Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76535
  • Joined

  • Days Won

    766

தமிழ் சிறி last won the day on March 8

தமிழ் சிறி had the most liked content!

About தமிழ் சிறி

  • Birthday 02/21/2008

Profile Information

  • Gender
    Male
  • Location
    தூணிலும்,துரும்பிலும்.
  • Interests
    இலையான் அடிப்பது.

Recent Profile Visitors

86567 profile views

தமிழ் சிறி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

21.7k

Reputation

  1. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
  2. ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
  3. இலங்கைத் தமிழர் உட்பட... உலகம் எங்கும் வாக்குப் போடத் தெரியாத கூட்டம் ஒன்று இருக்குது தானே... அதுதான்... இந்த 12%
  4. 3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை! “அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார். இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின், வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை. மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஒரே அடி தொலைவில் தான் இருக்கிறது. அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது. நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது என அவர் தெரிவித்தார். https://athavannews.com/2024/1373835
  5. அமோக வெற்றியீட்டிய ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு வாழ்த்துக்கள். 🥰
  6. ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் : அபார வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதியான விளாடிமிர் புடின். ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முடிவடைந்தது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் ஜனாதிபதியாக நீடிப்பார். அதன்மூலம் ரஷ்யாவை அதிக வருடங்கள் ஆண்டவர் என்ற பெருமையையும் விளாடிமிர் புட்டின் தனதாக்கிக்கொள்கின்றார். உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்களாக தொடரும் யுத்தம், எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் மரணம் போன்ற சம்பவங்கள், இந்த தேர்தலில் புட்டினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் மக்கள் திரண்டு வந்து விளாடிமிர் புட்டின் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், அவர் அபார வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதி பதிவியை தனதாக்கிக் கொண்டுள்ளார். இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது. விளாடிமிர் புட்டின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தார். போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார். எனவே இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடைபெறவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, தேர்தல் நடைபெற்றபோது உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். கேஜிபி லெப்டினன்ட் கர்னல்(KGB lieutenant colonel) ஆக இருந்த விளாடிமிர் புடின் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373804
  7. தமிழ்க் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் அரசாங்கம்? நிலாந்தன். ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய்மூல அறிக்கை அண்மையில் வெளிவந்தது.அதில் கூறப்பட்ட விடயங்கள் ஊடகங்களில் வெளிவந்தன.சில காணொளிகளும் அது தொடர்பாக வெளிவந்தன.அதற்கும் அப்பால் அது பற்றிய உரையாடல் பெரிய அளவில் நடக்கவில்லை. ஏனென்றால் தமிழ் மக்களுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் பல சோலிகள். எத்தனை விடயங்களைப் பற்றி தமிழ் மக்கள் சிந்திப்பது? ஒருபுறம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீர்வு இல்லை. இன்னொரு புறம் மேய்ச்சல் தரையை மீட்பதற்காக மட்டக்களப்பில் பண்ணையாளர்களும் செயற்பாட்டாளர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒப்பீட்டளவில் புதிய போராட்டம். அதற்கும் தீர்வு இல்லை. இவை தவிர இந்த மாதம் தொடக்கத்தில் சாந்தனின் உடல் நாட்டுக்கு வந்தது. அதன் பின் கடந்த சிவராத்திரி அன்று வெடுக்கு நாறி மலையில் பூசையில் ஈடுபட்டிருந்த மக்கள் மத்தியில் இருந்து எட்டுப் பேரை போலீஸ் கைது செய்தது. இப்படி ஒன்றன்பின் ஒன்றாக ஏதாவது ஒரு புதுப் பிரச்சினை தோன்றிக் கொண்டேயிருக்கிறது. தமிழ் மக்களின் கவனமும் தமிழ் கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்களின் கவனமும், தமிழ் ஊடகங்களின் கவனமும் குறிப்பாக காணொளிக்காரர்களின் கவனம் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு புதிய விடயத்தின் மீது குவிக்கப்படுகின்றது. இது தற்செயலான ஒன்றா? அல்லது திட்டமிட்டு தமிழ் மக்களின் கவனம் அவ்வாறு திருப்பப்படுகின்றதா? இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்படும் பல விடயங்களில் ஒன்று,அரசாங்கம் புதிதாக உருவாக்க முயற்சிக்கும் சட்டங்கள் மற்றும் உருவாக்கிய சட்டங்கள் பற்றியதாகும். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம், இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான சட்டம், சிவில் சமூகங்கள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய சட்டமூலம்.. போன்ற சட்டங்கள் மட்டும் சட்டமூலங்கள் தொடர்பாக தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் போதிய உரையாடல்கள் நிகழவில்லை. குறிப்பாக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக சுமந்திரன் ஒரு வழக்கைத் தொடுத்தார்.அந்தச் சட்டம் ஏன் தமிழ் மக்களுக்கும் பாதகமானது என்பதை பற்றி பெரிய அளவில் தமிழ் அரசியல் அரங்கில் விவாதங்கள் நடக்கவில்லை. அது மட்டுமல்ல இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பான சட்டமூலம், அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் போன்றவை தமிழ் மக்களையும் பாதிக்க கூடியவை. ஆனால் அவை தொடர்பாகவும் தமிழ் மக்களின் கவனம் பெரிய அளவில் ஈர்க்கப்படவில்லை. ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு புனர்வாழ்வு அதிகார சபை தொடர்பான ஒரு சட்டத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியபோது அதில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் காணப்பட்டார்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. அதிலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்பட்டது. அம்பிகா சற்குருநாதன்-முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர்,இப்பொழுது ஐநாவில் ஒரு பொறுப்பான பதவியில் உள்ளார்- ஒரு காணொளியில் கருத்துத் தெரிவிக்கும் போது, மேற்படி சட்டங்களை வெள்ளை வானுடன் ஒப்பிடுகிறார். 2009க்கு முன்பு வெள்ளை வான் இருந்தது.அது தமிழ் மக்களை அச்சுறுத்தியது. இப்பொழுது அரசாங்கம் சட்டங்களைக் கொண்டு வருகிறது. அவற்றின் மூலம் தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றது என்று அவர் கூறியுள்ளார். மேற்படி சட்டங்கள், சட்டமூலங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானவை. அவை தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் போதிய விவாதங்கள் நடக்கவில்லை. இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். தமிழ் மக்களைப் பாதிக்கக்கூடிய சட்டமூலங்கள்,சாந்தனின் விவகாரம்,ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை, கிழக்கில் மேய்ச்சல் தரைக்கான போராட்டம், வடக்கில் மரபுரிமைச் சொத்துக்களை பாதுகாப்பதற்கான போராட்டம்.. என்றெல்லாம் பல்வேறு விடயப் பரப்புகளின் மீது தமிழ் மக்கள் கவனத்தைக் குவிக்க வேண்டி இருக்கிறது. மேற்படி விவகாரங்கள் தொடர்பான போராட்டங்களில் சில அரசியல் செயற்பாட்டாளர்களையும் ஒரு சாமியாரையும் தொடர்ந்து எல்லாப் படங்களிலும் காணொளிகளிலும் காணமுடிகிறது.சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்பொழுது அடிக்கடி காணப்படுகிறார்கள். அண்மைக்காலங்களில் பல்கலைக்கழக மாணவர்களைக் காண முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழக மாணவர்கள் மேச்சல் தரைக்காக போராடுவதற்கு என்று மட்டக்களப்புக்கு போனார்கள். திரும்பி வரும் பொழுது போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் வைத்தார்கள். அதன் பின் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களுக்கு வருவது குறைவு என்று ஒரு செயற்பாட்டாளர் சொன்னார். கடந்த சுதந்திர தினத்தன்று கச்சேரிக்கு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் வரவில்லை என்றும் அவர் சொன்னார். சாந்தனின் உடலை யாரிடம் பொறுப்புக் கொடுப்பது. என்ற கேள்வி வந்தபொழுது, முதலில் பல்கலைக்கழக மாணவர்கள் அதற்குத் தயாராக இருந்தார்கள்.ஆனால் பின்னர் அவர்கள் அதைப் பொறுப்பேற்கத் தயங்கினார்கள் என்று ஒரு தகவல் உண்டு. அதனால் தான் அது வேறு அமைப்புக்களிடம் கொடுக்கப்பட்டது என்று நம்ப படுகின்றது.ஒரு கைது நடவடிக்கையோடு பல்கலைக்கழக மாணவர்கள் அச்சப்படும் நிலைமை தோன்றியிருக்கிறதா?ஆனால் இந்தப் போராட்டங்களில் அதிகமாகக் காணப்படும் சாமியார் இதுக்கு முன் கைது செய்யப்பட்டிருக்கிறார்; விசாரணைக்கு அழைக்கப்பட்டுமிருக்கிறார்.அவர் தொடர்ந்து போராட்டங்களில் முன்னணியில் காணப்படுகிறார். ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு இந்த மே மாதத்தோடு 15 ஆண்டுகள் ஆகின்றன.15 ஆண்டுகள் எனப்படுவது பெரிய காலம். இக்காலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சிவில் சமூகங்களோ அல்லது மக்கள் அமைப்புகளோ தோன்றியிருக்கவில்லை. ஒரு குறுகிய காலம் தமிழ் மக்கள் பேரவை நொதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுவும் பின்னர் இறந்து போய்விட்டது. இப்பொழுது கட்சிகள்தான் அரங்கில் நிற்கின்றன. இக்கட்சிகளும் கூட சிதறிக் கிடக்கின்றன. உள்ளதில் பெரிய கட்சி தமிழரசுக் கட்சி.அது யார் தலைவர் என்பதைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்துக்கு போயிருக்கிறது. இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டங்கள் இல்லை.தொடர்ச்சியான போராட்டங்களை எப்பொழுது நடத்தலாம் என்றால்,அதற்கு வேண்டிய பொறிமுறைகள் கட்டமைப்புகள் இருக்கும் பொழுதுதான். அப்படிப்பட்ட கட்டமைப்புகளை எப்பொழுது உருவாக்கலாம் என்றால், எல்லாரும் ஒன்றிணையும் போதுதான். ஆனால் ஒன்றிணைவு அல்லது ஐக்கியம் போன்ற விடயங்களைப் பற்றி உரையாடுவதே உள்நோக்கமுடையது என்று வியாக்கியானம் செய்யப்படுகின்றது. தமிழ் சிவில் சமூகங்களை வெளிநாட்டு தூதர்கள் சந்திக்கும் பொழுது அவர்கள் பொதுவாகக் கூறும் விடயங்களில் ஒன்று, உங்களுக்குள் ஐக்கியம் இல்லை என்பது. குறிப்பாக இந்தியத் தூதரக அதிகாரிகள் சந்திப்புகளின் போது அதைத் திரும்பத் திரும்பக் கூறுவதுண்டு. அதை வைத்துக்கொண்டு தூதரகங்கள் அதை விரும்புகின்றன,எனவே அதில் ஏதோ சூது இருக்கிறது என்று ஒரு வியாக்கியானம் வேறு வைக்கப்படுகிறது. “முதலில் நீங்கள் ஐக்கியப் படுங்கள் ” என்று கூறுவதன் மூலம் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல்வாதிகளின் வாயை அடைப்பதற்கு தூதரகங்கள் முயற்சிக்கக்கூடும். ஆனால் தூதரகங்கள் கூறுகின்றனவோ இல்லையோ தமிழ் மக்களுக்கு ஐக்கியம் தேவையா இல்லையா என்பதுதான் இங்குள்ள பிரதான கேள்வி. கடந்த 15 ஆண்டு கால தோல்விகளுக்கு ஐக்கியமின்மையே அடிப்படைக் காரணம் என்பதில் யாருக்காவது சந்தேகம் உண்டா? ஐக்கியம்தான் பலம் என்று பாலர் வகுப்பிலிருந்து தமிழ் மக்கள் படிக்கிறார்கள். “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு”, “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு ” என்றெல்லாம் அறநெறிகளைப் போதித்து விட்டு, இப்பொழுது ஏன் ஐக்கியப்பட வேண்டும் என்று கேட்கும் ஒரு நிலை. ஐக்கியப்பட முடியவில்லை என்பதால்தான் இப்படிக் கேட்கப்படுகிறது. எங்களால் முடியாத ஒன்றை தேவையா என்று கேட்கும் அரசியல் வங்குரோத்து நிலை. ஐக்கியத்தை ஏற்படுத்தத் தேவையான ஜனவசியம் மிக்க தலைமைகள் அரங்கில் இல்லை.எந்த ஒரு கட்சியும் ஏனைய கட்சிகளை கவர்ந்திழுக்கும் பலத்தோடும் சக்தியோடும் இல்லை. ஒவ்வொரு கட்சியும் தனி ஓட்டம்.கட்சிக்குள்ளேயே பிரமுகர்கள் தனி ஓட்டம். சிவில் சமூகங்களும் தனி ஓட்டம். அரசு சார்பற்ற நிறுவனங்களும் தனியோட்டம். தூதரகங்களைச் சந்திக்கப் போகும்போது தங்களுக்கு இடையே ஒன்று கூடிக் கதைத்து விட்டுப் போகும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மிகக் குறைவு. அவ்வாறு செல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிநாட்டுத் தூதுவர்கள் முன் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.தங்களுக்கு இடையே முன்கூட்டியே உரையாடி யார்,எதைக் கதைப்பது என்பதனைத் தீர்மானித்து விட்டுச் செல்லும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் வெளிநாட்டுத் தூதுவர்களின் முன்னிலையில் சிறப்பாக கருத்துருவாக்கம் செய்கிறார்கள். அதை அரசியல் கட்சிகளும் பின்பற்றினால் என்ன? கடந்த 15 ஆண்டுகளாக இதைத்தான் தொடர்ந்து எழுத வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகங்களும் தாங்களாக ஐக்கியப் படுகின்றனவோ இல்லையோ அரசாங்கம் அவர்களை ஐக்கியப் படுத்துகின்றது என்பது மட்டும் உண்மை. கடந்த வாரம் வெடுக்கு நாறி மலையில் சிவராத்திரி பூஜையில் எட்டுப் பேர் கைது செய்யப்பட்ட விடயம் ஒப்பீட்டளவில் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் ஐக்கியப்படுத்தியிருக்கிறது. அது தற்காலிகமானது. ஆனாலும் எதிர் தரப்புத்தான் தமிழ்க் கட்சிகளை ஐக்கிய படுத்துகின்றது என்பதனை அது மீண்டும் நிரூபித்திருக்கிறது. https://athavannews.com/2024/1373752
  8. தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை 1, 700 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை! மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாள் சம்பளத்தை ஆயிரத்து 700 ரூபாயாக அதிகரித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் வழங்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமானினால், மக்களுக்கு கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான சக்திவேல், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373605
  9. நாட்டில் நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு! நாட்டில் வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில் தற்போது நீதிபதிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரித்துள்ளமை தொடர்பாகத் தாம் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவும், இதன் காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1373610
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.