vanangaamudi

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,480
 • Joined

 • Last visited

Community Reputation

141 Excellent

About vanangaamudi

 • Rank
  Advanced Member

Contact Methods

 • Website URL
  http://
 • ICQ
  0

Recent Profile Visitors

2,456 profile views
 1. மேற்படி சந்தேகநபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் பதிராஜா தலைமையில் நேற்று பகல் பாம்கார்டன் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. செய்தியின் சாராம்சத்தையே பிழையாக புரிந்து கொண்டேன். உண்மையில் "மேற்படி சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேகநபரை(அல்லது சந்தேக நபர்களை) கைது செய்யுமாறு கோரி ............. " என்று எழுதப்படவேண்டும்.
 2. புதிய சுதந்திரன் மாட்டுவாகடத்தை வைத்து மனிசருக்கு வைத்தியம் பார்க்க விடாப்புடியா நிக்கிது.
 3. நக்குற நாயிக்கு செக்கு என்ன சிவலிங்கமென்ன ... எல்லாமே ஒண்ணுதானே பாஸ்.
 4. நம்பாளுங்க சிலருக்கு ஆயுள்ரேகை ரொம்ப கெட்டிணு வீராப்பு பேசினா நாம அதுக்கு ஏதாச்சும் பண்ணணும்.
 5. ஐயோ ஐயோ-இப்படி போலீசார் நீதிமன்றத்துக்கு சொன்னார்களா நம்ப முடியலை. தொல்பொருள் ஆய்வு என்றபோர்வையில் புதிதாக எந்தவொரு மதத்தினையும் சேர்ந்த ஆலயங்கள் அமைப்பதும் கட்டுமானங்களையும் மேற்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு நிர்மாணிப்பதாக இருந்தால் பொலிசில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றின் அனுமதியுடன் மேற்கொள்ளமுடியும் என்றும் தெரிவித்தார். கடைசியிலை இது நமக்கே ஆப்பா???
 6. vanangaamudi

  நகைக் கள்ளனும் நானும்

  சிறிது நகைச்சுவைக்காக அப்படி கூறினேன் எனினும் அதற்கும் சந்தர்ப்பம் இல்லாமல் இல்லை. நீங்கள் புறப்படும்போது உங்கள் கணவர் வீட்டில் இருந்திருக்கிறார் போல் உணரமுடிகிறது. இழந்த பொருளை முதன்மைப்படுத்தி உங்களுக்கு நடந்த சம்பவத்தையும் உங்கள் ஆதங்கத்தையும் தடாலடியாக உங்கள் பதிவினூடாக வெளிப்படுத்தியிருக்கவேண்டிய நீங்கள் "மேலே சொன்னது போல் நடந்திருக்கும் என்றுதான் எல்லோரும் நினைப்பீர்கள். ஆனால் நடந்ததோ ..... " என்று சொல்லி நிறுத்தி சிறிது சஸ்பென்சை இழையோடவைத்து வாசகரின் பொழுதுபோக்கு அம்சம்போல நீங்கள் விபரிப்பது சம்பவத்தின் உண்மைத்தன்மையில் வாசகர் வைக்கும் நம்பிக்கையை மிகவும் சரியவைத்துவிட்டது என்றுதான் சொல்லுவேன். அதேவேளை திருடர்கள் தொலைவிலேயே முகமூடிசகிதம் தம்மை தயார்படுத்திக்கொண்டு உங்களை நோக்கிவந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு உங்கள் பற்றிய தகவலை முன்கூட்டியே யாரோ தெரிவித்திருக்கிறார்கள். முகமூடியுடன் நீண்ட தூரம் பயணம் செய்யும்போது பலரின் அவதானிப்புக்குள்ளாகலாம் என்பதையும் திருடர்கள் அசட்டைசெய்து உங்களை அணுகியிருக்கிறார்கள்.
 7. vanangaamudi

  நகைக் கள்ளனும் நானும்

  இந்த வழிப்பறிக்கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களை பொலிஸ் கோணத்தில் விசாரணைசெய்வதானால் உங்கள் கணவரும் லிஸ்டில் இருக்கிறார். எதற்கும் அவரையும் கூப்பிட்டு "அன்போடு" விசாரித்தால் நல்லது. அண்மையில் நிகழ்ந்த விம்பிள்டன் பிள்ளையார் தேரின்போதும் 4-5 தாலிகள் களவாடப்பட்டதாக டாக்சிக்காரர் சொன்னார். அதுபோக மரணவீட்டு திருமணவீடுகளுக்குச் முழுப்பாரத்துடன் செல்லும் பெண்பளின் ஆபரணங்களை அவ்வப்போது கறுப்பர்கள் சூறையாடுவதாகவும் அறிந்தேன். தாலிக்கொடியாக இருந்தால் கழுத்து போயிரும்.
 8. vanangaamudi

  நகைக் கள்ளனும் நானும்

  வழிப்பறி செய்த கள்வர்களைத் துரத்திக்கொண்டு வந்த இரண்டு போலந்துகாரர்கள் சரியாக அப்போதுதான் சொல்லிவைத்தாற்போல் வந்தார்கள் என்றபடியால் எனது சிந்தனைக்கு அவர்களிலும் சந்தேகமே வருகிறது. தமது சகாக்கள்(கள்வர்கள்) பொருளுடன் தப்பிச் செல்வதை அன்னியரைப்போல் நின்று உதவுவது இவர்கள் போன்றவர்களின் பொறுப்பு. களவு கொடுத்தவருக்கு கள்வனைப்பற்றி என்னென்ன துப்புகள் கிடைத்துள்ளன - என்னென்ன பொருட்கள் மீதியாய் உள்ளன - காயம் எதுவும் ஏற்பட்டதா என்பது போன:ற தரவுகளை களவு கொடுத்தவருடன் அளவளாவி இவர்கள் அறிந்து தமது குழுவை உசாராக்கிக்கொள்வார்கள். அண்மையில் இலண்டன் ஒக்ஸ்போட் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் என் கண்ணுக்கு முன்பாக நிகழ்ந்த இதுபோன்ற ஒரு வழிப்பறியை நான் கண்டிருக்கிறேன். அங்கும் முதலில் உதவிக்கு வந்தது இரண்டு கிழக்கு ஐரோப்பிய ஆண்கள். சிறிதுநேர விசாரணையின்பின் பொலிசார் அந்த இரண்டு நபர்களையும் தமது வண்டியில் ஏற்றிச் சென்றதையும் கண்டேன்.
 9. இவர் ஒரு சிங்களவரா அல்லது தமிழரா? நடை உடையை பார்க்க ஒரு தினிசா இருக்கு. சிங்கள கலாசாரம் மெல்ல மெல்ல தமிழரை ஆக்கரமிப்பது இவரில் தெரிகிறது. அசிங்கமாக கழுத்தை இறுக்கியபடி இவர் அணிந்திருக்கும் மேலாடைபோல் தமிழர் எவரும் அணிவதை நான் முன்னர் பார்த்ததில்லை. தமிழ் பெண்களும் அழகான தமிழ் கலாசார முறையில் சேலை உடுத்துவதை கைவிட்டு தென்னிலங்கை பெண்கள்போல் உடுத்த விரைவில் மாறிவிடுவார்களோ தெரியவில்லை.
 10. எதற்காக இப்படி அண்டனோவ் அது இது என பில்ட் அப் கொடுங்கினமோ தெரியாது. ஆனால் இது எதுவும் தமிழருக்கு நல்லது செய்யவேணும் என்று செய்யப்படவில்லை என்பது மட்டும் உண்மை. cargo வா passenger விமானமா? எந்த அண்டனோவை சொல்லுறாங்கண்ணு புரியலை. An-225 அண்டனோவ் எம்பி உயரபறக்கமுன்னரே திருச்சி விமானநிலையம் வந்திடும்.
 11. நல்ல நாடு அதுக்கு ஒரு நல்ல அதிபர். வாழ்ந்திடும். நீதிக்குமுன்னுரிமை வழங்கி அவர்கள் கேட்கும் தகவல்களை முப்படைகளும் வழங்கவேண்டும் என்று கட்டளை போடுவியா. நீதிமன்றம் கேட்ட தகவல்கள் உள்ளகத்தகவலா இல்லையா என்பதை இப்போது யார் முடிவுசெய்வது? வெளியிடக்கூடிய தகவல்களையும் வெளியிடாமல் விடுவதற்கு இக்கட்டளையை முப்படையும் பயன்படுத்தும் ஆபத்து உள்ளது. நீதிமன்றத்தின் ஆணையை உதாசீனப்படுத்தும் இலங்கை நாட்டின் அதியுயர் பதவியிலிருக்கும் அதிபரின் இந்த அசமந்தப்போக்கு இலங்கைத்தீவின் நீதிப்பொறிமுறையை கேள்விக்குறியாக்குகிறது. அரசியல் விவகாரங்களில் நாட்டின் அதிபரை வழிநடத்தலுக்கும் ஆலோசனை செய்வதற்கும் உதவிக்குழு ஒன்று அதிபருக்கு அருகில் இல்லையா எதையும் எடுத்தவாக்கில் சொல்லுவாரா?
 12. பொலீசார் சந்தேக நபரை விசாரணை செய்யும் முறையும் தடையப்பொருட்களை கையாளும் விதமும் அவர்கள் அதற்கு இன்னும் ஒரு படி மேலே போய் இதை அனைத்தையும் காணொளியில் பதிவுசெய்து இணையத்தில் தரவேற்றி பகிரங்கப்படுத்துவதும் பொலீசார் நீதிக்கு முரணாக செயற்படுவதாகவே பார்க்கத் தோன்றுகிறது. ஒரு நீதிமன்றில் தீர்ப்பு வழங்கும்வரை அவர் ஒரு சந்தேகநபர் மட்டும்தான் என்பதும் நீதிமன்றில் அவர் குற்றம் நிருபிக்கப்படாவிட்டால் அவர் விடுதலையும் செய்யப்படலாம். நெடுக்கர் சொல்வதுபோல் பொலீசார் திட்டமிட்டு நாடகமொன்றை மேடையேற்றுகிறார்களோ என சந்தேகிக்க நிறையவே இடமுண்டு.
 13. இது போன்ற நிலம், கடல், ஆகாயம் சம்பத்தப்பட்ட ஒப்பந்தங்களில் மாதாந்த வாடகை அல்லது குத்தகை அறவிடப்படுவதுதில்லை. உதாரணத்துக்கு எண்ணைஅகழ்வை குறிப்பிடமுடியும். ஒப்பந்தத்தை காலவரைசெய்து குறித்த சில வருடங்களுக்கு ஒருமுறை மீள்பரிசீலனைசெய்து சொல்லப்பட்ட தொகையை மாற்றவும் அல்லது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளவும் பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும். சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்கான உத்தரவாதம் உறுதிசெய்யப்பட்டு அப்படி ஒன்று ஏற்படும்பட்சத்தில் தண்டனை அல்லது அபராதம் என்ன என்பதையும் தவறினால் ஆலையை இழுத்து மூடுவதற்குமான எச்சரிக்கை எழுத்து மூலம் வழங்கப்பட்டிருக்கும். காற்றாலைகளில் இயற்கைவளமாகிய காற்றுதான் மூலப்பொருள். மாறாக இவற்றிற்கு சொந்தக்காரரான அரசு (அரசின் பொருளாதார மூலதனங்களுக்கு பொறுப்பான நிறுவனம் ஒன்றின் ஊடாக) இயற்கைவளங்களை மூலப்பொருளாக கொள்ளும் அனைத்து வணிக கட்டுமானங்களிலும் அரசு குறைந்தது 51 வீதம் பங்குதாரராக இணைக்கப்பட்டு வரும் இலாபத்தில் 51 வீதத்தையும் மீதியாயுள்ள 49 வீத இலாபத்துக்கு உரித்துடைய சக நிறுவனத்திடமிருந்து வழமையான வருமானவரியையும் பெற்றுக்கொள்ளும். ஆனாலும் கணிசமான காலக்கட்டத்துக்கு இதுபோன்ற முதலீட்டை ஊக்கிவிப்பதற்கு வருமானவரியின் அளவை குறைந்ததும் முதலீட்டு வரியை தளர்த்தி அல்லது விலக்கியும் சக நிறுவனத்துக்கு உதவலாம். ஒப்பீட்டளவில் இயற்கைக்கு காற்றாலையால் வரும் தாக்கம் மிக மிக குறைவு. எரிபொருள் அல்லது அணுசக்கியினூடாக மின்சாரம் பெறப்படும்போது பல ஆயிரம் மடங்கு இயற்கை பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலைநாடுகளில் ஆட்சியாளர்கள் எதிர்காலத்தில் மின்சாரத்தை முற்றிலும் சூரியஒளி நீர்வீழ்ச்சி காற்று கடலலை ஆகிய இயற்கை மூலப்பொருள் ஊடாக பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கின்றனர்.
 14. மன்னார் எலும்புக்கூடு அகழ்வில் கட்டம் கட்டமாக பல எலும்புக்கூடுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் அதன் தாக்கங்களை ஒடுக்கும் செயலாகவும் நெருக்கடிகளை சமாளிக்க அகழ்வுப்பணிகளை கிடப்பில் போடவும் சிங்கள அரசு நீதவான் ரீ.ஜே.பிரபாகரன் அவர்களை இடமாற்றம் செய்வதாக நான் ஊகிக்கிறேன்.