• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நிழலி

கருத்துக்கள பொறுப்பாளர்கள்
 • Content Count

  11,525
 • Joined

 • Last visited

 • Days Won

  133

நிழலி last won the day on September 20

நிழலி had the most liked content!

Community Reputation

4,049 நட்சத்திரம்

About நிழலி

 • Rank
  ர.சி.க.ன்
 • Birthday 12/15/1974

Profile Information

 • Gender
  Male
 • Location
  Canada
 • Interests
  காமமும் கலவியும்

Recent Profile Visitors

18,384 profile views
 1. ஆர் என்ன எப்படி சொன்னாலும், இந்த விபத்தின் காரணம் நெடுக்கர் சொல்ற மாதிரி சிங்கள ரயில் தான். இது மட்டும் தமிழ் ரயிலாக இருந்திருந்தால் இப்படி நடந்து இருக்குமா?
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேஷ்
 3. நிழலி

  தமிழ்த் துரோகி

  முதலில் இருந்து இறுதி வரைக்கும் அங்கதம். மயிர் கோவணம் தூமை ... சிரிச்சு சிரிச்சு நானும் வாசித்தன் ஆனாலும் அந்த கடைசி வரி ..............டொப்!
 4. சந்தேக நபருக்கு இரண்டு பிள்ளைகள் (+ மனைவி), கொலையுண்டான பெண்ணுக்கு 5 வயதில் மாற்றுத்திறனாளி மகள்.... ஆனால் இரண்டும் தம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் தங்கள் 'அமரத்துவ' காதலுக்காக தற்கொலை செய்ய வெளிக்கிட்டு இருக்கினம். பாவம் அந்த பிள்ளைகள் தான். முக்கியமாக அந்த பெண் பிள்ளை வழக்கம் போல நடந்தது என்னவென்று தெரியும் முன்னரே நெடுக்கரும் போலும் சிங்களம் தான் இதுக்கு காரணம் என்று முழங்கி போட்டினம்.
 5. உண்மையில் இந்த போராட்டத்தின் காரணம் எனக்கு தெளிவாக விளங்கி கொள்ள முடியாமல் இருக்கு. தம் ஆபாச படங்களை / லீலைகளை வெளியிடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுகின்றனர். அப் பெண்கள் வெளிநாட்டு பெண்களா அல்லது வவுனியாவிலேயே உள்ளவர்களா? வெளிநாடு என்றால் இலங்கையால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? ஆபாச படங்களை தடை செய்ய வேண்டும் என்றால் அரபு நாடுகளின் நடைமுறைகள் போன்று இறுக்கமான நடைமுறைகள் கொண்டு வர வேண்டும். அது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் சாத்தியமில்லை. 95 வீதமான இணையத்தளங்கள் வெளினாடுகளில் இருந்து இயக்கப்படுபவை. பல சட்ட ரீதியிலான வியாபாரம் (porn industry) உண்மையில் இவர்கள் செய்ய வேண்டியது தம் பிள்ளைகளுக்கு, இளைஞர்களுக்கு சரியான புரிதலை, ஆண் பெண் இடையிலான ஆரோக்கியமான உறவை பற்றி அறிவூட்டுவது . என்னைப் பொறுத்தவரைக்கும் ஆபாச படங்களை விட ஆபத்தானது இந்திய தொலைகாட்சி தொடர்கள். ஆண் பெண் உறவை இந்த தொடர்கள் போன்று கேவலமாக சித்தரிக்க முடியாது. எல்லாவற்றையும் விட தம் பிள்ளைகளுக்கு கட்டற்ற சுதந்திரத்தை கொடுக்கும் அலைபேசிகளை கட்டுப்படுத்துவது.
 6. அப்படியே திருமணமான ஆண்களும் பக்கத்து வீட்டில்/ முன் வீட்டில் மற்றும் தோழிகளின் வீட்டில் தங்க முடியும் என்றும் தீர்ப்பு எழுதுங்கள் யுவர் ஆனர். நாங்களும் மேஜர் தான்.
 7. புங்கைக நாலு விசயம் தெரிந்த ஆள் என்ற என் எண்ணத்தை இன்றோடு மாத்திட்டன்
 8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நந்தன்
 9. தமிழ் சிறி. அன்று மலையாளத்தவர்கள் இல்லாமல் வேறு யாரு இந்திருந்தாலும் எந்த மாற்றமும் வந்திருக்காது. ஏன் தமிழக தமிழர்கள் அந்த நேரத்தில் அதிகாரிகளாக இருந்திருந்தாலும் இதுதான் நடந்து இருக்கும். ஏனெனில் அதிகாரிகளுக்கான உத்தரவு அனைத்தையும் இட்டு யுத்தத்தை நடாத்திய இந்திய மத்திய அரசும் பார்ப்பனியமும்.. பார்த்தசாரதி இருந்த காலம் இந்திரா காந்தி அம்மையாரின் காலம். இந்திரா காந்தி எம் மக்கள் மீது அன்பு கொண்டு எமக்காக ஆதரவு கொடுக்கவில்லை. பனிப்போர் காலத்தில் அமெரிக்கா பக்கம் இலங்கை சாய்ந்தமையால் (வொய்ஸ் ஒப் அமெரிக்கா வானொலி நிலையத்தை இலங்கையில் நிறுவும் அளவுக்கு...) இலங்கையை வழிக்கு கொண்டு வர இந்தியா இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்து ஆதரவு காட்டியது. நாங்கள் பார்ப்பனியத்தை புரிந்து கொள்ளாமல், அதன் தமிழ் தேசிய தீவிர எதிர்ப்பை விளங்கி கொள்ளாமல் தனி நபர்களையும் அவர்கள் சார்ந்த இனத்தையும் கரிச்சுக் கொட்டிக் கொண்டு இருக்கின்றோம்.
 10. தமிழகத்து தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தமிழக மக்கள் தான் தம் தலைவர்கள் நல்லவர்களா, ஊழல் செய்தவர்களா, 3 பெண்களை திருமணம் செய்தவரா என்று பார்த்து தம் வாக்கை தீர்மானிக்க வேண்டும். அவர்கள் தலைவர்களை விமர்சித்து அம்பலப்படுத்த அங்கு ஏராளமான ஊடகங்களும், அமைப்புகளும் கட்சிகளும் இருக்கு. இந்தியாவில் தமிழகத்தில் வாக்களிக்க உரிமையில்லாத நாம் அதை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எமக்கு தேவையெல்லாம் தமிழகத்தின் தார்மீக ஆதரவு. கலை, கலாச்சார, மொழி ரீதியான ஒற்றுமை இருப்பதாலும் வியாபார நலன்கள் இருப்பதாலும் அவர்களின் தார்மீக ஆதரவு எமக்கு அவசியம். நாம் கட்சி பார்த்து ஆதரவு கொடுப்பதும் அவர்களின் தலைவர்களின் சாவை வரவேற்று மகிழ்ச்சி தெரிவிப்பதும் எந்த நன்மையையும் கொடுக்கப் போவதில்லை. மேலும் மேலும் எதிரிகளை சம்பாதிக்கவும் மேலும் மேலும் தனிமைப்படவும் மட்டுமே உதவும்.
 11. காழ்ப்புணர்வற்ற குழுவாதம் சாராத நல்ல கருத்தாடல்களுக்கு ஏன் கோபம் வரப் போகின்றது ரகு? எனக்கு உங்கள் கருத்தில் எந்த கோபமும் இல்லை. அதே நேரத்தில் கிருபன் கூறியிருப்பது போன்று முள்ளிவாய்க்காலுக்கும் சகோதர சண்டைக்கும் கருணாநிதியை சாட்டி தப்பித்துக் கொள்ளும் போக்குக்கும் ஒரு கோடிக்கும் மேலாக இருக்கும் திமுக ஆதரவளார்களின் எதிர்ப்பை அவரது மரணத்தை கொண்டாடி பெறுவதற்கும் நான் எதிராக இருக்கின்றேன். அத்துடன் ராஜீவ் படுகொலைக்கு முன்னர் இந்தியப் படைகளுடனான யுத்த காலத்தில் கூட காயம்பட்ட போராளிகள் தமிழகத்தில் சிகிச்சை பெறும் அளவுக்கு நெகிழ்வுத்தன்மையுடன் தமிழக அரசு நடந்து கொண்டமைக்கும் ஈழ அகதிகள் இன்றிருக்கும் கெடுபிடிகள் எதுவும் இன்றி அன்று இருக்க ககூடிய சூழ்நிலையை கொடுத்தமைக்கும் கருணாநிதியும் ஒரு காரணம் என்பதையும் மறுக்கவில்லை.
 12. ஓரளவுக்கு ஏனும் ஈழத் தமிழர்கள் மேல் அனுதாபம் மட்டும் சிறிதளவு ஆதரவு போக்கை கொண்ட இந்திய ஆட்சியாளர்களாக விளங்கியவர்கள் இருவர். ஒருவர் வி.பி.சிங், மற்றவர் வாஜ்பாய். வாஜ்பாய் காலத்தில் தான் (1999 to 2004) இலங்கை இராணுவம் ஜெயசிக்குரு ஆரம்பித்து 1999 இல் படுதோல்வி அடைந்தது. இக் காலத்தில் புலிகள் ஆயுத மற்றும் வள ரீதியில் உச்சத்தை அடையக் கூடிய விதமாக கடற்புலிகளின் பலம் பெரு வளர்ச்சி அடைந்து இருந்தது. இதற்கு வாஜ்பாய் அரசில் இருந்த புலிகளின் அனுதாபி என சொல்லப்படுகின்ற இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்ணாண்டஸ் இந்திய கடற்படையை புலிகளுக்கு எதிராக பெரியளவில் இயங்க விடாமை தான் காரணம் என அப்போது சொல்லப்பட்டது. புலிகளின் ஓயாத அலைகள் 3 உம் இவரது ஆட்சி காலத்தில் தான் இடம்பெற்றது. ஆனால் யாழ்ப்பாணத்தை புலிகள் முழுமையாக கைப்பற்ற முற்பட்ட வேளை ராஜதந்திர செயற்பாடுகள் மூலம் அதை தடுத்ததும் வாஜ்பாய் அரசு தான் (மேலே நான் எழுதியுள்ளது என் நினைவுகளில் இருந்து- சில தவறுகள் இருக்கலாம்) வாஜ்பாய் இற்கு அஞ்சலிகள்
 13. நிழலி

  படலையில் ஒரு மணி

  சிறிய கதையாகினும் நல்லதொரு கதை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்களின் துயரம் கொடுமையானது. ஒவ்வொரு வேளை உண்ணும் போதும் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் சாப்பிட்டு இருப்பார்களா என நினைத்து கவலைப்பட வைக்கும். தனி, எழுதும் போது முற்றுப் புள்ளிகள், கமா என்பனவற்றை அதற்கேற்ற இடங்களில் பயன்படுத்தலாமே. முற்றுப்புள்ளிகள் இல்லாமல் வாசிப்பது கொஞ்சம் கடினமாகவும் கதையின் ஆழத்தை உணர்வதற்கு இடைஞ்ச்சலாகவும் இருக்கு.
 14. ஓ மரணித்த வீரனே பாடல் எப்ப கேட்டாலும் மனசுக்குள் கண்ணீரை கசிய வைக்கும் பாடல். மிகவும் கனதியான மனனிலைக்கு அழைத்துச் செல்லக் கூடிய பாட்டு ஊரில் இருக்கும் போது (சுண்டிக்குளி) ராஜன் இசைக்குழுவின் பல நிகழ்ச்சிகள் பலவற்றை ரசித்து இருக்கின்றேன். ரமணனின் கிட்டார் இசை அற்புதமாக இருக்கும். சினிமா பாடல்களில் 'மைனா மைனா மாமன் பிடிச்ச மைனா' வும் 'ராஜா ராஜாதி ராஜன் எங்கள் ராஜாவும்' இவர் குரலில் கேட்க அருமையாக இருக்கும். ரமணனுக்கு அஞ்சலிகள்
 15. மொக்கு மனுசி, பார்த்து போட்டு உடனே அழிக்காமல் வைச்சு இருக்கு, மகனும் அதில் இருந்து எடுத்து தன் கை தொலைபேசிக்கு அனுப்பி இருக்கார்.