Jump to content

Thumpalayan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1476
  • Joined

  • Last visited

  • Days Won

    25

Thumpalayan last won the day on January 12 2020

Thumpalayan had the most liked content!

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Location
    Australia

Recent Profile Visitors

4315 profile views

Thumpalayan's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator

Recent Badges

729

Reputation

  1. நான் நினச்சன் கொன்ராக் எண்டா இரவு பகலா வேலை நடக்கும் எண்டு. ஊருக்க ரண்டு மூண்டு வீடு கொன்ராக்கில சிங்கள ஆக்களிட்ட குடுத்து கட்டுப்பட்டது. அவங்கள் வந்து ஒரு வீட்ட வாடைக்கு எடுத்து கட கட எண்டு கட்டி முடிச்சிட்டாங்கள். வாகனத்த யோசிச்சு எடுங்கோ. காசு திரும்ப வராது எண்டு நினைச்சுப் போடுங்கோ. மற்றது மோட்டச்சைக்கிள் வாகனம் ஓடுறது வலு கவனம். றோட் றூல்ஸ் ஒருத்தருக்கும் வடிவா தெரியாது, தெரிஞ்சாலும் கடைப்பிடிக்கிறேல்ல. வாகனத்தால அடிச்சு ஆரும் செத்தால் கேம் ஓவர் றிமாண்டுக்க தூக்கிப் போட்டிடுவாங்கள். மற்றது பொலிஸ் மறிக்கேக்க என்ன தான் பிழை விடாட்டிக்கும் கொஞ்சம் இறங்கி வந்து கதைச்சா அலுப்படிக்காம விடுவாங்கள். அவங்கள் அலுப்பு குடுக்க வெளிக்கிடாங்களோ நோண்டிக்கொண்டு நிப்பாங்கள். நான் இலங்கை IC இலங்கை லைசன்ஸ், அதுவும் இருவது வரியப் பழய சாமான், சோ படு லோக்கல், மற்றது சிங்களம் ஓரளவு தெரியும்.
  2. ஒரு காலத்தில் குறிப்பாக 2018-19 காலப்பகுதியில் நான் கொழும்பில்/ஊரில் போய் இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தேன். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் (எனது துறை அல்ல) வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் ஆராய்ந்து WSO2, Virtusa போன்ற பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களையும் சந்தித்திருந்தேன். ஆனால் கொரோனோ வந்த பின்னர் எல்லாம் கிடப்பில் போட்டாச்சு. ஊரிலே காணி வாங்கியதுக்கு வாழ்த்துகள். செலவோட செலவா மதிலக் கட்டி விடுங்கோ, இல்லாட்டிக்கு பிற்காலத்தில கன தலையிடி வரும். காணி வேலைளுக்கு கொன்ராக் மாதிரி குடுத்து செய்விக்கேலாதோ? ஸ்கூட்டி ஓடுறது கவனம். சின்னக் கார் நல்லது ஆனால் ஆரையும் நம்பி குடுத்தியளோ, அவளவுதான். ஊரில் அப்பா அம்மா இருப்பதால் 2009 23 லச்சத்துக்கு இதை எடுத்து விட்டன். டீசல் வாகனம், றைவர் தவிர ஏழு பேர் சாமான்களோட வசதியா போகலாம். நான் போய் நிக்கும் ஒரு மாசத்துக்கு திறப்பு என்ட கையில என்டது வாங்கேக்க போட்ட கொன்டிசன்.
  3. சகரா அக்கா செய்தது பாராட்ட வேண்டிய விசயம். செவிடைப் பொத்தி போட்டிருந்தால் இன்னும் சிறப்பான சம்பவமாக இருந்திருக்கும். கண்ட கண்ட காவாலியளிண்ட சேட்டை ஊரில கூடீட்டு. 2018 அதை இந்திர விழா போன போது
  4. யாழ் வந்து கனகாலம். இடைக்கிடை வாசிப்பதோடு சரி. சுமே அக்காவின் தொடரை விடாமல் வாசிச்சு முடிச்சாச்சு. சுவாரசியம் குறையாமல் நேரம் மினக்கெட்டு எழுதுவது இலக்கு இல்லை பச்சை குத்தெலம கிடக்கு. நிர்வாகம் கொஞ்சம் உதவி செய்யுங்கப்பா.
  5. மிகவும் அதிர்ச்சியான செய்தி. யாழ் மூலமாகத்தான் கோம்ஸை (என்னை தும்ஸ் எண்டு மனிசன் கூப்பிடும்) எனக்குத் தெரியும். நேரிலே சந்திக்க வேண்டும் எண்டு நினைத்த உறவுகளில் ஒருவர். ஒரு கையில் கோப்பியுடனும் மறுகையில் சிகரெட்டுடனும் தனது பால்கனியில் இருந்து விடுப்பு பார்ப்பது அவரது தெரபி. அருமையான, பழக இனிய மனிசன். எல்லாருடைய எழுத்துக்களையும் ஊக்கப்படுத்துவார். எனது சில கிறுக்கல்களையும் முகநூலில் பகிர்ந்திருக்கிறார். நடுவுக்கு ஏதாவது ஆக்கம் கேட்டிருந்தார். எனக்கு எழுதப்பஞ்சி/நேரப்பிரச்சினை. கொஞ்சநாளா ஆளை வெட்டி விளையாடிக்கொண்டிருந்தேன். மனிசனும், உந்த கேஸ் உருப்படாது எண்டு பேசாமல் விட்டிட்டார். இலக்கியப் பரப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இலங்கை, புலம்பெயர் நாடுகள் தவிர தமிழகத்திலும், கிழக்கிலங்கை இஸ்லாமிய இலக்கிய வட்டத்திலும் பல நண்பர்களை கொண்டிருந்தார். போய் வாருங்கள் அண்ணை, ஆழ்ந்த இரங்கல்கள் அக்கா.
  6. நல்ல விசயம் சந்தோசம். அந்தரத்தில போற சாமான், சென்னை விமான நிலையம் போல கழன்று விழாட்டிக்கு இன்னும் நல்லது, கையோட தமிழக அரசு சென்னை விமான நிலையத்தில உருப்படியான மலசல கூடங்களையும் அமைத்து பராமரிக்க வேண்டும். யார் யார் எத்தினை கோடியை சுட்டு சுவிஸ் பாங்கில போட்டாங்களோ .....
  7. தும்மளையானே யானும் அதே எங்கே இன் திருமுகத்தை என் பக்கம் திருப்பு

  8. நான் யாழின் நெடு நாள் வாசகன். கடந்த வருடத்தில் தான் நானும் உறுபினராக இணைந்து கருத்து எழுத வேண்டும் எண்ட ஆசை ஏற்பட்டது. ஆனால் இப்போது தான் அதற்குரிய நேரம் கிடைத்துள்ளது. இது தான் எனது முதல் பதிவு, ஆகவே நான் எதாவது தவறு வேடும் பட்சத்தில் கள உறவுகளாகிய நீங்கள் எனக்கு கை கொடுத்து உதவி செய்வீர்கள் என நம்புறன். நான் தற்போது கூகிள் மூலமான மொழி பெயர்பியின் உதவயுடனேயே கருத்து எழுதுகிறன். மற்றைய முறை எனக்கு விளங்கவில்லை. யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்ய முடயுமா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.