• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Kavallur Kanmani

கருத்துக்கள உறவுகள்
 • Content count

  718
 • Joined

 • Last visited

 • Days Won

  7

Kavallur Kanmani last won the day on March 14 2017

Kavallur Kanmani had the most liked content!

Community Reputation

403 ஒளி

1 Follower

About Kavallur Kanmani

 • Rank
  உறுப்பினர்
 1. எழுத்தில் என்னவொரு வேகம் .எங்களுக்கு இந்த வேகத்தில் வாசிக்கத்தான் நேரம் போதாமல் உள்ளது. கதை நன்றாகத்தான் போகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
 2. வேப்பங் காய்கள் - சிறுகதை

  சுமே நான் படித்து முடித்து விட்டேன். பூங்காற்று புயலாகி விட்டது. வேப்பங்காய் ஒருமாதிரி பழுத்திற்றது என்று சொல்லலாமா?
 3. விறுவிறுப்பான தொடர் கதை ஆரம்பித்துள்ளார் சுவி. என்ன சிங்களத்திலும் புலமை மிக்கவரா நீங்கள்? தொடருங்கள் காத்திருக்கிறோம்
 4. முன்னைய காலங்களில் பெற்றவர்கள் சொன்னால் பிள்ளைகள் மறுபேச்சுப் பேசாமல் ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் இப்பொழுது அப்படியல்ல பிள்ளைகள் சொல்வதை பெற்றவர்கள் கேட்டு அனுசரித்துப் போக வேண்டும். நீங்கள் சொல்வது சரி சுமே. சுவி சென்னதுபோல் பெற்றவர்கள் அதிக பொறுமை காக்க வேண்டியும் பல தடவைகளில் தம் பிடிவாதங்களை விட்டு பணிந்து போகவேண்டியும் வரலாம்.இதை விடுத்து நாம் நம் வழியில் போனால் நாம் பிள்ளைகளை இழக்க வேண்டிவரலாம். கருத்தெழுதிய சுவி சுமே வளவன் மற்றும்அனைவருக்கும் நன்றிகள்
 5. சுவியின் கவிச்சுவை இக் கவிதையை மெருகூட்டவில்லை. இருந்தும் இரவின் ஸ்பரிசத்தை அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். உங்கள் படைப்புக்களைத் தொடருங்கள்
 6. நீங்களுமா? நானுந்தான். இரு வருடங்களுக்கு முன் எமக்கு ஊரிலிருக்கும் பொழுது எமது குடும்பத்துடன் பழக்கமான ஒருவர். (உறவினர் அல்ல) திடீரென போன் அடித்தார். எப்படி எமது நம்பர் எடுத்தாரோ தெரியாது. அக்கா எனது மகனுக்கு யூனிவசிற்றி கிடைச்சிருக்கு . அவனுக்கு அங்க போறத்துக்கு உடுப்பு சப்பாத்து முதலியன வாங்க வசதியில்ல.எனக்கும் இப்ப வேலை இல்ல.இப்படி புலம்பினார். அட பிள்ளையின் படிப்புக்கு கேட்கிறார். கட்டாயம் உதவி செய்ய வேணும் எண்டு உடனேயே எனது உழைப்பில் இருந்து 250 டொலர்களை அனுப்பி விட்டேன். கிடைத்ததா என்று நான் அழைத்துத்தான் கேட்கவேண்டி இருந்தது. இது வரை எந்த தொடர்பும் இல்லை.
 7. நாம் எப்படித்தான் எடுத்துச் சொன்னாலும் புலத்தில் இருப்பவர்களுக்கு புலம் பெயர்ந்தவர்களின் வழ்வு மாயமான்தான். என்றாலும் அங்கிருப்பவர்களுக்கு உதவ வேண்டுமென்பதே எம் அனைவரின் ஆழ்மனதிலும் வேடூன்றி இருக்கும் தாகம். அதை சிலர் தவறாக உபயோகிப்பதை காணக்கூடியதாய் இருந்தாலும் மீண்டும் மீண்டும் உதவ விரும்பும் மனதை என்ன செய்வது. இப்போது பலரும் வழ்வாதாரத்துக்கு தேவையான நடைமுறைகளைச் செய்து கொடுப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கிருந்து போய் வருபவர்கள் அங்கு ஏதோ சொர்க்கத்திலிருந்து இறங்கி வருபவர்கள் போல் படம் காட்டினால் அவர்கள்தான் என்ன செய்வார்கள். முதலில் திருந்த வேண்டியவர்கள் நாங்களே. நல்லதொரு ஆக்கம் நிலாமதி.
 8. வேப்பங் காய்கள் - சிறுகதை

  வழக்கம்போல் சுமேயின் யாழ்ப்பாணத் தமிழ் மணக்கும் கதை தொடர்கிறது. கதை நன்றாகப் போகின்றது. இன்னும் முக்கிய திருப்பத்தைச் சந்திக்கவில்லை என நினைக்கிறேன். எமக்கும் புங்கை சொன்னதுபோல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை பிறந்தநாள் கொண்டாடிலால் எப்படி இருக்கும்? வேப்பங்காய் பழுக்கும் வரை கத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் சுமே.
 9. எமது வாழ்வியலில் எம்மைச்சுற்றி இப்படி எத்தனையோ கதைகள் தினமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இவை வெறும் கதைகளல்ல. கற்பனை கலந்த நிஜங்கள். கருத்துக்கு நன்றி கவி அருணாச்சலம்.
 10. தானம் கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் கண்களில் வலி இருப்பதாக சொன்னீர்கள். உடம்பு வலுவாகத்தானே இருக்கிறது. ஏன் உழைத்து சாப்பிடமுடியாதவரா? இல்லாவிட்டால் அரசாங்க உதவி கிடைக்க தகுதி இல்லாதவரா? பசித்தவருக்கு உணவு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் சிலர் அதையே தொழிலாகச் செய்கின்றனர். சென்ற மாதம் வீதியில் ஒரு ஆசிய இன இளம் பெண் கை ஏந்தியபடி நின்றதை கவனித்தேன். அப்பொழுது சொன்னார்கள் யாரோ ஒருவர் தன் வாகனத்தில் இப்படியான பலரை கொண்டு வந்து இறக்கி விட்டு மாலையில் வந்து எல்லோரையும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போவதாக. இதையும் ஒரு தொழிலாக நடத்த தொடங்கியுள்ளனர் விசுகு பாத்திரமறிந்து பிச்சையிடுங்கள். நல்ல ஆக்கம். தொடர்ந்து எழுதுங்கள்
 11. புலம் பெயர்ந்த மண்ணில் துயரத்தை சுமப்பது அதிகம் பெற்றவர்களா பிள்ளைகளா என்பதே பெரும் சர்ச்சைக்குரிய ஒன்று. பெற்றர்களுக்கும் பிள்ளைகளக்கும் உள்ள தலை முறை இடைவெளி பல சமயங்களில் பெற்றவர்களயும் பல சமயங்களில் பிள்ளைகளையும் நிலை குலைய வைக்கின்றன. சாதி மதம் இனம் எல்லாம் ஒருபக்கத்தில் இருக்க ஒழுக்கம் பெரும் சர்ச்சையாக விளங்குகிறது. இன்றைய இளம் வயதினரின் காதல் எல்லை மீறியதாக இருப்பதால் அதுவே பெற்றவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதைக் காணக்கூடியதாய் உள்ளது. என்ன செல்லி என்ன இது இனி கட்டுப்படுத்த முடியாத பெரு வெள்ளம். நீச்சலிடுவது கடினம். வெள்ளத்துடன் ஓடவேண்டியதுதான் என்று பெற்றவர்கள் முடிவெடுக்கும் நிலையில் இன்றைய காலம் கதைபடித்து கருத்தெழுதிய புங்கையூரனுக்கும் விருப்பிட்ட அனைவருக்கும் நன்றிகள்
 12. நிழலிக்கே உரிய எழுத்து நடை. சூழலை அவதானித்து மிக யதார்த்தமாக நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இந்த வேட்டிக்கோ என்னையும் ஒரு முறை பதம் பார்த்தது. காலடியில் உலகமே தட்டாமாலை சுற்றுவதுபோல் சுழன்றது. இந்த நேரத்தில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது. இதற்குரிய மாத்திரைகளை சிறிது நாளைக்கு ஒழுங்காக எடுத்ததால் சுகமடைந்தேன். பீட்டர் போல் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டாலும் சமூகத்திற்கு உதவியாக இருக்கிறார்கள். நல்லதொரு கதை. கதை எழுத வைத்த அவசர சேவைப் பிரிவுக்கு நன்றி.
 13. இது ஒரு சர்ச்சைக்குரிய விடயம்தான். இருந்தும் புலம்பெயர் மண்ணிலும் நம் சமூகம் தினம்தினம் சந்திக்கும் விடயமும் கூட. நாடு மாறினல் என்ன நாகரீகம் மாறினால் என்ன நாம் மாறவேண்டும்லவா? இன்று திருமண வயதை எட்டிய பிள்ளைகளை வைத்திருகும் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் இது. சில வருடங்களுக்கு முன் பிள்ளைகளைக் காதலிக்கக் கூடாதென்று தடை போட்டவர்கள்கூட இன்று கல்லூரிகளிலோ பல்கலைக் கழகங்களிலோ காதலித்தால் தமது பொறுப்பு நீங்கிவிடும் என்று கூறும் பல பெற்றவர்களைச் சந்தித்திருக்கிறேன் இருந்தும் இன்னும் சாதி மதம் என்ற வட்டத்துக்குள் நிற்கும் பெற்றவர்களால் பல பிள்ளைகளின் வாழ்க்கை தடைப்பட்டு சிதைக்கப்பட்டு வருகின்றது இன்றும் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது எம் இனத்திற்கு ஒரு சாபக் கேடு தான். கருத்தெழுதிய கிருபன் ஈழப்பிரியன் வளவன் நிலாமதி சகரா நிழலி சண்டாருதன் அனைவருக்கும் நன்றிகள்
 14. வானவில் நள்ளிரவு தாண்டியும் தூக்கம்வர மறுத்தது. கண்ணிலிருந்து கொட்டிய நீர் வற்றி கன்னங்கள் காய்ந்து மனம் இறுகிக் கிடந்தாள் வாசுகி. நேற்றுவரை எத்தனை கனவுகளில் மிதந்தாள். நெற்றிச் சுட்டி முதல் பாதக் கொலுசுவரை அத்தனையும் பார்த்துப் பார்த்து வாங்கி கற்பனையிலேயே தன் எழிலை ஒத்திகை பார்த்து மனதுக்குள் சிரித்தது நினைவில் புரண்டது. 'நான் இத்தனை அழகா? ' தனக்குத்தானே கேட்டு 'ஆமாம் இந்த அழகை எத்தனை தரம் என் வசீகரன்'வாசுகி நீர் ரொம்ப அழகாயிருக்கிறீர்' என்று அவன் வாயால் கேட்டு ரசித்திருக்கிறாள். அடடா என் வசீகரன் என்று எண்ணியதை நினைக்க அவளது முகத்தில் நாணம் கோலமிட்டது. பெண் மனதுதான் எவ்வளவு விசித்திரமானது. இத்தனை காலமும் கண்ணுக்குள் வைத்து பொத்தி வளர்த்த பெற்றவர்களை தனக்கென ஒருவன் வந்து விட்டால் பெற்றவர்கள் கூட இரண்டாம் பட்சமாகிவிடும் அதிசயம் எப்படி நடக்கிறது. 'வாசுகி நான் இண்டைக்கு சாத்திரியாரிட்ட போய் உம்மட பலன் பார்த்தனான். இந்த வருடத்துக்குள்ள உம்மட திருமணம் நடக்காட்டி இனி கன காலம் செல்லுமாம் அதனால நான் நேர நான் புறோக்கரிட்ட போய் கதைச்சிற்று வந்திற்றன்.' வதனியின் பேச்சில் கேள்விமட்டுமின்றி உறுதியான பதிலும் இருக்கவே வாகி சிறுது மௌனமாக இருந்தாள். சிறிது நேரம் தன்னைச்;சுதாகரித்தவள். 'அம்மா ஏன் இப்ப அவசரம் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்' 'இப்பதான் பலன் இருக்கெண்டு சாத்திரி சொன்னவர்.'வதனியும் விடுவதாய் இல்லை. 'அம்மா முன்ன பின்ன தெரியாத ஆளை புரோக்கர் சொல்லி எப்பிடி செய்யிறது' 'வாசுகி நீர் சும்மா இரும் அதெல்லாம் போட்டோ தருவினம். நீர் பார்த்து பிடிச்சிருந்தா அதுக்குப் பிறகு போனில கதைச்சு முடிவெடுக்கலாம்' வாசுகிக்கு அம்மாவுடன் சண்டையிட முடியவில்லை. கண்களைத் தாழ்த்திக்கொண்டாள். 'நான் உமக்கு நல்லதுதான் செய்வன். நீர் முந்தி அவசரப்பட்டு காதல் காதல் எண்டு அலைஞ்சு கடைசியில நடந்தது என்ன? பேசாமல் இரும். வாசுகியின் மனதின் பாரம் அறியாமல் வதனியின் குத்தல் பேச்சு. அம்மா சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை. படிக்கிற வயதில தேவையில்லாத விடயங்களில் ஈடுபட வேணாம் எண்டு எவ்வளவு சொல்லியும் பத்தாம் வகுப்பிலேயே காதல் வசப்பட்டு வீட்டைவிட்டு வெளிக்கிட்டு பட்ட அவதி அவளால் மறக்கக் கூடியதா? இறுதியில் படிப்பும் இன்றி தொழிலும் இன்றி நம்பி வந்தவனின் துணையும் இன்றி மீண்டும் அம்மாவின் காலடியில் விழுந்த அந்த நிமிடம் தன் தவறை உணர்ந்து கொண்டாள். வதனிக்கோ மகளின் எதிர்காலம் குறித்து ஏக்கமும் கவலையுமே அவளை மற்றவர் முன் தலை நிமிர முடியாத தீராத அவமானமாக உணர்ந்தாள். இப்பொழுது வாசுகிக்கும் வயது இருபத்திஜந்தைத் தாண்டி விட்டது. ஓரளவு உலகத்தைப் படித்துவிட்டாள். பதினைந்தில் இருந்த துடிப்பும் துள்ளலும் இருபத்திஜந்தில் நின்று நிதானிக்கக் கூடிய பக்குவத்தைக் கொடுத்திருந்தது. என்றாலும் அம்மா புறோக்கர் மூலம் திருமணம் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை.வெளியே சொல்ல முடியாமல் அம்மாவின் பிடிவாதம் அவளை அடக்கிப் போட்டது. 'வாசுகி புறோக்கர் நாலைந்து போட்டோக்கள் தந்திருக்கிறேர் நீர் பார்த்து செலக்ற் பண்ணும்.' என்ன இது பெயரோ தொழிலோ குணமோ குடும்பச் சூழலோ எதுவுமே தெரியாமல் போட்டோவைப் பார்த்து செலக்ற் பண்ணும் என்று சொல்லும் அம்மாவின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. 'அம்மா எப்பிடி போட்டோவைப் பார்த்து சொல்லுறது' அதெல்லாம் பேச்சுத் திருமணம் எண்டா அப்பிடித்தான். நாங்களெல்லாம் ஊரில அப்பா அம்மா சொன்னா மறுபேச்சுப் பேசமாட்டம் இங்க நீங்கதான்..... ஜயோ அம்மாவின் ஊர்ப்புராணம் தொடங்கமுதல் என் பதிலை சொல்லிவிட வேணும் என்னும் அவசரத்தில் 'சரிசரி போட்டோவைத் தாங்கோ. ' அம்மா கேண்ட பேக்கிலிருந்து ஒரு கவரை எடுத்து பக்குவமாக நீட்டினாள். 'உமக்குப் பிடித்ததைச் சொல்லும்' முதலில் இருந்தது முன்வழுக்கை ஒதுக்கினாள். இரண்டாவது பார்வையில் முரட்டுத்தனம் சரி இதுவும் வேணாம். மூன்றாவது நான்காவது என்று ஒதுக்கிவிட்டு ஜந்தாவதாக இருந்த படம் பார்வையிலும் முகஅமைப்பிலும் ஏதோ மனதுக்குப் பிடித்ததுபோல் இருந்தது. 'இந்தாங்க இது பரவாயில்லை' 'என்ன பரவாயில்லையோ? இதவிட நல்ல மாப்பிள்ளை உனக்கு எங்க கிடைக்கப் போறான்' மகளின் மனநிலை புரியாமல் அடிக்கடி அவள் செய்த தவறை குத்திக் காட்டியே மனதை நோகடிக்கிறேன் என்று தெரியாமல் எத்தனை தடவைதான் நோகடிப்பாள். வாசுகி தன் அம்மா தன் தப்பைக் குத்திப் பேசும் பொழுதெல்லாம் குறுகிப் போய் விடுவாள். வதனிதான் என்ன செய்வாள் கணவன் பாதியிலேயே வதனியைக் கைவிட்டுவிட்டு வேறுஒரு பெண்ணுடன் தொடர்பேற்படுத்திக்கொண்டு விலகிப் போய்விட தனியேதான் வாசுகியை வளர்த்தாள். 'நீயும் உன் அப்பனைபக் போல்தான் என்று பல தடவைகள் இயலாமையின் உச்சியில் எரிந்து விழும்போதெல்லாம் வாசுகி உள்ளுக்குள் உடைந்து போவாள். வாசுகிக்கு இப்போதெல்லாம் அம்மாவின் பேச்சு பழகிவிட்டது. நான் அம்மா பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருந்திருந்தால் இப்படியெல்லாம் பேச்சு கேட்கவேண்டி இருந்திருக்காது. தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள். 'கலோ புறோக்கரா பேசுறீங்க' ' ஓமோம் என்ன விசயம் சொல்லுங்க' 'நாங்க ஒரு போட்டோ செலக்ற் பண்ணி இருக்கிறம்' 'என்ன நம்பர்' ஜந்தாம் நம்பர்' 'ஓ கொஞ்சம் பொறுங்கோ அது அந்த வசீகரனோட போட்டோ' 'ஆக்கள் எந்த ஊர் விபரமெல்லாம் எடுத்து வையுங்கோ வாறன்' அதுதான் சரி நேரில வாங்கோ விபரம் சொல்லுறன்' அப்ப பின்னேரம் சந்திப்பம் பாய்' வதனி பின்னேரம் புறோக்கரைச் சந்தித்துவிட்டு திரும்பி இருந்தாள். அவன் பெயர் வசீகரன். வயது 28. பொடியன் நல்ல கொம்பனியில வேலை செய்யிறான். ஆனா அவன் எங்கட மதமில்லை. வேதக்காரப் பெடியனாம்.' 'அம்மா உங்களுக்கு என்ன விருப்பமோ அப்படி செய்யுங்க' வாசுகி அம்மாவின் தலையில் போட்டு விட்டு தான் ஒதுங்கிக் கொண்டாள். வதனிக்கோ சாத்திரி சொன்ன மாதிரி உடனேயே இந்த வருடத்திற்குள் எப்படியும் வாசுகியின் திருமணம் கைகூடி வருகின்ற சந்தோசம். இவளின்ர கலியாணத்தை முடித்திற்றனென்றால் எனக்கு இருக்கும் பெரிய மனச்சுமை குறஞ்சிடும் தன்மனச்சுமையை இறக்கிவைப்பதற்கு மும்முரமாக செயல்படும் வதனி தன் மகளின் மனச்சுமையைப்பற்றி சிறிதளவும் சிந்திக்க முயலவில்லை. 'இந்தா வாசுகி புறோக்கர் போன் நம்பர் தந்தவர். நீர் கதைச்சுப்பாரும். பொடியன் எப்பிடி என்று அறிஞ்சப் பிறகு தாய்தகப்பனிட்டக் கதைப்பம்.' மறுநாள் சனிக்கிழமை. 'கலோ நான் வாசுகி கதைக்கிறன்' 'வாசுகியோ ஓ அம்மா சொன்னவ. புறோக்கரிட்ட படம் குடுத்ததெண்டு' 'நானும் உங்கட படம் பார்த்தனான்' 'என்ன படத்தில நான் எப்படி?' 'பிடிச்சிருந்தபடியால்தானே போன் பண்ணுறம்' நானும் போட்டோ பாத்தனான். எனக்கும் பிடிச்சிருக்கு' அதுசரி நான் உம்மை நேரில சந்திச்சு கதைக்க வேணும்' நாளைக்கு கொபி சொப்பில சந்திக்க ஏலுமா? சரி அப்ப கொபி சொப் அற்ரசை ரெக்ஸ் பண்ணிவிடுங்கோ' 'பாய்' 'அம்மா நாங்க நாளைக்கு சந்திக்கப் போறம் நான் என்ர விசயமெல்லாம் சொல்லத்தான் போறன்' 'அது உன்ர விருப்பம். சொன்னாலும் பிரச்சனை. சொல்லாட்டியும் பிரச்சனை. எதுக்கும் வெளிப்படையாச் சொல்லி சம்மதம் எண்டா பின்னுக்கு பிரச்சனை வராது.' 'காய் வாசுகி நான் வசீகரன்' 'காய்' வாசுகி கையில இரண்டு கோப்பியுடனும் டோ நட்சுடனும் ஒதுக்கமான இருக்கையில் அமர்ந்து கொண்டனர். 'படத்தைவிட நேரில நல்ல வடிவா இருக்கிறீர்' 'நீங்களும்தான்' 'ஓ அப்படியா?' இப்படி ஆரம்பித்த உரையாடல் சில நிமிடங்கள் நீடித்தது. 'எங்கட அம்மா அப்பாக்கு நான் ஒரே மகன். அவர்களுக்கு எங்கட சர்ச்சிர திருமணம் வைக்கத்தான் விருப்பம்.' 'அப்படியா?' 'ஏன் உமக்கு விருப்பமில்i;லயா?' ' நான் அம்மாவோட கதைச்சுப் பார்க்கிறன்' ;'வாசுகி அதற்கு முதல் நான் சில விசயங்களை ஓப்பினாக் கதைக்க வேணும் எனக்கு முதல் காதல் பிறேக் பண்ணீற்றுது. அது நடந்து தநாலைந்து வருசத்ததுக்கு மேல.' 'எனக்கும் அப்படித்தான் எப்படி உங்களிட்ட சொல்லிறதென்றுதான் யோசித்துக் கொண்டிருந்தனான். 'ஓ அப்ப நாங்க இரண்டு பேரும் ஒரே மனநிலையிலதான் இருக்கிறம்' 'நல்லது அப்ப நான் வீட்டில எங்கள் இரண்டு பேருக்கும் விருப்பம் எண்டு சொல்லவோ?' வாசுகியின் முகத்தில் ஏற்பட்ட நாணத்தைப் பார்த்து வசீகரன் மனதுக்குள் ரசித்தான். வீட்டிற்கு வந்த வாசுகியின் முகத்தில் தெரிந்த மலர்வில் வதனி சந்தோசப்பட்டாள். 'அம்மா சர்ச்சிலதான் வெடிங் வைக்க வேணுமாம்' வதனிக்கு எப்படியாவது திருமணம் முடிந்தால் போதும் என்ற நிலைப்பாடு. 'சரி என்ன செய்யிறது என்ர தலைவிதி' அலுத்துக்கொள்வதுபோல் வெளியே சொன்னாலும் உள்ளுக்குள் மகளின் திருமணம் நடைபெறப் போகிறதென்ற பூரிப்பு. வாசுகியோ மணமேடையில் வெள்ளை நீளங்கியுடன் கையில் மலர்க்கொத்துடன் மாப்பிள்ளையுடன் கை கோர்த்து நடப்பதாய் கனவில் மிதந்தாள். வதனி வசீகரனின் பெற்றவர்களுடன் தொடர்பு கொண்டு பேசினாள். 'பிள்ளைகளுக்கு பிடிச்சுப் போச்சு. ஆனாலும் அடுத்த வருடம்தான் திருமணம் வைக்கலாம்' இது வசீகரனின் அம்மா. 'ஏன் அவ்வளவு காலம்' வாசுகி கேட்டாள். 'சர்ச்சில ஆயத்தங்கள் செய்யவும் மற்றைய ஆயத்தங்களுக்கும் ரைம் வேணும்' அப்ப இந்தவருடம் என்கேஜ்மென்ட் வைச்சிற்று அடுத்த வருடம் கலியாணத்தை வைப்பம்' அது மட்டுமல்ல இரண்டு பேரும் கொஞ்சக்காலம் பேசிப் பழகினாத்தானே இரண்டு பேருக்கும் ஒத்துப் போகுதா எண்டு பார்க்கலாம். வதனிக்கோ என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. நான் பெண்ணைப் பெற்றவள். பழகிப் பார்த்து வேணாம் எண்டு சொன்னால்... எப்படி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பினாள். புறோக்கரிடம் பேசினாள். இறுதியில் இவ்வருடம் என்கேஜ்மென்ட் அடுத்த வருடம் திருமணம் எம்று முடிவாகியது. இதற்கிடையில் வாசுகியும் வசீகரனும் நேரிலும் போனிலும் மெசேஜ்சிலுமாக தம் அன்பைப் பரிமாறத் தொடங்கி விட்டிருந்தனர். வதனி ஓடி ஓடி என்கேஜ்மென்ட்டிற்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பித்தாள் மண்டபம் உணவு உடைகள் நகைகள் மாலைகள் பூக்கள் பலகாரங்கள் என்று மனதுக்குள் பூட்டி வைத்திருந்த அத்தனை ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதுபோல் தன் நெருங்கிய உறவுகள் நட்புகள் என்று அனைவரிடமும் அழைப்பு விடுத்தாள். மோதிரம் அளவு கொடுத்து ரெஜிஸ்ராரையும் ஒழுங்கு செய்து வதனி பம்பரமாக சுழன்று வந்தாள். 'கலோ நான் வசியின்ர அம்மா கதைக்கிறன்' வதனிதான் போனை எடுத்தாள்'ஓம் சொல்லுங்கோ' 'வதனி ஒரு சின்னப் பிரச்சனை' வாசுகிக்கு உள்ளுக்குள் உதறல் 'இல்ல நீங்க ரெஜிஸ்ரர் பண்ணுறதெண்டு சொன்னனீங்க. ரெஜிஸ்ரர் பண்ணாம மாலையும் மோதிரமும் மாத்தி விடுவம்.' 'ஏன் என்ன பிரச்சனை?' 'வெடிங் நேரம் சேர்ச்சில ரெஜிஸ்ரர் பண்ணலாம்' 'இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே?' வாசுகி ஆத்திரத்தை அடக்க முயற்சித்தாள். 'அதுதான் முதலிலேயே சொன்னனான் ஒரேயடியா அடுத்த வருடம் கலியாணம் வைக்கலாமெண்டு' 'வதனிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விக்கித்துப் போனாள். அவளது சூடான கண்ணீர் தொலை பேசியை நனைத்தது. ' அப்ப நீங்க யோசிச்சு முடிவெடுங்க பாய்' தொலை பேசி துண்டிக்கப்பட்டதும் வதனி ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வாசுகிமேல் பாய்ந்தாள். 'அம்மா நீங்கதானே கலியாணம் பேசினனீங்க நானா பேசச் சொல்லிக் கேட்டனான்.' 'ஓ நீ ஒழுங்கா இருந்திருந்தால் ஏன்இவ்வளவு கேவலப் படுவான்.' வாசுகி மௌனமானாள். வதனிக்கு உடம்பெல்லாம் கொதிப்பது போல இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அறைக்குள் சுற்றிச் சுற்றி நடந்தாள். திடீரென்று என்ன நினைத்தாளோ மண்டபம் உணவு மாலை என்று எல்லாவற்றையும் போன் அடித்து கேன்சல் பண்ணினாள். ரெஜிஸ்ராரை அழைத்து அப்பொயின்ற்மென்ரை ரத்து செய்தாள். அனைத்தையும் செய்து முடிக்கும்வரை அம்மாவின் முகத்தையே அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த வாசுகியின் முகம் இறுகிக் கிடந்தது. போனின் இணைப்பைத் துண்டித்து விட்டு நிமிர்ந்த வதனி மகளின் முகத்தை பார்த்த மறுகணம் வேதனையை உள்ளே விழுங்கிக் கொண்டாள். தான் செய்தது தவறோ என்று மனதுக்குள் விழுந்த முடிச்சை அவிழ்க்க மனமின்றி எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடியவள் படுக்கையில் விழுந்து தனிமையில் வேதனை தீர அழுது முடித்தாள். வாசுகியோ என்ன செய்வது என்று தெரியாமல் ஏக்கத்துடன் எழுந்து ஜக்கற்ரை மாட்டியவள் கால் போன திசையில் நடந்தாள். ஏன் எம்மைப் பெற்றவர்கள் இப்படி இருக்கிறார்கள்? இவர்கள் திருந்தவே மாட்டார்களா? எல்லா மதங்களும் அன்பை போதிப்பதாகச் சொல்கிறார்கள். இதுதான் மதமா? மதமில்லாத உலகத்தில் மனிதராக வாழ்வது எப்போது? சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தவளை கையிலிருந்த தொலைபேசி கலைத்தது. வசீகரன்தான் அழைத்தான். பதில் அனுப்ப மனமின்றி தொலைபேசியை துண்டித்தவள் அமைதியாக வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
 15. புனித அந்தேரனியாா் கல்லுாாி எனது அண்ணன் தம்பி படித்த பாடசாலை. அது மட்டுமா எனது தந்தை 32 வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்த கல்லுாாி. நான் அங்கு கல்வி கற்காததால் எழுதவில்லை. நந்தன் நீங்களும் காவலுாரா?