Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76717
  • Joined

  • Days Won

    768

தமிழ் சிறி last won the day on April 6

தமிழ் சிறி had the most liked content!

About தமிழ் சிறி

  • Birthday 02/21/2008

Profile Information

  • Gender
    Male
  • Location
    தூணிலும்,துரும்பிலும்.
  • Interests
    இலையான் அடிப்பது.

Recent Profile Visitors

87078 profile views

தமிழ் சிறி's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Year In
  • One Month Later

Recent Badges

21.8k

Reputation

  1. கிட்டத் தட்ட ஒரு மாதத்திற்கு முன் (March 19) வந்த தீர்ப்பை இது வரை எந்தத் தமிழ் ஊடகமும் வெளியிடாமல், ஆதவன் கூட தாமதமாகத்தான் வெளியிட்டு இருப்பதன் மர்மம் புரியவில்லை. சும்மா செய்திகளுக்கே இந்த யூ ரியூப் காணொளி தயாரிப்பவர்கள் சலங்கை கட்டி ஆடுவார்கள். அவர்களும் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கின்றார்கள். 😂
  2. இனி…. எப்படியும் தெரிய வரும். 🤣 ஆதவனுக்கு ஏழரையா… சவுக்குக்கு ஏழரையா… என்று தெரியவில்லை. 😂
  3. ஆதவன் இணையம் லைக்காவினுடையது என நினைக்கின்றேன். நீதிமன்றம் சம்பந்தப் பட்ட செய்தி என்றபடியால் தவறாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. பொய்ச் செய்தி என்றால்… சவுக்கு சங்கரும் ஆதவனை நார் நாராக கிழித்துப் போட்டு விடுவார். 😂 🤣
  4. வெய்யில் பிடித்த இடம் எல்லாம் கறுத்து இருக்கு. 😂
  5. சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
  6. லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March) மாதம் 19 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும் நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube பக்கத்தில், லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின் மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த காணொளிகள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட YouTube LLC நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர் பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube LLC தரப்பில், தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன் சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube LLC சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, விசாரணையை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  7. பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது. சரி போகுது.... யார் குற்றினாலும், அரிசி ஆனால் சரிதானே... 🤣 (இலங்கை ராணுவம் பலி)
  8. 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  9. சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  10. யாழ்ப்பாணத்துக்கும் இசை நிகழ்ச்சிக்கும் எட்டாப் பொருத்தம் போலை கிடக்கு.
  11. ஹாஹாஹா,,,,,, இந்த ஜோக்கை இப்பதான் முதன் முதல் கேள்விப்படுகிறன்.😋 "வேறை லெவல்" ஜோக். நிச்சயம் இது, முகநூல், ருவிற்றர் எல்லாம் சக்கை போடப் போகுது.🤩 இந்த ஜோக்குக்கு கீழை... கோசான் என்று எழுதி விடுங்கோ. 😁 இல்லாட்டி ஆரும் ஆட்டையை போட்டுட்டு தங்கடை என்று உரிமை கொண்டாடி விடுவார்கள். 😂🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.