்காலமாக அவர் தீவிர வயிற்று வலியில் துடித்து வந்துள்ளார் எனவும், இதனையடுத்து அவர் வைத்தியர்களை நாடியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த வைத்தியர்கள் அதில் இறந்த குழந்தை ஒன்றின் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலமாக வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புக் கூட்டை வைத்தியர்கள் நீக்கியுள்ள போதும், மூதாட்டி உடலில் ஏற்பட்ட தொற்றுக்காரணமாக உயிரிழந்துள்ளாார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1374815
  15. மாணவர்களுக்கு நாளை முதல் மதிய உணவு ! முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் நாளை (25) ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30 வரை இந்த காலை உணவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1374700
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.